|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!by யினியவன் Today at 8:42 pm
» அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!
by krishnaamma Today at 8:41 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by பூவன் Today at 8:40 pm
» வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!
by யினியவன் Today at 8:38 pm
» இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 24-5-2013
by krishnaamma Today at 8:35 pm
» தேவைதானா இது உங்களுக்கு?
by Muthumohamed Today at 8:27 pm
» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by krishnaamma Today at 8:27 pm
» திருச்சி,புதுகோட்டை, காரைகுடி பகுதிகளில் பலத்த மழை
by Muthumohamed Today at 8:27 pm
» உப்புமா வகைகள் - இட்லி உப்புமா
by krishnaamma Today at 8:19 pm
» சிரிப்பு + புன்னகை = சிறப்பு
by krishnaamma Today at 8:18 pm
» படிக்க மாட்டேன்!
by krishnaamma Today at 8:16 pm
» அப்பாவின் மனசு!
by krishnaamma Today at 8:08 pm
» வாழ்வு...
by Muthumohamed Today at 7:46 pm
» என் அறிமுகம்!!
by Muthumohamed Today at 7:43 pm
» முகநூலில் ரசித்தவை-2
by ஜாஹீதாபானு Today at 7:37 pm
» முருகனின் பிறந்த நாள்!
by krishnaamma Today at 7:08 pm
» என்னுள் உன் நினைவுகள்...!
by ஜாஹீதாபானு Today at 7:02 pm
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by பூவன் Today at 6:43 pm
» “கர்ப்பம்”
by thilaga Today at 4:24 pm
» காதல் ...காதல் ...
by பூவன் Today at 4:08 pm
» ஊமையாக அழுகிறது என் உள்ளம்...
by Pakee Today at 3:45 pm
» நேசிப்போம்...
by Pakee Today at 3:42 pm
» துயரோடு வாடி நின்றே !!
by பூவன் Today at 3:31 pm
» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Today at 3:31 pm
» மழலை
by Pakee Today at 3:27 pm
» என் நினைவு மட்டும் கனவாக...
by Pakee Today at 3:21 pm
» நீ என் உலக அழகியடி...
by Pakee Today at 3:21 pm
» காதல்...
by Pakee Today at 3:20 pm
» ஆறாம் அறிவு.
by Pakee Today at 3:18 pm
» மகனாக வந்தவன்!
by Pakee Today at 3:12 pm
» நட்பால் இணைந்த உறவு , (படித்ததில் பிடித்த கதை )
by Pakee Today at 3:10 pm
» குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்!!!
by யினியவன் Today at 3:09 pm
» இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
by சிவா Today at 2:40 pm
» இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது
by சிவா Today at 2:34 pm
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Today at 2:31 pm
» வார்த்தைகள் தீர்ந்த வரிக்கவிதை ....
by பூவன் Today at 2:24 pm
» கல்யாணப் பாடல்கள் !
by krishnaamma Today at 2:14 pm
» திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !
by யினியவன் Today at 2:02 pm
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by Muthumohamed Today at 12:19 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by கா.ந.கல்யாணசுந்தரம் Today at 12:06 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| பூவன் | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| சிவா | ||||
| ராஜு சரவணன் | ||||
| krishnaamma | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி
Page 1 of 1 • Share •
ஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.
இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது.
உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ஸைடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
நாட்கள் காலை 6 மணி மதியம் 12 மணி மாலை 6 மணி மொத்தம் பழங்கள் 1வது நாள் 1 1 1 3 2வது நாள் 2 2 2 6 3வது நாள் 3 3 3 9 4வது நாள் 4 4 4 12 5வது நாள் 4 4 4 12 6வது நாள் 4 4 4 12 7வது நாள் 3 3 3 9 8வது நாள் 2 2 2 6 9வது நாள் 1 1 1 3
ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப் பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளாபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளாபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து அருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும். செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் இழந்த சக்தியையும், உற்சாகத்தையும் நாம் பெறலாம்.
முகநூல்

பதிவுகள்: 955039 | உறுப்பினர்கள்: 19741 | தலைப்புகள்: 95748 | புதிய உறுப்பினர்: govinthan
Contact Administrator

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65348
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4975

Re: ஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி
தகவலுக்கு நன்றி தல

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069
Re: ஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி
பயனுள்ள தகவல் , நன்றி

mohu- புதியவர்

- பதிவுகள்: 39
சேர்ந்தது: 11/01/2012
மதிப்பீடு: 13

Re: ஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி
தகவலுக்கு நன்றி தல .

DERAR BABU- தளபதி

- பதிவுகள்: 1529
சேர்ந்தது: 18/10/2012
மதிப்பீடு: 294
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








