ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்
 ayyasamy ram

பாகிஸ்தானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம், பேஸ்புக், டுவிட்டர், யூட்யூப் போன்ற இணையதளங்களும் முடக்கம்
 ayyasamy ram

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

உபயோகமான வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ஜாஹீதாபானு

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

View previous topic View next topic Go down

எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by இரா.பகவதி on Mon Jul 09, 2012 6:33 pm

கல்வி கரையில! கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல; தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குறுகின் தெரிந்து. – நாலடியார்.

ஒரு மாணவனின் படிப்பு வாழ்க்கையை தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி என்று பொதுவாக பிரித்துக்கொள்ளலாம். எனக்கு தெரிந்த நடைமுறை உண்மைகளை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது. (மாணவன் என்பது என் வசதிக்கான குறியீடு அதில் மாணவியும் அடக்கம் எனக் கொள்க)

தொடக்கப் பள்ளி

நகரத்து பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மாணவனை விட அவன் பெற்றோர் படும் பாடு இங்கே ரொம்ப ரொம்ப அதிகம். எல்.கே.ஜி சீட்டுக்கு எம்.எல்.ஏ விலிருந்து ஜனாதிபதி வரை பரிந்துரை பெற்றாலும் எந்த பள்ளியும் அதை எல்லாம் மதிப்பது இல்லை. சரி, அப்ப நேரடியா சாதாரணமா அப்ளிகேசன் போட்டு வாஙக வேண்டியது தானே? என்று தானே கேட்கிறீர்கள். அட போங்க அப்படி எல்லாம் எளிதில் தர மாட்டாங்க. ஒரு மாநகரத்து பள்ளியில் எல்.கே.ஜி சீட்டு வாங்க நீங்க என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று சும்மா தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.முதலில் நீங்க இரவு பூரா கண் விழித்து வரிசையில் நின்று நம்ம ”மன்னன் சினிமா” ரஜினி மாதிரி முதல் எண் அப்பிளிகேசன் வாங்க வேண்டும். சில பள்ளிகளில் முதல் 50 பேருக்கு கண்டிப்பா இடம் உண்டுன்னு வெளியே பேசிக்குவாங்க. முதல் 50- ல நீங்க இல்லைன்னா பள்ளி நிர்வாகம் என்ன உங்க குழந்தை மேல உங்களுக்கு அக்கறை இல்லையா? இப்படி 500வது அப்பிளிகேசன் வாங்கிட்டு சீட்டு கேட்டா எப்படின்னும் கேப்பாங்க.ஸ்கூல்ல இருந்து 2 கீ.மீக்குள்ள உங்க வீடு இருக்கனும். சரி. வீட மாத்திரலாம்னு நினைக்கிறீங்களா? (ஆசை, தோசை, அப்பள வடை.?!)அப்பா, அம்ம ரெண்டு பேரும் மாஸ்டர் டிகிரி படிச்சிருக்கனும். சில ஸ்கூல்ல ரெண்டு பேரும் வேலைக்கு போனா முன்னுரிமை. சில ஸ்கூல்ல நேர் எதிர். சில ஸ்கூல்ல குடும்ப வருமானம் எவ்வளவு இருக்கனும்னு அளவு எல்லாம் இருக்காமுங்க.உங்க குழந்தைக்கு ”பப்புவானா நியு கினியா” நாட்டின் உள்துறை மந்திரி யாரென்று எதுக்கும் சொல்லி வைங்க? குழந்தைக்கு இண்டெர்வியூ இருக்கே.இந்த சாதி இருக்கு பாருங்க அது ரொம்ப முக்கியம். அதை யோசிச்சு அப்ளிகேசன் போடுங்க. எல்லா ஸ்கூல்லயும் எல்லாரையும் சேர்த்துட மாட்டாங்க. அப்படி சேர்த்துட்டா ஸ்கூலோட காலிபர் (Caliber) என்ன ஆகுறது? சில ஸ்கூல்ல குறிப்பிட்ட சாதிலயும் குறிப்பிட்ட பிரிவுக்கு தான் சீட் உண்டு.

(குலத்தால் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் – பாரதி பாவம்)ஒரு பெரும் தொகையை டொனேசனாக தர தயார இருக்க வேண்டும். (அட, பள்ளிக்கு இல்லைங்க அப்படின்னு அவங்க சொல்லுவாங்க). எல்லா பள்ளியும் ஒரு சொசைட்டியாகவோ அல்லது ஒரு டிரஸ்ட்டாகவோ தான் இருக்கும். நீங்க அந்த சொசைட்டி அல்லது டிரஸ்ட்டுக்கு தான் அந்த டொனேசனை தரவேண்டும்.பள்ளி நிர்வாகத்துடன் யாருக்கு நல்ல தொடர்பு இருக்குன்னு நீங்க துப்பறியனும். யாருக்கு இருக்கும் என்று அப்பாவியாக நீங்க கேள்வி எல்லாம் கேட்க கூடாது. யாருக்கு வேணும்னாலும் இருக்கும். தொடர்பு இருக்கின்ற ஒரு சிலருக்கு பள்ளி நிர்வாகம் ஒண்ணு ரெண்டுன்னு சீட் ஒதுக்கி இருப்பாங்க.

இதோ எனக்கு தெரிந்த அந்த லோக்கல் லிஸ்ட்.அ) லோக்கல் இன்ஸ்பெக்டர் (லா & ஆர்டர்)

ஆ) டிராஃபிக் போலீஸ்

இ) பள்ளி வாகன பரிசோதகர்

ஈ) மின்சார அலுவலக என்ஜினியர்

உ) போஸ்ட்மான்

இது தவிரவும் ஒரு லிஸ்ட் இருக்கு. அது ”பெரும் புள்ளி”ங்க லிஸ்ட்.

அ) டிரஸ்ட், சொசைட்டி கணக்கு சரி பார்க்கிற அலுவலத்துல சொன்னா சீட் தருவாங்கலாம்.

ஆ) ஜனாதிபதி, முதல்வர், கல்வி மந்திரி இவங்க கிட்ட போனா சில சமயம் சீட் கிடைக்குமாம். சில சமயம் இவங்களை எல்லாம் பள்ளி நிர்வாகம் மதிக்கவே மாட்டாங்க. எல்லாம் உங்க நேரத்த பொறுத்தது.இ) ஊரின் வேறு சில முக்கிய புள்ளிகள் ( இது அந்த அந்த ஸ்கூல பொருத்த மாட்டர். சினிமா துறை, டிராமா துறை, மருத்துவம், நீதி, இன்னும் பிற.,)ஈ) (ஸ்ஸ்ஸ்…. காதை கொண்டாங்க) சொன்னா நம்ப மாட்டீங்க. எதிர்காலம் குறித்து பள்ளி நிர்வாகி ஜோசியம் பார்க்கும் ஜோசியக்காரருக்கு ரெண்டு சீட்டு உண்டாம்ங்க.

உ) பள்ளி நிர்வாகம் அக்கௌண்ட் வச்சிருக்கும் பாங்க் மானஜேருக்கு ஒரு சீட் உண்டு.

இது தவிரவும் இன்னும் இருக்கும். நீங்க தேடனும்.ஏதாவது ஒரு வழியை மட்டும் பிடித்து சேர்ந்து விடலாம் என்று ஈசியா நினைத்துவிடாதீர்கள். நீங்கள் பல வழிகளில் முயற்சி செய்யவேணும். அப்ப தான் வேற வழியே இல்லாம சரி போனா போகுதுன்னு சீட் தருவாங்க.இந்த வழி எல்லாம் நமக்கு சரிப்படாது என்று நினைத்தீர்களானால், சீட் வாங்கி தருவதற்கு வெளியே புரோக்கர்கள் எல்லாம் இருப்பாங்க. நீங்க எந்த முயற்சியும் செய்யாம சரியான புரோக்கரை பிடித்து விட்டீர்கள் என்றால் பணம் மட்டும் தான் செலவு செய்யவேண்டும். ஸ்கூல பொறுத்து வகுப்பை பொறுத்து இந்த பணம் அளவு மாறுபடும். சொன்னா நம்ப மாட்டீங்க. 1 லட்சத்துல இருந்து 7 லட்சம் வரைக்கும் தர வேண்டுமாம்.சரி, அப்படி எதுக்கு இந்த ஸ்கூல்ல படிக்க வேண்டும் என்று தானே நினைக்கிறீர்கள்? என்னங்க உங்க குழந்தையின் எதிர்காலம் குறித்த அக்கறையே இல்லையா? இப்படி எல்லாம் அலைந்து சீட் வாங்கினா தானே நாம பெருமையா வெளிய சொல்லிக்க முடியும். நீங்கள் சீட் வாங்குன கதைய 40 பேருக்கு சொல்வீர்கள். அது 400 பேரை சென்றடையும். அப்ப தானேங்க உங்க குழந்தை படிக்கிற ஸ்கூலுக்கு ஒரு பெருமை. ஈசியா கிடைச்சா நீங்க மதிக்க மாட்டீங்கங்கிற தீர்க்க தரிசனம் ஸ்கூலுக்கு இருக்காதா என்ன?இந்த வழி எல்லாம் சரியா வராது. அப்ப நல்ல ஸ்கூல்ல படிக்க வழியே இல்லையா என்று யோசிக்கிறீர்களா? ஒண்ணும் கவலை படாதீர்கள். சில சமயம் நீங்க எந்த முயற்சியும் செய்யாமலேயே கூட சீட் கிடைக்கும். என்ன சார் நீங்க, மேலே சீட் கிடைக்கிறதுக்கு அவர பிடி, இவர பிடின்னு எல்லாம் சொன்னீங்க, இப்ப சும்மாவே இருங்க சீட் கிடைக்கும் என்று குழப்புகிறீர்கள்னுதானே நினைக்கிறீங்க? பொறுமை. பொறுமை.

அப்ப ஒரு ஸ்குல்ல சீட் கிடைக்க என்ன தான் சார் அளவுகோல் வச்சிருக்காங்க? அது தாங்க யாருக்குமே தெரியாது. அது ராணுவ ரகசியம். நீங்க அப்ளிகேசன போட்டுட்டு வைத்தீஸ்வரன் கோவில்ல போய் ஓலைச் சுவடி பாருங்க. குழந்தைக்கு யோகம் ஓலைச் சுவடில இருந்தா சீட் கிடைச்சிடும். எல்லாம் உங்க நேரம் நல்லா இருக்கனும்.

(நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் எழுத முயற்சிக்கிறேன்)


நன்றி திண்ணை
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by முரளிராஜா on Mon Jul 09, 2012 8:48 pm

சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by யினியவன் on Mon Jul 09, 2012 10:01 pm

நம்ம குப்புமி இன்ஸ்டிட்யூட்ல நர்சரி ஆரம்பிப்போமா முரளி?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by யினியவன் on Mon Jul 09, 2012 10:03 pm

என்ன பகவதி புள்ள பெத்துக்கற ஆசைய காலி பண்றீங்க?

பிரபுவும், சிவாவும் பயந்திருப்பாங்களே. புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by அசுரன் on Mon Jul 09, 2012 10:10 pm

கிட்ட தட்ட எங்க பள்ளியில நடக்குற மாதிரியே இருக்கே புன்னகை நல்லவேளை எனக்கு பெண் குழந்தை இல்லைன்னா - எங்க பிரின்சிபால் கிட்ட போயி அவமான படவேன்டியிருந்திருக்கும்

நல்ல விழிப்புணர்வு பதிவு இது.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by இரா.பகவதி on Mon Jul 09, 2012 10:29 pm

என்ன பகவதி புள்ள பெத்துக்கற ஆசைய காலி பண்றீங்க?

பிரபுவும், சிவாவும் பயந்திருப்பாங்களே.

அண்ணே இந்த பதிவை பாத்தாவது அளவோடு பெற்று வளமோடு வாழட்டும் , இல்லாட்டி பதினாறு பெற்று பெரு வாழ்வு வாழ்ந்துருவாங்க
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by இரா.பகவதி on Mon Jul 09, 2012 10:30 pm

கிட்ட தட்ட எங்க பள்ளியில நடக்குற மாதிரியே இருக்கே நல்லவேளை எனக்கு பெண் குழந்தை இல்லைன்னா - எங்க பிரின்சிபால் கிட்ட போயி அவமான படவேன்டியிருந்திருக்கும்

நல்ல விழிப்புணர்வு பதிவு இது.

ஆண் பிள்ளை என்றால் என்ன அவமானம் அண்ணா ஒன்னும் புரியல
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by அசுரன் on Mon Jul 09, 2012 10:33 pm

@இரா.பகவதி wrote:
கிட்ட தட்ட எங்க பள்ளியில நடக்குற மாதிரியே இருக்கே நல்லவேளை எனக்கு பெண் குழந்தை இல்லைன்னா - எங்க பிரின்சிபால் கிட்ட போயி அவமான படவேன்டியிருந்திருக்கும்

நல்ல விழிப்புணர்வு பதிவு இது.

ஆண் பிள்ளை என்றால் என்ன அவமானம் அண்ணா ஒன்னும் புரியல
அட தம்பி.... எங்க பள்ளி ஆண்பிள்ளைகள் படிக்கும் பள்ளி... அதனால் எனக்கு ஆண் மகன் என்றால் எங்க தலைமை கிட்ட போயி கெஞ்சி காலை பிடிக்கனும்... லேசுல மசிய மாட்டாங்க...

பெண் பிள்ளை படிக்க வைக்க எங்கள் வீட்டருகிலேயே நல்ல பள்ளிகள் இருக்கு.. அதைத்தான் சொன்னேன்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by யினியவன் on Mon Jul 09, 2012 10:35 pm

@அசுரன் wrote:அட தம்பி.... எங்க பள்ளி ஆண்பிள்ளைகள் படிக்கும் பள்ளி... அதனால் எனக்கு ஆண் மகன் என்றால் எங்க தலைமை கிட்ட போயி கெஞ்சி காலை பிடிக்கனும்... லேசுல மசிய மாட்டாங்க...

பெண் பிள்ளை படிக்க வைக்க எங்கள் வீட்டருகிலேயே நல்ல பள்ளிகள் இருக்கு.. அதைத்தான் சொன்னேன்
அப்படி வெவரமா சொல்லுங்க - நீங்க பெண் குழைந்தைனா படிக்க அனுப்ப மாட்டீங்கன்னு நெனச்சுடுவோம்ல.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by இரா.பகவதி on Mon Jul 09, 2012 10:45 pm

அட தம்பி.... எங்க பள்ளி ஆண்பிள்ளைகள் படிக்கும் பள்ளி... அதனால் எனக்கு ஆண் மகன் என்றால் எங்க தலைமை கிட்ட போயி கெஞ்சி காலை பிடிக்கனும்... லேசுல மசிய மாட்டாங்க...

பெண் பிள்ளை படிக்க வைக்க எங்கள் வீட்டருகிலேயே நல்ல பள்ளிகள் இருக்கு.. அதைத்தான் சொன்னேன்

இதிலிருந்து தாங்கள் குறவருவது தாங்கள் பள்ளி நல்ல பள்ளி இல்லை என்று தானே


அப்படி வெவரமா சொல்லுங்க - நீங்க பெண் குழைந்தைனா படிக்க அனுப்ப மாட்டீங்கன்னு நெனச்சுடுவோம்ல.

அதானே நான் மகளிர் அணியை கஊபுடலமானு நினைச்சேன்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by அசுரன் on Mon Jul 09, 2012 10:46 pm

@யினியவன் wrote:
@அசுரன் wrote:அட தம்பி.... எங்க பள்ளி ஆண்பிள்ளைகள் படிக்கும் பள்ளி... அதனால் எனக்கு ஆண் மகன் என்றால் எங்க தலைமை கிட்ட போயி கெஞ்சி காலை பிடிக்கனும்... லேசுல மசிய மாட்டாங்க...

பெண் பிள்ளை படிக்க வைக்க எங்கள் வீட்டருகிலேயே நல்ல பள்ளிகள் இருக்கு.. அதைத்தான் சொன்னேன்
அப்படி வெவரமா சொல்லுங்க - நீங்க பெண் குழைந்தைனா படிக்க அனுப்ப மாட்டீங்கன்னு நெனச்சுடுவோம்ல.
கன்னத்தில் அறை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by அசுரன் on Mon Jul 09, 2012 10:49 pm

@இரா.பகவதி wrote:
அட தம்பி.... எங்க பள்ளி ஆண்பிள்ளைகள் படிக்கும் பள்ளி... அதனால் எனக்கு ஆண் மகன் என்றால் எங்க தலைமை கிட்ட போயி கெஞ்சி காலை பிடிக்கனும்... லேசுல மசிய மாட்டாங்க...

பெண் பிள்ளை படிக்க வைக்க எங்கள் வீட்டருகிலேயே நல்ல பள்ளிகள் இருக்கு.. அதைத்தான் சொன்னேன்

இதிலிருந்து தாங்கள் குறவருவது தாங்கள் பள்ளி நல்ல பள்ளி இல்லை என்று தானே


அப்படி வெவரமா சொல்லுங்க - நீங்க பெண் குழைந்தைனா படிக்க அனுப்ப மாட்டீங்கன்னு நெனச்சுடுவோம்ல.

அதானே நான் மகளிர் அணியை கஊபுடலமானு நினைச்சேன்

எங்கள் பள்ளியில் பெண் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாது.. ஏன்னா இது ஆண்கள் பள்ளி. மேலும் எங்கள் பள்ளி நல்ல பள்ளி தான்.. நீங்க சொன்ன மற்ற விசயங்கள் அட்மிசன் சமயத்தில் அனைத்தும் பொருந்தும் என்று சொன்னேன்..

எனக்கு மகன் பிறந்திருந்தால் எங்கள் பள்ளியில் தானே சேர்த்திருக்க வேன்டும். அதற்காக சொன்னேன் பகவதி...

ஸ்ஸொப்ப்ப்ப்பா என்னா கேள்வி கேக்குறாரு.... ஆமா குண்டக்கன்னா என்ன மண்டக்கன்னா என்ன அய்யோ, நான் இல்லை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by யினியவன் on Mon Jul 09, 2012 10:50 pm

அரை குறையா சொன்னதுக்கு மகளிர் அணிதான் உங்களுக்கு குடுப்பாங்க. புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by இரா.பகவதி on Mon Jul 09, 2012 10:54 pm


எங்கள் பள்ளியில் பெண் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாது.. ஏன்னா இது ஆண்கள் பள்ளி. மேலும் எங்கள் பள்ளி நல்ல பள்ளி தான்.. நீங்க சொன்ன மற்ற விசயங்கள் அட்மிசன் சமயத்தில் அனைத்தும் பொருந்தும் என்று சொன்னேன்..

எனக்கு மகன் பிறந்திருந்தால் எங்கள் பள்ளியில் தானே சேர்த்திருக்க வேன்டும். அதற்காக சொன்னேன் பகவதி...

ஸ்ஸொப்ப்ப்ப்பா என்னா கேள்வி கேக்குறாரு.... ஆமா குண்டக்கன்னா என்ன மண்டக்கன்னா என்ன

அண்ணே என்ன அட்மிஷனுக்கு ஒடுரிங்களா , அலேக்சாண்டரோட குதிரை பேரை படிச்சிட்டு போங்க அந்த கேள்வி வினாத்தாலுல இருக்குதாம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum