ஈகரை தேடுபொறி
Latest topics
» எந்தவொரு தொழிலாளியும் வருங்காலவைப்புநிதியின் தம்முடைய கணக்கில் கையிருப்பில் இருக்கும் தொகை எவ்வளவு என எளிதாக அறிந்து கொள்ள
by ராஜு சரவணன் Today at 7:47 pm

» பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
by ராஜு சரவணன் Today at 7:23 pm

» உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....
by balakarthik Today at 7:05 pm

» Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
by balakarthik Today at 7:03 pm

» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by ராஜு சரவணன் Today at 6:45 pm

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by அசுரன் Today at 6:41 pm

» தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள்
by முத்துராஜ் Today at 6:34 pm

» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by அகல் Today at 6:27 pm

» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்!
by SajeevJino Today at 6:25 pm

» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
by அசுரன் Today at 6:23 pm

» கசப்பான சர்க்கரை
by அசுரன் Today at 6:16 pm

» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by அசுரன் Today at 5:59 pm

» நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்...
by MADHUMITHA Today at 5:56 pm

» IPL - 6 பைனலுக்கு போவது யாரு?
by md.thamim Today at 5:54 pm

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by பார்த்திபன் Today at 5:43 pm

» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Today at 5:39 pm

» மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!
by அசுரன் Today at 5:34 pm

» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by அசுரன் Today at 5:33 pm

» மாம்பழ லஸ்ஸி
by பூவன் Today at 5:01 pm

» சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்..!
by பூவன் Today at 4:59 pm

» தூங்காமல் படிக்கனுமா ...?
by ராஜு சரவணன் Today at 4:15 pm

» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by பூவன் Today at 3:51 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by பூவன் Today at 3:46 pm

» நட்ஸ் மில்க் ஷேக்
by பூவன் Today at 3:46 pm

» உங்கள் அலுவலக அறையில் இதுபோன்ற கோப்பு இருக்கா
by பூவன் Today at 3:38 pm

» நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்...!
by உமா Today at 2:46 pm

» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by அருண் Today at 2:35 pm

» உப்புமா வகைகள் - இட்லி உப்புமா
by ஜாஹீதாபானு Today at 2:35 pm

» ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி
by யினியவன் Today at 2:13 pm

» முடியை குளிர்ச்சியாக வைக்கும் தயிர் ஹேர் மாஸ்க்...
by யினியவன் Today at 2:05 pm

» வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்
by ஜாஹீதாபானு Today at 1:56 pm

» இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
by krishnaamma Today at 1:16 pm

» இயற்கை எனது ஆசான் !
by அகல் Today at 1:12 pm

» தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2
by positivekarthick Today at 12:50 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by பாலாஜி Today at 11:54 am

» வாத்தியார்களும், நாமும் (சின்னதா பிளாஷ்பேக் போயிட்டு வாங்க )
by MADHUMITHA Today at 11:47 am

» நட்பால் இணைந்த உறவு , (படித்ததில் பிடித்த கதை )
by MADHUMITHA Today at 11:40 am

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by கா.ந.கல்யாணசுந்தரம் Today at 11:37 am

» வித விதமா சாக்லேட்
by MADHUMITHA Today at 11:27 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்

























திருநெல்வேலி நெல்லையப்பர்கோவில் - ஒரு பார்வை 5 5 2

திருநெல்வேலி நெல்லையப்பர்கோவில் - ஒரு பார்வை

View previous topic View next topic Go down

திருநெல்வேலி நெல்லையப்பர்கோவில் - ஒரு பார்வை

Post by Powenraj on Sun Mar 10, 2013 8:51 pm

தி ருநெல்வேலியின் புகழ் பெற்ற கோவில் நெல்லையப்பர் கோவில் சுற்றளவில் மிக பெரியது.
http://farm3.static.flickr.com/2741/4036149688_e3667c13aa.jpg
நெல்லையப்பர் கோவில் ஏராளமான குளங்களுடன் பெரிய அளவில் முன்பு இருந்திருக்கிறது. ஆனால் கால போக்கில் அந்த குளங்கள்தூர்க்கப்பட்டு, அவற்றை யார் யாரோ ஆக்கிரமித்து விட்டனர். அந்த இடங்களில் எல்லாம் இப்போது கடைகள் வந்து விட்டன.
உள்ளே நுழையும் போது தலைக்கு மேலே இருக்கும் சிற்பங்கள் அடல்ட்ஸ் ஒன்லி வகையை சேர்ந்தவை. அந்த காலத்தில் கணவன் - மனைவி கோவிலுக்கு வந்து விட்டு, இவற்றை பார்த்தால் "அந்த மூட்" வந்துடுமாம் !
வெளி பிரகாரத்தில் மட்டும் தான் இத்தகைய சிலைகள். உள்ளே முழுக்க முழுக்க அனைவரும் காண கூடிய அளவில் தான் இருக்கிறது.
http://pratheep.com/wp-content/uploads/2012/05/nellaiappar-pillar.jpg
ஒரு யானை இன்னொரு யானையை கூட்டி செல்லும் காட்சி, சிவனுக்கு கண் தந்த கண்ணப்பநாயனார் சிலை, மல்யுத்த வீரன் சில ஆகியவை நம்மை ஈர்த்தன.
http://pratheep.com/wp-content/uploads/2012/05/nellaiyappar-temple-009.jpg
நாயக்கர் ஒரு காலத்தில் இந்த பகுதியை ஆண்டபோது, கடவுள் சிலைகளிலும் தங்கள் கடவுளை முன்னிறுத்தி சில மாறுதல்கள் செய்து விட்டனர் என சொல்லப்படுகிறது.
கோவிலில் முக்கிய கடவுளான நெல்லை கோவிந்தர் படுத்த வண்ணம் அழகாய் காட்சி தருகிறார். மூல கடவுள் - சற்று உயரம் குறைவானவர்.
பிள்ளை தாண்டு என்பது இங்குள்ள ஒரு வித்யாசமான நம்பிக்கை - குழந்தை இல்லாதபெண்கள் இங்குள்ள வெளியே பூட்டப்பட்ட பொல்லா பிள்ளையார் சந்நிதியுள்ளே மிக மெலிதான கம்பிகளின் ஊடேபுகுந்து இன்னொரு பக்கமாய் வெளி வரவேண்டுமாம். அப்படி செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்குமாம். இப்படி பலருக்கும் நடந்ததாக சொல்கிறார்கள். அந்த இடத்தையும், கம்பிகளையும் பார்த்தால் இதற்குள் எப்படி புகுந்து வந்திருப்பார்கள் என ஆச்சரியமாக இருந்தது. உள்ளேபுகந்து வரும் பெண்ணின் பெற்றோர் அல்லது மாமனார் - மாமியார் உடனிருந்து உள்ளே பிடித்து தள்ளி விடுவார்களாம் !
கோவில் தஞ்சை பெரிய கோவிலை விடவும் அளவில் பெரியது என்றும், கட்டி முடித்து 1860 ஆண்டுகள் ஆகிறது என்றும் சொல்கிறார்கள்
இங்குள்ள சகஸ்ரலிங்கம் - ஒரு பெரிய லிங்கத்தினுள் 1008 சிறிய லிங்கங்கள் கொண்டது. (காஞ்சியில் ஒரு கோவிலிலும் இதே போல் பார்த்த நினைவு )
இங்குள்ள பார்வதி அம்மன் பெயர் : காந்திமதி அம்மன். இந்த ஏரியாவில் உள்ள பெண்களில் பலருக்கும் இப்பெயர் உண்டு.
http://4.bp.blogspot.com/-ccKDpPzK0cM/Tyr2G87qLGI/AAAAAAAADXo/w6v_KYLvPps/s1600/Nellaiappar+Temple,+Tirunelveli,+Tamil+Nadu.jpg
கோவிலின் உள்ளேயே ஒரு அழகானகோவில் குளம் உள்ளது. அது அற்புதமாக பராமரிக்கப்படுகிறது.
மீன் வளத்துறை குளத்தை தனதுகட்டுப்பாட்டில் வைத்து இங்கு நிறைய மீன்களை விட்டு, வளர்த்து வருகிறது
அடுத்து நாம் சென்ற இடம் - தாமிர சபை. சமீபத்தில் தான் 70 லட்சம் செலவில் renovate செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிவன் நடனம் புரிந்த பல்வேறு "சபை" கள் உள்ளன.
சிதம்பரம் - தங்க சபை
மதுரை - வெள்ளி சபை
திருவலங்காடு - இரத்தின சபை
குற்றாலம் - சித்திர சபை
இந்த வரிசையில் நெல்லையில் உள்ளது தாமிர சபை. இந்த ஒவ்வொரு சபைகளிலும் சிவன் நடனம் புரிந்ததாக நம்பப்படுகிறது. இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்வோர் பலர். இங்கு பாசிடிவ் வைப்ரேஷன் உணர முடியும் என்கிறார்கள்
அம்மனுக்கு ஏராளமான நகைகள் உண்டு போலும். அது இருக்கும் Safe vault வெளியேஎந்நேரமும் ஒரு போலிஸ் காவல் காக்கிறார்.
http://www.asiantribune.com/sites/asiantribune.com/files/Nelliappar_Temple1.jpg
1000 கால் மண்டபம் ஒன்று நம்மை ஈர்க்கிறது. அங்கு எப்போதும் ஏதாவது கலாட்சேபம் நடக்குமாம். குறிப்பாக திருநெல்வேலி சைவ பிள்ளை மார் வகுப்பினருக்கு இக்கோவில் மிக முக்கியமான ஒன்று என்றும், அவர்கள் அடிக்கடி இங்கு கூடி கலாட்சேபம் செய்வார்கள் என்றும் கூறினார்கள்.
கோவிலுக்குள் இருக்கும் மற்றொரு இடம் - நந்தவனம். இங்கு ஏராள மரங்கள் உடன் - கோவிலுக்கு தேவையான பாலுக்காக சில மாடுகள் வளர்க்கப்படுகின்றன
கோவில் முழுதும் சுற்றி விட்டு சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு வருகிறோம். எல்லா சிவன் கோவிலிலும் சண்டிகேஸ்வரர் இருப்பார். கை தட்டியோ, விரல்களால் சுண்டியோ நம் வருகையை தெரியபடுத்துவோம் இல்லையா .. அவரேதான் ! கோவிலை விட்டு செல்லும்போது பிரசாதம் தவிர வேறு ஏதும் இங்கிருந்து எடுத்து செல்ல வில்லை என தெரிய படுத்தவே இவர் முன் கைகளை தட்டி விட்டு செல்கிறோம் என்றார் உடன் வந்த நம் நண்பர்.
இந்த கோவிலை அழகாகவும் சுத்தமாகவும் வைத்து கொள்ள நெல்லை நகர பொது மக்களே உதவுகிறார்கள். ஒவ்வொரு நான்காவது ஞாயிறன்றும் 400 முதல் 500 பொது மக்கள் கோவிலுக்கு வந்திருந்து கோவில் முழுமையாய் கழுவி விடுகிறார்கள். கோவில் வேலைசெய்த திருப்தி அவர்களுக்கும் கிடைத்த மாதிரி ஆயிற்று. கோவிலும் சுத்தமாய் உள்ளது.
இத்தகைய பெரிய கோவில்களில் பின் தான் எத்தனை பேரின் உழைப்பும் தியாகமும் அந்த கோவிலை சுற்றி பல்வேறு கதைகளும் உள்ளன !
கோவிலை தினம் ஒரு முறை முழுதாய் சுற்றி வந்தால் வேறு உடற்பயிற்சியே தேவையில்லை !
நெல்லை சென்றால் அவசியம் சென்று வாருங்கள். நெல்லையப்பரை தரிசிக்க !
********
வீடுதிரும்பல் முகநூல்

Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 1693
சேர்ந்தது: 17/11/2012
மதிப்பீடு: 419

View user profile

Back to top Go down

Re: திருநெல்வேலி நெல்லையப்பர்கோவில் - ஒரு பார்வை

Post by பாலாஜி on Mon Mar 11, 2013 11:41 am

சிறப்பான பதிவு ... வாய்ப்பு கிடைத்தால் செல்ல வேண்டும் ..



வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 14073
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2318

View user profile

Back to top Go down

Re: திருநெல்வேலி நெல்லையப்பர்கோவில் - ஒரு பார்வை

Post by ராஜா on Mon Mar 11, 2013 3:41 pm

சிறப்பான பதிவு ... வாய்ப்பு கிடைத்தால் செல்ல வேண்டும்

ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 21527
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2323

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திருநெல்வேலி நெல்லையப்பர்கோவில் - ஒரு பார்வை

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Mar 11, 2013 8:28 pm

அருமையான பதிவு...ஆறுபடை வீடுகளுக்கு சென்ற பொழுது நெல்லையப்பர் கோவிலுக்கும் சென்று வந்தோம் தமிழனின் கட்டிட கலையை காண சிறந்த கோவில்...

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 3520
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 678

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum