புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடும் கொடியும் - Page 3 Poll_c10நாடும் கொடியும் - Page 3 Poll_m10நாடும் கொடியும் - Page 3 Poll_c10 
34 Posts - 51%
heezulia
நாடும் கொடியும் - Page 3 Poll_c10நாடும் கொடியும் - Page 3 Poll_m10நாடும் கொடியும் - Page 3 Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
நாடும் கொடியும் - Page 3 Poll_c10நாடும் கொடியும் - Page 3 Poll_m10நாடும் கொடியும் - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நாடும் கொடியும் - Page 3 Poll_c10நாடும் கொடியும் - Page 3 Poll_m10நாடும் கொடியும் - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நாடும் கொடியும் - Page 3 Poll_c10நாடும் கொடியும் - Page 3 Poll_m10நாடும் கொடியும் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாடும் கொடியும் - Page 3 Poll_c10நாடும் கொடியும் - Page 3 Poll_m10நாடும் கொடியும் - Page 3 Poll_c10 
313 Posts - 46%
ayyasamy ram
நாடும் கொடியும் - Page 3 Poll_c10நாடும் கொடியும் - Page 3 Poll_m10நாடும் கொடியும் - Page 3 Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
நாடும் கொடியும் - Page 3 Poll_c10நாடும் கொடியும் - Page 3 Poll_m10நாடும் கொடியும் - Page 3 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
நாடும் கொடியும் - Page 3 Poll_c10நாடும் கொடியும் - Page 3 Poll_m10நாடும் கொடியும் - Page 3 Poll_c10 
17 Posts - 2%
prajai
நாடும் கொடியும் - Page 3 Poll_c10நாடும் கொடியும் - Page 3 Poll_m10நாடும் கொடியும் - Page 3 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நாடும் கொடியும் - Page 3 Poll_c10நாடும் கொடியும் - Page 3 Poll_m10நாடும் கொடியும் - Page 3 Poll_c10 
9 Posts - 1%
Jenila
நாடும் கொடியும் - Page 3 Poll_c10நாடும் கொடியும் - Page 3 Poll_m10நாடும் கொடியும் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நாடும் கொடியும் - Page 3 Poll_c10நாடும் கொடியும் - Page 3 Poll_m10நாடும் கொடியும் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
நாடும் கொடியும் - Page 3 Poll_c10நாடும் கொடியும் - Page 3 Poll_m10நாடும் கொடியும் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாடும் கொடியும் - Page 3 Poll_c10நாடும் கொடியும் - Page 3 Poll_m10நாடும் கொடியும் - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடும் கொடியும்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 26, 2012 10:05 am

First topic message reminder :




ஒருநாடு என்றால் அதற்குக் குறிப்பிட்ட எல்லைக்கு ஒரு நிலப்பரப்பு இருக்க வேண்டும். அதில் வாழ குடிமக்கள் இருக்க வேண்டும். அவர்களை ஆள்வதற்கு அரசாங்கமும், ஆட்சியும் இருக்கவேண்டும்.

அந்த நாட்டுக்கென்று ஒரு தேசியக்கொடியும், தேசிய கீதமும், சின்னமும் (இலச்சினை) இருக்கவேண்டும். இந்திய தேசத்திற்கென்று ஒரு கொடி இருக்கிறது. மூவண்ணக்கொடி அது. மேலே ஆரஞ்சு, நடுவில் வெள்ளை, அதன் நடுவில் அசோகச் சக்கரம், கீழே பச்சை ஆகியவற்றைக் கொண்டதுதான் இந்தியத் தேசியக் கொடியாகும்.

இந்தியாவின் தேசிய கீதம்—‘ஜன கண மன‘ என்ற பாடலாகும். இந்தியத் தேசப் பாடல் ‘வந்தே மாதரம்‘ ஆகும்.

இந்திய நாட்டின் தேசியச் சின்னம் (இலச்சினை) மூன்று சிங்கங்களின் முகங்கள். இந்தியத் தேசிய வாசம் ‘சத்யமேவ ஜெயதே‘ இந்தியாவின் தேசிய விலங்கு புலி.

தேசியப் பறவை மயில். தேசிய மலர் தாமரை. உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மிகப் பழங்காலம் தொட்டே உலக நாடுகள் பலவும் தனித்தனிக் கொடிகளைக் கொண்டிருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.

இன்று உலகநாடுகள் அனைத்துக்குமே அவற்றின் தேசியச் சின்னமாகக் கொடிகள் அமைந்திருக்கின்றன. அந்தக் கொடிகளின் நிறமும், அவை அமைந்துள்ள பாங்கும், அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள இதர சின்னங்களும் அந்த நாடுகளின் கொள்கைகளை விளக்குவனவாக இருப்பதையும் காணலாம்.

இவ்வாறு ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு கொடியைத் சின்னமாகத் தேர்வு செய்து பயன்படுத்த ஆரம்பித்தது. எப்பொழுது தெரியுமா? பைபிள் காலத்திற்கும் முன்னதாகவே இந்தப் பழக்கம் உலகத்தில் இருந்துவந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி தேசியக்கொடி தோன்றியது ஒரு சுவையான கதையாகும். பண்டைக் காலத்தில் தோன்றிய தேசியக் கொடிகள் துணியில் செய்யப்பட்டிருக்கவில்லை.

ஒரு கம்பத்தின் மீது மரத்தினால் ஏதாவதொரு பொருள் அல்லது பறவை அல்லது விலங்கினத்தின் உருவத்தைச் செதுக்கிவைத்து விடுவார்கள். உலகத்தில் தோன்றிய முதல் கொடி இப்படி மரக்கொடியாகத்தான் தோன்றியது. அதுவும் ஓர் அவசியத்தை முன்னிட்டுத்தான் தோன்றியது. அதாவது இரண்டு நாடுகள் போரிடும்பொழுது இருநாட்டுப் படைகளும் நேர் எதிர்த்திசைகளிலிருந்து புறப்பட்டு ஒரு பொது இடத்திற்குச் சென்று சங்கு அல்லது ஏதாவதொரு ஒலிப்பானை ஒலிக்கச் செய்துவிட்டு போரிடத் தொடங்குவதுதான் பண்டைக் காலத்திய வழக்கமாகும்.

அப்படிப் போருக்குச் செல்லும் ஒரு நாடு அல்லது குழுவின் வீரர்கள் ஒரே அணியாகச் செல்லவும், அடையாளம் கண்டு கொள்ளவும்தான் இப்படிப்பட்ட மரக்கொடிகளைத் தயார் செய்து பயன்படுத்தினார்கள். போர்க்களத்தில் போர் நடக்கும்பொழுது இந்த மரக்கொடிகளை வெட்டிச் சாய்ப்பதையே இருதரப்பு வீரர்களும் முதல் பணியாகக் கருதி முயற்சிப்பார்கள். ஒவ்வொர் தரப்பினரும் தங்கள் கொடி சாய்ந்துவிட்டால் அவர்களுடைய அரசன் அல்லது படைத்தலைவனே சாய்ந்து விட்டதாக அவர்கள் கருதியதுதாம் இதற்குக் காரணமாகும். துணியினால் ஆன முதல் கொடியை ரோமானிய நாட்டவர்தான் முதன் முதலாக உலகத்திற்கு அறிமுகப்படுத்தியதாக ஒரு வரலாறு கூறுகிறது.

பண்டைய ரோமானியர்கள் போர்க்களத்தில் வண்ணத்துணிகளை ஒரு கம்பத்தில் கட்டி வைத்துவிடுவார்கள். அந்த இடத்திற்கு அவர்களுடைய படைவீரர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். பின்னர் அவர்கள் வரிசையாக அணிவகுத்து நிற்க, எதிரிநாட்டுப் படைகள் வந்து சேர்ந்ததும் போர் குழப்பமில்லாமல் நடக்கும். யூதர்கள் ஒரு தனிக்கொடியைப் பயன்படுத்தியதாகப் பைபிளிலேயே ஒரு குறிப்பு காணப்படுகிறது. ஆனால் கி.பி. 1218-ஆம் ஆண்டில் ஒரு கொடியை உருவாக்கி அதைத் தேசியச் சின்னமாக ஏற்று முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நாடு டென்மார்க்தான்.

அடுத்து 1339 ஆம் ஆண்டில் ஸ்விட்ஸர்லாந்து நாடும் தன்னுடைய தேசியச் சின்னமாக ஒரு கொடியை அமைத்துக் கொண்டது. அதற்குப் பின்னர் சில நூற்றாண்டுகள் கழித்துத் தான் பிரிட்டன் தன் தேசியக் கொடியை அமைத்துக் கொண்டது. யூனியன் அமெரிக்கத் தேசியக் கொடி தோன்றியது. அமெரிக்காவின் கொடியில் அதன் 50 மாநிலங்களையும் குறிக்கும் வகையில் 50 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன! பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவைப் பின்பற்றிப் பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் கொடிகளை அமைத்துக் கொண்டன.

உலகத்தின் மிகப்பழமையான கொடி ஏதாவது உள்ளதா என்று தேடியபோது 1972ஆம் ஆண்டில் ஈரான் நாட்டில் உள்ள கபிளில் என்ற ஊரில் ஒரு பழமையான கொடி கிடைத்தது. உலோகத்தால் செய்யப்பட்ட அந்தக் கொடி கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாக இருக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இன்றைக்கு. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய கொடியாகும் அது! ஆனால், உலகத்திலேயே மிகப்பெரிய கொடி ஒன்று 1980 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. 411X210 சதுர அடி பரப்பளவும் 7.7 டன் எடையும் கொண்ட அந்தக் கருங்கல் கொடியை உருவாக்கியவர் லென் சில்வர் பைன் என்பவராவார், ஃதி கிரேட் அமெரிக்கன் ஃபிளாக்“ என அழைக்கப்படும் அந்தப் பிரமாண்டமான கொடியை அவர் அமெரிக்க ஜனாதிபதிக்குப் பரிசளித்தார்.

இன்று அந்தக் கொடி வாஷிங்டனில் உள்ள ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் இருக்கிறது. உலகத்திலேயே கொடிக் கம்பங்களில் பறக்கும் கொடிகளில் மிகவும் பெரிய கொடி தென் அமெரிக்காவில் உள்ள பிரேஸில் கொடி தான்! பிரெஸில் நாட்டின் தலைநகரான பிரேஸிலியாவில் பறந்து கொண்டிருக்கும் அந்தக் கொடியின் நீளம் 328 அடி 1 அங்குலம்; பெரிய பொடி சோவியத்யூனியன் உட்பட உலகின் எந்த நாட்டிலும் பறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். நம் இந்திய நாட்டை எடுத்துக் கொண்டால் நமது கடவுள்களுக்குக் கூட தனித்தனிக் கொடிகள் உண்டு.

உதாரணம்: முருகப் பெருமானின் சேவல் கொடி. பண்டைத் தமிழ் மன்னர்களை எடுத்துக் கொண்டால் சேர மன்னர்களுக்கு வில் கொடியும், பாண்டிய மன்னர்களுக்கு மீன் கொடியும், சோழமன்னர்களுக்கு புலிக்கொடியும் இருந்திருக்கின்றன. ஒரு நாட்டின் கொடிக்கு எப்பொழுதும் தனிமரியாதை உண்டு. அந்தக் கொடிக்கு அரசன் முதல் ஆண்டிவரை தலை வணங்கி மரியாதை செலுத்துவார்கள். ஒரு நாட்டின் கொடியை எவரேனும் அவமதித்தால், அது அந்த நாட்டையே அவமானப்படுத்துவதாகும். அந்தக் காலத்தில் அரசர்களின் தேர்களில் அவர்களுடைய நாட்டுக் கொடிகள் கம்பீரமாகப் பறந்துகொண்டிருந்தன. இந்தக் காலத்தில் நாட்டுத் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் கார்களில் தேசியக்கொடிகள் கம்பீரமாகப் பறக்கின்றன. தேசியக் கொடியைப் பற்றி இந்திய தேசத்தின் தந்தை‘ யாகிய அண்ணல் மகாத்மா காந்தியடிகள் சொல்லியிருப்பவை வருமாறு: “எல்லா நாடுகளுக்கும் கொடி இருப்பது அவசியம். அதற்காக இலட்சக்கணக்கானோர் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள்.

இது ஒரு வகையான விக்கிரக ஆராதனை என்பதில் சந்தேகமில்லை. என்றாலும் இதை ஒழிப்பது பாவம். ஏனென்றால் ஓர் இலட்சியத்தின் சின்னமாகக் கொடி விளங்குகிறது. யூனியன் ஜாக் கொடியை ஏற்றிவைக்கும் போது ஆங்கிலேயரின் நெஞ்சத்தில் அளப்பரிய வலிமையுடன் உணர்ச்சிகள் பொங்கி எழுகின்றன. நட்சத்திரங்களும் பட்டைகளும் பொறித்த கொடியை ஓர் உலகத்துக்கே ஈடாகப் போற்றுகின்றனர் அமெரிக்கர்கள்.

நட்சத்திரத்துடன் கூடிய பிறைக் கொடியைக் கண்டால் இஸ்லாமியர்களுக்கு வீர உணர்வு பொங்கி எழும். இந்தியர்களாகிய நாம் இந்துக்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், பார்ஸிகள், இன்னும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மற்றவர்கள் ஒரு பொதுக் கொடியை தேசியக் கொடியாக வரித்துக் கொண்டு அதற்காக வாழவும், சாகவும் முன் வருவது அவசியம்“ என்கிறார் அண்ணல் அவர்கள் தேசியக் கொடியின் முக்கியத்துவத்தைப் பற்றிக் காந்தியடிகள் மட்டுமின்றி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரும், டாக்டர் ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல் போன்ற தேசியத் தலைவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு சமயம் சுபாஷ் சந்திரபோஸ் அயல் நாடுகளிலிருந்து திரும்பி, பம்பாய் துறைமுகதத்தில் வந்து இறங்கியதும் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது பத்திரிகை நிருபர் ஒருவர் சுபாஷ் பாபுவை நெருங்கி “நாட்டு மக்களுக்குத் தாங்கள் விடுக்கும் செய்திகள் என்ன?“ என்று கேட்டபோது அந்தத் தியாகத் தலைவன் சொன்ன ஒற்றை வரிச் செய்தி, “தாயின் மணிக்கொடியைத் தாழவிடாதீர்கள்!“ என்பதுதான்.



நாடும் கொடியும் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 26, 2012 10:33 am

விமானங்களில்!

அந்நிய நாடுகளுக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர், துணை ஜனாதிபதி முதலியோர் பயணம் செய்யும் இந்திய விமானங்களில் நமது தேசியக் கொடியும், அவர்கள் செல்ல இருக்கும் நாடுகளின் தேசியக்கொடியும் சேர்ந்து பறக்கவிடப்பட வேண்டும்.

செல்லும் வழியில் வேறு நாடுகளில் விமானம் தரையிறங்கவோ தங்கிச் செல்லவோ நேர்ந்தால், அந்நாடுகளுக்கு நம்முடைய நல்லெண்ணத்தையும் மரியாதையையும் தெரிவிக்கின்ற வகையில் அந்நாடுகளின் கொடிகளையும் சேர்த்துப் பறக்க விடலாம். ஓர் அயல்நாட்டுக்கு நமது ஜனாதிபதி விஜயம் செய்யும்போது தேசியக் கொடிக்குப் பதில் அவரது சொந்தக் கொடியும், அந்நிய நாட்டின் தேசியக் கொடியும் பறக்கும்.

அரைக் கம்பத்தில் எப்போது பறக்கலாம்?

தேசியக் கொடியை கொடிக் கம்பங்களில் பறக்க விடும்போது எப்போதும் உச்சியில் பறக்கவிட வேண்டும். அரைக் கம்பத்திலோ, முக்கால் கம்பத்திலோ பறக்கவிடக்கூடாது.

அரசாங்கம் விசேஷமாக உத்தரவிட்டால் ஒழிய தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடக் கூடாது.

குடியரசு தினம், மகாத்மா காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் ஆகிய நாட்களில் ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் போன்ற பிரமுகர்கள் மரணமடைந்துவிட்டால், அவர்களுடைய உடல் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் மட்டும் அந்த உடலை எடுத்துச் செல்லும் வரை தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும். மற்ற இடங்களில் அவ்வாறு அரைக் கம்பங்களில் பறக்கவிடக்கூடாது. இறந்தவரின் உடல் வைக்கப்பட்டுள்ள கட்டத்திலும், உடல் அப்புறப்படுத்தப் பட்டவுடனேயே தேசியக் கொடியை முழுக் கம்பத்துக்கு உயர்த்திவிட வேண்டும்.

சாதாரண நாட்களில் மேற்சொன்ன அரசுத் தலைவர்கள் இறந்துவிட்டால் நாள் முழுக்க எங்கும் எத்தனை நாள் வேண்டுமானாலும அரசாங்க உத்தரவுப்படி தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடலாம்.

அந்நிய நாட்டு அரசுத் தலைவர்கள் இறந்து விட்டாலும் நமது அரசாங்கம் துக்கம் கொண்டாடும் நாட்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கலாம்.

கவாத்துப் பழகும்மேபாதும், ஊர்வலம் செல்லும் போதும் ஏந்திச் செல்லும் தேசியக் கொடி கம்பத்தில் துக்கம் கொண்டாடுவதற்காகக் கொடிக் கம்பின் உச்சியில் கருப்புத் துணி நாடாக்கள் இரண்டைப் பிணைத்து அவற்றை இயற்கையாகத் தொங்கும்படி விட்டுவிடலாம்! அதையும் அரசாங்க உத்தரவின் மீதுதான் செய்யவேண்டும்.

தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டிய சந்தர்ப்பங்களிலும் ஒரு விநாடிநேரம் வரை உச்சிக் கம்பத்தில் பறக்க விட்ட பின்னர்தான் அரைக் கம்பத்துக்கு இறக்க வேண்டும்.

அன்று மாலையில் கொடியை இறக்கும் போதும் முதலில் கொடியை உச்சிக் கம்பத்துக்கு ஏற்றி ஒருநிமிடம் பறக்கவிட்ட பின்னர் தான் இறக்க வேண்டும்.

உச்சிக்கும் கயிறு கட்டும் ஸ்தானத்திற்கும் உள்ள தூரத்தில் பாதிவரை கொடியை இறக்கிக் கட்டுவதுதான் அரைக் கம்பத்தில் பறக்கவிடுவதாகும். கயிற்று ஸ்தானம் குறிப்பிடப்படாவிட்டால் உச்சிக் கம்பத்திற்கும் நடுவில் பாதிவரை கணக்கிட்டு கொடியை இறக்கவேண்டும்!

இதைத் தவிர இந்திய இராணுவத்தின் தரைப்படை, விமானப்படை, கப்பல்படை ஆகியவற்றுக்குத் தனித்தனி ‘சர்வீஸ் கொடி‘ கள் உள்ளன. தரைப்படை ரெஜிமெண்டுகளுக்குக் தனித்தனி ரெஜிமெண்டல் கொடிகளும், விமானப்படையின் நடவடிக்கை ஸ்குவாட்ரன் பிரிவுகளுக்குத் தனித்தனிக் கொடிகளும் உள்ளன



நாடும் கொடியும் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 26, 2012 10:34 am

நம்தேசியக் கொடி

என்றாலும் தரைப்படைப் பிரிவின் கோட்டைகள், ஏ. ஓ சி. நிலையங்கள், எல்லைப்புற கூட்டுக் கண்காணிப்பு நிலையங்கள், யுத்தக் கைதிகளின் முகாம்கள், பாதுகாப்பு சர்வீஸ் சிப்பந்திகள் கல்லூரி, தேசியப் பாதுகாப்பு அகாடமி, ஆயுதப்படை வைத்தியக் கல்லூரி, தேசியக் பாதுகாப்புக் கல்லூரி, சைனிக் பள்ளிகள், பேர்க்கள வைத்தியப் பிரிமுகாம்கள், இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் நிலையங்கள் ஆகியவற்றில் எல்லாம் தேசியக்கொடிகள்தான் பறக்கின்றன.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் முதலியோர் இராணுவ அணிவகுப்பு மரியாதைகளை ஏற்கும் போதெல்லாம் தேசியக் கொடிதான் பறக்கவிடப்படுகிறது.

விமானப் படைத்தலைமைக் காரியாலயத்திலும் தேசியக் கொடிதான் பறக்கவிடப்படுகிறது, கப்பல்படை, தரைப்படைகளுக்குத் தனிக்கொடிகள் இருந்தாலும் அவற்றின் இடப் பக்க உச்சியில் இந்தியத் தேசியக் கொடியும் பொறிக்கப்பட்டுள்ளன.

கடற்படைக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் வெள்ளைக்கொடி, இந்திய நீலக்கொடி, இந்திய சிவப்புக்கொடி என்று பல கொடிகள் அந்தந்த இலாகா வாரியாக ஒதுக்கப்பட்டிருந்தாலும் இராணுவ தலைமைக் காரியாலயங்கள் அனைத்திலும் தேசியக் கொடியே பட்டொளி வீசிப் பறக்கின்றது.

நமது இராணுவத்தின் எந்த ஒரு படைப் பிரிவு வெளிநாட்டின் எந்தப் பகுதியைப் போரில் கைப்பற்றினாலும் அந்த இடத்தில் நாட்டும் கொடி தேசியக் கொடிதான்!

முற்றும்

நன்றி:lakshmansruthi.com




நாடும் கொடியும் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக