புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இந்த உலைவெறி? அணு உலைகள்- வரமா, சாபமா ?- ஒரு கேள்வி பதில் தொகுப்பு  " நன்றி : ஞானி " - Page 4 Poll_c10ஏன் இந்த உலைவெறி? அணு உலைகள்- வரமா, சாபமா ?- ஒரு கேள்வி பதில் தொகுப்பு  " நன்றி : ஞானி " - Page 4 Poll_m10ஏன் இந்த உலைவெறி? அணு உலைகள்- வரமா, சாபமா ?- ஒரு கேள்வி பதில் தொகுப்பு  " நன்றி : ஞானி " - Page 4 Poll_c10 
34 Posts - 52%
heezulia

28 Posts - 43%
mohamed nizamudeen

1 Post - 2%
T.N.Balasubramanian

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

311 Posts - 46%

296 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Jenila

4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் இந்த உலைவெறி? அணு உலைகள்- வரமா, சாபமா ?- ஒரு கேள்வி பதில் தொகுப்பு " நன்றி : ஞானி "

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 03, 2012 1:34 pm

First topic message reminder :

நண்பர்களே , திரு ஞானி அவர்களின் கேள்வி பதில் போன்ற இந்த கட்டுரைகளை முழுவதும் படியுங்கள் (குறிப்பாக அணு உலை திறக்கபடவேண்டும் என்பவர்கள்).

ஏன் இந்த உலைவெறி? அணு உலைகள்- வரமா, சாபமா ?- ஒரு கேள்வி பதில் தொகுப்பு
இது ஜனவரி 4,2012 அன்று என் பிறந்த நாளையொட்டி நான் எழுதி வெளியிட்டிருக்கும் சிறு நூல். அணு உலை வேண்டாம் என்று சொல்பவர்களிடம், ஏன் வேண்டுமென்று சொல்வோர் வைக்கும் வாதங்களுக்கெல்லாம் இதில் பதில்கள் உள்ளன.
ஏன் இந்த உலைவெறி?
அணு உலைகள்- வரமா, சாபமா ?-
ஒரு கேள்வி பதில் தொகுப்பு
——————
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
———————-
அணுகுண்டு சோதனைகள், அணுமின் நிலைய விபத்துகள்,
கதிரியக்கங்கள் ஆகியவற்றால் உலகில் இதுவரை இறந்துவிட்ட லட்சக்கணக்கான மக்களுக்கும், இன்னமும் நோய்களால் நடைபிணங்களாக வாழ்ந்து கொண்டிருப்போருக்கும், இதிலிருந்து பிடிவாதமாக எதையும் கற்றுக் கொள்ள மறுக்கிற எல்லோருக்கும் இந்த நூல் காணிக்கை.
———————————–
வணக்கம்
எந்தக் கட்சியும் எந்தத் தலைவரும் ஒரு போதும் அறிவிக்காத
ஒரு பிரும்மாண்டமான இலவசம் வாக்காளர்களான நமக்காகக்
காத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் இலவசக் கதிர்வீச்சு. அதற்கு
ஆணவம் மிகுந்த ஜெயலலிதாவா, தியாகதீபம் வைகோவா,
சூழ்ச்சிக்காரக் கருணாநிதியா, அப்பாவியான வாக்காளர்களா
என்றெல்லாம் பாரபட்சமே கிடையாது. எல்லாரையும் அழித்துவிடும்.
தமிழ்நாட்டை அழிக்க வடக்கே கல்பாக்கத்திலும் தெற்கே
கூடகுளத்திலும் அமைந்துள்ள அணு உலைகளே போதுமானவை.
பெரும் விபத்துக்குள்ளான அணு உலையிலிருந்து 140 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள டோக்கியோவில் கதிரியக்க அளவு 20 மடங்கு
அதிகமாகிவிட்டது. சென்னைக்கும் கல்பாக்கத்துக்கும் இடையில்
வெறும் 80 கிலோமீட்டர்தான். சென்னையில் சுனாமி வந்தபோது
கல்பாக்கம் உலையும் பாதிக்கப்பட்டது. பெரிய பாதிப்பு இல்லாததால்
தப்பித்துக் கொண்டோம். ஜப்பான் உலைக்கு நேர்ந்தது போல இங்கே
நேர்ந்தால் இப்போது இதை எழுத நானும் படிக்க நீங்களும் இருக்க
மாட்டோம்.
அணு உலையில் பெரும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக சில
லட்சம் பேரும் மெல்ல மெல்ல புற்று நோயில் மேலும் பல லட்சம்
பேரும் அழிவது நிச்சயம். அது பல தலைமுறைகளுக்கு நிலம், நீர்,
காற்று, மனிதர்களை நாசமாக்குகிறது. அணுக் கழிவுகளிலிருந்து
கதிரியக்கம் ஏற்படாமலும் பரவாமலும் கட்டுப்படுத்தி வைக்க
போதுமான தொழில்நுட்பம் உலகில் எங்கேயும் இன்னமும் நூறு
சத விகித உத்தரவாதத்துடன் உருவாக்கப்படவே இல்லை. விபத்து
ஏற்படாது என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது. ஏற்பட்டால் தீர்வுகள்,
நிவாரணங்கள் சாத்தியமும் இல்லை.
விபத்துக்கு பயந்தால் முன்னேற முடியாது என்று அப்துல் கலாம்
சொல்கிறார். விபத்துக்கு பயப்படாமல், அவர் கன நீரில் முகம்
கழுவி, யுரேனியம் படுக்கையில் படுத்து ஆராய்ச்சி செய்து மேடம்
கியூரியைப் போல நோபல் வாங்கிக் கொள்வதில் நமக்கு ஒரு
ஆட்சேபமும் இல்லை.ஆனால் ஒரு மக்கள் சமூகத்தையே அவர்கள்
சம்மதம் இல்லாமல் ஆபத்துக்கு உட்படுத்த மன்மோகனுக்கோ
கலாமுக்கோ எந்த அரசுக்குமோ துளிக் கூட உரிமை கிடையாது.
ஆனால் கூடங்குளத்தில் அதைத்தான் செய்கிறார்கள்.
எல்லாம் மின்சாரத்துக்காக என்கிறார்கள். அணு உலையின் மூலம்
ஒருபோதும் நம் மின் தேவை நிறைவேறவே போவதில்லை. அணு
உலை ஆதரவு தரப்பில் சொல்லப்படும் முழுப் பொய்கள், அரை
உண்மைகள், திசை திருப்பும் பிரசாரங்கள் எல்லாவற்றுக்கும் இந்த
சிறு தொகுப்பில் பதில்கள் உள்ளன.
ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப வருடக்கணக்காக
சொல்லவேண்டிய அவசியம் இருப்பது ஒரு எழுத்தாளனுக்கு
கொடுமையான விஷயம். அணு உலைகளுக்கு எதிராக நான்
எழுதி வருவதற்கு இது வெள்ளி விழா ஆண்டு ! எனக்கும் இருபது
வருடங்கள் முன்னாலிருந்தே இந்தியாவில் எண்ணற்ற அறிஞர்கள்,
பத்திரிகையாளர்கள், அமைப்புகள் இதைச் செய்து வருகிறார்கள்.
என்னை வழிப்படுத்தியவர்கள் அவர்கள்தான். பிரஃபுல் பித்வாய்,
தீரேந்திர சர்மா, கிளாட் ஆல்வாரிஸ், எம்.வி.ரமணா, மோகன் சர்மா,
பி.கே.சுந்தரம், சுப்பாராவ், தமிழகத்தில் பூவுலகின் நண்பர்கள்,
புனே, டெல்லி, திருவனந்தபுரம் என்று பல ஊர்களில் இருக்கும்
அணு எதிர்ப்பு இயக்கங்கள், அவற்றுக்கு உதவி வரும் விஞ்
ஞானிகள் என்று நீளும் பட்டியலில் உள்ள பலரும் வருடக்கணக்கில்
திரட்டித் தந்திருக்கும் தகவல் களஞ்சியத்திலிருந்தும், சம கால
உலகளாவிய நடப்புகளிலிருந்தும் எடுத்த ஒரு கரண்டி சத்துணவே
இந்த தொகுப்பு.
இதை தமிழக மக்களுக்கு என் பிறந்த நாள் பரிசாக அளிப்பதில்
மகிழ்ச்சியடைகிறேன்.
அன்புடன்
ஞாநி
ஜனவரி 4, 2012
சென்னை 78

நன்றி :
ஞாநி (http://gnani.net)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 03, 2012 1:52 pm

கரப்பான் பூச்சியாக மாறுவதா? ஏன்? எதற்கு?

சென்னையில் அணு எதிர்ப்பு இயக்கத்தை 1986ல் நடத்திய
நானும் நண்பர்களும் அப்போது உங்களால் கரப்பான் பூச்சி ஆகமுடியுமா என்ற தலைப்பில் ஒரு பிரசாரப்படம் எடுத்தோம். காரணம் கரப்பான் பூச்சிதான் கதிரியக்கத்தில் அழியாதது என்று அப்போது நாங்கள் அறிந்து வைத்திருந்தோம். காஃப்காவின் உலகப் புகழ் பெற்ற மெடமார்ஃபசிஸ் கதையின் கதாநாயகன் பூச்சியாக மாறிவிடுகிறான். அது போல் நாம் எல்லாரும் கரப்பான் பூச்சிகளாக மாறமுடிந்தாலொழிய அணுக் கதிர் வீச்சிலிருந்து தப்பமுடியாது என்று அப்போது சொன்னோம்.

உண்மையில் கரப்பான் பூச்சிக்கு மனிதனை விட கதிரியக்கத்தை
தாங்கும் சக்தி பதினைந்து மடங்கு அதிகமாக இருக்கிறது. அதை
விட அதிக தாங்கும் சக்தி உள்ளது ப்ரூட் ஃப்ளை எனப்படும் ஈ !

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 03, 2012 1:53 pm

கரப்பான் பூச்சி, ஈக்களை விட கதிரியக்கத்தை தாங்கும் சக்தி
உள்ளது ஏதாவது உண்டா?

ஒரு பாக்டீரியா இருக்கிறது அதன் பெயர் டைனோகாக்கஸ்
ரேடியோடியூரான் ! இது கதிரியக்கம் அதிகமாக இருக்கும் இடத்தில்
கூட தழைக்கக்கூடியது. கதிர்வீச்சைத் தாங்கும் சக்திக்காக இது
கின்னஸ் ரிகார்டில் இடம் பெற்றிருக்கிறது.

டைனோகாகஸை 1956ல் தற்செயலாகக் கண்டுபிடித்தவர்
விஞ்ஞானி ஆண்டர்சன் இறைச்சியை கதிரியக்கத்தின் மூலம்
பதப்படுத்திவைக்கும் சோதனையின்போது பல நாள் கதிர் வீச்சுக்குப்
பிறகும் அந்த இறைச்சியிலேயே உருவாகியிருந்த பாக்டீரியாதான்
டைனோகாகஸ் ரேடியோடியுரான். இதையடுத்து இந்த பாக்டீரியாவைப் பயன்படுத்தி கதிர்வீச்சுள்ள பொருட்களின் கதிரியக்கத்தை அழிக்கவோ குறைக்கவோ முடியுமா என்று ஆராய்ந்தார்கள். அணு ஆயுதத் தயாரிப்பில் வரும் கழிவுகளில் இருக்கும் மெர்க்குரியை கரைக்க மட்டும் இது பயன்பட்டது.

இந்த பாக்டீரியாவின் முழு மரபணுக் கூறுகளும் கண்டுபிடிக்கப்பட்ட
பின்னர் 2003ல் ஒரு வித்யாசமான சோதனை செய்தார்கள்.
கதிரியக்கத்தால் உயிர்கள் எல்லாம் அழிந்தால் அதன்பின்னரும் இந்த
பாக்டீரியா இருக்குமானால், இதன் வழியே எந்த தகவலையாவது
அடுத்து பரிணாமத்தில் உருவாகக்கூடிய உயிரினத்துக்கு கிடைக்க
வசதியாக வைத்துவிட்டுப் போகமுடியுமா என்பதே இந்த சோதனை.

இந்த சோதனைக்காக ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்தார்கள். அது
“இட் ஈஸ் எ ஸ்மால் வேர்ல்ட்” என்ற பாடல். 1964ல் யூனிசெஃப்
கண்காட்சியில் குழந்தைகள் அரங்குக்காக வால்ட் டிஸ்னி கம்பெனியின் தயாரிப்பில் ஷெர்மன் பிரதர்ஸ் எழுதி உருவாக்கிய அந்தப் பாடலை. மரபணுக் கூறுகளாக மாற்றி பாக்டீரியாவின் டி.என்.ஏ.வில் செலுத்திவைத்து அந்த பாக்டிரீயாவின் நூறு தலைமுறைகளுக்குப் பின்னரும் அதிலிருந்து அந்தப் பாடலைப் பிரித்தெடுக்க முடியுமா என்று முயற்சித்தார்கள். பிரித்தெடுக்க முடிந்தது! என்றாலும் இவ்வாறு அணுக் கதிர் வீச்சால் உலக உயிர்கள் அழிந்தபிறகும் எதிர்காலத்துக்கு எல்லா தகவல்களும் கிடைப்பது போல பாக்டீரியாவைப் பயன்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன.

இன்றே அணு உலைகளை அகற்ற நாம் உழைக்காவிட்டால் நாளை
நம் எதிர்கால தலைமுறைகள் மனிதர்களாகப் பிறப்பதற்கு பதில்
டைனோகாக்கஸ் ரேடியோடியுரான் பாக்டீரியாவாகப் பிறக்காமல்
போனோமே என்று வருந்தும் நிலைதான் வரும்.

“இட் ஈஸ் எ ஸ்மால் வேர்ல்ட்” ஓர் அற்புதமான பாடல். வரிகள்
இதோ :

அது சிரிப்புகளின் உலகம்..

அது கண்ணீர்த் துளிகளின் உலகம்

அது நம்பிக்கைகளின் உலகம்

அது அச்சங்களின் உலகம்

நாம் பகிர்ந்துகொள்ள இங்கே ஏராளம்

எனவே இது உணர்ந்துகொள்ளும் தருணம்

இது ரொம்ப சின்ன உலகம்.. அட

இது ரொம்ப சின்ன உலகம்.

இருப்பது ஒரே ஒரு நிலா

ஒரே ஒரு பொன்னிற சூரியன்

எல்லாரும் நணபரே என்று சொல்ல

எப்போதும் தேவை ஒரு புன்னகைதான்

மலைகள் பிரித்தாலும்

கடல்கள் விரிந்தாலும்

இது ரொம்ப சின்ன உலகம் – அட

இது ரொம்ப சின்ன உலகம்

——————————————-

இந்த சிறு நூலை வாசித்து முடித்ததும் மனதில் பல கேள்விகள் எழுவது இயற்கை. எனவே மறுபடியும் ஒரு முறை படியுங்கள். நம் கேள்விகளுக்கான பதில்கள் பல நம்மிடமே இருப்பது தெரியும். மேலும் பதில்களை தேடிச் சென்று கண்டடைய முயற்சித்தால் வெற்றியடைவோம்.

நன்றி : - ஞாநி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 03, 2012 1:58 pm

அன்பு ஈகரை உறவுகளே , மேலே உள்ள கேள்வி பதில் போன்ற ஞானி அவர்களின் கட்டுரையை நேரம் கிடைக்கும் பொது முழுவதும் படியுங்கள். முடிந்தால் இந்த சுட்டியில் " http://gnani.net/ஏன்-இந்த-உலைவெறி-அணு-உலைக " சென்று இந்த கட்டுரைக்கு வந்துள்ள பின்னூட்டங்களையும் படியுங்கள்.

நன்றி
ராஜா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Mar 03, 2012 2:24 pm

பகிர்தமைக்கு நன்றி அண்ணா
3 பக்கங்கள் நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன் நன்றி அன்பு மலர்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 03, 2012 2:27 pm

இன்று இரவு படிக்கிறேன் . நன்றி அண்ணா.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 22, 2012 3:12 pm

இதை யாருமே படிக்கவில்லையா ?!

உதயகுமார் சோறு சாப்பிட்டு விட்டு உண்ணாவிரதம் இருக்கிறார் என்று கூப்பாடு போட்ட அந்த பத்திரிக்கை. இதில் ஞானி சொல்லியுள்ள விஷயங்களை பொய் என்று நிரூபிக்க முடியுமா?!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 22, 2012 3:15 pm

இவ்ளோ இருக்கே எப்படி படிக்கிறது ராஜா சோகம்

இவரோட கட்டுரை நல்ல இருக்கும் ஆனா படிக்க நேரமில்லை கண்டிப்பா படிக்கிறேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Mar 22, 2012 4:10 pm

ராஜா wrote:இதை யாருமே படிக்கவில்லையா ?!

உதயகுமார் சோறு சாப்பிட்டு விட்டு உண்ணாவிரதம் இருக்கிறார் என்று கூப்பாடு போட்ட அந்த பத்திரிக்கை. இதில் ஞானி சொல்லியுள்ள விஷயங்களை பொய் என்று நிரூபிக்க முடியுமா?!

ஞானி அணு விஞ்ஞானி ஆ ராஜா அண்ணா ?

avatar
Guest
Guest

PostGuest Thu Mar 22, 2012 9:52 pm

உண்மை உண்மை அண்ணே ... நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Mar 22, 2012 10:48 pm

இதில் உள்ள அனைத்து பதிவுகளையும் நான் படித்துவிட்டேன். தகவல் பெட்டகம், எங்கேயுமே வலுத்தவன் சொன்னது உண்மை என்ற நிலை தான் உள்ளது. என்ன செய்வது ராஜா நம்ம அரசியல்வா(வியா)திங்க எதையாவது நம்ம தலையில் கட்டிவிட்டு ஆட்சியில இருந்து போயிடுறாங்க, அல்லல் படுவது மக்கள் மட்டுமே.....

பாக்டீரியாவால் கதிரியக்கத்தை தாங்க முடியும் என்ன தகவல் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. கரப்பான் மற்றும் ஈக்கள் வேன்டுமானால் தாங்கிக்கொள்ளலாம், ஏற்கெனவே விலைவாசி உயர்வு வறுமை போன்ற சிக்கல்களில் உழழும் மக்களுக்கு அரசு இப்படி அநீதி இழைத்தால் என்னதான் செய்வது சோகம்

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக