ஈகரை தேடுபொறி
Latest topics
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by யினியவன் Yesterday at 11:33 pm

» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by Powenraj Yesterday at 11:27 pm

» ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி
by யினியவன் Yesterday at 11:18 pm

» ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
by யினியவன் Yesterday at 11:16 pm

» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by ரா.ரா3275 Yesterday at 11:11 pm

» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by ரா.ரா3275 Yesterday at 11:03 pm

» உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?
by ராஜு சரவணன் Yesterday at 10:49 pm

» Font Twist அழக்கான எழுத்துடன் அலங்கார வடிவமைப்பு
by kirikasan Yesterday at 10:22 pm

» ஈகரை முகநூல் பக்கம் Like Page-ஆக மாற்றப்பட்டுள்ளது!
by krishnaamma Yesterday at 10:10 pm

» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by யினியவன் Yesterday at 10:04 pm

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by positivekarthick Yesterday at 8:37 pm

» புகை (கவிதை)
by pon.sellamuththu Yesterday at 8:19 pm

» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by ராஜு சரவணன் Yesterday at 7:39 pm

» நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ராஜு சரவணன் Yesterday at 7:35 pm

» மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம்
by Powenraj Yesterday at 6:59 pm

» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
by பார்த்திபன் Yesterday at 6:53 pm

» வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்
by ராஜு சரவணன் Yesterday at 6:33 pm

» பள்ளி மாணவர்களை அச்சமூட்டும் தேர்வு பூதம்... தீர்வுதான் என்ன?
by Powenraj Yesterday at 5:29 pm

» கடலில் கொட்டிக் கிடக்கும் யுரேனியம்: விஞ்ஞானிகள் வெற்றி
by பூவன் Yesterday at 5:28 pm

» கல்விக்கு முக்கியம் எது ?
by Powenraj Yesterday at 5:11 pm

» TN TET Exam-2013 - ஆசிரியர் தகுதி தேர்வு 2013 அறிவிப்பு
by Powenraj Yesterday at 4:59 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -8)
by உமா Yesterday at 4:47 pm

» இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
by balakarthik Yesterday at 4:12 pm

» எப்பொழுதும் (Always- Pablo Neruda)
by maniajith007 Yesterday at 4:06 pm

» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?
by maniajith007 Yesterday at 3:47 pm

» சிக்கன் பூனா
by பூவன் Yesterday at 3:36 pm

» ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!
by MADHUMITHA Yesterday at 3:28 pm

» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by positivekarthick Yesterday at 3:20 pm

» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by positivekarthick Yesterday at 2:59 pm

» இது வேண்டாம்..அது...
by சிவா Yesterday at 2:48 pm

» ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
by imz Yesterday at 2:36 pm

» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Yesterday at 2:34 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by அருண் Yesterday at 2:26 pm

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by krishnaamma Yesterday at 2:14 pm

» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by தளிர் அலை Yesterday at 1:47 pm

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 1:44 pm

» டாக்டர், பஸ்ல ஏறி உட்கார்ந்த உடனேயே தூக்கம் வந்துடுது..!
by Muthumohamed Yesterday at 1:33 pm

» இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
by Muthumohamed Yesterday at 1:31 pm

» விண்டோஸ் புளு
by Muthumohamed Yesterday at 1:25 pm

» துன்பக்கேணி
by Muthumohamed Yesterday at 1:23 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

























இந்தியாவில் மாணவர்களால்தான் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்: அப்துல்கலாம் பேட்டி

View previous topic View next topic Go down

இந்தியாவில் மாணவர்களால்தான் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்: அப்துல்கலாம் பேட்டி

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Jun 08, 2012 7:21 pm

புதுச்சேரி, ஜூன்.8-


முன்னாள் ஜனாதிபதி
அப்துல்கலாம் நேற்று நெய்வேலி, கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து
கொண்டார். பின்னர் இரவு 10 மணியளவில் கார் மூலம் புதுவை வந்தார். கவர்னர்
இக்பால்சிங் மற்றும் அரசு அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுத்தார்.






இன்று காலையில் புதுவை மகாத்மாகாந்தி மருத்துவ கல்லூரிக்கு
அப்துல்கலாம் காரில் சென்றார். அங்கு உள்ள மரபணுசோதனை ஆய்வகத்தை
பார்வையிட்டார். அதில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் படைப்புகளை கண்டு
வியந்து மகிழ்ந்தார். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
அப்துல்கலாம் பேசியதாவது:-

சிறந்த மருத்துவம்
என்பது மருத்துவ செலவை குறைப்பதாக இருக்க வேண்டும். எளிய முறையில்
அனைவருக்கும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மருத்துவ வசதி கிடைக்க
வேண்டும். மருத்துவ மாணவர்கள் முதலில் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும்.
பின்னர் அதனை பிறருக்கு கற்பிக்க வேண்டும்.
அதன்பிறகு மீண்டும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

நோயாளி
முழுமையாக குணமடையும் வரை சிகிச்சையளிக்க வேண்டும். ஒருவேளை அதில்
நோயாளிக்கு திருப்தி ஏற்படாவிட்டால் அந்த மருத்துவத்துக்கு கட்டணம்
வசூலிக்க கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

பிறகு
மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகளுடன் அப்துல்கலாம் கலந்துரையாடலில்
ஈடுபட்டார். அப்போது அப்துல்கலாமிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்
அளித்த பதில்களின் விபரம் வருமாறு:-

கேள்வி: ஜனாதிபதி அப்துல்கலாமுக்கும், அப்துல்கலாமுக்கும் என்ன வேறுபாடு?

பதில்:
50 ஆண்டுகள் அப்துல் கலாமாக இருந்தேன். 5 ஆண்டுகள்தான் ஜனாதிபதி அப்துல்
கலாமாக பணிபுரிந்தேன். இந்த 5 ஆண்டுகளில்தான் 7 1/2 மில்லியன் இளைஞர்களை
என்னால் சந்திக்க முடிந்தது. எனது பயணத்துக்காக கிடைத்த அதிநவீன
போக்குவரத்து வசதிகளை இளைஞர்களை சந்திப்பதற்காக பயன்படுத்தி கொண்டேன். அதன்
மூலம் அப்துல்கலாமாக 50 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை இந்த 5 ஆண்டுகளில்
சாதிக்க முடிந்தது.

கேள்வி: நீங்கள் படிக்கும் காலத்துக்கும், தற்போதைய காலத்துக்கும் கல்வி முறையில் என்ன வேறுபாடு உள்ளது?

பதில்:
கல்வி முறை என்பது எப்படியிருந்தாலும், ஆசிரியர்கள்தான் மாணவர்களின்
எண்ணங்களை மாற்றுகின்றனர். ஆசிரியர்களால்தான் மாணவர்களிடம் மிகப்பெரிய
மாற்றங்களை உருவாக்க முடியும்.

கேள்வி: அணுமின் உலை பற்றி உங்களுடைய கருத்து என்ன?

பதில்:
ஜப்பான் புகுஷிமாவில் உள்ள அணு மின் உலை கடல் மட்டத்தைவிட 2 மீட்டர்தான்
உயரமாக உள்ளது. 9 1/2 மீட்டர் உயரத்துக்கு கடலில் சுனாமி அலைகள் எழுந்தபோது
அந்த அணுமின் உலையை தாக்கியது. ஆனால் கூடங்குளம் அணுமின் உலை கடல்
மட்டத்தை விட 15 1/2 மீட்டர் உயரத்தில் உள்ளது. எனவே அது பாதுகாப்பான
நிலையில் இருக்கிறது.

கேள்வி: ஜனாதிபதியை மக்களே நேரடியாக ஏன் தேர்ந்தெடுக்க கூடாது?

பதில்:
இந்தியாவில் 1950-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின்
கீழ்தான் ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே அதனை மாற்ற வேண்டுமெனில்
அரசியல் சட்ட நிபுணர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

பின்னர் அப்துல்கலாம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

இன்றைய
சூழலில் இளைஞர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும். அவர்களால்தான்
இந்தியாவில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும். தேசநலனை மட்டுமே
கருத்தில் கொண்டு இளைஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-மாலைமலர்


ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 3520
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 678

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum