புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ருசி (குறுநாவல்) Poll_c10பெண்ருசி (குறுநாவல்) Poll_m10பெண்ருசி (குறுநாவல்) Poll_c10 
32 Posts - 53%
heezulia
பெண்ருசி (குறுநாவல்) Poll_c10பெண்ருசி (குறுநாவல்) Poll_m10பெண்ருசி (குறுநாவல்) Poll_c10 
25 Posts - 42%
rajuselvam
பெண்ருசி (குறுநாவல்) Poll_c10பெண்ருசி (குறுநாவல்) Poll_m10பெண்ருசி (குறுநாவல்) Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பெண்ருசி (குறுநாவல்) Poll_c10பெண்ருசி (குறுநாவல்) Poll_m10பெண்ருசி (குறுநாவல்) Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பெண்ருசி (குறுநாவல்) Poll_c10பெண்ருசி (குறுநாவல்) Poll_m10பெண்ருசி (குறுநாவல்) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ருசி (குறுநாவல்) Poll_c10பெண்ருசி (குறுநாவல்) Poll_m10பெண்ருசி (குறுநாவல்) Poll_c10 
308 Posts - 45%
ayyasamy ram
பெண்ருசி (குறுநாவல்) Poll_c10பெண்ருசி (குறுநாவல்) Poll_m10பெண்ருசி (குறுநாவல்) Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
பெண்ருசி (குறுநாவல்) Poll_c10பெண்ருசி (குறுநாவல்) Poll_m10பெண்ருசி (குறுநாவல்) Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்ருசி (குறுநாவல்) Poll_c10பெண்ருசி (குறுநாவல்) Poll_m10பெண்ருசி (குறுநாவல்) Poll_c10 
17 Posts - 3%
prajai
பெண்ருசி (குறுநாவல்) Poll_c10பெண்ருசி (குறுநாவல்) Poll_m10பெண்ருசி (குறுநாவல்) Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பெண்ருசி (குறுநாவல்) Poll_c10பெண்ருசி (குறுநாவல்) Poll_m10பெண்ருசி (குறுநாவல்) Poll_c10 
9 Posts - 1%
jairam
பெண்ருசி (குறுநாவல்) Poll_c10பெண்ருசி (குறுநாவல்) Poll_m10பெண்ருசி (குறுநாவல்) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண்ருசி (குறுநாவல்) Poll_c10பெண்ருசி (குறுநாவல்) Poll_m10பெண்ருசி (குறுநாவல்) Poll_c10 
4 Posts - 1%
Jenila
பெண்ருசி (குறுநாவல்) Poll_c10பெண்ருசி (குறுநாவல்) Poll_m10பெண்ருசி (குறுநாவல்) Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பெண்ருசி (குறுநாவல்) Poll_c10பெண்ருசி (குறுநாவல்) Poll_m10பெண்ருசி (குறுநாவல்) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ருசி (குறுநாவல்)


   
   

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:19 am

இரும்புக்கட்டிலின் படுக்கை விரிப்பில் தூங்கிக்கிடந்த மூர்த்தி அவசரமாக விழித்துக்கொண்டான். அவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கல்லூரி விடுதியில் யாரும் இல்லை. எல்லாரும் படிப்பு விடுமுறைக்காக அவரவர் ஊருக்குப் போய்விட, மூர்த்தியும் இன்னும் கொஞ்சப்பேரும் விடுதியிலேயே தங்கிவிட்டார்கள்.

அவர்களின் கிராமத்து வீட்டில் மின்சாரம் கிடையாது என்பதாலும், அவ்வளவாக அங்கு படிக்க வசதியில்லாததாலும்(வயல்காட்டு வேலைகள், கொசுக்கடி, நண்பர்கள் தொல்லை) அவன் இங்கேயே தங்கிப்படிப்பது என்று முடிவெடுத்திருந்தான்.

அவன் நெகிழ்ந்துகிடந்த கைலியை அவிழ்த்து மீண்டும் சரியாகக் கட்டிக்கொண்டு, வராண்டாவுக்கு வந்தான். விடுதிக்குக் குறுக்காக கருமையாகக் கிடக்கும் தார்ச்சாலையில், மத்தியான வெயில் பாதரசம் போல் உருகி வழிந்தோடிற்று. வராண்டாவைச் சுற்றி அடர்ந்திருந்த புங்கைமரக் கிளைகளில் சில காகங்கள் தியானம்போல் அமைதியாய் துயில்கொண்டிருந்தன. அதிலொன்று, அலகால் தன் றெக்கையை மெதுவாகக் கோதிவிட்டுக்கொண்டிருந்தது. அங்கிருந்த நுனாமரப் பூக்களுக்கிடையில் தன் சின்னஞ்சிறு வாலை மேலும் கீழுமாய் உயிர்ப்புடன் ஆட்டியபடி, இங்குமங்கும் தாவிக்கொண்டிருந்தது தேன்சிட்டொன்று.

மூர்த்திக்குப் பசியெடுத்தது. அறைக்குத் திரும்பி அலமாரியில் இருந்த அவனது கனமான வெண்ணிற ஹெச்.எம்.டி. கடிகாரத்தை எடுத்து மணிபார்த்தான். ரெண்டாகப் பத்துநிமிடம் இருந்தது.

கல்லூரி மெஸ் மூடிவிட்டபடியால், அங்கிருந்து அரைக்கிலோமீட்டர் தள்ளியிருந்த தனியார் மெஸ்ஸ¤க்குப் போய்த்தான் சாப்பிட்டுவர வேண்டும்... அதுவரை நடக்கவேண்டும் என்பதை நினைத்தாலே மிகவும் அலுப்பாகவும் அசதியாகவும் இருந்தது.

வராண்டாவில் நடந்து சதுரமாய் இருந்த விடுதியிம் ஒரு ஓரத்தில் இருந்த பொதுக்குளியலறைக்குப் போய் முகம்கழுவி வந்து, சிவப்புநிறக் காசித்துண்டை அறையோரமாய் கட்டியிருந்த கம்பிக்கொடியில் இருந்து உருவியெடுத்து, முகத்தைதுடைத்தபடி , கட்டிலில் அமர்ந்தான். அவனது அறைத்தோழன் மனோகரின் கட்டில் எதிரே வெறுமையாகக் கிடந்தது. அதைத்தாண்டி மனோகர் சுவரில் ஒட்டிவைத்திருந்த ரவீணா டாண்டனின் முக்கால் சைஸ் வண்ணப்படம் எங்கேயோ பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தது. அவன் அந்தப்படத்தின் இடைப்பாகத்தில் தன் விழிகளைப் படர்த்தினான். அவனுள் ஒரு உற்சாகம் படர ரம்பித்தது. களைப்பு கொஞ்சம் வடிந்துவிட்டதுபோல் ஆயிற்று.

சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். சட்டைப்பையில் ஏதேனும் சில்லறை இருக்குதா என்று தட்டிப்பார்த்துக்கொண்டான்.

கொஞ்சதூரம் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் தலையில் சுள்ளென்று வெயில் அறைந்தது. சாலையில் மருங்கில் வரிசையாய் கருகியதுபோல் கருவேல மரங்களாய் நின்றபடியால், நிழலில் ஒதுங்கி நடக்க முடியவில்லை. இந்தக் காரைக்குடியே இப்படித்தான். சரளைமண் பூமி. வருஷம்பூரா கோடைபோல்தான் இருக்கும்.

அவன் சாப்பிடப்போகும் அய்யர் மெஸ்ஸில் அவனுக்கு அக்கௌண்ட் இருந்ததால், மாதக்கடைசியில் பணம் கட்டினால் போதும்.

அப்பா கிராமத்தில் விவசாயிதான் என்றபோதும் அவனிடம் அடிக்கடி "நல்லா சாப்ட்டு உடம்பைத் தேத்துடா...இப்பிடியா நோஞ்சாங் கணக்கா இருக்குறது!" என்று அடிக்கடி சொல்வார். அதை இப்போது நினைத்து லேசாகச் சிருத்துக்கொண்டான்...என்ன சாப்பிட்டாலும் உடம்பு தேறமாட்டேங்குதே... என்ன செய்யிறது என்று தனக்குத்தானே முனகிக்கொண்டான்...அவன் நிழலும் அவன் காலடியில் பதுங்கி அவனோடேயே நடந்தது. சற்றுத் தள்ளியிருந்த கொல்லங்காளி கோயில் பேருந்து நிறுத்த நிழற்குடையில் யாரோ ஒரு பெண் உட்கார்ந்திருந்ததுபோல் பட்டது.

உற்சாகம் பீறிட, அவன் நடையில் வேகம் கூடியது. அவன் நிழலும் அவனோடு வேகமாய் நகர, தலை மிகவும் சூடுகண்டது. தலையில் கைவைத்துப்பார்த்தான். கொதித்தது.

அவனுக்கு திடீரென்று அய்யர் மெஸ் புவனேஸ்வரியின் முகம் காட்சியானது. நேற்றிரவு இவன் சாப்பிடும் பெஞ்சுக்கு எதிரில், அவள் வீட்டின் உள்ளிருந்த ஆட்டுக்கல்லில் கையால் மாவரைத்துக்கொண்டே இவனை வைத்தகண் வாங்காமல் பார்த்தாள். நல்ல கொழுகொழுவென்று மதர்ப்பாக இருந்தாள். தன் மகள் பி.காம்., அஞ்சல் வழியில் படிப்பதாக அய்யர் அடிக்கடி பரிமாறிக்கொண்டே சொல்வார். அவர் இவனிடம் மட்டும்தாம் இவ்வளவு வாஞ்சையாகப் பேசுவதுபோல் பட்டது. மாமியும் அப்படித்தான். இவனுக்கென்று மேலும் ஒரு அப்பளம் எடுத்துவந்து சத்தமில்லாமல் இலையில் வைத்துவிட்டு, "நன்னா சாப்டூங்கோ...அப்பத்தானே ஒடம்பு தேறும்?" என்று கேட்டுவிட்டு மூக்குத்தி மின்ன சிருத்துக்கொண்டே சமயல்கட்டுக்குப் போவாள்.

பஸ் ஸ்டாப் நெருங்கிவிட்டிருந்தது. அதுவரை குனிந்துகொண்டே நடந்தவன், பஸ் ஸ்டாப் நிழற்குடையை நோக்கி ஆவலுடன் முகத்தைத் திருப்பினான். அவன் அங்கு கண்ட காட்சி அவனுக்கு மகா வெட்கத்தைக் கொடுத்துவிட்டது. தூரத்தில் வரும்போது அவன் பெண் என்று நினைத்த அந்த உருவம், இப்போது நல்ல பூப்போட்ட கைலியைக் கட்டி ஆணாக மாறிவிட்டிருந்தது! அட ராமா! அவனுக்கு யாரோ முகத்தில் ஓங்கி அறைந்ததுபோலாகிவிட, முகத்தைத் திருப்பிக்கொண்டு கிட்டத்தட்ட ஓடாத குறையாக மெஸ்ஸை நோக்கி நடையைக்கட்டினான். அவனுக்கு புவனேஸ்வரியின் சிரித்தமுகம் இப்போது காட்சியாக, அவள் இவனைப்பார்த்து கிண்டலும் கேலியாகவும் சிரிப்பாதுபோல் பட்டது...

முகத்தில் தாறுமாறாக வழிந்துகொண்டிருந்த வேர்வையை, குனிந்து கைலியின் முனையால் துடைத்துக்கொண்டு நடந்தான். இன்று புவனேஸ்வரியைப் பார்க்க முடியுமா?...பார்க்க முடியும்...பார்த்தாக வேண்டும்... மூளையில் ஒருவித வெப்பம் படர மெஸ்ஸை நோக்கி வேகநடைபோட்டான் மூர்த்தி.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:19 am

மெஸ்ஸை அடைந்தபோது, அங்கு யாரும் இல்லை. வெறும் மரப்பெஞ்சுகளோடு அமைதியில் ஆழ்ந்திருந்தது மெஸ். உள்ளிருந்து யாரோ வரும் சத்தம் கேட்டது.

மாமி "யாரது?" என்றபடி எட்டிப்பார்த்தாள்.

"நாந்தான்"

"வாங்கோ! என்ன லேட்டு?"

"தூங்கிட்டேன்"

"உட்கார்ங்கோ" என்று உள்ளேபோனவள், ஒரு பெரிய தலைவாழை இலைகொண்டுவந்தாள்.

புவனேஸ்வரி ஒருமுறை எட்டிப்பார்த்துவிட்டு, வீட்டினுள்ளே ஓடினாள். அவள் முகத்தில் ஒரு சந்தோஷம் தெரிந்தது.

"எங்க அய்யரைக் காணோம்?"-இலையில் தண்ணி தெளித்தபடி மாமியிடம் கேட்டான்.

அவன் முகத்தையே ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்த மாமி, "அவர் மெட்ராஸ் போயிட்டார்...வர ரெண்டுநாள் ஆகும்" என்றாள்.

அந்தப் பசியிலும் அவன் முகம் பிரகாசமானது.

"ஆனாலும் கவலைப்படாதேள்...மெஸ் நடக்கும்" என்றாள் மாமி, மூக்குத்தியை தடவிக்கொண்டே.

அதற்குள் அங்கு சாதம் இத்யாதிகளுடன் புவனேஸ்வரி பிரசன்னமானாள். சாதம் கொஞ்சம் ஆறியிருந்தாலும் மிகவும் ருசியாய் இருந்தது. இலையைப்பார்த்துக் குனிந்தபடி விரைந்து சாப்பிட ஆரம்பித்தான் மூர்த்தி. அதுவரை அங்கு மரப்பெஞ்சில் உட்கார்ந்து எதையோ பேசியபடியிருந்தார்கள் மாமியும் புவனேஸ்வரியும். அவனுக்கு அவர்கள் தன்னைப்பற்றி ஏதோ பேசுவதாகப்பட்டது.

"என்ன ரொம்ப வெட்கப்படறேள்...குனிஞ்சதலை நிமிரமாட்டேன்றேள்?" என்றுகேட்டாள் புவனேஸ்வரி சாதத்துக்கு ரசம்போட்டபடி. மாமி சிரித்துக்கொண்டே உள்ளே போய்விட்டாள்.

அவனுக்கு லேசான கிறுகிறுப்பு தலையில் ஓடியது. அவனுக்கு மிகவும் நெருக்கமாய் நின்ற புவனேஸ்வரி,

"ஒண்ணு கேட்பேன்...தப்பா நினைக்கமாட்டேளே?" என்றாள்.

முகத்தை நிமிர்த்திப்பார்த்த மூர்த்தி புவனாவின் முகத்தில் தெரிந்த பூரிப்பைக்கண்டு நாக்குழறினான். அவனுக்கு முழங்காலில் ஒரு நடுக்கம் ஓடியது.

"சொல்லுங்க" என்றான் தீனமான குரலில்.

"இல்லே...அப்பா மெட்ராஸ் போயிட்டார்...நானும் அம்மாவும் மட்டும் தனியா இருக்கோம்...ரெண்டு நாளைக்கு எங்களோட தங்கிக்கினேள்னா சௌகர்யமா இருக்கும்...ஆம்பளை தொணை இருந்தா திருட்டுப்பயம் இருக்காது..."

மூர்த்திக்கு உச்சியில் சில்லிட்டது.

"முடியாதுன்னா சொல்லிடுங்கோ"

"இல்லே...மாமீ..."

"அம்மாதான் இந்த ஐடியாவக் குடுத்ததே...இந்த ஊர்லே எங்களுக்கு உறவுக்காரா யாருமில்லையா...அதான்..."

"தங்கிக்கலாம்...ஆனா படிப்பூ...."

"படிப்புதானே?அதுக்கு ஒரு கொறைச்சலும் இருக்காது...புக்ஸெல்லாம் எடுத்துண்டு வந்துடுங்கோ...இங்கே மெஸ் நைட்டெல்லாம் சும்மாதானே கெடக்கப்போகுது!"

"பாக்கலாம்..."

"என்ன பாக்கலாம்...வர்ரீங்க! பொம்பளைங்க நாங்க கேட்கறோம்...கொஞ்சம் கருணை காட்டுங்கோ!" அவன் கண்களை நேராகப்பார்த்தபடி கேட்டாள் புவனா.

அவன் இப்போது மோர்சாதத்தை முடித்திருந்தான். பசி முற்றிலுமாகத் தீர்ந்திருந்தது. இதையெல்லாம் ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தவள்போல் உள்ளிருந்து வந்த மாமி,"என்ன சொல்றார்?" என்று கேட்டாள்.

"ரொம்ப கூச்சப்படுறார்மா!" என்றாள் புவனா.

"மனுஷாளுக்கு மனுஷா ஒரு உதவிதானே ஸார்!" என்று கேட்டாள் மாமி.

மூர்த்தி எழுந்து கைகழுவப்போனான். அவன் வயிற்றில் எதுவோ பூச்சி குடைந்தது போலிருந்தது. "அப்போ ரூமுக்குப் போயிட்டு நைட் வர்றேன் மாமி"

"சாப்பிட வருவேளோன்னோ?அப்டியே இங்கேயே தங்கிடுங்கோ...கார்த்தாலே போயிடலாம்" என்றாள் புவனா.

"சரி"

"அப்போ நிட்சயம் வருவேளோன்னோ?"-மாமி கேட்டாள்.

"சாப்பிட வந்துதானேம்மா ஆகணும்?" என்றாள் புவனா.

அக்கௌண்ட் எழுதிக்கொண்டிருந்த மூர்த்தியை நெருங்கி, "பாண்ட், ஸர்ட்டுலே வாங்கோ, இப்டி கைலியோட வேணாம்" என்றாள் புவனா.

"சரி"

"நைட் தூங்கும்போது கட்டிக்கிற இங்கேயே வேஷ்டியெல்லாம் இருக்கு...நீங்க எதும் எடுத்துவர வேணாம்" என்றாள் மாமி.

"சரி" என்று மாமியைப்பார்த்து தலையாட்டிவிட்டு, மெஸ்ஸைவிட்டு வெளியேறினான் மூர்த்தி.

சாலையில் இப்போது வெயிலின் உக்ரம் கொஞ்சம் குறைந்திருந்தது...

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:20 am

ஹாஸ்டலை நோக்கி வேகநடைபோட்டான் மூர்த்தி. மாலைவெயிலின் சூடு அவனுக்கு ஒருவித கிறக்கத்தைக்கொடுத்தது. போகும்போது இருந்த வெயிலின் கடுமை இப்போது குறைந்து, தகிக்கும் வெயில் சற்று இதமான வெயிலாக மாறியிருந்தது.

ரயில்வே கேட்டைத்தாண்டியபோது அவனெதிரே ஒரு இளம் ஜோடி மோட்டார் சைக்கிளில் வந்தது. வண்டியோட்டிய கம்பளி மீசைக்காரன் புதுமாப்பிள்ளைபோல் தெரிந்தான். பின்னால் இருப்பவளின் முகத்தைக்காண மூர்த்திக்கு ஆவலாக இருந்தது. அதற்குள் வண்டி அவனைக்கடந்துவிட்டது. அவன் சட்டெனநின்று, திரும்பி, சப்தத்துடன் நகர்ந்துபோகும் வண்டியை நோக்கினான். அந்தப்பெண் இவன்பக்கம் ஒருமுறை திரும்பினாள். அவள் கன்னம் வடிவழகுடன் மலர்ந்திருந்தது. அவள் இவனைப்பார்த்து லேசாகப் புன்னகைத்ததுபோல் பட்டது.

அவனுள் ஒரு புத்துணர்வு முகிழ்க்க, கைலியை மடித்துக்கட்டியபடி அவன்முன் நேராய் நீண்டுகிடக்கும் கல்லூரிச்சாலையில் நடந்தான். டவுன்பஸ் ஒன்று அதற்கான சப்தத்துடன் தூசிகிளப்பியபடி அவனைக் கடந்துபோனது.

சற்றுதூரம் நடந்திருப்பான். பெண்கள் விடுதியிலிருந்து நாலைந்து மாணவிகள் எதிரே வந்துகொண்டிருந்தார்கள். அவனுக்கு அடிவயிற்றில் சூடுகண்டது.

இன்னிக்கு யார்மூஞ்சீல முழிச்சோம்? என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். எஸ்...ரவீணா டாண்டன் மூஞ்சியில்தான் முழித்திருந்தான். உண்மையிலேயே ரவீணாகிட்டே ஏதோ மாயம் இருக்கத்தான் செய்யுது!

எதிரே வந்த பெண்கள் இப்போது இவனை நெருங்கிவிட்டிருந்தார்கள்.அதுவரை குனிந்ததலை நிமிராமல் வந்தவன் சட்டென தலை நிமிர்த்தினான். அந்தக்கும்பலில் அவன் கிளாஸ்மேட் தட்ஷிணியும் வந்தாள். அப்பாடா...பேசுவதற்கு ஒரு வாய்ப்பு.

தட்ஷிணி சிவப்பாய் ஒல்லியாய் நடுத்தர வளர்த்தியில் கூரான நாசியோடு இருந்தாள். அடிக்கடி நீலக்கலர் சுடிதாரில்தான் இருப்பாள்.அவளது வண்ணத்தேர்வில் அவனுக்கு எப்போதும் ஒரு ஆச்சர்யமும் லயிப்பும் இருந்தது.

"ஹாய்! மூர்த்தி...என்ன நீ ஊருக்குப்போகலே?" -ராகமாய்க் கேட்டபடி அவனருகில் வந்தாள் தட்ஷிணி.

அவளுடன் வந்த நாலுபேரும் சாலையோரப் புளியமர நிழலில் ஒதுங்கி நின்றார்கள். அவனும் நீண்டிருந்த நிழலின் ஒரு முனைக்கு ஒதுங்கியபடி, "ஊருக்குப்போனா படிக்கமுடியாது. அதான்...ஆமா...நீயும் போகலியா? " என்றான்.

"ஆமா மூர்த்தி...எனக்கும் அதே ப்ராப்ளம்தான்...இங்கே இருந்தா கம்பைண்ட் ஸ்டடி பண்ணலாம்...ஊருக்குப்போனா யாரோட சேந்து படிக்கிறது?" என்றுவிட்டு சிரித்தாள்.

"ஏன் சிரிக்கிறே?"

"இல்லே! கைலியோட நிக்கிறியே...அதப்பார்த்து சிரிச்சேன்."

"ட்டீ...கடலைபோட்டது போதும்..வாடி!" என்று கீச்சுக்குரலில் கத்தினாள் அவள் தோழியொருத்தி.

"ச்சீ! சும்மா கெடடி..." என்று தலையைத்திருப்பிச் சொல்லிவிட்டு, இவனைப்பார்த்து, "மூர்த்தி...ஓங்கிட்டே தெர்மோடைனமிக்ஸ் நோட்ஸ் இருக்குமா?" என்று கேட்டாள்.

"க்ளாஸ் நோட்ஸ்தானே..? இருக்கே...ஏன் நீ தொலைச்சிட்டியா?"

"இல்லே...என் எழுத்து தலையெழுத்தாட்டம் இருக்குமா? எனக்கே ஒரு எழவும் புரியமாட்டேங்குது...நம்ம "போண்டா" வேறே வேகவேகமா நோட்ஸ் டிக்டேட் பண்ணுவாரா, ·பாலோ பண்ணவும் முடியலை. பாதிக்குப்பாதிதான் எழுதிருக்கேன்"

"ட்டீய்...போதுண்டீய்...ரொம்ப ரம்பம் போடாதடீ! பாவண்டீ அவர்!" -இப்போது இன்னொரு தோழி கத்தினாள்.

கத்தியவளைத் திரும்பிப்பார்த்தான். இளம்பச்சை சேலையில் நல்லா புசுபுசுவென்றிருந்தாள்...அவளது இடைபகுதியின் மடிப்பு அவன் கண்ணில்பட்டு மின்னிற்று.

"அந்தப்பொண்ணு பேரென்ன?"

"இதுவரைக்கும் உனக்குத் தெரியாதா? செகண்ட் இயர் வந்துட்டே?" -என்று ஆச்சர்யமாகக் கேட்டாள்.

"இல்லே...டக்குண்ணு மறந்துட்டேன்"

"அவ கிருஷ்ணப்ரியா..."என்றவள், "சரி, அதை விடு...நீ கம்பைண்ட் ஸ்டடிக்கு எங்களோட சேந்துக்கிறியா?" என்று சட்டெனக்கேட்டாள்.

"எங்கே? லேடீஸ் ஹாஸ்டல்லேயா?"

"இல்லே...காலேஜ்லே...லெக்சர் ஹால்லாம் திறந்துதானேகெடக்கும்?"

"என்னிலேர்ந்து...?"

"நாளையிலேர்ந்து...நீ வந்தா எனக்கு மாத்ஸ், ப்ராப்ளம் எல்லாம் ஈஸியா சொல்லித்தருவே, நம்ம வனஜாவும் வருவா"

"எத்தனை மணிக்கு ஆரம்பிப்பீங்க?"

"காலையிலே பத்து ட்டூ ஒண்ணு...அப்றம் சாப்டப்போயிருவோம்"

"பாக்கலாம்" என்றான் குரலில் கூச்சத்துடன்.

"என்ன பாக்கலாம்? வேறென்ன வேலை, இந்த ஸ்டடி லீவுலே?...இத்தனை நாள்தான் ஓப்பியடிச்சோம், இனிமேயாவது படிக்கவேணாமா?" என்றாள் தட்ஷிணி.

"அய்யோ! ரொம்ப வழியாதடி...வாடி, பஸ் வந்துரும்" என்று கத்தினாள் ஒருத்தி.

"சரி... நாளைக்கு வர்ரேல்ல?"

"வர்ரேன்...என்ன சப்ஜெக்ட் நாளைக்கு?"

"தெர்மோடைனமிக்ஸ்தான்...அதானே கடி சப்ஜெக்ட்...அதை சீக்கிரம் முடிச்சுடுவோம்...அப்புறம் பத்து நாள் இருக்கே எக்ஸாமுக்கு, ஒண்ணொன்னா முடிச்சுடுவோம்..."

"சரி"

"அப்புறம் ஒண்ணு!"

"என்ன?"

"நாளைக்கு இப்பிடி கைலியோட வந்துறாத...பாண்ட் ஸர்ட்லே வா"

"சரி...வனஜா, அப்றம் வேற யாரெல்லாம் வருவீங்க?"

"நானும் வனஜாவும் மட்டும்தான் வருவோம்...இவள்கள்லாம்தான் வேறே ப்ராஞ்ச் ஆச்சே"

"வ்வீச்!"என்று விசிலடித்து "வாடீ...போறும்" என்று தட்ஷிணியைக் கூப்பிட்டாள் ஒருத்தி.

"சரி. நாளைக்குப்பார்ப்போம்...பய்,பய்!" என்று கையை ஆட்டிவிட்டு நகர்ந்தாள்.

"பய்" என்றுவிட்டு நகர்ந்தான் மூர்த்தி. அவனுக்கு வாய் உலர்ந்து தாகமெடுத்தது.

சற்று தள்ளி, மரங்களுக்குமேலே தெரிந்த கல்லூரி மணிக்கூண்டில் மணி நாலை நெருங்கியிருந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:21 am

விடுதி அறை இரும்புக் கட்டிலில் படுத்தபடி சுற்றிக்கொண்டிருக்கும் மின்விசிறியையே பார்த்துக்கொண்டிருந்தான் மூர்த்தி. விசிறியின் சுழலினூடே அவனுக்கு பலப்பல முகங்கள் காட்சியாயின.

புவனேஸ்வரி...

மெஸ் மாமி...

தட்ஷிணி...

அவளது தோழிகள்...

கிராமத்தில் விடுமுறைக்குச் செல்லும் போதெல்லாம் அவனை ஒரு "இதுவோடு" பார்க்கும் கலையரசி...

கலையரசி அவனுக்குப் பக்கத்துவீட்டுப் பெண்...பக்கத்து ஊரிலிருக்கும் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்புத்தான் படிக்கிறாள். அவள் இவனைப் பார்க்கும்போதெல்லாம் இவனுக்கு ஏன் பறப்பது போல ஒரு ·பீலிங் வரவேண்டும்?

சற்று கனத்த சப்தத்துடன் சுற்றிக் கொண்டிருந்தது மின்விசிறி. நல்ல பெரிய ப்ளேடுகளைக் கொண்டப் பழங்கால விசிறி...அரசினர் பொறியியல் கல்லூரியாயிற்றே...எளிதில் மாற்றிவிடுவார்களா என்ன!

இதே விடுதியில் இதே அறையில் என்னைப்போல் எத்தனை பேர் இதேப்போல் கனவிலும் கற்பனையிலும் லயித்திருந்தார்களோ...என்று நினைத்துக்கொண்டான். ஆனாலும் அவனுக்கு எங்கோ படித்த ஒரு வாசகமும் ஞாபகம் வந்தது...

ஒருவன் ஓடும் நதியில் இதுவரை கால் நனைத்ததில்லை...நதி ஓடிக்கொண்டே இருக்கிறது...ஓடும் நதி ஒவ்வொரு கணமும் புதியதாகவே இருக்கிறது...

திடீரென அவனுக்கு அம்மா, அப்பா முகம் மின்விசிறியில் சுழன்றது...

"இப்பிடி கஷ்டப்பட்டு இன்ஜினியரிங்ப் படிக்க வைக்கிறோம்...படிச்சு முடிச்சிட்டு ஒம் மகன் யாரையாவது இழுத்துக்கிட்டு ஓடிறப்போறான்"...இப்படி ஒருநாள் இவன் கிராமவீட்டு முற்றத்தில் தூங்க ஆரம்பித்தபோது அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார் அப்பா...வேடிக்கையாகத்தான் சொன்னார்...

அதற்கு அம்மா, "சீச்சீ...எம் புள்ளையப் பத்தி அப்படியெல்லாம் நினைக்காதீங்க! அவன் அறிவான புள்ளே!...அவனுக்கு உங்க புத்தியெல்லாம் கிடையாது! அவன் ஏம்புள்ளே!" என்று பதிலடி கொடுத்ததில் அப்பா அதன்பிறகு வாயே திறக்கவில்லை...

மீண்டும் புவனாவின் முகம்...

அவள் முகத்தில் ஏன் அந்த ஆர்வம்? அவளுக்கு உண்மையிலேயே பெரிய விழிகள்...மாமியின் சாயல்...மாமி கொஞ்சம் இளமையாகத் தெரிவாள்...புவனாவுக்கு அக்கா மாதிரி! மெஸ் அய்யர்தான் சற்று வயதானவராகத் தெரிவார்...

எழுந்து அலமாரியிலிருந்த கெடிகாரத்தில் மணி பார்த்தான். சரியாக ஆறுமணி...ஒரே நாளைக்குள் என்னென்ன நடந்துவிட்டது?...

இன்னும் இரண்டு மணிநேரத்தில் மெஸ்ஸ¤க்குப் போகவேண்டும்...சாப்பிட்டுவிட்டு அங்கேயே மாமிக்கும் புவனாவுக்கும் துணையாகத் தங்கவேண்டும்...

துண்டு, சோப்பை எடுத்துக்கொண்டு குளியலறைக்குப் போனான்....

தன்னை நிர்வாணமாக்கிக்கொண்டு, ஷவரை முழுசாய்த் திறந்துவிட்டு ஆசைதீரக் குளித்தான்...

உடம்பு முழுவதும் சோப்புத் தேய்க்கும்போது, புவனா அவனைத் தழுவியிருப்பதாகப்பட்டது...

குளியலறையைவிட்டு வெளிவரும்போது இருட்ட ஆரம்பித்திருந்தது...வராண்டாவில் நின்று மேற்குத் திசையில் பார்த்தான்...பகலில் அவனை எரித்துக் கொண்டிருந்த சூரியன் மண்ணுக்கடியில் மூழ்கிவிட்டிருந்தான்...அவன் விட்டுச் சென்ற செம்மை மட்டும் வான்வெளியெங்கும் மஞ்சள் கலந்த சிவப்பாய் மேகங்களூடே பரவிக்கிடந்தது...

அறையின் குழல்விளக்கொளியில் பாண்ட் அணிந்து ஸர்ட்டை 'இன்' பண்ணி, பெல்ட் மாட்டிக்கொண்டுக் கண்ணாடி பார்த்தபோது, அவன் முகம் களையாக சற்றுக் குளுமையுடன் இருப்பதாகப் பட்டது. புவனா என்னைப்பார்த்துச் சந்தோஷப்படுவாளா....

லைட்டை அணைத்துவிட்டு, அறையைப் பூட்டினான்...அய்யர் மெஸ்ஸை நோக்கி நடக்க ஆரம்பித்தான்..சாலை நெடுகிலும் சோடியம் விளக்குகள் எரிய ஆரம்பித்திருந்தன...

கொல்லங்காளிக் கோயில் வந்தபோது, சாமி கும்பிட்டுப் போகலாம் என்றெண்ணி கோயிலுக்குள் நுழைந்தான் மூர்த்தி.

இன்று என்ன விசேஷமோத் தெரியவில்லை...

கோயிலில் ஆண்களும் பெண்களும் நிரம்பி வழிந்தார்கள்...

யாரையும் மிதித்துவிடாமல் அம்மனைத் தரிசிக்க ப்ரயத்தனப்பட்டு, பக்கவாட்டுத் தடுப்புக் கம்பியில் இடம்பிடித்து அம்மனைத் தரிசித்தான்...என்ன அழகு அம்மன்..! இன்று பச்சையும் மஞ்சளும் கலந்த உடையலங்காரம் செய்திருந்தார்கள்...முகத்தில் மஞ்சளோ, சந்தனமோ பூசியிருந்தார்கள்...

திடீரென அம்மன் அவனைப் பார்த்துச் சிரித்தாள்...அவன் சற்று திடுக்கிட்டு மீண்டும் அம்மன் முகத்தை உற்றுப் பார்த்தான்...

இந்த முகத்தை எங்கேயோ....

ஆம்...மெஸ் மாமியின் மூக்குத்தி மின்னும் மஞ்சள் முகமல்லவா இது?

அவனுக்கு அடிவயிற்றில் ஒரு சிலிர்ப்போடியது...

எதிர் வரிசையில் நின்ற, பட்டுப்பாவாடையிலிருந்த சிறுமியொருத்திச் சாமி கும்பிடுவது போன்ற பாவனையில் இவனையே உற்றுப்பார்த்தாள்...

அடக் கடவுளே...நாம் என்ன அவ்வளவு அழகாவா இருக்கோம்?

கோயிலைவிட்டு வெளியே வந்தபோது, அவன் க்ளாஸ்மேட் ஸ்ரீதர் எதிர்ப்பட்டான்.

"டேய்...என்னடா மாப்ளே! கோயிலுக்கெல்லாம் போக ஆரம்பிச்சிட்டே?...அப்படியே பக்திப் பரவசத்திலே மூஞ்சியெல்லாம் மலர்ந்துபோயிருக்கு?" என்றான் ஸ்ரீதர்.

"டேய்...சும்மார்ரா...அதெல்லாம் ஒண்ணுமில்லே!"

"இப்ப எங்கடா போறே?"

"சும்மாதாண்டா மெஸ்ஸ¤க்கு...சாப்பிட..."

"சரி...அப்ப நானும் வர்ரேன்...அப்படியே சாப்பிட்டுட்டு சினிமாவுக்குப் போகலாம்...என்ன சொல்றே?...நான் டிக்கட் போட்டுக்கிறேண்டா மாப்ளே.."

"இல்லடா...எனக்கு மூட் இல்லே...இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்"

"இல்லே...எங்கிட்டே எதையோ மறைக்கிறேடா மாப்ளே!...என்னான்னு சொல்லிடு!"

"அதெல்லாம் ஒண்ணுமில்லேடா...ஒரு ·ப்ரெண்ட் வீட்டுக்குப் போறேன்...காலையிலேதாண்டா வருவேன்..." என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து தப்பித்தான் மூர்த்தி...

'ஸ்ரீதர் பயங்கரமான பயல்தான்...எல்லா விஷயத்திலும்...' என்று நினைத்துக்கொண்டான் மூர்த்தி...அவனைக் கூட்டிக்கொண்டு மெஸ்ஸ¤க்குப் போனால் அவ்வளவுதான்!

"ட்டே,மாப்ளே...நீ எங்கேயோ 'ஜல்ஜா' பண்ணத்தானே போறே..? உள்ளதைச் சொல்லிட்டுப் போடா!" என்று அவன் முதுகில் கத்திக்கொண்டிருந்தான் ஸ்ரீதர்.

"சும்மா போடா...ஏதாவது உளறிக்கிட்டிருக்காதேடா!"

திரும்பி அவனைப்பார்த்துச் சொல்லிவிட்டு மெஸ்ஸை நோக்கி நடந்தான் மூர்த்தி. சாலையோர சோடியம் விளக்குகள் இப்போது அவன் மீது மஞ்சள் ஒளியைப் பொழிந்துகொண்டிருந்தன.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:22 am

மெஸ் நெருங்க நெருங்க மூர்த்திக்கு சற்று உதறலெடுத்தது. கால்கள் லேசாய் பின்னிக்கொண்டன.வயிற்றில் ஏதோ இனந்தெரியாத கலக்கம், ஏதோ பூச்சி குடைவதுபோல். மாமியின் முகமும் பேச்சும் அவன் கண்ணில் திரும்பத்திரும்ப நிழலாடியது. புவனேஸ்வரியின் கிண்டல் யாருமற்ற இந்த இருள்வெளியில் எதிரொலித்தது. மெஸ்ஸ¤க்குப் பக்கத்தில் வீடுகள் எதுவும் இல்லை. அறைகுறையாகக் கட்டப்பட்டு, இன்னும் பூசப்படாத தனி வீட்டில் இருந்தது மெஸ்.

மெஸ்ஸ¤க்கு மேல் மொட்டைமாடியின் பின் ஓரத்தில் ஒரு கீற்றுக்கொட்டகை. மெஸ் நெருங்க நெருங்க இருள்போர்த்தியிருந்த அந்தக் கொட்டகை அவனிடம் நெருங்கிவந்தது.

மெஸ்ஸின் ட்யூப் லைட் ஒளியுள் அவன் நுழையும்போதே அவனை எதிர்பார்த்திருந்தவள்போல், "வாங்கோ, வாங்கோ!"" என்றாள் மாமி. அங்கு ஒரு நடுவயசு சாமி மட்டும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

"உட்கார்ங்கோ...புவனா இலை கொண்டு வாடி..."-சாம்பார் வாளியுடன் நின்ற மாமியின் முகத்தில் கோயிலில் அவன் கண்ட அதே அம்மன் களை. மாலையின் சோர்வு அவள் முகத்தில் தென்படவேயில்லை. நெற்றியில் அளவாய் கவனமாய் இடப்பட்ட குங்குமம். அதற்குமேல் திருநீறு. ப்ரௌவ்ன் கலர் சேலையும் அதே நிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள்.

வாஷ் பேசினில் கை கழுவிவிட்டு, காலியாய்க் கிடந்த பெஞ்ச்சில் தலையைக் குனிந்தபடி உட்கார்ந்திருந்தான் மூர்த்தி. உள்ளிருந்து புவனா கையில் இலையுடன் வெளிப்பட்டாள். இவனைப் பார்த்துப் புன்னகைத்தபடி இவனருகே வந்து இலையைப் போட்டுவிட்டு,

"அப்பாடா...வந்துட்டேளா! "” என்றாள், ஒரு பெருமூச்சுடன். "எங்கே வராமப் போயிடுவேளோன்னு தவிச்சுப்போயிட்டோம், அம்மாவும் நானும்...நோக்குத் தெரியுமோ, நாங்க சாயங்காலம் கொல்லங்காளி கோயிலுக்கு வந்திருந்தோமே... தெரியுமோ?"

"தெரியும்"

"அதெப்படி? நீங்களும் வந்தேளா?"

"வந்தேன்..."

"சும்மா பொய்பேசாதேள்!"

புவனா முகத்தில் ஆனந்தம் பொங்கிற்று. இப்போதுதான் அவளை அவன் இவ்வளவு நெருக்கமாய்ப் பார்க்கிறான். அவளும் ப்ரௌவ்ன் நிற சேலையில் மாமிபோலவே இருந்தாள். அவளின் அருகாமை அவனுள் ஒரு மெல்லிய இன்மணம் கலந்த வெப்பத்தை தருவித்தது...

"நீயும் மாமியும் அக்கா தங்கை மாதிரி இருக்கீங்க..."

"சும்மா பேச்சை மாத்தாதேள்...கோயிலுக்கு எப்போ வந்தேள்?"

"எப்பவோ வந்தேன்...அதை விடு, இட்லி கொண்டா...பசிக்குது..."

'களுக்'கெனச் சிரித்த மாமி, "அவருக்கு இட்லி எடுத்து வையேண்டியம்மா" என்றாள் மேலும் குலுங்கிச் சிரித்தபடி.

இட்லி எடுக்க திரும்பிப்போனாள் புவனா. அவளது நடையிலும் அசைவிலும் ஒருவித லயம் இருப்பதைக் கண்ணுற்றான் முர்த்தி.

புவனாவின் பின் முழங்கைக் குழிவும், கைகளின் அசைவும் ஒரு நீர்ச்சுழலென அவனைத் தன்னுள் ஈர்த்து அமிழ்த்திற்று. சிமிழென சிவந்து உருண்டிருந்த அவளது குதிகால் மேட்டில் சப்தமிடாத வெள்ளிக்கொலுசொன்று வெண்கொடியாய் மின்னிப்போயிற்று.

சாப்பிட்டுக்கொண்டிருந்த நடுவயது ஆள் இப்போது போய்விட்டிருந்தார்.

"என்ன மாமி, மெஸ்ஸ¤ல யாரையுங்காணோம்...?"

"நமக்கு கஸ்டமர்ன்னு வெளியாளுங்க யாருமில்லியே, காலேஜ் பசங்களைவிட்டா...இனி எக்ஜாமுக்குத்தான் வருவானுங்க...அதான் உங்க காலேஜ்ல ஒருமாசம் ஸ்டடி லீவாச்சே?"

"மாமா..."

"நீங்க போகல்லியா ஊருக்கு?"

"இல்லே மாமி. அங்கேபோனா படிக்க வசதியில்லே"

"வசதி இருக்கற எடத்துலே படிக்கறதுதானே நல்லது.”

"அதான் மாமி...ஹாஸ்டல்லேயே தங்கிட்டேன்..."

"நல்ல முடிவுதான் நீங்க எடுத்தது. இப்போ ஏதும் புக்ஸ் கொண்டு வந்தேளா படிக்கறதுக்கு?"

"இல்லெ மாமி..."

அதற்குள் புவனா ஒரு தட்டில் ஆவி பறக்கும் இட்லியுடன் வந்தாள். ஒவ்வொரு இட்லியாக எடுத்து அவன் இலையில் போட்டாள்...

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:23 am

தங்கம்.... தங்கம்... தங்கம்...

கைகள்...விரல்கள்...ரோஸ்நிறப் பாலீஷிட்ட நகங்கள்...

எப்படிப் படிப்பது...எதைப் படிப்பது...?

நிதானமாய் சாப்பிட்டு முடித்தான் மூர்த்தி.

அதற்குள் மேலும் நாலுபேர் வந்து சாப்பிட அமர்ந்தார்கள். இடமணிக்கட்டில் நேரம் பார்த்தான். எட்டைத்தாண்டியிருந்தது..

"மொட்டை மாடியில் போய் உலாத்திட்டு வாங்கோ காத்தாட...அங்கே நன்னாக் காத்துவரும் ஜிலுஜிலுன்னு" என்றாள் மாமி... "நா இவாளுக்கு பரிமாறிட்டு வந்துர்ரேன்..."

மொட்டை மாடியில் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு வெற்றுடம்புடன் ஓரத்திலிருந்த கட்டைச்சுவரில் உட்கார்திருந்தான் மூர்த்தி. அவனது மெலிந்த தேகத்தில் காற்று உரசிப்போனது.

மாடிப்படியில் யாரோ வரும் சப்தம்...

"பயந்துறாதீங்கோ. நாந்தான், புவனா..."

சட்டென சட்டையை எடுத்து அணிந்துகொண்டான் மூர்த்தி.

"இப்போ எதுக்கு சட்டையைப் போடுறேள்...வேர்க்காதோ?" என்றபடி மொட்டைமாடியின் பின் ஓரத்தில் இருந்த கீற்றுக் குடிசையில் வேகமாய் நுழைந்து, ட்யூப் லைட்டை எரியவிட்டாள். அங்கு கிடந்த ஒரு நீலநிற ப்ளாஸ்டிக் நாற்காலியை கொண்டுவந்து அவனருகேபோட்டு "இதிலே உட்கார்ங்கோ" என்றாள்.

"அதெல்லாம் வேண்டாம் புவனா...இந்தச்சுவர்தான் நல்லாருக்கு,வெதுவெதுன்னு..."

"படிக்க புக்ஸ் கொண்டுவர்ரேன்னேள்? இப்டி கொட்டகையிலே உட்காந்து படிக்கலாமோன்னோ?"

"படிக்க மூட் இல்லே..."

"அப்றம் எதுக்குத்தான் மூட் இருக்காம்?" என்றபடி அவனருகில் சுவர்க்கட்டையில் அமர்ந்துகொண்டாள் புவனா. இருளும் குடிசையில் எரிந்த ட்யூப் லைட் ஒளியும் சேர்ந்து அவளை ஒரு நவீன சித்திரமாக்கின. அவள் குரலில் ஒருவித இசைப்பு போதையாய்ச் சுழன்றது. அவளை நோக்கிய வலிய ஈர்ப்பொன்றுக்கு ஆட்பட்டான் மூர்த்தி.

"உங்களை ஏன் அம்மா கூப்பிட்டா தெரியுமா?"

"சொல்லு"

"உங்க கூச்ச சுபாவம் அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...அப்புறம் உங்க பேச்சு...உங்க பேச்செ கேட்டுக்கிட்டெ இருக்கணும்போல இருக்காம் அம்மாவுக்கு...நாம ராத்திரிக்குத் தொணைக்கிக் கூப்பிட்டா மறுக்காமே வருவார்ன்னு அம்மாதான் சொன்னாள்...இந்தப்பக்கம் திருட்டுப்பசங்களோட நடமாட்டம் ஜாஸ்தி, தெரியுமோ?"

"என்னையப் பாத்து திருடன்லாம் ஓடிருவானா என்ன!..."அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தபடி கேட்டான் மூர்த்தி.

"அப்படித்தான் வச்சுக்கோங்களேன்...நீங்கதான் இப்போ எங்களுக்கு ஹீரோ!" என்று வாயில் கைவைத்து குலுங்கிச் சிரித்தாள் புவனா...

புவனம்...புவனம்...புவனம்...

காற்றில் கலந்துவந்து அவன் முகத்தில் அமிழ்ந்தது புவனா தலையில் சூடியிருந்த இட்டிருந்த மல்லிகை வாசம்...தன் வளப்பமான ஜடையை முன்பக்கத்தில் தொங்கவிட்டு அதையே தடவியபடி பேசினாள் அவள்...

"அப்பா...ஒரே வாசனை..." என்றான் மூர்த்தி, சட்டென.

"என்ன வாசனை?"

"மல்லிகைப்பூ..."

"அதுவா... இதைக் கொல்லங்காளி கோயில்லதான் வாங்கினோம்...கொல்லங்காளிகிட்டே, நீங்க இன்னிக்கு வரணும் வரணும்னு வேண்டிக்கிட்டென் தெரியுமா..."

"வர்ரேன்னு சொல்லிட்டு வராம எங்க போவேன்?"

"இல்லே...அம்மா சொன்னா, ஊருக்கு ஏதும் போயிடுவேளோன்னு..."

"அதுசரி... இன்னும் எத்தினி நாளைக்கி இங்கவந்து தங்கனும்?அய்யர் எப்ப வருவார்?"

"நேத்து நீங்க போன உடனே, அப்பா ·போன் பண்ணார்...தோ அந்த ஆத்துலே ·போன் இருக்கு...நாதான் அட்டெண்ட் பண்ணேன்...வரப் பத்துநாள் ஆகுமாம்..."

"அய்யய்யோ..."

"ஏன் அய்யய்யோன்றேள்...? நான் அப்பாகிட்டே சொல்லிப்பிட்டேன், நீங்க ஒண்ணும் கவலைப்பட வேணாம்ப்பான்னு...நீங்க டெய்லி இங்க வந்து தங்கிக்க ஒப்புக்கிட்டதையும் சொல்லிட்டேன்...அப்பா உங்களுக்கு தாங்ஸ் சொல்லச் சொன்னார்..."

கீழிருந்து மாமி கூப்பிட்டாள்.

"தோ வந்துர்றேன்.."” என்றுவிட்டு மாடிப்படியில் இறங்கி தபதபவென்று விரைந்தோடினாள் புவனா. அவள் விட்டுச்சென்ற மல்லிகை வாசம் அவனையே சுற்றி வந்து அவனிடம் பேசிற்று.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:24 am

மூர்த்திக்கு எல்லாம் கனவுபோல இருந்தது...

மொட்டைமாடியின் இந்த முனைக்கும் அந்த முனைக்குமாக உலாத்திக் கொண்டிருந்தான்....அவ்வப்போது அண்ணாந்து வானம் பார்த்தான். நிர்மலமாய் ஆங்காங்கே நட்ஷத்ரங்களின் மினுக்களுடன் விரிந்தகண்டு கிடந்தது வானம். அவனுக்கு மொட்டைமாடியின் ஒளிகலந்த இருளில் உலாத்தியபடி நட்ஷத்ரங்களைப் பார்ப்பது மிகவும் சுகமான அனுபவமாயிருந்தது...

மூர்த்திக்கு தான் ஏதோ புதிய உலகத்தில் இருப்பதுபோல் ப்ரம்மை தட்டிற்று...தன்மீது பாய்ந்து தவழும் காற்று...அதில் இன்னும் உலவிக்கொண்டிருக்கும் பூவாசம்...இதுதான் அழகின்-உயிரின் வாசனையோ...

திடீரென்று அவனுக்கு வாழ்வின் தத்துவவெளி காட்சியாயிற்று...இதுபோன்ற அபூர்வ தருணங்களில் எல்லாம் அவனுக்கு இது தானே வாய்த்தது...கிராமத்தின் நிறைந்தோடும் ஆற்றங்கரையில் மறையும் மாலைச்சூரியனின் குளுமையாய்த் தகிக்கும் செம்மஞ்சல் பரப்பை மேகங்களூடே தரிசித்து நிற்கையிலும் அவனுக்கு இதுபோல் நிகழ்வதுண்டு...

நிகழ்வுகளைப் பின்பற்று...நீயாக எதையும் வலிந்து செய்யாதே...இது அவனது தாரக மந்திரம்...அவனது உட்குரல் அவனுக்குச் இதுபோன்ற அபூர்வ கணங்களில் அவனுக்கு உணர்த்துவது...

வாழ்க்கை காற்றைப் போல... தன்போக்கில் போகட்டும்...அதன் இயக்கத்தைத் தடுக்காதே...தடுத்தால் பிரச்சனைதான்...குழப்பம்தான்...போராட்டம்தான்...

மழை இயல்பாய்ப் பொழிகிறது...புட்கள் தானே கீதமிசைத்துப் போகின்றன...புல் தானாகவே பனி சுமக்கிறது...சூரியன் தன்போக்கில் உதித்து தன்போக்கில் மறைகிறான்...

வாழ்க்கை ஒரு கனவு...அது எப்போதும் உன் கட்டுப்பாட்டில் இல்லை...இருக்காது...அது காற்றுப்போல எப்போதும் சுழன்றபடியே இருக்கும்...அழுத்தத்திலிருந்து அழுத்தமில்லா இடத்துக்கு...ஒரு திசையிலிருந்து இன்னொரு திசைக்கு...ஒரு விருட்சத்திலிருந்து இன்னொரு விருட்சத்துக்கு...

மொத்தத்தில் வாழ்க்கைக்கு உருவில்லை...அது மாயை...இருப்பற்றது...இல்லாமலே இருப்பதாய்த் தெரிவது...

இப்போது நடப்பதெல்லாம் உண்மைதானா...? இல்லை, என் மனவெளியின் பேய்க்கனவா?

புவனா யார்? தட்ஷிணி யார்? கலையரசி யார்?அந்த ஸ்ரீதரன் யார்?
நான் யார்?

ஒருவேளை நான் அதிகம் படித்துவிட்டேனோ...புத்தகப் படிப்பு வெறும் குப்பை...இதுவும் அந்த அசரீரியின் குரல்தான்...அவனுள் -அவனது அடியாழத்தின் இருட்பகுதியுள்ளிருந்து அவனது
செவிப்புலனில் ஒலிக்கும் குரல்...

வாழ்க்கையைப் பார்...வாழ்க்கையைப் படி...வாழ்க்கையை வாழ்...ஒவ்வொரு கணத்திலும்...

"டே...நீ ரொம்பக் கெட்டுப்போயிட்டடா...ஓஷோ, கீஷோன்னு படிச்சு..." அறைத்தோழன் மனோகர் சொன்னது ஞாபகத்தில்...

"சாரிடா...நான் ஓஷோவோட ·பாலோயர் கிடையாது...எனக்கு யாரும் குரு இல்லடா...எனக்கு நானே குரு...”"

"ஏதாவது உளறிக் கொட்டு...அப்பறம் எதுக்கு எதுக்கெடுத்தாலும் ஓஷோ, ஜே.கே.ன்றே?"

"அவங்களைப் படிச்சுதான் நான் நானா இருக்கக் கத்துக்கிட்டேன்..."

"நீ சுத்தமா மறை கழண்டு போயிட்டேடா மாப்ளே...எப்டியோ போய்த்தொலை!...சட்டையைக் கிழிச்சுக்காமே இருந்தா சரி!"

-தனக்குத்தானே சிரித்துக்கொண்டான் மூர்த்தி...அவனுக்குத் திடீரென ஸ்ரீதரின் ஞாபகம் வந்தது...

ஸ்ரீதர் சொல்லும் கதைகள்...அவற்றில் வரும் பெண்கள்...அவன் குறிப்பிடும் பெண்கள் எல்லோரும் அவனை ‘உபயோக’ப்படுத்திக் கொண்டவர்களாக இருந்தனர்... பக்கத்துவீட்டில்...பக்கத்துத் தெருவில்....பக்கத்து ஊரில்...திருவிழாவுக்கு கிராமத்துக்குப் போயிருக்கையில்...எல்லா இடத்திலும் அவனுக்குப் பெண்கள் தாரளமாகக் கிடைத்தார்கள்...எல்லாரும் அவனை ‘பலவாறாக’ உபயோகப்படுத்திக்கொண்டார்கள்...

அவன் சொல்வது நம்பும்படியாக இல்லையெனினும் அப்படியெல்லாம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லாமல் இல்லை...

எது உண்மை...எது பொய்?

"என்ன ஒரே யோஜனையா அலைஞ்சிண்டிருக்கேள்?" -கேட்டபடி மாடிப்படியேறி வந்தாள் மாமி...கூடவே புவனாவும், மாமியின் முந்தானையை வாயில் கவ்வியபடி...

"வாங்கோ இப்பிடி உட்கார்வோம்...காத்தாட..."

-மொட்டைமாடியின் ஓடுபதிக்காத சிமெண்டுத் தரையில் சம்மணமிட்டு பின்னால் கையூன்றிக்கொண்டாள் மாமி...புவனா அவள் தோளைப் பிடித்தபடி அவளுக்குப்
பக்கத்தில் அமர்ந்துகொண்டு அவனைப்பார்த்துச் சிரித்தாள்...

மூர்த்தி தரையில் உட்காரத் தயங்கினான்...

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:24 am

"தோ...கொட்டகையில் வேஷ்டி இருக்கு...யாரும் விருந்தாளி வந்தா கட்டிக்கிறதுக்காக உள்ளதுதான்...போய் கட்டிட்டு வந்து இப்பிடி சேர்ல உட்கார்ங்கோ..." என்றாள் மாமி.

அவன் தயங்கியதைப் பார்த்த புவனா, "என்னம்மா நம்ம ஹீரோ ரொம்ப வெட்கப்படுறார்!" என்றாள்.

கொட்டகைக்குப் போய் வேஷ்டிக்கு மாறிக்கொண்டு வந்து அவர்கள் எதிரே நாற்காலியில் அமர்ந்தான் மூர்த்தி.

அவனுக்கு அடிவயிற்றில் ஜிவ்வென்று சூடேறியது.

"உங்களுக்கு என்ன வயசாறது?" என்று கேட்டாள் மாமி.

"பத்தொம்பதாகுது மாமி..."

"அப்போ என் வயசிலே பாதிகூட இல்லை...நேக்கு நாப்பதைத் தாண்டிடுச்சு...சின்ன வயசுலே எனக்கு ஒரு ·ப்ரெண்ட் இருந்தான்...இருதாப்லே இருக்கறச்சேயே ஒரு ஆக்சிடெண்ட்லே செத்துப்போயிட்டான்...அவன் அச்சு அசல் உன்னைப்போல இருப்பான்...சாரி...வாய்தவறிச் சொல்லிட்டேன்...உங்களைப்போல இருப்பான்..."

"அதுக்கென்ன மாமி...என்னை வா, போன்னே கூப்டுங்க..."

"இன்ஜினீயரிங் படிக்கற புள்ளே....எப்படி வாடா, போடான்றது?...ஆமா இன்னும் எத்தினி வருசத்துக்கு இங்கே படிக்கணும்?"

"இப்பத்தான் மாமி செகண்ட் இயர்...இன்னும் ரெண்டு வருஷத்துக்கும் மேலே இருக்கு..."

"அப்போ ஒரு உபகாரம் பண்ணுங்கோ...முடிஞ்சாத்தான்...அய்யர் இருந்த பணத்தையெல்லாம் போட்டு இந்த வீட்டைக் கட்டிப்பிட்டார்...இப்போ கையிலே சுத்தாம பணம் இல்லே, அதான் பாத்திருப்பேளே, வீடு இன்னும் வெளிப்பூச்சுகூட இல்லாமெக் கெடக்கு...கீழே ரெண்டு ரூம் இருக்கோல்லியோ, அதை தடுத்து ரூமாக்கி நாலு பசங்களுக்கு வாடகைக்கு விட்டா எதாவது வருமானம் வரும்..."

ஒன்றும் பேசாமல் அவள் வாயையே பார்த்துக்கொண்டிருந்தான் மூர்த்தி.

"நீங்கதான் சொல்லி நாலு பசங்களை இழுத்தாறணும்...நீங்களும் வந்தீங்கண்ணாக் கூட நன்னா இருக்கும்...இங்கேயே சாப்டுக்கலாம்...ஹாஸ்டலை விட பில் கம்மிதானே இங்கே"

"ஹாஸ்டல்லே இருந்தா ஸ்காலர்ஷிப்பெல்லாம் வரும் மாமி...வெளியே வந்துட்டா அது கட்டா யிடுமே..."

"உங்க வசதியையும் பாத்துக்கோங்க..."

"இல்லே...இந்த லீவ் முடிஞ்சதும் யோசிக்கிறேன்..."

"சரி, அதை விடுங்கோ...படிப்புக்கான லீவு தானே இது, ஏன் புக்ஸ் எடுத்துண்டு வரலே?"

"நாளைக்கு எடுத்திட்டு வந்திர்றேன்..."

"ம்ம்ம்...படிப்புதான் முக்கியம்...அதைக் கோட்டை விட்றாதேள்..." -
பின்னால் ஊன்றியிருந்த கைகளை மடியில் வைத்து விரல்களைப்
பின்னிக் கோர்த்தபடி பேசினாள் மாமி...புவனா அவனையே வைத்தகண் வாங்காமல் பார்த்தபடியிருந்தாள்...அவளது தலைமுடிக்கற்றையில் எழுந்துநின்ற முடிகள், கொட்டகையிலிருந்து வரும் ஒளிபட்டு மின்னின.

"சரி...கீழே வாங்கோ...நான் சொன்னேனோல்லியோ, அந்த ரூமிலேயே படுத்துக்கலாம் நீங்க...·பேன், கட்டில் எல்லாம் கிடக்கு, படிக்க வசதியா இருக்கும்..."

"சரி மாமி..."

மாமி கையைத் தரையில் ஊன்றி "சிவனே..." என்றபடி எழுந்தாள். புவனா இளமையின் மதர்ப்புடன் துள்ளியெழுந்து கொட்டகையின் ட்யூப் லைட்டை அணைத்துவிட்டு வந்தாள்.

மெல்லிய இருள்கவ்விய மாடிப்படியில் மெதுவாக இறங்கும் அவர்களைப் பின்தொடர்ந்து ஒரச்சுவரைப் பிடித்தபடி கவனமாய் இறங்கினான் மூர்த்தி.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:25 am

நின்றபடியே அறையை நோட்டமிட்டான் மூர்த்தி. அறை நல்ல வசதியாகத்தான் இருக்கிறது: ஒரு ஒற்றை இரும்புக்கட்டில்...அதன்மேல் ஒரு திக்கான பெட்ஷீட்...மெல்லிய நீல உறையிடப்பட்ட இலவம்பஞ்சுத் தலையணை...சுவரில் கூட அவனுக்குப் பிடித்த நீலவண்ணமே பூசப்பட்டிருந்தது...வீட்டுக்கு வெளிப்பூச்சு இல்லையே ஒழிய, உள்ளறை மிகவும் சுத்தமாகவும் அழகாகவும்தான் இருக்கிறது..எல்லாம் புவனாவின் கைவண்ணமாக இருக்கும்...

பூட்டியிருந்த அறையைத் திறந்துவிட்டு அறை வாசலில் ஒரு அரைமணிநேரம் நின்றபடியே பேசிக்கொண்டிருந்தார்கள் மாமியும் புவனாவும்...

"இதுதான் எங்கள் கெஸ்ட் ஹவ்ஸ்...யாரும் உறவுக்காரா வந்தா இங்கதான் தங்கிப்பா..." என்றாள் மாமி.

"அப்டியா மாமி...அப்போ இத வாடகைக்கு விட்டுட்டா..."

"அதுக்கென்ன பண்றது...எங்கினாச்சும் அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்..."

புவனாவின் முகத்தில் அறையின் ட்யூப் லைட் ஒளிபட்டு அவளை ஒரு தேவதையாக்கியது...அவள் அவனையே விழுங்குவதுபோல் பார்த்தபடியிருந்தாள்...

மாமியும் புவனாவும் மெஸ்ஸை ஒட்டி முன்பக்கமாயிருந்த அவர்களது படுக்கையறைக்குப்போய் அறைமணிநேரத்துக்கு மேலிருக்கும்.

மணி பதினொன்றரை...

மூர்த்திக்கு சுத்தமாய் தூக்கம் வரவில்லை...லைட்டை அணைத்துவிட்டு கட்டிலில் குப்புறப்படுத்துக்கொண்டான். இலவம்பஞ்சுத் தலையணை தலைக்கு இதமாக இருந்தது...அவனது உடல் மிகவும் சூடுகண்டு கொதித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தான் மூர்த்தி. கண்கள் எரிந்தன...

ஏதோவொன்று அவனை உள்ளிருந்து முட்டியெழுப்பி பறக்கச்செய்வதை அவன் உணர்ந்தான்...

புரண்டுபுரண்டு படுத்தான் மூர்த்தி...அனல்...அனல்...அனல்...இப்போது தலையணையில் பலப்பல பெண்முகங்களின் அணிவகுப்பு...தலையணை ஒரு மந்திர மேடையாகி அவனை பறக்கச்செய்தது...பறந்தான்...

அப்பாடா...

மெதுவாய் படுக்கைவிட்டெழுந்து பாத்ரூம்போய்விட்டுவந்து ஜன்னல் கம்பியில் இருகைகளாலும் பிடித்தபடி, இருளில் நின்று வெளியே பார்த்தான். அங்கு ரோட்டோரமாய் ஒரு ஒற்றைப்பனை ஓங்கியுயர்ந்து வானம்தொட்டு நின்றது. அவனுக்கு பனைமரங்கள் மிகவும் பிடித்தமானவை...கிராமத்திலிருக்கும் சிறுசிறு பனங்காடுகளில் அவன் விளையாடியிருக்கிறான்...

அவனுக்கு சிறுவயதில் சீதா என்றொரு விளையாட்டுத்தோழியும் இருந்தாள்: இப்போது அவள் எங்கு, என்னசெய்துகொண்டிருக்கிறாளோ...அப்போது அவனுக்கு ஏழெட்டு வயசிருக்கும்...அவர்கள் இருவரும் அடிக்கடி புருஷன்-பெண்டாட்டி விளையாட்டு விளையாடுவார்கள்...ஒரு கயிற்றால் தாலிகட்டிக்கொண்டு மணலில் வீடுகட்டி சாப்பாடு குழம்பு எல்லாம் தயார்செய்து அவனுக்கு ஒரு பனை ஓலையில் சோறுபோடுவாள் சீதா...சுற்றியிருக்கும் அவனைவிட சிறியவர்களான சுட்டிப்பசங்கள் அவர்கள் இருவரையும் "ஏய் புருஷன்...! ஏ பொண்டாட்டி...!" என்று கூப்பிட்டுக் கேலிசெய்துவிட்டு ஓடிவிடுவார்கள்...அப்போது சீதா வெட்கப்பட்டு தலைகுனிந்திருப்பதைப் பார்த்து அவள் கன்னத்தைப்பிடித்து நிமிர்த்தி "நீ ஒண்ணும் கவலைப்படாதே...அவனுகளை நான் பாத்துக்கிறேன்..." என்று சமாதானம் சொல்வான் மூர்த்தி...அப்போது அவர்கள் இருவர்மட்டும்தான் இருப்பார்கள்...சுற்றியிருக்கும் பனங்கன்றுகள் தத்தம் பசிய ஓலைகளை ஒன்றோடொன்று தேய்த்து வாத்தியமிசைக்கும்...

ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டுவிட்டு தனக்குள் புன்னகைத்துக்கொண்டான் மூர்த்தி... அனேகமாக இப்போது சீதாவுக்கு கல்யாணமாகியிருக்கும்...அவளது பெற்றோர் அப்போதே ஊரைவிட்டுப்போயிருந்தார்கள்...

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:25 am

எப்போது தூங்கினானோ தெரியவில்லை...உடம்பில் சூரிய ஒளிபட்டு விழித்தபோது கையில் காபியுடன் வாசலில் நின்றுகொண்டிருந்தாள் புவனா...

கதவைத்திறந்து கையில் கா·பியை வாங்கிக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்துகொண்டான்...

"·பில்டர் கா·பிதான்...எங்கம்மாதான் கலந்தா...ரொம்ப நன்னா இருக்கும்"

பின்னாலேயே மாமியும் வந்துவிட்டாள்: "என்ன நன்னாத் தூங்கினேளா...நன்னாத்தூங்கணும்...அப்பத்தான் காலையிலே நன்னாப்படிக்கலாம்..."

கா·பியை உறிஞ்சியபடியே மாமியையும் புவனாவையும் ஆழமாகப்பார்த்தான் மூர்த்தி..."சரியாத் தூக்கமே வரலை மாமி..."

"புது எடமில்லையோ...கொஞ்சநாள் அப்படித்தான் இருக்கும்...போகப்போகச் சரியாய்டும்..."

"அதில்லை மாமி...நீங்க சொன்னப்பிறகுதான் படிப்பு பத்தி ஞாபகமே வருது...ஒரே கனவு நைட்டெல்லாம்..."

"நெனைச்சேன்...அதுக்குத்தான் புக்ஸெல்லாம் எடுத்துட்டு வாங்கோன்ணேன்...படிச்சிட்டே தூங்கினா கனவெல்லாம் வராது..."

"எனக்குப் பயமாயிருக்கு மாமி...எப்படித்தான் படிச்சு பாஸ்பண்ணப்போறேனோ..."

"அதெல்லாம் பாஸ்பண்ணிடலாம்...அதுக்கு என்னென்ன ஒதவியெல்லாம் பண்ணனுமோ நாங்க பண்றோம்...எதாயிருந்தாலும் என்கிட்டயும் புவனாகிட்டயும் கேட்டுப்பிடுங்கோ...கா·பியா, டீயா...டி·பனா...எப்போவேணாலும் எதைவெணாலும் கேளுங்கோ...எதையும் மறைக்கப்பிடாது...நீங்க இனி உறவுக்காரா மாதிரி...எங்களை விகல்பமா நினைச்சுறாதேள்..." பேசப்பேச மாமியின் குரல் உடைந்துகொண்டே வந்தது...

கண்ணைத் துடைத்துக்கொண்டே அவனை ஒருநொடி ஆழமாகப் பார்த்துவிட்டு அங்கிருந்து போய்விட்டாள் மாமி. அவளோடு புவனாவும் போய்விட்டாள்...

அறையைவிட்டு எழ மனசில்லாமல் அப்படியே சற்றுநேரம் உட்கார்ந்திருந்தான் மூர்த்தி. பிறகு ஒரு தீர்மானத்தோடு எழுந்து, அறையைவிட்டு வெளியேறி, பாத்ரூம்போய் முகத்தைக்கழுவிவிட்டு, வேஷ்டியை சரிசெய்து கட்டிக்கொண்டு, மெஸ்பக்கமாய் நடந்தான் மூர்த்தி. ஏழுமணி வெயில் அவன் கன்னத்தில் சுள்ளென்றடித்தது.

மாமியும் புவனாவும் மெஸ்ஸின் பெஞ்ச் ஒன்றில் மெலிதான சோகச்சாயலோடு உட்கார்ந்திருந்தார்கள், அவன் வருகையை எதிர்பார்த்திருப்பவர்களைப்போல...

"மாமி...ஒங்க ·பில்டர் கா·பி அருமையோ அருமை...இனி இங்கேயே தங்கிக்கிறதா முடிவுபண்ணிட்டேன்..."

"என்ன சொல்றேள்" இருவரும் கோரஸாகக் கேட்டார்கள்...

"ஆமா மாமி...ஹாஸ்டலைக் காலிபண்ணிட்டு இங்கேயே வந்துடப் போறேன்...இன்னும் ரெண்டரை வருஷத்துக்கு இனி இங்கதான்..."

"அய்யோ!" என்று கத்தியபடி அம்மாவைக் கட்டிப்பிடித்துகொண்டாள் புவனா. "நம்ம ஹீரோ இனி நம்மோடதாம்மா இருக்கப்போறார்!"

"சும்மார்டி!" என்று புவனாவை செல்லமாய்க் கடிந்துகொண்ட மாமியின் முகத்தில் ஒளிர்ந்த பூரிப்பைக்கண்டு ஒருகணம் அசந்துபோனான் மூர்த்தி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக