புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Poll_c10அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Poll_m10அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Poll_c10அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Poll_m10அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Poll_c10அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Poll_m10அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Poll_c10அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Poll_m10அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Poll_c10அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Poll_m10அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Poll_c10அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Poll_m10அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)


   
   

Page 2 of 2 Previous  1, 2

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 9:28 pm

First topic message reminder :

கிணற்றுத் தண்ணீர் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருப்பது ஏன்?

தரைமட்டத்திற்குக்
கீழே சுமார் 50-60 அடி ஆழத்தில் கிணற்று நீர் கிடைக்கிறது. மண் அரிதில்
வெப்பக்கடத்தி; எனவே கிணற்றின் ஆழத்தில் உள்ள நீர், ஏறக்குறைய 20-25 செ.கி.
வெப்பநிலையில் எப்போதும் இருக்கிறது எனலாம். கிணற்றின் வெளிப்புற வெப்பம்
பருவ காலங்களுக்கு ஏற்ப மாறுதல் அடையும். குளிர் காலத்தில் சில
பகுதிகளின் சுற்றுச்சூழல் வெப்பநிலை 4-5 செ.கி. அளவுக்கும் செல்வதுண்டு;
அந்நிலையில் கிணற்றுநீர் 20-25 செ.கி. அளவில் இருப்பதால், அது
வெதுவெதுப்பான நீராக உணரப் பெறுகிறது. இதற்கு நேர்மாறான நிலை
கோடைக்காலத்தில் உண்டாகிறது. கோடையில் சில பகுதிகளின் வெப்பநிலை 40-45
செ.கி. அளவில் இருப்பதை நாம் அறிவோம். அக்காலங்களிலும் கிணற்றுநீர் 20-25
செ.கி அளவில் இருப்பதால், சுற்றுச்சூழல் வெப்பநிலையோடு ஒப்பிடுகையில்,
கிணற்றுநீர் குளிர்ந்த நீராக நம்மால் உணரப் பெறுகிறது.


ரோபோ தொழில்நுட்பத்தில் இருதய அறுவை சிகிச்சை

ரோபோ உதவியுடன் இரண்டு பேருக்கு இருதய அறுவை சிகிச்சையை சென்னை
மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இருதய அறுவை சிகிச்சையில் இது
ஒரு முக்கியமான திருப்பம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரோபோ
உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையினால் நோயாளிகளுக்கு சில
வசதிகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இம்முறையை
பயன்படுத்துவதால் நோயாளிக்கு வலி குறையும் என்றும், அறுவை சிகிச்சையின்
போது விரையமாகும் இரத்தத்தின் அளவும் கட்டுபபடுத்தப்படுவதால் இது
நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த அறுவை சிகிச்சை
முறையில் சென்னையில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனை
மருத்துவர்கள் இரண்டு இளைஞர்களுக்கு இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக
நடத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையின் போது குறைந்த அளவு திசுக்களே
சேதமடைவதால் குறைந்த அளவே இரத்த விரையம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிக்கு
குறைந்த அளவே இரத்தம் செலுத்தினால் போதுமானது.

இந்த சிகிச்சை
முறையினால் குறைந்த அளவு பகுதிகள்தான் பாதிக்கப்படுகின்றன. அதனால் அறுவை
சிகிச்சையின் போது போடப்படும் தையல் உறுதியாகவும் இருக்கும் என்று இம்
மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்
தெரிவித்துள்ளார்.

விண்வெளிக் கலங்களை ஏவும்போது, இறங்குமுகமாக எண்களைக் கூறுவது ஏன் ?

விண்வெளிக்
கலங்களை ஏவுவதற்கு முன்னர் அதனுடைய எல்லா அமைப்புகளும் சரியாக உள்ளனவா
என்பதை ஐயத்திற்கு இடமின்றி அறிந்திடுவது மிக முக்கியம்; ஏதேனும் ஒரு
படிநிலையில் (stage) நிகழும் சிறு தவறும் பேரிழப்பை உண்டாக்கிவிடும். எனவே
பொறியாளர்கள் விண்கலங்களைச் செலுத்தும் முறையைப் படிப்படியாக
மேற்கொள்ளுகின்றனர். இந்தப் படிநிலைகளின் எண்ணிக்கையை 10, 9, 8, 7,
------------ 0 என இறங்குமுகமாக (count down) கணக்கிடுகின்றனர். இதில்
ஒவ்வொரு எண்ணும் ஒரு படிநிலையைக் குறிப்பதாகும். கடைசி எண்ணான பூஜ்யத்தைக்
குறிப்பிடும் போது கலம் விண்வெளியில் செலுத்தப்பட்டுவிட்டது எனப்
பொருள்படும். இந்த இறங்குமுக எண்ணிக்கையின்போது கலத்தில் ஏதேனும் தவறு
கண்டறியப்பட்டால் எண்ணுவது நிறுத்தப்பட்டு, தவறை நீக்கியபின் மீண்டும்
எண்ணுவது தொடரும். ஒவ்வொரு படிநிலையிலும் விண்கலம் சரியாக உள்ளதா என்பதை
உறுதி செய்வதற்கும், பூஜ்யத்தை அடைந்தபின் கலம் விண்ணில் வெற்றிகரமாக
செலுத்தப்பட்டது என்பதை அறியவும் இறங்குமுகமாக எண்ணும் முறை மிகச்
சிறந்ததாகக் கருதப்படுகிறது. பூஜயம் என்பது ஒரு இறுதி நிலை. மாறாக பூஜ்யம்
தொடங்கி வளர்முகமாக எண்ணத் தொடங்கினால் இறுதிநிலை என்று எந்த எண்ணைக் கூற
இயலும்; எல்லாப் படிநிலைகளும் சரிபார்க்கப்பட்டனவா என்பதை அறுதியிட்டுக்
கூற இயலாமல் குழப்பம்தான் மிஞ்சும்; எனவேதான் இறங்குமுக எண்ணிக்கை
மேற்கொள்ளப்படுகிறது.
http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=37515815&tid=2570111200205863852&na=3&npn=7&nid=37515815-2570111200205863852-5151712228176952236



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 1357389அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 59010615அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Images3ijfஅறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Images4px

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 9:40 pm

மழை பெய்யாத இடம் எது?

உலகில் பலநாடுகளிலும் பலவேறு அளவுகளில் ஒவ்ஒரு ஆண்டும் மழை பெய்து
வருகிறது.மழை அளவை பொதுவாக சென்டீமிட்டரில் கணக்கிடப்படுகிறது.உலகின் பல
பாலைவனங்களில் ஒவ்வறு ஆண்டும் 25 சென்டீமிட-க்கும் குறைவாக தான் மழை
பெய்கிறது.இந்த இடங்களில் பகலில் வெப்பம் அதிகமாகவும் இரவில் குளிர்
அதிகமாகவும் இருக்கும்
பொதுவாக பாலை வனங்களில் கள்ளி செடிகளே
பெருமளவில் காணப்படுகிறது.இந்த கள்ளிச் செடிகள் கடுமையான வறட்சியும் தாங்கி
வளரும் திரன் உடையவை.
சிலி நாட்டில் அமைந்துள்ள அடகாமா பாலைவனம்
(Atacama Desert) மிகவும் விநோதமானது இந்த பாலை வனத்தில் எந்தத் தாவரமும்
வளர்வதில்லை உலகிலேயோ மிகவும் வறட்சியான பகுதியாக இந்த பாலைவனம் கருதப்
படுகிறது.மேலும் பல ஆன்டுகளாக மழையே பெய்வதில்லையாம் சுமார் 400 ஆண்டுகளாக
மழை பெய்யாத இடமாக அடகாமா பாலைவனம் இருந்து வருகிறது என்று
ஆராய்ச்சியாளர்கள் கூறுகாறார்கள்.
உலகின் மிக பெரிய பாலைவனமாக சகாரா பாலைவனம்
(Sahra Desert)திகழ்கிறது இந்த பாலைவனம் சுமார் 84-லட்சம் சதுர கீலோமீட்டர் கொண்டதாகும்
பாலைவனம்
என்றால் வெப்ப பாலைவனங்கள் மட்டுமே என்று நினைத்து விடவேண்டாம். குளிர்
பாலைவனங்களும் உள்ளன. அன்டார்டிகா,காரீன்லாந்து,ரஷ்யாவில் வடக்கு பகுதி
போன்றவை குளிர்பாலைவனப் பிரிவைச் சேர்ந்தவை.இங்கும் மழை அளவு குறைவாகும்.
இங்கு எப்போதும் நம் முகங்களில் பனி கொட்டிக் கொண்டை இருக்கும்.இந்த பனி
நமது தலைக்கு மேலிருந்து கொட்டாது,
பூமியின் மேற்பரப்பிலிருந்து வெளிப்பட்ட பனித் துகள்களாகும்.



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 1357389அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 59010615அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Images3ijfஅறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 9:42 pm

பொய் சொன்னா தண்டனை உறுதி

'ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம்'' என்பார்கள். ஆனால் ஒரு
பொய் சொன்னாலே கண்டுபிடித்து விடுவோம் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆம்! பொய்
சொல்லி குற்றம் செய்பவர்களை கண்டுபிடிக்க புதிய கருவி ரெடியாகி விட்டது.
பொய் சொல்லி தப்பித்துக் கொள்ளுபவர்களின் முகத்தை இந்த அதிநவீன கருவி
காட்டிக் கொடுத்து விடும். இந்த கருவியைப் பற்றிய அறிவியல் தகவல்களை
பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த கருவியின் துணை
கொண்டு குற்றவாளிகளின் வாக்கு மூலத்தில் பொய் எது? உண்மை எது? என்று
கண்டறிய முடியும். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்திலுள்ள ஒரு
நிறுவனம் இந்த புதிய வகை கருவியைக் கண்டுபிடித்துள்ளது.

இதுவரை
உபயோகப்படுத்தி வருகிற போலிகிராப் (Polygraph) கருவியில் உடலிலுள்ள சில
மாற்றங்களின் மூலம் பொய் சொல்வதை கண்டறிய முடிந்தது. ஏனென்றால் பொய்
சொல்வதன் மூலம் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை கருவி ஒரு இ.சி.ஜி மெஷினைப்
போல அறிக்கை கொடுக்கிறது. இது பழைய முறை. ஆனால் இப்போதுள்ள நவீன முறையில்
பொய் சொல்வதை கண்டறியும் கருவி மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஸ்கேன்
செய்கிறது. இதனை திரையில் கண்டறிய முடியும். அதாவது பொய் சொல்பவரின்
மூளையில் சில பாகங்கள் மட்டும் அவர் அளிக்கும் தகவல் உண்மையா? பொய்யா?
என்பதைக் காட்டி கொடுத்துவிடும். எப்.எம்.ஆர்.ஐ. (FMRI & Functional
Magnetic Resonance Imaging) என்றழைக்கப்படும் இந்தக் கருவி மூளையில்
எந்தப் பகுதி கடினமாக செயல்படுகிறது? எந்தப் பகுதி அதிக ஆக்ஸிஜனை
செலவழிக்கின்றது என்பதைக் கண்டறிவதன் மூலம் பொய்யை அறிய முடிகிறது.
இக்கருவி பொருத்தப்பட்டவருடன் பேசுவதன் மூலம் அல்லது வேறு செய்கைகள் மூலம்
மூளையின் பல்வேறுப் பகுதிகள் ஸ்கேனில் ஒளிர ஆரம்பித்துவிடுகிறது.


பழைய
போலிகிராப் முறையில் ரத்தக் கொதிப்பு, இதய துடிப்பு, சுவாசம் மற்றும்
வியர்த்தல் முறையில் ஏற்படும் மாற்றங்கள் கண்டறியப்படுகிறது. இது ஒரு
இ.சி.ஜி போலவே வரைபடங்களுடன் கூடிய அறிக்கையை அளிக்கின்றது. இதன் மூலம்
பொய் சொல்வதை ஆராய முடிகிறது.



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 1357389அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 59010615அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Images3ijfஅறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 9:44 pm

மின்மாற்றி (transformer) அல்லது மின்கட்டுப்படுத்தி (electric choke)ஆகியவற்றிலிருந்து
சில சமயம் ஒலி உண்டாவது ஏன்?

மின்மாற்றி, மின்கட்டுப்படுத்தி ஆகிய இரண்டும் அடிப்படையில் ஓர் இரும்பு உள்ளகத்தைச் (Iron core) சுற்றி அமைக்கப்பட்ட கம்பிச் சுருள்களே.
உள்ளகம் என்பது மின்காப்புப் பெற்ற மெல்லிய இரும்புத் தகடுகளாலானது. சாதாரண நிலையில் மின்மாற்றி அல்லது மின்கட்டுப் படுத்தியில் மாறுதிசை மின்னோட்டம் (
AC) செல்லும்போது ஒலி ஏதும் உண்டாவதில்லை. ஆனால் உள்ளகத்தின் மெல்லிய தகடுகள் உறுதியாக இணைக்கப்படாத நிலையிலும், உள்ளகத்தைச் சுற்றியுள்ள கம்பிச் சுருள் அழுத்தமாகச் சுற்றப்படாதபோதும், தகடுகளுக்கிடையேயான மின்காப்புப் பொருள் உலர்ந்து விட்டாலும் மெல்லிய ஒலி உண்டாகிறது. முக்கியமாக கம்பிச்சுருள் ஊடே செல்லும் மாறுதிசை மின்னோட்டத்தின் அதிர்வெண்ணும் (Frequency), தளர்ந்த நிலையிலுள்ள தகடுகளின் இயல்பான அதிர்வும் ஒத்திருக்கையில் இவ்வொலி கட்டாயம் உண்டாகிறது. தகடுகளின் ஒத்ததிர்வே (Resonance) இதற்குக் காரணம்.




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 1357389அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 59010615அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Images3ijfஅறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 9:48 pm


எண்ணெய் வளம்







தரைக்கு
அடியில் 1 கிலோ மீட்டரிலிருந்து 6 கிலோ மீட்டர் வரையான பகுதியில்
காணப்படும் பிசு பிசுப்பான, குழம்பு போன்ற எண்ணெய்ப் பொருளைக் கனிம எண்ணெய்
என அழைப்பர். உலகின் இன்றைய பல கண்டுபிடிப்புகளுக்கு இந்த எண்ணெய்ப்
பொருளே மூல காரணமாய் விளங்குகிறதெனலாம். சுமார் 90% புதிய பொருட்களின்
கண்டுபிடிப்புகளுக்கு இதுவே மூலப் பொருளாக விளங்குகிறது
.
எட்வின் எல். டிராக் (Edwin L Drake)
என்ற எழுத்தறிவற்ற, வேலை ஏதுமில்லாத அமெரிக்கர் ஒருவரே 1859இல் இந்த
எண்ணெயைக் கண்டுபிடித்தவர். அவருக்கு இக்கண்டுபிடிப்புக்கான ஊக்கம்
அளித்தவர் நியூயார்க் வழக்குரைஞர் ஒருவராவார். ஜார்ஜ் எச். பிசெல் எனும்
அந்த வழக்குரைஞருக்கு, 1854ஆம் ஆண்டு குளிர்காலத்தில் பேராசிரியர் ஒருவர்
கனிம எண்ணெயின் சிறிதளவு மாதிரியைக் காட்டினார். இப்பேராசிரியர் தமது
ஆய்வுக்கூடத்தில் அம்மாதிரியைப் பயன்படுத்திச் சில பரிசோதனைகளை
மேற்கொண்டார். சோதனைக்குப் பின்னர் பேராசிரியர், "இந்த எண்ணெயைச் சரியான
முறையில் தூய்மைப் படுத்திப் பயன்படுத்தினால் நிலக்கரியிலிருந்து
எடுக்கப்படும் எண்ணெய்க்கு மாற்றாக விளக்கு எரிக்கப் பயன்படுத்தலாம்" என்று
பிசெலிடம் உறுதியாகக் கூறினார். திமிங்கில எண்ணெய், மெழுகு ஆகியவற்றின்
பற்றாக்குறை காரணமாக நிலக்கரியிலிருந்து எண்ணெய் எடுக்கும் பரிசோதனை
அக்காலத்தில் மிகுதியாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பேராசிரியரின்
கருத்துகள் பிசெல் அவர்களை வெகுவாகக் கவர்ந்தன. கனிம எண்ணெயைத் தூய்மைப்
படுத்துவதற்கான புதிய நிறுவனம் ஒன்றை அவர் நிறுவினார். இதன் விளைவாக
கெரசின் எனப்பட்ட மண்ணெண்ணெயை பீப்பாய் ஒன்றுக்கு 20 டாலர் வரை கொடுத்து
வாங்க வர்த்தகர்கள் முன்வந்தனர்.

ஆனால்
பிசெலின் முயற்சிகள் வெற்றியடையவில்லை; கையிலிருந்த பணம் எல்லாம்
செலவழிந்து விட்டது. இந்நிலையில் எட்வின் எல் டிராக் தம் முயற்சிகளைத்
தொடர்ந்தார். டிட்ஸ்வெல் என்னுமிடத்தில் எண்ணெய்க் கிணறு ஒன்றைத்
தோண்டினார். உள்ளூர் மக்கள் அவரை நையாண்டி செய்த போதிலும் அவரது முயற்சி
வெற்றி பெற்றது; ஒரு நாள் 69 அடி ஆழத்தில் எண்ணெய் வெளிப்பட்டது. எண்ணெய்
பம்பின் துணை கொண்டு டிராக் ஒவ்வொரு நாளும் 20 பீப்பாய் எண்ணெயை
வெளிக்கொணர்ந்தார்.

1867ஆம்
ஆண்டு வாக்கில் நிலக்கரி எண்ணெய்க்குப் பதிலாக, முழுதுமாய் மண்ணெண்ணெய்
பயன்படுத்தப்பட்டது. வட அமெரிக்க நாடுகளின் உள்நாட்டுப் போரின் போதும் இந்த
மண்ணெண்ணெயே பயன்படுத்தப்பட்டது. தென் மாநிலங்களில் பருத்திக்குப் பதிலாக
இந்த எண்ணெயைக் கொண்டு அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டது. சண்டைக்குப் பின்னர்
அமெரிக்காவின் தொழில்மயத்துக்கு மண்ணெண்ணெய் பேருதவி புரிந்தது. பின்னர்
அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பாவின் பல இடங்கள் ஆகியவற்றில் எண்ணெய்
கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் மத்தியக் கிழக்கில், எண்ணெய் வளப் பகுதிகள்
கண்டுகொள்ளப் படாமலே இருந்தன.

1870ஆம்
ஆண்டில் லார்ட் ராய்ட்டர் கனிமம் மற்றும் எண்ணெய்க்கான உரிமைகளைக்
குத்தகையாக பாரசீக அரசிடமிருந்து பெற்றார். ராய்ட்டரைத் தொடர்ந்து,
வில்லியம் காக்ஸ் டா உர்ச்சி இத்துறையில் நுழைந்தார். இவர் ஆஸ்திரேலியத்
தங்கச் சுரங்கங்களிலிருந்து ஏராளமாகப் பொருளீட்டியவர். இவர் இருபதாயிரம்
பவுண்டுகளைப் பாரசீக அரசுக்கு அளித்து சுமார் ஐந்து இலட்சம் சதுர மைல்
பரப்பில் எண்ணெய் எடுக்கும் உரிமையைப் பெற்றார். ரேனால்ட்ஸ் என்ற ஓய்வு
பெற்ற அரசு அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் எண்ணெய் எடுப்பதற்கு,
நிலத்தைத் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. 1904ஆம் ஆண்டு ஜனவரியில்
நிலத்தடியில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டு, அவரது முயற்சி வெற்றி பெற்றது.
ஆனால் அக்கிணற்றில் எண்ணெய் உடனடியாக வறண்டு விட்டது. இதற்குள் டா உர்ச்சி
சுமார் ஒன்றேகால் இலட்சம் பவுண்ட் பணத்தை, மத்தியக் கிழக்கு நாடுகளில்
எண்ணெய் கண்டுபிடிக்கும் முயற்சியில் செலவழித்தார். பல்வேறு
முயற்சிகளுக்குப் பின்னர் ரேனால்ட்சின் முயற்சி 1908 மே 26இல்
வெற்றியடைந்து பாரசீகத்தில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கிலோ
பெர்சியன் எண்ணெய்க் கம்பெனி என்றதொரு நிறுவனம் உருவாக்கப்பட்டது. சுமார்
130 மைல் நீளத்திற்கு எண்ணெயை எடுத்துச் செல்வதற்கான குழாய் ஒன்றைப்
புதைக்க வேண்டி இருந்ததாலும், ஒரு சொட்டு எண்ணெயைக் கூட விற்க
முடியாததாலும் கம்பெனி நட்டத்தில் இயங்கிப் பொருளாதார நெருக்கடி
உண்டாயிற்று. இந்த நிலையில் பிரிட்டனின் கப்பல் துறை அமைச்சர் வின்ஸ்டன்
சர்ச்சில் பாரசீக எண்ணெய்த் தொழிலின் கொள்கையை மறு பரிசீலனை செய்து
எண்ணெய்க்குப் பதிலாக நீராவியைக் கப்பலின் எரிபொருளாகப் பயன்படுத்த
முடிவெடுத்தார். இதனால் பாரசீகத்தின் நலிந்த எண்ணெய்த் தொழில் புத்துயிர்
பெற்றது. இதற்குள் முதல் உலகப் போரின் போது மத்தியக் கிழக்கின் எண்ணெய்த்
தொழில் புத்துயிர் பெற்று வளர்ச்சி அடைந்ததோடு, பிரிட்டனும் வலிமையடைந்தது.

இந்தியாவில் எண்ணெய்க் கண்டுபிடிப்பு
இந்தியாவின்
முதல் எண்ணெய்க் கிணறு 1866ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் நஹர் பங்க்
என்னுமிடத்தில் தோண்டப்பட்டது. ஆனால் இக்கிணற்றில் எண்ணெய் ஏதும்
கிடைக்கவில்லை. இருப்பினும் அசாமின் மகம் எனுமிடத்தில் 1867இல்
தோண்டப்பெற்ற கிணற்றில் எண்ணெய் கிடைத்தது. அசாம் இரயில்வே கம்பெனி மற்றும்
சிண்டிகேட் ஆகியன 1890-93 ஆம் ஆண்டுகளில் நான்கு எண்ணெய்க் கிணறுகளைத்
தோண்டின. இரு கம்பெனிகள் சார்பிலும் சுமார் 15 எண்ணெய்க் கிணறுகள் 1898ஆம்
ஆண்டுவரை தோண்டப்பெற்று அவை பெரும் வெற்றி பெற்றன. பின்னர் இரு
கம்பெனிகளும் ஒன்றிணைந்து அசாம் எண்ணெய்க் கம்பெனி என்ற பெயரால்
விளங்கியது. சில காலம் கழித்து 1901ஆம் ஆண்டு கச்சா எண்ணெய்
தூய்மைப்படுத்தும்சாலை ஒன்று திக்பாய் என்னுமிடத்தில் உருவாக்கப்பட்டது.
1920ஆம் ஆண்டு வாக்கில் அசாம் எண்ணெய் ஆலை 80 எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி
நாளொன்றுக்கு 14000 காலன் கனிம எண்ணெயை வெளியேற்றியது. அதே ஆண்டு பர்மா
எண்ணெய்க் கம்பெனி இதன் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டது.

1959ஆம்
ஆண்டில் குஜராத் மாநிலம் காம்பத் என்னுமிடத்தில் முதன்முதலாக எண்ணெய்
கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது காம்பத் தவிர குஜராத்தின் அங்க்லேஷ்வர்
மற்றும் கல்லோல் ஆகிய இடங்களில் எண்ணெய் எடுக்கப்படுகிறது.

இந்தியாவின்
எண்ணெய்க் கண்டுபிடிப்புக்கு, சோவியத் ஒன்றியம் பேருதவி புரிந்துள்ளது.
எண்ணெயைக் கண்டுபிடித்தல், வெளிக்கொணர்தல், தூய்மைப்படுத்தல் ஆகிய
அனைத்திலும் அந்நாடு உதவியுள்ளது. அவர்கள் கருத்துப்படி நமது நாட்டில்
தற்போது சுமார் 4 மில்லியன் டன் அளவுக்கு எண்ணெய் வளம் உள்ளது; அடுத்த 20
ஆண்டுகளில் சுமார் 150 மில்லியன் டன் எண்ணெயை நமது நாடு உற்பத்தி செய்ய
இயலும். இதற்கேற்ப பல இடங்களில் எண்ணெய் வள ஆய்வும், புதிய எண்ணெய்க்
கிணறுகள் தோண்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிற நாடுகளில் எண்ணெய் உற்பத்திப் பணிகள்
எண்ணெய்
வளத் தொழில் இராக், குவைத், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் பெரும்
முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போது உலகம் முழுதும் வட துருவம் முதல் தென்
துருவம் வரை எண்ணெய் வள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும்
மத்தியக் கிழக்கு நாடுகள் எண்ணெய் வளத்தில் மிகவும் சிறந்து விளங்குகின்றன.
மத்தியக் கிழக்கு நாடுகள் தவிர்த்து ரஷ்யா, ருமேனியா ஆகிய நாடுகளிலும்
எண்ணெய் வளம் மிகுந்திருக்கிறது. தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, நாகரீக,
பண்பாட்டு வளர்ச்சிக்கும் இது இன்றியமையாததாக விளங்குகிறது.
போக்குவரத்துக்கு மட்டுமின்றி, பிளாஸ்டிக், நைலான், டெரிலின், சிந்தெட்டிக்
பொருட்கள் ஆகிய அனைத்திற்கும் எண்ணெய் வளம் மிக, மிகத் தேவை.
எண்ணெயிலிருந்து புரதச் சத்தும் கூடத் தயாரிக்கப்பட முடியும் எனக்
கண்டறியப்பட்டுள்ளது. எனவே எண்ணெய் வளம் மனித குலத்தின் ஆக்கத்திற்குப்
பேருதவி புரியும் என்பதில் ஐயமில்லை




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 1357389அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 59010615அறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Images3ijfஅறிவியல்- செய்திகள் (உண்மைகள்)   - Page 2 Images4px
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Apr 15, 2012 7:45 pm

ஒவ்வொன்றுமே அருமை.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக