புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_m10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_m10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_m10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10 
144 Posts - 57%
heezulia
குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_m10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_m10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_m10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10 
9 Posts - 4%
prajai
குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_m10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_m10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_m10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10 
1 Post - 0%
Geethmuru
குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_m10குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா?


   
   

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Dec 31, 2012 4:26 pm

எனது வலைப்பூவில் எழுதிய கட்டுரை http://kakkaisirakinile.blogspot.in/2012/12/blog-post_31.html இங்கே ஈகரை உறவுகளுக்காக.

நண்பர்களுக்கு வணக்கம் ..!

முன்னுரையாக சிலவரிகள்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மட்டுமல்ல உலக அரசியலிலும் பத்திரிக்கைகளுக்கு முழுச்சுதந்திரம் அளித்திருப்பதற்கு காரணம், அவர்கள் உண்மைகளை மக்கள் பார்வைக்கு எடுத்துச் செல்வார்கள், நாட்டின் முன்னேற்றதிற்கும் வளர்ச்சிக்கும் பங்களிப்பார்கள், குற்றங்கள் குறைய உதவுவார்கள் என்ற தொலைநோக்குப் பார்வையில் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அனைத்து பத்திரிகைகள், இணையதள பத்திரிக்கைகள், ஊடகங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த சுதந்திரத்தை சரிவர பயன்படுத்துகிறதா என்றால், அது மிகப்பெரும் கேள்விக்குறிதான்.

பொது மக்கள், அரசியல் வாதிகள் செய்யும் தவறுகளை ஊடகங்கள் வெளிக்கொண்டுவருகிறது. ஆனால் ஊடகங்கள் செய்யும் தவறுகளை பெரும்பாலும் யாரும் தட்டிக்கேட்பதில்லை. தங்கள் சுயநலத்திற்காக இந்திய நாட்டின் ஒரு பெருமையை, பலமுறை உலக சாதனை கண்ட தமிழ் மைந்தனை இழிவுபடுத்தும் விதமாக ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருப்பதை கண்டிக்கும் விதமாகவே இந்த கட்டுரையை எழுதுகிறேன். இந்த இழிசெயலை அரங்கேற்றி இருப்பது அதிக மக்களால் செய்திகள் பார்க்கப்படும் ONEINDIA வின் தமிழ் பிரிவு இணையதளமான HTTP://TAMIL.ONEINDIA.IN தான்.

அப்படி என்ன இழிவுபடுத்தினார்கள் என்று பார்பதற்கு முன், இதே இணையதளம் "சோனியாவின் மருமகன் ராகுல் காந்தி" என்று மிகவும் நாகரீகமின்றி முன்னொருமுறை செய்தி வெளியிட்டதை எனது வலைப்பூவில் ஆதரங்களுடன் சுட்டிக்காட்டி இருந்தேன். அந்தப் பதிவை நீங்களும் ஒருமுறை பார்க்க வேண்டுகிறேன். சுட்டி(LINK) கீழே.

http://kakkaisirakinile.blogspot.in/2012/11/oneindiacom.html

அப்படியென்ன செய்தி

இவர்கள் வெளியிட்டிருக்கும் செய்தி தவறானதல்ல. ஆனால் அதை வெளியிட்டிருக்கும் விதம் மிகவும் கீழ்த்தரமாகவே எனக்குப்படுகிறேது. இந்த செய்தியை ஒருகிணைத்து வெளியிட்ட ஆசிரியர் பெயர் SUDHA என்று அந்த பக்கத்தில் உள்ளது. இப்போது செய்தியை பார்ப்போம்.

2012 ஜூன் மாதம் மிகவும் பரபரப்பாக போனது என்றும் அந்த மாதத்தில் நடந்த சில நிகழ்வுகளை இந்த இணையதளம் வெளியிட்டிருந்தது. அதில் முக்கியமான இரண்டு நிகழ்வுகள் 1. செஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த விஸ்வநாதன் ஆனந்த் 2. சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து ஒரு பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளான வருத்தமான செய்தி. அதோடு சேர்த்து, சென்னையில் நடந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் பொதுக் கூட்டத்தின்போது நடிகை குஷ்புவின் இடுப்பை யாரோ கிள்ளிவிட்டார்கள் என்பது.

இந்த நிகழ்வுகளை ஒன்று சேர்த்து ஒரே செய்தியாக எழுதி அதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் தலைப்பு என்னவென்றால் "குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?... திகில் தந்த ஜூன்!" என்பதே. அதோடு அவர்கள் எழுதி இருக்கும் சில வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

"ஜூன் மாதத்தையும் சும்மா சொல்லக் கூடாது. பரபரப்பு, திடுதிப்பு மற்றும் டென்ஷனாகவே முடிவடைந்தது. சென்னையில் நடந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் பொதுக் கூட்டத்தின்போது நடிகை குஷ்புவின் இடுப்பை யாரோ கிள்ளியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதவிர உலக சாம்பியனாக விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் வென்றது, அங்கம்மாள் காலனி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டது, மதுரை ஆதீன மடத்தில் ரஞ்சிதா, வைஷ்ணவி அறுவறுக்கத்தக்க நடனம் ஆடியதாக வழக்குத் தொடரப்பட்டது, சென்னை அண்ணா சாலையி்ல் அண்ணா மேம்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்த பரபரப்பு என ஜூன் மாதமும் திகிலாகவே முடிந்தது."

சுட்டி : http://tamil.oneindia.in/news/2012/12/25/tamilnadu-2012-flashback-june-166876.html#slide36576

இந்த செய்தியை மேலோட்டமாக பார்த்தால் நமக்கு பெரிதாக தெரியாது. ஆனால் சற்று ஆராய்ந்தால் அதன் விளக்கம் மிகவும் வருத்ததிற்குரியது.

கொஞ்சம் ஆராய்வோம்

1. அவர்கள் செய்தி வெளியிட்டிருக்கும் விதம்., "நடிகை குஷ்புவின் இடுப்பை யாரோ கிள்ளியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதவிர உலக சாம்பியனாக விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் வென்றது". இங்கே சொல்லியிருப்பதை நீங்கள் நன்றாக கவனித்தால் ஒன்று புரியும். ஏதோ நடிகை குஷ்புவின் இடுப்பைக் கிள்ளியது தான் உலக அளவில் பேசப்பட வேண்டிய ஒன்று என்பது போலவும் விஸ்வநாதன் ஆனந்த் பத்தோடு பதினொன்றாக உலககோப்பையை வாங்கிவிட்டார் என்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? Kushbu_a
ONEINDIA இணையதளம் மிகவும் அடிப்படையான ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நமது தேசிய விளையாட்டான ஹாக்கி முதல், பெரும்பாலான அனைத்து தடகள விளையாட்டுகளிலும் இந்தியா மண்ணைக் கவ்வி வெட்கித் தலைகுனிந்த நேரங்களில், உலக அளவில் நம்மை தலை நிமிரச்செய்தது விஸ்வநாதன் ஆனந்த் என்ற ஒரு தனிமனிதனும் அவரின் உலக சாதனைகளும் தான் என்பது குழந்தைகளுக்கும் தெரியும்.

செஸ் விளையாட்டில் ஐந்து முறை உலகப் கோப்பையை கைப்பற்றியவர். GRANDMASTER என்ற பட்டத்திற்கு சொந்தக்காரர். GRANDMASTER என்பது உலகில் செஸ் விளையாட்டு வீரருக்கு தரப்படும் பட்டங்களிலேயே மிகப்பெரும் பட்டம், வெகுமதி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அவர் வாங்கிய பட்டங்களில் மற்ற சிலவற்றை முடிந்தால் விக்கி இணையதளத்தில் பார்க்கவும் HTTP://EN.WIKIPEDIA.ORG/WIKI/VISWANATHAN_ANAND

கிரிக்கெட்டில் சச்சினின் சாதனைகள் எப்படியோ அதே போன்றதுதான் செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் சாதனைகளும். அவரின் சாதனைகளை பல புத்தகங்களாக வெளியிடலாம். நீங்கள் கீழ்த்தரமாக இங்கு மேற்கோள் காட்டும் அளவிற்கு அவர் வாங்கிய கோப்பைகள் பக்கத்து தெருவில் இருக்கும் இரும்புக்கடைகளில் வெண்கல கிண்ணம் வாங்கி அவராக பெயரை எழுதிக்கொண்டு வந்ததில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். யாவற்றிற்கும் மேலாக, அவர் தமிழ் நாட்டின் மைந்தன்.

வடஇந்தியர்கள் தமிழர்களை மதிப்பதில்லை, ஒதுக்கப்படுகிறார்கள் என செய்திகளை வெளியிடும் நீங்கள் முதலில் தமிழ் நாட்டில் தமிழனை மதிக்கக் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம் என்பதையும் உணர வேண்டும். அதோடு இது விஸ்வநாதன் ஆனந்த் என்ற ஒரு தனிமனிதனுக்கு கிடைத்த அவமானம் அல்ல. இந்திய நாட்டிற்கு அதன் அடையாளத்திற்கு ஏற்பட்ட அவமானம்.

2. அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து மக்கள் மனதில் பெரிய சோகத்தை ஏற்படுத்திய பேருந்து விபத்து குஷ்புவின் இடுப்பிற்கு இணையானதுமல்ல என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

3. ஒரு மூலையில், பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவியின் உடல் தகனம் என்ற செய்தியை வெளியிட்டுவிட்டு மறுமூலையில் "குஷ்புவின் இடுப்பைக் கிள்ளியது யார் ..?" என்ற தலைப்போடு பலரை கீழ்த்தரமாக சித்தரித்துவிட்டு இளைஞர்களின் எண்ணத்தை தவறான கோணத்தில் திருப்பி இந்த சமுதாயத்திற்கு நீங்கள் சொல்ல வருவது என்ன ..?

4. பெண்கள் பாலியல் பலாத்தகாரம் செய்யப்படுவதற்கு வக்கிரமான ஆண்கள் தான் காரணம் என செய்தி வெளியிடும் செய்தித்தாள்கள், இது போன்று இளைஞர்களின் உணர்வுகளைத் தூண்டும் விதமாக செய்திகளை வெளியிடுவது ஏன் ..?

எதற்காக இவ்வாறாக தலைப்புகளைக் கொடுகிறார்கள் ?

ALEXA போன்ற சில இணையதள தகவல் நிறுவனங்கள், ஒரு இணையதளத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை (ஹிட்ஸ்) முறையில் தரவரிசைப்படுத்துவதில் உதவுகிறது. இவ்வாறாக தலைப்பைக் கொடுக்கும் பட்ச்சத்தில், கண்டிப்பாக ஆயிரக்கணக்கில் இளைஞர் அந்த செய்தியை கிளிக் செய்வார்கள். இதன் மூலம் அந்த இணைய தளத்தின் ALEXA RANK உயரும். இதனால் அவர்கள் தங்கள் இணையதளத்தில் விளம்பரம் செய்யும் நிறுவனங்களிடம் ALEXA RANK யையும் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் காரணம்காட்டி விளம்பர வருவாயை உயர்த்தவும் அதிக வருவாயை ஈட்டிக் கொள்ளவும் முடியும். இதுவே பெரும்பாலான இணையதளங்களின் குறிக்கோளாக உள்ளது.

கடுமையான கண்டனம்

இவ்வாறு உங்களின் சொந்த சுயநல மற்றும் வியாபார முன்னேற்றதிற்காக, சமூக அக்கறையின்றி விஸ்வநாதன் ஆனந்த் போன்ற இந்திய நாட்டின் பொக்கிசங்களையும், ஏழை பொதுமக்கள் சென்ற பேருந்து விபத்துக்களையும் "குஷ்புவின் இடுப்பைக் கிள்ளியது யார் ?" என்ற தலைப்புகளின் கீழ் வெளியிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். அதோடு இல்லாமல் இந்த செய்திகளை, அந்த தலைப்பின் கீழ் இருந்து நீக்க வேண்டும் அல்லது அந்த தலைப்பை சரியாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இங்கு குஷ்புவிற்கு எதிராக எதுவும் எழுதப்படவில்லை என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். குஷ்புவும் இந்த நாட்டின் குடிமகள். ஒரு ஏழையாக இருந்தாலும், பிரபலமாக இருந்தாலும் அவர்களுக்கு நடக்கும் அநீதிகளையும் தட்டிக்கேட்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இதுபோன்ற கட்டுரைகளுக்கு எனது நேரத்தை ஒதுக்கி நான் எழுதுவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த லாபமும் இல்லை. இருந்தும் எழுதுவதற்கு ஒரே காரணம், நமது நாட்டை மாற்ற இளைஞர்கள் வேண்டும் என அடிக்கடி சொல்லிவிட்டு நமது சொந்த வேலைகளை கவனிக்க நாம் ஒவ்வொருவரும் சென்று விடுகிறோம். இது போன்ற கட்டுரைகளால் நாட்டில் சிறு துளியேனும் நம்மால் மாற்ற முடியுமானால் அதை ஏன் செய்யக்கூடாது என்பது மட்டுமே.

அதனால் நேரம் ஒதுக்கி எழுதிய இந்த கட்டுரையை சில மணித்துளிகளை ஒதுக்கி நீங்களும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

இதுவே இந்த வருடத்தின் கடைசி கட்டுரையாக இருக்குமென நினைக்கிறேன். நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றி,

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 31, 2012 4:29 pm

சிறப்பான கட்டுரையை பகிர்ந்த உங்களுக்கு நன்றி. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 31, 2012 4:33 pm

நல்ல ஆதங்கமான கட்டுரை அகல் ஆனால் என்ன செய்வது இணையதளதிர்க்கேல்லாம் முன்னோடி நம்ம தினத்தந்தி போன்ற செய்திதாள்கள்தானே தகப்பன் எவ்வழியோ மகனும் அவ்வழி

Spoiler:




ஈகரை தமிழ் களஞ்சியம் குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 31, 2012 4:51 pm

நல்ல சிந்தனை அகல் - நான் இடுப்ப சொல்லல சத்தியமா நீங்க நம்பனும்




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 31, 2012 4:53 pm

யினியவன் wrote:நல்ல சிந்தனை அகல் - நான் இடுப்ப சொல்லல சத்தியமா நீங்க நம்பனும்
இடை இடையில நீங்க ரொம்ப பயப்படரிங்க தல



ஈகரை தமிழ் களஞ்சியம் குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 31, 2012 5:29 pm

balakarthik wrote:இடை இடையில நீங்க ரொம்ப பயப்படரிங்க தல
இடை, வடை, நடை, உடை இதெல்லாமே பிரச்சினையாத்தான் போவுது பாலா




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 31, 2012 5:32 pm

யினியவன் wrote:
balakarthik wrote:இடை இடையில நீங்க ரொம்ப பயப்படரிங்க தல
இடை, வடை, நடை, உடை இதெல்லாமே பிரச்சினையாத்தான் போவுது பாலா

இதெல்லாம் பிரச்சினையாபோனாலும் அதா உள்ளுக்குள்ள வச்சுக்கிட்டு வெளிய தொடைதட்டி நடிக்கணும் தல



ஈகரை தமிழ் களஞ்சியம் குஷ்புவின் இடையா? விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 31, 2012 5:36 pm

balakarthik wrote:இதெல்லாம் பிரச்சினையாபோனாலும் அதா உள்ளுக்குள்ள வச்சுக்கிட்டு வெளிய தொடைதட்டி நடிக்கணும் தல
ஒ அதுக்குதான் அந்த கடைக்கு போயிட்டு வந்து
பட்டாப்பட்டி தெரிய தொடை தட்டுராங்களோ!!!!

ஆனா வீட்டுக்கு போனவுடன் தொடை நடுங்குறது ஏன்!!!




avatar
Guest
Guest

PostGuest Mon Dec 31, 2012 7:24 pm

ஒன் இந்தியா தளம் யாரால் நடத்தபடுகிறது ? அகல் இந்த தளத்தால ரொம்ப பாதிக்க பட்டு இருப்பார் போல .. ஒன் இந்தியா தளத்தை பற்றிய உங்களுடைய இரண்டாவது பதிவு இது ..

முடிந்தால் விளக்கவும் புன்னகை

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Dec 31, 2012 10:24 pm

நன்றிகள் சுந்தரம் ஐயா, இனியன் அண்ணா மாறும் தல பாலா நன்றி



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக