|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)by Aathira Today at 7:53 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by முரளிராஜா Today at 7:53 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
எகிப்து நாட்டில் கால்பந்து மைதானத்தில் கலவரம்: 74 பேர் பலி
Page 1 of 1 • Share •
எகிப்து நாட்டில் கால்பந்து மைதானத்தில் கலவரம்: 74 பேர் பலி

கால்பந்து விளையாட்டில் உலகின் மிகச்சிறந்த அணிகளில் எகிப்து நாட்டு கால்பந்து அணியும் ஒன்றாகும். அந்த நாட்டில் ஏராளமான கால்பந்து கிளப்புகள் உள்ளன.
நேற்று எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள போர்ட்செட் நகரில் நடந்த பிரிமீயர் லீக் போட்டியில் அல்அலி கிளப் அணியும் அல்-மஸ்ரி கிளப் அணியும் மோதின. இதில் அல்அலி அணி எகிப்தில் உள்ள கிளப் அணிகளில் மிகவும் புகழ்பெற்ற, பலம் வாய்ந்த அணி என பெயர் பெற்றதாகும்.
போட்டியைக் காண ஸ்டேடியத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். எகிப்து நாட்டு தொலைக்காட்சியில் இந்த போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இரு அணிகளையும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து, உற்சாகப்படுத்தியபடி இருந்தனர்.
போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அல்அலி கிளப் அணி தோல்வி அடைந்தது. அல்-மஸ்ரி கிளப் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அல்அலி அணியை வீழ்த்தியது. இதனால் அல்-மஸ்ரி கிளப் ரசிகர்கள் வெற்றி கோஷமிட்டு ஆரவாரம் செய்தபடி இருந்தனர்.
இதை அல்அலி கிளப் ரசிகர்கள் எதிர்த்தனர். இதனால் மைதானத்தில் திடீர் கலவரம் வெடித்தது. நடுவர் போட்டி முடிந்ததாக இறுதி நீண்ட விசில் ஊதிய மறு வினாடி, அல்-மஸ்ரி ரசிகர்கள், மைதானத்துக்குள் நாலாபுறமும் இருந்து கூச்சலிட்டப்படி ஆவேசமாக புகுந்தனர்.
அல்அலி கிளப்பைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் ரசிகர்களை அவர்கள் ஓட,ஓட விரட்டி தாக்கினார்கள். கற்களை வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். கத்தி, கம்பு, பாட்டில் உள்பட கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வந்து தாக்கினார்கள். ஸ்டேடியத்தின் ஒரு பகுதியில் தீ வைக்கப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். என்றாலும் அல்-மஸ்ரி அணியை ஆதரிக்கும் ரசிகர்கள் ஓட, ஓட விரட்டி கத்திக்குத்தில் ஈடுபட்டனர். ஸ்டேடியத்தில் மிக, மிக குறைவான போலீசாரே பாதுகாப்பில் இருந்தனர். இதனால் அவர்களால் கலவரத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. சுமார் 30 நிமிடம் இரு கிளப் வீரர்களும் ஒருவரையொருவர் கத்தியால் குத்தி, ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தனர். ராணுவம் வந்த பிறகே நிலைமை கட்டுக்குள் வந்தது.
கால்பந்து மைதானம் முழுக்க ஆங்காங்கே ரசிகர்கள், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர். 74 ரசிகர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த உடல்களில் பெரும்பாலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன. 1000 பேர் காயம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்பந்து ரசிகர்கள் தாக்குதலில் காயம் அடைந்து உயிருக்குப் போராடியபடி கிடந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே சாவு எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட இந்த கலவரத்தை தொலைக்காட்சியில் பார்த்த எகிப்து நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். போர்ட்செட் நகரில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அந்த நகரில் இன்று மயான அமைதி நிலவியது.
வரலாறு காணாத கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மீதமுள்ள பிரிமீயர் லீக் போட்டிகள் அனைத்தையும் எகிப்து கால்பந்து கூட்டமைப்பு ஒத்தி வைத்துள்ளது.
எகிப்து சுகாதார மந்திரி ஹேசம் ஷிகா கூறுகையில், கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கலவரம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது கவலை அளிக்கிறது. எகிப்து கால்பந்து வரலாற்றில் இதுபோன்று பேரழிவு ஏற்படுத்திய கலவரம் உண்டானதே இல்லை என்றார். கலவரம் பற்றிய தகவல் அறிந்ததும் 2 விமானங்களில் ராணுவ அதிரடிப்படை வீரர்கள் மைதானத்துக்குள் புகுந்து நிலமையை கட்டுப்படுத்தியதாக கூறினார்.
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை எகிப்து பாராளுமன்றம் அவசரமாக கூடி கலவரம் பற்றி விவாதித்தது. இதற்கிடையே கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கலவரத்துக்கு முன்னாள் ஜனாதிபதி முபாரக் ஆதரவாளர்கள் செய்த சதிதான் காரணம் என்று முஸ்லிம் சகோதரத்துவ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எகிப்து நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக முபாரக் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டார். சுமார் 30 ஆண்டுகள் எகிப்து அரசாட்சியை முபாரக் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் ஆட்சியை விட்டு விரட்டப்பட்டதும் ராணுவ பீல்டு மார்ஷல் உசேன் தன்தவி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆட்சியை இழந்ததால் முபாரக் ஆதரவாளர்கள் திட்டமிட்டு இந்த கலவரத்தை அரங்கேற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாலைமலர்

பதிவுகள்: 790795 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: எகிப்து நாட்டில் கால்பந்து மைதானத்தில் கலவரம்: 74 பேர் பலி
இதற்குத்தான் இந்தியர்கள் கால்பந்து விளையாடுவதில்லை போலும். ஒன்லி கிரிக்கெட்! 


பதிவுகள்: 790795 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: எகிப்து நாட்டில் கால்பந்து மைதானத்தில் கலவரம்: 74 பேர் பலி
சிவா wrote:இதற்குத்தான் இந்தியர்கள் கால்பந்து விளையாடுவதில்லை போலும். ஒன்லி கிரிக்கெட்!
Re: எகிப்து நாட்டில் கால்பந்து மைதானத்தில் கலவரம்: 74 பேர் பலி
விளையாட்டு வினையாகி போச்சு

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2778
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: எகிப்து நாட்டில் கால்பந்து மைதானத்தில் கலவரம்: 74 பேர் பலி
காலை எனது எகிப்து அரபி நண்பர் சொன்னார்..
மிகவும் வருத்தமாக இருந்தது...
மிகவும் வருத்தமாக இருந்தது...

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









