^ மேலே செல்ல
ஈகரை தேடுபொறி
Latest topics
» அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!
by சாமி Today at 12:15 pm

» முஸ்லிம்களின் சுயநலம்
by imz Today at 11:51 am

» பெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்
by soplangi Today at 11:42 am

» 'சிவபெருமான்' பெயர் கொண்ட குழந்தைப் பெயர்கள்
by சாமி Today at 11:34 am

» அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு
by உமா Today at 11:31 am

» பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தினால் உறவில் விரிசல் ஏற்படலாம்
by soplangi Today at 11:28 am

» வெற்றியின் ரகசியம்...
by கவிஞர் கே இனியவன் Today at 11:22 am

» சாக்ரட்டீசுக்கு மரண தண்டனை.....
by கவிஞர் கே இனியவன் Today at 11:19 am

» நண்பர்களுக்காக பிராத்தனை செய்வேன் ...!!!
by கவிஞர் கே இனியவன் Today at 11:16 am

» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by ராஜு சரவணன் Today at 11:11 am

» 2000 மதிப்பீடுகள் பெற்று அசத்தும் நமது காதல் கவி பூவனை வாழ்தலாம் வாருங்கள்
by MADHUMITHA Today at 11:11 am

» சுகம்!!!....சுகம்!!!...சுகம்!!!
by கவிஞர் கே இனியவன் Today at 11:03 am

» மேட்டூர் அணையில் புதையல் ரகசியம் அடங்கிய கல்வெட்டு கண்டுபிடிப்பு
by soplangi Today at 10:56 am

» கதிர்வீச்சு உண்மையைச் சொன்னால் என்கவுண்டர்!! - மருத்துவர் புகழேந்தி
by ராஜு சரவணன் Today at 10:54 am

» காதலி எழுதும் கடிதம்...
by கவிஞர் கே இனியவன் Today at 10:47 am

» ஒரு மாற்றுச் சிந்தனை...
by Powenraj Today at 10:44 am

» Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை!
by ராஜா Today at 10:41 am

» ஆண்களின் அழகைக் கெடுக்கும் 7 விஷயங்கள்!!!
by Gangai Amaran Today at 10:30 am

» சின்ன கவிதை சில நேரங்க்களில் ...
by கவிஞர் கே இனியவன் Today at 10:19 am

» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 10:19 am

» <<உங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறலாம்! >>
by Gangai Amaran Today at 10:18 am

» இருந்தாலும் இது ரொம்ப ஓவர்!
by றினா Today at 10:13 am

» உலகின் 6 உண்மைகள் :
by கவிஞர் கே இனியவன் Today at 9:59 am

» எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)
by கவிஞர் கே இனியவன் Today at 9:38 am

» நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு....
by பூவன் Today at 9:37 am

» காதல் ஒரு கெட்ட.....???
by கவிஞர் கே இனியவன் Today at 9:22 am

» மறதியை மறந்தாலும் ....
by கவிஞர் கே இனியவன் Today at 9:11 am

» யார் இவ‌ள் என் விழியில்.....!
by கவிஞர் கே இனியவன் Today at 9:03 am

» நீ என் முழுநிலா ....!!!
by கவிஞர் கே இனியவன் Today at 8:59 am

» உறுதியில்லாத மனம் உள்ளவன் ..
by கவிஞர் கே இனியவன் Today at 8:58 am

» இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
by கவிஞர் கே இனியவன் Today at 8:57 am

» சித்திரம் எழுப்பிய கவிதை
by ரமணி Today at 8:36 am

» சென்னையில் ஒரு மாநாடு
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:24 am

» திருக்குறளே தேசிய நூல்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:33 am

» பெண்ணே எழு நீ இடியாக...!
by joisy Today at 5:04 am

» மதுரையில் ரவுடியாக மாற பயிற்சி: 30 புது ரவுடிகள்... போலீஸ் அதிர்ச்சி
by சிவா Today at 3:42 am

» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Today at 12:49 am

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 11:52 pm

» சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?
by Muthumohamed Yesterday at 11:34 pm

» முருங்கை - மருத்துவ பயன்கள்
by Muthumohamed Yesterday at 11:10 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
வணக்கம் விருந்தினரே!

ஈகரையில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொள்ள இங்கு அழுத்தவும்

























பெண்களுக்கு உரிமை கொடுங்க ஆனா ஆண்களின் உரிமைய பறிக்காதிங்க !

View previous topic View next topic Go down

பெண்களுக்கு உரிமை கொடுங்க ஆனா ஆண்களின் உரிமைய பறிக்காதிங்க !

Post by அகல் on Sun Mar 03, 2013 9:03 pm



வணக்கம் !

கட்டுரையின் நோக்கம் என்ன ?

முன்னோர்கள் வாழ்ந்த காலம் முதல் இன்றைய கணினி யுகம் வரை, தொன்றுதொட்டு பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. கிராமப் புறங்களில் இது போன்ற நிலைகள் இன்னும் தொடந்தாலும் நகர்ப்புறங்களில் ஆண்களுக்கு இணையானவர்கள் பெண்கள் என்பதை நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் பெண்களின் சம உரிமையை நிலை நிறுத்தவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் அரசும் பலவிதமான சட்டங்களை கொண்டு வந்தவண்ணம் உள்ளது.

பெண்களின் சுய உரிமைகள் மறுக்கப்பட்ட நேரங்களில் அதைத் தட்டிக்கேட்டும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் நடத்தப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்து போராடியவர்களில் பெரும்பாலானோர் ஆண்களே. இந்தப் புரட்சியை நமது தமிழ்கவி பாரதி முதல் இன்றைய தலைமுறை ஆண்கள் வரை பெண்களுடன் சேர்ந்து முன்னெடுத்துச் சென்ற வண்ணம் உள்ளனர் என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆரோக்கியமான இது போன்ற போராட்டங்கள் கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டியவையே !

அதே வேளையில், பெண்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எண்ணத்தில் அரசு/தனியார் துறைகள்/நிறுவனங்களில் கொண்டுவரப்படும் சில விதிமுறைகள்/சட்டங்கள் என்னவோ ஆண்களின் உரிமையை பரிப்பதாகவோ அல்லது அவர்களின் உணர்வுகளை நசுக்குவதாகவோ உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியமாகிறது. பெண்களுக்கு தரப்பட்டு ஆண்களுக்கு மறுக்கப்படும் அப்படியான ஒரு உரிமையைப் பற்றியே இங்கு தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நடந்தது என்ன ?

எனது நெருங்கிய நண்பர் ஒருவர், கோயம்புத்தூரில் தனது மனைவியுடன் வசிக்கும் தனது நான்கு மாதக்குழந்தையின் உடல் நலக்குறைவால் அவசரமாக ஹைதராபாத்தில் இருந்து அன்றே கோவை செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இரண்டு தனியார் பேருந்து நிறுவனங்கள் ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு தினசரி பேருந்து சேவையை அளித்துக்கொண்டு வருகிறது. மொத்தம் நான்கு பேருந்துகள்.

வார இறுதி மற்றும் பண்டிகை நாள் நெருக்கம் என்ற அப்போதைய சூழ்நிலையால், துரதிஷ்டவசமாக மூன்று பேருந்துகள் நிரம்பிவிட்டன. ஆனால் நான்காவது பேருந்தில் ஒரே ஒரு காலி இடம் இருந்தது. அந்த காலி இடத்திற்கு பக்கத்து இருக்கையை முன்னரே ஒரு பெண் முன்பதிவு செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலின் அந்த இடத்தை அவர் முன்பதிவு செய்ய முற்பட்டார்.

பக்கத்து இருக்கையை முன்னரே பதிவு செய்திருப்பது ஒரு பெண் என்ற காரணத்தால், காலி இடத்தை முன்பதிவு செய்ய அந்த பேருந்தின் இணையதளம் அனுமதிக்கவில்லை. மற்றும் அவர்கள் கொடுக்கும் பாப் அப் செய்தி. "SELECTED SEATS(X) ARE ADJACENT TO LADIES SEAT. PLEASE SELECT DIFFERENT SEATS". ஆனால் இருப்பது ஒரே ஒரு இடம் தான். வேறு இருக்கையை தெரிவு செய்ய காலி இடங்களும் இல்லை. அந்த இணைய தளத்தின் ஸ்க்ரீன் சார்ட்டை உங்களின் பார்வைக்காக எடுத்துக் கொடுத்துள்ளேன் (எடுத்துக்காட்டிற்காக).

http://4.bp.blogspot.com/-m3C40Z2J4f0/UTNXEKrynQI/AAAAAAAABeI/JWLVTLTYSyc/s1600/Un-man.png

அதே வேளையில், ஒரு இருக்கையை முன்பதிவு செய்தது ஒரு ஆண் என்றும், அதன் பக்கத்து இருக்கையை பதிவு செய்யப்போவது ஒரு பெண் என்றால், அந்த பெண்ணிற்கு அந்த இருக்கையை பதிவு செய்ய அனுமதிப்பதோடு மட்டுமில்லாமல் இவ்வாறாக ஒரு பாப் அப் செய்தி கொடுக்கப்படுகிறது "Management reserves the right to readjust/change seat numbers, especially beside lady passengers. Non Cooperative passengers will be denied boarding". அந்த ஸ்க்ரீன் ஷாட் உங்களுக்காக கீழே.

http://4.bp.blogspot.com/-RNgKcyzkOyY/UTNa5Q71jgI/AAAAAAAABeQ/WvEtMa-NmQQ/s1600/Un-women.png

இந்த பாப் அப் செய்தி கூட, முன்னரே முன்பதிவு செய்த ஆண்களை எச்சரிக்கும் விதமாக அமைந்துள்ளதே தவிர இது பெண்களுக்கான எச்சரிக்கை செய்தி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் நாம் தெரிந்து கொள்வது என்ன ?

ஒரு ஆண் பதிவு செய்த இருக்கைக்கு அருகில் பெண் பதிவு செய்தால், ஆண்களை எச்சரித்து அந்த பெண்ணிற்கு அந்த இருக்கையை பதிவு செய்ய அனுமதிப்பதும், ஒரு பெண் பதிவு செய்த இருக்கைக்கு அருகில் ஆண் பதிவு செய்தால் அந்தப் பதிவை நிராகரிப்பதும், எதோ ஆண்கள் வர்க்கமே மோசமானது என்ற கண்ணோட்டத்தில் உள்ளது. இது முற்றிலும் ஆண்களை அவமதிப்பதாகவே இருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.

அதோடு இல்லாமல், அந்த நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு வேறு பேருந்துகள் கிடையாது. விமானத்தில் உடனே பதிவு செய்து போக வேண்டுமானால் காலி இடங்கள் இருக்க வேண்டும். அப்படியே இருந்தாலும் 8 முதல் 10 ஆயிரம் செலவு செய்யவேண்டும் இது அனைவராலும் இயலாத ஒன்று. ரயிலில் உடனே செல்வது சாத்தியமற்றது. இந்த குறிப்பிட்ட சூழலில், உடல் நிலை சரியில்லாத தனது மகளைப் பார்க்கமுடியாமல் தவிக்கும் ஒரு தந்தையின் மனநிலை எப்படி இருக்கும் ? கணவனை கூட வைத்துக்கொள்ள முடியாத ஒரு மனைவியின் மனநிலை எப்படி இருக்கும் ?

உடனே டிக்கெட் கிடைத்தாலும் அடுத்தநாள் தான் ஊர் போக முடியும். அது கிடைக்காததால் இன்னும் ஒருநாள் தாமதமாகும். இதே நிலை அடுத்த நாளும் தொடர்ந்தால், மீண்டும் இதே சூழலுக்கு ஒரு ஆண் தள்ளப்படுவான். இந்தச் செயல் பெண்களைப் பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் ஆண்களை முற்றிலும் அவமதிப்பதாகவும் அவர்களின் உரிமையை பறிப்பதாகவும் இல்லையா ? ஆண்களை அனைவரும் மோசமானவர்கள், பெண்கள் அனைவரும் சரியானவர்கள் என்ற இந்தப் பார்வை சரியா ?

பேருந்தில் ஒரு பெண்ணிற்கு உகந்த இடம் கிடைக்காத பட்ச்சத்தில், தங்கள் இருக்கையை மாற்றிக் கொடுத்து அவர்களுக்கு உதவுவது பெரும்பாலும் ஆண்களே. இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி இருக்க ஆண்களை இப்படி ஒரு பார்வையில் சித்தரிப்பது அநாகரிகம் இல்லையா ?. இது ஒரு சிறு உதாரணமே. சாதாரண பேருந்து முதல் பல அரசு அலுவலகங்கள் வரை இது போன்ற நிலை தொடர்கிறது.

ஆகையால் ஆண்களுக்கு கொடுக்கப்படும் அத்தனை உரிமையையும் பெண்களுக்கும் கொடுங்கள், தவறில்லை. ஆனால் பெண்களுக்கு நல்லது செய்வதாய்ச் சொல்லிக்கொண்டு எக்காரணத்தைக் கொண்டும் ஆண்களின் உரிமையைப் பறிக்காதீர்கள்.

பெண்கள் அனைவரும் நல்லவர்களுமல்ல, ஆண்கள் அனைவரும் கேட்டவர்களுமல்ல !

குறிப்பு: நண்பர்கள் யாரும் இது போன்று ஒரு செயலால் பாதிக்கப் பட்டிருந்தால் அதைப் பின்னூட்டத்தின் (கமெண்ட்) மூலம் தெரியப்படுத்த வேண்டுகிறேன். இது மறுக்கப்படும் ஆண்களின் உரிமையைப் பற்றிய ஒரு செய்தியாக அமையட்டும்.

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post.html

நன்றி !

அன்புடன்
அகல்

அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 1074
மதிப்பீடுகள்: 305

View user profile http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

Re: பெண்களுக்கு உரிமை கொடுங்க ஆனா ஆண்களின் உரிமைய பறிக்காதிங்க !

Post by இளமாறன் on Sun Mar 03, 2013 11:51 pm

ஆகையால் ஆண்களுக்கு கொடுக்கப்படும் அத்தனை உரிமையையும் பெண்களுக்கும் கொடுங்கள், தவறில்லை. ஆனால் பெண்களுக்கு நல்லது செய்வதாய்ச் சொல்லிக்கொண்டு எக்காரணத்தைக் கொண்டும் ஆண்களின் உரிமையைப் பறிக்காதீர்கள். சூப்பருங்க

நியாயம் தான் ஆண்கள் இப்போ பாவம் தான் ... வேலை கூட கிடைக்க மாட்டேங்குது ... சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 13978
மதிப்பீடுகள்: 1538

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum