புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_m10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10 
48 Posts - 45%
heezulia
காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_m10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_m10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_m10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_m10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10 
3 Posts - 3%
jairam
காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_m10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10 
2 Posts - 2%
சிவா
காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_m10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10 
1 Post - 1%
Manimegala
காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_m10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_m10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_m10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_m10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10 
14 Posts - 4%
prajai
காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_m10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_m10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10 
5 Posts - 1%
jairam
காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_m10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_m10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_m10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_m10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_m10காதல்... நல்லதா? கெட்டதா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்... நல்லதா? கெட்டதா?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 14, 2012 1:17 am

காதல்... நல்லதா? கெட்டதா?

காதல்... இந்த ஒற்றை வார்த்தைக்கு அவ்வளவு `பவர்' உண்டு. காதலில் விபத்தாய் தடுக்கி விழுந்து ஆலமரமாய் எழுந்து நின்றவர்களும் இருக்கிறார்கள்; அந்த விபத்திலே கீழே விழுந்து, வாழ்க்கை முகவரியை தொலைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

***

பிப்ரவரி 14-ந் தேதி பிறந்துவிட்டால் உலகம் முழுக்க உள்ள இளைஞர்கள் உற்சாகமாகி விடுகிறார்கள். குறிப்பாக, காதலித்துக் கொண்டிருப்பவர்கள்!

காதலுக்கு `அன்பு' என்று விளக்கம் சொல்வோரும் உண்டு; `காமத்தின் துவக்கம்தான் காதல்' என்று மாற்றுக்கருத்து சொல்வோரும் உண்டு.

இந்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க... இன்றைய இளைய சமுதாயம் காதல் பற்றி என்ன நினைக்கிறது? என்பதை கண்டறிய நாம் முயன்றபோது, அதற்கு பதில் சொல்ல முன் வந்தார்கள்... ஹேமப்ரியா, சுகன்யா, வித்யாஸ்ரீ மற்றும் கவிதா.

ஹேமப்ரியா, சுகன்யா, வித்யாஸ்ரீ மூவரும் சென்னை சோழிங்கநல்லூர் செயின்ட் ஜோசப் என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள். கவிதா, சென்னை நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர்களுடன் நாம் பேசியதில் இருந்து...

படிக்கும்போது காதல் அவசியமா?

"கண்டிப்பா தவறானதுதான். அதையும் மீறி காதலித்தால் நம்முடைய லட்சியத்தை நோக்கி பயணிக்க முடியாது. படிப்பும் வராது. முழுக்க முழுக்க காதலன் அல்லது காதலியைத்தான் மனம் தேடும். யார் என்ன சொன்னாலுமே காதில் விழாது. தன்னிலை மறந்து போவார்கள். இது, ஆரம்பக் கட்டம்தான். நாளாக நாளாக ஊர் சுற்றத் தொடங்குவார்கள். சென்னையில் படிக்கும் பல மாணவிகள் தங்களது பாய் பிரண்டுடன் பீச், தியேட்டர் என்று ஊர் சுற்றுகிறார்கள். பாய் பிரண்டிடம் `பாக்கெட் மணி' தீர்ந்து போனால், அப்படியே ரிட்டன் ஆகிவிடுகிறார்கள். இதை எப்படி காதல் என்று சொல்வது?

சரி, எப்போதான் காதலிக்கலாம்?

டீன்-ஏஜில் (13 முதல் 19 வரை) நம் உடலுக்குள் ஹார்மோன் செய்யும் கலகம்தான் இந்தக் காதல். 21 வயதுக்கு மேலேதான் காதல் பற்றியே யோசிக்க வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் 23 முதல் 25 வயதுக்குள் வரும் காதல்தான் உண்மையான காதலாக இருக்க முடியும். அந்த வயதில்தான், காதலர்கள் இருவரும் தங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். உண்மையான குணமும் தெரிய வரும். மேலும், அப்போதுதான், இவரை திருமணம் செய்து கொண்டால் நமது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதை உறுதி செய்ய முடியும்.

திருமணத்திற்கு முன்பு உருகி காதலிக்கும் சிலர், தங்களது காதல் திருமணத்தில் முடிந்த பிறகு சண்டைக்கோழியாக மாறி விடுகிறார்களே?

காதலிக்கும்போது `பாஸிடிவ்' விஷயங்கள் மட்டும்தான் அவர்களுக்கு தெரியும். திருமணம் ஆன பிறகுதான் உண்மையான குணம் தெரிய வரும். காதலித்து திருமணம் செய்த பிறகும் காதலர்கள் சண்டை போட்டுக்கொண்டால் அவர்கள் உண்மையாக காதலிக்கவில்லை என்றுதான் அர்த்தம். டைம் பாஸ்க்குதான் ஊர் சுற்றி இருப்பார்கள். காதல் திருமணம் 99 சதவீதம் சக்சஸ் ஆகவே ஆகாது. ஒரு சதவீதம் வேண்டுமானால் அதிர்ஷ்டவசமாய் ஜெயிக்கலாம். அதுவும், இந்த சமுதாயம் தப்பா பேசக்கூடாது என்ற எண்ணத்தில்தான் குடும்பம் நடத்துவார்கள். மற்றபடி, அதுவும் உண்மையான காதலாக இருக்காது.

அப்படியென்றால், நல்ல காதலுக்கான தகுதியாக எதை குறிப்பிடுகிறீர்கள்?

முதலில்... அழகைப் பார்த்து வருவது நிச்சயமாக காதலாக இருக்க முடியாது. ஒருவரது அன்பை புரிந்து கொண்டு வருவதுதான் காதல். இரண்டாவது... இரண்டு பேருக்குமே நல்ல பேமிலி பேக்ரவுண்ட் இருக்க வேண்டும். மூன்றாவது... நல்ல வேலை, நல்ல சம்பளம் பெறுபவராக இருக்க வேண்டும். நான்காவது... டாக்டராக உள்ளவர் ஒரு டாக்டரையோ, என்ஜினீயராக உள்ளவர் ஒரு என்ஜினீயரையோ லவ் பண்ணினால்தான் அது சக்சஸ் ஆகும். இதேபோல், ஒவ்வொரு துறையையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படைகள் இருந்தால்தான் காதலில் பிரச்சினை வராது. காதலும் உண்மையானதாக இருக்கும்.

மெரினாவில் நெருங்கி அமர்ந்து காற்று வாங்கும் காதலர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இது நல்ல கலாசாரமே கிடையாது. அங்கே, காதல் என்ற பெயரில் காற்று வாங்கும் ஜோடிகளில், ஒவ்வொரு பெண்ணுக்கும் நிச்சயம் அவளது மனம் உறுத்தும். காதலனுக்கு அருகில் அவள் தன்னை மறந்து பேசிக்கொண்டு இருந்தாலும், அப்பா, அம்மாவை ஏமாற்றிவிட்டு இங்கே வந்து இருக்கிறோம் என்கிற மன உறுத்துதல் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்யும். உண்மையா காதலிக்கிறார்கள் என்றால், இப்படி யாரும் பப்ளிக்காக ஊர் சுற்ற மாட்டார்கள். நான் இந்த பையனை அல்லது பெண்ணை விரும்புகிறேன் என்று முதலில் தங்களது பெற்றோரிடம் சொல்லி, அந்த காதல் கைகூட எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருப்பார்கள்.

காதலர் தினம் தேவையான ஒன்றுதானா?

அன்பை பறிமாறிக் கொள்கிற தினம்தான் இந்த காதலர் தினம் என்றால் வருஷம் முழுவதும் அன்பை பறிமாறிக்கொள்ளலாமே... ஏன் அன்று மட்டும், யாரையோ சந்தோஷப்படுத்த வீட்டில் உள்ளவர்களை ஏமாற்றிச் செல்ல வேண்டும்? அதனால், இப்படியொரு தினமே தேவையில்லை.

திருமணத்திற்கு பிறகு துணையை காதலிப்பதுதான் உண்மையான காதல் என்று சிலர் சொல்கிறார்களே...?

இதுவும் உண்மையான காதல்தான். திருமணம் செய்து கொண்ட ஒரு கணவன் தனது மனைவியையும், மனைவி தனது கணவனையும் காதலிக்கும்போது இருவரும் எல்லா விஷயங்களிலும் விட்டுக்கொடுத்துச் செல்வார்கள். ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்வார்கள். இன்று பல குடும்பங்களில் நடைபெறும் சின்னச்சின்ன சண்டைகளே பெரிய பிரச்சினைகளுக்கு காரணமாகி விடுகின்றன. ஆனால், திருமணத்திற்கு பிறகு காதலிக்கும் போது சின்னச்சின்ன சண்டைகள் ஏற்பட்டாலும்கூட அவர்களுக்கு அது ஜாலியாகத்தான் தோன்றும். அதனால், பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணத்திற்குப் பிறகு துணையை காதலிப்பதுதான் எல்லா வகையிலும் சிறந்தது. பெரிய அளவில் பிரச்சினை வந்தால் கூட இருதரப்பு பெற்றோரும் ஓடி வந்து உதவுவார்கள், அறிவுரை சொல்வார்கள். காதல் திருமணத்தில் இதற்கு வாய்ப்பே இல்லை.

சிலநேரங்களில் சில பெண்கள், அந்தஸ்து, படிப்பு, வேலை இவை எல்லாவற்றையும் விட கீழான நிலையில் உள்ளவர்களை காதலித்து, திருமணமும் செய்து கொள்கிறார்களே?

இதுபோன்ற காதலில், வளர்ப்பு சரியில்லை என்று ஒரு பெண்ணைத்தான் தப்பாக பேசுவார்கள். இதுபோன்ற சூழலில் ஒரு பெண் காதலிப்பது, புதைகுழி என்று தெரிந்தும் அதற்குள் அவள் விழுகிறாள் என்றுதான் அர்த்தம். ஒருசிலர் வேண்டுமானால் விதிவிலக்காக, இந்த சமுதாயத்தில் போராடி முன்னுக்கு வரலாம்.

காதலிப்பதாக கூறி ஒருவன் தன்னை வருத்திக்கொண்டால், பெண்கள் உடனே காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விடுகிறார்களே?

பெண்களுக்கு இரக்க குணம் ரொம்ப ஜாஸ்தி. அதனால்தான் எல்லா விஷயங்களிலும் எளிதில் ஏமாந்து போய்விடுகிறார்கள். தான் சோகமாக இருக்கும்போது யாரேனும் ஆறுதல் சொன்னால்கூட, வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பி விடுகிறார்கள்.

காதலுக்கான அறிகுறிகள் எப்படி வெளிப்படும்?

அடிக்கடி தனியாக நின்று மொபைலில் மணிக்கணக்கில் பேசுவார்கள். திடீரென்று ஏதாவது கேள்வி கேட்டால் திணறுவார்கள் (காதலன் அல்லது காதலியின் ஞாபகம்தான் அதற்கு காரணம்). டி.வி.யில் காதல் பாடல்களை விரும்பிப் பார்ப்பார்கள். நிறைய செலவு செய்வார்கள். தங்களை விதவிதமாக அலங்கரித்துக்கொள்வார்கள். காதலிப்பவர்களுக்கு சப்போர்ட் பண்ணுவார்கள். அட்வைஸ் பண்ணுறவங்க வில்லனா தெரிவாங்க. இப்படி நிறைய அறிகுறிகள் தெரியும்.

காதலர் தினத்தன்று நீங்கள் என்ன செய்வீர்கள்?

எல்லா நாளும்போல் கல்லூரிக்கு செல்வோம். காதலுக்கு ஓ.கே. சொல்ல யாராவது பச்சை கலர் ஆடை அணிந்து வந்து இருக்கிறார்களா, ரெட் ரோஸ் வைத்துக் கொண்டு வந்திருக் கிறார்களா என்று பார்த்து, அவர்களை கலாய்ப்போம். காதலுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்தவர்கள் பார்ட்டி வைப்பார்கள். தேடி வந்து பார்ட்டி தந்தால் யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள்?

காதலில் தோற்றுப்போனால், இன்றைய காதலர்கள் என்ன செய்கிறார்கள்?

முன்புதான் காதலில் தோற்ற ஆண்கள் தாடி வளர்த்தார்கள், மதுவுக்கு அடிமையானார்கள். பெண்கள் தற்கொலை வரைக்கும் போனார்கள். இப்போதெல்லாம் அப்படி கிடையாது. இந்த பெண் கிடைக்கவில்லை என்றால் அடுத்தப் பெண்ணை பார்க்கப் போய்விடுகிறான் பையன். பெண்ணும் அப்படித்தான்! காதலில் தோற்று தற்கொலை வரை போவது இப்போது மிகமிக அரிது. இதுதான் இன்றைய உண்மை நிலவரம்.

கடைசியாக உறுதியாக சொல்லுங்கள். காதல் நல்லதா? கெட்டதா?

உன்னை நேசிப்பவர்களுக்கு உன் இதயத்தைக்கொடு. உன்னை மட்டும் நேசிப்பவர்களுக்கு உன் இதயத்தோடு சேர்ந்து உயிரையும் கொடு. இது, படித்து நல்ல வேலையில் இருந்து கொண்டு உண்மையாக காதலிப்பவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும்.''

சும்மா நச்சுன்னு மட்டுமல்ல, அதிரடியாகவும் சொன்னார்கள் மாணவிகள் நான்கு பேரும்!

தினத்தந்தி முத்துச்சரம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காதல்... நல்லதா? கெட்டதா? Ila
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Feb 14, 2012 2:15 am

நல்லதொரு ஆய்வு செய்திருக்கிறீர்கள் இளமாறன்,
இளைஞர்கள் கவனிக்கவேண்டிய விஷயம். இந்தக்கருத்துக்கு ஆதரவாக நானும் சில விஷயங்களை பதிவுசெய்கிறேன்.அதாவது

காதல் என்பது வேறு, கல்யாணம் என்பது வேறு, காதலர்கள் தங்கள் காதலைத் தொடர விரும்பி கல்யாணம் செய்கிறார்கள். ஆனால் கல்யாணம் செய்வதற்க்கான பொருத்தங்கள் தங்களிடம் இருக்கிறதா என்று யோசிப்பதில்லை.அதனால்தான் காதல் திருமணங்கள் தோல்வியடைகின்றன.எனவே காதலிப்பவர்கள் சந்தோசமாகக் காதலியுங்கள், கல்யாணம் செய்வதாயின் அத்ற்க்கான தகுதிகள், பொருத்தங்கள் உங்கள் இருவருக்கும் இருக்கிறதா என்று அவசியம் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள் கல்யாணம் செய்வதற்க்கான பொருத்தங்கள் இல்லையென்றால்-------? உங்கள் இருவருடைய நன்மைக்காகவும் காதலைத்தியாகம் செய்து தகுதியான துணையைத்தேடி கல்யாணம் செய்யுங்கள்.இதுதான் நீங்கள் உங்கள் காதலுக்குத்தருகிற மரியாதை.

என்னுடைய இந்தக் கருத்துப்பற்றி ?

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 14, 2012 3:40 am

தினத்தந்தி - முத்துச்சரத்தில் வெளியிடப்பட்ட இக்கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை. இருப்பினும், கட்டுக்கடங்காத காளைகள், காளையிகள் கூட்டம் இதை கவனத்தில் கொள்ளுமா? என்பது சந்தேகமே.

அகிலன் wrote:நல்லதொரு ஆய்வு செய்திருக்கிறீர்கள் இளமாறன்,
இளைஞர்கள் கவனிக்கவேண்டிய விஷயம். இந்தக்கருத்துக்கு ஆதரவாக நானும் சில விஷயங்களை பதிவுசெய்கிறேன்.அதாவது

காதல் என்பது வேறு, கல்யாணம் என்பது வேறு, காதலர்கள் தங்கள் காதலைத் தொடர விரும்பி கல்யாணம் செய்கிறார்கள். ஆனால் கல்யாணம் செய்வதற்க்கான பொருத்தங்கள் தங்களிடம் இருக்கிறதா என்று யோசிப்பதில்லை.அதனால்தான் காதல் திருமணங்கள் தோல்வியடைகின்றன.எனவே காதலிப்பவர்கள் சந்தோசமாகக் காதலியுங்கள், கல்யாணம் செய்வதாயின் அத்ற்க்கான தகுதிகள், பொருத்தங்கள் உங்கள் இருவருக்கும் இருக்கிறதா என்று அவசியம் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள் கல்யாணம் செய்வதற்க்கான பொருத்தங்கள் இல்லையென்றால்-------? உங்கள் இருவருடைய நன்மைக்காகவும் காதலைத்தியாகம் செய்து தகுதியான துணையைத்தேடி கல்யாணம் செய்யுங்கள்.இதுதான் நீங்கள் உங்கள் காதலுக்குத்தருகிற மரியாதை.

என்னுடைய இந்தக் கருத்துப்பற்றி ?

காதலித்த பின்பு...நிறைவேற தடையாக உள்ள பட்சத்தில் விட்டுக் கொடுத்து... வேறுவேறு இடங்களில் திருமணம் முடிப்பது சாியா? அகிலன் அவா்களே... அது 2வது விபசாரம் போல இருக்காதா? இருவரும் வாழ்வில் சோ்ந்து வாழ விருப்பம் கொண்டு மனங்களை பாிமாறிக் கொண்டபின், திருமணம் என்று வரும்போது. வேறு ஒருவரை திருமணம் செய்வது, செய்து வாழ்வது முறையில்லையே... இரு மணங்கள் இணைவதுதானே திருமணம்?

அப்படியிருக்க... பொருத்தம் காணும்போது பிாிவது சாியாகுமா?

பொருத்தம் பாா்ப்பவா்கள் காதலிக்காமலே இருக்க வேண்டியதுதானே முறை.

மொத்தத்தில் காதலே வாழ்வில் எதிா்கால வாழ்விற்கு நிம்மதியை குலைக்கச் செய்யும் சவக்குழி. திருமணத்திற்கு முன்பு காதலில் விழாதோா் பாக்கியசாலிகள்.

காதல்... நல்லதா? கெட்டதா? 154550காதல்... நல்லதா? கெட்டதா? 154550காதல்... நல்லதா? கெட்டதா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” காதல்... நல்லதா? கெட்டதா? 154550காதல்... நல்லதா? கெட்டதா? 154550காதல்... நல்லதா? கெட்டதா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 14, 2012 10:31 am

"பொருத்தம் இல்லையென்றால் பிரிவதை விட காதலிக்காமல் இருப்பதே மேல்" என்ற சார்லஸ் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்...

காதல்... நல்லதா? கெட்டதா? 224747944

காதல்... நல்லதா? கெட்டதா? Rகாதல்... நல்லதா? கெட்டதா? Aகாதல்... நல்லதா? கெட்டதா? Emptyகாதல்... நல்லதா? கெட்டதா? Rகாதல்... நல்லதா? கெட்டதா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Feb 14, 2012 10:33 am

காதல் ஒரு அற்புத உணர்வு. தமிழ் இலக்கியங்களில் உள்ள பாடல்களைப் பார்த்தால், அன்றைக்கும் இன்றைக்கும் காதலில் பெரிய வித்தியாசம் இல்லை.

அகிலனின் கருத்துகளை ஏற்க இயலவில்லை. சார்லஸ் கூறுவது போல் ஒத்துவரவில்லை, பொருத்தம் வரவில்லை என்பதால் காதலை மாற்றிக்கொள்வது காதலாகாது. சார்லஸ் கருத்துகள் பாராட்டதக்கது.

20 -25 வயது நிறைந்த ஆணோ/ பெண்ணுக்கு தன் வேலை, உடை , லட்சியம் என்று எல்லாம் குறிந்து முடிவு செய்யத் தெரிந்து இருப்பது போல், காதலை தொடங்குவதற்கு முன் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். முடிவு எடுத்து மனம் ஒன்றிய பின்பு, அப்பா சொன்னார், அம்மா சொன்னார், பொருத்தம் இல்லை என்று காதலில் இருந்து மாறுவது ஒரு வகை விபச்சாரமே, காரியத்துக்காக ஒருவருடன் நட்புடன் பழகுபவர்கள் தாசியை விட கேவலமானவர்கள் என்று வள்ளுவர் கூறுகிறார். அப்படியானால் காதலில் காரியத்தை சாதிப்பவர்கள் அதைவிடவும் கேவலமானவர்கள்.

காதலித்து அவஸ்தைப் படுபவர்கள் சக்கரை வியாதிகாரர்கள் போல், கெடுதி என்று தெரிந்தாலும் சக்கரையை மனம் நாடும். காதலே செய்யாதவர்கள் இனிப்பே சுவைக்காதவர்கள் போல்.

சதாசிவம்
காதல்... நல்லதா? கெட்டதா? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Tue Feb 14, 2012 1:05 pm

அருமயாய் இருக்கு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 14, 2012 10:12 pm

சதாசிவம் wrote:காதல் ஒரு அற்புத உணர்வு. தமிழ் இலக்கியங்களில் உள்ள பாடல்களைப் பார்த்தால், அன்றைக்கும் இன்றைக்கும் காதலில் பெரிய வித்தியாசம் இல்லை.

அகிலனின் கருத்துகளை ஏற்க இயலவில்லை. சார்லஸ் கூறுவது போல் ஒத்துவரவில்லை, பொருத்தம் வரவில்லை என்பதால் காதலை மாற்றிக்கொள்வது காதலாகாது. சார்லஸ் கருத்துகள் பாராட்டதக்கது.

20 -25 வயது நிறைந்த ஆணோ/ பெண்ணுக்கு தன் வேலை, உடை , லட்சியம் என்று எல்லாம் குறிந்து முடிவு செய்யத் தெரிந்து இருப்பது போல், காதலை தொடங்குவதற்கு முன் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். முடிவு எடுத்து மனம் ஒன்றிய பின்பு, அப்பா சொன்னார், அம்மா சொன்னார், பொருத்தம் இல்லை என்று காதலில் இருந்து மாறுவது ஒரு வகை விபச்சாரமே, காரியத்துக்காக ஒருவருடன் நட்புடன் பழகுபவர்கள் தாசியை விட கேவலமானவர்கள் என்று வள்ளுவர் கூறுகிறார். அப்படியானால் காதலில் காரியத்தை சாதிப்பவர்கள் அதைவிடவும் கேவலமானவர்கள்.

காதலித்து அவஸ்தைப் படுபவர்கள் சக்கரை வியாதிகாரர்கள் போல், கெடுதி என்று தெரிந்தாலும் சக்கரையை மனம் நாடும். காதலே செய்யாதவர்கள் இனிப்பே சுவைக்காதவர்கள் போல்.

நல்ல கருத்து அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காதல்... நல்லதா? கெட்டதா? Ila
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Feb 15, 2012 3:40 am

சார்லஸ், ரா.ரா 3275, சதாசிவம், காளிதாசன்,இளமாறன் , ஆகியோரின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி, உங்கள் கருத்துக்களை நான் மறுக்கவில்லை,
காதலைத்தியாகம் செய்யுங்கள் என்று நான் ஒருவரியில் சொல்லிவிட்டேன் ஆனால் அது அவ்வளவு சுலபமானதல்ல, உடலிலிருந்து உயிர் பிரிவதைப்போல் துன்பமானது. வேறு வழி ------?
பொருத்தம் பார்த்துக் காதல் வருவதில்லையே.

நன்றி.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக