ஈகரை தேடுபொறி
Latest topics
» பிலிப்பைன்ஸ்
by madhukrish Today at 11:29 am

» எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !
by பாலாஜி Today at 11:28 am

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -6)
by பூவன் Today at 11:15 am

» 8000 - பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதுவுக்குப் பாராட்டுக்கள்!
by பாலாஜி Today at 11:09 am

» கடவுள் எங்கே?
by ராஜா Today at 11:08 am

» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Today at 11:07 am

» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by பாலாஜி Today at 11:05 am

» பூண்டு ஊறுகாய்
by மாணிக்கம் நடேசன் Today at 11:05 am

» பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள்
by ராஜா Today at 11:04 am

» முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு!
by ராஜா Today at 11:00 am

» புற்று - முற்றவிடக் கூடாது!
by ராஜா Today at 10:58 am

» அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
by madhukrish Today at 10:57 am

» கிளாஸ் பெயிண்டிங்
by madhukrish Today at 10:53 am

» சரியான பொருள்!
by பூவன் Today at 10:49 am

» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by பூவன் Today at 10:37 am

» uTorrent மென்பொருளை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு...
by Muthumohamed Today at 10:31 am

» கல்வி பற்றி காந்தியடிகள்
by பூவன் Today at 10:07 am

» அம்மாவுக்குக் குடும்பம் இல்லை.. நாம்தான் அவரின் பிள்ளைகள்!
by யினியவன் Today at 10:06 am

» என் தனிமை தருணங்கள் .....
by பூவன் Today at 10:02 am

» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 9:33 am

» மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..!
by முத்துராஜ் Today at 8:58 am

» பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
by முத்துராஜ் Today at 8:55 am

» பொது அறிவுத் தகவல்கள்!
by முத்துராஜ் Today at 8:48 am

» தீக்கோழி
by அசுரன் Today at 8:46 am

» அலெக்ஸாண்டர் பிளெமிங் & வின்ஸ்டன் சர்ச்சில்
by அசுரன் Today at 8:45 am

» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by அசுரன் Today at 8:42 am

» கொடியேற்றினால் மட்டும் போதுமா?
by அசுரன் Today at 8:41 am

» அரிசி
by அசுரன் Today at 8:38 am

» விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
by சிவா Today at 3:09 am

» ஆண்டவன் உத்தரவு!
by சிவா Today at 2:32 am

» சித்தர் வணங்கிய சிவபாலன்
by சிவா Today at 2:28 am

» ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு
by சிவா Today at 2:23 am

» பதவி! - தெனாலிராமன் கதை
by சிவா Today at 2:17 am

» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by Muthumohamed Today at 1:16 am

» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by Muthumohamed Today at 1:08 am

» பகத்சிங் நாத்திகரா?
by Muthumohamed Today at 12:58 am

» வேலன்:-சாப்ட்வேர் கீ களை சேமித்து வைக்க
by Muthumohamed Today at 12:57 am

» வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
by Muthumohamed Today at 12:53 am

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 12:51 am

» நான் இப்போது சென்னைவாசி - ச. சந்திரசேகரன்
by யினியவன் Yesterday at 11:34 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























துளித்தேன்-திளைத்தேன் 5 5 2

துளித்தேன்-திளைத்தேன்

View previous topic View next topic Go down

வாழ்த்து துளித்தேன்-திளைத்தேன்

Post by ரா.ரா3275 on Tue Jan 24, 2012 10:49 pm

வாசிப்பது எப்போதுமே சுகானுபவம்.வாசித்தவை மனசின் மையப்பகுதியில் கூடு கட்டும்.அதன் மர்மப் பிரதேசங்களில் விரவி பரவி வியாபிக்கும்.வேர்களை விசிறியடிக்கும்.

அதிலும் தகுதியான வாசிப்பு ஒரு தயிர் மத்தைப் போல் மனசை எப்போதும் கடைந்துகொண்டே இருக்கும்.

எனக்கு என் பெயரைப் போலவே எக்காலமும் மறக்காத எளிய வரிகள் நிறைய உண்டு.

உங்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு.

"நம்முடைய அரசியல்வாதிகள் எப்போதுமே முட்டைக்கு முகச் சவரம் செய்ய நினைப்பவர்கள்"

"நான் கூடு விட்டு கூடு மாறும் அரசியல் சித்தன்தான்.ஆனால் குச்சிகளை விட்டவன்.கொண்டவன் அல்லன்"

"நம்மவர்களுக்கு எப்போதும் மூக்கு மட்டுமே முன்னோக்கி இருக்கும்"

இவை என் நெஞ்சமெல்லாம் நீங்கா இடம் பிடித்திருக்கும் அமரர் 'வார்த்தைச் சித்தர்' வலம்புரி ஜான் அவர்களின்
சிந்தனைத் தேன்கூட்டின் சில சிதறிய துளிகள்.

"மானம் என் மகன் கேட்ட தாலாட்டு;மரணம் அவன் ஆடிய விளையாட்டு"

"எதிரியின் ஈட்டி எப்பக்கமிருந்து வேண்டுமானாலும் பாயலாம் என்று எத்தனிக்க முடியாத வேளையில் ரத்த வெள்ளத்திலே மிதந்து வருகின்ற மண்டை ஓடுகளை முத்தமிட்டுச் செல்கின்ற மாவீரனுக்கு மரணம் என்பது மங்கையின் இதழைவிடச் சுவையானது"

இந்த வரிகளை வாசிக்கிற போதெல்லாம் நான் வசிப்பது தமிழனாகத்தான்-தமிழ் மண்ணில்தான் என்கிற பெருமிதம் எனக்குள் ஒரு பேய் மழையையேப் பெய்விக்கும்.ஆம்...அரசியல் முரண்களுக்கு அப்பால் நான் நேசிக்கும் எழுத்தாளர் கலைஞரின் கவிமழையின் கந்தகத் துளிகள் இவை.

இன்னும் சின்னச் சின்ன மேற்கோள்கள் நிறைய உண்டு.

"ஒவ்வொரு தோழியிடமும் இருக்கிறது அம்மாவின் சாயல்"-ஆனந்த விகடன் 'வட்டியும் முதலும்' தொடரில் ராஜு முருகனின் அற்புத படைப்பிலக்கிய வரிகள் இது.இதன் அர்த்தத்தின் ஆழ-அகலங்கள் என்னை இன்னும் உழுது கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.

"புயல் வந்து பாடும்போது பூவரசஞ் சருகுகள்தான் என்ன செய்யும்"

"ஒரு மாலையின் மீது மலை சரிந்தே கிடந்தது"

இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் எனக்கு தமிழ்ச் சோறு போடும் தமிழம்மாக்களில் ஒருவரான கள்ளிக்காட்டுக் கம்பன் வைரமுத்து.

இவை எல்லாம் நான் அருந்திய துளி மலைத் தேனில், துளித்-துளித்-துளித்-தேன் என்றாலும் இதை எண்ணி எண்ணி நான் திளைத்தேன்-திளைக்கிறேன் மகிழ்ச்சியில் என்பதே என் தாயின் கற்பைப் போல் உண்மை.






Last edited by RaRa3275 on Wed Jan 25, 2012 11:07 pm; edited 2 times in total






நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 7632
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 1360

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: துளித்தேன்-திளைத்தேன்

Post by அசுரன் on Tue Jan 24, 2012 10:55 pm

வரிகள் ஒவ்வொன்றும் அருமை... அருமை...அதிலும் மாலையின் மீது மலை ஒன்று சரிந்து கிடக்கின்றது... இது சூப்பர்

அசுரன்
வழிநடத்துனர்


பதிவுகள்: 9132
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1953

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: துளித்தேன்-திளைத்தேன்

Post by பிஜிராமன் on Tue Jan 24, 2012 11:06 pm

அருமையான பதிவு ரா ரா...........விரும்பினேன்...........மகிழ்ந்தேன்...........நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்




If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 5894
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1603

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: துளித்தேன்-திளைத்தேன்

Post by ரா.ரா3275 on Tue Jan 24, 2012 11:12 pm

நன்றி அசுரன் அவர்களே...நன்றி...






நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 7632
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 1360

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: துளித்தேன்-திளைத்தேன்

Post by ரா.ரா3275 on Tue Jan 24, 2012 11:12 pm

நன்றி பிஜி...






நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 7632
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 1360

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: துளித்தேன்-திளைத்தேன்

Post by யினியவன் on Tue Jan 24, 2012 11:23 pm

துளித்தேன் படித்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன் - ஒவ்வொன்றும் ரா ரா த்தேன்.

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 20319
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4246

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: துளித்தேன்-திளைத்தேன்

Post by ரா.ரா3275 on Wed Jan 25, 2012 10:05 am

நன்றி கொலவெறி நண்பரே...






நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 7632
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 1360

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: துளித்தேன்-திளைத்தேன்

Post by ரா.ரா3275 on Wed Jan 25, 2012 11:11 am

அசுரன் wrote:வரிகள் ஒவ்வொன்றும் அருமை... அருமை...அதிலும் மாலையின் மீது மலை ஒன்று சரிந்து கிடக்கின்றது... இது சூப்பர்

எழுதியவர்கள் ஜகஜ்ஜாலக் கில்லாடிகள்...






நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 7632
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 1360

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum