|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!by Aathira Today at 11:06 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 11:02 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by முரளிராஜா Today at 11:02 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by வை.பாலாஜி Today at 10:56 pm
» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மந்திரிகள் மீது ஊழல் வழக்கு தொடர 4 மாதங்களுக்குள் அனுமதி தர வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு.
Page 1 of 1 • Share •
மந்திரிகள் மீது ஊழல் வழக்கு தொடர 4 மாதங்களுக்குள் அனுமதி தர வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு.
மந்திரிகள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீது ஊழல் வழக்கு தொடர 4 மாதங்களுக்குள் அனுமதி தர வேண்டும். அப்படி அனுமதி தராவிட்டால், அனுமதி தந்ததாகவே கருதப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது. இதனால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வழக்கு தொடர அனுமதி கோரி மனு
மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரியாக ஆ.ராசா பதவி வகித்தபோது, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி அனுமதி கோரினார். ஆனால் அந்த மனு குறித்து பிரதமர் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.
இதனால், ஆ.ராசா மீது வழக்கு தொடர தனக்கு பிரதமர் அனுமதி வழங்க உத்தரவிடுமாறு டெல்லி ஐகோர்ட்டில் சுப்பிரமணிய சாமி மனுதாக்கல் செய்தார். ஆனால், பிரதமருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று டெல்லி ஐகோர்ட்டு கூறிவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டில்..
இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணிய சாமி மனுதாக்கல் செய்தார். அதில், `எனது மனுவை ஏற்கவும் செய்யாமல், நிராகரிக்கவும் செய்யாமல் பிரதமர் 16 மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளார். அவர் அளவுக்கு மீறி தாமதம் செய்கிறார். எனவே, அவர் எனக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்' என்று சுப்பிரமணிய சாமி கூறி இருந்தார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பிரதமர் அலுவலகம் மறுத்தது. பிரதமர் அலுவலகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், `சுப்பிரமணிய சாமியின் மனுவை பிரதமர் பரிசீலித்தார். ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து சி.பி.ஐ. சேகரித்த ஆதாரங்களை பார்த்துத்தான் அனுமதி கொடுக்க வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை இன்னும் முடிவடையாததால், அது முடிவடையும்வரை காத்திருக்க வேண்டியுள்ளது' என்று கூறப்பட்டு இருந்தது.
ராஜினாமா
இந்த மனு, நிலுவையில் இருக்கும்போதே, கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி, ஆ.ராசா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு, சுப்ரீம் கோர்ட்டை அணுகிய சுப்பிரமணிய சாமி, தனது கோரிக்கை பொருத்தமற்றதாக ஆகிவிட்டதால், ஊழல் வழக்கு தொடருவதற்கு அனுமதி அளிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்குமாறு, தனது கோரிக்கையை மாற்றினார்.
அவரது மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் 24-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
பரபரப்பு தீர்ப்பு
இந்நிலையில், நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச், நேற்று அம்மனு மீது பரபரப்பு தீர்ப்பை அளித்தது. டெல்லி ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்த நீதிபதிகள், சுப்பிரமணிய சாமி மனுவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அனுமதி கேட்பதற்கு சுப்பிரமணிய சாமிக்கு உரிமை உள்ளது. மந்திரிகள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடருவது குறித்து, உரிய அதிகாரம் பெற்ற நபர், ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் அனுமதி வழங்க வேண்டும்.
குறிப்பிட்ட காலவரையறை நிர்ணயிப்பதற்காக, முதலில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். பிறகு, ஊழல் தடுப்பு சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்து பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற வேண்டும்.
மந்திரிகள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு கோர்ட்டை அணுகுவது, ஒவ்வொரு குடிமகனின் அரசியல் சட்ட உரிமை. அதற்கு எல்லா உரிமையும் உள்ளது. அதற்கு முன்அனுமதி கேட்க வேண்டியதே இல்லை. சாட்சிகள் விசாரணை சமயத்தில்தான், அத்தகைய அனுமதி தேவைப்படும்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, பிரதமர் அலுவலகத்துக்கு ஆதரவாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்த கருத்துகளை ஏற்க முடியாது. ஊழல் என்னும் புற்றுநோயை பொது வாழ்க்கையில் இருந்து ஒழிப்பது மிகவும் முக்கியம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
4 மாதங்களுக்குள் அனுமதி
நீதிபதி ஏ.கே.கங்குலி தனியாக எழுதிய தீர்ப்பில் ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், மந்திரிகள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீது வழக்கு தொடருவதற்கு 3 மாதங்களுக்குள் அனுமதி தர வேண்டும். பிரதமரோ அல்லது உரிய அதிகாரம் பெற்ற நபரோ அட்டர்னி ஜெனரலிடம் சட்ட ஆலோசனை பெற விரும்பினால், கூடுதலாக ஒரு மாதம் எடுத்துக் கொள்ளலாம்.
அதன்படி, 4 மாதங்களுக்குள் அனுமதி தராவிட்டால், அனுமதி தரப்பட்டு விட்டதாகவே கருதப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பால், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் மீதான புகார்
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், ஆ.ராசா பதவியில் இருந்தபோது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அளித்த 122 லைசென்சுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனு மீது இதே சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் தீர்ப்பு அளிக்க உள்ளது.
இந்த பெஞ்சில் உள்ள நீதிபதி ஏ.கே.கங்குலி, நாளை (வியாழக்கிழமை) ஓய்வு பெறுகிறார். எனவே, நாளைக்குள் அந்த மனு மீது தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினதந்தி

பதிவுகள்: 790845 | உறுப்பினர்கள்: 15379 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: mozhi
Contact Administrator
Re: மந்திரிகள் மீது ஊழல் வழக்கு தொடர 4 மாதங்களுக்குள் அனுமதி தர வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு.
"சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பின்னடைவு அல்ல'', மத்திய அரசு கருத்து
ஊழல் வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, தங்களுக்கு பின்னடைவு அல்ல என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த தீர்ப்புக்கு பா.ஜனதாவும், அன்னா ஹசாரே குழுவும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
நாராயணசாமி
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கேட்டபோது, பிரதமர் அலுவலக ராஜாங்க மந்திரி வி.நாராயணசாமி கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, மத்திய அரசுக்கு பின்னடைவு அல்ல. வழக்கு தொடர அனுமதி வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு மட்டுமே பாராளுமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இந்த பிரச்சினைக்கு லோக்பால் மசோதாவிலேயே தீர்வு காண முயன்று வருகிறோம். அந்த மசோதா, தற்போது பாராளுமன்றத்தில் இருக்கிறது.
சுப்பிரமணிய சாமியை பொருத்தவரை, ஒரு குடிமகன் என்ற முறையில், கோர்ட்டை அணுகுவதற்கு அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கபில் சிபல்
மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி கபில் சிபலிடம் நிருபர்கள் கேட்டபோது, `தீர்ப்பின் நகலை படித்த பிறகு கருத்து சொல்கிறேன்' என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரியும் இதே கருத்தை தெரிவித்தார். `தீர்ப்பின் முழுவிவரத்தை படிக்காமல், கருத்து சொல்வது சரியல்ல. பா.ஜனதாதான் அப்படி கருத்து சொல்லி வருகிறது' என்று அவர் கூறினார்.
பா.ஜனதா ஆதரவு
அதே சமயத்தில், முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜனதா, இந்த தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-
இது, மத்திய அரசு மற்றும் பிரதமரின் செயல்பாடு பற்றிய சுப்ரீம் கோர்ட்டின் குறிப்பு. இந்த தீர்ப்பில் இருந்து பிரதமர் பாடம் கற்க வேண்டும். மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரத்துக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உள்ள தொடர்பு பற்றி விசாரிக்க இனிமேலாவது பிரதமர் அனுமதி வழங்குவாரா?
இவ்வாறு அவர் கூறினார்.
சுப்பிரமணிய சாமி
இந்த தீர்ப்புக்கு காரணமான மனுவை தொடர்ந்த ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியதாவது:-
இந்த தீர்ப்பு பெரிய முன்னேற்றமான நடவடிக்கை. ஊழல் வழக்கு தொடர்வதற்கு இருந்த பெரிய முட்டுக்கட்டைகளை இந்த தீர்ப்பு அகற்றி விட்டது. இது அரசியல் சட்டத்துக்கு கிடைத்த வெற்றி. இந்த தீர்ப்பு, மாநிலங்களுக்கும் பொருந்தும். அரசு ஊழியர்கள் மீது விசாரணை நடத்துவதற்கு எந்த அனுமதியும் பெறாமல் கோர்ட்டை அணுகுவதற்கு இந்த தீர்ப்பு உரிமை அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அன்னா ஹசாரே குழு
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
இந்த தீர்ப்பு, எங்களது முக்கிய கோரிக்கைகளில் ஒன்றை சரி என்று நிரூபித்துவிட்டது. ஊழல் வழக்குகளை காலவரையறைக்குள் முடிப்பதற்கு இது வழிவகுக்கும்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum