புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
1 Post - 3%
M. Priya
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Rutu
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Jenila
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
manikavi
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_m10ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ. பி. ஜே. அப்துல் கலாம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 4:34 pm

First topic message reminder :

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் அவுல் பகீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியிலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

பிறந்த நாள்: அக்டோபர் 15 1931

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 Dr_abd10

பிறந்த இடம்: இராமேஸ்வரம்

11ஆவது குடியரசுத் தலைவர்
பதவி ஏற்பு: ஜூலை 25, 2002
பதவி நிறைவு: ஜூலை 25, 2007



avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 5:03 pm

மைசூர்ப் போருக்குப் பிறகு 1804 ஆம் ஆண்டில் பிரிட்டீஷ் ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் வில்லியம் காங்கிரீவ் [William Congreve] என்பவர் திப்பு சுல்தான் பயன்படுத்திய எறிகணையைக் காப்பி எடுத்து விருத்தி செய்து 9000 அடி தூரம் செல்லும்படி மேம்படுத்தினார். அந்த எறிகணைகள் 1812-1815 ஆண்டுகளில் அமெரிக்க சுதந்திரப் போருக்குப் பிறகு அமெரிக்க-கனடாச் சண்டையில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பிரிட்டன் பயன்படுத்தியதாக அறியப் படுகிறது. வில்லியம் காங்கிரீவ் தனது ராக்கெட்டில் இரும்புக் குழலும், கருப்புத் தூளுமிட்டு, ஏவுநிறையைச் சமப்படுத்த 16 அடிக் கம்பைப் பயன்படுத்தினார். 1806 இல் பிரிட்டீஷ் கப்பல் படையினர் காங்கிரீட் ராக்கெட்டுகளைக் பிரெஞ்ச் வீரன் நெப்போலியன் படைகள் மீது வீசினர். அடுத்து ஈரோப்பில் 1807 ஆண்டில் கோபன்ஹேகனுக்கு (டென்மார்க்) எதிராக 25,000 காங்கிரீவ் எறிகணைகள் உந்தி எறியப்பட்டன. பிறகு வில்லியம் ஹேல் [William Hale] என்னும் அடுத்தோர் பிரிட்டீஷ் நிபுணர் கம்புகளற்ற எறிகணைகளை ஆக்கினார். அமெரிக்க ராணுவம் 1846-1848 ஆண்டுகளில் நடந்த மெக்ஸிகன் போரிலும், ஆப்ரஹாம் லிங்கன் காலத்து உள்நாட்டுப் போரிலும் [Civil War (1861-1865)] காங்கிரீவ் ராக்கெட்டுகள் பயன்பட்டதாகத் தெரிகிறது.

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 40705171ab


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 5:04 pm

டாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்ட ஐம்பெரும் ராக்கெட் திட்டங்கள்


1982 ஆம் ஆண்டில் ராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of Defence Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல் கலாம் பணி புரிந்த போது, கூட்டமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித் திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] அவர் பொறுப்பில் விடப்பட்டது. அத்திட்டமே இந்திய ராணுவத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது. அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள் ராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின. அவை யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு பெற வேண்டுமென முயற்சிகள் ஆரம்பமாயின. அந்த ஐம்பெரும் ஏவுகணைத் திட்டங்களின் பெயர்கள் என்ன ?

1. நாக ஏவுகணை - ராணுவ டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை (NAG - An Anti-Tank Guided Missile)

2. பிருத்வி ஏவுகணை - தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளத் தாக்கு ஏவுகணை - (Prithvi - A Surface-to-Surface Battle Field Missile)

3. ஆகாய ஏவுகணை - தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash - A swift Medium Range Surface-to-Air-Missile)
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 40705171ac


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 5:05 pm

4. திரிசூல் ஏவுகணை - விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை (Trishul - A Quick Reaction Surface-to-Air Missile with a Shorter Range)

5. அக்கினி ஏவுகணை - எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni - An Intermediate Range Ballistic Missile, The Mightiest)

துணைக்கோள் ஏவும் ராக்கெட் திட்டத்தில் (SLV-3) கூட்டுப் பணிசெய்து டாக்டர் அப்துல் கலாம் பெற்ற அனுபவம் தனித்துறை-பொதுத்துறை தொழில் நிறுவாகங்களை இணைத்து ஏவுகணைச் சாதனங்கள் செய்யப் பாதை வகுத்தது. அச்சமயத்தில் திட்ட நிர்வாகத் தலைவராக இருந்த அப்துல் கலாம் மற்ற நிதிப் பொறுப்பு, நிர்வாக ஆணைப் பணிகளின் பொறுப்புகளைக் கீழிருந்த மேலதிகாரிகளிடம் விட்டுவிட்டு முக்கிய வினைகளை மட்டும் தான் மேற்கொண்டார்.

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 40705171b


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 5:08 pm

பாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை


ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 40705241e


இந்தியாவுக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்வீர்.
இந்தியாவை மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்தனை செய்வீர்,
அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள
மேம்பாடுகளை நாமும் பெற வேண்டுமானால்!

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

“என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். வாழ்க்கையில் உன்னை வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான் செய்யும். பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”

டாக்டர் அப்துல் கலாம்

“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”

டாக்டர் அப்துல் கலாம் (இளைஞருக்குக் கூறியது )

”முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை! னால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 5:10 pm

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 40705241c


இந்தியாவின் போர்க்களத் தாக்குகணைத் திட்டங்கள்

1974 மே மாதம் இந்தியா முதன்முதல் அடித்தள அணு ஆயுத வெடிப்பைச் சோதித்த பிறகு அந்த ஆயுதத்தைத் தாங்கிக் கொண்டு தாக்கச் செல்லும் ஏவுகணைகளை ஆக்கும் இராணுவ முற்பாடுகளில் முனைந்தது. கடந்த மத்திய ஆசிய கல்ஃப் நாட்டுப் போர்களில் தாக்குகணைகள்தான் பெருமளவில் பங்கேற்றன. எதிர்காலத்தில் எழும் போர்களும் இனிமேல் கட்டளைத் தாக்குகணைகளைத்தான் பேரளவில் பயன்படுத்தப் போகின்றன. சென்ற சில ஆண்டுகளாய் இந்தியா தனது இராணுவத் தேவைகளுக்கு உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நம்பத் தகுந்த கட்டளைத் தாக்குகணைத் தயாரிப்பில் ழ்ந்து முற்பட்டு வருகிறது. 1994 இல் இந்தியப் பொறியியல் விஞ்ஞானிகள் 1500 கி.மீ. [900 மைல்] நீட்சித் தூரம் செல்லும் அக்கினித் தாக்குகணைகளை மூன்று முறை ஏவிச் சோதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். சமீபத்தில் 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அபார ஆற்றல் கொண்ட அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்தது.

டாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்ட ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள்

1982 ம் ஆண்டில் இராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of Defence Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல் கலாம் பணி புரிந்த போது, 1993 இல் கூட்டமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித் திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] செயற்பட அவர் பொறுப்பில் விடப்பட்டது. அத்திட்டமே இந்திய இராணுவத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது. அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின. அவை யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு பெற வேண்டுமென முயற்சிகள் ரம்பமாயின. அந்த ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 5:11 pm

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 40705241b


1. நாக் தாக்குகணை - இராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை [NAG - An Anti-Tank Guided Missile (ATGM)] அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் : 4 கி.மீடர் (2.5 மைல்). எதிரி டாங்குகளின் எஃகுக் கவசத்தை ஊடுருவிப் பிளக்கும் ஆற்றல் உள்ளது. உலகிலே முற்போக்கானத் தாக்குகணை அது.

2. பிரித்வி தாக்குகணை - தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM), விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம். வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் : 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின. அதன் நீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்). சோவியத் யூனியன் ராக்கெட் பொறிநுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது. பிரித்வி-1 நீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1994 இல் அதன் விருத்தி வேலைகள் ரம்பமாயின. பிரித்வி-2 நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996 இல் ரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன. பிரித்வி-3 நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். அதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும். அல்லது 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.

3. ஆகாஷ் தாக்குகணை - தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash - A swift Medium Range Surface-to-Air-Missile). எல்லாவற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது. அதன் சிறப்பென்ன வென்றால், அது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய [2.5 Mach Number] வேகத்தில் போவது. நீட்சித் தூரம் 25 கி.மீ. [15 மைல்] கொண்ட இந்த தாக்குகணை எண்ணைக் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயனாகிறது. ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 5:27 pm

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 40705241aa


4. திரிசூல் தாக்குகணை - விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை [Trishul (Trident) - A Quick Reaction Surface-to-Air Missile (SAM) with a Shorter Range] அவை தளப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்பெரும் இராணுவப் போர்த் துறைகளிலும் பயன்படுகின்றன. தணிவாக அருகில் பறப்பனவற்றைத் தாக்கும் கணைகள் அவை. அவற்றின் பயண நீட்சி தூரம் : 5-9 கி.மீ. (3 முதல் 5 மைல்)

5. அக்கினி தாக்குகணை - எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni - An Intermediate Range Ballistic Missile, The Mightiest), அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்]. உலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப்படுகிறது. 1989 இல் முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பட்டது. 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்து, பாரத வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது..

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 5:30 pm

பாரதத்தின் அண்டை நாடேகும் கட்டளைத் தாக்குகணை சூரியா

இந்தியாவின் முதல் "அகிலக் கண்டம் தாக்கும் கட்டளைக் கணை" சூரியா [Intercontinental Ballistic Missile, (ICBM) Surya] தயாரிக்கும் பொறியியல் இராணுவப் பணிகள் ஆரம்பமாகி சூரியா-1 சோதனைப் பயிற்சி 2005 இல் திட்டமிடப்பட்டது. தனிப் பயிற்சி இயக்கப்பாடுகள் முடிந்து முதல் சோதனை 2008 இல் திட்டமிடப் பட்டுள்ளது. 2015 ஆண்டில்தான் கட்டளைக் கணைப் படைப்பு முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சூரியா-1 நீட்சித் தூர எதிர்பார்ப்பு : 10,000 கி.மீ. (சுமார் 6000 மைல்), சூரியா-2 இன் நீட்சித் தூர எதிர்பார்ப்பு 20,000 கி.மீ. (சுமார் 12000 மைல்). சூரியா-1 கட்டளைக் கணை 40 மீடர் நீளம் [130 அடி நீளம்], 80 டன் எடை, திட-திரவ உந்துசக்தி எரிப்பொருள் பயன்படும் மூவடுக்கு ராக்கெட்டுகளைக் கொண்டது. முதல் அடுக்கு ராக்கெட் திரவ எரிசக்தியும், மற்ற ஈரடுக்கு ராக்கெட்டுகள் திடப் பொருள் எரிசக்தியும் பயன்படுத்தும். ஐசிபியெம் ராக்கெட்டுகளின் பொறிநுணுக்கம் அக்கினி-2, துருவத் துணைக்கோள் ஏவு வாகனத்தின் [Polar Satellite Launch Vehicle (PSLV)] கூட்டு யந்திர அமைப்புகளே.

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - Page 2 40705241f


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 5:35 pm

"இந்தியத் திருநாட்டின் ஜனாதிபதிக்ஷ அரசியல்வாதி அல்ல... அணு விஞ்ஞானி' என்பது உலக வரலாற்றில் வேறெந்த நாட்டுக்கும் வாய்க்காத அற்புதப் பேறு.

அடிவயிற்றில் கலக்கத்துடன் இந்தியாவை வியந்தும் பயந்தும் கவனித்து வருகிறது உலக நாடுகள்.

இந்தியாவின் காலடி நகரத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்த தமிழனுக்கு குடியரசுத் தலைவர் எனும் முடிசூட்டி கெஜரவித்திருக்கிறது இந்தியா.

"இந்தியாவை வல்லரசாக மாற்றுவதே என் லட்சியம்' என்பதே ஜனாதிபதி அப்துல்கலாமின் பிரகடனம்.

அதற்கேற்றாற்போல கலாமுக்கு ஒரு கனவு உண்டு. 2020ம் ஆண்டுக்குள் "லட்சிய இந்தியா' என்கிற ஒரு மகத்தான புதுயுகக் கனவுதான் அது.

கலாமின் இந்தக் கனவு மெய்ப்படவேண்டும் என்பதற்காக 500 அறிஞர்களுடன் கைகோர்த்து அதற்கான விஞ்ஞானப் பட்டறை அமைத்து பணியாற்றிக்கொண்டிருந்தார். அதேவேளை ஜனாதிபதி பொறுப்பேற்ற பிறகும்கூட தனது விஞ்ஞான ஆராய்ச்சிப்பணி தொடரும் என்று கூறி அடுத்த தலைமுறை விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

பொக்ரான் சோதனை, செயற்கைக்கோள் சாதனை என இந்தியாவின் பாதாளத்திலும், ஆகாயத்திலும் அப்துல்கலாம் நிகழ்த்திய அற்புதங்களால்தான் உலக வல்லரசுகள் தங்களது வாலைச் சுருட்டி வைத்திருக்கின்றன.

வானளாவிய சாதனைகள் செய்தாலும் கலாம் எளிமையான மனிதராகவே எப்போதும் காட்சியளிக்கிறார். காரணம்க்ஷ சின்ன வயதிலிருந்தே கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியதால், எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற பண்போடு திகழ்கிறார்.

விஞ்ஞானத்தில் மட்டுமல்ல. எழுத்துத் துறையிலும் வித்தகர் கலாம்.

அப்துல் கலாம் தன் வாழ்க்கைச் சரிதத்தை "அக்னிச் சிறகுகள்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார். இன்றைய தேதிக்கு மிகப் பரபரப்பாக விற்று வரும் நூல் இதுதான்.

இந்நூலின் முதல்பக்கம் தொடங்கி கடைசிப் பக்கம் வரை கண்ணீர் இழையோடும். அந்த அளவுக்கு கலாமின் இளம் பருவம் கஷ்டங்களின் பிடியிலிருந்தது.

ஆனால் "அக்னிச் சிறகு'களில் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிவது கலாமின் தாய்பக்தி, குருபக்தி, இறைபக்தி, விண்பக்தி, மண்பக்தி. இந்த பக்திகளின் உந்துதலால் கடுமையாக உழைத்து இன்று சிகரம் தொட்டிருக்கிறார் கலாம்.

இப்படியொரு ஒப்பற்ற மனிதர், வியத்தகு விஞ்ஞானி ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருப்பதில் கம்பீர கர்வம் கொள்கிறது இந்தியா.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 5:37 pm

கலாமை பாதித்த காந்தி


ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்வில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியது மகாத்மாவின் ஒரு புகைப்படம். அதுபற்றிய கலாமின் நினைவுப்பதிவு இது....

""கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ந் தேதி, உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். நான்தான் மாணவர் தலைவன். ஆசிரியர் என்னை அழைத்தார். ""இன்று நள்ளிரவு நமக்கு சுதந்திரம் கிடைக்கப் போகிறது. எல்லா மாணவர்களையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்துவிடு'' என்றார்.

நானும் அவ்வாறே செய்தேன். நேரு நமது தேசியக் கொடியை ஏற்றினார். அவர் இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசினார். நான் தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவன். எதுவும் எனக்குப் புரியவில்லை. அடுத்த நாள், தமிழ்ப் பத்திரிகைகளில் இரண்டு படங்கள் வெளியாகியிருந்தன. ஒன்று, நேரு கொடியேற்றுவது. இரண்டாவது, மதக் கலவரத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த நவகாளி வீதியில் செருப்புகள்கூட இல்லாமல் காந்திஜி நடந்து செல்லும் புகைப்படம். அந்தப் படம்தான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது.''

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக