ஈகரை தேடுபொறி
Latest topics
» மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை
by சிவா Today at 4:44 pm

» அரசியல் தலைவர்களை எப்படி எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்!
by சிவா Today at 4:34 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by நாகசுந்தரம் Today at 4:32 pm

» மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
by சிவா Today at 4:25 pm

» ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது
by ராஜு சரவணன் Today at 4:25 pm

» பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!
by யினியவன் Today at 4:07 pm

» பொது அறிவுத் தகவல்கள்!
by raheema faizal Today at 3:06 pm

» கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங்
by ஜாஹீதாபானு Today at 2:26 pm

» சம்திங்' வாங்க மாட்டேன்!
by ஜாஹீதாபானு Today at 1:52 pm

» 24 வயது வேலைக்காரப் பெண்ணைக் கொன்ற மலேசிய தம்பதிக்கு 24 ஆண்டு ஜெயில் தண்டனை
by பாலாஜி Today at 1:51 pm

» சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள் :)
by ஜாஹீதாபானு Today at 1:35 pm

» சிபிஐ-க்கு தன்னாட்சி
by Muthumohamed Today at 1:34 pm

» கே.பாலசந்தர் பற்றி .......
by Muthumohamed Today at 1:32 pm

» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
by ஜாஹீதாபானு Today at 1:29 pm

» எம்மினத் தலைவன் பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்
by ஜாஹீதாபானு Today at 1:28 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by Muthumohamed Today at 1:26 pm

» விஸ்வரூபம் படம் தரவிறக்கம் (10.1 GB HD 816P X 1920P ) - மற்றும் 5.56GB(720P)
by ராஜு சரவணன் Today at 1:07 pm

» கனவில் கட்டளையிட்ட வள்ளலார்!
by பாலாஜி Today at 1:07 pm

» பக்தனுக்காக பணியாள் ஆன பகவான்
by பாலாஜி Today at 12:58 pm

» கைரேகை சோதிடம் - விரிவான பார்வை
by யினியவன் Today at 12:46 pm

» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
by பாலாஜி Today at 12:46 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -5)
by பாலாஜி Today at 12:41 pm

» கனவுகளின் பலன்கள்
by revathiraja Today at 12:37 pm

» என்னுடைய 1000 வது பதிவு- நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
by பாலாஜி Today at 12:18 pm

» அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? - அறிவியல் கட்டுரை
by யினியவன் Today at 12:14 pm

» SWF கோப்பை எவ்வாறு ஈகரை பதிவில் இணைப்பது.
by ராஜு சரவணன் Today at 11:12 am

» சுருங்கி விட்ட உலக உருண்டை : -இன்று சர்வதேச தொலைத்தொடர்பு தினம்!
by யினியவன் Today at 10:44 am

» வெள்ளி நைட்ரோ ஆக்சைட்
by பூவன் Today at 10:38 am

» சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது
by ராஜு சரவணன் Today at 10:27 am

» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by சிவா Today at 9:34 am

» நீ சிலையாக இரு...ரசிப்பார்கள்
by முத்துராஜ் Today at 9:25 am

» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by SajeevJino Today at 9:25 am

» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by சிவா Today at 9:23 am

» பங்களாதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு துணையமைச்சர் பதவி வழங்கியிருக்க வேண்டும்
by சிவா Today at 9:03 am

» தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்!
by சிவா Today at 8:59 am

» என் முதல் படைப்பு! படித்துவிட்டுச் சொல்லுங்கள்.
by Aathira Today at 8:28 am

» தர மேலாண்மை (Quality Management)
by ராஜு சரவணன் Today at 12:04 am

» முகனூலில் ரசித்தது (19 கிமீ தானே வந்திருக்காங்க, இன்னமும் டெல்லி வரவில்லையே!)
by Muthumohamed Yesterday at 11:16 pm

» மாபெரும் மரணக்காட்சி
by Muthumohamed Yesterday at 11:13 pm

» பறந்து போன பண்பாடு ...
by Muthumohamed Yesterday at 10:59 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























கால அட்டவணையை தெற்கு ரெயில்வே வெளியிட்டது தமிழகத்திற்கு 12 புதிய ரெயில்கள் சென்னை-பெங்களூருக்கு இரட்டை மாடி ஏ.சி. ரெயில் அறிமுகம்

View previous topic View next topic Go down

கால அட்டவணையை தெற்கு ரெயில்வே வெளியிட்டது தமிழகத்திற்கு 12 புதிய ரெயில்கள் சென்னை-பெங்களூருக்கு இரட்டை மாடி ஏ.சி. ரெயில் அறிமுகம்

Post by ராஜா on Sat Jun 30, 2012 11:16 am




தமிழகத்தில் இயக்கப்படும் 12 புதிய ரெயில்களுக்கான கால அட்டவணையை தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ளது. சென்னை-பெங்களூர் இடையே தினசரி இரட்டை மாடி ஏ.சி. ரெயில் அறிமுகம் செய்யப்படுகிறது.

12 புதிய ரெயில்கள்

தமிழகத்துக்கு இந்த ஆண்டு 12 புதிய ரெயில்களையும், ஏற்கனவே இயங்கி வரும் ரெயில்களின் சேவையை விரிவு செய்தும் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் தமிழகத்தில் விடப்படும் புதிய ரெயில்கள், சேவை விரிவு செய்யப்பட்டுள்ள ரெயில்களின் கால கால அட்டவணையை தெற்கு ரெயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

இரட்டை மாடி ரெயில்

1. சென்னையில் இருந்து பெங்களூருக்கு இரட்டை மாடி குளுகுளு (ஏ.சி.) ரெயில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில் (எண்-22625) தினமும் சென்னை சென்டிரலில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்டு, ஜோலார்பேட்டை வழியாக பெங்களூருக்கு மதியம் 1.30 மணிக்கு சென்றடையும். பெங்களூரில் இருந்து மதியம் 2.40 மணிக்கு இந்த ரெயில் (22626) புறப்பட்டு, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு இரவு 8.45 மணிக்கு வந்து சேரும்.

பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த நின்று செல்லும். இந்த ரெயிலில், இரண்டு அடுக்கு வசதி கொண்ட 11 ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த ரெயில் இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

கோவைக்கு புதிய ரெயில்

2. ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் இருந்து கோவைக்கு வாரம் ஒருமுறை இயக்கப்படும் புதிய ரெயில். இந்த ரெயில், பிகானீரில் (22475) இருந்து வியாழக்கிழமைதோறும் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு, ஜோத்பூர், அகமதாபாத், மங்களூர் வழியாக கோவைக்கு சனிக்கிழமை அதிகாலை 2.50 மணிக்கு வந்து சேரும்.

பின்னர் கோவையில் இருந்து (22476) சனிக்கிழமை மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு, பிகானீருக்கு திங்கட்கிழமை மதியம் 12.25 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் லுவனி, பாலிமார்வார், பலன்பூர், அகமதாபாத், சூரத், மங்களூர், கோழிக்கோடு, பாலக்காடு உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில் இயக்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

ஈரோடு எக்ஸ்பிரஸ்

3. யஸ்வந்த்பூர் (பெங்களூர்)-கொச்சுவேலி (கேரளா) ஏ.சி., எக்ஸ்பிரஸ் வாரந்திர புதிய ரெயில் ஈரோடு வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் (16561) வியாழக்கிழமை தோறும் மதியம் 3.25 மணிக்கு யஸ்வந்த்பூரில் இருந்து புறப்பட்டு, கொச்சுவேலிக்கு வெள்ளிக்கிழமை காலை 6.50 மணிக்கு சென்றடைகிறது. கொச்சுவேலியில் (16562) இருந்து வெள்ளிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு யஸ்வந்தபூர் சென்றடைகிறது.

இந்த ரெயில், கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் டவுண், கோட்டயம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயில் இயக்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

ஷாலிமார்-சென்னை

4. ஷாலிமார் (மேற்கு வங்காளம்)-சென்னை சென்டிரல் வாரந்திர புதிய அதிவிரைவு ரெயில், ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் சாலிமர் ரெயில் நிலையத்தில் இருந்து (22825) மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டு, விசாகப்பட்டினம் வழியாக புதன்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

அதேபோல ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 4.15 மணிக்கு (22826) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ஷாலிமார் சென்றடைகிறது.

இந்த ரெயில் கோரக்பூர், கட்டாக், புவனேஸ்வர், சம்பல்கோட், ராஜமுந்திரி, விஜயவாடா, ஓங்கோல், நெல்லூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த ரெயில் கடந்த 24-ந் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.

விசாகப்பட்டினம் அதிவிரைவு ரெயில்

5. விசாகப்பட்டினம்-சென்னை வாரந்திர அதி விரைவு ரெயில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் (22869), ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 7.20 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 8.55 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும். சென்னை சென்டிரலில் இருந்து (22870) செவ்வாய்க்கிழமை இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு, விசாகப்பட்டினத்துக்கு புதன்கிழமை 10.25 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் ராஜமுந்திரி, விஜயவாடா, நெல்லூர் வழியாக செல்லும். இந்த ரெயில் இயக்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

அசான்சால்-சென்னை

6. அசான்சால் (மேற்கு வங்காளம்)- சென்னை வாரந்திர அதி விரைவு புதிய ரெயில், அசான்சாலில் இருந்து புதன்கிழமை மாலை 4 மணிக்கு (12376) புறப்பட்டு, வியாழக்கிழமை இரவு 10.45 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னையில் இருந்து இந்த ரெயில் (12375) சனிக்கிழமை மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுகிழமை இரவு 9.55 மணிக்கு அசான்சால் சென்றடையும். இந்த ரெயில் ரூர்கெலா, சம்பல்பூர், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, ஓங்கோல், நெல்லூர், சூலூர்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில் இயக்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

பூரி அதிவிரைவு ரெயில்

7. சென்னை சென்டிரல்-பூரி சூப்பர் பாஸ்ட் வாரந்திர புதிய ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இந்த ரெயில் (22860) திங்கட்கிழமை மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு விசாகப்பட்டினம் வழியாக பூரிக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சென்றடையும்.

பூரியில் இருந்து (22859) ஞாயிற்றுக்கிழமை 5.30 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமை பிற்பகல் 2.55 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்தடையும். இந்த ரெயில் நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில் இயக்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

நெல்லை-தாதர்

8. திருநெல்வேலி-தாதர் வாரந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22630), திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, வியாழக்கிழமை மதியம் 3.10 மணிக்கு தாதரை சென்றடையும். பின்னர், தாதரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலி ரெயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரெயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், கோழிக்கோடு, மங்களூர், உடுப்பி, ரத்னகிரி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

வாரத்துக்கு 3 நாட்கள்

தாதரில் இருந்து திருநெல்வேலிக்கு, வாரத்துக்கு 3 நாட்கள் இயக்கப்படும் மற்றொரு புதிய ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் (11021) வெள்ளி, செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் தாதரில் இருந்து புறப்பட்டு ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் முற்பகல் 11.45 மணிக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது.

பின்னர் இந்த ரெயில் (11022), திருநெல்வேலியில் இருந்து ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 5.50 மணிக்கு தாதர் சென்றடைகிறது. இந்த ரெயில் ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருச்சி-நெல்லை

9. திருச்சி-திருநெல்வேலி பகல் நேரம் அதிவிரைவு இன்டர்சிட்டி ரெயில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் (22627), தினமும் காலை 7.15 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, மதியம் 1 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். பின்னர் இந்த ரெயில் (22629) திருநெல்வேலியில் இருந்து 2.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு திருச்சி சென்றடையும்.

இந்த ரெயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் ஒரு ஏ.சி. உள்பட 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த 3 ரெயில்களும் இயக்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

கச்சிகுடா-மதுரை

10.கச்சிகுடா(காக்கிநாடா)-மதுரை வாரந்திர எக்ஸ்பிரஸ் (17615) சனிக்கிழமை காலை 6.05 மணிக்கு கச்சிகுடா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மதுரை வந்தடையும். மதுரையில் (17616) இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.50 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமை மதியம் 2.05 மணிக்கு கச்சிகுடா சென்றடையும்.

இந்த ரெயில் மெகபூநகர், அனந்தபூர், தர்மாவரம், மதனபள்ளி, சித்தூர், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்கள் வழிÖக செல்லும்.

திருப்பதி எக்ஸ்பிரஸ்

11. திருப்பதி-மன்னார்குடி (17407) எக்ஸ்பிரஸ் ரெயில் வாரத்திற்கு 3 முறை இயக்கப்படும். திருப்பதியில் இருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 10.35 மணிக்கு மன்னார்குடி வந்தடையும். மன்னார்குடியில் இருந்து (17408) புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.30 புறப்பட்டு மாலை 4.35 மணிக்கு திருப்பதிக்கு சென்றடையும்.

இந்த ரெயில் சித்தூர், காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நீடாமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

பாலக்காடு-ஈரோடு எக்ஸ்பிரஸ்

12. மெயின் லைனில் செல்லக்கூடிய பாலக்காடு எக்ஸ்பிரஸ் (66608) ரெயில், பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு, கோவை வழியாக இரவு 7 மணிக்கு ஈரோடு வந்து சேரும். ஈரோட்டில் இருந்து (66609) காலை 7.45 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு டவுனுக்கு மதியம் 12.30 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் பாலக்காடு-ஈரோடு ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள எல்லா ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். `என்ரூட்' என்று அழைக்கப்படும் ரெயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் இல்லாத நிலையங்களில் நிற்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 21411
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கால அட்டவணையை தெற்கு ரெயில்வே வெளியிட்டது தமிழகத்திற்கு 12 புதிய ரெயில்கள் சென்னை-பெங்களூருக்கு இரட்டை மாடி ஏ.சி. ரெயில் அறிமுகம்

Post by தர்மா on Sat Jun 30, 2012 11:18 am

மிகவும் நன்றி ராஜா இந்த தகவலை இணையத்தில் தேடிகொண்டிருந்தேன்

தர்மா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 1313
சேர்ந்தது: 02/09/2011
மதிப்பீடு: 382

View user profile

Back to top Go down

Re: கால அட்டவணையை தெற்கு ரெயில்வே வெளியிட்டது தமிழகத்திற்கு 12 புதிய ரெயில்கள் சென்னை-பெங்களூருக்கு இரட்டை மாடி ஏ.சி. ரெயில் அறிமுகம்

Post by ராஜா on Sat Jun 30, 2012 11:41 am

தர்மா wrote:மிகவும் நன்றி ராஜா இந்த தகவலை இணையத்தில் தேடிகொண்டிருந்தேன்
நன்றி இந்த முறையாவது சரீயா சென்னை சென்ட்ரல்க்கு ரயில் டிக்கெட் எடுங்க , போனமுறை மாதிரி கொல்கட்டாவுக்கு எடுத்துட்டு அண்ணிக்கிட்ட அடி வாங்காதீங்க

ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 21411
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கால அட்டவணையை தெற்கு ரெயில்வே வெளியிட்டது தமிழகத்திற்கு 12 புதிய ரெயில்கள் சென்னை-பெங்களூருக்கு இரட்டை மாடி ஏ.சி. ரெயில் அறிமுகம்

Post by யினியவன் on Sat Jun 30, 2012 12:03 pm

ராஜா wrote:நன்றி இந்த முறையாவது சரீயா சென்னை சென்ட்ரல்க்கு ரயில் டிக்கெட் எடுங்க , போனமுறை மாதிரி கொல்கட்டாவுக்கு எடுத்துட்டு அண்ணிக்கிட்ட அடி வாங்காதீங்க

ராஜா - நம்ம தர்மா சைக்கிள மேல் மாடியில கட்டுறதுக்கு கஷ்டப் பட மாட்டாரே?

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 20228
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4227

View user profile

Back to top Go down

Re: கால அட்டவணையை தெற்கு ரெயில்வே வெளியிட்டது தமிழகத்திற்கு 12 புதிய ரெயில்கள் சென்னை-பெங்களூருக்கு இரட்டை மாடி ஏ.சி. ரெயில் அறிமுகம்

Post by தர்மா on Sat Jun 30, 2012 2:30 pm

சரியா சொன்னீங்க தம்பி ராஜா. இந்த முறை ஒழுங்கா வண்டிய பார்த்து ஏறனும். எனக்கு இன்னுமொரு கெட்ட பழக்கம். ரயிலில் அணைத்து ஸ்டேசனிலும் வண்டி நிற்கும்போது இரங்கி பராக் பார்த்து கொண்டே வண்டியை கோட்டை விடுவது. நெடு தூர வண்டிகள் டேசனில்(நாட் ஸ்டேஷன்) இருந்து கிளம்பும்போது சத்தமில்லாமல் செல்லும் ஆகவே இந்த பிரச்சனை

தர்மா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 1313
சேர்ந்தது: 02/09/2011
மதிப்பீடு: 382

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum