|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்by யினியவன் Today at 12:53 am
» அறிமுக டைரக்டரின் தந்திரத்தால் மீண்டும் ஜோடி சேர்ந்த வடிவேலு-சிங்கமுத்து?
by யினியவன் Today at 12:31 am
» திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
by யினியவன் Today at 12:29 am
» தோனி - ஒரு அதிசயம்
by ரா.ரா3275 Today at 12:14 am
» மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா?
by தளிர் அலை Yesterday at 11:57 pm
» திருமணம் சுமையல்ல...
by தளிர் அலை Yesterday at 11:53 pm
» அறிமுகமாகியது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Scanner Mouse
by தளிர் அலை Yesterday at 11:50 pm
» அன்ரோயிட் சாதனங்களில் இணைய இணைப்பு அற்ற நிலையில் Google Translate
by தளிர் அலை Yesterday at 11:49 pm
» ட்விட்டர், நோக்கியா உட்பட புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்ப்பின்னணி
by தளிர் அலை Yesterday at 11:48 pm
» குழந்தைகள் விஷயம். - குட் டச் , பேட் டச் - அவசியம் பகிருங்கள் !
by தளிர் அலை Yesterday at 11:42 pm
» ஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா!
by ரா.ரா3275 Yesterday at 11:41 pm
» அரிசி
by தளிர் அலை Yesterday at 11:35 pm
» அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
by யினியவன் Yesterday at 11:11 pm
» பெயர் மாற்றம்
by ரா.ரா3275 Yesterday at 11:09 pm
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by ரா.ரா3275 Yesterday at 11:07 pm
» "வெள்ளுடை வேந்தர்" சர்.பிட்டி.தியாகராயர்!
by சாமி Yesterday at 11:06 pm
» ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Adobe Photoshop Touch வெளியிடப்பட்டது
by முத்துராஜ் Yesterday at 11:04 pm
» சர்தார் அ.வேதரத்னம்பிள்ளை
by சாமி Yesterday at 10:59 pm
» ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!
by ரா.ரா3275 Yesterday at 10:56 pm
» கணவன் - மனைவி சண்டையை சரி செய்ய வழிகள்...
by ரா.ரா3275 Yesterday at 10:54 pm
» ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!
by krishnaamma Yesterday at 10:52 pm
» 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!
by ரா.ரா3275 Yesterday at 10:51 pm
» தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !!
by ரா.ரா3275 Yesterday at 10:49 pm
» தீவிரவாதத்தை தூண்டும் சுண்டைக் காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்: நாராயணசாமி
by ரா.ரா3275 Yesterday at 10:46 pm
» தமிழ் முனிவர் அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by சாமி Yesterday at 10:39 pm
» தாயிற் சிறந்ததொரு கோயிலு மில்லை...!
by சாமி Yesterday at 10:29 pm
» தமிழா? டமிலா?
by ரா.ரா3275 Yesterday at 10:26 pm
» சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
by தளிர் அலை Yesterday at 10:26 pm
» நிகழ்காலம்
by தளிர் அலை Yesterday at 10:20 pm
» வள்ளுவரும் வள்ளலாரும்!
by சாமி Yesterday at 10:12 pm
» சிவகார்த்திகேயனிடம் 160 மில்லியன் டாலரை ஏமாற்றிய நபர் - விட்டுக்கொடுத்த சிவா !!
by முத்துராஜ் Yesterday at 10:09 pm
» உங்க வீட்டை அழகாக்க இதோ.....!
by யினியவன் Yesterday at 9:59 pm
» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by eraeravi Yesterday at 9:52 pm
» மனதை கவரும் வண்ணப்பறவைகள்
by தளிர் அலை Yesterday at 9:49 pm
» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by தளிர் அலை Yesterday at 9:47 pm
» நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!
by ராஜு சரவணன் Yesterday at 9:42 pm
» என் தனிமை தருணங்கள் .....
by யினியவன் Yesterday at 9:30 pm
» // உங்களையே நம்புங்கள் //
by தளிர் அலை Yesterday at 9:28 pm
» ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:
by பூவன் Yesterday at 9:21 pm
» சுமிருதியும் திருக்குறளும்
by சிவா Yesterday at 8:41 pm
Top posting users this week
| balakarthik | ||||
| MADHUMITHA | ||||
| சிவா | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ஹர்ஷித் | ||||
| பூவன் | ||||
| பாலாஜி | ||||
| ராஜு சரவணன் |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மகாபாரதம் (தமிழில்)
Page 1 of 1 • Share •
மகாபாரதம் (தமிழில்)
நான் மகாபாரதம் புத்தகத்தை தமிழில் வாங்க விரும்புகின்றேன். இணையத்தில் தேடியபோது பல நூல்கள் இருப்பதாக அறிந்தேன். எதை வாங்குவது என்ற குழப்பமாக இருக்கிறது.
1. மஹாபாரதம்(உரைநடையில்) - துரை ராஜாராம்
2. மகாபாரதம் - அ.லெ.நடராசன்
3. மஹாபாரதம் பேசுகிறது - சோ
4. மகாபாரதம் - நா. பார்த்தசாரதி
5. மகாபாரதம் (வியாசர் விருந்து) - ராஜாஜி
யாரவது உதவி செய்ய முடியுமா...?

ktsamy- புதியவர்

- பதிவுகள்: 3
சேர்ந்தது: 07/03/2012
மதிப்பீடு: 10
Re: மகாபாரதம் (தமிழில்)
முதலில் உங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுக படுத்தி கொள்ளுங்கள் உறவுகள் உங்களுக்கு உதவுவார்கள்

இரா.பகவதி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6972
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 973

Re: மகாபாரதம் (தமிழில்)
இரா.பகவதி wrote:முதலில் உங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுக படுத்தி கொள்ளுங்கள் உறவுகள் உங்களுக்கு உதவுவார்கள்

புரட்சி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4747
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 747

Re: மகாபாரதம் (தமிழில்)
ஏற்கெனவே அறிமுகம் செய்து கொண்டுவிட்டேன்.
உதவிக்காக காத்திருக்கிறேன்
உதவிக்காக காத்திருக்கிறேன்

ktsamy- புதியவர்

- பதிவுகள்: 3
சேர்ந்தது: 07/03/2012
மதிப்பீடு: 10
Re: மகாபாரதம் (தமிழில்)
வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிடும் மகாபாரத நூலை வாங்க நான் பரிந்துரைக்கிறேன். (அதை நான் நேரடியாகப் படித்ததில்லை. இருப்பினும் கேட்டதிலிருந்து நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்). இல்லையேல் பிரேமா பிரசுரத்தார் வெளியிடும் வில்லிபாரதத்தை வாங்க முயலுங்கள்.

Rangarajan Sundaravadivel- பண்பாளர்
- பதிவுகள்: 156
சேர்ந்தது: 02/08/2012
மதிப்பீடு: 55
Re: மகாபாரதம் (தமிழில்)
Rangarajan Sundaravadivel wrote:வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிடும் மகாபாரத நூலை வாங்க நான் பரிந்துரைக்கிறேன். (அதை நான் நேரடியாகப் படித்ததில்லை. இருப்பினும் கேட்டதிலிருந்து நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்). இல்லையேல் பிரேமா பிரசுரத்தார் வெளியிடும் வில்லிபாரதத்தை வாங்க முயலுங்கள்.

புரட்சி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4747
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 747

Re: மகாபாரதம் (தமிழில்)
ராஜாஜி எழுதிய மகாபாரதம் படிப்பதற்கு எளிமையாக இருக்கும் ! சுருக்கமாகவும் இருக்கும் !!

கிருபானந்தன் பழனிவேலுச்சா- இளையநிலா

- பதிவுகள்: 364
சேர்ந்தது: 28/12/2011
மதிப்பீடு: 65

Re: மகாபாரதம் (தமிழில்)
நண்பரே, நீங்கள் மகாபாரத்தில் எந்த அளவு தகவல் அறிய விரும்புவதை பொறுத்து புத்தகங்கள் மாறுபடும்.
பக்தி மார்க்கமாக வெறும் கதையை சுவையுடன் படிக்க விரும்பினால் - ராஜாஜி
சிறுவர்களுக்கு கதை சொல்ல அல்லது பரிசளிக்க விரும்பினால், எளிமையான நடையில் இருக்கும் - கிருபானந்த வாரியாரின் மகாபாரதம் -
ஆழ்ந்து, அத்தியாயம், அத்தியாயமாக வியாசரின் மூல நூலில் உள்ள தகவல்கள் அனைத்தையும் (பகவத் கீதை விரிவாக விளக்கப்படவில்லை) படிக்க விரும்பினால்- சோவின் மகாபாரதம்...
கவிதை நடையில், தமிழின் சுவையும், கதையின் சுவையுடன் படிக்க விரும்பினால் - வாலியின் பாண்டவர் பூமி.

சதாசிவம்

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 1519
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 917
Re: மகாபாரதம் (தமிழில்)
வடமொழியில் இருந்து நேரடியாகத் தமிழாக்கப்பட்ட பதிப்பே அறிந்து கொள்ளச் சிறந்தது.
நான் முதலில் தமிழில் முழு மஹாபாரதம் இல்லை என்றேயிருந்தேன். ராஜாஜி எழுதியது, சோ எழுதியது எல்லாமே சுருக்கங்கள்தான். எஸ்.ரா. அவர்கள் மற்றும் ஜெயமோகன் அவர்கள் ஆகியோர் மஹாபாரத்தின் துணை கொண்டு அற்புதமான நாவல்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால், முழுமையான மகாபாரதம் இல்லையே என்றே நினைத்திருந்தேன். ஆனால், பல காலம் தேடியதில் கீழ்க்கண்ட பதிவு கிடைத்தது. அப்போதுதான் திரு. ம .வீ. ராமானுஜாசாரியார் அவர்களின் முழு மஹாபாரதத்தைப் பற்றி அறிந்தேன்.
கீழ்க்கண்ட அனைத்தும் http://idlyvadai.blogspot.in/2012/09/blog-post_21.html என்ற வலைப்பதிவில் இருந்து எடுத்தது.
1903-ல் ஆசாரியார் தமது நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க திரு.ம .வீ. ராமானுஜாசாரியார் மஹாபாரதத்தைத் தமிழாக்க துணிந்தார். ஆயினும் இந்தப் பெரிய காரியத்தில் ஏற்படக்கூடிய சிரமங்களை நினைத்து இவர் மனம் கலங்க ஆரம்பித்தார். பிறகு ஒருவாறாக மொழிபெயர்க்கத் தொடங்கினார்.
கிட்டத்தட்ட 25 வருடங்களாக இந்த மொழிபெயர்ப்புப் பணியை இவர் செய்து, மஹாபாரதத்தை தமிழில் அச்சிட்டுக் கொடுத்தார். இதற்காக இவர் தமது ஆசிரியர் பணியையும் விட்டு விலகினார்.
ஆரம்பத்தில் இந்தப் பணியினுடைய சிரமங்களை நோக்கி வை.மு. சடகோப ராமானுஜாசாரியார் உள்ளிட்ட பெரியவர்கள் சிலர் இதை தனியொரு ஆளாகச் செய்யவேண்டாம் என்று கூறி தடுக்க முனைந்தனர். ஆயினும் இவர் கண்ணபிரானது திருவருள் ஒன்றையே துணையாகக் கொண்டு இந்த மலைபோன்ற காரியத்தை எடுத்துக்கொண்டார்.
இந்த மாபெரும் பணிக்காக இவர் தனது அரசு வேலையை உதறித் தள்ளியது மட்டுமில்லாமல், இவரது மகன் எம்.ஆர். ராஜகோபாலனும் தனது பணியை துறந்து விட்டு தகப்பனாருக்கு உதவியாக இருந்து வந்தார்.
இந்த மிகப்பெரும் பணியின் பரிமாணத்தை இன்றைய சூழ்நிலையில் நாம் உணருவதற்கு ஆசாரியாரின் கீழ்க்கண்ட வரிகளை நாம் படிக்க வேண்டும்.
"எடுத்துக் கொண்ட காரியம் மிகப் பெரிதும் பெரும் பொருட்செலவினால் நிறைவேறக் கூடியதும் பல வருஷங்களில் நடந்து வந்ததும் ஆகையால் பல கனவான்களுடைய பேருதவி இன்றியமையாததாய் இருந்தது.... சம்பளம் படிச் செலவுகளும், வாங்கிய கடனுக்கு வட்டியும் முதலாக பலவகைகளிலும் பெருந்தொகை செலவாயிற்று. சுமாராகக் கணக்கு பார்த்ததில் ரூ.1,35,000க்கு மேல் செலவு தெரிகிறது... ஆரம்பச் செலவுகளுக்கும்... அச்சிடுவதற்குமாக ரூ.10,000க்கு மேல் கடன் வாங்க வேண்டிற்று. அதற்கு சுமார் 22 வருஷமாக சாதாரணமான வட்டி என்ன ஆகியிருக்கும் என்பது நான் தெரிவிக்க வேண்டியதில்லை.... என்னுடைய இதர வரும்படிகளாலும் ஈடானது போக பாக்கி ரூ.15,000 என் கைப்பொறுப்போடு இந்த மகாபாரதம் பூர்த்தியாகியிருக்கிறது."
இந்த மஹாபாரதப் பதிப்பு பூர்த்தியான பிறகு பண்டித சா.ம. நடேச சாஸ்திரிகள் சம்ஸ்க்ருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து 6 வால்யூம்களாக வெளியிட்ட ராமாயணம், ஆசாரியார் மாப்பிள்ளை எஸ். ராமானுஜாசாரியார் மொழிபெயர்த்த ஹரி வம்சம், வைத்தியநாத தீட்சிதரின் வைத்தியநாத தீட்சிதீயம் என்ற தர்ம சாஸ்திர நூல், விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு சங்கரர், பராசரபட்டர் ஆகியோரின் பாஷ்யங்களை ஆசாரியார் தமிழில் மொழி பெயர்த்த நூல் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிடலாம் என்று எண்ணி இருக்கின்றோம். ஹிந்து சமுதாயமும் சான்றோர்களும் எங்களுக்குத் துணை நின்றால், இந்தப் பணி விரைவில் நிறைவேறும்" என்று கூறினார்.
ம .வீ. ராமானுஜாசாரியார் மஹாபாரதப் பதிப்புப் பணியில் பட்ட அதே கஷ்டங்களை, இப்பொழுது வெங்கட் ரமணனும் எதிர்கொண்டு வருகிறார். தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்பது இதுதானோ என்னவோ?
100 வருடங்களாக நாம் மாறாமலேயே இருக்கின்றோம் என்பதை இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய டி.என். ராமச்சந்திரனின் கீழ்க்கண்ட கூர்மையான வார்த்தைகள் நிரூபிக்கின்றன.
"நம் அன்பர் தம் கடமையைச் செய்து விட்டார். நாம் நம் கடமையைக் கைகழுவி விட்டோம். சனாதன தர்ம சனாதனிகள் என்று கூறி வருவோர் உரிய கழுவாய் தேடிக் கொள்வார்களாக."
( 2008 அக்டோபர் விஜயபாரதம் இதழில் வெளியானது )
வெங்கட ரமணனை தொடர்பு கொள்ள - ++91 9894661259.
9/135 Nammalwar street, East tambaram, chennai.
மகாபாரதத்தின் புத்தகங்களின் விலை - Rs 4500. இன்னும் சில பதிப்புகளே உள்ளன. அதுவும் சில பர்வங்கள் ஸ்டாக் இல்லாமலும் இருக்கலாம்.
நான் விசாரித்த போது, பப்ளிஷ் செய்ய பெரிய மூலதனம் வேண்டும் என்றும், விரும்புபவர் எண்ணிக்கை பொறுத்தே மீண்டும் பதிப்பிக்க போவதாகவும் சொன்னார்..
அப்டேட் :
வடமொழியில் ஸ்ரீ வேத வியாசரால் அருளிச்செய்த ஸ்ரீ மகாபாரதத்திற்கு சரியான தமிழ் ஆக்கம்
கும்பகோணம் காலேஜ் லேட் சமஸ்க்ருத பண்டிதர் மகாவித்வான் சதாவதானம் ஸ்ரீ உ-பய-வே தி.ஈ. ஸ்ரீநிவாஸாசாரியார் ,
கும்பகோணம் அத்வைதசபா பண்டிதர்கள்,
மகாவித்வான் பிரம்மஸ்ரீ வேதாந்தகேசரி மஹாமஹோபாத்யாய பைங்காடு ஸ்ரீ கணபதி சாஸ்திரிகள் ,
மகாவித்வான் பிரம்மஸ்ரீ கருங்குளம் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்த்ரிகள் , ஸ்ரீ வேங்கடாசாரியார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு,
கும்பகோணம் காலேஜ் ரிடையர்ட் தலைமை தமிழ்ப்பண்டிதர் பாஷாபாரத துரந்தர, மஹாமஹோபாத்யாய ,
மணலூர் வீரவல்லி இராமனுஜாச்சரியாரால் தொகுக்கப்பட்டு
கும்பகோணம் ஸ்ரீ மகாபாரதம் பிரஸ்ஸில் லேட் சிவராமகிருஷ்ணய்யரால் அச்சிட்டு உரிமை பெறப்பட்டு வெளிவந்ததின் மறுபதிப்பு .
ஸ்ரீ சக்ரா பப்ளிகேஷன்ஸ் - சென்னை
Name of the publisher : S.Venkataramanan (Grandson of Kumbakonam Late S.Sivaramakrishnaiyer)
Sri Chakra Publications.
9/135 Nammalwar street, East tambaram, Chennai.
Ph: +91 9894661259
பி.கு. நான், கிசாரி மோகன் கங்குலியின் ஆங்கில The Mahabharatha நூலை மொழிபெயர்த்து வருகிறேன். அதைப் படிக்க விருப்பமிருப்பின் எனது முழு மஹாபாரதம் http://mahabharatham.arasan.info வலைப்பூவிற்குச் சென்று படித்துக் கொள்ளலாம்.

Last edited by arasanrl on Thu May 02, 2013 9:48 pm; edited 2 times in total

arasanrl- புதியவர்

- பதிவுகள்: 13
சேர்ந்தது: 19/04/2013
மதிப்பீடு: 22

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum