புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
8 Posts - 5%
சண்முகம்.ப
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
3 Posts - 2%
jairam
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
1 Post - 1%
Poomagi
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
195 Posts - 49%
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
17 Posts - 4%
prajai
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
8 Posts - 2%
சண்முகம்.ப
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
8 Posts - 2%
jairam
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10கவிதையில் யாப்பு - Page 4 Poll_m10கவிதையில் யாப்பு - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 4 of 29 Previous  1, 2, 3, 4, 5 ... 16 ... 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Nov 18, 2012 3:58 pm

விரும்புகிறேன் உங்கள் கவிதைகளை தொடருங்கள் ....



சதாசிவம்
கவிதையில் யாப்பு - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Nov 19, 2012 7:00 am

3.11. துள்ளல் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. விடை

படியளக்கப் பெருமாளின் வரம்தரும்கை இருக்கிறதே!
அடிநோக்க நதிகங்கா அமுதூற்றாய்ப் பொழிகிறதே!

படி/யளக்/கப் பெரு/மா/ளின் வரம்/தரும்/கை இருக்/கிற/தே!
அடி/நோக்/க நதி/கங்/கா அமு/தூற்/றாய்ப் பொழி/கிற/தே!

நிரைநிரைநேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நிரைநிரைநேர்
நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர்

சீர்கள் அனைத்திலும் பயில்வது காய்-முன்-நிரை வந்த கலித்தளை.
இரண்டு அடிகளுக்கு இடையேயும் கலித்தளை பயில்வது காண்க.

பயிற்சி 2. விடை

வானத்தின் பரப்பினிலே முகிலேதும் சுவடில்லை!
சூரியனே தெரியாத வெளியெங்கும் நிறம்நீலம்!

இந்த அடிகள் சீரிடை மட்டும் தளைப்பது காண்க.

பயிற்சி 3. விடை

சிதைந்துபோன மனையினிலே சிலந்திகளின் வலையாவும்
உறைந்தெங்கும் கிடக்கின்ற இருள்தனிலே நுழைந்திட்டால்
முகத்தினிலே படிந்திறங்கி விழியினையே மறைத்துநிற்க
அகத்தினிலே உதயமாகும் இனம்புரியாத் திகிலொன்று.

பயிற்சி 4. விடை

பனிக்காலப் பருவத்தில் அதிகாலை எழுந்தவுடன்
தனியாக நகரத்தின் தெருக்களிலே உலாவந்து
மணிகண்டன் கடையினிலே ஒருகோப்பை இலைத்தேநீர்
பருகிநின்று உரையாடிக் களித்தநாட்கள் இனிவருமோ?



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Nov 20, 2012 6:56 am

பயிற்சி 5. துள்ளல் வரத் திருத்துதல்

கீழ்வரும் புகழ்பெற்ற திரையிசைப் பாடலின்
வரிகள் யாவும் கலித்தளை பயின்று
துள்ளல் ஓசை கேட்க எழுதுக.

நினைததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை


பயிற்சி 6. கலைந்த சொற்களிலிருந்து காய்-முன்-நிரையென முழுவதும் கலித்தளை வரும் துள்லல்

கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
நான்கு அடிகளில் கலித்தளை பயின்று
துள்லல் ஓசை கேட்க எழுதுக.

விரல்களிலே அபிநயித்து அகத்தினிலே முகத்தினிலே விழிகளிலே நடையினிலே அதிமின்னல் சுடரொளியாள்
ஜதியன்னம். நினைத்ததெல்லாம் விழிகளிலே நடனமாடும் தருவித்து விழிவீச்சில் பரதமங்கை முழுமதியாள்


பயிற்சி 7. ஓசையும் தளைக்கும் சீர்களும்

கீழ்வரும் அடிகளில் சீரிடை அடியிடைக்
கலித்தளையே வந்தாலும் அடியொன்றும் இரண்டும்
ஓசையில் வேறுபடும் காரணம் ஆய்க.

படித்ததொன்று கிடைத்ததொன்று நினைத்ததொன்று நடந்ததொன்று
அடிகளிலே அகப்பட்ட உதைபந்து உழல்கின்றேன்.




ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Nov 21, 2012 11:40 am

பயிற்சி 5. விடை

நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் கடவுளென்று எதுவுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் மனதிலென்றும் அமைதியில்லை

பயிற்சி 6. விடை

முகத்தினிலே முழுமதியாள் விழிகளிலே சுடரொளியாள்
அகத்தினிலே நினைத்ததெல்லாம் விரல்களிலே அபிநயித்து
விழிகளிலே தருவித்து நடனமாடும் பரதமங்கை
விழிவீச்சில் அதிமின்னல் நடையினிலே ஜதியன்னம்.

பயிற்சி 7. விடை

படித்ததொன்று கிடைத்ததொன்று நினைத்ததொன்று நடந்ததொன்று
அடிகளிலே அகப்பட்ட உதைபந்தாய் உழல்கின்றேன்.

படித்/ததொன்/று கிடைத்/ததொன்/று நினைத்/ததொன்/று நடந்/ததொன்/று
அடி/களி/லே அகப்/பட்/ட உதை/பந்/தாய் உழல்/கின்/றேன்.

நிரைநிரைநேர் நிரைநிரைநேர் நிரைநிரைநேர் நிரைநிரைநேர்
நிரைநிரைநேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர்

கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய்
கருவிளங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்

இரண்டு அடிகளிலும் சீர்கள் அனைத்தும் நிரைமுதல் வருவதாயினும்
அடியொன்றில் நிரையசை மிகுந்தும் அடியிரண்டில் நேரசை மிகுந்தும் வருவதால்,
முழுவதும் கலித்தளையே பயின்றாலும் ஓசையில் வேறுபாடு கேட்கலாம்.

தவிர, இவ்விரு அடிகளில் ’படித்ததொன்று’, ’அடிகளிலே’ எனும் முதற்சீர்களில்
அசைகள் நிரைநிரைநேர் என்றே வந்தாலும் ’அடிகளிலே’ எனும் சீர்
’படித்ததொன்று’ எனும் சீரைவிடக் குறைந்த நேரத்தில் ஒலிக்கிறது.

இவற்றால் அறியும் நடைமுறை உண்மைகள்:

ஒரு செய்யுளில் பயிலும் ஓசையை நிர்ணயிப்பதில் அதில் பயிலும்
1. தளைகளுக்கே இலக்கணத்தில் முன்னுரிமை என்றாலும்
2. சீர்கள் தாம் ஒலிக்கும் நேரத்தாலும்
3. எதுகை, மோனை, இயைபு போன்ற தொடைகளாலும்
4. சொற்கள் தம்முள் கொண்ட வல்லின மெல்லின இடையின எழுத்துகளாலும்
ஓசையில் மாற்றங்கள் உண்டுபண்ணலாம்.



அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 21, 2012 5:05 pm

நானும் செய்து பார்க்கீறேன்... சூப்பருங்க



கவிதையில் யாப்பு - Page 4 Paard105xzகவிதையில் யாப்பு - Page 4 Paard105xzகவிதையில் யாப்பு - Page 4 Paard105xzகவிதையில் யாப்பு - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Nov 21, 2012 5:54 pm

பயிற்சி 8. வல்லின மெல்லின இடையினம் பயிலும் அடிகள்

கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
முதலடியில் வல்லினம் அடியிரண்டில் மெல்லினம்
அடிமூன்றில் இடையின எழுதுக்கள் மிகுவந்து
சீர்களிடை மட்டும் கலித்தளை பயின்று
துள்லல் ஓசை கேட்க எழுதுக.

வாழ்வினிலே
சுடுபேச்சு
உயர்ந்தாலும்
எஞ்ஞான்றும்
முகத்தோற்றம்
உதட்டினிலே
மணமுறிவு
கடுகடுக்கும்
நிழல்வாழ்வு.
தசந்தேகம்
மனம்நீங்கா
வளமில்லா


பயிற்சி 9. ஓசையில் மோனையும் எதுகையும்

கீழ்வரும் செய்யுளை அளவிட்டுப் பயிலும்
தளைகள் எதுகை மோனையும் குறித்து
தளைபிற விரவியும் துள்ளல் பயின்று
செய்யுளில் வந்திடும் வழிவகை அறிக

மீன்துள்ளும் குளத்தினிலே கயல்விழியாள் துள்ளுவதும்
மான்துள்ளும் வனத்தினிலே மறியெனவே துள்ளுவதும் ... [மறி = மான்குட்டி]
ஊன்துள்ளும் உடல்துள்ளப் பதம்துள்ள ஆடுவதை
மனம்துள்ள நாத்துள்ள நானுரைக்க நாணுவதேன்?


பயிற்சி 10. உரைநடைப் பொருளிலிருந்து துள்ளல்

புகைவண்டி வேகமாச் செல்லும்போது எழும் ஒலிக்குழப்பத்தில் மனம் கலங்குவதும்
வண்டி மெல்லச் செல்லும்போது எழும் ஒலியிசைவில் மகிழ்வதையும் நான்கு வரிகளில்
எதுகை மோனை அமைத்துக் கலித்தளை பெரிதும் வந்து துள்ளல் ஒலி கேட்க எழுக.

[உதவி: புகைவண்டியின் செல்லும்போது எழும் ஒலிக்குழப்பம் சுட்ட வல்லினம் மிகும் சீர்களையும்
ஒலியிசைவுக்கு இடையினம் மெல்லினம் மிகும் சீர்களையும் பயன்படுத்தவும்.]


*****



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 21, 2012 8:09 pm

மிகச் சிறப்பான பதிவு. வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 22, 2012 8:52 am

3.12. தூங்கல் ஓசை

நித்திரை மயக்கம் பயின்று வருமாம்
வஞ்சித் தளையில் தூங்கல் ஓசையில்.

தூங்கலில் வருவது தளைகள் இரண்டு.
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சியில்,
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சியில்.

தூங்கலை விளக்கும் கீழ்வரும் வஞ்சிப்பா:
வஞ்சித்தளை ஒன்றாமலும் பொருந்தியும்வரும்
தூங்கல்‍ஒலி ஓரடியினில் முடிவுறுவது வஞ்சிப்பா.


தூங்கலோசை கேட்கிறதா இந்தப்பாவில்?
மாகத்தினர் மாண்புவியினர்
யோகத்தினர் உரைமறையினர்
ஞானத்தினர் நய‌ஆகமப்
பேரறிவினர் பெருநூலினர்
காணத்தகு பல்கணத்தினர்
. . என்றே
---கி.வா.ஜ.


மரபு சார்ந்த உரைகளில் கூறுவர்:
அகவல், செப்பல் இரண்டும் வருமே
செய்யுள் உரைநடை இரண்டு வடிவிலும்;
எனினும், துள்ளல், தூங்கல் இரண்டும்
செய்யுளில் மட்டுமே வருவன. தவிர,
அகவல், செப்பல் அடியிடைத் தளைக்கும்;
துள்ளல், தூங்கல் அடிகளில் மட்டுமே.

3.13. தூங்கல் முயற்சி
நாமும் தூங்கல் புனைந்திடு வோமா?
தூங்கல் ஓசையின் தேவைகள் என்ன?

கனிமுன் நிரையோ நேரோ வரவேண்டும்
கனிச்சீர் மூவசை, நிரையில் முடியும்.

ஆரியபவன் நெய்ரோஸ்ட்டினில் பொய்மணக்குமே!
பிரியாணியில் காய்கறிகளைத் தேடவேண்டுமே!


இந்த வரிகளை அலகிடக் கிடைப்பது
ஆ/ரிய/பவன் நெய்/ரோஸ்ட்/டினில் பொய்/மணக்/குமே!
பிரி/யா/ணியில் காய்/கறி/களைக் தே/டவேண்/டுமே!

நேர்-நிரை-நிரை நேர்-நேர்-நிரை நேர்-நிரை-நிரை
நிரை-நேர்-நிரை நேர்-நிரை-நிரை நேர்-நிரை-நிரை

தூங்கல் ஓசை இங்கே எப்படி?
தூங்கல் ஓசையில் பாட்டின் விஷயம்
தூங்குவது பற்றி என்பது அல்ல.

அகவலு மின்றிச் செப்பலு மின்றித்
துள்ளலு மின்றி ஒலிகளில் மயக்கம்,
மந்தம், ஓய்வு, ஏக்கம் வந்திடத்
தூங்கல் ஓசை தளைகளில் கேட்கும்!



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 22, 2012 10:01 am

பயனுள்ள பதிவு, தெளிவான ஓடை நீர்போல் அழகாகச் செல்கிறது.

தொடருங்கள்...




சதாசிவம்
கவிதையில் யாப்பு - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
Guest
Guest

PostGuest Thu Nov 22, 2012 11:15 am

தமிழ் , தமிழன் என்று பேசி திரிந்தாலும் இலக்கியம் , இலக்கணம் பற்றி அறிய முயற்சித்தது இல்லை ... இப்போது அறிய ஆவல் உருவாகிறது .. மிக்க நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 4 of 29 Previous  1, 2, 3, 4, 5 ... 16 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக