ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

மழைத்துளி
 ayyasamy ram

கேரளா சாகித்ய அகாடமி
 ayyasamy ram

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 ayyasamy ram

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 ayyasamy ram

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 ayyasamy ram

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தாண்டவம் - சினிமா விமர்சனம்

View previous topic View next topic Go down

தாண்டவம் - சினிமா விமர்சனம்

Post by Guest on Fri Sep 28, 2012 11:14 am

""""" கேட்ஸ் ஆப் மிஸ்டர் விஜய் """"

பாடல்கள் நல்லா இருக்கு, எடிட்டின்க், ஒளிப்பதிவு, இயக்கம் எல்லாமே அட்டகாசம்...

ஒளிபதிவாளர் "நீரவ் ஷா" எப்பவுமே கிங் "இவரையும் ஹிந்திக்கு தானம் கொடுத்துறாதீங்க".

உங்களை முழுவதுமாக திருப்தி படுத்தும் இந்த தாண்டவம்.

என்ஜாய் நண்பர்களே..........தெய்வத் திருமகள் என்ற சுட்ட ஹிட் படம் கொடுத்த இயக்குநர் விஜய்-விக்ரம்-அனுஷ்கா-சந்தானம் கூட்டணியில் வழக்கத்திற்கு மாறான பழி வாங்கும் கதை என்றும், எக்கோ கன்செப்ட்-எக்காத கான்செப்ட் என்றும் பலவாறு விளம்பரப்படுத்தப்பட்டு இன்று வெளியாகியிருக்கும் படம் தாண்டவம்.

ஒரு ஊர்ல.....................:
கண் பார்வையற்ற, லண்டன் சர்ச்சில் நல்ல பிள்ளையாக பியானோ வாசிக்கும் ஹீரோ, திடீர் திடீர் என சிலரைக் கொல்கிறார். லண்டன் போலீஸில் வேலை செய்யும் நாசர் அதைத் துப்பறிகிறார். அந்தக் கொலைகள் ஏன், எதற்கு, எப்படி நடந்தது என்பதே கதை.

திரைக்கதை :
லண்டனில் மிஸ்.இங்கிலாந்து ஆக முயற்சிக்கும் எமி ஜாக்சன், கண் பார்வையற்ற விக்ரமை சந்திக்கிறார். ஒரு எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காத நல்லவரான விக்ரமை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் விக்ரம் அடிக்கடி எங்கோ போய், யாரையாவது கொலை செய்துவிட்டு, மறுநாள் காலையில் பியானோ வாசிப்பைத் தொடர்கிறார். ஒரு பக்கம் எமியின் காதல், மறுபக்கம் லண்டன் போலீஸின் தேடல் என்று போகும்போது, ஃப்ளாஷ்பேக்கில் விக்ரம் ஒரு இந்திய உளவுத்துறையின் முக்கிய அதிகாரி என்றும், அனுஷ்காவை மணந்த புதுமாப்பிள்ளை என்றும் தெரிகிறது. நாசர், கொலையாளி விக்ரம் தான் என்று கண்டுபிடிப்பதில் முதல்பாதி முடிகிறது.

மெதுவாக நகரும் முதல்பாதிக்கு நேரேதிராக இரண்டாம் பகுதியில் படம் ஃபுல் ஸ்பீடில் பறக்கிறது. இந்திய ராணுவம் தொலைத்த ஒரு விஷயத்தைத் தேடி விக்ரம் லண்டன் வர, அங்கே அவர் வாழ்க்கையே தலைகீழாய் ஆன கதையும், போலீஸீன் பிடியில் சிக்காமலேயே விக்ரம் வில்லன்களை பழி வாங்கும் கதையும் விறுவிறுப்பாக சொல்லப்படுகிறது.

கல்யாணம் ஆனபின்னும் முதலில் ஃப்ரெண்ட்ஸ் ஆகி, பிறகு லவ்வர் ஆகி, அதன்பிறகே மற்றதெல்லாம் எனும் மனைவின் கண்டிசன், எக்கோ கான்செப்ட், சந்தானத்தின் ஒன் லைனர்கள், அழகான லண்டன் மாநகரம், லண்டன் குண்டுவெடிப்பை கதையில் புகுத்திய சாமர்த்தியம் என பல விஷயங்கள் படத்தை ரசிக்க வைக்கின்றன.

விக்ரம் :
பிறவி நடிகனான விக்ரம், இதிலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நம்மை அசத்துகிறார். உளவுத்துறை அதிகாரிக்கும், கண் பார்வையற்றவருக்கும் பாடி லாங்குவேஜில் அவர் காட்டும் வித்தியாசங்கள் அருமை. உடலை கேரக்டருக்கு ஏற்றபடி அவர் மாற்றி இருந்தாலும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் முகத்தில் முதுமை தனித்துத் தெரிகிறது. நல்ல நடிகரான விக்ரம் முகத்தைக் கொஞ்சம் கவனிப்பது நல்லது.

ஹீரோயின்ஸ் :
முதல் பாதியில் எமி ஜாக்சன் தான் அதிகக் காட்சிகளில் வருகிறார். ஆங்கிலேயெ முகம் என்பதால், நமக்கு அவர்மேல் பெரிதாக ஈடுபாடு வரவில்லை. (உனக்கு ஏன்யா வரணும்ங்கிறீங்களா?..அதுவும் சரிதான்!). ஆனால் எமி நன்றாக நடிக்கவே செய்கிறார். வெள்ளைக்குதிரை லட்சுமி ராய் இந்தப் படத்தில் இருந்தாலும், நண்பனின் மனைவியாக வருவதால் குத்துப்பாட்டுக்கும் நோ சான்ஸ்..சோ நோ யூஸ்!
எல்லாவற்றுக்கும் சேர்த்து, ஃப்ளாஷ்பேக்கில் அனுஷ்கா வருகிறார். அறிமுகக் காட்சியிலேயே மழையில் நனைந்த அனுஷ்காவைக் காட்டுபோது தியெட்டரே அதிர்கிறது.(உண்மையைச் சொல்லு..தியேட்டரா அதிர்ந்துச்சு?). சிநேகாவும் வாலண்டரி ரிட்டயர்மெண்ட்டில் போய்விட்ட நிலையில், குடும்பப் பாங்கான கேரக்டருக்கு அனுஷ்காவை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?..விக்ரமை போலீஸ் எஸ்.ஐ என்று நினைத்துகொண்டு, அவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கும் காமெடி என்றாலும், லாஜிக் மிஸ்ஸிங்.

சந்தானம் :
டாக்ஸி டிரைவரான சந்தானம், விக்ரம் கொலை செய்யப்போகும்போதெல்லாம் சரியாக வந்து மாட்டிக்கொள்வது நல்ல காமெடி. தெய்வத் திருமகளை அடுத்து இணையும் கூட்டணி என்பதால், சந்தானத்திடம் அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் வரும் காட்சிகளே குறைவு தான் என்பதால், அவர் என்ன செய்வார்? ஆனாலும் கிடைக்கிற கேப்பில் சிக்ஸராக அடித்துத் தள்ளுகிறார். நாசரிடம் எகத்தாளமாகப் பேசுவதும் ரவுசு.

நாசர் / ஜெகபதிபாபு:
முகமூடியில் நரேன் - ஜீவாவை விரட்டிய நாசர், இதில் விக்ரமை விரட்டுகிறார். ஆனாலும் ஈழத்தமிழராக வருவதால், இரு கேரக்டர்களும் ஒன்றாகத் தெரியவில்லை. இந்தப் படத்தில் அவருக்கு மகள் இல்லை என்பதும் ஒரு ஆறுதல். விக்ரமின் உயிருக்குயிரான நண்பனாக ஜெகபதிபாபு வருகிறார். நல்ல நடிப்பு.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- இடைவேளை வரை மெதுவாகச் செல்லும் திரைக்கதை

- கஜினியில் மெமரி லாஸ், இங்கே பார்வை லாஸ்!..ஹீரோயினும் லாஸ் என சில ஒற்றுமைகள்

- பாடல்கள்..ஜி.வி.பிரகாஷ் ஏமாற்றிவிட்டார்

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- நல்ல கதையுடன், குடும்பத்துடம் பார்க்கக்கூடிய படமாக எடுத்தது

- விக்ரமின் கவனமான நடிப்பு

- ஹி..ஹி..அனுஷ்கா, அப்புறம் சந்தானம்

- நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு

- கண் தெரியாவிட்டாலும், நம்பகமான சண்டைக்காட்சிகள்

அப்புறம்....:

- எக்கோ கான்செப்ட் போன்ற பல புதிய விஷயங்கள் இருந்தாலும், படக்குழு எல்லா டிவி பேட்டிகளில் அதையே திரும்பத் திரும்பச் சொல்லி பழைய விஷயமாக்கியது. இவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது.

பார்க்கலாமா? :

- கண்டிப்பாக பார்க்கலாம்.
--
செங்கோவி


Last edited by புரட்சி on Fri Sep 28, 2012 11:19 am; edited 2 times in total

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தாண்டவம் - சினிமா விமர்சனம்

Post by Guest on Fri Sep 28, 2012 11:15 am

மதராசபட்டினம் = டைட்டானிக் என்று நம்புவராக நீங்கள் இருந்தால்,

தாண்டவம் = கஜினி

என்னடா கஷ்ட்டபட்டு எடுத்த படத்த இப்படி சிம்பிளா கம்பேர் பண்ணுறான்னு நினைக்குறீங்களா.

கஜினி படம் எந்த மாதிரியான மெத்தேட் படமோ அதே மெத்தேட் தான் இதுவும்.

இந்த படத்தோட கதையை பத்தி சொல்ல விரும்பல....

மற்ற பதிவர்களையும் அதையேதான் கேட்டு கொள்கிறேன்.

பாக்க போற நீங்க கண்டிப்பா என்ஜாய் பண்ணுவீங்க.

கஜினி படம் பாக்கும் போது எப்படியெல்லாம் பீல் பன்னுனேர்களோ, அதே பீல் தான் இந்த படமும் உங்களுக்கு இம்மிகூட பிசகாமல் கொடுக்கும்.

அப்படீன்னா அந்த ப்ளாஷ்பேக் காதல், எக்சேக்ட்லி தி சேம். அட்டகாசமான ப்ளாஷ்பேக்.

என்ன ஒரு விஷயம், கஜினி-ல ஹீரோவ பத்தி தெரிஞ்சுக்காமலேயே ஹீரோயின் இறந்து விடுவாள். ஆனால் இதில் அது தெரிஞ்சுடும், ஆனால் அது கவிதை மாதிரி இருக்கும். அத கொஞ்சம் யூகிக்க முடிவதால். அந்த மரணத்தால் ஏற்படும் பீல் கஜினியை விட கொஞ்சம் கம்மிதான்.

விக்ரம், என்னே நடிப்பு... சான்ஸே இல்ல... அனுஷ்கா, எம்மா நீ தான் தமிழ்-ல நம்பர் ஒன்னு... பின்னிட்ட.. சந்தானம் கம்மியா வந்தாலும் அவர் டைமின்க் டயலாக் போலவே காட்சிகளும்..

காமெடி அட்டகாசம். நாசர், எமி, லக்ஷ்மி ராய், ஜெகபதிபாபு, ஷாயாஜி ஷிண்டே, சரண்யா, இன்னும் பெயர் மறந்த பலரும் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

போனவாரம் வந்த "சாட்டை" படத்தில பெரும்பாலான கேரக்டர் மனசுல நிக்கலன்னு எழுதி இருந்தேன். ஆனால் இந்த படத்தில் வர்ற முப்பதுக்கும் மேற்பட்ட கேரக்டர் என் மனுசுல நிழலாடுது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உள்ள தனித்தன்மைதான் இதற்க்கு காரணம்.

அதிலும் M.S.பாஸ்கர்-ன் மாப்பிள காமெடி சூப்பர். தம்பி ராமையாவின் "தப்பாச்சே" காமெடியும் அட்டகாஷம்.

சிவா & கென்னியா "விக்ரம்", அனுஷ்கா (அவர் கேரக்டர் சஸ்பென்ஸ்), விக்ரம் நண்பரா ஜெகபதி பாபு (இவர் கேரக்டர் பத்தின சஸ்பென்ஸ் எதிர்பார்த்ததுதான்),

லண்டன் மாடலா எமி, அவரது அப்பாவா வர்ற டாக்டர், லண்டன் போலிஸ் ஆபிஸர் நாசர், விக்ரம் அம்மாவா சரண்யா "ஒரு சீன்ல, நான் உன் அம்மாடா எனக்கும் தெரியும்னு கண்டிப்பு காட்டுவார் பாருங்க, அதுதான் நான் எதிர்பாக்குற கேரக்டரைஷேஷன்", டாக்ஷி ஓட்டுனரா நம்ம சந்தானம்,

மாடலிங் ஏஜென்டா வர்றவர் "மெரீனா படத்துல சிவா ப்ரண்ட்", மற்றும் சர்சுல உள்ள அவரது அக்கா, சர்சுல உள்ள பாதர் மற்றும் அவருடைய குரூப், எமி-க்கு போட்டியா வர்ற அந்த பொண்ணு மற்றும் அவரின் ஆண் நண்பர், வில்லன் குரூப்,

லக்ஷ்மி ராய், விக்ரம் மாதிரியே இருக்கிற லக்ஷ்மி ராய் கணவர் (விக்ரம் மாதிரி இல்லைனாலும் லண்டன் காரங்க அவரை அப்படி நினைப்பதுதான் படத்தின் முக்கிய திருப்பம். விக்ரம் மாமாவா M.S.பாஸ்கர் மற்றும் தம்பி ராமையா,

விக்ரம் தங்கை (ரொம்ப யோசித்து பாத்துட்டேன் பேர் மறந்து போச்சு) ஆங் சுஜிதா, மினிஸ்டர் கோட்டா சீனிவாசா ராவ், டெல்லி போலிஸ் ஆபிஸர் சாயாஜி ஷிண்டே, அனுஷ்கா தங்கை (விக்ரமுடன் சூப்பர் காமெடி), அப்பா டெல்லி கணேஷ்,

முறை மாப்பிள்ளை (அவர் பேரை யாராவது சொல்லுங்க) அவ்வளவுதான்னு நினைச்சுடாதீங்க இன்னும் அனுஷ்கா ப்ரண்டு, காது கேட்காத வேலைக்காரி, எப்பப்பா முடியலா இன்னும் நீளும் இந்த பட்டியல்,

--
குவைத் சபா

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum