|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!by krishnaamma Today at 9:10 pm
» வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!
by யினியவன் Today at 9:07 pm
» அதே சிரிப்பு!
by Muthumohamed Today at 9:07 pm
» ஒரு பக்க கதை: பாஸிடிவ்!
by Muthumohamed Today at 9:05 pm
» பாசம் என்னும் ப்ரணவம்!
by Muthumohamed Today at 9:04 pm
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by T.N.Balasubramanian Today at 8:54 pm
» அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!
by krishnaamma Today at 8:52 pm
» இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது
by mohu Today at 8:43 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by பூவன் Today at 8:40 pm
» இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 24-5-2013
by krishnaamma Today at 8:35 pm
» தேவைதானா இது உங்களுக்கு?
by Muthumohamed Today at 8:27 pm
» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by krishnaamma Today at 8:27 pm
» திருச்சி,புதுகோட்டை, காரைகுடி பகுதிகளில் பலத்த மழை
by Muthumohamed Today at 8:27 pm
» உப்புமா வகைகள் - இட்லி உப்புமா
by krishnaamma Today at 8:19 pm
» சிரிப்பு + புன்னகை = சிறப்பு
by krishnaamma Today at 8:18 pm
» படிக்க மாட்டேன்!
by krishnaamma Today at 8:16 pm
» அப்பாவின் மனசு!
by krishnaamma Today at 8:08 pm
» வாழ்வு...
by Muthumohamed Today at 7:46 pm
» என் அறிமுகம்!!
by Muthumohamed Today at 7:43 pm
» முகநூலில் ரசித்தவை-2
by ஜாஹீதாபானு Today at 7:37 pm
» முருகனின் பிறந்த நாள்!
by krishnaamma Today at 7:08 pm
» என்னுள் உன் நினைவுகள்...!
by ஜாஹீதாபானு Today at 7:02 pm
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by பூவன் Today at 6:43 pm
» “கர்ப்பம்”
by thilaga Today at 4:24 pm
» காதல் ...காதல் ...
by பூவன் Today at 4:08 pm
» ஊமையாக அழுகிறது என் உள்ளம்...
by Pakee Today at 3:45 pm
» நேசிப்போம்...
by Pakee Today at 3:42 pm
» துயரோடு வாடி நின்றே !!
by பூவன் Today at 3:31 pm
» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Today at 3:31 pm
» மழலை
by Pakee Today at 3:27 pm
» என் நினைவு மட்டும் கனவாக...
by Pakee Today at 3:21 pm
» நீ என் உலக அழகியடி...
by Pakee Today at 3:21 pm
» காதல்...
by Pakee Today at 3:20 pm
» ஆறாம் அறிவு.
by Pakee Today at 3:18 pm
» மகனாக வந்தவன்!
by Pakee Today at 3:12 pm
» நட்பால் இணைந்த உறவு , (படித்ததில் பிடித்த கதை )
by Pakee Today at 3:10 pm
» குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!
by யினியவன் Today at 3:09 pm
» இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
by சிவா Today at 2:40 pm
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Today at 2:31 pm
» வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை ....
by பூவன் Today at 2:24 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| பூவன் | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| சிவா | ||||
| krishnaamma | ||||
| ராஜு சரவணன் | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்
இங்கே மஸ்கட்டில் அந்த குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் இந்த குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் என்று நிறைய வந்து விட்டன.
விலை எல்லாம் பகல் கொள்ளையாக இருந்தாலும் உட்கார இடம் கிடைப்பதில்லை. செலவு பண்ணுகிற சோர்ஸ்களைத் தேடி அலைகிற ஜனங்கள் நிறைய ஆகி விட்டார்கள்.
இது மாதிரி ஓட்டல்களில் கல்யாணம் ஆகாத விடலைப் பையன் – பெண் காம்பினேஷன்களை நிறைய பார்க்க முடிகிறது. அவர்கள் ஒரணா பெறாத விஷயங்களைக் கிறக்கத்துடன் பேசுகிறார்கள். ஒருத்தருக்கொருத்தர் ஊட்டி விடுகிற ரசாபாசங்களைச் செய்கிறார்கள். ஊடல்கள், சிணுங்கல்கள், வாடா – போடா விளிப்புகள்…….
நான் எழுத வந்தது அதை இல்லை. வேறொரு முக்கியமான வயிற்றெரிச்சலைப் பகிர்ந்து கொள்ளத்தான் இந்தப் பதிவு.
சென்னையில் மிகவும் பிரேபலமான ஹோட்டலின் ஓமன் கிளை அது. (நம்ம கிளை வேற)
சூப்பர்வைசர்கள் தவிர மீதி எல்லாரும் கோர்காலாண்ட், அஸ்ஸாம் பக்கத்திலிருந்து வந்தவர்கள். ரோபாட் மாதிரி சொன்ன வேலையைச் செய்கிறார்கள்.
மெனு கார்டில் இட்லி, பூரி, பொங்கல் மாதிரி பழகின பெயர்கள் எதுவும் இல்லை.
கல் தோசை என்று ஒரு ஐட்டம் இருந்தது.
மற்ற தோசையை எல்லாம் எதில் செய்கிறார்கள்?
ரெண்டு தோசை இருபத்தாறு ரூபாயாம். அடேடே அப்படி ஒன்றும் கிராக்கியாக இல்லையே…..
சரிதான் என்று ஆர்டர் செய்தேன்.
ரொம்ப ஜபர்தஸ்தாக ஆர்டரை பிளாக் பெரியில் பதிவு செய்து கொண்டார்கள்.
கொஞ்ச நேரத்தில் சீனாக்காரி மாதிரி இருந்த ஒரு குட்டைப் பாவாடைப் பெண் தோசையைக் கொண்டு வந்தாள்.
புளிச்ச மாவில் வார்த்த மாவு தோசை.
தட்டில் ரெண்டு தோசை மட்டுமே இருந்தது. சட்டினி சாம்பார் ஒரு இழவும் இல்லை.
சரிதான் கொண்டு வருவார்கள் என்று காத்திருந்தால், பதினைந்து நிமிஷமாகியும் எதுவும் வரவில்லை.
கொஞ்ச நேரத்தில் அதே சீனாக்காரி எதிர் சீட் ஆட்களுக்கு லாரியில் அடிபட்ட கோழி மாதிரி ஒரு சிவப்புக் கூழைக் கொண்டு வந்தாள்.
“என்னம்மா, தொட்டுக்கற ஐட்டம் ஹோட்டல் மூடறதுக்குள்ள வந்துடுமா?” என்று கேட்டேன்.
நான் ஏதோ கெட்ட வார்த்தை பேசினது மாதிரி தலையைக் குனிந்து சிரித்தாள்.
எரிச்சலாகி சூப்பர்வைசரை அழைத்தேன்.
“என்னங்க இது, செந்தில் கிட்ட ஆர்.சுந்தரராஜன் வெறும் இட்லி வாங்கிட்டு வரச் சொன்ன மாதிரி வெறும் தோசையைக் கொண்டு வந்து வச்சிருக்கீங்க… தொட்டுக்க ஒண்ணும் கிடையாதா?”
“டிஷ் தனியா ஆர்டர் பண்ணனும் சார்”
“கிழிஞ்சது கிருஷ்ணகிரி”
மெனு கார்டை வாங்கிப் பார்த்தால் எல்லா டிஷ்ஷும் எழுபது ரூபாய், எண்பது ரூபாய்க்கு மேலே!
செட்டினாடு ஸ்பெஷல் வெஜிடபிள் க்ரேவி என்கிற சமாச்சாரத்தை ஆர்டர் செய்தோம்.
மினியேச்சர் முதியோர் தாழி மாதிரி இருந்த ஒரு வாணாவில் கொண்டு வந்தார்கள்.
சுடப் பண்ணின நேற்றைய கத்தரிக்காய் ரசவாங்கி மாதிரி இருந்தது.
சுண்டைக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம் என்கிற மாதிரி, இருபத்தாறு ரூபாய் தோசைக்கு அறுபத்தொன்பது ரூபாய் டிஷ்!
இதைப் பார்த்து, நம்முடைய மிடில் கிளாஸ் ஹோட்டல்கள் கெட்டுப் போகிற அபாயம் இருக்கிறது.
இட்லி பதினைந்து ரூபாய், சட்டினி நாலு ரூபாய், சாம்பார் எட்டு ரூபாய் என்றெல்லாம் அவர்கள் மாறினால்,
என் மாதிரி சாமானியர்கள் கதை கந்தல்.
அடுத்த தரம் இந்த மாதிரி ஹோட்டல்களுக்குப் போகிற போது ஒரு மிளகாய்ப் பொடி பொட்லமும், கொஞ்சம் எண்ணையும் எடுத்துப் போக உத்தேசம்.
உங்கள் அனுபவம் எப்படி?

பாலாகார்த்திக் |

balakarthik- வழிநடத்துனர்
- பதிவுகள்: 21361
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 1547

Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்
அட ரொம்ப தான் நொந்திருக்கீங்க..
இதெல்லாம் இப்போது பேஷனாகிவிட்டது.. சைடு டிஷ் கலாச்சாரம்...

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9206
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1959
Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்
அதவிட கொடுமை சப்பாத்தி பரோட்டா வெறும் அம்பது பைசாத்தான் (Baiza) ஆனால் அதுக்கு தொட்டுக்கொள்ளும் கிரேவி 1 Rial

பாலாகார்த்திக் |

balakarthik- வழிநடத்துனர்
- பதிவுகள்: 21361
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 1547

Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்
ஆரம்பத்தில் எல்லாருக்கும் அதிர்ச்சிய்கதான் இருக்கும் போக போக பழக்கியா வேண்டியதா போயிற்று..!
இங்கவும் தான் சப்பாத்தி 10 ரூபா என்றால் குருமா 40 கொடுக்க வேண்டிய நிலைமை இங்க சாதாரண ஹோட்டலிலில் இதே நிலைமை தான்..!
இங்கவும் தான் சப்பாத்தி 10 ரூபா என்றால் குருமா 40 கொடுக்க வேண்டிய நிலைமை இங்க சாதாரண ஹோட்டலிலில் இதே நிலைமை தான்..!

அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 11302
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 1249
Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்
நொந்தவனுக்கு சென்ற இடமெல்லாம் நூலும் நூடுல்சும் தான் போலிருக்கே?
ஆகா என்ன கொடுமை இது என்ன கொடுமைன்னு பாடிட்டே
வெறும் வயித்த தடவிட்டு வரணும் போலிருக்கே?
மொளகாப் பொடிய கொண்டு போறது நல்ல ஐடியா அநியாய
பில்ல பாத்துட்டு அவங்க கண்ணுல தூவிட்டு எஸ் ஆயிடலாம்.
ஆகா என்ன கொடுமை இது என்ன கொடுமைன்னு பாடிட்டே
வெறும் வயித்த தடவிட்டு வரணும் போலிருக்கே?
மொளகாப் பொடிய கொண்டு போறது நல்ல ஐடியா அநியாய
பில்ல பாத்துட்டு அவங்க கண்ணுல தூவிட்டு எஸ் ஆயிடலாம்.

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20620
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4330
Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்
கொலவெறி wrote:மொளகாப் பொடிய கொண்டு போறது நல்ல ஐடியா அநியாய பில்ல பாத்துட்டு அவங்க கண்ணுல தூவிட்டு எஸ் ஆயிடலாம்.
அவுங்க தல ரசிகரா இருந்தா பரவா இல்லை ஒருவேளை தளபதி ரசிகரா இருந்தா புல்லா கட்டிடுவாங்களே

பாலாகார்த்திக் |

balakarthik- வழிநடத்துனர்
- பதிவுகள்: 21361
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 1547

Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்
தளபதி ரசிகர்ன்னா நாம கில்லியா எகிறிடுவோம்.balakarthik wrote:கொலவெறி wrote:மொளகாப் பொடிய கொண்டு போறது நல்ல ஐடியா அநியாய பில்ல பாத்துட்டு அவங்க கண்ணுல தூவிட்டு எஸ் ஆயிடலாம்.
அவுங்க தல ரசிகரா இருந்தா பரவா இல்லை ஒருவேளை தளபதி ரசிகரா இருந்தா புல்லா கட்டிடுவாங்களே

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20620
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4330
Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்பே இதுபோல் எனக்கு அனுபவம், நம்ம ஊர் இட்டலி தோசையில் அல்ல, பஞ்சாபி தாபா என்கிற நெடுஞ்சாலைகளில் உள்ள வட நாட்டவர் ஓட்டலில் கிடைத்தது. நல்ல தாபா வாகத் தெரிகிறதே என்று காரை நிறுத்திவிட்டு உள்ளே போய் அமர்ந்தாவுடன் நல்ல வரவேற்பு, மோர் சாப்பிடுங்கள், ஷர்பத் வேண்டுமா என்று. கடுமையான வெய்யிலில் உள்ளே சென்றவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்துடன் பார்க்க....இதற்கு காசு வேண்டாம் , ப்ரீதான் என்றார்கள். குடித்துவிட்டு புல்கா எவ்வளவு என்று கேட்டோம்? ஒரு ரூபாய்க்கு இரண்டு என்று பதில் வந்தது. மிகுந்த ஆச்சரியத்துடன் சரி எங்களுக்கு பத்து புல்கா ரொட்டிகள் வேண்டும் என்றோம். பின்பு டால் பிறையின் விலையைக் கேட்டு சற்று அதிர்ச்சி. அடுத்து எக்கு பிறை , சிக்கன் பிறை, மாட்டான் பிரையின் விலையில் மயக்கமே வந்து விட்டது. வேறு வழி இல்லாமல் இரண்டுபேர்க்கு 200 ரூபாய் மேல் கொடுத்துவிட்டு (15 வருடங்கள் முன்பு) உண்மையான வயிற்று எரிச்சலுடன் காரை ஒட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4606
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்
இரண்டுபேர்க்கு 200 ரூபாய் மேல் கொடுத்துவிட்டு (15 வருடங்கள் முன்பு) உண்மையான வயிற்று எரிச்சலுடன் காரை ஒட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். சோகம்
அதனால்தான் ஐயா தங்கள் அனுபவசாலியாக உள்ளீர்கள் .

கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 3424
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 510
Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்
மக்கள் ஓட்டல்களை தேடிப்போவதன் விளைவு தான் இதெல்லாம். வீட்டுல ஒழுங்கா சமைச்சி கொடுத்தா இல்ல சமைச்சிக்கிட்டா என்னவாம் 

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9206
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1959
Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்
பாஸ்கின் ராபின்ஸ் ஐஸ் கிரீம் பரோடாவில் அறிமுகம் செய்த சமயம்.
ஜோஷி என்ற நண்பர் ஒரு குறிப்பிட்ட ஐஸ் கிரீம் சுட்டிக்காட்டி ஒன்றின் விலை என்ன என கேட்க, கடைக்காரர் One seventyfive என கூறி இருக்கிறார்.
நண்பர், அவர் மனைவி, இரு குழந்தைகள் ஒவ்வொரு ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டு "விலை அதிகம்தான் ,ஆனாலும் நன்றாக இருந்தது " என்று கூறி 300/- ரூபாய் கொடுக்க, கடைக்காரர் 175 x 4 =700 என்று விளக்கிக் கூற, நண்பர் பாவம். அந்த கடைப் பக்கம் போவதையே நிறுத்தி விட்டார்.
ரமணியன்.

T.N.Balasubramanian- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள்: 2243
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 426
Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்
ஒன் அன்றட் அன்டு செவன்டி ப்பய்வ் என்று சொல்லியிருந்தால் தான் சரி.....T.N.Balasubramanian wrote:பாஸ்கின் ராபின்ஸ் ஐஸ் கிரீம் பரோடாவில் அறிமுகம் செய்த சமயம்.
ஜோஷி என்ற நண்பர் ஒரு குறிப்பிட்ட ஐஸ் கிரீம் சுட்டிக்காட்டி ஒன்றின் விலை என்ன என கேட்க, கடைக்காரர் One seventyfive என கூறி இருக்கிறார்.
நண்பர், அவர் மனைவி, இரு குழந்தைகள் ஒவ்வொரு ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டு "விலை அதிகம்தான் ,ஆனாலும் நன்றாக இருந்தது " என்று கூறி 300/- ரூபாய் கொடுக்க, கடைக்காரர் 175 x 4 =700 என்று விளக்கிக் கூற, நண்பர் பாவம். அந்த கடைப் பக்கம் போவதையே நிறுத்தி விட்டார்.
ரமணியன்.

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9206
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1959
Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்
அசுரன் wrote:ஒன் அன்றட் அன்டு செவன்டி ப்பய்வ் என்று சொல்லியிருந்தால் தான் சரி.....
அவரு என்ன செக் புக்கா எழுத்தாராறு

பாலாகார்த்திக் |

balakarthik- வழிநடத்துனர்
- பதிவுகள்: 21361
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 1547

Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்
பாலா கார்த்திக் அண்ணா ,
கடந்த சனிக்கிலமை கோடம்பாக்கதில் உள்ள பூட் கோர்ட் சென்றேன். (பலய லீபெர்டி தியேட்டர் அருகில் உள்ளது) ஏதோ ஒரு ஃப்ரைடு ரைஸ் ஆர்டர் செய்தேன் , அவன் அதனுடன் கேட்சுப் மட்டும் கொடுதான் (அதுவும் ஒரு பாக்கெட் தான்) அந்த ரைஸ் மகா மட்டம் வேறு வழி இல்லாமல் ஒரு கிரேவி ஆர்டர் செய்து சாப்பிட்டேன்
மொதம் 500 ரூபா பில் போட்டான்

வின்சீலன்- இளையநிலா

- பதிவுகள்: 698
சேர்ந்தது: 03/08/2011
மதிப்பீடு: 69
Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்
balakarthik wrote:அதவிட கொடுமை சப்பாத்தி பரோட்டா வெறும் அம்பது பைசாத்தான் (Baiza) ஆனால் அதுக்கு தொட்டுக்கொள்ளும் கிரேவி 1 Rial
அதனால் தான் வட இந்தியர்கள் இட்லி , வடை சாப்பிடும்போது, நம்ப சம்பாரை ஊற்றிகுடிப்பார்கள் பார்த்தது இல்லையா?
எங்க வீட்டுக்கு சாப்பிட வந்தாலும், பக்கெட்டில் சாம்பார் செய்ய சொல்வார்கள்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 13351
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 1195
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum