|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிவகார்த்திகேயனிடம் 160 மில்லியன் டாலரை ஏமாற்றிய நபர் - விட்டுக்கொடுத்த சிவா !! by md.thamim Today at 1:07 pm
» அரிசி
by பூவன் Today at 1:07 pm
» பொது அறிவுத் தகவல்கள்!
by madhukrish Today at 1:06 pm
» முகநூலில் ரசித்தவை-2
by ஹர்ஷித் Today at 1:06 pm
» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by pon.sellamuththu Today at 1:05 pm
» அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
by பாலாஜி Today at 1:04 pm
» பிலிப்பைன்ஸ்
by madhukrish Today at 1:01 pm
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by பாலாஜி Today at 1:00 pm
» ஏராளமான மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை!
by md.thamim Today at 12:54 pm
» 8000 - பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதுவுக்குப் பாராட்டுக்கள்!
by ஜாஹீதாபானு Today at 12:47 pm
» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by உமா Today at 12:44 pm
» பதவி! - தெனாலிராமன் கதை
by பூவன் Today at 12:18 pm
» ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!
by யினியவன் Today at 11:55 am
» பூண்டு ஊறுகாய்
by பாலாஜி Today at 11:46 am
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -6)
by பாலாஜி Today at 11:45 am
» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by யினியவன் Today at 11:42 am
» எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !
by பாலாஜி Today at 11:28 am
» கடவுள் எங்கே?
by ராஜா Today at 11:08 am
» பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள்
by ராஜா Today at 11:04 am
» முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு!
by ராஜா Today at 11:00 am
» புற்று - முற்றவிடக் கூடாது!
by ராஜா Today at 10:58 am
» கிளாஸ் பெயிண்டிங்
by madhukrish Today at 10:53 am
» சரியான பொருள்!
by பூவன் Today at 10:49 am
» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by பூவன் Today at 10:37 am
» uTorrent மென்பொருளை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு...
by Muthumohamed Today at 10:31 am
» கல்வி பற்றி காந்தியடிகள்
by பூவன் Today at 10:07 am
» அம்மாவுக்குக் குடும்பம் இல்லை.. நாம்தான் அவரின் பிள்ளைகள்!
by யினியவன் Today at 10:06 am
» என் தனிமை தருணங்கள் .....
by பூவன் Today at 10:02 am
» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 9:33 am
» மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..!
by முத்துராஜ் Today at 8:58 am
» பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
by முத்துராஜ் Today at 8:55 am
» தீக்கோழி
by அசுரன் Today at 8:46 am
» அலெக்ஸாண்டர் பிளெமிங் & வின்ஸ்டன் சர்ச்சில்
by அசுரன் Today at 8:45 am
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by அசுரன் Today at 8:42 am
» கொடியேற்றினால் மட்டும் போதுமா?
by அசுரன் Today at 8:41 am
» விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
by சிவா Today at 3:09 am
» ஆண்டவன் உத்தரவு!
by சிவா Today at 2:32 am
» சித்தர் வணங்கிய சிவபாலன்
by சிவா Today at 2:28 am
» ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு
by சிவா Today at 2:23 am
» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by Muthumohamed Today at 1:16 am
Top posting users this week
| சிவா | ||||
| Muthumohamed | ||||
| madhukrish | ||||
| பாலாஜி | ||||
| பூவன் | ||||
| அசுரன் | ||||
| ராஜா | ||||
| யினியவன் | ||||
| ஹர்ஷித் | ||||
| md.thamim |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி

சென்னை: டெசோ மாநாடு குறித்து இலங்கை அரசின் சார்பில் செய்யப்பட்டு வரும் தவறான பிரசாரத்தை இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர்களோ, உலகத் தமிழர்களோ நம்ப வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் சார்பாக 6-8-2012 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், டெசோ மாநாடு இலங்கைக்கு எதிரான விஷயம் என்றும், இந்த மாநாட்டிலே கலந்து கொள்ளும் இலங்கையர்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும், இந்த மாநாட்டினை இலங்கை அரசு வன்மையாக கண்டிக்கின்றது என்றும், அந்த அரசின் சார்பில் ஊடகத்துறை அமைச்சர் ஒருவர் இந்த மாநாட்டில் பங்கேற்போர் மீது அரசு கவனம் செலுத்தியுள்ளதாக கூறியிருப்பதாகவும், செய்திகள் கிடைத்துள்ளன.
இலங்கை அரசின் அறிக்கையும், இலங்கை அமைச்சர் கூறியிருப்பதும் கற்பனையான குற்றச்சாட்டின் அடிப்படையில் புனையப்பட்ட ஒன்றாகும். இலங்கைத் தமிழரின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்காகத்தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது கவலையைத் தருகிறது.
இலங்கைத் தமிழர் நலன் பேணும் முயற்சிகளை இம்மாநாடு முன்னெடுத்துச் செல்லும். அதற்காகவே இந்த டெசோ மாநாடு நடைபெறுகிறது. இலங்கை அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள இந்தத் தவறான பிரசாரத்தை இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர்களோ, உலகத்தமிழர்களோ நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி ஒன் இந்தியா

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி
இவரு சொல்றத எதைத் தான் நம்புறாங்க? அடுத்து 4g வரப் போகுது தலைவரே இந்தியாவில் - அதுக்கு வாரிசுகள தயார் பண்ற வேலையைப் பாருங்க தலைவா.

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20325
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4246
Re: தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி
நோ கமெண்ட்ஸ் ...ஒன்லி டான்ஸ்
(பின்னூட்டம் இல்லை , ஆட்டம் மட்டுமே )
(பின்னூட்டம் இல்லை , ஆட்டம் மட்டுமே )

புரட்சி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4738
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 736

Re: தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி
ஐயோ ஐயோ, இன்னும் எத்தனை நாளைக்கு நீ இருக்கப்போர, அது வரைக்கும் ஏதாவது கத விட்டுக்கிட்டே இரு. உனக்கும் பொழுது போகனுமில்ல.

மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள்: 2022
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 361
Re: தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி

விநாயகாசெந்தில்- தளபதி

- பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379
Re: தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி
"உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே!
காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே!
சில முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே!
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே!'
என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் கலைஞர்
இவர் அரசியல் வாழ்வின் தி(தீ)ராவிடம்
காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே!
சில முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே!
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே!'
என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் கலைஞர்
இவர் அரசியல் வாழ்வின் தி(தீ)ராவிடம்

தமிழ்நேசன்1981- இளையநிலா

- பதிவுகள்: 873
சேர்ந்தது: 21/11/2010
மதிப்பீடு: 142

Re: தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி
காலம் கடந்து கருணாநிதி கையில் எடுத்திருக்கிறார் 'டெசோ’ அமைப்பை. அதன் சார்பில் நடத்தப்படுகிறது ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு. அது என்னவிதமான விளைவுகளை உருவாக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈழத் தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?
சேசுராஜ், முன்னாள் போராளி.
(பெயர் மாற்றப்பட்டு உள்ளது)
''ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து, அதன் தொடர்ச்சியாக ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவித்தபோது, நான் வெள்ளான் முள்ளிவாய்க்காலில், தற்காலிகமாக மருத்துவமனை ஆக்கப்பட்டிருந்த ஒரு பாடசாலையின் தரையில் காயப்பட்டு அரைகுறை சுயநினைவுடன் படுத்துக்கிடந்தேன். அந்தச் சிறிய பாடசாலையில் சுமார் 100 வரையான காயப்பட்ட போராளிகளும் 500 வரையான காயப்பட்ட பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம் எங்கும் வியாபித்து இருந்தது. ஷெல் அடி காதைப் பிளந்தது. மருத்துவமனையில் சரியான மருந்துகள், மருத்துவ ஆளணி இல்லாமல் மருத்துவர்கள் திணறிக்கொண்டு இருந்தனர். அன்றைய பொழுதில் கடைசி நம்பிக்கையாக கருணாநிதியை நம்பிக்கொண்டு இருந்தனர் எங்களில் பலர். அந்த அவல நிலையிலும் வானொலிப் பெட்டியின் முன் குந்தி இருந்தனர். கருணாநிதி அறிவித்ததாக 'போர் நிறுத்தப்பட்ட அறிவிப்பு’ வானொலியில் வந்த கணத்தில் மக்கள் அதனை முழுவதும் நம்பினார்கள். எங்கும் சந்தோஷ மயம். அனைத்தையும் இழந்துவிட்ட அந்த நிலையில் அவர்கட்கு கருணாநிதி மீட்பராகத் தெரிந்தார். தேவதூதராகத் தென்பட்டார். ஆனால், நடந்தது எல்லாம் நாடகம் என்பதை ஜந்து நிமிடங்களுக்குள் நான் உணர்ந்துகொண்டேன். அன்றுதான் வழமையைவிட ஷெல் அடி அதிகமாக இருந்தது. நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.
நான் தலைவர் பிரபாகரனிடம் பற்றுக்கொண்டு போராட்டத்தில் இணைந்துகொண்டவன். தமிழீழம் என்பதுதான் எமது ஒற்றை நம்பிக்கையாக இருந்தது. அந்த நம்பிக்கை பொய்த்துப்போனதுகூட எனக்கு வலிக்கவில்லை. உடம்பில் தெம்பு இருந்தவரை நான் போராடினேன் என்கிற ஆத்ம திருப்தி இருக்கிறது எனக்கு. ஆனால், நாங்கள் நம்பிய ஒருவரால் ஏமாற்றப்பட் டோம் என்பதை இன்று வரை எம்மால் ஜீரணிக்க முடியவில்லை!''
ஸ்ரீதரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
''நாங்கள் 60 வருட காலம் போராடிப் பார்த்துவிட்டோம். இன்றைக்கு எங்கள் எதிர்காலம் சம்பந்தமாக எந்தவிதமான நம்பிக்கையும் அற்று இருக்கிறோம். இத்த கைய சூழலில் எமக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமை இந்தியத் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் உண்டு. இப்போது உள்ள நிலையில் அவர் களால் மாத்திரம்தான் ஈழத் தமிழர்களின் மேலான அடக்குமுறையைச் சர்வதேசத்துக் குக் கொண்டுசெல்ல முடியும்.
இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. தலைவர் கருணாநிதி நடத்தும் மாநாட்டு அழைப்பை நாங்கள் எதிர்கொள்கிறோம். சொந்த விருப்புவெறுப்புகளை விடுத்துப் பார்த்தால் அவர் இந்தியாவின் குறிப்பிடத்தக்க தலைவர். அவர் பின்னால் பெரும் தொண்டர் படையணி உள்ளது. அவரை நாங்கள் புறக்கணிக்க முடியாது. ஆனால், அவரிடம் உளச் சுத்தியான ஈழ ஆதரவு இருக்கும் என நம்பும் அளவு நான் முட்டாள் அல்ல. ஈழத் தமிழர்கள் அனைவருமே கருணாநிதியின் மேல் மிகப் பெரிய கோபத் திலும் வெறுப்பிலும் உள்ளார்கள். ஈழத்தில் மக்கள் கொத்துக் கொத் தாகக் கொல்லப்பட்டபோது ஆட்சியில் இருந்தவர் அவர். ஈழப் போரை நிறுத்த வேண்டிய தார் மீகக் கடமை அவருக்கு இருந்தது. ஆனால், அவர் அதைச் செய்யவில்லை; சோனியா காந்திக்கு விசுவாசமாக இருந்தார். புலிகள் மீதும் பிரபாகரன் மீதும் கடும் வெறுப்பில் அவர் இருந்தார். அந்த வெறுப்பைபுலிகள் தோற்றுக்கொண்டிருந்தபோது அவர்கள் மேல் காட்டினார். ஆனால், புலிகளின் தோல்வி, ஈழத் தமிழர்களின் தோல்வி என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. அவர் எதுவும் செய்யாமல் இருந்திருந்தாலே ஈழத் தமிழன் அவரை மன்னித்து இருப் பான். ஆனால், உண்ணாவிரதம் எனும் நாடகத்தை நடத்திவிட்டு, 'ஈழத்தில் போர் முடிந்துவிட்டது’ என அவர் ஒரு பொய்யான தகவலை உலகத்துக்கும் தமிழ்நாட்டு மக்க ளுக்கும் சொல்லி தமிழ்நாட்டிலே ஏற்பட்ட மக்களின் எழுச்சியை நயவஞ்சகமாக அடக்கினார். அதை நாம் எப்படி மறப்பது?''
யோ.கர்ணன், இறுதிப் போரில் பங்கெடுத்த போராளி
'' 'தமிழகத் தேர்தல் அரசியல் இழுபறிக்குள் எமது ரத்தத்தை விற்பனைப் பொருளாக்கிவிடாதீர் கள்’ என்பதே எமது வேண்டுகோள். 'தயவுசெய்து எங்களை விட்டிடுங் கடா’ என ஈழத் தமிழர்கள் கை கூப்பிக் கதறி அழுதாலும், இந்த விற்பனையாளர்கள் விட மாட்டார் கள்போல் உள்ளதே.
கருணாநிதியையும் ஒரு மீட்பராக ஈழத் தமிழர்கள் துதித்த காலம் ஒன்று இருந்ததுதான். நாங்கள் வேர் கள் அறுபட்டு அகதியாக ஓடிக் கொண்டிருந்த காலத்தில், பற்றுவதற்கு ஒரு சிறு துரும்பாவது கிட்டாதா என இந்தப் பூமிப் பந்தின் திசைகள் எல்லாம் கைகளை அளைந்து அந்தரித்துக்கொண்டு இருந்த நாட்களில் அவர் எங்கள் கண்களில் தென் பட்டார்தான். மனிதச் சங்கிலிப் போராட் டம் உள்ளிட்ட அவரது செயற்பாடுகள்தான் அந்த நாட்களில் பெரும்பாலானவர்களின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. யுத்த வளையத்தில் அதிகமும் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்றாகவும் அவரது பெயர் இருந்தது. ஆனால், நாங்கள் வருந்தியழைத்த அந்தப் பொழுதுகளில் எல்லாம் அவர் வரவே இல்லை. இப்போது மீண்டும் வந்திருக்கிறார், எல்லாம் முடிந்த பின், நாங்கள் அழைக்காமலேயே. இதைப் பார்த்து நாம் அழுவதா, இல்லை சிரிப்பதா, இல்லை சிரித்துக்கொண்டே அழுவதா?
கருணாநிதிக்குச் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று உண்டு. ஈழத்தில் மகிந்தராஜ பக்ஷேவை நம்புவதற்குத் தயாராக உள்ள தமிழர்கள்கூட கருணாநிதியை நம்புவதற் குத் தயாராக இல்லை!''
சயந்தன், ஈழ எழுத்தாளர்: ''ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் - குறிப்பாக தி.மு.க-வின் தற்போதைய நடவடிக்கைகளை - ஒருவிதமான விரக்தி, ஏமாற்றம், ஏளனம், கோபம் எனக் கலவையான உணர்வுகளின் ஊடாகத்தான் பார்க்கிறார்கள். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களை விடுத்துப் பார்த் தாலும்கூட, இறுதி யுத்தத்தில் சிக்குண்ட வர்கள், உறவுகளை இழந்து தவித்தவர்கள், இன்னமும் சொந்த வாழிடங்களுக்குத் திரும்ப முடியாது அவலப்படுவோர் அனைவரிடத்திலும் கலைஞர் மீதான ஆற்றாமையும் கோபமும் வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவுக்கு உள்ளது. நம்பிக் கெட்ட சனங்களின் உணர்வுகள் அவை.
ஈழ விவகாரமும் தமிழகத் தேர்தல் அரசியலில் ஒரு முக்கியக் கூறாகப் பார்க் கப்படுவதால், அவரவர் வசதிப்படிநடனம் ஆடுகிறார்கள். அந்த ஆட்டத்தில் 'டெசோ’வும் ஒன்று. சற்றே புத்தி தெளிவுள்ள ஒருவனால்கூட இதனை அடையாளம் கண்டுகொள்ள முடியும். காலங்காலமாகத் தமது சொந்த மீனவர்கள் சுடப்படுவதைக்கூட நிறுத்த முடியாதவர்கள், இப்படி எல்லாம் கூத்தடிக் கும்போது, யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது
'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.’ ''
ஆனந்த விகடன்

பேகன்- இளையநிலா

- பதிவுகள்: 775
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 106
Re: தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி
பேகன் wrote:
அருமையான படம் 
ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21461
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2275

Re: தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி
பேகன் wrote:
இதுதான் உணமையான நிலை...நன்றி பேகன்

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4604
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

Re: தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி
உண்மை சித்திரம்.. 
அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 11247
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 1243
Re: தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி
தமிழ் நாட்டின் சாபக்கேடு

கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 3424
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 510
Re: தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி
இலங்கைத்தமிழர்களின் முதுகில் குத்தி அவர்களின் இறுதி ஓலங்களையும் கதறல்களையும் கருதாத இந்த அரசியல் ஓநாய் இப்போது இலங்கைத்தமிழர்கள் நனைகிறார்கள் என்று ஓலம் இடுகிறது. இதனை இன்னும் நம்பிக்கொண்டு உண்மையில் ஈழத்தமிழர்மேல் பற்றுள்ள ஒரு சில திமுக தொண்டர்களையும் ஏமாற்றி வஞ்சகமாய் பேசி அடுத்த தேர்தலுக்கு ஓட்டுக்குவிக்க எண்ணும் இந்த கல்லுளி மங்கன் கருணாநிதியின் நடிப்பு இனியும் கடையேறாது.
உலகத்தமிழர்களே இலங்கை வாழ் சகோதரர்களே.. ஒரு கடுகளவு நம்பிக்கை கூட இந்த கயவனின் டெசோ நாடகத்தின் மேல் வைக்காதீர்கள். நம் கையே நமக்கு உதவி என்பதை மனதில் இருத்துங்கள்.
இந்த நயவஞ்சக துரோகியின் பொய்யும் புளுகும் இன்னும் எத்தனை வருடங்கள் செல்லுபடியாகப்போகிறது என்று வியக்கிறேன்.
இப்படி ஒரு மானங்கெட்ட பிழைப்பு பிழைப்பதை விட கருணாநிதி வேறு தொழில் செய்து பிழைக்கலாம்.. த்தூ..

கபாலி- இளையநிலா

- பதிவுகள்: 578
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 75

Re: தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி
தம்பிகளே நன்றாக சாபிடுங்கள் காலை மணி பத்துக்கு நாம் உன்ன விரத பந்தலுக்கு
செல்கிறோம் பின்னர் சாப்பாடு மாலை நான்கு மணிக்கு தான். நாம ஸ்பூன்ல சாபிடற
மேட்டர் நம்ம நம்பி வீணா போன தொண்டனுக்கு தெரிய கூடாது அவன் முன்னாடி
கொஞ்சம் இருமுங்க மித்தத அந்த கிறுக்கனுங்க நிஜம்னு நம்பி தலைவா தலைவா என்று
ஊர கூப்பிட ஆரம்பிச்சுருவானுங்க

தர்மா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 1313
சேர்ந்தது: 02/09/2011
மதிப்பீடு: 382
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum