புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_m10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_m10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_m10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_m10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10 
17 Posts - 4%
prajai
டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_m10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_m10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_m10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
jairam
டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_m10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_m10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_m10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_m10டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

99likes
99likes
பண்பாளர்

பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
http://www.99likes.blogspot.in

Post99likes Sun Nov 25, 2012 5:47 pm

First topic message reminder :

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 73249_399604340109030_1483470535_n
டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????
உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரித்துப்போகும் ஆனால் பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரும் ஒரே நாளில் மரித்துப்போனால்? எண்ணிப்பார்க்கவே எம்முள் அச்சம் குடிகொள்வதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் நாள் இது நடந்தே தீரும் என்கிறது ஒரு கூட்டம்.
சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பூமியில் கோலோச்சி இருந்த டைனோசோர்கள் அழிந்தது போல ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் மனித இனமும் வருகின்ற டிசம்பரில் ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் அழியப்போகிறது.
பூமியில் பாரிய எரி கல் ஒன்று மோதுண்டதனால் வெளியான வெப்பம், தூசு என்பவற்றுடன் இக்கல் விழுந்தமையினால் ஏற்பட்ட பூமி அதிர்வு, கடல் பரப்பிலிருந்து வெளியான நீர் என்பவற்றாலேயே டைனோசர்கள் பூமியில் சுவடுகளாக மாறியதற்கு காரணம். மேலும் மெக்சிகோ பகுதியில் ஏற்பட்ட இச்சம்பவத்தின் போது வெளியான தூசு பூமியிலிருந்து முழுமையாக நீங்குவதற்கு சில ஆண்டுகள் எடுத்தது.
இதனால் அண்ணளவாக பூமியின் முழுப்பகுதியுமே பாதிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான இனங்கள் அழிவடைந்ததாம். இதிலிருந்து எஞ்சிய உயிரினங்களிலிருந்தே கூர்ப்பு மூலம் மனிதன் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக ஆரம்பித்து தற்கால மனிதனாக தோற்றம் பெற்று சுமார் 13 ஆயிரம் வருடங்கள் என்கிறது விஞ்ஞானம்.
இவ்வாறு பூமிக்கு வந்த மனித இனம், இந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் இப் பூமியை விட்டுச் செல்லப் போவதை யாராலும் தடுக்க முடியாது. இதனை நாசாவும் நன்கு அறிந்து வைத்துள்ளது. இவ்வாறெல்லாம் பல தகவல்களை கசியவிட்டு மக்களை பீதியில் தள்ளிவிட்டுள்ளார்கள் இனம் தெரியாதவர்கள் சிலர்.
உண்மையில் நிபிறு பிரளயம் என்றால்? இது நிச்சயம் டிசம்பரில் ஏற்படுமா? என்றவாறான பல கேள்விகளுக்கும் இதுவரையில் நம்பும் விதமாக வெளியாகியுள்ள தகவல்கள் இவ்வாறு அமைந்துள்ளது.
சூரியத்தொகுதியை போலவுள்ள பல்லாயிரக்கணக்கான தொகுதியில் ஒரு தொகுதியிலிருந்து நிபிறு எனும் கோள் 3600 வருடங்களுக்கொரு முறை பூமியை அண்மிக்கும் இதன் போது நிபிறுவின் துணைக்கோள்களுடன் சேர்த்து மொத்தமாக 6 கோள்கள் பூமியை பாதிப்புக்குள்ளாக்கும்.
இதனால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் சுனாமி, பூமியதிர்ச்சி, எரிமலை வெடிப்புக்கள் மற்றும் நிலங்கள் பல துண்டுகளாக பிளவடையும் இதனைத் தொடர்ந்து சுமார் 2 வருடங்களில் படிப்படியாக மிக மெதுவான முறையில் பூமி தன்னை மீளமைக்கும். இதற்கிடையில் பூமியிலுள்ள மனிதர்களில் 2ஃ3 பங்கினருக்கு மேல் அழிந்துவிடுவார்கள். இதுவே ‘நிபிறு பிரளயம்’ எனச் மிகச் சுருக்கமாக விளக்கியுள்ளார்கள்.
இம்முறை நிபிறு பிரளயம் ஏற்படப்போகும் சந்தர்ப்பத்தில் பூமியானது தன்னை தானே ஒழுங்குபடுத்த ஆரம்பிக்கும் காலமாக இருப்பதோடு துருவங்களும் இடமாற்றடையும். இந்நிலையில் 3 நாட்களுக்கு சூரியன் தனது சுழற்சியை நிறுத்தி வைத்திருக்கும். மேலும் 180 பாகையில் மாறி மாறி திரும்பலடையும் ஆனால் சுழற்சி இருக்கமாட்டாது என்கிறார்கள்.
இதற்காக பல நம்பிக்கைக்குரிய ஆதரங்களையும் முன்வைத்துள்ளனர். அவை அனைத்தும் 2012ஆம் ஆண்டினையே சுட்டிக்காட்டுகின்றது. எழுத்தாளரும், வானியல் ஆலோகசருமான 1500ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த நெஸ்ட்ரடோமஸ் அனுமானித்துள்ளதாவது, எமது கிரகம் பெரியதோர் இலக்கில் செல்லுகிறது அது 2012 முடிவடையும். ஆனால் அது எமக்கு கிடைக்கமாட்டாது.
மேலும் 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டைன் கூறியுள்ளதாவது, துருவப் பெயர்ச்சி இடம்பெறும் போது நாம் பாரியளவில் பாதிக்கப்படுவோம். இவையெல்லாம் இந்த நிபிறு பிரளயத்தையே குறிக்கிறது எனக் கூறும் அதே வேளை மாயன் நாட்காட்டியை சுட்டிக்காட்டியுள்ளனர்.
மிகப் பழைமை வாய்ந்த நாட்காட்டிகளில் ஒன்றான மாயன் 2012.12.21 அன்றுடன் முடிவடைகின்றது. அத்துடன் விஞ்ஞானத்தின் அண்மைய கண்டுபிடிப்புக்கள் பலவற்றினை துல்லியமா பல ஆண்டுகளுக்கு முன்னரே மாயன்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை கல்வெட்டுக்கள், சித்திரங்கள் என்பவற்றினூடாக விட்டுச்சென்றுள்ளனர். குறிப்பாக பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு உயிரினமும் அழிந்த பின்னர் புதியதோர் உயிரினம் தோன்றும், உயிரின் தொடர்ச்சியை சித்தரிக்கும் வகையிலமைந்துள்ள சித்திரங்கள் அதிசயிக்கத்தகதாகவே உள்ளது. இவ்வாறு விஞ்ஞானத்தை வென்ற மாயன்களின் கணிப்பின் படி உலகம் 2012இல் அழியும் என்பதே.
மேலும் ஹிப்ரு பைபிளும் 2012இல் உலகில் பாரிய அழிவுகள் உண்டு என்பதை உணர்த்துகின்றது. இது போல இன்னும் ஏராளமான குறிப்புக்கள் 2012ஆம் ஆண்டில் ஏற்படப்போகும் அழிவுகளை மத நம்பிக்கைகள் சார்ந்தும் சாராமலும் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கின்றார்கள்.
இவை தவிர 3600 வருடங்களுக்கு முன்னர் நிபிறு பிரளத்தினால் பாதிக்கப்பட்டு எச்சங்களாகிய மனித இனத்தினால் அடுத்துவரும் சந்ததிக்கு விட்டுசென்ற சுவடுகளும் ஏராளம் உண்டு. அவற்றில் பல்வேறு அம்சங்கள் மத நம்பிக்கைக்குரிய எழுத்துருக்களாக மாற்றம் பெற்று இன்றுவரை அழியாது பேணப்படுகிறதாம்.
மேலும் நாசாவானது இந்த நிபிறு பிரளயம் பற்றி நன்கு அறிந்துள்ளதாகவும் அதிலிருந்து மீளுவதற்காக 1983ஆம் ஆண்டிலேயே ஆயத்தமாகிவிட்டதாகவும் இதற்காக இரகசியத் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதற்காக நாசா ரகசியமாக மேற்கொண்டுள்ள திட்டத்தினை விளக்குகையில், 1982ஆம் ஆண்டு சூரியத்தொகுதியிலுள்ள 9 கோள்களை தவிர மேலதிகமாகவும் ஒரு கோளினை கண்டுபிடித்துள்ளது நாசா. நிபிறு பிரளம் ஏற்படும் போது கண்டுபிடித்துள்ள புதிய கோளிற்கு தப்பிச் செல்வது திட்டம். அதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்ற வண்ணமே உள்ளது.
குறிப்பாக தப்பிச்செல்லதவற்குரிய கோளாக அப்புதிய கோளினை தேர்வு செய்துள்ளமைக்கான காரணம் என்னவெனில் பிரளயம் ஏற்படும் காலப்பகுதில் பூமிக்கு மிக மிக அண்மையில் இருக்கும் கோள் இதுவாம். அத்துடன் பூவியிலிருந்து இக்கோள் தூரமாக செல்லுவதற்கு 2 வருடங்களுக்கு மேலாகும். இதனால் மீளமைக்கப்பட்ட பூமிக்கு விரைவில் திரும்பிவிடலாம். இதற்காக அமெரிக்காவில் அதிகாரபூர்வமற்ற விமானம் நிலையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளதாம்.
குறித்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உலகிலுள்ள முக்கிய பணக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு இடங்களை கொள்வன செய்து வைத்துள்ளனர். இவை பிரளயத்திற்கான முன்னேற்பாடுகள் என்று கூறும் அதேவேளை மொத்த மனித குலத்தினையும் புதிய கோளில் குடியேற்றி பாதுகாப்பது சாத்தியமற்ற விடயம் என்பதாலேயே இதுவரையில் இத்தகவல்களை வெளியிடாமல் ரகசியம் பேணுகின்றனர் என்கின்றனர்.
மேலும் இந்த கோளினை கண்டுபிடித்த அடுத்த ஆண்டே நீண்டகால பாரிதோர் இலக்கினை நோக்காக கொண்டு IRAS (Infrared astronomical satellite) இனை நிறுவியது. இத்திட்டம் முழுவதற்குமாக ‘Planet X /(நிபிறு)’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.
பூமியின் தென்பகுதிகளிலேயே நிபிறு பிரளயத்தின் அறிகுறிகள் முதன் முதலில் தென்படும் என்ற காரணத்தினால் இத்திட்டத்தினை முன்னெடுக்க தென்துருவத்தில் ஸ்டோன்ஹென்ஜ்ஃஈஸ்டர் ஐலேண்ட் பிரதேசத்தினை தேர்வு செய்து நிபிறு கோள்கள் சம்மந்தமாக உலகுக்கு தெரியாமல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் தற்போது வெளியாகியுள்ள நிபிறு பிரளயம், பூமியை இருள் சூழல், துருவ மாற்றங்கள் என்பவை 2012இல் நடைபெறமாட்டாது என்று 2008ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து மறுத்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அடுத்த 4 மில்லியன் வருடங்களுக்கு பூமி அழிவடைய வாய்ப்பில்லை. அத்துடன் துருவமாற்றமோ பூமி தன்னைத் தனே ஒழுங்கு படுத்தும் செயற்பாடுகளோ 2012இல் இடம்பெற மாட்டாது என்றும் இது மாயன் மற்றும் சமரியரின் நம்பிக்கைகள் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்கு 2012இல் பூமியில் பாரிய அழிவுகள் இடம்பெறும் என்ற கருத்து வலுக்க குறித்த நபர்களால் கூறப்பட்டுள்ள சில அறிகுறிகள் நடந்துள்ளமை அழிவு ஏற்பட்டுவிடுமோ என அச்சத்தை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை.
2009ஆம் ஆண்டளவில் சூரியனைப் போன்றதொரு பிரகாசமான வால்வெள்ளி ஒன்று பூமியில் தோன்றும் அது வெற்றுக் கண்ணுக்குத் தென்படும் இதுவே பிரதான அறிகுறி என்று கூறியிருந்தனர். அப்படி ஒன்றும் 2009இல் இடம்பெறவில்லை என்றாலும் இந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் நியூஸிலாந்து பகுதியில் கொமட் என்ற வால்வெள்ளி பகல் நேரங்களிலும் தென்பட்டுள்ளது. ஆனால் இதனால் பூமிக்கு ஆபத்தில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
அப்படியானால் 2012ஆம் ஆண்டில் பூமியில் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறுமா? என்றால், ஆபத்து வரும் என்று யார் சொன்னது, வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்லுகிறோம் என்ற பாணியிலேயே விடையளிக்கின்றனர்.
வசந்த காலம், கோடை காலம், மாரி காலம் என மாறி மாறி வருடத்தினை அழகுபடுத்த பருவங்கள் வந்து போவதைப் போல டிசம்பர் மாதம் வதந்திகாலமாக மாறி மக்களை அச்சுறுத்தி வருவதை கடந்த சில வருடங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளத் தவறவில்லை.
உண்மையில் டிசம்பர் மாதம் வருடத்தின் இறுதி மாதமே அன்றி அது உலகத்தின் இறுதி மாதமல்ல என்பதை அடுத்தடுத்து வருகின்ற ஒவ்வொரு ஜனவரியும் அந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றது.
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே எனும் பாணியில் டிசம்பர் மாதம் ஆரம்பமாவதுதான் தாமதம் வதந்திகள் முந்திங்கொள்ளும். அதுவும் ஆங்கிலப்படங்களின் வருவது போல உலகம் அழியப்போகிறது… எம்மை நோக்கி பெரிய ஆபத்து வருகிறது என்று கிளப்பிவிட ஒரு கும்பல் எப்போதும் டிசம்பர் மாதத்திற்காக காத்திருப்பதை நீங்களும் ஒரு நாள் உணர்ந்திருப்பீர்கள். ஒரு தடவையே சுனாமி எம்மைத் தாக்கியது ஆனால் ஓராயிரம் தடவைகள் எம்மை ஓட விட்ட கும்பலும் இதுவன்றோ.
இந்த வகையில் இம்முறையும் அந்த கும்பல் மக்களிடையே பீதியை கிளப்ப மறக்கவில்லை. வரும் டிசம்பர் மாதத்தில் சூரியன் 3 நாட்களுக்கு மேல் உதிக்காமல் பின்னர் மேற்கிலிருந்து உதிக்க ஆரம்பிக்கும். இது உலக அழிவின் ஆரம்பம், டிசம்பர் 21ஆம் திகதியுடன் மாயன் நாட்காட்டி முடிவுக்கு வருகின்ற அன்றைய தினம் நிபிறு பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியப்போகின்றது என பல கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.
ஆனாலும் 2003ஆம் ஆண்டிலிருந்தே 2012ஆம் குறிவைத்து ஏராளமான தகவல்கள், பூமியில் பாரிய அழிவுகள் உண்டு என்பதை உரைத்து வருகின்றது. அவை அனைத்தும் மத நம்பிக்கைகளுடன் தொடர்புபட்ட அதேவேளை விஞ்ஞானத்துடனும் ஒத்துப்போவதனால் இவை எதனையும் அத்தனை இலகுவில் இம்முறை வதந்திகள் என்ற பார்வையில் சிந்திக்க முடியவில்லை என்பதே உண்மை.
உண்மை உணர்ந்துகொள்ள நீண்ட நாட்கள் இல்லை. டிசம்பர் 21 எம்மை நெருங்கிக்கொண்டே இருக்கிறது. அதுவரை தேவையற்ற வதந்திகளினால் மக்களை பீதி ஏற்படுத்துவதை குறைத்து வீணாக உயிர்கள் பலியாவதை தவிர்ப்பதே சாலச் சிறப்பு. மேலும் நடப்பவை நன்றாகவே நடக்கும் என்று நம்புவோம்



♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்♥️♥️♥️♥️
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்

கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 8:55 pm

றினா wrote:
பூவன் wrote:
றினா wrote:ம்ஹூம்... ஒன்றும் நடக்காது.


ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி இல்லேன்னா அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அதுதான் நடக்காது என்று சொல்லிட்டோமில்ல. அப்புறம் என்ன - இல்லேன்னா?

:suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 25, 2012 9:37 pm

நானும் இதைப்பற்றிய பல கட்டுரைகளை படித்துவிட்டேன். பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன.

பொறுத்திருந்து பார்ப்போம். விளைவுகளை

99likes
99likes
பண்பாளர்

பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
http://www.99likes.blogspot.in

Post99likes Sun Nov 25, 2012 10:05 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்♥️♥️♥️♥️
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்

கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 26, 2012 12:01 am

21 அன்று பீதியில நிறைய பேருக்கு பேதியா போகும்.. அதனால் மாத்திரை கடையில் நல்ல சேல்ஸ் ஆகும். ஹி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 26, 2012 12:04 am

அசுரன் wrote:21 அன்று பீதியில நிறைய பேருக்கு பேதியா போகும்.. அதனால் மாத்திரை கடையில் நல்ல சேல்ஸ் ஆகும். ஹி

இது என்ன பீதி சோதியா ,,,,ஏதும் சதி செய்யாம இருந்த சரி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 26, 2012 12:06 am

பயப்படறவங்கல்லாம் ௨௧ ஆம் தேதி தூங்காதீங்கப்பா.

அடுத்த நாள் தூங்குங்க நிம்மதியா



டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Aடிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Aடிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Tடிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Hடிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Iடிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Rடிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Aடிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Empty
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 1:05 am

99likes wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஓடாதீங்க..
பதிலை சொல்லுங்க..
ஓடுனா விடுவோமா..



டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Paard105xzடிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Paard105xzடிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Paard105xzடிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக