புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
32 Posts - 51%
heezulia
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
74 Posts - 57%
heezulia
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண வரம் தரும் வள்ளிமலை!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 09, 2012 11:38 am

விரைவில் திருமணம் கைகூட மிகவும் சுலபமாக பரிகாரம், வள்ளி மலைக்குச் சென்று வழிபாடு செய்வது தான். வள்ளிக்கும், முருகனுக்கும் திருமணம் நடந்த இடம் வள்ளிமலை.

காட்பாடியிலிருந்து 21 கி.மீ. தொலைவில் வள்ளி மலை உள்ளது. வேலூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊர்களிலிருந்தும் வள்ளிமலை செல்ல பஸ் வசதி உள்ளது.

மலையடிவாரத்தில் சரவணப் பொய்கை என்னும் திருக்குளத்தைக் கடந்து சென்றதும், அழகான அடிவாரக் கோயில். ஆறு திருமுகங்களுடன் வள்ளி தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கும் முருகப்பெருமனைக் கண்குளிர தரிசனம் செய்கிறோம். “முருகா முருகா’ என்று சொல்லியபடி 445 படிகள் ஏறி மலை உச்சிக் கோயிலுக்குச் செல்கிறோம். அத்தனை படிகளும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற வேண்டுமானால் அவன் அருளைப் பெற வேண்டும். தடைகள் விலகப் போகின்றன என்னும் நம்பிக்கை நமது மனத்தில் உறுதியாக உள்ளதால் படி ஏறும் களைப்பு தெரியவில்லை. மாறாக உற்சாகம்தான் மேலிடுகின்றது.

அங்கு வரும் பக்தர்கள் ஊரிலிருந்து கிளம்பும்போது தேனும், தினை மாவும் வாங்கிக் கொண்டு வருகின்றனர். வள்ளி மலையில் முருகனுக்கும் வள்ளி-தெய்வானைக்கும் தேன்-தினை மாவு நைவேத்தியம் செய்யப்படுகிறது.

வள்ளி தினைப்புனை காத்த இடம் இது. முருகனுக்கு தேனும், தினை மாவும் வள்ளி கொடுத்த இடம் இது. இங்குள்ள குமரிச் சுனையில் வள்ளியம்மை மஞ்சள் அரைத்துக் குளித்தார். சூரிய ஒளியே படாமல் ஒரு குகைக்குள் இந்த சுனை உள்ளது. ஒரு வெள்ளை நிறத் துணியை இந்தச் சுனை நீரில் முக்கி எடுத்துக் கல்லில் உரசினால் அது மங்சள் நிறமாக மாறிவிடும். இந்த மலையில் பல குகைகளும் நீர்ச்சுனைகளும் உள்ளன.

வள்ளியை மணந்து கொள்ள முருகன் செய்த லீலைகள் அனைவரும் அறிந்தவை. இந்த மலை மீது ஏறி நின்றதும் கந்தன் வேங்கை மரமாக மாறியதும் கிழவன் வேடத்தில் வந்து தாகம் என்றதும் பிறகு மோகம் என்றதும் நினைவுக்கு வராமலா இருக்கும்?

படியேறி மலை உச்சிக்குச் சென்றதும் இடப்பால் கல்லினால் ஆன த்வஜஸ்தம்பம் உள்ளது. ஆலயத்தினுள் நுழைகிறோம். “ஓம்’ என்னும் பிரணவ வடிவத்தில் ஆலயப் பிரகாரம் அமைந்துள்ளது. பாறைகளைக் குடைந்து செய்து குடவரைக் கோயில் இது. இக்கோயில் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் வெளிச்சம் இருக்காது. இரண்டாவது பகுதி சற்று உயரமாகவும் வெளிச்சமாகவும் உள்ளது. மூன்றாவது கட்டு மூலவர் சந்நதி உள்ள பகுதி. தினைப் புனை காத்த வள்ளி பறவைகளை விரட்டும் கோலத்தில் உள்ள காட்சியை நுழைவாயில் அருகே கற்சிற்பத்தில் காணலாம்.

மலை உச்சிக் கோயிலில் முருகன் ஒரு திருமுகமும் இரு திருக்கரங்களும் கொண்டு அபயஹஸ்தத்துடன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். இருபுறமும் வள்ளி தெய்வானை தேவியருடன் அருட்காட்சி அருளும் முருகனைக் கண்டு மகிழ்கிறோம். எடுத்துச் சென்ற தேனையும் தினை மாவையும் அர்ச்சனைப் பொருட்களுடன் சேர்த்து குருக்களிடம் கொடுக்கிறோம். நமது பெயர் நட்சத்திரம், ராசி, கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி சங்கல்பம் செய்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்கிறார் ஆலய குருக்கள். தேனும், தினை மாவும் நைவேத்தியம் செய்து மற்ற பிரசாதங்களுடன் நம்மிடம் கொடுக்கிறார் அர்ச்சகர்.

யாருக்குத் திருமணம் தாமதமாகிறதோ அவர்கள் வீடு திரும்பியதும் காலையில் முருகனை வேண்டித் துதித்து அந்தத் தேனையும் தினை மாவையும் தினமும் சிறிதளவு உட்கொண்டால் வெகு விரைவில் திருமணம் நடைபெறும்.

மூலவர் சந்நிதியை வலம்வரும்போது விசாலாட்க்ஷி - காசி விஸ்வநாதர் நந்திகேஸ்வரர் ஆகிய சந்நிதிகளை வழிபடுகிறோம். பெருமாள் கோயில்களில் உள்ளது போல் இங்கும் சடாரி சாதிக்கின்றனர். திருமாலின் இரு கண்களிலிருந்து தோன்றியவர்கள்தாம் வள்ளியும், தெய்வானையும். முருகன் மணம் புரிந்து கொள்வதற்காக பெருமாளைக் குறித்து வள்ளி இங்கு தவம் புரிந்ததன் காரணம் பற்றி சடாரி சாதிக்கும் வழக்கம் இங்கு பின்பற்றப்படுகிறது.

வள்ளியும், முருகனும் இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டு திருத்தணிக்குச் சென்று அங்கு தங்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன. மூலவரான முருகப் பெருமானுக்கு எதிரில் சதுர வடிவிலான கல் ஜன்னல் ஒன்று உள்ளது. அதன் அருகில் ஒரு பாதாளக் குகை உள்ளதாம். அது திருத்தணி வரை செல்லுமாம். இந்த செவிவழிச் செய்தியை உள்ளூர் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

திருப்புகழ் சுவாமிகள் என்று அழைக்கப்படும் வள்ளமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் சமாதி இக்கோயிலுக்கு 2 கி.மீ. தொலைவில் உள்ளது. அவருடைய பூர்வாஸ்ரமம் பெயர் அர்த்தநாரி. அவர் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியையும், மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளையும் தரிசனம் செய்தார். அவ்விருவரும் வள்ளி மலைக்குச் சென்று திருப்புகழைப் பாடி உலகெங்கும் பரப்பு என்று அருள்வாக்கு அளித்தனர். “சாதாரண சமயல்காரரான எனக்கு ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் கிடையாது. இசைஞானமும் கிடையாது. என்னால் எப்படி இதைச் செய்ய முடியும்?’ என்று நினைத்துக் கொண்டே வள்ளி மலைக்கு சுவாமிகள் வந்தாராம். ஒரு சிறுமி வடிவில் வள்ளி நேரில் வந்து திருப்புகழை இசையோடு கற்பித்து ஞானோபதேசம் செய்தாளாம். இந்த அதிசயம் வள்ளிமலையில் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நடைபெற்றது. அருணகிரிநாதரின் திருப்புகழை உலகறியச் செய்தவர் வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள். அருணகிரிநாதர் இத்தலத்திற்கு மொத்தம் 11 திருப்புகழ் பாடல்களை பாடியுள்ளார்.

மலை உச்சிக் கோயிலில் இருந்து வள்ளிமலை சுவாமிகளின் சமாதிக்குச் செல்லும் பாதை சற்று கரடுமுரடாகத்தான் இருக்கும். வாழ்க்கை ஸ்மூத்தாக அமையவும் திருமணம் விரைவில் நடைபெறவும் அருள்புரியும் தலமல்லவா இது? எனவே பாதை எப்படி உள்ளது என்பதைப் பொருட்படுத்தாமல் திருப்புகழ் சுவாமிகளின் சமாதியிலும் வழிபாடு செய்து விட்டு மனநிறைவுடன் இல்லாம் திரும்புகிறோம்.

உங்கள் இல்லத்திலும் விரைவில் கெட்டி மேளம் கொட்டட்டும். தேனினும் இனிய மணவாழ்க்கை அமையட்டும்.

- ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்

மங்கையர்மலர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Feb 16, 2012 12:26 pm

வள்ளிமலை எங்கள் ஊரின் அருகாமையில் தான் உள்ளது
மேலும் தகவலுக்கு http://murugan.org/centers/vallimalai.htm



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திருமண வரம் தரும் வள்ளிமலை! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Feb 16, 2012 12:29 pm

எங்கள் ஊரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் தான் வள்ளிமலை உள்ளது..
அங்கு தேரோட்டம் வெகு சிறப்பாக இருக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திருமண வரம் தரும் வள்ளிமலை! Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக