புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
42 Posts - 63%
heezulia
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 15, 2012 11:18 pm

படித்தேன் குடித்தேன் பழமாய் சுவைத்தேன்
பழகும் விதத்தில் பூவாய்தேன்
வடித்தேன் அளித்தேன் வகையில் மாறி
வளர்ந்தேன் அறியா வளைந்திட்டேன்
அடித்தேன் உடைத்தேன் அறமும் உறவும்
எனத்தான் இல்லா இளமைத்தேன்
முடித்தேன் , முயலேன் ,முள்ளை வைத்தே
முனையேன் இனியும் முயலா,தேன்

எடுத்தேன் தமிழை இனித்தேன் சொரியும்
எனத்தான் எண்ணி அளித்தேன் சொல்
அடுத்தென் கவிகள் அனைத்தும் ஏதென்
றறியேன் அதற்கு முகமேதான்
கெடுத்தே கொள்ளா இயல்பென் கவிதை
குறைத்தேன் எனவும் குறைதோன்றா
கொடுப்பேன் கிடப்பேன் குலவும்தமிழில்
கடப்பேன் துயரம் கனியும்தேன்

இடம்தேன் தமிழின் எழில் தேன்காவென்
றுணர்ந்தேன் எதைநான் மலர்வித்தேன்
விடம்தேன் என்று வெளிவைத்தேனா
விருந்தேன் விரும்பா விளைவும் ஏன்
குடம்தேன்கொட்டக் குழவிக் கொடுக்காய்
குடைந்தே னாயின் குறைவேண்டேன்
கடந்தேன் கனலும் கடலும் குளித்தேன்
கவிதை மழையும் காணுந்தேன்

படர்ந்தேன் ஆயின் பந்தல்மீது
பிணைந்தேன் எனவே கொடியாவேன்
அடர்ந்தே மாவின் அழிகுருவிச்சை
ஆகேன் அகந்தை அகம்கொள்ளேன்
நடந்தேன் எனிலும் நல்லோர் பாதை
நடப்பேன் அன்பே நிலைகொண்டேன்
புடந்தான் இட்டோர் பொன்னாவேன் மண்
போகா இருப்பேன் பிறிதாகேன்

************


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 16, 2012 12:03 am

தமிழையும், உங்கள் செயலையும் தேனான வரிகளால் சுவையாகப் படைத்துள்ளீர்கள் அண்ணா! அன்பு மலர்



முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 16, 2012 7:17 am

முதிர்ந்(தேன்)தோன்,
மகிழ்ந்தேன் ,
வாழ்த்துக்கள். அன்பு மலர்

ரமணியன்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 16, 2012 5:52 pm

சிவா wrote:தமிழையும், உங்கள் செயலையும் தேனான வரிகளால் சுவையாகப் படைத்துள்ளீர்கள் அண்ணா! அன்பு மலர்
T.N.Balasubramanian wrote:முதிர்ந்(தேன்)தோன்,
மகிழ்ந்தேன் ,
வாழ்த்துக்கள். அன்பு மலர்

ரமணியன்.

பெருமதிப்புக்குரிய சிவா தங்களுக்கும்
ரமணியன் ஐயா, தங்கள் இருவருக்கும் என் அன்புவணக்கங்களும் நன்றிகளும்

உரைப்பேன் எதையோ உள்ளுள்நின்று
உணரா, உளறி உலைபொங்க
கரைப்பேன் பாகைக் கரைவேன் நானும்
காகம்போலும் கரையோடும்
திரைபோ லுலைவேன் திருந்தேன் தினமும்
தருவேன் தொல்லை தமிழாலே
உரைப்பேன் கவிதை ஓவென்றலறி
உள்ளே இனிமை உடைத்தாக

நன்றிகள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 16, 2012 6:35 pm

படித்தேன்.. சுவைத்தேன்.. சூப்பருங்க சூப்பருங்க




முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Power-Star-Srinivasan
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 16, 2012 7:15 pm

பிளேடு பக்கிரி wrote:படித்தேன்.. சுவைத்தேன்.. சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றிகள்!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 16, 2012 7:17 pm

௨. தெரியவில்லை புரியவில்லை

தெத்தத் தெத்தத் தெரிதெரி தெரிதெரி
தெரியவேதெரியாது
எத்தெத் திசைதனில் இருளும் விடியும்
எதுவுமே தெரியாது
தத்தத் தருதரு தருதரு தரணியில்
தருவது எவர் பாடு
தலைகால் புரியா ஆடும் உயிர்கள்
தவறிடும் நிலைகூறு

சித்தம் மறுகிச் சிதைவுறும் மனதும்
சேர்வது எதனூடு
சத்தம்குன்றிச் சலனமும் அற்றே
சரிவதின் நிழலூடு
உத்தம நிலையில் உயிரின் கீதம்
உடைபடும் நிலையாது
அத்தம் கொள்ளும் அறிவின் மந்தம்
அனைத்தும் அதனூடு

சுற்றுசூழல் எதுவும் காணச்
சோர்வுறும் நிலையேது
அற்றும் வாழ்வில் அந்தம் என்னில்
அதனின் பொருள் ஈது
முற்றும் போனால் முடிவின் எல்லை
முன்வரும் போலுணர்வு
கற்கள் வைத்த பாதையின் முடிவை
காணும் நிலைப்பாடு

சொற்கள் கூறும் மனதில் வெறுமை
தோன்றுவ தெதனூடு
சற்றும் குறையா விதியும் உடலை
சித்திர வதைசெய்து
நிற்கும் போது கற்பனை என்ன
நினவெழும் ஒருகாடு
விற்றல் வாங்கும் உலகும் ஏனோ
வினைகள் புறப்பாடு

என்ன இன்னும் இருந்தாய் போதும்
எழுநட எனும்போது
பின்னும்வார்த்தை பேசும்பொருளும்
பிதற்றிடும் நிலைப்பாடு
மின்னும் உயிரும் மேலா கீழா
மயங்கிடும் நினைவோடு
இன்னுமின்னும் எகிறும் வார்த்தை
இதைவிடப் பொருளேது

தெள்ளெனும்நீரில் கல்லை எறிந்தால்
தொலையும் பிம்பங்கள்;
கள்ளின் நிறமும் பாலும் ஒன்றாய்
காணும் மாயைகள்
உள்ளம்மீது இல்லைக் குற்றம்
எழுதும் வார்த்தைகள்
தள்ளும் போது மலையில் உருளத்
தலைகீழ் தெரியும் கொள்

காலச் சக்கரம் உருளும் போது
காட்சிகள் மாறுவதும்
நீலக் கருமை மேகம் மறைத்து
நிற்கும் நிலைமாறி
கோலம் மாற்றம் கொண்டே விண்ணின்
கோடி ஒளிதெரியும்
ஞால வாழ்வின் முடிவும்காண
நாளை புரிந்துவிடும்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக