புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண் திருஷ்டி நீங்க Poll_c10கண் திருஷ்டி நீங்க Poll_m10கண் திருஷ்டி நீங்க Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
கண் திருஷ்டி நீங்க Poll_c10கண் திருஷ்டி நீங்க Poll_m10கண் திருஷ்டி நீங்க Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
கண் திருஷ்டி நீங்க Poll_c10கண் திருஷ்டி நீங்க Poll_m10கண் திருஷ்டி நீங்க Poll_c10 
3 Posts - 5%
prajai
கண் திருஷ்டி நீங்க Poll_c10கண் திருஷ்டி நீங்க Poll_m10கண் திருஷ்டி நீங்க Poll_c10 
2 Posts - 4%
Baarushree
கண் திருஷ்டி நீங்க Poll_c10கண் திருஷ்டி நீங்க Poll_m10கண் திருஷ்டி நீங்க Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
கண் திருஷ்டி நீங்க Poll_c10கண் திருஷ்டி நீங்க Poll_m10கண் திருஷ்டி நீங்க Poll_c10 
2 Posts - 4%
Rutu
கண் திருஷ்டி நீங்க Poll_c10கண் திருஷ்டி நீங்க Poll_m10கண் திருஷ்டி நீங்க Poll_c10 
1 Post - 2%
சிவா
கண் திருஷ்டி நீங்க Poll_c10கண் திருஷ்டி நீங்க Poll_m10கண் திருஷ்டி நீங்க Poll_c10 
1 Post - 2%
viyasan
கண் திருஷ்டி நீங்க Poll_c10கண் திருஷ்டி நீங்க Poll_m10கண் திருஷ்டி நீங்க Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண் திருஷ்டி நீங்க Poll_c10கண் திருஷ்டி நீங்க Poll_m10கண் திருஷ்டி நீங்க Poll_c10 
10 Posts - 67%
mohamed nizamudeen
கண் திருஷ்டி நீங்க Poll_c10கண் திருஷ்டி நீங்க Poll_m10கண் திருஷ்டி நீங்க Poll_c10 
2 Posts - 13%
ரா.ரமேஷ்குமார்
கண் திருஷ்டி நீங்க Poll_c10கண் திருஷ்டி நீங்க Poll_m10கண் திருஷ்டி நீங்க Poll_c10 
2 Posts - 13%
Rutu
கண் திருஷ்டி நீங்க Poll_c10கண் திருஷ்டி நீங்க Poll_m10கண் திருஷ்டி நீங்க Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் திருஷ்டி நீங்க


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 10, 2012 5:57 pm


கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே பெரிய வீடு கட்டிவிட்டார்கள். அதனால் அந்தத் தெருக்காரர்கள் எல்லாம் போகும் போதெல்லாம் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போவார்கள். அப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும். இதுதான் முக்கியம்.

சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.

சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள்.

ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.






நாம் நன்றாக இருக்கும் போதே சில சமயங்களில் எதிர்ப்பாராத விபத்தோ அல்லது உடல் நலக்கேடோ வந்து த்தொல்லை தருகிறது. நம்முடன் பழகுபவர்கள் எல்லோரும் மிக நல்ல உள்ளத்துடன் இருப்பார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்க முடியாது. சிலர் பொறாமை, வெறுப்பு போன்ற நெகடிவ் எனர்ஜியுடன் நம்முடன் பழகுவார்கள். வெளியிலிருந்து பார்க்கும் போது அவர்கள் மிக நல்லவர்கள் போலத்தான் தோன்றும்". 'கூடவே இருந்து குழி பறித்தான்' என்று சொல்வதைக்கேட்டிருக்கிறோம்

இந்த ரகத்தைச்சேர்ந்தவர்களால் அதிகமாக கண் திருஷ்டி ஏற்படுகிறது.

என் சிறுவயதில் ஒரு மேடையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. "பாரதி கண்ட கண்ணன்" என்ற தலைப்பு. பேசி முடித்தப்பின் பலர் என்னைப் பாராட்டினார்கள். மகிழ்ச்சியுடன் மேடையிலிருந்து கீழே வர, அவ்வளவுதான் .......என்ன தடுக்கியதோ தெரியவில்லை. நான் கீழே விழுந்ததுதான் தெரியும். எப்படியோ நொண்டியபடி சமாளித்து வீடு வந்து சேர்ந்தோம். அப்போது தான் இந்தக் கண்திருஷ்டிப் பற்றிப் பேச்சு வந்தது.

ஒரு முனியம்மா வந்தாள். அம்மிக்குழவியை மிக எளிதாகத் தூக்கினாள். என்னை அமர வைத்து அப்பிரதக்ஷிணமாக மூன்று முறை சுற்றினாள். அந்த மூன்றாம் சுற்றிலேயே அந்தக்குழவி தூக்கமுடியாதபடி பளுவானது. அந்த முனியம்மா மூச்சைப்பிடித்தபடி அதைத்தூக்கி பின் திருஷ்டி கழித்தாள். இதை நான் நேரில் பார்த்தபோது கண்திருஷ்டி என்ற ஒன்றும் இருக்கிறது என தெரிந்துகொண்டேன்.

திருஷ்டி பட்டிருக்கிறது என்று எப்படிக் கண்டுப்பிடிப்பது ?

திருஷ்டிப்பட்டவர் உடலில் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி வரும். எந்த வேலையிலும் மனம் லயிக்காது. எதாவது புது உடை அணிந்தால் அது ஆணி மாட்டிக்கிழியலாம். சில சமயம் அதில் எதாவது கருப்புக்கறை படலாம். தூக்கம் அதிகமாகலாம் சப்பாடு பிடிக்காமல் போகலாம்.

திருஷ்டிக்கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டிச் சுற்றிக்கொள்பவரைவிட வயதில் மூத்தவராக இருந்தல் அவசியம். திருஷ்டிக்கழிக்க கடல் நீர் மிகவும் ஏற்றது. அதுவும் அமாவாசையில் கடல் நீரால் கழிக்க நல்ல பலன் உண்டாகும். வீட்டில் எல்லா முக்குகளிலும் இந்தக்கடல் நீரைத்தெளித்துப்பின், சாம்பிராணிப் புகையோ அல்லது ஊதுவத்தியோ உபயோகிப்பது நல்லது.

திருஷ்டிக் கழிப்பதில் பல வகைகள் உண்டு. திருஷ்டிக்கழிப்பவர் கல் உப்பைக் கையில் வைத்தபடி மூன்று முறை அப்பிரதக்ஷிணமாய் சுற்றி பின் சாக்கடையில் போடலாம். ஒருவரும் இதற்குக் கிடைக்கவில்லை என்றால், நமக்கு நாமே செய்துக்கொள்ளலாம். இரண்டாவதாக எலும்மிச்சம் பழத்தை வெட்டி, நடுவில் குங்குமம் தடவி இரண்டு கைகளிலும் வைத்துக்கொண்டு வலது பக்கமாக மூன்றுதரம் சுழட்டி பின் இடதுப்பக்கமாக மூன்றுதடவை சுழட்டி அந்த எலுமிச்சைப் பழங்களை ஒருவர் காலிலும் படாதபடி எதாவது புதர்ப்பக்கம் வீசிப்போடலாம். அடுத்ததாக இதற்கு உபயோகப்படுவது பூசனிக்காய். பூசனிக்காயின் நடுவில் குங்குமம் வைத்து, அமாவாசை அல்லது ஞாயிற்றுக்கிழமை உச்சிவேளையில் அந்தப் பூசனிக்காயினால் சுற்றி நான்கு சாலை கூடுமிடத்தில் உடைத்துவிடுவது திருஷ்டியைப்போக்கும்.

சிலர் திருஷ்டி வராமல் இருக்க யானைவால்முடி அணிவார்கள். சிலர் காசி பைரவகயிறும் அணிவார்கள். வீட்டின் முன்புறம் கற்றாழைச்செடி வைப்பதும் திருஷ்டி தோஷத்தைப்போக்கும் என ஒருவர் சொன்னார்.

மஞ்சள் நிறத்திற்குத் திருஷ்டியைப்போக்கும் சக்தி உண்டாம். ஆதலால் வீட்டின் முன் புறம் இருக்கும் கேட்டில் மஞ்சள் வண்ணத்தை அடித்து வைத்தல் நல்லது.

நாம் புதிதான ஆடைக்கட்டிக்கொண்டால், அதிலும் திருஷ்டிப்படிய வாய்ப்பு உண்டு. அதனால் அதைத் துவைத்தோ அல்லது வேறுவிதமாகச் சுத்தப்படுத்தியோ வைக்க வேண்டும்.

இப்போதெல்லாம் கண்திருஷ்டி வினாயகர் என்ற படமே கிடைக்கிறது. அதிலே வீட்டில் எப்படி எந்தத்திசையில் மாட்ட வேண்டும் என்ற குறிப்பும் இருப்பதால் கவலையில்லை.
சீன வாஸ்துவின்படி வீட்டில் நுழைந்தவுடன், ஒரு நிலைக்கண்ணாடி இருப்பது இந்தத் திருஷ்டியைப் போக்க வல்லது. திருஷ்டிக்கழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதாக இருக்க வேண்டும். கிழக்குத் திசையை நோக்கி நிற்க வேண்டும். தனியாகவும் நின்று இதை ஏற்கலாம். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நின்று இதைச் செய்துக்கொள்ளலாம். நாடகம் நடத்துபவர்கள் நாடகம் முடிந்தவடன் முழு குழுவையும் மேடையில் நிற்க வைத்துப் பூசனிக்காயால் திருஷ்டிச் சுற்றுவதை இன்றும் காணலாம்.

மனிதர்கள் இடையே அன்பு அதிகமாகி பொறாமை பேராசை போன்றவைகள் ஒழிய ஒருவருக்கும் திருஷ்டியே படாது. அந்த நாள் வருமா...?






கண்ணேறுபடுதல்- கண்திருஷ்டி என்பது எல்லாவற்றுக்கும் பொதுவானது. உயர்ந்த கட்டடங்களைக் கட்டும்போதும் புது வாகனம் வாங்கினாலும் கண் திருஷ்டி யந்திரம் வைப்பது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. அதனை பொதுக்கருத்தாக எண்ணி சென்னை மாநகராட்சி கண்ணில் படும் சுவரிலெல்லாம் வண்ணமயமான காட்சிகளை வாரி இரைத்துள்ளனர். இதைக் கண்டு சென்னை மாநகரம் பெருமிதம் கொள்கிறது. குப்பைமேடுகள் திடீரென தோன்றினாலும் அதன் பின்னும் அழகிய வண்ணவண்ண காட்சிகள்! அதிலும் பல மந்திர- தந்திர- யந்திர காட்சிகள் மனநிறைவைத் தருகின்றன. இதை பிற மாநகராட்சிகள் கடைப்பிடித்தால் வாஸ்து குறைகள் அகன்றுவிடும்.

"கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது' என்பது அனுபவ பழமொழி. ஒரு நாட்டுப் புறப் பாடலைப் பாருங்கள்.

"கண்ணான கண்ணனுக்கு
கண்ணூறு பட்டுச்சுன்னு
சுண்ணாம்பும் மஞ்சளும்
சுத்தியெறி கண்ணனுக்கு
மிளகாயும் உப்பும்
வீசியெறி கண்ணனுக்கு.'

பாதம்பட்ட மண்ணெடுத்து, உப்பு, ஐந்து மிளகாய் வற்றல், சுண்ணாம்பு, மஞ்சள் இவற்றை துணியில்கட்டி, குழந்தையின் தலைக்குமேல் மூன்று முறை வலது, இடது- இடது, வலதாகச் சுற்றி, உடம்பை மேலிருந்து கீழாகத் தடவிய பின் அந்த முடிச்சை நெருப்பில் போட கண் திருஷ்டி மறைந்துவிடும் என்பது பாரம்பரிய முறை.



ஜெர்மனியில், கால்நடைகளுக்கு ஆத்மா இல்லை என்றும்; எனவே அது அந்த எஜமானர்களுக்கும் வீட்டாருக்கும் வரும் தீவினைகளையும் ஏவல்களையும் தடுத்து நிறுத்திவிடும் என்றும் நம்புகின்றனர். நாமும் சனியின் பார்வை, கெட்ட கண்திருஷ்டி விலக கருப்பு பசுவுக்கும் கருப்பு நாய்க்கும் உணவு தந்தால் தொல்லைகள் விடை கொடுக்கும்.

தீய பார்வையுடையோர் கால்நடைகளைப் பார்ப்பதால் அவற்றுக்கு நோய் உண்டாகும் என்பார்கள். பசுக்கள் திடீரென்று பால் கறப்பதைக் குறைக்கும். இதற்குப் பரிகாரமாக சங்கஞ்செடியின் முள்ளை கிளையுடன் ஒடித்து வந்து, பால் கொடுக்கும் காம்பில் தடவி மந்திரம் சொல்வார்கள். நொச்சி இலையை கிளையோடு தடவினாலும் கண் திருஷ்டி அகன்றுவிடும். இவையாவும் கால்நடை மருத்துவர்கள் உருவாவதற்குமுன் ஈடேறியவை. எப்படியாவது உயிரையும் மிருகத்தையும் காப்பாற்ற, "பட்ட கண்ணு, பாழுங்கண்ணு, கொடுங்கண்ணு, கொள்ளிக்கண்ணு ஒரு கண்ணும் படக்கூடாது; பட்டிருந்தாலும் விலகிப்போ' என ஓதுவார்கள்.

"ஓம் மாதங்கி, ஓம் பரமேஸ்வரி, பார்வதி, லட்சுமி, கொம்போடே வந்த கோமாரி, அழல் வெக்கை, சீத வெக்கை தோன்றும் எப்பேற்பட்ட வியாதியெல்லாம் நான் ஓதிய தண்ணீரோடு போகப் போக சுவாகா' என்று மந்திரம் சொல்லி மாடுகளுக்குத் தண்ணீரைப் பருகச் செய்வார்கள்.

புல்லும் தண்ணீரும் ஓதிக்கொடுக்க கால்நடை யந்திரத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த யந்திரத்தை மாட்டுத் தொழுவங்களில் எழுதி வைத்தால் மாடுகள் காணாமல் போவதில்லை. புல் மேயச் சென்ற மாடுகள் மாலையில் தொழுவம் வந்துவிடும்.

மாதர்களுக்கு...

சிலருக்கு குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் சரியாகச் சுரப்பதில்லை. திருஷ்டி ஏற்பட்டாலும் இந்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட தருணங்களில் அதற்கான எண் யந்திரத்தை வெள்ளித் தகட்டில் சிறிதாக எழுதி, இடுப்பில் தாயத்தாகக் கட்டிக் கொண்டால் திருஷ்டிகள் அகன்றுவிடும். அடிக்கடி அழுத பிள்ளையும் சுகம் பெறும். இதை வெள்ளை அட்டையில் எழுதி வைத்துக் கொண்டாலும் போதுமானது.

பிரசவ நாளில் அந்த அறையில் சிறிது பாலும் வெள்ளை சர்க்கரையும் கலந்து வைத்து, பிரசவம் முடிந்ததும் அந்தப் பாலை அரச மரத்தின் வேர் பாகத்தில் ஊற்றிவிட்டால், பிரசவகால திருஷ்டிகளிலிருந்து விடுபடலாம்.

கண்ணேறு கழித்தல் என்பது பண்டைய காலந்தொட்டே கடைபிடிக்கப்படும் மரபு. ஒருவர் நம்மைப் பொறாமையோடு பார்த்தால் நமது மனநிலையும், உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது என்பதை இன்றைய விஞ்ஞான உலகமும் ஒப்புக் கொண்டிருக்கின்றது. இதனை நம் முன்னோர்கள் திருஷ்டி தோஷம் எனக் குறிப்பிட்டார்கள். இவ்வளவு அழகாக வீடுகட்டி விட்டார்களே என்று பொறாமையுடன் யாராவது பார்த்தால், இந்த திருஷ்டி தோஷம் ஏற்படும். இதனால் நமக்கும் பாதிப்புகள் வராமல் இருக்க பூசணிக்காய் தொங்கவிடுவர். புதுவீட்டை பார்ப்பவர் கண்களில் பூசணிக்காயும் அதில் வரைந்துள்ள வடிவமும் சிறிது நேரம் படும். புதுவீட்டை முழுமையாகப் பார்ப்பதில் இருந்து அவரது கவனம் சிதறும். இதன் காரணமாக திருஷ்டிதோஷம் குறையும் என்றனர்.


கண் திருஷ்டி நீங்க பல பொருட்கள் கடைகளில் விற்கப்படுகின்றன.
கண் திருஷ்டி நீங்குவதற்காக கட்டும் பொருட்களை வீட்டிற்கு வெளியே வாசலில் தான் தொங்க விட வேண்டும்.
கண் திருஷ்டி நீக்கும் பொருட்களில் மிக முக்கியமானது "ஆகாய கருடன் கிழங்கு".
இது நாட்டு மருந்து கடைகளிலும், சந்தைகளிலும் கிடைக்கும். இதன் அளவை பொறுத்து விலை மாறுபடும்.

இதை வாங்கி(கிழங்கை சுற்றி வளர்ந்திருக்கும் வேர்களை நீக்காமல்) தண்ணீரில் கழுவி, முழுவதும் மஞ்சள் தடவி (மஞ்சள் தடவாமல், குங்குமம் வைக்காமல் இதை கட்ட கூடாது.), குங்குமம் வைத்து வீட்டிற்கு வெளியே வாசலில் கட்டினால் கண்திருஷ்டி நீங்கி விடும்.
இதை வீட்டிற்கு உள்ளே கண்டிப்பாக கட்ட கூடாது. அப்படி கட்டினால் எதிர்பாராத துன்பங்கள் நிகழும்.
கண்திருஷ்டி நீங்க, தீய சக்திகள் நீங்க, எதிரிகள் தொல்லை நீங்க.
கண்திருஷ்டி நீங்க, செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், எதிரிகள் தொல்லை, போன்ற தீய சக்திகளில் இருந்து விடுபட கீழ்க்கண்ட பொருட்களை செவ்வாய் கிழமை அன்றும் வெள்ளி கிழமை அன்றும் தலையை சுற்றி முச்சந்தியில் போடலாம்.
1. பூசணிக்காய். (முச்சந்தியில் போட்டு உடைக்க வேண்டும்.)
2. திருநீறு.
3. கல் உப்பு.
4. மிளகு.
5. மிளகாய் வத்தல்.
6. நவதானியங்கள்.
7. எலுமிச்சம் பழம்.
8. தேங்காய். (தலையை சுற்றிய பின் தேங்காயை முச்சந்தியில் போட்டு உடைக்க வேண்டும்.)
9. முட்டை. (நீங்கள் அசைவமாக இருந்தால் தலையை சுற்றிய பின் முட்டையை முச்சந்தியில் போட்டு உடைக்க வேண்டும்.)
10. கடுகு.

திருநீறு, கல் உப்பு, மிளகு, மிளகாய் வத்தல், நவதானியங்கள், கடுகு போன்றவற்றை ஒரு காகிதத்தில் பொட்டலம் கட்டி கொள்ளலாம்.

இரவில் வீட்டிற்கு வெளியே வந்து கிழக்கு முகமாக நின்று மூன்று முறை வலமாகவும், மூன்று முறை இடமாகவும், தலையை சுற்றி முச்சந்தியில் போட்டு விட்டு, திரும்பி பார்க்காமல் வீட்டிற்குள் வரவும்.

http://aanmikam.blogspot.com/

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 10, 2012 8:34 pm

பிரசன்னா அண்ணா பயனுள்ள பதிவூநன்றி
காற்றாலையை வீட்டின் வாசலில் கட்ட கூடாது என்பார்களே ஆனால் இங்கு கட்டலாம் என போட்டுருக்கே எது உண்மை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Mar 10, 2012 8:50 pm

எனக்கு அதிகம் பயனுள்ள நல்ல நயமான தகவல்.
ஏன்னா, ரொம்ப போரு என் மேல கண்ணு வக்கிறாங்க, ரொம்ப கடிதம் எல்லாம் வருது. என்னால தாங்க முடியால் இந்த அன்புத் தொல்லைகளை.


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 10, 2012 8:52 pm

எனக்கு அதிகம் பயனுள்ள நல்ல நயமான தகவல்.
ஏன்னா, ரொம்ப போரு என் மேல கண்ணு வக்கிறாங்க, ரொம்ப கடிதம் எல்லாம் வருது. என்னால தாங்க முடியால் இந்த அன்புத் தொல்லைகளை.
தாத்தா கடிதம் யார்க்கிட்ட இருந்து வருதுணு தெரிஞ்சிக்கலாமா

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Mar 10, 2012 9:19 pm

பேராண்டி, தாத்தாவுக்கு கடிதம் எங்கிருந்து வருதுன்னு கேள்வி எல்லாம் கேக்கப்படாது, எங்கிருந்து கடிதம் வர்னமோ, அங்கிருந்து கடிதம் எல்லாம் கரெக்டா வர்து.
உங்களுக்கெல்லாம் பொறாமையா இருக்கா. அதுக்கி நான் என்ன பண்ண முடியும். எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பணை வேணும் இல்லையா?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 10, 2012 9:21 pm

மாணிக்கம் நடேசன் wrote:பேராண்டி, தாத்தாவுக்கு கடிதம் எங்கிருந்து வருதுன்னு கேள்வி எல்லாம் கேக்கப்படாது, எங்கிருந்து கடிதம் வர்னமோ, அங்கிருந்து கடிதம் எல்லாம் கரெக்டா வர்து.
உங்களுக்கெல்லாம் பொறாமையா இருக்கா. அதுக்கி நான் என்ன பண்ண முடியும். எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பணை வேணும் இல்லையா?
என் மாப்ள மேல யாரும் பொறாமை படாதிங்க.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 10, 2012 9:25 pm

பேராண்டி, தாத்தாவுக்கு கடிதம் எங்கிருந்து வருதுன்னு கேள்வி எல்லாம் கேக்கப்படாது, எங்கிருந்து கடிதம் வர்னமோ, அங்கிருந்து கடிதம் எல்லாம் கரெக்டா வர்து.
உங்களுக்கெல்லாம் பொறாமையா இருக்கா. அதுக்கி நான் என்ன பண்ண முடியும். எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பணை வேணும் இல்லையா?
தாத்தா பாட்டிக்கிட்ட சொல்லவா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 10, 2012 9:26 pm

//வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது. //

பொதுவாக வாழை 'தாயைக்கொன்றான் ' அதை வாசலில் வைக்கக்கூடாது, புழக்கடை இல் வைக்கணும் என்று தான் சொல்வார்கள், நீங்க இப்படி சொல்கிறீர்கள், எது சரி ? கொஞ்சம் விளக்குங்கள் பிளீஸ் புன்னகை

நிறைய தகவல்கள் கொடுத்திருக்கிங்க ரொம்ப நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 10, 2012 9:27 pm

மாணிக்கம் நடேசன் wrote:பேராண்டி, தாத்தாவுக்கு கடிதம் எங்கிருந்து வருதுன்னு கேள்வி எல்லாம் கேக்கப்படாது, எங்கிருந்து கடிதம் வர்னமோ, அங்கிருந்து கடிதம் எல்லாம் கரெக்டா வர்து.
உங்களுக்கெல்லாம் பொறாமையா இருக்கா. அதுக்கி நான் என்ன பண்ண முடியும். எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பணை வேணும் இல்லையா?

புன்னகை அது சரி சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 10, 2012 9:28 pm

கிறிஷ்ணம்மா அக்கா கற்றாலையை வீட்டின் வாசலில் தொங்க விடலாமா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக