புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Poll_c10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Poll_m10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Poll_c10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Poll_m10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Poll_c10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Poll_m10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Poll_c10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Poll_m10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:03 pm

First topic message reminder :



டெல்லியில் இருந்து புறப்பட்டு, சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்-11 பெட்டி ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் அருகே தீ விபத்திற்குள்ளானது. அந்த பெட்டியில் பயணம் செய்த ஏராளமானோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் எங்கிருந்து புறப்பட்டு வந்தனர்? எந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-


நெல்லூர் அரசு மருத்துவமனை

1. கே.கே.சுனில்குமார், டெல்லி

2. அமர்பிரீத் சிங், டெல்லி

3. வெங்கட கோட்டீஸ்வர ராவ், விஜயவாடா

4. ராகவன், போபால்

5. சந்தீப் அக்னிஹோத்ரி, டெல்லி

6. எஸ்.எஸ்.வர்மா

7. வீணா மற்றும் அர்ஷிதா என்ற ஒரு வயது குழந்தை, டெல்லி

8. உசேன், டெல்லி

9. ரேகா, டெல்லி

10. சுக்தீப் சிங்

11. சாம்பசிவ ராவ்


நெல்லூர் பீப்புல்ஸ் பாலி கிளினிக்

1. வி.குருஷி, விஜயவாடா

2. ஷோபா சிங், ஜான்சி

3. உதயபாஸ்கர், விஜயவாடா

4. ஜி.ராமச்சந்திர சீனிவாசா, வாரங்கல்

5. குமுதுகுமார் பன்சால், ஆக்ரா

6. பிரசம்சா பன்சால், ஆக்ரா

7. எம்.சுஜன்மால் சாரதா பரேக், டெல்லி


நெல்லூர் பாலிநேனி மருத்துவமனை

1. எஸ்.மதன்லால்

2. உத்தம்குமார்

3. அனுஷா

4. திருப்பதியம்மா

5. சம்பத்குமார்



 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:20 pm

மெத்தனப்போக்கு

அடுத்தடுத்து இப்படி ரெயில் விபத்துக்கள் நடப்பதற்கு, ரெயில் பெட்டிகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் ரெயில்வே நிர்வாகத்தின் மெத்தனப்போக்கே காரணம் என்று பயணிகள் ஒட்டுமொத்தமாக தெரிவித்தனர்.

விபத்து நடந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில், ரெயில் பெட்டிகளில் மின்சார, மெக்கானிக்கல் பிரிவுகளில் போதிய ஊழியர்கள் இல்லை என்றும் அடிக்கடி டெல்லிக்கு சென்றுவருபவர்களும், விபத்து நடந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தவர்களுமான அனந்த கிருஷ்ணன், கணேஷ் ஷா என்ற பயணிகள் தெரிவித்தார்கள்.

அதன் விவரம் வருமாறு:-

போதுமான ஊழியர்கள் இல்லை

பொதுவாக, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் இட்டாசி, நாக்பூர், பலார்ஷா ஆகிய இடங்களில் சுத்தம் செய்யப்படவேண்டும். ஆனால், எப்போதுமே ரெயில் பெட்டிகளை சுத்தம் செய்வது இல்லை. பெட்டியில் எங்கு பார்த்தாலும் தூசி படிந்தும், ஆங்காங்கே குப்பைகளாகவும் இருக்கும். முன்பெல்லாம் ரெயில்வே நிர்வாகமே சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டது.

ஆனால், சமீப காலமாக, ரெயில் பெட்டிகளை சுத்தம் செய்து பராமரிக்கும் பணிகளை தனியாருக்கு காண்டிராக்ட் விட்டுள்ளனர். ஒப்பந்தக்காரர்கள் சரியாக சுத்தம் செய்வது இல்லை. ஒவ்வொரு `கோச்'சிலும் மெக்கானிக்கல், மின்சார பணிகளை மேற்கொள்வதற்கு ரெயில்வே ஊழியர்கள் அனுப்பப்படுவார்கள்.

ஆட்குறைப்பு

இப்போது அப்படி செய்வது இல்லை. காரணம் கேட்டால், ஊழியர் பற்றாக்குறை என்கிறார்கள். எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் பிரிவுகளில் காலியிடங்கள் ஏராளமாக உள்ளன. ஆட்குறைப்பை காரணம் காட்டி புதிதாக நியமிப்பது இல்லை. தனியார்வசம் வேலைகளை ஒப்படைக்கிறார்கள். பாதுகாப்புபற்றி பேசுபவர்கள் பாதுகாப்பின் பொறுப்பை உணராமல் செய்வதால் இதுபோன்ற விபத்துக்கள் நடக்கின்றன. அப்பாவி உயிர்கள் பலியாகும் நிலை ஏற்படுகிறது.

சென்னையில் பேசின்பால பணிமனையில் கோச் பராமரிப்பு பணிகளும் மோசமான நிலையில்தான் உள்ளது. எல்லாவற்றுக்கும் ஆட்குறைப்புதான் காரணம் ஆகும். இதுபோன்ற விபத்துக்களுக்குப்பிறகாவது ரெயில்வே நிர்வாகம், போதிய ஊழியர்களை நியமித்து விபத்துக்களில் இருந்து பயணிகளை பாதுகாக்கவேண்டும்.

இவ்வாறு பயணிகள் அனந்தகிருஷ்ணன், கணேஷ் ஷா தெரிவித்தனர்.



 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:21 pm


காப்பாற்ற முடியவில்லை


தீ விபத்தில் சிக்கிய ரெயிலின் எஸ்-7 பெட்டியில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த சுந்தர் என்பவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

"பெட்டியில் எப்படி தீப்பிடித்தது என்று தெரியவில்லை. எங்கள் பெட்டியில் இருந்த அனைவரும் திடீரென தீப்பிடித்து விட்டது என்று அலறியபடி வெளியே ஓடினார்கள். நானும் என்னுடன் வந்த நண்பரும் தீப்பிடித்த பெட்டிக்கு சென்று பார்த்தோம். அருகில் நெருங்க முடியாதபடி தீ எரிந்ததால் எங்களால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. தீயில் சிக்கி இருந்தவர்களை பார்க்கும்போது சுமார் 40 பேர் உள்ளே இருக்கலாம் என தெரிந்தது''.

இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்-9 பெட்டியில் பயணம் செய்த கோவில்பட்டியைச் சேர்ந்த அந்தோணிசாமி, பொன்னுசாமி ஆகியோர் கூறும்போது, "அதிகாலை 4.20 மணிக்கு எஸ்-11 பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது. எங்கள் உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கிவிட்டோம். பின்னர்தான் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். வெளியே வரமுடியாமல் திண்டாடியவர்களை நேரில் பார்த்தும் எங்களால் மீட்க முடியவில்லை. அந்த அளவுக்கு பெட்டி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது'' என்றனர்.

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வேலைதேடி 18 பேரை அழைத்து வந்த பெத்தம்மா என்ற பெண் விபத்தில் இருந்து தப்பியது பற்றி கூறியதாவது:-

குதித்து உயிர் தப்பினோம்

நாங்கள் பொது பெட்டிக்கு டிக்கெட் எடுத்து விட்டு, அங்கு இடம் இல்லாததால் அருகே இருந்த மற்றொரு முன்பதிவு பெட்டியில் கீழே அமர்ந்து வந்தோம். திடீரென எங்கள் பெட்டிக்குள் எரிந்த நெடி வீசியது. இதனால் ஏதோ தீப்பிடித்து விட்டது என்று நினைத்த நேரத்தில், திடீரென அலறல் சத்தம் கேட்டது. ஏதோ விபரீதம் நடந்தை உணர்ந்த நாங்கள் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது கீழே குதித்து உயிர் தப்பினோம்.

அப்போதுதான் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த பெட்டியை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். அதில் இருந்த யாரும் இறங்க முடியவில்லை. அந்த பெட்டிக்கு முன்னும், பின்னும் இருந்த பெட்டிகளில் இருந்து அனைவரும் கீழே இறங்கி வெளியேறினார்கள். இந்த நேரத்தில் மழை பெய்வது போல குளிர்ந்த காற்றும் வீசியதால் தீ பயங்கரமாக எரிந்தது. மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.



 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:21 pm


அவசர வழி மூலம் தப்பினேன்


எஸ்-10 கோச்சில் பயணம் செய்த போபாலை சேர்ந்த நிசாந்த்ஷா என்பவர் கூறும்போது, "சென்னைக்கு வேலைதேடி வந்தேன். தீப்பிடித்த பெட்டிக்கு முன் உள்ள பெட்டியில் நான் இருந்தேன். எங்கள் பெட்டி முழுவதும் புகை மூட்டத்தால் நிரம்பியிருந்தது. உடனடியாக அந்த பெட்டியில் இருந்த அவசர வழியாக நான் மட்டும் தப்பித்தேன். மற்ற யாருக்கும் அவசர வழி என்று ஒன்று இருப்பதே தெரியவில்லை. அனைவரும் சிதறி ஓடி மறுபக்கம் உள்ள வாயில் வழியாக கீழே குதித்தனர். இதில் சிலருக்கு காலில் ரத்தக்காயம் ஏற்பட்டது. அவர்கள் நெல்லூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 21/2 மணி நேரத்துக்கு பிறகு விபத்து நடந்த பெட்டி மற்றும் அதற்கு அடுத்து உள்ள பெட்டிகள் துண்டிக்கப்பட்டு, மீதம் பெட்டிகளுடன் சென்னை சென்றது'' என்றார்.

சீக்கியர் அலறினார்...

எஸ்-9 பெட்டியில் பயணம் செய்த கோவில்பட்டியைச்சேர்ந்த பொன்னுசாமி கூறும்போது, "கடந்த 23-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற மத்திய அரசு ஊழியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் சென்னை திரும்பிக்கொண்டு இருந்தோம். கழிவறைக்கு சென்ற சீக்கியர் ஒருவர் அலறிக்கொண்டு வந்து தனது மகனை தூக்கியபடி கதவை நோக்கி ஓடினார். அப்போதுதான் அருகில் உள்ள பெட்டியில் தீப்பிடித்துள்ளதை உணர்ந்தோம். சில நிமிடத்தில் ரெயிலின் வேகம் குறைந்தது. உடனே அனைவரும் வெளியில் குதித்து உயிர் தப்பினோம்'' என்றார்.

போபால் என்ஜினீயர்கள்


தீ பிடித்த எஸ்.11 பெட்டியில் பயணம் செய்த போபால் என் ஜினீயர்கள் ஓம் பிரகாஷ்(வயது 25), வினோ சிங்(23), குபேந்திர சிங்(25) ஆகியோர் ஜன்னல் வழியாக கிழே குதித்து, காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

தற்போது அவர்கள் சிகிச்சைக்காக பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் கூறியதாவது:-

`நாங்கள் மத்திய பிரேதச மாநிலம் போபாலில் உள்ள பெல் (பி.எச்.ஈ.எல்.) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறோம். திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்காக நேற்றுமுன்தினம் காலை 8 மணிக்கு போபால் ரெயில் நிலையத்தில், தமிழ்நாட்டிற்கு செல்வதற்காக தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினோம். ரெயிலில் எஸ்.11 பெட்டியில் பயணம் செய்த நாங்கள் அரட்டை அடித்துக் கொண்டு வந்தோம்.

ஓடும் ரெயிலில் குதித்தனர்


பின்னர் நாங்கள் 3 பேரும் இரவு தூங்க சென்று விட்டோம். இந்தநிலையில் அதிகாலை 4.20 மணி அளவில் திடீரென்று புகை மூட்டம் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டது. கண்விழித்து பார்த்தால் குழந்தைகளும், பயணிகளும் தீயில் கருகி அலறியபடி அபாய குரல் எழுப்பினார்கள். எங்களால் அவர்களை காப்பற்ற முடியவில்லை.

நாங்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடும் ரெயிலில் இருந்து குதித்தோம். பின்னர் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. சில மணி நேரம் கழித்து ரெயில்வே அதிகாரிகள் எங்களை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து. ரெயிலில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் நாங்கள் பிழைத்தது கடவுளின் கிருபையே'

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ரெயில்வே மருத்துவமனையில் காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்கள் 3 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:23 pm

கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

புதுடெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில், இன்று காலை 5 மணியளவில், ஆந்திர மாநிலம், நெல்லூருக்கு அருகே மின் கசிவின் காரணமாக பெரும் விபத்துக்கு உள்ளானதில் பலர் ரெயிலிலேயே இறந்து சாம்பலாகி விட்டனர் என்றும், மேலும் பலர் பலத்த காயமுற்றிருக்கின்றனர் என்றும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த விபத்து என்னைப் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முன் வந்திருப்பதாகவும், மத்திய ரெயில்வே இணை மந்திரி விபத்து நடந்த இடத்திற்கு சென்று கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.



 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:23 pm

விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பொதுவாக போக்குவரத்து என்பது சீரான வேகத்தில் போதிய பாதுகாப்போடும், உரிய வசதிகளோடும் அமைய வேண்டும். இதனாலேயே மத்திய அரசு ரெயில்வே துறையை தன்னுடைய பொறுப்பில் ஏற்று நடத்தி வருகிறது. ஆனால் அடிக்கடி ரெயில் விபத்துக்களை பார்க்கிறபொழுது, எந்த நோக்கத்திற்காக இந்திய அரசு இந்த துறையை மேற்கொண்டு நடத்தி வருகிறதோ, அந்த நோக்கமே பாழாகி வருகிறது. இந்திய அரசு முழு அக்கறையும், போதிய கவனமும் பயணிகளின் பாதுகாப்பில் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை இழந்து துயருறும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் பெற பிரார்த்திக்கிறேன். மத்திய அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் வேலையும், போதிய இழப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:23 pm

பி.எஸ்.ஞானதேசிகன் எம்.பி.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் எம்.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பற்றி எரிந்து, அதில் பல உயிர்கள் இறந்திருப்பதாக வந்த செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தந்திருக்கிறது.

சமீபகாலமாக அதிகளவில் ரெயில் விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரெயில் பெட்டிகளின் பராமரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலகீனமாக இருப்பதையே இது காட்டுகிறது. ஒவ்வொரு விபத்திலும் விசாரணை நடைபெறுவதும், நடைபெற்ற அந்த விசாரணை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதையும், விபத்துக்கள் தவிர்க்கப்பட சொல்லப்பட்ட ஆலோசனைகள் ஏற்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை.

விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:23 pm

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த பல பயணிகள் உயிரிழந்தனர் என்பதையும், இவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு தரமான மருத்துவம் வழங்கப்பட வேண்டும். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரெயில்வே துறை சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடும், அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:24 pm


தா.பாண்டியன்


இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ரெயில் விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. உயிரிழந்தோருக்கும், காயமடைந்தோருக்கும் உரிய இழப்பீடுகளை உடனடியாக வழங்குமாறு ரெயில்வே துறையை வலியுறுத்துகிறோம்.

ரெயில்வே துறை தொடர் ரெயில் விபத்துகளில் இருந்து பாடம் கற்று, இனி வருங்காலங்களில் விபத்துக்கள் நிகழாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டுமாய் இந்தியக் கம்ïனிஸ்டு கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:24 pm

டி.ஆர்.பாலு

பாராளுமன்ற ரெயில்வே நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

டெல்லி-சென்னை தமிழ்நாடு விரைவு ரெயில் எஸ்-11 பெட்டி, நெல்லூர் அருகே தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாராளுமன்ற ரெயில்வே நிலைக்குழு சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற விழைகிறேன்.

மிகவும் கவலையளிக்க கூடிய 20 பேரின் உயிரை பறித்த இந்த கோர நிகழ்வு தொடராமல், தடுத்து நிறுத்த டெல்லியில் அடுத்து நடைபெறவிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ரெயில்வே வாரியத்தின் உயரதிகாரிகள் அடங்கிய பாராளுமன்ற ரெயில்வே நிலைக்குழு ஆய்வு செய்து மீண்டும் இதுபோன்ற விபத்துகள் தொடராமல் இருக்க உரிய ஆலோசனைகள் பாராளுமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:24 pm


ஏ.சி.சண்முகம்


புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில், ஆந்திர மாநிலம் நெல்லூர் ரெயில் நிலையம் அருகில் வரும்போது, ரெயிலில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக, ஒரு பெட்டியில் பயணம் செய்த 32 பேர்கள் தீயில் சிக்கி பலியானார்கள் என்னும் தகவல் அறிந்து மிகவும் துயரமடைந்தேன். இனிவரும் காலங்களில், ரெயில் பெட்டிகளின் கதவுகள் இலகுவாகவும், விபத்துகள் ஏற்படும்போது தப்பித்து உயிர் பிழைக்க அவசர கால கதவினை அமைக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே அமைச்சகத்தை கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் ந.சேதுராமன், தேசிய அம்பேத்கர் மக்கள் கழக தலைவர் ஞானசேகரன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக