புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_m10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10 
60 Posts - 48%
heezulia
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_m10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_m10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_m10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_m10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_m10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_m10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_m10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_m10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_m10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_m10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10 
17 Posts - 2%
prajai
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_m10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_m10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_m10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10 
5 Posts - 1%
jairam
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_m10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_m10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_m10இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் யார்?


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Feb 12, 2009 9:23 am

முந்தி வந்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைக்கிறது என்பது பழமொழி. இலங்கைத்தீவின் பூர்வீக குடிமக்கள் யார்? தமிழரா அல்லது சிங்களவரா? என்ற கேள்வி இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தீவிரமாக அலசப்பட்டு வருகிறது.

இலங்கைத் தீவின் வரலாறு கி. மு.483 ல் இன்றைய கலிங்கம் அல்லது வங்காளத்திலிருந்து வந்து குடியேறிய விஜயனும் அவனது எழுணூறு தோழர்களோடு ஆரம்பிக்கிறது என்றும் இலங்கைத்தீவு அவன் பரம்;பரையினரான சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்பது சிங்கள-பௌத்த தீவிரவாதிகளது திரிபுவாதமாக இருந்து வருகிறது.

அதுமட்டும் அல்லாது தமிழர்கள் வந்தேறு குடிகள், காலத்துக்கு காலம் இலங்கைமீது படையெடுத்து வந்த பாண்டிய சோழ மன்னர்களால் கொண்டுவந்து குடியேற்றப் பட்டவர்கள் அவர்கள் சிங்களப் பெரும்பான்மை மக்களது தயவில் வாழுகின்றவர்கள் என்பதும் இந்த சிங்கள-பொத்த இனவாதிகளது வாதமாகும்.

இந்த வாதத்துக்குத் துiணாயாக மகாவம்சம், சூழவம்சம் போன்ற பௌத்த இதிகாசங்கள், சிங்கள - பௌத்த தேசியத்தின் முன்னோடியென கொண்டாடப்படும் அநகாரிக தர்மபால போன்ற சிங்கள தேசியவாதிகளது எழுத்துக்கள் மேற்கோள்களாக எடுத்துக் காட்டப்படுகின்றன.

"போர் என்பது வேறுவழிகளில் முன்னெடுக்கப்படும் அரசியல்"("war is an extension of politics by other means") என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இன்றைய தமிழர்-சிங்களவருக்கு இடையிலான ஈழப்போரை இலங்கைத் தீவு யாருக்குச் சொந்தம் என்ற அரசியல் கேள்விக்கு வேறு வழிகளில் பதில் காண முனையும் முயற்சி என்று வர்ணிப்பதில் தவறில்லை என்றே சொல்லலாம்.

தமிழ்மக்களும் சிங்கள மக்களும் இலங்கைத்தீவின் மக்கள். எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருக்கும் தமிழர்களுக்கும் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் சிங்களவர்களுக்கும் நாட்டில் ஒத்த உரிமை, சொந்தம் இருக்கிறது என்று ஒத்துக் கொண்டால் இனப்பிரச்சினை இருக்காது. வடக்கும் -கிழக்கும் தமிழ்மக்களது தாயக பூமி, தெற்கும் மேற்கும் மத்தியும் சிங்களமக்களது தாயக பூமி என்ற யதார்த்தம் ஒப்புக் கொள்ளப் பட்டால் ஒரு தீவில் இரண்டு நாடுகள் இரண்டு மக்கள் சமாதானமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் இந்த யதார்த்தத்தை சிங்கள-பௌத்த இனவாதிகள் ஒத்துக் கொள்ளத் தயாராயில்லை. தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதையோ அவர்களுக்கும் சிங்களவர் போன்றே ஆட்சியுரிமையில் பங்கு இருக்கிறது என்பதையோ இந்த சிங்கள -பௌத்த தீவிரவாதிகள் ஒத்துக் கொள்ளப் பிடிவாதமாக மறுக்கிறார்கள்.

இந்த சிங்கள-பௌத்த தீவிரவாதிகளில் ஒருவரான சனாதிபதி சந்திரிகா தமிழர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் அல்லர். இந்த (ஸ்ரீலங்கா) நாட்டை சேராதவர்கள் எப்படி தனிநாடு கோரமுடியும் என தென்னாபிரிக்க நாட்டுத் தொலைக் காட்சிக்குக் கொடுத்த செவ்வியில் கூறியுள்ளார். இதில் அதிசயம் எதுவும் இல்லை. அநகாரிக தர்மபால, எஸ். டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க போன்றவர்கள் எழுதியும் பேசியும் வந்ததையே சனாதிபதி சந்திரிகாவும் சொல்லியிருக்கிறார். கொஞ்சக் காலத்துக்கு முன் ஸ்ரீலங்காஒரு பௌத்த நாடென்றும், நாடும் ஒன்று மக்களும் ஒன்று என்று சந்திரிகா அனுராதபுரத்தில் நடந்த ஒரு வைபவத்தில் பேசியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

சனாதிபதி சந்திரிகா தமிழர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்று கூறியதையிட்டு கொழும்பில் அரசியல் வியாபாரம் செய்து பிழைக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி மறுப்புத் தெரிவிக்கவில்லை, ஏனைய தமிழ்க் குழுக்கள் எதுவும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. நக்கினார் நாவிழந்தார் என்பது போல இந்தத் தமிழ்க் குழுக்களின் தலைவர்கள்வாயைத் திறக்காமல் மௌனிகளாக இருந்துவிட்டார்கள்.

அகில இலங்கை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. குமார் பொன்னம்பலம் ஒருவரே சனாதிபதியின் கூற்றை மறுத்து அறிக்கை விட்டுள்ளார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Feb 12, 2009 9:23 am

ஒரு நாடும் அந்த நாட்டு மக்களும் பொருளாதாரத் துறையில், நவீன தொழில் நுட்பத்துறையில் முன்னேற வேண்டு மென்றால் இன, மத, மொழி வேறுபாடுகளை மறந்து எல்லா மக்களும் ஒரு தாய்வயிற்றுப் பிள்ளைகள் போல் ஒத்த உரிமை, ஒத்த நிறை, ஒத்த விலை உடையவர்களாக வாழ்வதற்குரிய அரசியல் ஆட்சிமுறை இருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் சமாதானம், சுபீட்சம், அரசியல் கட்டுப்பாடு நிலவும். இதற்கு கனடாநல்ல எடுத்துக் காட்டாக விளங்குகிறது. இதற்கு முற்றிலும் மாறாக ஸ்ரீலங்கா விளங்குகிறது. நல்லாட்சிக்குப் பதில் காட்டாச்சியே அங்கு நடைபெறுகிறது. செங்கோல் ஆட்சிக்குப் பதில் கொடுங்கோல் ஆட்சியே இடம்பெற்றுள்ளது. இதனால் அந்த நாடு குட்டிச்சுவராகநாளும் பொழுதும் தேய்ந்து போய்க் கொண்டிருக்கிறது.

சிங்கள-பௌத்த இனவாதிகள் விஜயனது வருகையோடுதான் இலங்கைத் தீவின் வரலாறு தொடங்குகிறது என எண்ணி நடக்கிறார்கள். ஆனால் இந்தக் கதையைக் கூறும் மகாவம்சமே விஜயனது வருகைக்கு முன்னர் இலங்கைத்தீவில் நாகர், இயக்கர், அரக்கர்,புலிந்தர் இருந்தனர் என்றும் அவர்கள் கொற்றமும்; கொடியோடும் அரசாட்சி செய்தார்கள் என்றும் கூறுகிறது.

மகாவம்சம் 6ம் நூற்றாண்டில் மகாநாம என்ற புத்ததேரர் ஒருவரால் பாளி மொழியில் எழுதப்பட்ட இதிகாசம் (epic) ஆகும். மகாவம்சம் என்றால் ""பெருங்குடியினர்"" என்பது பொருளாகும். வம்சம் தமிழ்ச்சொல்லாகும். இது இலங்கைபற்றிய கர்ணபரம்பரை கதையோடு ஆரம்பித்து மகாசேனன் ஆட்சியோடு(கி.பி. 334- 362) முடிவுறுகிறது. இதன்; இரண்டாவது பாகம் சூழவம்சம் எனப் பெயர் பெறும். இதன் முதல் பிரிவு 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்மகீர்த்தி என்ற புத்ததேரலால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. மகாவம்சத்தின் கதைநாயகன் துட்டகைமுனுவென்றால் (கி.மு. 101-77) சூழவம்சத்தின் கதைநாயகன் தாதுசேனன் ஆவான். ( கி.பி. 1137-1186).

தமிழ்மன்னன் எல்லாளன் அனுராதபுரத்தில் நீதி தவறாத செங்கோலாட்சியை நடாத்தினாலும் அவன் ""புன்னெறி"" (false beliefs) கொண்டவன் என்ற காரணத்தாலேயே அவன் மீது துட்டகைமுனு படையெடுத்தான் என மகாவம்சம் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாது எல்லாளன் -கைமுனு யுத்தத்தத்தை தமிழர்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய புனிதயுத்தம் எனக் காட்ட மகாவம்சம் முயன்றுள்ளது. ஆனால் எல்லாளன்-துட்டகைம்முனு யுத்தத்தின்போது எல்லாளன் தரப்பில் மட்டுமல்ல துட்டகைமுனுவின் படையிலும் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். கைமுனுவின் படைத்தளபதிகளில் ஒருவனானக நந்தமித்தன் இருந்திருக்கிறான். இவனது நெருங்கிய உறவினன் எல்லாளன் படையின் சேனாதிபதியாக இருந்திருக்கிறான். அது மட்டும் அல்லாது உருகுணையிலிருந்து அனுராதபுரத்துக்கு படையெடுத்து வந்த கைமுனு இடையில் சிற்றரசர்களாக இருந்த 32 தமிழரசர்களைப் போரில் வென்றான் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. இது கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் முழு இலங்கையிலும் தமிழர்கள் பரவி வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.

இலங்கைத் தீவுக்கு புத்தபெருமான் மும்முறை வந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது.முதல்முறை வந்தபோது ஆட்சியுரிமைபற்றி தங்களுக்குள் மோதிக்கொண்ட இரண்டு இயக்க அரசர்களிடையே சமாதானத்தை நிலை நாட்டினார் என்று குறிப்பிடுகிறது.

இரண்டாவதுமுறை வந்த போது புத்தர் நாகதீவில் இறங்கி அரசுரிமைபற்றி தங்களுக்குள் போர்புரிந்த இரண்டு நாகவரசர்களது பிணக்கைத் தீர்த்து, அந்த அரசர்கள் உரிமைவேண்டிப் போர்புரிந்த மணித்தவசில் அமர்ந்து மூன்று கோடி நாகர்களுக்கு புத்த தருமத்தைப் போதித்தாரென மகாவம்சமும் புத்தமத காப்பியமான மணிமேகலையும் குறிப்பிடுகின்றன.

மூன்றாவது முறை புத்தர் வந்தபோது இன்று களனி என்று அழைக்கப்படும் கல்யாணியில் அரச உரிமைக்காக சண்டைபிடித்துக் கொண்டிருந்த இரண்டு நாகவரசர்களுக்கிடையில் நிலவிய பிணக்கைப் போக்கினார் என்று மகாவம்சம் கூறுகிறது.

மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என சிங்களவர், தரச்சர், லம்புக்காணர் ( முயல் அல்லது ஆடு), பாலிபோஜகர் (காகம்), மோரியர் (மயில்), புலிங்தர் இவர்களைக் குறிப்பிடுகிறது. மகாவம்சத்தின் கதைப்படி வேடர் விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த பிள்ளைகள் எனச் சொல்லப்பட்டுள்ளது. சிங்களவர் காலத்தால் வேடர்களுக்கு முந்தியவர்கள் எனக் காட்டவே மகாவம்ச ஆசிரியர் இந்த புனைந்துரையை புகுத்தியுள்ளார். வேடர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறிய ஆரியர்களோடு நாளடைவில் மணவுறவு மூலம் கலந்தார்கள் என ""இலங்கையின் பழைய வரலாறு"" என்ற நூலில் ஜி.சி. மென்டிஸ் குறிப்பிடுகிறார். கண்டிச்சிங்களவர் தென்புலத்தோர்க்கு படையல் படைக்கும் வழக்கம் வேடர்களது கலப்பினால் ஏற்பட்டதென கலாநிதி செலிக்மன் அபிப்பிராயப் படுகிறார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Feb 12, 2009 9:24 am

இந்த நாகர்கள், இயக்கர்கள், வேடர்கள் ஆதிதிராவிட இனமக்கள் என்பதும் அவர்கள் சிறந்த நாகரிகம் படைத்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. (சங்ககாலப்புலவர்களில் சிலர் வேடர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.)

இப்போது குடாநாடாக விளங்கும் யாழ்ப்பாணம் முன்னொரு காலத்தில், அதாவது கிறிந்து பிறப்பதற்கு அநேக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு தீவுகளாக இருந்தது. மேற்கே நாகதீபம், மணிநாகதீபம், மணிபுரம், மணிபல்லவம் என்னும் பெயர்களால்வழங்கப்பட்ட பெருந்தீவும், கிழக்கே எருமை முல்லைத்தீவு என்று பெயர்பெற்ற சிறுதீவும் இருந்தன.

இவை காலத்துக்குக் காலம் இடம்பெற்ற கடற்கோள்களினால் பெரும்பகுதி அழிந்து போயின. இன்று யாழ்பாணக்குடா நாட்டைச் சுற்றியிருக்கும் புங்குடுதீவு, அனலைதீவு, மண்டைதீவு போன்ற தீவுகள் அப்பெருந்தீவகத்தின் மிஞ்சிய பகுதிகளேயாகும்.

கி.மு. வட இந்தியாவை ஆண்ட பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை மேற்கொண்டபோது இன்றைய கீரிமலையான நகுலமலையைக் கொண்ட மணிபுரத்துக்கு வந்தானென்றும், அந்த நாட்டு நாகவரசனனின் மகள் சித்திராங்கதையைக் கண்டு காதல் கொண்டு அவளை திருமணம் செய்தானென்றும் பாரதக்கதையில் சொல்லப்படுகிறது. அருச்சுனன் -சித்திராங்கதை இருவருக்கும் பிறந்த சித்திரவாகன் என்பான் தனது தந்தையாகிய அருச்சுனனைப் போரில் வென்றான் என்றும் அவனது கொடி சிங்கக் கொடியென்பதும் மகாபாரதத்தால் அறியப்படும்.

இந்தச் சிங்கக் கொடியே விஜயனின் சந்தததியோடு நாகர்கள் மணவுறவு வைத்து இரண்டறக் கலந்தபோது சிங்களவரின் கொடியாகப்பின் மாறியது.

குவேனியை மணந்த விஜயன் அவளைக் கைவிட்டு பின் பாண்டிய இளவரசியை மணந்து கொண்டான் என்று மகாவம்சம் குறிப்பிட்டாலும் குலப் பின்னணி எதுவும் இல்லாத விஜயனுக்கு மூவேந்தர்களில் ஒருவனாகிய பாண்டியன் பெண்கொடுத்திருக்க மாட்டான் என்றும் நாககன்னிகை ஒருத்தியையே விஜயன் மணமுடித்திருக்க வேண்டும் என்று முதலியார் சி. இரசநாயகம் அவர் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் என்றும் நூலில் கூறியுள்ளார்.

நாகர், இயக்கர் அரக்கர், வேடர் இவர்கள் எல்லோரும் முன்குறிப்பட்டது போல் இனத்தால் திராவிடர்களே. சமயத்தால் சைவர்களே. இதேபோல் கலிங்கத்திலிருந்து இலங்கை வந்த விஜயனும் அவனோடு வந்தகலிங்கர்களும் சமயத்தால் சிவவழிபாட்டினரே.

நாகர், இயக்கரை மனிதரல்லாதோர் அல்லது அரைமனிதர்களாக மகாவம்சம் சித்தரிப்பதன் நோக்கம் சிங்களவரே ஆதிக்குடியென்ற மாயயை தோற்றுவிப்பதற்கேயாகும்.

விஜயன் இலங்கையில் தரையிறங்கியபோது இன்றுள்ள ஐந்து ஈசுவரங்களான திருக்கேதீசுவரம், நகுலேசுவரம், திருக்கோணேசுவரம் மாமாங்கேசுவரம் மற்றும் முன்னேசுவரம் போன்ற சிவாலயங்கள் அப்போதும் இருந்திருக்கின்றன. இவற்றில் திருக்கேதீசுவரமும் கோணேசுவரமும் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞனசம்பந்த நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் இருவராலும் தேவாரப் பாடல்பெற்ற திருக்கோவில்களாகும்.

மேல்குறிப்பிட்ட ஐந்து ஈசுவரங்களைவிட தென்னிலங்கையில் புகழ்பெற்ற கதிர்காமம், தேவேந்திரமுனையில் சந்திரமௌவீசுவரர் போன்ற சைவசமய ஆலயங்களும் மத்தியில் சிவனொளிபாத மலையும் இருந்திருக்கின்றன.

இலங்கையை ஆண்ட இயக்கர்குல மன்னனான இராவணன் மிகச் சிறந்த சிவபக்தனாக விளங்கியவன். திருஞானசம்பந்தர் ""இராவணன் மேலது நீறு"" என்று திருநூற்றுப் பதிகத்தில் இவனை போற்றிப் பாடியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் இராவணனின் பட்டத்தரசியை ""ஆர்கலி சூழ்தென்னிலங்கை அழகமர் மண்டோதரிக்குப் பேரருள் இன்பம் அளித்த பெருந்துறை மேயபிரானை சீரியவாயால் குயிலே தென்பாண்டிநாடனைக் கூவாய்"" என குயில்பத்தில் சிறப்பித்துப் பாடியுள்ளார். ""பெருந்துறை மேயபிரான்"" என்று தூய தமிழில் ""நாளும் தமிழ்வளர்க்கும் ஞானசம்பந்தர்"" குறிப்பிட்டது மாதோட்டத்து திருக்கேதீசுவரத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனையே. மா என்றால் பெரியது என்று பொருள். தோட்டம் என்றால் துறை என்று பொருள். இந்த மாதோட்டமே பன்னெடுங்காலமாக இலங்கையின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. வங்காளக்குடாக் கடலுக்கூடாக கீழைத்தேசங்களுக்குப் பயணம் செய்யும் மரக்கலங்களும், சீனதேசத்திலிருந்து வரும் மரக்கலங்களும் மாதோட்டம் வழியாகவே போய்வந்தன.

திருக்கோணேசுவர மலையில் காணப்படும் ஆழமான பெரிய வெட்டு இராவணன் வெட்டென்றே இன்றும் அழைக்கப்படுகிறது. திருகோணமலைக்கு வடக்கே உள்ள கன்னியாவில் காணப்படும் வெந்நீர் ஊற்றுக் கிணறுகள் இராவணன் தனது தாயாரின் நினைவாக வெட்டினான் என்ற ஐதீகமும் இன்றுவரை தமிழ்மக்களிடையே இருந்துவருகிறது.

இராமாயண காலத்தில், இலங்கையின் மேற்குக் கரையோரத்தில் இப்போது மாதோட்டம் (மன்னார்) என்று அழைக்கப்படும் மாந்தை என்னும் நகரைத் தலைநகராகக் கொண்டுநாகர் வகுப்பைச் சேர்ந்த ஓவிய குலத்தவரும், தேவசிற்பியுமாகிய விசுவகர்மாவின் வம்சத்தவராகிய கம்மியர் ஆட்சிசெய்து வந்தார்கள். இலங்கை வேந்தன் இராவணன் தேவி மண்டோதரியும், அவன் சிறிய தந்தையாகிய குபேரன் தேவி சித்திரரேகையும், இம்மாந்த நகரைஆண்ட தேவகம்மிய அரசகுல வம்சத்துப் பெண்களே. முருகக் கடவுளால் ஆட்கொள்ளப்பட்ட அசுரர்கோனாகிய சூரபதுமனுடைய தேவி பதுமகோளையும் மாந்தை நகரத்தவளே.

மாந்தையை ஆண்ட அரசர் காந்தக்கோட்டையென்று பலதேசத்தாரால் போற்றப்பட்டதும், தூங்கெயில் என்று புறநானூற்றில் சிறப்பிக்கட்டதுமான இரும்புக் கோட்டையை உடையவர்களாகவும், வாணிபச் செழிப்புற்றவர்களாகவும், வீரம் கொடை, இசை, சிற்பம், ஓவியம் போன்றவற்றில் சிறப்புற்றவர்களாகவும் விளங்கினார்கள்.

மாந்தையில் வாழ்ந்த ஓவியகுலத்தாரின் சித்திரத் தொழிலின் சிறப்புக்காரணமாகவே ஓவியம் என்ற சொல் தமிழில் வழங்குகிறது.

எபிரேபிய மொழியில் யானையின் தந்தத்துக்கும், குரங்குக்கும், அகிலுக்கும், மயிலுக்கும் உரிய சொற்கள் இபம், கபி, அகில், தோகை என்னும் தமிழ்ச் சொற்களே. இதேபோல் கிரேக்க மொழியில் அரிசி, இஞ்சிவேர், கறுவா என்னும் பண்டங்களைக் குறிக்கும் சொற்கள் தூய தமிழ்ச் சொற்களே.

ஓவியரல்லாத மறுநாகர் வம்சத்து அரசர்கள் கதிரமலை, இன்று முல்லைத்தீவு என்று அழைக்கப்படும் எருமைமுல்லைத்தீவிலும், குதிரைமலையிலும் இருந்துஅரசாண்டு வந்தார்கள். அல்லியரசாணியும், எழினியும், பிட்டங்கொற்றானும், குமணனும் குதிரமலையிலும், ஆந்தை, ஆதனழிசி, நல்லியக்கோடன், வில்லியாதன் என்பார் மாந்தையிலும், எருமையூரன் எருமைமுல்லைத்தீவிலும் அரசாண்டதாக புறநானூறு - அகநானூற்றுப் பாடல்களால் அறிய முடிகிறது.

இந்தக் கதிரமலையே போத்துக்கேயர் கபலத்தில் கந்தர்குடை என்றும் ஒல்லாந்தர் காலத்தில் கந்தரோடை என்றும் ஓடைக்குறிச்சி என்றும் திரியலாயிற்று.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Feb 12, 2009 9:24 am

விஜயன் ஒன்றில் மாந்தையில் அல்லது கீரிமலையில் கரைவந்து இறங்கியிருக்க வேண்டும். யாழ்ப்பாண வைபமாலை விஜயன் கதிரமலையில் வந்திறங்கியதாகவே சொல்கிறது. ""கதிரமலையில் வசித்த நாகவரசனுடன் நட்புக் கொண்டு, இலங்கையில் பாழடைந்துகிடந்த கோவில்களைப் புதுப்பித்தும் புதிய கோவில்களைக் கட்டிவித்தும் வந்தான்"" என்னும் கர்ணபரம்பரக் கதையைத்தான் மயில்வாகனப் புலவர் தாம் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

விஜயனுக்குப்பின் சில தலைமுறைக்குள் இலங்கையரசர்கள் கலிங்ககுலம் நீங்க நாகர்குலத்தவரானார்கள். அதாவது தமிழர்களானார்கள்.

அசோகச் சக்கரவர்த்தி (கி.மு. 274-237) இலங்கையில் புத்த மதத்தைப் பரப்ப அனுப்பிய அவனது மகள் சங்கமித்தையும், மகன் மகிந்தனும் வந்திறங்கிய இடம் இன்றைய கீரிமலையாகும். அப்போது அனுராதபுரத்தை ஆண்டு கொண்டிருந்த மன்னனான தேவநம்பிய தீசன் (கி.மு.247-207) நாகவம்சத்து அரசனாவான். அவன் சிங்கள அரசனல்லன். அவனது பெயர் சிங்களப் பெயரன்று. தேவநம்பிய தீசன் என்றால் தேவனை நம்பிய தீசன் என்பது பொருளாகும். தீசன், நாகன் நாகவம்சப் பெயர்களாகும். அவனது தந்தையின் பெயர் மூத்தசிவன். சுத்தமான தமிழ்ப் பெயர். தேவநம்பியதீசனின் பின் அரியணை ஏறிய அவனது சகோதரர்களது பெயர்கள் முறையே உத்தியன், மகாசிவன் என்பதாகும். இவர்களுக்குப் பின் சோரநாகன், இளநாகன், அபயநாகன், ஸ்ரீநாகன், குட்டநாகன், மகாநாகன் எனப் பல நாகர்குல அரசர்கள் இலங்கையை ஆண்டிருக்கிறர்கள்.

நாகவணக்கம் தமிழர்கள் மத்தியில் (சிங்களவர்களும் நாகர்களின் பரம்பரையாதலால் அவர்கள் மத்தியிலும் நாகவணக்கம் காணப்படுகிறது)பரவலாக இருந்திருக்கிறது. நாகர்கோவில், நாகதம்பிரான் கோவில்கள் நாகவழிபாட்டோடு தொடர்புடைய சைவ ஆலயங்களாகும். தமிழர்களது பெயர்கள் பல நாகத்தோடு தொடர்புடையதாக இருப்பது அவதானிக்கத்தக்கது. நாகநாதன், நாகராசா, நாகம்மா, நாகேசுவரி போன்ற பெயர்கள் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.

இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த கிரேக்க வானயியலாளர் தொலமி நாகர்களை குறிப்பிடும்போது பின்வருமாறு வர்ணிக்கிறார்-

" ஆண்களதும் பெண்கதும் காதுகள் பெரிதாக இருக்கும். இவர்கள் (நாகர்கள்) இரண்டு காதுகளிலும் பெரிய துளை போட்டு முத்துக்கள் பதித்த தோடுகளை அணிவார்கள்". பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் காதுக்குத் தோடு போடும் வழக்கம் மிக அண்மைக்காலமாக தமிழர்கள் மத்தியில் இருந்திருக்கிறது. (நானும் ஆங்கிலப்பள்ளிக்குப் போன பின்னரும் காதில் தோடுபோட்டிருந்தேன்.)

இதே தொலமி தான் வரைந்த உலகப்படத்தில் இலங்கையையும் வரைந்துள்ளார். மேற்கே சிலாபம் தொடக்கம் கிழக்கே திருகோணமலைக்குக் கீழேயுள்ள பிரதேசத்தை அவர் "நாகதீப" (Nagadibi) என்றே குறிப்பிடுகிறார்! வடமேற்குப் பகுதியை தமிழ் சொல்லான தாமிரபரணி அரபு மொழியில் ஒலிமாற்றம் செய்யப்பட்ட தப்பிரபேன் (Taprobane) என்ற பெயலால் குறிக்கிறார். கரையோர நகரங்களை தமிழ்ப் பெயரான பட்டினம் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். மேலும் இலங்கையை சாலிகே(சாலியூர்) என்றும் சிவனொளிபாதமலையை ழுரடipயனய என்றும் குறிப்பிடுகிறார். ஏனைய ஊர்ப்பெயர்கள் தமிழில் அல்லது அதன் நேரிடையான கிரேக்க மொழிபெயர்ப்பில் காணப்படுகிறது.

சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திற்கும் ஈழத்துக்கும் இடையில் நிலவிய வாணிக உறவை தெளிவாக்குகிறது.

"நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்

காலி;ன் வந்த கருங்கறி மூட்டையும்

வட மலைப் பிறந்த ஆரமும் அகிலும்

....................................................

கங்கைவாரியும் காவிரிப் பயனும்

ஈழத்துணவும் காழகத் தாக்கமும்

அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி

வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகி"

(பட்டினப்பாலை 185-193)


மேலும் தமிழகம் - ஈழம் இரண்டுக்கும் இடையிலான உறவை உறுதிசெய்வதுபோல சங்கப் புலவர்கள் பட்டியலில் ஈழத்துப்பூதந்தேவனார் என்ற புலவர் பெயரும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Feb 12, 2009 9:26 am

கி.மு.483 ல் இருந்து கி.பி. 896 வரை அதாவது விஜயன் முதல் காசியப்பன்வரை சுமார் 1,400 ஆண்டுகள் இலங்கையை ஆண்ட மன்னர்களில் யாருமே தனிச் சிங்களவர் இல்லை. காரணம் சிங்கள இனமும் சிங்களமொழியும் கி.பி. 7 அல்லது 8ம் நூற்றாண்டளவிலேயே உருவாக்கப்பட்டு அடையாளம் காணப்படுகிறது. இதனாலேயே இலங்கைத் தீவுக்கு சிங்களத்தில் பெயர் யாதும் இல்லை. ஸ்ரீலங்கா என்பது கிரந்த (திருந்தாத சமஸ்கிருதம்) மொழிச் சொல்லாகும். சிங்களதீப என்ற சொல் மகாவம்சத்தில் இருமுறையும் சூழவம்சத்தில் ஒரேயொருமுறையும் இலங்கையைக் குறிக்க அதன் ஆசிரியர்களால் எடுத்தாளப்படுகிறது.

இதற்குக் காரணம் இருக்கிறது. இலங்கை எப்போதும் மூன்று அல்லது அதற்கு மேலான பகுதிகளாகப் (ராஜரட்டை, மாயரட்டை, உருகுணரட்டை, யாழ்ப்பாணம்)பிரிக்கப்பட்டு அரசர்களால் ஆண்டுவந்தபடியால் ""ஏகஇலங்கை"" என்ற உணர்வு பிறக்க வழியில்லாது போயிற்று. துட்ட கைமுனு, முதலாம் பராக்கிரமபாகு, முதலாம் விஜயபாகு இவர்கள் மட்டுமே முழு இலங்கையையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்ததாக நம்பப்படுகிறது.

விஜயபாகு கி.பி. 1038ல் இராஜாதிராஜன் என்ற சோழமன்னலால் கொல்லப்பட்ட சிங்கைநகர் அரசனான மானாபரணனின் மகளான திலகசுந்தரியைத் திருமணம் செய்து தனது பட்டத்தரசியாக்கினான். மானாபரணின் மகனே முதலாம் பராக்கிரமபாகு ஆவான். தவனது தாயார் பெயர் இரத்தினவல்லி. அவன் சிங்கபுரத்தில் பிறந்ததாக இராட்சதகுளத்தருகே அவனால் வெட்டப்பட்ட சாசனம் கூறும். யாழ்ப்பாண சிங்கையாரிய சக்கரவர்த்திகள் இராமேசுவரத்தை ஆண்ட பிராமணகுலத்தரசருடன் கம்பந்தம் செய்து ஆரியவரசப் பெயர் புநைந்து, உபவீதமுந்தரிந்திருந்தார்கள். அது போலவே பராக்கிரமபாகுவுக்கும் உபநயனச் சடங்கு செய்யப்பட்டது. எனவே பராக்கிரமபாகு தந்தைவழியிலும் தாய்வழியிலும் தமிழனும் சைவனும் ஆவான்.

பண்டைக்காலத்தில் இலங்கையில் வசித்த நாகரும், இயக்கரும் " எலு" என்ற மொழியையே பேசினார்கள். இது பின்னர் "ஈழு" என வழங்கப்பட்டது. இதன் காரணமாகவே இலங்கைக்கு "ஈழம்" என்ற பெயர் உண்டாயிற்று. "ஈழம்" "சீழம்" என மருவிச் பின் "சிஹழம்" "சிங்களம்" என மாறியது. "சிஹ" என்ற பாலிமொழிச் சொல்லின் பொருள் "சிங்கம்" என்பதாகும். விஜயன் சிங்கத்தின் வழித்தோன்றல் என்பதால் அவன் சந்ததியினர் சிங்களவர் என்று அழைக்கப்பட்டார்கள் என மகாவம்ச ஆசிரியர் குறிப்பிடுவது அவரது கற்பனையே.

சிங்கள மொழியின் தாய்மொழியான ஈழமொழி பேசிவந்தபடியாற்றான் யாழ்ப்பாணத்திலுள்ள சில ஊர்களின் பெயர்களும், காணித் தோம்புகளின் பெயர்களும் ""சிங்களப் பெயர்களாக"" தோற்றமளிக்கின்றன. அப்பெயர்கள் விஜயன் இலங்கைக்கு காலடி எடுத்து வைக்கு முன்னரே வழக்கில் இருந்தன என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதே சமயம் குருநாக்கல், கேகாலை போன்ற சிங்கள ஊர்களின் தோம்புகள் தமிழில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சிங்களமொழி பாலி, சமஸ்கிருதம், தமிழ், எலுமொழிகளின் கலப்பினால் உருவாகிய ஒரு கதம்ப மொழியாகும். சிங்கள மொழியில் காணப்படும் சொற்களில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்ச் சொற்களை வேராகக் கொண்டவையே. சிங்கள மொழியின் எழுத்து வடிவம் பெரும்பாலும் தெலுங்கு கன்னட மொழிகளை ஒத்து இருச்கிறது. காரணம் சிங்கள மொழிக்கு எழுத்து வடிவமும் அமைத்தவர்கள் தென்நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நாகார்க்சுனர், போதிதத்துவர் போன்ற திராவிட புத்த தேரர்களே.

பாண்டுவாசனது ஆட்சியில் மகதநாட்டிலிருந்து வந்த அனுராதன் என்ற அரசகுமாரன் என்பவனே தனது பெயரால் அனுராதபுரியை தலைநகராக்கினான்.

அனுராதபுரத்தரசர்கள் கதிரமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த யாழ்ப்பாண அரசர்களோடு நட்புரிமை கொண்டு வாழ்ந்ததோடு மணவுறவும் வைத்துக் கொண்டார்கள். சில சிங்கள அரசர்கள் சைவசமயிகளாகவும் இருந்திருக்கிறார்கள். அது போலவே தமிழ் மக்கள் சிலரும் பௌத்தர்களாக இருந்திருக்கிறார்கள். 1946 ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி 2.6 விழுக்காடு இலங்கைத்தமிழர் தங்களைப் புத்தசமயத்தினர் என தெரிவித்து இருந்தார்கள்.

மேலே குறிப்பிட்டதுபோல் தேவநம்பியதீசனின் தாயாரும் மூத்தசிவனின் பட்டத்தரசியும் நாகவம்சத்தவளே. அக்காரணம் பற்றியே "நாகன்" "திஸ்ஸன்" என்னும் பெயர்கள் மூத்தசிவனின் பிள்ளைகளுக்கு இடப்பட்டது.



மகதநாட்டு அசோகனும் தேவநம்பியதீசனும் சமகாலத்தவராவார். புத்தமதத்தை இலங்கையில் பரப்ப அசோகன் தனது மகள் சங்கமித்தை, மகன் மகிந்தன் ( அசோகனது வரலாற்றுப்படி அவனுக்கு மகன் இருந்ததற்கு ஆதாரம் இல்லை) இருவரையும் புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையோடு அனுப்பி வைத்தான். அவர்களை ஏற்றிவந்த கப்பல் யாழ்ப்பாணத்து வடகரையில் இப்பொழுது சம்புத்துறையென அழைக்கப்படும் சம்பு கோளத்தில்தான் வந்திறங்கின.

தேவநம்பியதீசனைப் போன்றே கதிரமலையை ஆண்ட அரசர்களும் புத்தமதத்தைத் தழுவி புத்த பள்ளிகளையும் தாதுகர்ப்ங்களையும் கட்டுவித்தார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடையில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட புத்தமத வழிபாட்டுச் சின்னங்கள் இந்த அரசர்களாலும் அதற்குப் பின்னரும் கட்டப்பட்ட விகாரைகளின் அழிபாடுகளே.

தமிழர்கள் நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டு காலமாக சமண புத்தசமயத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். சங்ககாலப் புலவர்கள் பலர் சமண, புத்தமதத்தவராவர். கோவலன் அநியாயமாகக் கொல்லப் பட்டபின் மாதவியும், அவளது மகள் மணிமேகலையும், கோவலன் தாய்தந்தையரும் (மாநாய்க்கன்) புத்தமதத்தை தழுவினார்கள் என மணிமேகலை கூறுகிறது. அதே சமயம் கண்ணகியின் பெற்றோர் (மாசாத்தான்) சமண மதத்தை தழுவினார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Feb 12, 2009 9:38 am

தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலையும் குண்டலகேசியும் புத்தமத காப்பியங்களாகும். சிந்தாமணி சமணமத காப்பியம். சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகள் சமணமுனிவராவர். வளையாபதி அழிந்தொழிந்து போனதால் அதன் ஆசிரியர் பற்றிய குறிப்பு எதுவும் தெரியவில்லை.

அனுராதபுரத்தரசர்கள் வலிமை குன்றிய காலத்தில் சுயாதீனமாகவும், வலிமை மிக்க காலத்தில் திறைசெலுத்தியும் அரசுபுரிந்து வந்தார்கள்.

அனுராதபுரம் கதிரமலையன்றி மேற்கே கல்யாணியிலும் (களனி), கிழக்கே கொட்டியாராத்திலும், தெற்கே திசமகாரமையிலும், மாத்தளைக்கு வடக்கே லேனதொறை என்னும் இடந்திலும் நாக இராகதானிகள் இருந்தன.

அனுராதபுரத்தில் விஜயனின் சந்ததி ஐந்து தலைமுறைக்குள் அற்றுப்போக கலிங்கரும் நாகரும் கலந்த மிசிரகுலத்தவரே அதன்பின் அரசாண்டு வந்தார்கள். பாண்டி நாட்டிலிருந்து பலதடவை படையெடுத்து வந்த தமிழரசர்களும் அனுராதபுரத்தை கைப்பற்றி அரசாண்டு வந்தார்கள். அப்போது மேலும் பல தமிழ்க் குடிகளும் இலங்கையில் குடியேறின.

நாகரும், இயக்கரும், கலிங்கரும், வேடரும், தமிழரும் கலந்தே சிங்கள இனம் உருவாகியது. தெற்கே மாத்தறை தொடக்கம் வடக்கே சிலாபம்வரை வாழுகின்ற கரையோர மக்கள் எல்லோரும் தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து நாளடைவில் சிங்களவர்களான தமிழர்களேயாவர். அண்மைக் காலத்தில்கூட நீர்கொழும்பு, சிலாபத்தில் தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்த பரவர் மதமாற்றம் காரணமாக தமிழை விடுத்து சிங்களத்தை கற்கை கொழியாகப் புகுத்தியதினால் சிங்களவர்களாக மாறினவர்களே. இதேபோல் வாணிக நிமித்தமாக கொழும்புக்கு வந்து குடியேறிய தமிழ்நாட்டு செட்டிமார், நாளடைவில் கொழும்புச் செட்டிகளாக மாறி இன்று முழுச் சிங்களவர்களாக மாறிவிட்டார்கள்.

சிங்கள அரசர்கள் தங்களுக்குள் அரியாசனத்துக்கு மோதிக் கொண்ட போதெல்லாம் பாண்டிய, சோழநாட்டு மன்னர்களின் உதவியையே நாடினார்கள். அங்கிருந்து பெரும் படைகளை திரட்டி ஆட்சியில் இருந்தவர்களைத் துரத்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார்கள் இவர்களால் கொண்டுவரப்பட்ட படையினர் இலங்கையில் தங்கி நாளடைவில் சிங்களவர்களாகவும் பௌத்தர்களாகவும் மாறினார்கள்.

சாளுக்கிய மன்னனான ஆறாவது விக்கிரமாதித்தனுக்கு விஜயபாகுவால் அனுப்பப்பட்ட தூதுவர்களை சோழர்கள் அவமதித்தார்கள் என்பதற்காக சோழர்மீது படையெடுக்க விஜயபாகு முனைந்தபோது அவனது வேளைக்காரப்படை அதற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தது.

சிங்கள அரசர்கள் காலத்துக்கு காலம் பாண்டிய சோழ இளவரசிகளை திருமணம் செய்து கொண்டதால் அந்த இளவரசிகளைத் தொடர்ந்து பிராமணர், படைத்தலைவர்கள், வேலைக்காரர்கள் குடிபெயர்ந்தார்கள். இவர்களும் நாளடைவில் சிங்கள சமூகத்தோடு சங்கமமானார்கள்.

கண்டிராஜ்யத்தின் கடைசி நான்கு நாயக்க மன்னர்கள் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட படைத்தளபதிகள், மந்திரிபிரதானிகள் காலப்போக்கில் சிங்களவர்கள் ஆனார்கள். கண்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கண்டிய தலையாரிகளில் அரைவாசிப்பேர் தமிழிலேயே கையெழுத்திட்டார்கள்.

இன்றைய கண்டிய பிரபுத்தவ குடும்பங்களான ரத்வத்தை, அலுவிகாரை, எகலபொல, மொன்றாவெல, பிலிமத்தலாவ, கெப்பட்டிப்பொல அசல் தமிழ்ப் பெயர்களின் திரிபே. அலுவிகாரை என்பது அளவுகாரன் அதாவது நிலத்தை அளப்பவன். எகவபொல என்பது எல்லைப்பாதுகாவலனைக் குறிக்கும். ரத்வத்தை என்பது ரதவாதயன் என்ற சொல்லை அடியாகக் கொண்டது. அதாவது அரசனின் கட்டளைப்படி கசையடித் தண்டனையை நிறைவேற்றுபவன். மொன்றாவல தமிழ்சொற்களான மண்வேலை என்பதன் திரிபாகும். மண்வேலைக்குப் பொறுப்பாக இருப்பவன். புலவர் சக தலைவன் சமன் பிலிமத்தலாவ. தலைமைப்புலவர். இதே போல் கெப்பெட்டிப்பொல கல் சக வேலை சக பாலன் - அதாவது கல்லாலான கட்டிட வேலையை மேற்பார்வை (பாலனம்) செய்பவன்.

பண்டாரநாயக்க என்ற பெயர் அரண்மனை பொக்கிஷத்துக்கு தலைவனாக இருப்பவனைக் குறிக்கும்.

சிங்களவரின் பரம்பரையை பின்னோக்கிப் பார்த்தால் அது ஒரு தமிழன் அல்லது தமிழச்சியின் ஆரம்பத்தில் போய் முடிவதைப் பார்க்கலாம்.

எனவே நாகர், இயக்கர், இயம்பர், வேடர், தமிழர் போன்ற திராவிட இனத்தவரே வரலாற்று ரீதியாகவும், இதிகாச ரீதியாகவும், இலக்கிய ரீதியாகவும் இலங்கையின் பூர்வீக குடிமக்களாவர்.

நன்றி: வேலுப்பிள்ளை தங்கவேலு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக