புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10 
1 Post - 1%
சிவா
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10 
1 Post - 1%
bala_t
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10 
1 Post - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10 
297 Posts - 42%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 50 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Page 50 of 84 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 67 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 20, 2015 7:57 pm

ஜெகதீசன் அவர்களே ! நன்றி !

(1) முள் + தீது = முஃடீது (தொல்காப்பிய விதி - தொகை மரபு 8)

ஆனால் , இப்போது இப்புணர்ச்சி மறைந்துவிட்டது !

கள் + தீது = கட்டீது , என இப்போது எழுதுவதுபோல , முள் + தீது = முட்டீது என எழுதுவதில் தவறு இல்லை !
முள் + தாள் = முட்டாள் , என எழுதுவதிலும் தவறில்லை ! (ஏதோ ‘பொடி’ வைத்துப் பேசுகிறார் என எண்ணற்க !)

(2) இப்போது அச்சிடும் புத்தகங்களில் ‘கடறாவு படலம்’ என எழுதுவதில்லை ! ஆனால் பழைய புணர்ச்சி விதிப்படி- ‘கடறாவு’தான் சரி !
வடமொழிப் பேராசிரியர்கள் கூட இப்போதெல்லாம், வடமொழி பரவவேண்டும் என்பதற்காகப் பழைய மிக
இறுகலான வடமொழிச் சந்திகளைத் தவிர்த்துவருகின்றனர் !

ஆனால் செம்பதிப்புகளைக் ( CRITICAL EDITIONS) கொண்டுவரும் நாங்கள், செம்மொழித் தமிழாய்வு மத்தியநிறுவனத்தில் , பழைய புணர்ச்சி விதிகளையே - உயர் ஆய்வுக்காக - கைக்கொள்கிறோம் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 27, 2015 8:50 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (374)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , அடுத்த நூற்பாவில், எந்தெந்த எழுத்துகள் மொழிக்கு (சொல்லுக்கு) முதலாக வரும் என்று வரையறை செய்கிறார் தொல்காப்பியர் ! –

“பன்னீ ருயிரு மொழிமுத லாகும்” (மொழி . 26)

‘பன்னீர் உயிரும்’ – 12 உயிர் எழுத்துகளும் ,
‘மொழி முதலாகும்’ – சொல்லுக்கு முதல் எழுத்தாகும் !

அஃதாவது – அ , ஆ , இ ,   ஈ , உ ,  ஊ , எ ,  ஏ ,  ஐ ,  ஒ ,  ஓ , ஔ எனும் 12 உயிர்களைப் பொறுத்தவரையில் இவை யாவுமே சொல்லுக்கு முதல் எழுத்தாக வரத் தக்கன !

இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகள் –
1 . அ , மொழிக்கு முதலாக வரல் – அடை
2.ஆ , மொழிக்கு முதலாக வரல் – ஆடை
3. இ , மொழிக்கு முதலாக வரல் – இடை
4. ஈ , மொழிக்கு முதலாக வரல் – ஈயம்
5. உ , மொழிக்கு முதலாக வரல் – உரல்
6. ஊ , மொழிக்கு முதலாக வரல் – ஊர்தி
7. எ , மொழிக்கு முதலாக வரல் – எழு
8. ஏ , மொழிக்கு முதலாக வரல் – ஏணி
9. ஐ , மொழிக்கு முதலாக வரல் – ஐவனம்
10. ஒ , மொழிக்கு முதலாக வரல் – ஒளி
11. ஓ , மொழிக்கு முதலாக வரல் – ஓக்கம்
12. ஔ ,  மொழிக்கு முதலாக வரல் – ஔவியம்

இக்காலத்து அணில் , ஆமை , இலை …..  என்று முதலாம் வகுப்புப் பாட நூலில் உள்ள பாடத்திற்கு , இளம்பூரணர் உரையே முன்னோடி என்பது விளங்குகிறதல்லவா?

மேல் சொற்களில் ,  ‘எழு’ என்பது பெயர்ச் சொல்லா ? வினைச் சொல்லா?
பெயர்ச் சொல் !

எழு = தூண்
ஐவனம் = மலை நெல்
 ‘ஓக்கம்’ என்றால் வேறு ஒன்றுமில்லை ! ஓக்கம் = உயரம்
ஔவியம் = பொறாமை

மேற்கண்ட 12 சொற்களுமே பெயர்சொற்கள் எனும்போது ஓர் ஐயம் எழுகிறது !

பெயர்ச் சொல்லின் முதல் எழுத்தாக மட்டுந்தான் 12 உயிர்களும் வருமா?
அல்ல!

பெயர்சொற்களுக்கும் வினைச் சொற்களுக்கும் மேலை விதி பொருந்தும் !

‘சூ’ மொழிக்கு முதலாக வரும் என்ற விதிக்கு இளம்பூரணர் எடுத்துக்காட்டுக் கூறும்போது , ‘சூழ்க’ எனும் ஏவல் வினையைத்தான் காட்டுகிறார் ! (மொழி . 29)
இதனால் நமது கருத்து  சரியே  என்றாகிறது!

‘ஓக்கம்’ என்ற சொல்லுக்குப் பதிலாக நச்சினார்க்கினியர் ‘ஓடம்’ என்ற சொல்லை எடுத்துக் காட்டாகத் தருகிறார் !

‘உரல்’ என்பதற்குப் பதிலாக ‘உளை’ என்ற சொல்லை எடுத்துக்காட்டாகத் தருகிறார் நச்சினார்க்கினியர் !
உளை = தலை

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 27, 2015 8:51 pm

PostDr.S.Soundarapandian Fri May 29, 2015 6:01 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (375)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உயிர் எழுத்துகள் 12ம்  சொல்லுக்கு முதல் எழுத்தாக வரும் எனப் பார்த்தோம் !

உடனே மாணவன் கேட்பான் ! – அப்படியானால்  மெய்யெழுத்து சொல்லுக்கு முதலில் வரலாமா?

‘வரக்கூடாது’ என்பதே தொல்காப்பியர் விடை !

மெய்யெழுத்தானது உயிரோடு சேர்ந்து சொல் முதலாக வரலாம் ! –
“உயிர்மெய்  யல்லன மொழிமுத லாகா” (மொழி . 27)

‘உயிர்மெய்  அல்லன மொழிமுதல் ஆகா’ – உயிர்மெய் அல்லாத தனி மெய் எதுவும் சொல்லுக்கு முதல் எழுத்தாக வருதல் இல்லை !

உடனே கேள்வி பிறக்கிறது !

அப்படியானால் எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலிலே வருமா?

இதற்கு விடையாகச் சில நூற்பாக்களை எழுதுகிறார் தொல்காப்பியர் ! அவற்றில் முதலாவது –
“கதந  பமவெனு  மாவைந் தெழுத்தும்
எல்லா உயிரோடுஞ் செல்லுமார் முதலே ” (மொழி. 28)

‘கதந  பம  எனும்  ஆ  ஐந்து எழுத்தும்’ – க் , த் , ந் ,  ப் ,  ம்  ஆகிய ஐந்து   மெய்களும்  
‘எல்லா உயிரோடும்  செல்லுமார் முதலே’ -  எல்லா உயிர்களோடும் சேர்ந்து சொல்லின் முதல் எழுத்தாக வரும் !

1 . கலை       13 . தந்தை           25 .நடம்                     37 . படை
2. காளி         14 . தாடி                26 .நாரை                   38 . பாடு
3.கிளி           15 . திற்றி               27 . நிலம்                 39 . பிடி
4கீரி               16 . தீமை                 28 . நீர்                         40 . பீடம்
5குடி             17 . துணி                29 .   நுழை               41 புகழ்
6கூடு             18 . தூணி             30 . நூல்                    42 . பூமி
7கெண்டை 19 . தெற்றி         31 . நெய்தல்         43 . பெடை
.8கேழல்       20 . தேவர்               32 . நேயம்          44 . பேடி
9கைதல்           21 . தையல்       33 . நைகை             45 . பைதல்
.10கொண்டல் 22 . தொண்டை 34 . நொய்யன       46 . பொன்
11.கோடை       23 . தோடு             35 .நோக்கம்         47 . போதகம்
12.கௌவை 24 .தௌவை       36 .நௌவி             48 . பௌவம்

49 . மடம்                  55 . மெலிந்தது
50 . மாலை            56 . மேனி
51 . மிடறு            57 . மையல்
52 . மீனம்           58 . மொழி
53 . முகம்            59 . மோதகம்
54 . மூதூர்           60 . மௌவல்

நச்சினார்க்கினியரும் இதுபோன்று 60 எடுத்துக் காட்டுகளைத் தந்துள்ளார் !

ஆனால் சிற்சில இடங்களில் வேறு எடுத்துக்காட்டுகளைப் போட்டுள்ளார் நச்சர் !

காட்டாகக், காவன்னாவுக்குக் ‘காளி’ என்று இளம்பூரணர் எழுத , நச்சர் ‘கார்’ என்கிறார் !

தாவன்னாவுக்குத் ‘தாடி’ என்று இளம்பூரணர் தர , நச்சர் ‘தாய்’ என்கிறார் ! நையன்னாவுக்கு இளம்பூரணர் ‘நைகை’ எனத் தந்தால் , நச்சர் ‘நைவளம்’ என்று தருகிறார் !

மேலை எடுத்துக்காட்டுகளிலுள்ள அருஞ்சொற்களுக்குப் பொருளைக் கீழ்வருமாறு தந்துள்ளனர் !-

திற்றி = உணவு ; நௌவி = பெண்மான்
தெற்றி = திண்ணை ; மோதம் = மகிழ்ச்சி
தௌவை = தமக்கை (அக்காள்); தித்தி = புள்ளி
நைகை = நைதல் ; தூணி = அம்புகளைப்  இடும் புட்டில்  
நைவளம்  = ஒரு பண்; பைதல் = துண்பம்
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 04, 2015 7:43 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (376)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் நாம் மொழிக்கு (சொல்லுக்கு) முதலில் வரும் இடத்தைப் பார்த்துவருகிறோம் !

ச , சை, சௌ ஆகிய  மூன்று எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வரமட்டா என்று தொல்காப்பியர் உரைக்கிறார் !

நமக்கு இது வியப்பாகத்தான் இருக்கிறது !

ஏனென்றால் நாம் பல சொற்களை இந்த மூன்று எழுத்துகளை முதலாகக் கொண்டு எழுதிவருகிறோம் !

ஏன் ? என் பெயரே ‘சௌ’ என்றுதானே தொடங்குகிறது !

தொல்காப்பிய விதியைப் பார்ப்போம் ! –
“சகரக்  கிளவியு  மவற்றோ  ரற்றே
அஐ  ஔவெனு  மூன்றலங்  கடையே” (மொழி . 29)

‘சகரக்  கிளவியும்  அவற்றோர்  அற்றே’ – சானாவும், மேற்கூறிய ‘க’ முதலிய எழுத்துகளைப் போலவே சொல்லின் முதலில் வரும் !

‘அ  ஐ  ஔ   எனும்  மூன்று  அலங்  கடையே’ – ஆனால் , ச , சை , சௌ என்ற மூன்று எழுத்துகள் அல்லாத இடத்து !

இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகள் –
1 . சாலை
 சா – மொழிக்கு முதலில் வந்தது.
2 . சிலை
 சி – மொழிக்கு முதலில் வந்தது.
3 . சீறுக
 சீ – மொழிக்கு முதலில் வந்தது.
5 . சுரும்பு
 சு – மொழிக்கு முதலில் வந்தது.
6 . சூழ்க
 சூ – மொழிக்கு முதலில் வந்தது.
7 . செய்கை
 செ – மொழிக்கு முதலில் வந்தது.
8 . சேவடி
 சே – மொழிக்கு முதலில் வந்தது.
9 . சொறிக
 சொ – மொழிக்கு முதலில் வந்தது.
10 . சோறு
 சோ – மொழிக்கு முதலில் வந்தது.

நச்சர் தரும் எடுத்துக்காட்டுகள் கீழ் வருவன !-
1 . சாந்து
 சா – மொழிக்கு முதலில் வந்தது.
2 . சிற்றில்
 சி – மொழிக்கு முதலில் வந்தது.
3 . சீற்றம்
 சீ – மொழிக்கு முதலில் வந்தது.
5 . சுரை
 சு – மொழிக்கு முதலில் வந்தது.
6 . சூரல்
 சூ – மொழிக்கு முதலில் வந்தது.
7 . செக்கு
 செ – மொழிக்கு முதலில் வந்தது.
8 . சேவல்
 சே – மொழிக்கு முதலில் வந்தது.
9 . சொல்
 சொ – மொழிக்கு முதலில் வந்தது.
10 . சோறு
 சோ – மொழிக்கு முதலில் வந்தது.

(சூரல் = பிரப்பங் கொடி ; சமழ்ப்பு = வருத்தம்)

இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளில் பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் கலந்துவர , நச்சர் காட்டுகளில் பெயர்கள் மட்டுமே வந்துள்ளன !

இங்கே நச்சினார்க்கினியர் உரை நோக்கற்பாலது –
“சட்டி , சகடம் , சமழ்ப்பு என்றாற் போல்வன  ‘கடி சொல் இல்லை’ என்பதனாற் கொள்க ! சையம் , சௌரியம் என்பனவற்றை வடசொல்லென மறுக்க!”

அஃதாவது , நல்ல தமிழ்ச் சொற்கள் , ச , சை , சௌ ஆகியவற்றை முதலிலே கொண்டுவந்தால் அவற்றை அனுமதிக்க ! கால ஓட்டத்தில் அப்படிப்பட்ட சொற்கள் தமிழில் வந்து சேரலாம் ; சட்டி , சகடம் , சமழ்ப்பு  ஆகியன அப்படி வந்த தமிழ்ச் சொற்கள்தாம் என்பது நச்சர் விளக்கம்!

சையம் , சௌரியம் ஆகிய சொற்கள் எல்லாம் தமிழில் வருகின்றன என்றால் , அவற்றைத் தமிழ்ச் சொற்கள் என எடுத்துக்கொள்ள முடியாது ! அவற்றை ஆரியச் சொற்கள் எனக் கூறுக என்பதே நச்சர் அறிவுரை !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 07, 2015 11:13 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (377)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழி மரபில் நிற்கிறோம்!

உஊ  ஒஓ வென்னும் நான்குயிர்
வஎன்  னெழுத்தொடு  வருத லில்லை” (மொழி . 30)

‘உஊ  ஒஓ  என்னும் நான்கு  உயிர்’ – உ , ஊ , ஒ , ஓ  எனும் நான்கு  உயிர் எழுத்துகள்,
‘வஎன்  எழுத்தொடு  வருதல்  இல்லை’ -  ‘வ்’ என்ற மெய்யோடு சேர்ந்து வராது !

அஃதாவது –
வு , வூ , வொ , வோ -  ஆகிய நான்கு  எழுத்துகளும் சொல்லின் முதல் இடத்திலே நில்லா !

இக் கருத்துக்கு  இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !

1 . வளை
  ‘வ்’வுடன்  ‘அ’ சேர்ந்து மொழிமுதல் ஆனது !

2 . வாளி
  ‘வ்’வுடன்  ‘ஆ’ சேர்ந்து மொழிமுதல் ஆனது !
3 . விளரி
  ‘வ்’வுடன்  ‘இ’ சேர்ந்து மொழிமுதல் ஆனது !
4 . வீடு
  ‘வ்’வுடன்  ‘ஈ’ சேர்ந்து மொழிமுதல் ஆனது !
5 . வெள்ளி
  ‘வ்’வுடன்  ‘எ’ சேர்ந்து மொழிமுதல் ஆனது !
6 . வேர்
  ‘வ்’வுடன்   ‘ஏ’ சேர்ந்து மொழிமுதல் ஆனது !
7 . வையம்
  ‘வ்’வுடன்   ‘ஐ’ சேர்ந்து மொழிமுதல் ஆனது !
8 . வௌவு
  ‘வ்’வுடன்  ‘ஔ’ சேர்ந்து மொழிமுதல் ஆனது !
(வாளி – அம்பு ; விளரி – விளரிப்பண்)

இளம்பூரணர் ‘வேர்’ என்று கூற , நச்சர்  ‘வேட்கை’என்கிறார் ; இளம்பூரணர் ‘வௌவு’ என முன்னிலை ஏவல் சொல்லைக் காட்ட , நச்சர்  ‘வௌவுதல்’ என்ற தொழிற்பெயரை எடுத்துக்காட்டாகக் கூறுகி றார் !

தொல்காப்பியத்தின்படி கீழ்வருமாறு கூறலாம் !-

1 . வுழுந்து ×
    உழுந்து √
2 . வூதல் ×
    ஊதல் √
3 . வொட்டாரம்×
    ஒட்டாரம் √
4 . வோலை×
   ஓலை √
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 10, 2015 6:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (378)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , மொழிக்கு (சொல்லுக்கு) முதலிலே வரும் எழுத்துகளைப் பார்த்து வருகிறோம் !

இப்போது எந்த எழுத்தைப் பற்றித் தொல்காப்பியர் கூறுகிறார் எனக் காண்போம்! –
“ஆஎ  
ஒஎனு  மூவுயிர்  ஞகாரத்  துரிய” (மொழி . 31)

‘ஆ , எ , ஒ , எனும்  மூவுயிர்  ’ – ஆவன்னா , ஏனா , ஓனா ஆகிய மூன்று உயிர் எழுத்துகள்  மட்டும் ,
‘ஞகாரத்து   உரிய’ -  ஞானாவுடன் சேர்ந்து மொழிக்கு முதலிலே வரும் !

கீழ்வருவன இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகள் –
1 . ஞாலம்
    ‘ஞ்’ஞோடு  ‘ஆ’ சேர்ந்து மொழிக்கு முதல் ஆனது .

2 . ஞெகிழி
    ‘ஞ்’ஞோடு  ‘எ’ சேர்ந்து மொழிக்கு முதல் ஆனது .

3 . ஞொள்கிற்று
    ‘ஞ்’ஞோடு  ‘ஒ’ சேர்ந்து மொழிக்கு முதல் ஆனது .

(ஞெகிழி – தீக் கடை கோல் ; ஞொள்கிற்று – மெலிந்தது )

இந்த இடத்தில் இளம்பூரணர் , “ஞழியிற்று  என்றாற் போல்வன விலக்கினவும் வருமா லெனின் , அவை அழி வழக்கென்று மறுக்க ” என்கிறார் !

அஃதாவது , ‘அழிவழக்கு’ என்பதற்கு இரு பொருள்கள் உள்ளன; ஒன்று – விதண்டா வாதம் ; மற்றொன்று – இழிந்தோர் வழக்கு .

நச்சர் உரையைப் பார்த்தால் , அவர் இதே ‘ஞழியிற்று’ என்ற சொல்லைக் குறிப்பிட்டு , “ஞழியிற்று என்றாற் போலவன இழிவழக்கு” என்கிறார் ! ஆதலால் , இளம்பூரணரும் இழிவழக்கையே ‘அழிவழக்கு’ என்று கூறியிருக்கலாம் !

நச்சர் , ‘ஞமலி’ என்ற சொல்லைக் குறிப்பிட்டு ,  அதனைத் திசைச் சொல் என்று எழுதுகிறார் !

நச்சர் வாக்கால் திசைச்சொல் , சற்று இலக்கணம் வழுவியிருக்கலாம் என்ற உண்மை பெறப்படுகிறது !

தமிழ் வட்டார வழக்கு ஆய்வில் (Dialect survey and research)  இது குறிப்பிடத் தக்கது !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 13, 2015 1:37 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (379)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளைப் பார்த்துவருகிறோம் !

இப்போது – யா !

தமிழ்ச் சொல் எதுவானாலும் அதற்கு முதல் எழுத்தாக , யகர  வரிசையில் , ‘யா’ வைத் தவிர  வேறு எதுவும் வராது !

தொல்காப்பியர் ஆணை –
“ஆவோ  டல்லது  யகர முத  லாது”  (மொழி . 32)

‘ஆவோடு அல்லது ’ – ‘ஆ’ என்ற உயிர் எழுத்தோடு சேர்ந்து அல்லாமல்,

‘யகரம் முதலாது’ -  ‘ய்’ என்ற மெய்  , சொல்லுக்கு முதலில் வராது !

இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டு – ‘யான்’

மேலும் எழுதுகிறார் இளம்பூரணர் – “ யவனர் என்றாற் போல்வன விலக்கினவும் வருமாலெனின் , அவை ஆரியச் சிதைவென்று மறுக்க ! ”

அஃதாவது – ‘யவனர் ’ என்ற சொல் , ஏதோ ஒரு வட சொல்லின் திரிபு என்பது இளம்பூரணர் கருத்து.
நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகள் –
    1 . யானை
    2 . யாடு
    3 . யாமம்

இந்த எடுத்துக்காட்டுகளைக் காட்டிய நச்சர் , “யவனர் , யுத்தி , யூபம் , யோகம் , யௌவனம் என்பன வடசொல் என மறுக்க !” என்கிறார் !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Sat Jun 13, 2015 8:12 pm

நன்றி சிறப்பான பதிவு

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 14, 2015 8:34 am

ஐயா !

//தமிழ்ச் சொல் எதுவானாலும் அதற்கு முதல் எழுத்தாக , யகர வரிசையில் , ‘யா’ வைத் தவிர வேறு எதுவும் வராது ! //

அப்படிஎன்றால் " யோகா " என்று எழுதுவது தவறா ? அது வடமொழிச் சொல்லா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 50 of 84 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 67 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக