புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 3 Poll_c10மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 3 Poll_m10மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 3 Poll_c10 
42 Posts - 63%
heezulia
மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 3 Poll_c10மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 3 Poll_m10மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 3 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 3 Poll_c10மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 3 Poll_m10மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 3 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 3 Poll_c10மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 3 Poll_m10மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 - Page 3 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 26, 2012 10:07 pm

First topic message reminder :

(ண, ன பொருள் வேறுபாடு)
அணல் - தாடி, கழுத்து, அனல் - நெருப்பு
அணி – அழகு, அனி - நெற்பொறி

அணு – நுண்மை, அனு - தாடை, அற்பம்
அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம்

அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல், அனை - அன்னை, மீன்
அணைய - சேர, அடைய, அனைய - அத்தகைய

அண்மை – அருகில், அன்மை - தீமை, அல்ல
அங்கண் – அவ்விடம், அங்கன் - மகன்

அண்ணம் – மேல்வாய், அன்னம் - சோறு, அன்னப்பறவை
அண்ணன் – தமையன், அன்னன் - அத்தகையவன்
அவண் – அவ்வாறு, அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
.....................................................................................................................................................................
ஆணகம் – சுரை, ஆனகம் - துந்துபி
ஆணம் – பற்றுக்கோடு, ஆனம் - தெப்பம், கள்

ஆணி - எழுத்தாணி, இரும்பாணி, ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
ஆணேறு –ஆண்மகன், ஆனேறு - காளை, எருது

ஆண் – ஆடவன், ஆன் - பசு
ஆணை - கட்டளை, ஆட்சி, ஆனை - யானை

(தொடரும் - நன்றி-தினமணி)


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 08, 2012 1:40 pm

அருமை அருமை... மிகவும் பயனுள்ள பதிவு... இந்த காலத்துல தமிழையெல்லாம் யாரு கண்டுக்கறாங்க... சோகம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 14, 2012 6:06 pm

மயங்கொலிச் சொற்கள் (ல, ழ, ள பொருள் வேறுபாடு)

குலி - மனைவி
குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச் சதுரம், வயிறு
குளி -நீராடு

குலம் -ஜாதியின் உட்பிரிவு, இனம், குடி
குளம் -நீர்நிலை,கண்மாய், ஏரி

குலை - கொத்து, மனம் தடுமாறுதல்
குழை - குண்டலம், குழைந்துபோதல்

குலவி - மகிழ்ந்திருத்தல்
குழவி - குழந்தை, இளமை, யானைக் கன்று அம்மிக்கல்
குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி

குலிகம் -சிவப்பு, இலுப்பை
குளிகம் -மருந்து,மாத்திரை

குவலை -துளசி, கஞ்சா
குவளை - குவளை மலர், சொம்பு,ஒரு பேரெண்

கூலம் - தானியம்,கடைத்தெரு
கூளம் - குப்பை

கூலி - ஊதியம்
கூளி(யார்) - பேய், காளை, வீரர், படைவீரர், வணங்கி நிற்பவர்,ஏவலாளர்

கொலு - அரசசபை, திருவோலக்கம்(தெய்வசபை), உல்லாசமாக வீற்றிருத்தல்
கொழு - மழு, கலப்பையில் மாட்டும் பெரிய இரும்பு, கொழு,கொழுத்து இருத்தல்
கொளு - புறப்பொருள் வெண்பாமாலைத் துறை, பொருந்துவாய்

கொலை - கொல்லுதல்
கொளை - கோட்பாடு, பயன், இசைப்பாட்டு, தாளம்

கொல்லாமை - கொலை செய்யாமை
கொள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை, அடங்காமை

கொல்லி - உயிர்க்கொல்லி, ஒரு மலை
கொள்ளி - கொள்ளிக்கட்டை

கொல்லை - புழக்கடை, தரிசுநிலம்
கொள்ளை - திருடுதல், மிகுதி

கோலம் - அழகு, அலங்காரம்
கோளம் - உருண்டை, வட்டம்

கோலை - மிளகு
கோழை - வீரமற்றவன், கபம்
கோளை - குவளை, எலி

கோல் - மரக்கொம்பு,அம்பு, குதிரைச் சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு
கோள் - கிரகம்

கோலி - இலந்தை, விளையாடும் குண்டு
கோழி - உறையூர், விட்டில், பறவை
கோளி - பூவாது காய்க்கும் மரம், ஆத்தி, ஆலம்



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 21, 2012 1:15 pm

(ல, ழ, ள பொருள் வேறுபாடு)

சலம் - நீர், சிறுநீர், குளிர்
சளம் - பொய், துன்பம், வஞ்சனை

சாலை - பாடசாலை, பொது மண்டபம், அறக்கூடம்
சாளை - கடல்மீன்
சாழை - குடிசை, குச்சு

சுழித்தல் - சுழலுதல், நீர்ச்சுழல்
சுளித்தல் - முறித்தல், சினத்தல்

சூலை - வயிற்று நோய்
சூளை - செங்கல் சூளை

சூல் - கர்ப்பம்
சூழ் - சூழ்ந்துகொள், சுற்று
சூள் - சபதம்

சேல் - மீன்
சேள் - மேலிடம்

சோலி - ரவிக்கை, காரியம்
சோழி - பலகரை
சோளி - கூடைவகை

தவளை - ஓர் உயிரி
தவலை - பாத்திரம்

தலம் - இடம், பூமி
தழம் - தைலம்
தளம் - மேடை, மாடி வீட்டின் அடுக்கு

தழை - தாவர உறுப்பு
தலை - மண்டை
தளை - விலங்கு

தாலம் - உலகம், தேன்
தாளம் - இசைக்கருவி, ஜதி

தாலி - மங்கலநாண்
தாழி - கடல், குடம், பரணி பெரியபாண்டம்
தாளி - தாளித்தல், பனைதால் - நாக்கு, தாலாட்டு

தாழ் - தாழ்தல், குனிதல்
தாள் - முயற்சி, பாதம், ஆதி, படி, காகிதம்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 28, 2012 7:27 am

(ல, ழ, ள பொருள் வேறுபாடு)
துலக்கம் - ஒளி, தெளிவு
துளக்கம் - அசைவு, வருத்தம், கலக்கம், ஒளி

துலம் - கோரை, கனம்
துளம் - மாதுளை, மயிலிறகு

துலி - பெண் ஆமை
துழி - பள்ளம்
துளி - மழைத்துளி, திவலை, சிறிய அளவு

துலை - ஒப்பு, கனம்
துளை - துவாரம், வாயில்

தூலி - எழுதுகோல், எழுத்தாணி
தூளி - புழுதி, குதிரை

தெழித்தல் - கோபித்தல், முழங்குதல், அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல்
தெளித்தல் - விதைத்தல், சபதம், கூறல், விதைத்தல்

தெல் - அஞ்சுதல்
தெள் - தெளிவான

தோலன் - அற்பன்
தோழன் - நண்பன்

தோலி - பிசின், ஒருவகை மீன்
தோழி - பாங்கி, நட்பால் நெருக்கமானவள்
தோளி - அவுரி (ஒருவகை குத்துச்செடி), அரக்கு

தோல் - சருமம், வனப்பு, விதையின் மேல்பகுதி
தோள் - புயம், வீரம்

நலன் - நலம், அழகு, புகழ், இன்பம், நன்மை, குணம்,
நளன் - தமயந்தியின் கணவன், ஓர் அரசன்

நலி - நோய்
நளி - குளிர்ச்சி, பெருமை

நலிதல் - நலிந்துபோதல், தோற்றல்
நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல்

நல் - நல்ல
நள் - இரவு, நடு, நள்ளிரவு

நாலம் - பூவின் காம்பு
நாழம் - இழிவுரை, வசவு
நாளம் - பூந்தண்டு, உட்துளை, ரத்தநாளம்

நாலி - முத்து, கந்தை ஆடை
நாழி - உள்தொளையுள்ள பொருள், ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா, பூரட்டாதி
நாளி - கல், நாய்

நாலிகை - மூங்கில், அடுப்புச்சந்து
நாழிகை - வட்டம், கடிகாரம்

நால் - நான்கு
நாழ் - குற்றம், செருக்கு
நாள் - காலம், திதி

நீலம் - ஒரு நிறம், கருங்குவளை, இருள்
நீளம் - நெடுமை (நீண்ட), தாமதம்

நீல் - நீலம், காற்று
நீள் - நீளம், ஒளி

(தொடரும்)

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sun Oct 28, 2012 9:43 am

என்னை அறியாமலேயே பரீட்சைக்கு படிப்பது போல இதை படித்துகொண்டுள்ளேன். இவ்வளவு காலம் இது போன்ற ஆர்வம் இப்போது புதிதாக ஏற்பட்டுள்ளதை உணர்கிறேன். மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் தமிழ்ச்சேவை அன்பரே.
(பின் குறிப்பு: ஈகரை தமிழ் அர்த்தம் வேண்டுகிறேன் அன்பரே சொல்வீர்களா )

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sun Oct 28, 2012 5:52 pm

அருமை அருமை அருமை. தொடரட்டும் உங்கள் திருப்பணி.மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Nov 05, 2012 3:13 pm

பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி, சேனை, வன்மை, உறுதி, எடை
பழம் - கனி, முதுமை

பல்லி - சிற்றூர், இடையர் ஊர், உழுகருவி, ஓர் உயிரி, வண்டியுறுப்பு
பள்ளி - இடைச்சேரி,புத்தர்கோயில், குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை, பள்ளிக்கூடம்

பலி - பலியிடுதல், பலியுயிர்
பழி - குற்றம்

பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு
பாழ் - வீண், வெறுமை

பீழை - துன்பம்
பீளை - கண் அழுக்கு

புலி - காட்டு விலங்கு
புளி - புளியமரம்,புளியங்காய்

புலை - புலால், ஊன், கீழ்மை
புழை - துளை, வாயில், நரகம்

புகல் - அடைக்கலம்
புகழ் - பெருமை

புல் - அற்பம், கலவி, புல்பூண்டு
புள் - பறவை

பூலம் - புற்கட்டு
பூளம் - பூவரசு

பூழை - துவாரம், கோபுரவாயில்
பூளை - பூளைச்செடி, இலவம் பஞ்சு

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Nov 15, 2012 12:32 pm

(ல, ழ, ள பொருள் வேறுபாடு)
பாலி - தானியக் குவியல், தூற்றாத தானியம்
பாழி - கொடுத்தல், ஈதல்
பாளி - வரப்பு, எல்லை

பொலிவு - அழகு, நிறைவு
பொழிவு - பொழிதல், மேன்மை

போலி - பொய், வஞ்சகம், ஒப்பு
போளி - இனிப்புப் பண்டம்

பொலிதல் - செழித்தல், மங்கலமாதல்
பொழிதல் - ஈதல், கொடுத்தல், சொரிதல்,பெய்தல், நிறைதல்

மலம் - அழுக்கு, பாவம்
மழம் - இளமை, குழந்தை

மலை - குன்று, பொருப்பு, வெற்பு
மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம்

மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல்
மழைத்தல் - மழை பெய்திருத்தல், குளிர்ந்திருத்தல்

மாலிகை - மாலை, கழுத்தணி, வரிசை
மாளிகை - அரண்மனை, கோயில்

மாலை - அந்திப்பொழுது, பூமாலை
மாழை - மயக்கம், இளமை, அழகு
மாளை - புளியம்பட்டை

மால் - திருமால், மயக்கம், அருகன், இந்திரன், பெருமை, மேகம்
மாள் - இறத்தல், சாதல் (இற,சாவு)

முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு
முழை - குகை
முளை - முளைத்தல், தறி, ஆப்பு, அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்

முழி - விழி (விழித்தல்)
முளி - மரக்கணு, விரல்முளி, வாட்டம்

மூலி - மூலிகை, மரம், வேருள்ளது
மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை, கோணம்

மூலை - இரு கோடுகள் சந்திக்கும் இடம்
மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர் உறுப்பு(முதன்மைப் பகுதி)

மெல்ல - மென்று தின்பது
மெள்ள - மெதுவாக

மாலி - மொளலி கிரீடம்
மாழி - மேழி, கலப்பை
மாளி - துணிமூட்டை,

வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி
வளம் - வளமை, அழகு

வலவன் - திருமால்
வளவன் - சோழன், வேளாளன்

வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன்
வளன் - செழுமை, வளப்பன்

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Thu Nov 15, 2012 5:17 pm

பயனுள்ள பதிவு..பகிர்விற்கு நன்றி..சேமித்துக்கொண்டேன்.. சூப்பருங்க



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Nov 15, 2012 5:20 pm

///வளன் - செழுமை, வளப்பன்///
வளன் என்பதை கிறித்தவர்கள் ஜோசப் என்று கூறுகின்றனரே...அதன் பொருளும் இதுதானா?...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக