புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
127 Posts - 54%
heezulia
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
9 Posts - 4%
prajai
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 17, 2013 9:25 am

வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்...

வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Baby_hand_by_adela4


கிடந்தது
சுவரோரமாய்
ஒரு கருவண்டு

"எப்பப்பா போகும் இது
அவுங்க வீட்டுக்கு? "

எதையாவது கேட்பாள்
சின்ன மகள்
எப்போதும்

"எழுந்ததும்
போகும்"
சமாளிப்பேன் நானும்
இப்படித்தான்

விடவில்லை

"இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா?"

"அப்பா வண்டு"
சொல்லி வைத்தேன் சும்மா

"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும் போகலாம் வீட்டுக்கு"

என்று தன் தந்தையின் ஒழுக்கத்தைப் பார்த்து அறிந்து கொண்ட அறியாத பிள்ளை ஒன்று கூறுவதாக ஒரு கவிதையை எழுதியிருப்பார் திரு. இரா.எட்வின். இது இன்றைய சமுதாயத்தில் ஆண்களின் சுதந்திரத்தை, நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள கவிதை என்று கூறுவதை விட வளரும் குழந்தைகளின் மனத்தில் ஆண்களின் படிமம் எப்படி பதிந்துள்ளது என்பதை உணர்த்தும் கவிதையாகப் பார்ப்பதே சரியான கோணம். அம்மா என்றால் சரியாக வீட்டுக்கு வர வேண்டும். அப்பா என்றால் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்குப் வரலாம் என்னும் சமுதாய நிலைப்பாடு குழந்தைகளின் மனத்தில் ஆழமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதை யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. குழந்தைகளின் இப்படிப் பட்ட புரிதலுக்குக் காரணம் யார் என்று வினா எழுப்பி உரிய விடையைப் பார்த்துக் கொள்வது இன்றைய பெற்றோர்களின் தேவை.

கணவன் வேறொரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருக்கிறான். அதிகாலையில் வெளியில் செல்பவன் இரவும் அவள் வீட்டிலேயே தங்கி விடுகிறான். பொழுது புலர்ந்ததும் அவன் அப்பெண் வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறான். இத்தகவல் மனைவிக்கு வந்து விடுகிறது. அந்தத் தகவலை எடுத்து வருபவள் அவளது தோழி. உடனே தலைவிக்குக் கோபம் வருகிறது. கோபத்தையும் விட அழுகை வருகிறது. அதையும் விட அச்சம் வருகிறது. என்ன அச்சம்? வெளியில் விளையாடிக் கொண்டிருக்கும் தன் மகனும் தந்தை உள்ளே நுழையும்போது வீட்டுக்குள்ளே சேர்ந்து வந்து விடுவானோ. அப்படி வருவானானால் கணவனை வைய முடியாது. ஏனெனில் குழந்தை முன்பு கணவனை வைதால் குழந்தைக்குத் தந்தை மீது இருக்கும் மதிப்பு குறைந்து விடும். வையாமல் விட்டால் இரவு முழுவதும் வேற்று இல்லத்தில் தங்கி வரும் இத்தீய ஒழுக்கத்தைப் பிற்காலத்தில் குழந்தையும் தவறான ஒழுக்கம் என்று அறியாது பின்பற்ற வாய்ப்பாக அமைந்து விடும். என்ன செய்வது என்று சிந்தித்தவளாக இருக்கிறாள்.
அவள் எண்ணம் போலவே நல்ல வேளையாகத் தந்தையுடன் மகன் சேர்ந்து வரவில்லை. தனயன் தனியாக வருகிறான். தலைவன் தனியாக வருகிறான். மகிழ்கிறாள் தலைவி. கணவனின் பரத்தையர் ஒழுக்கத்தைத் தன் தோழியிடம் கூட நேரிடையாகக் கூறாத நாகரிக இனம் தமிழினம். ஆகவே அந்தச் சங்கத் தலைவி இவ்வாறு கூறுகிறாள்.

“வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
காலை யிருந்து மாலைச் சேக்கும்
தெண்கடல் சேர்ப்பனொடு வாரான்
தான்வந் தனன்எம் காத லோனே”.

வெள்ளைக் கொக்கின் பிள்ளை இறந்து விட்டது. அதற்குத் துட்டிக் கேட்பதற்காகக் (துக்கம் விசாரிக்க) காலை செல்லும் நாரை மாலையும் அங்கேயே தங்கி விடுகின்றதாம். நல்ல வேளையாக அப்படிப் பட்ட நீர்த்துறையின் தலைவனோடு வராமல் தனியே வந்தான் என் மகன் என்கிறாள். தன் கணவனின் தீய ஒழுக்கத்தைப் பற்றித் தலைவி தோழியிடம் கூறுவது இவ்வளவுதான்.

கொக்கு வயல்வெளியில் வசிக்கும் பறவை, நாரை நீர்நிலைகளில் வாழ் பறவை. நாரை என்பது உயரமான கால்களை கொண்டது. நன்கு பறக்கும் தன்மையது. வெள்ளைக் குருகுக்கு (வெள்ளைக் கொக்கு) கால்கள் குட்டையாக இருக்கும். அவ்வளவாகப் பறக்க முடியாது. ஆனால் எளிதில் மாட்டிக் கொள்ளாது. மறைவாக வாழும் தந்திரம் கற்றது. அதுபோல தலைவன் மறைவாக வாழும் தந்திரம் நிறைந்த பரத்தையுடன் இருந்து விட்டு வருகிறான் என்பது இதில் மறைந்துள்ள பொருள். ஐந்தே அடிகளில் தன் கணவனின் ஆகாய அளவு தவறை மறைபொருளாகக் கூறும் நுட்பத்தை வியக்காமல் இருக்க இயலுமா? கல்வியறிவு கிஞ்சித்தும் இல்லாத சங்கத் தமிழச்சி இவ்வாறு சிந்திக்கிறாள்.

குழந்தை வளர்ப்பின் நுட்பம் அறிந்தவள் அவள். அதனால்தான் குழந்தை முன் எதைப் பேசக்கூடாது என்னும் தெளிவுடன் பேசுகிறாள். அவள் வளர்த்த குழந்தைகள் பண்பாட்டை மீறாமல் ஒழுக்கத்தில் மாறாமல் இருந்திருக்கின்றன. இக்காலத்தில் இந்நிலை இருக்கிறதா?

பார்க்க, கேட்க, பேசக் கூடாத அனைத்துத் தகவல்களும் ஊடகங்கள் வாயிலாக நம் வீட்டு வரவேற்பறைக்கு வந்து விடுகின்றன. அவற்றை ஒன்று விடாமல் நாமும் பார்த்து விடுகின்றோம். அத்துடன் போகிறதா? நம் குழந்தைகளையும் பார்க்க விடுகின்றோம். நமக்குத் தேவை நம் குழந்தை நம்மைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் அவ்வளவுதான். ஆனால் பிஞ்சுகளின் மென்மையான இளம் மனதில் தேவையற்ற ஆபாச, வன்முறைக் காட்சிகள் ஆழமாகவும் மிக அழுத்தமாகவும் பதிந்து விடும் என்பதை பெற்றோர்கள் அறிந்தாலும் அதைச் செயல்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றனர்.

இவை தவிர கணினியைப் பயன்படுத்தத் தருகின்ற பெற்றோர்கள் அக்குழந்தையைக் கண்காணித்துக் கொண்டு இருத்தல் மிக அவசியம். குழந்தையின் முன் பெற்றோர் ஃபேஸ் புக்கைத் திறந்து வைத்துக் கொண்டு நண்பர்களுடன் ஜொல்லுவது கவனமாகக் களையப் பட வேண்டிய ஒன்று. இதனால் குழந்தைக்கு பெற்றோர் மீது உள்ள மரியாதை குறைவதோடு அதுவும் நட்பு விண்ணப்பம் கொடுக்கத் தொடங்கி விடும் என்பதை பெற்றோர்கள் மறக்கக் கூடாது.

குழந்தைகளுக்கு நல்லது இது தீயது இது என்று பகுத்துணரும் பக்குவம் வரும் வரை குழந்தைகள் முன்பு எவற்றை செய்யக் கூடாது என்பதில் பெற்றோர்களுக்கு ஒரு தெளிவு வேண்டும். முக்கியமாக பெற்றோர்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொள்வது, சண்டையிட்டுக் கொள்வது முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

பிறரைப் பற்றி கேலி, கிண்டல் செய்து விமர்சனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் அந்தக் குறிப்பிட்ட நபர் மீது குழந்தைக்கு மரியாதை இல்லாது போகும். பெற்றோர்களைப் போலவே பிறரைப் பழிப்பதை பெற்றோர்களிடமிருந்தே கற்றுக்கொள்ளும். அதனால் இடம் பொருள் ஏவல் தெரியாமல் எங்கேனும் வகையாய் மாட்டிக்கொண்டு அல்லல் படும். உங்கள் குழந்தைக்கு இந்நிலை தேவையா என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

குழந்தைகள் தவறு செய்வது இயல்பு. குழந்தைகள்தான் தவறு செய்யும். குழந்தைகள் தவறு செய்யும் போது குழந்தையைத் திருத்தும் சொற்கள் கூட திருவள்ளுவர் சொல்வது போல அன்பு கலந்த கனிச்சொற்களாக இருக்கவேண்டும். நீங்கள் கனிச்சொற்களை விடுத்து காய்ச்சொற்களைப் பயன்படுத்தினால் குழந்தைக்கும் காய்ச்சொற்களே கனியாக இனிக்கும். எனவே சனியனே, மூதேவி, பேய், பிசாசு முதலிய சொற்கள் உங்கள் குழந்தைகளின் நாவில் நர்த்தனமாட வேண்டுமா என்பதைத் தீர்மானத்தால் உங்கள் வாயில் இது போன்ற சொற்கள் அறவே வராது.

குழந்தை முன்னிலையில் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது முதலியவற்றைச் செய்தல் குழந்தையிடம் மோசமான மன நிலையை உருவாக்கும். அது திருட்டுத் தம் அடிக்கலாமா என்று வாய்ப்பைத் தேடத் தொடங்கும். இளம்பருவத்தில் ஏற்படும் இது போன்ற பழக்கங்கள் இறுதிவரை இறுகப் பற்றிக் கொள்ளு(ல்லு)ம் இரும்புக்கரமாகிக் குழந்தையை இறுக்கும்.

வார்ததைகளால் கற்றுக் கொடுப்பது பாடமாகிப் போகும். வாழ்ந்து கற்றுக்கொடுப்பது அக்குழந்தைகளின் மனத்தில் படமாகிப் பதியும்.
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பிலே என்று, பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். அதற்காக குழந்தையை வளர்ப்பது தாயின் கடமை என்று கூறி தந்தைமார்கள் தப்பித்துக் கொள்ளக் கூடாது. இனிய இல்லறத்தை மேற்கொண்டு ஒழுகும் பெற்றோர்களின் வாழ்க்கை அவர்களின் வாரிசுக்கு வழிகாட்டியாக அமைதல் வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளை கனிவுடன் வழிநடத்திச் செல்லுங்கள். வாழ்ந்து கற்றுக்கொடுங்கள்!


முனைவர். ப. பானுமதி(ஆதிரா)

(இக்கட்டுரை இம்மாத பெண்மணி மாத இதழில் வெளியான என் கட்டுரை. நன்றி பெண்மணி)



வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Aவாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Aவாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Tவாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Hவாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Iவாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Rவாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Aவாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 17, 2013 1:41 pm

மிக சிறப்பான கட்டுரை அக்கா!
பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலேயே ஒழுக்கத்தை பெற்றோர்கள் கற்று கொடுத்துவிட்டால். அவர்கள் இறுதி வரை கண்டிப்பாக கடை பிடிப்பார்கள்.
திருமணத்திற்கு பிறகு ஆணுக்கு ஒன்றும் பெண்ணுக்கு ஒன்றும் இருக்க மாட்டார்கள்.
அவர்கள் தீய வழியில் கண்டிப்பாக இட்டு செல்லாது. சூப்பருங்க

பெண்மணி இதழில் சிறப்பான கட்டுரை சமர்பித்து வெளி வந்ததுக்கு வாழ்த்துக்கள் அக்கா.!

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 17, 2013 7:33 pm

"இளமையில் கல்வி சிலையில் எழுத்து" என்பதை நினைக்கிறேன்.

நல்ல பிரயோசனமான கட்டுரை.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 18, 2013 10:41 am

அருமையான பகிர்வு நண்பரே


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 18, 2013 3:56 pm

மிகச் சிறப்பான கட்டுரை அக்கா ....தொடர்ந்து எழுதுங்கள் சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Mar 18, 2013 4:06 pm

மிக அருமை! என் மனைவியிடம் காணப்படும் பெருங்குறை. அருமையான விளக்கம் நன்றிகள்!!


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Mar 18, 2013 4:10 pm

kirikasan wrote:மிக அருமை! என் மனைவியிடம் காணப்படும் பெருங்குறை. நாலுபேர்ருக்கு முன்னிலையில் பிள்ளைகளின் நிறைவைவிட்டு குறையைமட்டும் பேசுதல். போலப் பல தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் அருமையான விளக்கம் நன்றிகள்!!


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Mar 18, 2013 5:19 pm

அருமையான கட்டுரை,,

ஆயினும் இவற்றை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும் ஆராயப்படவேண்டும்.

இன்றைய சமூகத்தில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் சூழல் நிலவுகிறது. தனிக் குடும்பத்தையே தலைவிகள் விரும்புகிறார்கள். குழந்தைகளிடம் பேசுவதற்கு ஒரு ஆள் இருந்தாலே அவர்கள் டி‌வி, மற்ற பொழுது போக்கு சாதனங்களை நாடுவது குறையும். ஆரம்பம் முதல் தங்களை தொந்தரவு செய்யக்கூடாதென்று இது போன்ற சாதனங்கள் குழந்தைகளிடம் திணிக்கப்படுகிறது. பெற்றவரும் பிள்ளைகள் ரோபட் மாதிரி தாங்கள் விரும்பும் போது ஆட வேண்டும், வேலையாய் இருக்கும் போது தொந்தரவு செய்யக்கூடாது என்பதையே விரும்புகின்றனர். இது நடைமுறையில் சாத்தியப்படாத போது பிற சாதனங்கள் பிள்ளைகளிடம் நுழைகிறது...தாயும் கற்பமாய் இருக்கும் காலம் முதல் வேலைப்பளு, போட்டி, பொறாமை ஆகிய சூழல் நிறைந்த உலகத்தில் வாழும் பொழுது விளையும் பயிரும் முளையிலே மாசடைகிறது...நம் சமூகத்தில் இருந்த பஞ்ச தந்திர கதைகள், புராணக் நீதிக் கதைகள், சமூக அக்கறை நிறைந்த மா மனிதர்களின் வரலாறுகள் மழுங்கி விட்டன.

நம் சமூகத்தில் தான் குழந்தைகளை 30 வயதை கடந்தாலும் பிள்ளைகளாகப் பார்க்கும் மனநிலை நிலவுகிறது..வளரும் பருவத்திலே அவர்களை சுயத்திறன் படைத்தவர்களாக படைப்பதில்லை....கல்விக்கூடங்களும் பட்டத்தை கொடுக்கிறது பட்டறிவை உருவாக்குவதில்லை..













சதாசிவம்
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக