ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 ayyasamy ram

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 ayyasamy ram

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 ayyasamy ram

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 ayyasamy ram

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 ayyasamy ram

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 ayyasamy ram

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 ayyasamy ram

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 T.N.Balasubramanian

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

`பசங்களுக்கு நான் சவால்!' - அலிஷா அப்துல்லா

View previous topic View next topic Go down

`பசங்களுக்கு நான் சவால்!' - அலிஷா அப்துல்லா

Post by சிவா on Mon Feb 13, 2012 1:01 pm




அலிஷா அப்துல்லா... இந்தப் பேரைக் கேட்டாலே பைக், கார் பந்தயத் தடம் அதிரும்.

மிகைப்படுத்திச் சொல்லவில்லை. ஆண்களின் ராஜ்ஜியமான பைக், கார் டிராக்கில் அவர்களுக்குச் சரிக்குச் சரியாக சவால் விட்டு நிற்கும் பெண். பந்தயத் தடங்களில் பொறி பறக்க வைக்கும் இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸர்.

பந்தயத்தில் ஈடுபட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் பரபரவென்று இருக்கும் அலிஷாவிடம் கொஞ்ச நேரத்தைப் பிடுங்கி பேசினோம்...

அப்பாவின் அடிச்சுவட்டில்...

எங்கப்பா ஆர்.ஏ. அப்துல்லா, பைக் ரேஸ் வீரர். ஏழுமுறை தேசிய சாம்பியன். அவர் பந்தய தடத்தில் பறப்பதைப் பார்த்துத்தான் நானும் இதற்கு வந்தேன். ஒன்பது வயதுச் சிறுமியாக `கோ கார்ட்டிங்'கில் ஈடுபடத் தொடங்கினேன். பதினோரு வயது முதலே போட்டிகளில் வெல்லத் தொடங்கினேன். 13 வயதானபோது, எம்.ஆர்.எப். நேஷனல் கோ கார்ட்டிங் சாம்பியன்ஷிப்பில் வென்றேன். 2004-ம் ஆண்டில் ஜே.கே. டயர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுடன் போட்டியிட்டு ஐந்தாவது இடத்தைப் பிடித்தேன்.

பைக்குக்கு தாவினேன்

கார் பந்தயம் ரொம்பவே காஸ்ட்லி. பொருளாதார ரீதியாகச் சமாளிப்பது கடினம். தவிர, அப்பா பைக் ரேஸ் வீரர் என்பதாலும், அதன் நுணுக்கங்களை எனக்குக் கற்றுக் கொடுக்க முடியும் என்பதாலும் என்னை பைக் பந்தயத்தில் கவனம் செலுத்தும்படி கூறினார். காரில் இருந்து பைக்குக்கு மாறுவது ஆரம்பத்தில் எனக்குக் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் அப்பா அதை எளிதாக்கி விட்டார். அப்பா ரொம்ப கண்டிப்பானவர். அந்த கண்டிப்புதான் என்னை பைக் பந்தயத்தின் கடினங்களுக்கு என்னை தயார்ப்படுத்தியது. ஆரம்பத்தில் குறைந்த சக்தி பைக்குகளை ஓட்டினேன், பிறகு சூப்பர் பைக்குக்கு மாறினேன். 2009-ல் 600 சிசி ஹோண்டா பைக்கை ஓட்டிய நான், தேசிய சூப்பர் பைக் சாம்பியன்ஷிப்பில் மூன்றாமிடம் பிடித்தேன். அப்போட்டியில் கலந்துகொண்ட ஒரே பெண் நான்.

மீண்டும் கார்களுக்கு...

பைக்குகளில் இருந்து மீண்டும் நான் கார்களுக்கு வந்தேன். அதற்கு, சென்னை இருங்காட்டுக்கோட்டை தடத்தில் நான் சந்தித்த ஒரு மோசமான விபத்தும் காரணம். கார் பந்தயத்தில் பங்கேற்கத் தொடங்கியது முதலே சீரான முன்னேற்றத்தைக் காட்டிவருகிறேன். கடந்த 2010-ல் வோக்ஸ்வேகன் போலோ கோப்பை போட்டியில் 10-வது இடத்தைப் பிடித்தேன். 2011-ல் ஏழாவது இடத்தை எட்டினேன். குறிப்பிடத்தக்க வகையில் ஒரு போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெற்றி மேடை ஏறினேன். அவ்வாறு மேடை ஏறிய முதல் வீராங்கனை நான்தான். கோவையில் நடந்த போட்டியில் வீரர்கள் விஷ்ணு பிரசாத், மிஹிருக்குப் பின் நான் மூன்றாவது இடம் பிடித்தேன். அந்தப் போட்டியில் அதிக நேரம் முன்னணியில் இருந்த நான், கடைசியில் அவர்களை முந்த விட்டுவிட்டேன்.

உடல் தகுதியே காக்கும்

பெண்களை பலவீனமானவர்கள் என்று சொல்லிச் சொல்லியே அப்படி ஆக்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். கார் பந்தயத்தைப் பொறுத்தவரை உடல்தகுதியும், தாக்குப் பிடிக்கும் திறனும் ரொம்ப முக்கியம். எனவே நான் உடல்தகுதியை கட்டிக்காப்பதில் கவனமாக இருக்கிறேன். ஏன், நான் ஒரு பிட்னஸ் பைத்தியம் என்றே சொல்லலாம். கல்லூரியில் வகுப்புக்கு போகத் தவறியிருக்கிறேனே தவிர, `ஜிம்'முக்கு போகத் தவறியதில்லை. சென்னை அளவிலான போட்டியில், `மிக வலிமையான பெண்'ணாகத் தேர்வாகியிருக்கிறேன். ஒரே மூச்சில் என்னால் 40- 50 `புஷ்-அப்'கள் செய்ய முடியும். அதில் பல ஆண்களாலேயே என்னைத் தோற்கடிக்க முடியாது.

பிளஸ்சும்... மைனஸும்...

ரேஸ் டிராக்கில் முதல் பெண்ணாக என்ன `பிளஸ்', `மைனஸ்' என்று கேட்டீர்கள் என்றால், மைனஸ் எதுவும் தோன்றவில்லை. ஆரம்பத்தில் ஒரு பெண்ணாக தடத்தில் தயாராகும்போது கிண்டலடித்த ஆண்கள் இருக்கிறார்கள். வெற்றியால் அவர்களின் வாயை அடைத்திருக்கிறேன். தற்போது அம்மாதிரியெல்லாம் இல்லை. பிளஸ், எனக்குக் கிடைத்திருக்கும் நட்சத்திர அந்தஸ்து. போகும் இடங்களில் எல்லாம் ஆட்டோகிராப் கேட்கிறார்கள். பேஸ்புக்கில் தினசரி 200 பேருக்கு மேல் நட்புக் கோரிக்கை விடுக்கிறார்கள்.

டென்னிஸ், நீச்சல்...

கார் பந்தயம் தவிர டென்னிஸ், நீச்சல், ஸ்னூக்கர் எல்லாம் எனக்குப் பிடித்த விளையாட்டுகள். பந்தயங் களுக்காக அவற்றையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைக்க வேண்டியிருக் கிறது. ஆனாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் நீச்சலிலும், ஸ்னூக்கரிலும் ஈடுபடுகிறேன்.

விளம்பர, சினிமா வாய்ப்புகள்

நான் உடல்தகுதியில் எந்த அளவுக்குக் கவனம் செலுத்துகிறேனோ, அதே அளவுக்கு அழகாகத் தோன்றுவதிலும் கவனமாயிருக்கிறேன். அதனால்தானோ என்னவோ, எனக்கு விளம்பர, சினிமா வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதுவரை விளம்பரங்களை விரும்பாத நான், இனி அவற்றின் பக்கம் பார்வையைத் திருப்பலாம் என்று நினைக்கிறேன். அதே மாதிரி, ஆசைக்கு ஒரு சினிமாவில் நடிச்சுட்டு ஒதுங்கிடணும்.

புதிய பொறுப்பு

தமிழகத்தில் முதல்முறையாக சென்னையில் தொடங்கப்பட்டுள்ள `ஹார்லி டேவிட்ஸன்' ஷோரூமின் விற்பனைப் பிரிவு தலைவராகியிருக்கிறேன். இந்த விலையுயர்ந்த பைக்குகளை அமெரிக்காவில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விற்கிறோம். பந்தயத்தைப் போலவே எனக்கு இதுவும் சவாலான பணிதான். இதிலும் சாதிப்பேன்!'' என்றவரிடம், `சரி, இந்த பைக்குகளின் விலை என்ன?' என்று கேட்டோம்.

``ஆறரை லட்ச ரூபாய் முதல் நாற்பத்தைந்து லட்சம் வரை!''

`யம்மாடியோவ்'
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: `பசங்களுக்கு நான் சவால்!' - அலிஷா அப்துல்லா

Post by சிவா on Mon Feb 13, 2012 1:02 pm

* `ஸ்லோ சைக்கிள் ரேசில்' கலந்துகொள்வீர்களா?

நிச்சயமாகக் கலந்துகொள்வேன்!

* பந்தயத் தடத்தில் நீங்கள் சந்தித்த காமெடி?

பந்தயம் முடிந்ததும், `இந்தப் பையன் நல்லா பைக் ஓட்டினான்' என்று பார்வையாளர்கள் பேசுவது காதில் விழும். நான் ஹெல்மெட்டை கழற்றியதும் பெண் என்று அறிந்து `ஙே'ன்னு முழிப்பாங்க.

* நீங்க சமைப்பீங்களா?

சூப்பரா சமைப்பேன்! உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க.

* சினிமா பைக் சாகசங்களை பார்க்கும்போது என்ன தோணும்?

காமெடியா!

* பைக் `ரிப்பேர்' பார்க்கத் தெரியுமா?

வண்டியை ஓட வைக்கிற அளவுக்கு பழுது பார்க்கத் தெரியும்.

* அப்பாவிடம் திட்டு வாங்கியிருக்கிறீர்களா?

பல தடவை!

* பந்தயத் தடத்தில் பைக் ஓட்டுவது... சென்னை சாலைகளில் பைக் ஓட்டுவது- இரண்டில் எது கடினம்?

சென்னை சாலைகளில் ஓட்டுவதுதான்!

* மோட்டார் சைக்கிள்கள் உங்களுக்கு அறிமுகமாகியிராவிட்டால்...?

டென்னிஸ் ஆடிக் கொண்டிருப்பேன்.

* `பொம்பளைப் பிள்ளையா லட்சணமா இல்லாமல் இதெல்லாம் என்ன...' என்று யாராவது பேசியிருக்கிறார்களா?

ஒரு ஆளா... ரெண்டு ஆளா?

* சாலையில் பைக்கில் செல்லும்போது வேறு பைக்காரர்கள் `டீசிங்' செய்திருக்கிறார்கள்?

என்னை அலிஷா என்று தெரிந்தும், தெரியாமலும் செய்வார்கள். அப்போதெல்லாம் எனது பைக்கால் அவர்களை மறித்து நிறுத்தி, `மச்சான்... டிராக்குக்கு வந்து இந்த ஆட்டத்தையெல்லாம் வைச்சுப் பாரு!' என்பேன்.

தினதந்தி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: `பசங்களுக்கு நான் சவால்!' - அலிஷா அப்துல்லா

Post by பாலாஜி on Mon Feb 13, 2012 1:14 pm

பகிர்வுக்கு நன்றி தல .. சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: `பசங்களுக்கு நான் சவால்!' - அலிஷா அப்துல்லா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum