புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் ஒருமனிதனா! Poll_c10இப்படியும் ஒருமனிதனா! Poll_m10இப்படியும் ஒருமனிதனா! Poll_c10 
69 Posts - 58%
heezulia
இப்படியும் ஒருமனிதனா! Poll_c10இப்படியும் ஒருமனிதனா! Poll_m10இப்படியும் ஒருமனிதனா! Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
இப்படியும் ஒருமனிதனா! Poll_c10இப்படியும் ஒருமனிதனா! Poll_m10இப்படியும் ஒருமனிதனா! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இப்படியும் ஒருமனிதனா! Poll_c10இப்படியும் ஒருமனிதனா! Poll_m10இப்படியும் ஒருமனிதனா! Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் ஒருமனிதனா! Poll_c10இப்படியும் ஒருமனிதனா! Poll_m10இப்படியும் ஒருமனிதனா! Poll_c10 
111 Posts - 59%
heezulia
இப்படியும் ஒருமனிதனா! Poll_c10இப்படியும் ஒருமனிதனா! Poll_m10இப்படியும் ஒருமனிதனா! Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
இப்படியும் ஒருமனிதனா! Poll_c10இப்படியும் ஒருமனிதனா! Poll_m10இப்படியும் ஒருமனிதனா! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இப்படியும் ஒருமனிதனா! Poll_c10இப்படியும் ஒருமனிதனா! Poll_m10இப்படியும் ஒருமனிதனா! Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் ஒருமனிதனா!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 29, 2012 7:31 pm

நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல. காரணம் எனக்கு எந்த அரசியல்வாதியின் மீதும் நல்ல நம்பிக்கை இருந்தது கிடையாது.
“Politics is the last refuge ofthe scoundrels”
என்றான் சாமுவல் ஜான்சன். அதாவது “அரசியலானது அயோக்கிய சிகாமணிகளின் கடைசிப் புகலிடம்” என்பது அவனது சித்தாந்தம். நான் கேட்டிருந்த, படித்திருந்த, பார்த்திருந்த அரசியல்வாதிகள் பெரும்பாலும் இந்த வகையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள்.
:-
நேற்று முந்தைய தினம் (இந்நிகழ்ச்சி கட்டுரை அக்டோபர் 1ந்தேதி பதியப்பட்டது)என் மனைவியின் குடும்பத்தில் சொல்லவொணா சோகம் ஒன்று நிகழ்ந்தது. மனதை நெகிழ வைக்கும் நிகழ்வு. எதிரிக்குக் கூட இப்படிப்பட்ட ஒரு சோகம் கனவிலும் நிகழக்கூடாது.
:-
என் மனைவியின் சொந்த தாய்மாமன் மகள் ஷாயிரா பானு காரில் சென்னைக்கு செல்லும் வழியில் திண்டிவனம் அருகே கோரவிபத்தில் பலியானார். உடன் சென்ற அவர் கணவர் செய்யத் ஜாஃபர், மற்றும் இளைய மகன் அப்சல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.
கார் சென்று மோதியதோ காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில். கார் நேராக லாரியின் டீசல் டாங்கியில் சென்று மோதியதால், டீசல் முழுதும்தரையில் சிந்தியுள்ளது. ஒரு சிறு தீப்பொறி அதில் விழுந்தாலும் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சிலிண்டர்கள் வெடித்துவிடும் அபாயம். பொதுமக்களுக்கு கிட்ட நெருங்க பயம்.
இதற்கிடையில் மூத்த பையன் ஆஷிக் (14 வயது) ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி மண்டையில் அடிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். சுற்றி நின்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களேத் தவிர, அவனைக் காப்பாற்றுவதற்கு யாருமே முன்வரவில்லை. ‘போலீஸ்’, ‘கேஸ்’ என்று அலைய வேண்டுமே, ஏன் நமக்கு இந்த வேண்டாத வேளை என்று நினைத்தார்களோ என்னவோ.
:-
என்ன ஒரு மனிதாபிமானமற்ற சமூகம்? அவ்வழியே கடந்து சென்ற கார்களும், பஸ்களும்கண்டும் காணததும் போலவே சென்றுக் கொண்டிருந்தன.
சம்பவம் நடந்து சிலமணித்துளிகளில் அரசியல் பிரமுகர் ஒருவரின் கார் அவ்வழியே சென்றுள்ளது. சம்பவத்தை நேரில் கண்டு பதறிப்போன அவர் வண்டியை உடனே நிறுத்தி கீழே இறங்கி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவன் ஆஷிக்கிடம் “உன் வீட்டுத் தொலை பேசி எண்ணைக் கூறு” என்று கேட்டிருக்கிறார். தொலைபேசி எண்ணை அவரிடம் கூறிவிட்டு உடனே மூர்ச்சையாகி போனான் அவன்.
:-
உடனே அப்பையனின் சிறிய பாட்டனாருக்கு, அவரே போன் செய்து தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு, நான்தான்இன்னார் பேசுகிறேன், இப்படி ஒரு விபத்து இங்கு ஏற்பட்டு விட்டது என்று தகவல் சொல்லியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி, சிறுவன் ஆஷிக்கை விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்திருக்கிறார். மண்டையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதால் சென்னைக்கு எடுத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தால்தான் சிறுவன் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று அந்த அரசியல் பிரமுகரிடம் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
:-
உடனே சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாகதொடர்பு கொண்டு அவருக்கிருந்த செல்வாக்கைபயன்படுத்தி. எல்லா வேலைகளையும் துரிதமாக நடப்பதற்கு உதவி புரிந்துள்ளார். சிறுவனைக்காப்பாற்றுவதற்கான முன்னேற்பாடுகளும் அனைத்தும் அசுர வேகத்தில் மளமளவென்று நடந்திருக்கிறது. மூளையில்ரத்தக் கசிவு நிறுத்தப்பட்டு கோமா நிலைக்கு போகவிருந்த அவனை மருத்துவர்கள் ஒன்றுகூடி காப்பாற்றி இருக்கிறார்கள். இன்று வந்த தகவலின்படி அந்தச் சிறுவன் ஆபத்துக் கட்டத்தை தாண்டி விரைவில் ICU வார்டிலிருந்து சாதாரணவார்டுக்கு மாற்றப்படவிருக்கிறான் என்ற செய்தி மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.
:-
நான் முன்பு சொன்னதுபோல் நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனல்ல. அந்த பிரமுகரை நான் இதுவரை நேரில் சந்தித்ததுகூட கிடையாது. அவர் வேறு மதம். நாங்கள் வேறு மதம். அவர் வேறு ஜாதி. நாங்கள் வேறு ஜாதி.
அந்தப் பிரமுகருக்கு ஆயிரம் அலுவல்கள் இருந்திருக்கக் கூடும். அவர் மனதில் புதைந்திருக்கும் மனிதாபிமானம்தான் இப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்ய அவரைத் தூண்டியிருக்க வேண்டும்.
:-
சில ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் வெட்டுண்டு கிடந்தபோது, அவ்வழியே கண்டும் காணாதது போல் சென்ற இரு அமைச்சர்களைப்போல் இவரும்காற்றாக பறந்திருக்கலாம்.
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
என்றார் வள்ளுவப் பெருந்தகை.
:-
மனிதநேயம் இவ்வுலகத்தில் அறவே அற்றுப் போய் விடவில்லை என்பதற்கு இந்த நிகழ்வு நல்லதொரு எடுத்துக்காட்டு.
மனிதநேயமிக்க அந்த நல்ல உள்ளம் வேறு யாருமல்ல. வைகோ என்று அழைக்கப்படும் வை.கோபால்சாமிதான் அந்த மாண்பு நிறைந்த மனிதன்.
:-
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை
என்கிறது மூதுரை.
இன்று நம் நாட்டில் மழை பொழிகின்றதென்றால் இதுபோன்ற நல்ல உள்ளங்கள் நம்மிடைய உலவுவதினால்தான்போலும்.
இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்து, அந்தச் சிறுவன்உயிர் காப்பாற்றப்படுவதற்கு திரு,வைகோ என்ற மனிதருள் மாணிக்கம்தான் காரணமாக இருந்தார் என்ற செய்தி வந்தபோது எதிர்பாராத விதமாக திரு நாஞ்சில் சம்பத் அவர்கள் இங்கு பஹ்ரைனுக்கு ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்காக வருகை புரிந்திருந்தார். நிகழ்வுப்பொருத்தம் (Coincidence) என்கிறார்களே,அது இதுதான் போலும்.
:-
அவரிடம் இந்த நிகழ்ச்சியை எடுத்துச் சொன்னேன், இது முதல்முறையல்ல இதுபோன்று எத்தனையோ முறை அவர் இதுபோன்ற உதவிகள் புரிந்திருக்கிறார் என்றறிந்து நெகிழ்ந்துப் போனேன்.
நேற்றைய தினம் (28.09.12) மறுபடியும் அவர் தன் சகாக்களுடன் அப்போலோ மருத்துவமனைக்குச் நேரடியாகச் சென்று அவனை நலம் விசாரித்து, மருத்துவமனை நிர்வாகிகளிடம் ஆகுமான உதவிகள் செய்ய கேட்டுக் கொண்டுள்ளார்.


Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 29, 2012 7:37 pm

எனக்கு புரியாத புதிர் என்னவென்றால் எப்படி இந்த மனிதனால், இத்தனை முக்கிய அலுவல்களுக்கிடையிலும், போராட்டங்களுக்கிடையிலும்நேரம் ஒதுக்கி இப்படிப்பட்ட மனிதநேயமிக்க செயல்களை செய்ய முடிகின்றது? என்றுதான். எந்த ஒரு பிரதி உபகாரமும் எதிர்பாராமல் இப்படிப் பட்ட சமூகநலக் காரியங்களை செய்யும் அம்மனிதனைப் புகழ்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.
:-
சாமுவல் ஜான்சனின் கூற்றை பொய்யாக்கிவிட்ட மனிதனிவன்.
:-
வைகோ அவர்களுக்கு என் மனைவியின் குடும்பத்தாரின் சார்பில்நன்றி கூறவேண்டும் என்ற எண்ணத்தோடு இன்று (29.09.12) அவரது உதவியாளர்கள் அரியமங்கலம்அடைக்கலம், ருத்ரன், முத்து போன்றவர்களைத் தொடர்பு கொண்டு “உங்கள் தலைவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டும்” என்றேன். அவர் மிகவும் பிஸியாக இருப்பதாகக் கூறினார்கள். விஷயத்தை எடுத்துக்கூறி என்னுடைய பஹ்ரைன் கைப்பேசி எண்ணை அவர்களிடம் கொடுத்தேன்.
:-
அடுத்த பத்தாவது நிமிடத்தில் எனக்கு போன்கால் வந்தது. “நான்தான் வைகோ பேசுகிறேன்” என்றது அந்தக் குரல். தொலைக்காட்சி செய்திகளில்நான் அடிக்கடி கேட்கும் அதே குரல்.
“இதுக்கு எதுக்காக நன்றி சொல்லுறீங்க? மனுசனுக்கு மனுசன் இதுகூட செய்யலேன்ன என்ன இருக்கு?” என்றார். எனக்கு பேச்சு எழவில்லை. இத்தனை சோகத்துக்கிடையிலும் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கியது. என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழுந்த குரல் எனக்குள்ளே அவரை வாழ்த்தியது.
வியந்து போனேன் நான். இப்படியும் ஒரு மனிதனா? என்று!
- டி ஜவஹர், திருப்பூர்
:-
நன்றி என்வழி தளம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக