ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 T.N.Balasubramanian

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 T.N.Balasubramanian

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 T.N.Balasubramanian

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

குருப் 2 தேர்வுக்கு IMPACT IAS ACADAMY 2018(general english & general Tamil)
 thiru907

மதித்திடுவோம் மாதர் தம்மை
 SK

ஒரு பக்கக் கதை - அடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்
 M.Jagadeesan

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!
 T.N.Balasubramanian

மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ., வுக்கு எதிராக 19ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
 M.Jagadeesan

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
 SK

காலம் உருக்குலைத்தாலும் எங்கள் காதல் மாறாது என்கிறதா இந்த மனித எலும்புக் கூடுகள்?
 SK

படமெடுத்த பாம்பை ஆத்திரத்தில் கடித்துத் துப்பிய விவசாயி!
 பழ.முத்துராமலிங்கம்

விமானத்தில் இருந்து மழையாக பொழிந்த தங்கம் - வைர குவியல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான முறையில் சிக்ஸர்... இது நியூசிலாந்தில் நடந்துள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

Video: ரசிகர்களை அதிர வைக்கும் Afridi-யின் Catch!
 SK

வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
 SK

வட தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
 SK

விஜய்யும் ரஜினியும் படைத்த சாதனைகள்; வேறெவரும் இடம்பெறவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதன்முறையாக தமிழ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சோதிடம் 100% உண்மை. சவால்!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

வாழ்த்து சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by ANTHAPPAARVAI on Thu Jan 05, 2012 3:17 pm

First topic message reminder :


சோதிடம் பொய்யேன்றும், ஏமாற்று வேலை என்றும், அதை நம்பாதீர்கள் என்றும் அரைத்த மாவையே பல காலங்களாக அரைத்துப் பார்க்கின்றனர் பலர். ஆனால் இன்றுவரை அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை என்பது தான் உண்மை! அவர்கள் சோதிடர்களைக் குறை கூறுகிறார்களா? அல்லது சோதிடத்தையே குறை கூறுகிறார்களா என்பது அவர்களின் விமர்சன முழக்கத்தில் இருந்து தெளிவாக எனக்குப் புரியவில்லை!!

சிறுவயதில் எனக்கு ஜலதோஷம் பிடித்திருந்தது, நான் மிகவும் தொந்தரவாக உணர்ந்தேன். அதனால் எனது பெற்றோர்களின் முயற்சியால் நான் மருத்துவ மனைக்கு சென்றேன். அவர்கள் எண்ணன்னோவோ சோதித்துவிட்டு, ஒரு பக்க அளவில் புரியாத கதை வசனத்தை எழுதிக் கொடுத்தார்கள். அதைக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஒரு மருந்துக் கடையில் கொடுத்தேன். (எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று என்னவென்றால். எழுதிக் கொடுக்கும் மருந்துகளை ஏன் அந்த மருத்துவரே கொடுக்கக் கூடாது என்பது தான்? யாராவது மருத்துவம் படித்தவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்!...) பிறகு அவரும் அதை திருப்பித் திருப்பி பார்த்து விட்டு மருந்து மாத்திரைகளைக் கொடுத்தார்... நானும் அதையெல்லாம் சாப்பிட்டுப் பார்த்தேன் ஒருவாரத்திற்குப் பிறகு ஜலதோஷம் சரியாகிவிட்டது.

மீண்டும் ஒருநாள் அதே ஜலதோஷம்! நான் மருத்துவமனைக்கு போகவில்லை. ஆனால் அதே ஒருவாரத்தில் அது சரியாகி விட்டது! என்ன ஆச்சரியம்?.... எனக்கு அப்போது தான் மருத்துவத்தின் மகத்துவம் புரிந்தது. அதாவது நாம் ஒரு நோய்க்காக மருத்துவ மனைக்கு சென்று மருந்து சாப்பிட்டு விட்டால், அந்த நோய் எப்போது வந்தாலும் அந்த மருந்து உள்ளே இருந்து கொண்டு அதே கால கட்டத்திற்குள் வந்த நோயை அடித்து விரட்டிவிடும்" என்று. அதனால் நான் இப்போதெல்லாம் மருத்துவமனைக்கே செல்வதில்லை. ஆனால் அதன் பிறகு காய்ச்சல், தலைவலி, பல் வலி, என்று எத்தனையோ நோய்கள் வந்திருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலங்களில் அந்த நோய்களெல்லாம் சரியாகிவிட்டன...

மனித உடல் கூறு என்பது ஒரு அற்புதமான ரகசியம்! அதில் இல்லாத மருந்துகளும் கிடையாது! வராத நோய்களும் கிடையாது. எந்த நோய்க்கான மருந்து நமது உடம்பிற்குள் இருக்கிறதோ, அந்த நோய் மட்டும் தான் நமக்கு வருகிறதாம். இதை நான் சொல்லவில்லை. மருத்துவம் தான் சொல்கிறது!! (யாரும் ஆதாரம் கேட்டுவிடாதீர்கள் இது கிண்டல் ஜாலி ) சாதாரண நோய்களெல்லாம் சிறிது நேரம் படுத்துத் தூங்கினால் சரியாகிவிடுமாம். மிகப்பெரிய நோய்களுக்குத் தான் மருந்தே கிடையாதே பிறகு ஏன் நாம் கவலைப் படவேண்டும். "தூங்கினால்" அல்லது "தாங்கினால்" எல்லாம் சரியாகிவிடும்!!

சரி இப்போது தலைப்பிற்கு செல்வோம்...

"சோதிடம் பொய்யேன்றும், ஏமாற்று வேலை என்றும், அதை நம்பாதீர்கள் என்றும் அரைத்த மாவையே பல காலங்களாக அரைத்துப் பார்க்கின்றனர் பலர்.... ஆனாலும் கடவுளைப் போல இந்த சோதிடத்தையும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் ஒப்பிடுவதெல்லாம் அறிவியல்! அறிவியல்! அறிவியல்!! (ஒருவேளை அவர்களெல்லாம் அறிவியல் மேதைகளாக இருப்பார்களோ என்னவோ...)

அறிவியல் என்பது ஒன்றும் வானத்தில் இருந்து திடீரென்று குதித்ததில்லை. மனிதன் சொல்லிக் கொடுத்ததைத் தான் அது திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!!


அப்படியென்றால் கிளி ஜோசியம் போல, இது கிளி அறிவியலாக இருக்குமோ...

சரி, நான் இப்போது மருத்துவமனைக்கு செல்கிறேன்....

என்னை ஒரு நாள் முழுதும் பரிசோதித்துக் கொள்ளட்டும்.....
(அறிவியல் மிகச்சிறந்த சக்தி வாய்ந்தது அல்லவா? அதனால் இந்த ஒருநாள் போதும் என்று நினைக்கிறேன்)
எந்த (அறிவியல்)மருத்துவராவது எனக்கு என்ன நோய் இருக்கிறது? அது எதனால் வந்தது? அது எப்போது தீரும்? அதன் பிறகு எனக்கு அந்த நோய் வராமல் செய்ய முடியுமா? போன்ற விவரங்களை எழுத்து மூலம் அளிப்பார்களா?

குற்றவாளி என்று தெரிந்தே அவருக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்களைப் பார்த்து யாராவது இது போன்ற ஒரு குற்றச்சாட்டை வைக்க முடியுமா?

2000 ரூபாய் கொடுத்தால் பெயிலில் விடும் சட்டம் ஏமாற்று வேலை என்பதை இவர்களால் பகிரங்கமாக சொல்ல முடியுமா?

அப்படி சொன்னால் மறுநாளே போராட்டம், வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என்று புரட்சி வெடிக்கும்.

வக்கீல்களைப் அழைத்து வந்து ஏன் இப்படி பொய்யாக வாதிடுகிறீர்கள் என்று எந்தத் தொலைக்காட்சியாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா?

அரசியல் வாதிகளை அழைத்து வந்து ஏன் மக்களுக்கு சேவை செய்ய லஞ்சம் கேட்கிறீர்கள் என்று எந்தத் தொலைக்காட்சியாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா?

சோதிடர்களை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்? அவர்களால் எதிர்த்துப் போராட்டம் செய்ய முடியாது... அவர்கள் எல்லாம் ஏழைகள் என்பதற்காகவா? சோதிடம் பொய்யேன்று எதைவைத்து முடிவு செய்தீர்கள்? சோதிடர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று எதை வைத்து கூறுகிறீர்கள்?

சோதிடர்கள் பணம் வாங்குகிறார்கள் என்பது தான் உங்களின் தவிப்புக்குக் காரணமா? எங்கே எந்தத் தொலைக்காட்சியாவது பணம் வாங்காமல் நிகழ்ச்சி நடத்துவார்களா? எந்த மருத்துவராவது பணம் வாங்காமல் மருத்துவம் பார்ப்பார்களா? எந்த வழக்கறிஞராவது பணம் வாங்காமல் வழக்கு நடத்துவார்களா?

தான் படித்தக் கல்வியை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் சம்பளம் கேட்கும் போது... எனக்கு ஒட்டத் தெறிந்த வாகனத்தை லைசென்ஸ் எடுத்துத் தான் ஒட்டவேண்டும் என்று ஓட்டுனர் உரிமம் வாங்கச் சொல்லும் போது.... அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு ரோடு டாக்ஸ் கட்டச்சொல்லும் போது... இந்த நாட்டில் வாழ்வதற்கு வீட்டுவரி, காட்டுவரி, வருமான விரி என்று இப்படிப் பல வழிகளில் பணத்தைப் பிடுக்கிக் கொண்டிருக்கும் போது....
நேர்மையான வழியில்... தனது உழைப்பிற்குத் தகுந்த கூலியை சோதிடர்கள் கேட்பது மட்டும் எப்படி ஏமாற்று வேலையாகும். அவர்களும் சொல்லித்தானே கேட்கிறார்கள்? அல்லது உங்கள் பாக்கெட்டில் இருந்து பிடுங்கிக் கொள்கிறார்களா? அல்லது என்னிடம் சோதிடம் பார்த்தே ஆகவேண்டும் என்று உங்களைக் கட்டாயப் படுத்துகிறார்களா? பேச வாய்ப்புக் கிடைக்கிறது என்பதற்காக கண்டதையும் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அதற்கு வேறு பெயர் உண்டு!!

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியை நாம் இப்போது தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதை சோதிடம் பல காலங்களுக்கு முன்னதாகவே சொல்லியிருக்கிறது. சோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு "பூமிகாரகன்" என்று பெயர். அதாவது ஒருவன் ஜாதகத்தில் செவ்வாய் கிரகமானது வலுவாக இருந்தால் அவனுக்கு வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கிறது என்று பொருள். சோதிடம் சொன்ன இந்தத் தகவலை வைத்துக்கொண்டு தான் இந்த அறிவியல் ஆராய்ச்சியே மேற்கொண்டிருக்கிறது!!

சோதிடம் பொய்யேன்று வாதிடும் யாருக்காவது முழுமையான சோதிடம் தெரியுமா? அப்படித் தெரிந்தால் "சக்ராதி ஜடனேக" என்பதற்கு என்ன பொருள் என்று கூறுங்கள் பார்ப்போம்!!

சோதிடர்களாக இருந்தாலும் கூட இதற்கு பதில் சொல்லலாம். (இதில் எல்லாமே புரிந்து விடும்!!)

"இதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்பது போன்ற முட்டாள் தனமான பதிலை யாரும் சொல்ல முயற்சிக்க வேண்டாம். எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அதைப் பற்றி விமர்சனம் செய்வது அறியாமையிலும் அறியாமை!!

இப்போது சவாளுக்கு வருகிறேன்...

என்னிடம் 2 கோடி ரூபாய் கொடுத்தீர்களேயானால் 85 வருடங்கள் முழுமையான ஆராய்ச்சி செய்து உங்களின் முற்பிறப்பில் இருந்து மறுபிறப்பு வரை எல்லா விவரங்களையும் மிகத் துள்ளியமாக கணித்து உங்களிடம் என்னால் சொல்ல முடியும்!! அப்படி இல்லை என்றால் மறு நிமிடமே எனது தோல்வியை ஒத்துக் கொண்டு நான் என் உயிரை விடவும் தயார்!!

சவால்!!

யாருக்கு துணிச்சலும், தைரியமும் இருக்கிறது?

குறிப்பு: தெரிந்த நோயைக் குணப்படுத்த பல கோடிவரை வசூல் செய்யும் அறிவியலை விட, தெரியாத பல தகவல்களுக்காக 2 கோடி கேட்கும் எனது சோதிடக் கலை சிறந்ததுதான்!!

"அந்தப்பார்வை"


Last edited by ANTHAPPAARVAI on Sun Jan 08, 2012 1:05 pm; edited 1 time in total (Reason for editing : Delete my Name)
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down


வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by கபாலி on Fri Jan 06, 2012 10:58 am

நல்ல விவாதம்... இன்னும் பலர் கருத்துகளை எதிர்நோக்கி இருக்கிறேன்..

நன்றி அந்தப்பார்வை நண்பரே..

கபாலி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 75

View user profile http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by சிவா on Fri Jan 06, 2012 11:21 am

///எத்தனையோ பேர் எவ்வளவோ முயற்சி செய்தும் குழந்தை இல்லாமல் இருக்கிறார்களே///

கோழி முட்டை அனைத்துமே குஞ்சு பொரிப்பதில்லையே? அதுபோலத்தான் மனிதர்களில் சிலருக்கு இயற்கையாகவோ, அல்லது அதிகமான மது, புகைப் பழக்கத்தாலோ ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடிவதில்லை. அதற்காக மருத்துவத்துறையை ஒன்றுக்கும் உதவாத ஜோதிடத்துடன் தாங்கள் தொடர்புபடுத்துவதை குழந்தை கூட ஏற்றுக் கொள்ளாது.

///ஆகாயத்தில் இத்தனை கோள்கள் இருக்கிறது என்றும், அதற்கு இதுதான் பெயர் என்றும் முதலில் சொன்னதே இந்த சோதிடம் தானே///

இதைச் சொன்னதற்காக இன்று எந்த ஜோதிடன் வரலாற்றில் இடம் பிடித்துள்ளான். விடை பூஜ்யம்.

///என்னைப் பொறுத்தவரை அமெரிக்கா எப்போதும் எனக்குக் கீழே தான் இருக்கிறது!!!///

இது மற்றவர்களின் உண்மையான திறமையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததைக் குறிக்கிறது.

///நீங்கள் சோதிடம் பொய் என்று கூறுகிறீர்களா? அப்படியென்றால் நான் கேட்டிருக்கும் கேள்விக்கு கண்டிப்பாக பதில் அளிக்கவும்!///

கேள்வியா? எங்கே? எங்கே? அதிர்ச்சி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by சதாசிவம் on Fri Jan 06, 2012 11:29 am


அப்பா... எத்தனை கேள்விகள்? திறமையானவர் தான் நீங்கள்!!
உங்கள் கேள்விகளில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை!

ஆமா... அது சமஸ்கிருத வார்த்தை என்று நான் எப்போது சொன்னேன்? அல்லது அது சமஸ்கிருதம் தான் என்பதை உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? உங்களுக்கு தமிழ் தெரியுமா?

புரியவில்லை அல்லது தெரியவில்லை என்றால் அது சமஸ்கிருதமா?
தயவு செய்து கற்பனையில் பேசாதீர்கள்!!

2 கோடி சவால் காமெடியாக சொன்னேன் என்பதற்காக அதை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்! அதில் நிறையா அர்த்தம் இருக்கிறது! (சில காரணங்களுக்காக அந்தக் காமெடி செய்ய வேண்டிய கட்டாயம்) அறிவியல் ஆராய்ச்சி என்பது நீங்கள் நினைப்பது போல தூங்கி எழும் விஷயம் அல்ல.

சோதிடம் என்பது அறிவியல்!!

பூமி உருண்டை என்பது எவ்வளவு காலங்களுக்குப் பின்னால் கண்டறியப் பட்டது என்று தெரியுமா உங்களுக்கு?

நண்பரே, உங்கள் அளவுக்கு எனக்கு தமிழ் தெரியாது, பூமி உருண்டை எப்போது கண்டு பிடிக்கப்பட்டது என்றும் தெரியாது.
இது அறிவியல் என்றால் பால அரிஸ்ட்ட யோகம் இன்றைக்குப் பொருந்துமா ? ஜோதிடத்தில் சொல்லப்பட்ட எல்லாப் பாவங்களும், யோகங்களும் இந்த யுகத்தில் ஒத்து வருமா ? பலிக்குமா ?

ஒருவன் தவறு செய்தால் நாடு கடதப்படுவான் ?இதற்கு கூறும் கிரக நிலைகளும் , வெளிநாட்டுக்கு இன்று வேலைக்கு செல்பவர் கிரக நிலையும் ஒன்றா , வேறு வேறா ? வெளிநாட்டு வேலை செல்வது ஜோதிட சாஸ்திரப்படி யோகமா? தோசமா ?

இந்த சந்தேகத்தை தீருங்கள், உங்கள் இரண்டு கோடியை பற்றி பிறகு விவாதிக்கலாம்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Jan 06, 2012 11:33 am

@T.N.Balasubramanian wrote:
@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எவனுக்கு தன்மீதே நம்பிக்கை இல்லையோ அவனுக்குத்தான் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இருக்க முடியும் என்பது என் கருத்து. புன்னகை
எவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லையோ அவனுக்கு எல்லாமே சூன்யம் தான் . ஜோதிடத்தை அறிவியலாக பார்த்து ,கற்று தேர்ந்த நிபுணர்களிடம் உரையாடினால், அதிசய தக்க விஷயங்கள் கிடைக்கும் என்பது என் கருத்து. அரைகுறை அலம்பல்கள் எல்லாத் துறையிலும் இருக்கின்றனர்.அவர்களால் நன்மையை தவிர தீமையே அதிகம் விளைகிறது.
ரமணியன்.
அரைகுறை அலம்பல்கள் எல்லாத் துறையிலும் இருக்கின்றனர்என்று ஒத்துக்கொண்டதற்க்கு நன்றி. எனக்குத் தெரிந்தவரை ஜோதிடமே ஒரு முளு அலம்பல் என்றுதான் கூறுவேன்.
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by ANTHAPPAARVAI on Fri Jan 06, 2012 2:18 pm

@சதாசிவம் wrote:
நண்பரே, உங்கள் அளவுக்கு எனக்கு தமிழ் தெரியாது, பூமி உருண்டை எப்போது கண்டு பிடிக்கப்பட்டது என்றும் தெரியாது.
இது அறிவியல் என்றால் பால அரிஸ்ட்ட யோகம் இன்றைக்குப் பொருந்துமா ? ஜோதிடத்தில் சொல்லப்பட்ட எல்லாப் பாவங்களும், யோகங்களும் இந்த யுகத்தில் ஒத்து வருமா ? பலிக்குமா ?

ஒருவன் தவறு செய்தால் நாடு கடதப்படுவான் ?இதற்கு கூறும் கிரக நிலைகளும் , வெளிநாட்டுக்கு இன்று வேலைக்கு செல்பவர் கிரக நிலையும் ஒன்றா , வேறு வேறா ? வெளிநாட்டு வேலை செல்வது ஜோதிட சாஸ்திரப்படி யோகமா? தோசமா ?

இந்த சந்தேகத்தை தீருங்கள், உங்கள் இரண்டு கோடியை பற்றி பிறகு விவாதிக்கலாம்.

உங்களுக்குத் தமிழ் தெரியுமா என்று கேட்டதற்கு மட்டும் மன்னித்து விடுங்கள் நண்பரே! ஆனால் அப்படிக் கேட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது அதை நான் பின்பு கூறுகிறேன்...

பூமி உருண்டை எப்போது கண்டு பிடிக்கப்பட்டது என்றும் தெரியாது.
பிறகு சோதிடம் பொய் என்பதை மட்டும் எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?
இது அறிவியல் என்றால் பால அரிஸ்ட்ட யோகம் இன்றைக்குப் பொருந்துமா ? ஜோதிடத்தில் சொல்லப்பட்ட எல்லாப் பாவங்களும், யோகங்களும் இந்த யுகத்தில் ஒத்து வருமா ? பலிக்குமா ?
பால அரிட்டம் என்பது யோகம் இல்லை! மற்றும் அது எல்லாக் காலங்களிலும் பொருந்தும்!!
பால அரிட்டம் என்பது என்ன என்று தெரிந்திருந்தால் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள் நண்பரே...
சோதிடம் என்பது "டிரையல் வெர்ஷன்" இல்லை. அது எல்லா யுகத்திலும் நிலைத்து நிற்கும். சோதிடத்தை நீங்கள் என்ன இப்போது "தேடியா"க் கண்டு பிடித்தீர்கள்...?
ஒருவன் தவறு செய்தால் நாடு கடதப்படுவான் ?இதற்கு கூறும் கிரக நிலைகளும் , வெளிநாட்டுக்கு இன்று வேலைக்கு செல்பவர் கிரக நிலையும் ஒன்றா , வேறு வேறா ? வெளிநாட்டு வேலை செல்வது ஜோதிட சாஸ்திரப்படி யோகமா? தோசமா ?
நான் தவறு செய்தால் என்னை அமெரிக்காவிற்கு கடத்தி விடுவார்களா? முதலில் நாடு கடத்துவது என்றால் என்ன என்று எனக்கு விலக்குங்கள் நண்பரே...
பிறகு நான் உங்களுக்கு சோதிடத்தைப் பற்றி விளக்குகிறேன்.
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by ANTHAPPAARVAI on Fri Jan 06, 2012 3:02 pm

கோழி முட்டை அனைத்துமே குஞ்சு பொரிப்பதில்லையே? அதுபோலத்தான் மனிதர்களில் சிலருக்கு இயற்கையாகவோ, அல்லது அதிகமான மது, புகைப் பழக்கத்தாலோ ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடிவதில்லை. அதற்காக மருத்துவத்துறையை ஒன்றுக்கும் உதவாத ஜோதிடத்துடன் தாங்கள் தொடர்புபடுத்துவதை குழந்தை கூட ஏற்றுக் கொள்ளாது.
முட்டையிலேயே கூமுட்டைகள் இருக்கும் போது, சோதிடர்களிலும் அப்படிப் பட்டவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்..? அதைத்தானே நானும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இன்று போலி மருத்துவர்கள் எவ்வளவோ நிறைந்திருக்கிறார்கள், அதற்காக நான் என்ன மருத்துவம் சுத்தப் பொய் என்றா கூறினேன். மருத்துவம் பார்க்காமல் இருந்தாலும் வியாதி கொஞ்ச காலத்தில் கண்டிப்பாக சரியாகி விடும் என்பதுதான் என் வாதமே... கால அவகாசம் இல்லை என்பவர்கள் மற்றும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள், உயிருக்குப் பயந்த கோழைகள் மருத்துவத்தை நாடி வியாதியின் கொடூரத்தை மறைத்துக் கொண்டு நடமாடலாம்... ஆனால் வியாதியின் தன்மையை எந்த மருத்துவத்தாலும் அடியோடு அழிக்க முடியாது!!
இதைச் சொன்னதற்காக இன்று எந்த ஜோதிடன் வரலாற்றில் இடம் பிடித்துள்ளான். விடை பூஜ்யம்.
வரலாற்றில் இடம் பிடிக்கவில்லை என்று யார் சொன்னது? கின்னஸ் புத்தகத்தில் எழுதினால் தான் அது வரலாறா? அல்லது அமெரிக்கன் ஏற்றுக் கொண்டால் தான் வரலாறா? நீங்கள் சொன்ன இந்தப் பூஜ்ஜியம் தான் எல்லாவற்றின் ஆரம்பம்!
///என்னைப் பொறுத்தவரை அமெரிக்கா எப்போதும் எனக்குக் கீழே தான் இருக்கிறது!!!///

இது மற்றவர்களின் உண்மையான திறமையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததைக் குறிக்கிறது.
உலக உருண்டையில் நமக்குக் கீழே அமெரிக்கா இருக்கிறது என்பதற்காக அவ்வாறு கூறினேன். இதையெல்லாமா இப்படி மேற்கோள் காட்டுவது? என்னா வில்லத்தனம்...

=======================================================================
குறிப்பு: எனக்கு எத்தனையோ முறை கடுமையான நோய்களெல்லாம் வந்திருக்கிறது. எழுந்து நடமாடக் கூட முடியாத நிலையும் வந்திருக்கிறது. சாப்பிடும் சாப்பாடு கூட உடனே வாந்தியாக வெளிவந்திருக்கிறது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பயந்து என்னை வீட்டை காலி செய்து கொள்ளக் கூட சொன்னார்கள். ஆனால் இந்த சிங்கம் எதற்கும் அசைந்து கொடுக்க வில்லை! 18 நாட்கள் வரை படுத்த படுக்கையிலேயே இருந்தேன். ஒரு மாத்திரை கூட விழுங்கியது கிடையாது!
காசு பணம் இல்லாமல் இல்லை... என் குடும்பத்திலும் கூட ஒருவர் மருத்துவர் என்பது இங்கே குறிப்பிடத் தகுந்தது...!!
ஏன் மருத்துவமனைக்கு செல்ல வில்லையென்றால்? என் சோதிடப்படி என் மரணம் ஆயுதத்தினால் அல்லது அதற்கு நிகராக என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் இந்த வியாதியெல்லாம் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை!
நான் என்ன இப்போது செத்தா போய் விட்டேன்?

எச்சரிக்கை: யாரேனும் இவ்வாறு முயற்சி செய்து இறந்து விட்டால் அதற்கு இவன் தான் காரணம் என்று வழக்கு சோடிக்க முயலவேண்டாம்! அதனால் இதை யாரும் பின்பற்றவேண்டிய கட்டாயமும் இல்லை!!

(ஒன்றுமே தெரியாத, விதண்டா வாதமாகவே பேசும் அறிவிழிகள் நிறைய பேர் தேவையில்லாமல் இப்படியெல்லாம் செய்வார்கள். அதற்காகவே இந்த எச்சரிக்கை! நான் எப்போதும் தரமானவர்களோடு மட்டுமே வாதம் செய்வதுண்டு!)
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by ரா.ரா3275 on Fri Jan 06, 2012 3:19 pm

நீங்க சிரிப்பு போலீசா?...இல்ல...சீரியஸ் போலீசா?...
புரியவே இல்ல...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by ANTHAPPAARVAI on Fri Jan 06, 2012 3:31 pm

"எதை தீர்க்க முடியாதோ அதைத் தாங்கித்தான் ஆகவேண்டும்"
மேலே மேற்கோள் காட்டியிருப்பது ஒரு தந்தை, தனது மகனிடம் கூறிய தாரக மந்திரம்!

இதை ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? அவர் யார்? என்பதை தகுந்த ஆதாரத்தோடு பிறகு நான் இங்கே சமர்ப்பிக்கின்றேன். பத்திரிக்கையில் வரும் ராசி பலனைப் படித்து விட்டால், நாமும் ஒரு சோதிடன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கு அது நல்ல சான்றாக அமையும்!
"சோதிடத்தால் எதையும் அறிய முடியாது" என்று நினைக்கும் அறிவியல் மேதைகளுக்கும் அது சான்றாகும்!

அதுவரை சோதிடம் பற்றி கொஞ்சமாவது தெரிந்தவர்கள் தங்களது வாதத்தைத் தொடரலாம்! தரமானவர்கள் மட்டும்!

ஏனென்றால் எனக்கு அநாகரீகமான வார்த்தைகளை எப்படி தரமாக பேசுவது என்றும் தெரியும்!!! இந்த விளையாட்டை தமிழ் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது!!
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by ANTHAPPAARVAI on Fri Jan 06, 2012 3:33 pm

RaRa3275 wrote:நீங்க சிரிப்பு போலீசா?...இல்ல...சீரியஸ் போலீசா?...
புரியவே இல்ல...

என் சோதிடப் படி என்னை யாராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதாம் நண்பா! நன்றி!
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by பிஜிராமன் on Fri Jan 06, 2012 3:39 pm

என் சோதிடப் படி என்னை யாராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதாம் நண்பா! நன்றி!


ஆனால் இப்பொழுது புரிந்து விட்டது........
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by ANTHAPPAARVAI on Fri Jan 06, 2012 3:45 pm

@பிஜிராமன் wrote:
என் சோதிடப் படி என்னை யாராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதாம் நண்பா! நன்றி!


ஆனால் இப்பொழுது புரிந்து விட்டது........

உடனே நான் என்னை மாற்றிக் கொள்வேனே... ஜாலி
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by பிஜிராமன் on Fri Jan 06, 2012 3:46 pm

உடமே நான் என்னை மாற்றிக் கொள்வேனே


இதைத் தான் நண்பா புரிந்தது என்று கூறினேன்........
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by ANTHAPPAARVAI on Fri Jan 06, 2012 3:50 pm

@கபாலி wrote:நல்ல விவாதம்... இன்னும் பலர் கருத்துகளை எதிர்நோக்கி இருக்கிறேன்..

நன்றி அந்தப்பார்வை நண்பரே..

நன்றி நண்பரே!...
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by சிவா on Fri Jan 06, 2012 3:52 pm

[quote="ANTHAPPAARVAI"]

அதுவரை சோதிடம் பற்றி கொஞ்சமாவது தெரிந்தவர்கள் தங்களது வாதத்தைத் தொடரலாம்! தரமானவர்கள் மட்டும்!

ஏனென்றால் எனக்கு அநாகரீகமான வார்த்தைகளை எப்படி தரமாக பேசுவது என்றும் தெரியும்!!! இந்த விளையாட்டை தமிழ் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது!!

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by பிஜிராமன் on Fri Jan 06, 2012 3:58 pm

நான் ஒரு செய்தி தாளில் படித்தேன், வருகிற நோய்க்கெல்லாம், மருந்து எடுதுக்கொள்ளாமல், நம் உடலே அதை சரி செய்யட்டும் என்று இருந்தால், விரைவில் நோய் தடுப்பாற்றல் குறைந்து நம் உடல் நோய்களின் கூடாரமாகி, விரைவில் நம்மை கொன்றுவிடும் என்று அதில் படித்தேன்.

நிச்சயமாக மருந்து எடுத்தே தான் ஆக வேண்டும், ஆங்கில மருந்தோ, அல்ல சித்த மருந்தோ, எதையாவது எடுத்து தான் ஆக வேண்டும். அதற்காக எடுததற்கெல்லாம், மருந்து உண்ணுவதும் தவறு தான், அதுவும் விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆக, நண்பா, மருந்தை எடுதுக் கொண்டு உடல் நலத்தை பேணிக்கொள்ளுங்கள். எந்த நோயும் மனிதனைக் கொல்லாது சரியாகி விடும் மருந்தை எடுக்காவிட்டாலும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by சிவா on Fri Jan 06, 2012 4:08 pm

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1கோடி பரிசு

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு! ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்!!

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாத அளவுக்கு ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம், பெயரியல், நாடி ஜோதிடம், சோழி உருட்டுதல், குறி சொல்லுதல் எனப் பலவேறு முகங்களில் மக்களை மூளைச் சலவை செய்து பணம் கறந்து வருகிறார்கள் ஜோதிட சிகாமணிகளும், பூஷணங்களும்.

ஜோதிடம் பற்றிய குறிப்புகளோ கிரகங்கள், ராசிகள் பற்றிய தகவல்களோ பழைமையான இந்திய நூல்களில் எதிலும் காணப்படவில்லை. ஜோதிடக் கலை என்பது புராதன கிரேக்க - ரோமானிய கலாச்சாரத்திலிருந்து பிறந்து உலகம் முழுவதும் பரவியதாகும்.

பெரும்பாலான ஜோதிடர்கள் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் பேச்சு கொடுத்து கிடைக்கும் தகவல்களிலிருந்து யூகமாக பல ஆரூடங்களைக் கூறுவார்கள்.

இப்படி சுமார் 10-12 ஆருடக் குறிப்புகள் சொல்லும்போது அவற்றில் ஒன்றிரண்டு இயற்கையாகவே பொருந்தி இருந்தால் மக்கள் ஜோதிடரை நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். சரியாக 10 பலன்கள் சொன்னால் அதில் பலித்த 3 பலன்களையே ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள பலரிடம் சொல்லிக் கொண்டு திரிவார்கள்.

பலிக்காக பலன்களைப் பற்றி வாய்த் திறப்பதில்லை. ஜோதிடர்களிடம் ஏமாந்துவிட்டோம் என்பதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள விரும்பாத மனநிலையின் விளைவே இதற்குக் காரணம்.

தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைகள், மனப்பயம், கவலைகள் இவையே ஜோதிடரின் மூலதனமாகும். இவற்றை மிகைப்படுத்தி கற்பனை கலந்து பல ஆருடங்களைச் சொல்லி வாடிக்கையாளர்களை பிரமிக்க வைத்துவிடுவார்கள்.

தேடி வரும் வாடிக்கையாளர்கள் மனத்தில் நம்பிக்கை உண்டாக்கும் வகையில், பல்வேறு சாமி படங்கள், பூஜைப் பொருள்கள், சங்கு சக்கரங்கள், செப்புத் தகட்டில் வரைந்த எந்திரங்கள், கமகமக்கும் பூமணம், ஊதுவத்தி நெடி, திருநீறு, சாம்பிராணி புகை, சந்தனம் போன்ற பொருள்களுடன் ஜோதிடரிடம் பணிந்து போகும் சூழ்நிலையை உருவாக்கி வைத்து உளவியல் ரீதியாக தாங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வைத்து விடுவார்கள்.

பூர்வஜென்ம கர்மபலன் என்றெல்லாம் சொல்லி, சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார்கள். எந்தவொரு ஜோதிடமும் பத்துக்குப் பத்து பலன்களை மிகத் துல்லியமாகச் சொன்னது இது வரையில் யாரும் கிடையாது.

ஜோதிடம் மூடநம்பிக்கை என்பதை விளக்குவதற்காக பல்வேறு அறிவியலாளர்கள் பெரு முயற்சி எடுத்து வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஏ.எஸ்.நடராஜ் என்பவர் ஜோதிடத்தைக் கற்றிருப்பவர். இந்த ஜோதிடம் மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்குத்தான் பயன்படும் என்று எண்ணி ஜோதிடத்திற்குப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

ஜோதிடத்திற்கே சவால், கடவுள் ஒரு முழு சிந்தனை, போன்ற தனது கன்னட மொழி பெயர்ப்பு நூல்களில் வாஸ்து, ஜோதிடம், ஆன்மா, மறுபிறப்பு மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு கடவுள்கள் உள்பட அனைத்துப் பிரச்சினைகளையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து கன்னடமொழியில் பல நூல்களை எழுதியுள்ளார்.

முதன் முதலில் 2001 ஆம் ஆண்டில் ஜோதிடம் உண்மை யென்பதை நிரூபித்துக் காட்டுமாறு ரூ 10 லட்சம் பரிசு தருவதாக சவால் விட்டு நாடு முழுவதுமுள்ள பல ஜோதிடர்களுக்கு ஏ.எஸ்.நடராஜ் கடிதங்கள் எழுதி அனுப்பினார்.

ஆனால், ஜோதிடர் எவரும் அந்தச் சவாலை ஏற்று ஜோதிடத்தை நிரூபிக்க முன்வரவில்லை. ஒரு சிலர் சவாலை ஏற்பதாக பத்திரிகைகளில் அறிவித்து விளம்பரம் பெற்றுவிட்டு காணாமல் போனார்கள்.

எனவே, இப்பொழுது பரிசுத் தொகையை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தி தனது சவாலை நடராஜ் திரும்பவும் அறிவித்திருக்கிறார். அவரது சவால் விவரம் வருமாறு:

சவாலை ஏற்று வரும் ஜோதிடரிடம் ஒரே ஒரு ஜாதகம் வழங்கப்பட்டு 10 கேள்விகள் கேட்கப்படும். இவை கடந்த காலத்தைப் பற்றி, நிகழ்காலத்தைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றியதாக இருக்கும்.

ஜோதிடம் என்பதே எதிர்காலத்தைப் பற்றி கூறும் ஆரூடம் என்பதால் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள் மிக முக்கியமானவை. இவற்றிற்கு 80 சதவிகிதமாவது சரியான பதில்களைக் கூறவேண்டும். சவாலை ஏற்க வரும் ஜோதிடரோ, மந்திரவாதியோ யாராக இருந்தாலும் ரூபாய் ஒரு லட்சம் காப்புத் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம். போட்டியில் வென்றால், டெபாசிட் தொகையுடன் ரூபாய் ஒரு கோடி பரிசும் வழங்கப்படும்.

ஜோதிடத்திற்கு சவால் விட்டுள்ள ஏ.எஸ். நடராஜ் பெங்களூரு பத்மநாப நகர், 5-ஆவது பிரதான சாலையில் வசித்து வருகிறார்.

ராஜ் வைச்சரிக்கா வேதிகே என்ற சங்கத்திற்கும் அகில கர்நாடக விச்சரவாடி சங்கத்திற்கும் தலைவராக உள்ளார். அவர் ஜோதிஷெகே சவாலு என்ற புத்தகத்தை ஜோதிடர்களுக்கு சவால் விட்டு அவர் எழுதியுள்ளார்.

ஜோசியம், ஆவி, மறுபிறவி, கீதை, வேதாந்த இந்து மதம், கடவுளின் தோற்றம், வேத உபநிடதத்தில் பவுத்த வாதம், புராணங்கள், தர்மங்கள், ஆதியாத்மா போன்ற பல புத்தகங்கள் பிரபல ஜோதிடர்கள் எழுதியுள்ள புத்தகங்களைப் படித்து ஆராய்ந்துள்ளார்.

ஜோதிடப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்த போது, பாலஜோதிடம் என்பது முற்றிலும் தவறானது; அடிப்படையற்றது; இந்தியாவைச் சேர்ந்ததல்ல; முறையற்றது என்பதை நன்றாக அறிந்து கொண்டார். பிறகு, அவர் பழைய பாரம்பரியத்திலிருந்து பகுத்தறிவு வாதியாகவும் பழைமை வாதத்திலிருந்து நவீன விஞ்ஞான பார்வைக்கும் மாறினார். ஜோசியத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் அவற்றின் பலன்கள் அனைத்தும் முற்றிலும் பிழையானது; ஆதாரமற்றது; விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று அறிந்தார்.

ஏ.எஸ்.நடராஜ் கன்னடத்தில் எம்.ஏ., பட்டமும், அறவியலில் எம்.ஏ.பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

மனமறிந்து ஒரு சின்னஞ்சிறு சிசுவை படுகொலை செய்வதற்கு ஒப்பானது ஜோதிடம். மடமையை அறியாமையால் பயந்து சாகின்ற அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் வயிற்றை வளர்க்கின்ற அயோக்கியத்தனம் என்கிறார்.

மூலம்: செ. கஜபதி (எதிரொலி -28.2.2010)

http://theriyumaithu.blogspot.com/2010/10/1.html
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by சிவா on Fri Jan 06, 2012 4:11 pm

உங்களுக்குத் திறமை இருந்தால் ஜோதிடத்தைப் பற்றி நன்கு அறிந்த ஏ.எஸ்.நடராஜ் அவர்களுடன் போட்டியிடுங்கள்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by பிஜிராமன் on Fri Jan 06, 2012 4:17 pm

சிவா அண்ணா அருமையான பதிவு, இந்த பதிவைப் பார்க்கும் பொழுது, ஜோதிடர்களின் நிலை அப்பட்டமாக தெரிகிறது.

என்னுடைய பெயரில் இன்னொருவரைப் பார்தது எனக்கு மகிழ்ச்சி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by ANTHAPPAARVAI on Fri Jan 06, 2012 4:18 pm

@சிவா wrote:உங்களுக்குத் திறமை இருந்தால் ஜோதிடத்தைப் பற்றி நன்கு அறிந்த ஏ.எஸ்.நடராஜ் அவர்களுடன் போட்டியிடுங்கள்.

எனது நிபந்தனைகளோடு அது ஒத்துப் போகவில்லையே...
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by ANTHAPPAARVAI on Fri Jan 06, 2012 4:29 pm


இந்த டாட்டா எதற்கு? நான் தான் உங்களோடு வாதம் செய்து கொண்டிருக்கிறேனே... ஒரு வேளை நீங்கள் திருப்பி சொல்கிறீர்களோ....
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by ANTHAPPAARVAI on Fri Jan 06, 2012 4:42 pm

@சிவா wrote:ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1கோடி பரிசு

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு! ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்!!

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாத அளவுக்கு ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம், பெயரியல், நாடி ஜோதிடம், சோழி உருட்டுதல், குறி சொல்லுதல் எனப் பலவேறு முகங்களில் மக்களை மூளைச் சலவை செய்து பணம் கறந்து வருகிறார்கள் ஜோதிட சிகாமணிகளும், பூஷணங்களும்.

...............................
ஏ.எஸ்.நடராஜ் கன்னடத்தில் எம்.ஏ., பட்டமும், அறவியலில் எம்.ஏ.பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

மடமையை அறியாமையால் பயந்து சாகின்ற அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் வயிற்றை வளர்க்கின்ற அயோக்கியத்தனம் என்கிறார்.

கிட்டத் தட்ட நான் செய்வதைத் தான் அவரும் செய்கிறார்! இன்று முழுமையான சோதிடம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்பதை நன்கு அறிந்துள்ளதால் இந்த சவால்! சோதிடத்தை நன்கு கற்கும் போது இந்த உண்மை புரியத் தொடங்கும்!..

அவர் சோதிடர்களுக்கு சவால் விட்டிருக்கிறார்..

நான் சோதிடம் பொய் என்பவர்களுக்கு சவால் விட்டிருக்கிறேன்...!!

சோதிடம் பொய்யல்ல!
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by பிஜிராமன் on Fri Jan 06, 2012 4:49 pm

எனக்கு ஜோதிடம் பாக்கலாம் பிடிக்காது, வீட்டுல பாப்பாங்க.........என்ன தான் சொல்லுங்க........ஜோதிடம் கேக்குறதுல இருக்குற சுகமே தனி, அவ்ளோ இண்டரெஸ்ட்டிங் ஆ இருக்கும், கதை விடுறது சரியா தெரியும், இருந்தாலும், அத மாடுலேசனோட சொல்றது நல்லா இருக்கும். நேரம் போராதே தெரியாதுனா பாதுக்கோங்களேன்.

எனக்கு ஜோதிடம் லாம் தெரியாது, இருந்தாலும், என்ன பொறுத்த வரை ஜோதிடமும் சினிமாவும் ஒண்ணு தான், ரெண்டுமே உண்மை கிடையாது, ஆனா ரெண்டுமே நம்மள சந்தோஷமும் படுத்தும், அழுகவும் வைக்கும், முக்கியமான விஷயம் ரெண்டுமே நம்ம கைள இருக்குற காச குறி பார்த்து கரைக்கும்.

இது என் தனிப்பட்ட கருத்து, மாற்று கருத்து கூறுவோர் கூறலாம்..........
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by ANTHAPPAARVAI on Fri Jan 06, 2012 5:04 pm

@பிஜிராமன் wrote:எனக்கு ஜோதிடம் பாக்கலாம் பிடிக்காது, வீட்டுல பாப்பாங்க.........என்ன தான் சொல்லுங்க........ஜோதிடம் கேக்குறதுல இருக்குற சுகமே தனி, அவ்ளோ இண்டரெஸ்ட்டிங் ஆ இருக்கும், கதை விடுறது சரியா தெரியும், இருந்தாலும், அத மாடுலேசனோட சொல்றது நல்லா இருக்கும். நேரம் போராதே தெரியாதுனா பாதுக்கோங்களேன்.

எனக்கு ஜோதிடம் லாம் தெரியாது, இருந்தாலும், என்ன பொறுத்த வரை ஜோதிடமும் சினிமாவும் ஒண்ணு தான், ரெண்டுமே உண்மை கிடையாது, ஆனா ரெண்டுமே நம்மள சந்தோஷமும் படுத்தும், அழுகவும் வைக்கும், முக்கியமான விஷயம் ரெண்டுமே நம்ம கைள இருக்குற காச குறி பார்த்து கரைக்கும்.

இது என் தனிப்பட்ட கருத்து, மாற்று கருத்து கூறுவோர் கூறலாம்..........

சரி தான் நண்பரே... இதே கருத்தை நான் வேறு கோணத்தில் சொல்லியிருக்கிறேன்...
இங்கே சென்று பாருங்கள். http://www.eegarai.net/t47286-snkuyilan
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by T.N.Balasubramanian on Fri Jan 06, 2012 5:17 pm

@ANTHAPPAARVAI wrote:
RaRa3275 wrote:நீங்க சிரிப்பு போலீசா?...இல்ல...சீரியஸ் போலீசா?...
புரியவே இல்ல...

என் சோதிடப் படி என்னை யாராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதாம் நண்பா! நன்றி!
அப்படினா லக்னத்துலே கேதுவா?
ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21469
மதிப்பீடுகள் : 8148

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by பிஜிராமன் on Fri Jan 06, 2012 5:22 pm

அப்படினா லக்னத்துலே கேதுவா


ஐயா, லக்னத்துல கேது இருக்காது.... சூது தான் இருக்கும் என்று நினைக்கிறேன்....... சிரி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: சோதிடம் 100% உண்மை. சவால்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum