புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_c10பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_m10பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_c10 
30 Posts - 50%
heezulia
பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_c10பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_m10பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_c10பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_m10பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_c10பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_m10பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_c10 
72 Posts - 57%
heezulia
பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_c10பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_m10பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_c10பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_m10பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_c10பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_m10பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100


   
   
arasanrl
arasanrl
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 19/04/2013
http://mahabharatham.arasan.info

Postarasanrl Sun May 19, 2013 12:14 pm

(சம்பவ பர்வ தொடர்ச்சி)

வைசம்பாயணர் சொன்னார், "தேவர்களாலும் அரச முனிகளாலும் புகழப்பட்ட அந்த ஏகாதிபதி சந்தனு, தனது ஞானத்திற்காகவும், அறச்செயல்களுக்காகவும், உண்மை நிறைந்த பேச்சுக்காகவும் எல்லா உலகங்களிலும் அறியப்பட்டிருந்தான். தன்னடக்கம், தயாளம், மன்னிக்கும் குணம், புத்திகூர்மை, அதிகாரத்தில் மென்மை, பொறுமை, அதீத சக்தி ஆகிய குணங்கள் அந்த மனிதர்களில் எருதைப் போன்றவனிடம் (சந்தனு) வசித்தன. அறம், பொருள் ஆகியவற்றில் சரளமாக இருந்து, பரத குலத்தையும், மனித குலத்தையும் காத்து வந்தான் அந்த ஏகாதிபதி. அவனது கழுத்தில் சங்கில் (சங்கு) உள்ளது போல மூன்று கோடுகள் இருந்தன. அவனது தோள் அகலமாக இருந்தது. மதங்கொண்ட யானையின் வீரத்தை அவன் பிரதிபலித்துக் கொண்டிருந்தான்.

அரசகளைக்கான எல்லா அதிர்ஷ்ட குறிகளும் அவனிடம் இருந்தன. தேவலோகம் செல்வதற்கு முழுத்தகுதி வாய்ந்த பூமியின் முதல்வனாக அவன் இருந்தான். பெரும் சாதனைகள் செய்த அந்த ஏகாதிபதியின் நடத்தையைக் கண்ணுற்ற மனிதர்கள், இன்பத்தையும், பொருளையும் விட அறம்தான் உயர்ந்தது என்பதை அறிய வந்தனர். இந்த குணங்களே, மனிதர்களில் எருதைப் போன்ற சந்தனுவிடம் வசித்து வந்தன. உண்மையாக, சந்தனுவைப் போன்று வேறு எந்த மன்னனும் இதுவரை இருந்ததில்லை. அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அம்மன்னனைக் கண்ட பூமியின் மற்ற மன்னர்கள், அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையான அவனுக்கு மன்னாதி மன்னன் (King of Kings (சக்கரவர்த்தி)) என்ற பட்டத்தைக் கொடுத்தனர். அந்த பரத குலத்தைக் காக்கும் தலைவனின் காலத்தில் பூமியில் இருந்த மன்னர்கள் அனைவரும் துயரில்லாமல், பயமில்லாமல், எந்த குறையும் இல்லாமல் இருந்தனர். அவர்கள் அனைவரும் அமைதியுடன் உறங்கி, அதிகாலையில் எழுவதற்கு முன்னர் மகிழ்வானக் கனவுகள் கண்டு எழுந்தனர். அற்புதமான சாதனைகளைச் செய்து மற்றொரு இந்திரனைப் போல் இருந்த அந்த ஏகாதிபதியின் கட்டுப்பாட்டில் இருந்த பூமியின் மன்னர்கள் அனைவரும், நன்னடத்தையுள்ளவர்களாகவும், தயாளர்களாகவும், அறம் சார்ந்தவர்களாகவும், வேள்விகள் செய்து கொண்டும் இருந்தனர். சந்தனு பூமியை ஆண்டு கொண்டிருந்த போது, அவனைப் போன்ற மற்ற ஏகாதிபதிகள் அனைவரின் அறத்தகுதிகளும் பெரும் அளவில் முன்னேறின. க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்குச் சேவை செய்தார்கள்; வைசியர்கள் க்ஷத்திரியர்களுக்குச் சேவை செய்தார்கள்; சூத்திரர்கள் பிராமணர்களையும், க்ஷத்திரியர்களையும் வழிபட்டு வைசியர்களுக்குச் சேவை செய்தார்கள்.

சந்தனு குருக்களின் தலைநகரான மகிழ்ச்சிமிகு ஹஸ்தினாபுரத்தில் வசித்து, கடல்களால் சூழப்பட்ட முழு உலகத்தையும் ஆண்டான். அவன் உண்மையுள்ளவனாக, சூதுகளற்றவனாக, தேவர்களின் மன்னனைப் போல அறங்களின் விதிக்குட்பட்டு வாழ்ந்து வந்தான். தயாளம், அறம், ஆன்மிகம் ஆகியவற்றின் கலவையோடு இருந்த அவன், பெரும் நற்பேறு பெற்றான். அவன் கோபத்தையும், தீயவற்றையும் நீக்கி, அழகான சோமனைப் போல் இருந்தான். சூரியனைப் போன்ற பிரகாசத்துடனும், வாயுவைப்போன்ற வீரத்துடனும், கோபத்தில் யமனைப் போலவும், பொறுமையில் பூமியைப் போலவும் இருந்தான். ஓ மன்னா, சந்தனு இந்த உலகத்தை ஆண்டு கொண்டிருந்த போது, மான்களோ, பன்றிகளோ, பறவைகளோ அல்லது வேறு எந்த மிருகமோ தேவையேற்பட்டாலொழிய கொல்லப்பட்டதில்லை.

அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில், அறத்தில் தலைசிறந்ததான அன்பு, கருணையுடன், ஆசை மற்றும் கோபதாபங்களுக்கு அப்பாற்பட்டு எல்லா உயிர்களிடத்திலும் பாரபட்சமற்றமுறையில் செலுத்தப்பட்டது. தேவர்கள், முனிவர்கள் மற்றும் பித்ரிக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வேள்விகள் நடத்தப்பட்டன. பாவம் வரும் வகையில் எந்த உயிரினத்தின் உயிரும் எடுக்கப்படவில்லை. சந்தனு, துயரத்திலிருந்தோருக்கும், ஆதரவற்றவர்களுக்கும், பறவைகள் மற்றும் மிருகங்களுக்கும் மற்றும் ஏனைய உயிரனங்களுக்கும் மன்னனாக மட்டுமில்லாமல் தந்தையாகவும் இருந்தான். குரு பரம்பரையில் வந்த அந்த சிறந்தவனின் ஆட்சியில் மக்கள் உண்மையுடன் ஒன்றிணைந்த பேச்சுடனும், தயாளமாகவும், அறம் சார்ந்தும் இருந்தனர். இல்லற இன்பத்தை முப்பத்தாறு ஆண்டுகள் அனுபவித்த சந்தனு, பிறகு கானகத்திற்கு சென்றான்.

சந்தனுவின் மகனான கங்கைக்குப் பிறந்த வாசு, தேவவிரதன் என்று அழைக்கப்பட்டான். அவன், மிகுந்த அழகாலும், அவனது பழக்க வழக்கங்களாலும், நடத்தையாலும், கல்வியாலும், அப்படியே சந்தனுவைப் பிரதிபலித்தான். உலகம் சார்ந்த அறிவிலும், ஆன்மிகத்திலும் அதனதன் கிளைகளிலும் அவன் பெற்றிருந்த ஞானம் பெரியதாக இருந்தது. அவனது பலமும், சக்தியும் இயல்புக்கு மிக்கதாக இருந்தது. அவன் பெரும் ரத வீரனானான். உண்மையில் அவன் பெரும் மன்னனாக இருந்தான்.

"ஒரு நாள், மன்னன் சந்தனு, தனது கணையால் அடிபட்ட மான் ஒன்றை கங்கைக்கரை ஓரமாக தேடிக்கொண்டிருந்த போது, கங்கை மிகவும் வற்றிப் போயிருப்பதைக் கண்டான். ஓ மனிதர்களில் எருதைப் போன்றவனே, சந்தனு இந்தக் காட்சியைக் கண்டு வியந்து நின்றான். அவன் தனது மனதிற்குள்ளேயே, ஆறுகளில் முதன்மையான ஆறு எப்படி இவ்வளவு வேகமாக வற்றிப் போயிற்று? என்று கேட்டுக் கொண்டான். அந்த சிறப்பு மிக்க ஏகாதிபதி, காரணத்தைத் தேடிக் கொண்டிருந்த போது, திடகாத்திரமான, இனிமையான ஒரு இளைஞன், தனது கூரிய தெய்வீக ஆயுதங்களால் நதியின் ஓட்டத்தைத் தடுத்து இந்திரனைப் போல நின்று கொண்டிருப்பதைக் கண்டான். பிரம்மாண்டமான கங்கையின் நீரோட்டம், ஒரு இளைஞனால் தடுக்கப்பட்டத்தைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தான். அந்த இளைஞன், சந்தனுவின் மகனைத் தவிர வேறு யாருமில்லை. சந்தனு, தனது மகனை, அவன் பிறந்த போது பார்த்ததுதான். அதன் பிறகு பார்த்ததேயில்லை ஆகையால் அந்த இளைஞனை அவனால் நினைவுகூரமுடியவில்லை. அந்த இளைஞன் தனது தந்தையைப் பார்த்தவுடனேயே கண்டுகொண்டான் எனினும், மன்னனை நெருங்காமல், தனது தெய்வீக மாய சக்திகளைப் பயன்படுத்தி, மேகத்தால் பார்வையை மறைத்து, அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனான்.

மன்னன் சந்தனு, தான் கண்ட காட்சியை நினைத்து வியந்து, ஒரு வேளை அந்த இளைஞன் தனது மகனாக இருப்பானோ என்றெண்ணி கங்கையிடம், "எனது மகனைக் காட்டு" என்றான். இப்படிக் கேட்கப்பட்ட கங்கை, அழகான உரு கொண்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பிள்ளையைத் தனது வலக் கரத்தில் பற்றி வந்து, சந்தனுவிடம் காட்டினாள். சந்தனு, ஏற்கனவே அவளை அறிந்திருந்தாலும், இப்போது ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, வெண்ணிற ஆடையுடன் வந்த அந்த அழகான பெண்ணை அவனால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. கங்கை, "மனிதர்களில் புலி போன்றவரே, சிறிது காலத்திற்கு முன், என்னால் எட்டாவதாகப் பெறப்பட்ட மகன் இவன்தான். இவன் எல்லா ஆயுதங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளும். ஓ ஏகாதிபதியே, இவனை இப்போது நீர் கூட்டிச் செல்லலாம். அவனை நான் கவனத்துடன் வளர்த்திருக்கிறேன். ஓ மனிதர்களில் புலி போன்றவரே, உமது இல்லத்திற்கு இவனையும் அழைத்துச் செல்லுங்கள். உயர்ந்த புத்திகூர்மையுடன், வசிஷ்டரிடம் முழு வேதத்தையும் அதன் கிளைகளையும் கற்று வந்திருக்கிறான். எல்லா ஆயுதங்களிலும் நிபுணத்துவம் பெற்ற சிறந்த வில்லாளியான இவன், போர்க்களத்தில் இந்திரனைப் போன்றவன். ஓ பரதரே (பரத குலத்தில் வந்தவரே), தேவர்களும் அசுரர்களும் இவனுக்கு நல்லதையே செய்ய நினைப்பர். உசானஸ் (சுக்ரன்) அறிந்த ஞானத்தின் கிளைகள் அத்தனையையும் இவனும் அறிவான். தேவர்களாலும், அசுரர்களாலும் வழிபடப்பட்டும் பிரகஸ்பதி அறிந்த எல்லா சாத்திரங்களிலும் இவன் நிபுணத்துவம் பெற்றிருக்கிறான்.

ஜமதக்னியின் மைந்தன் ஒப்பற்ற ராமன் (பரசுராமன்), அறிந்த எல்லா பலம்வாயந்த ஆயுதங்களையும், சிறப்பு வாய்ந்த, பெரும்பலம் கொண்ட உமது மகன் அறிவான். ஓ மன்னா, உயர்வான வீரத்தைக் கொண்ட, இந்த வீர மைந்தனை உமக்கு நான் கொடுக்கிறேன்.

இவன் சிறந்த வில்லாளன். மன்னர்களின் கடமைகளையும், அவர்களுக்குள்ளான ஒப்பந்தங்கள் அனைத்தையும் இவன் அறிவான்." என்றாள். இப்படி கங்கையால் சொல்லப்பட்ட சந்தனு, சூரியனைப் போன்ற தனது மைந்தனை தனது தலைநகருக்கு அழைத்துச் சென்றான். தேவர்களின் தலைநகரைப் போல இருந்த தனது தலைநகரை அடைந்ததும், அந்த புருவின் வழியில் வந்த ஏகாதிபதி, தன்னை பெறும் அதிர்ஷ்டசாலியாக நினைத்தான்.

எல்லா பௌரவர்களையும் அழைத்து, அரசாங்கத்தைக் காக்க, தனது மகனை தனது வாரிசாக அறிவித்தான். ஓ பரத குலத்தில் எருதைப் போன்றவனே, தனது நடத்தையால் அந்த இளவரசன் விரைவாக தனது தந்தையையும், மற்ற பௌரவர்களையும் அரசாங்கத்துக்குட்பட்ட அனைத்துக் குடிகளையும் திருப்திப்படுத்தினான். அதன்பிறகு, ஒப்புயர்வற்ற வீரம் கொண்ட மன்னன், தனது மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.

இப்படியே நான்கு வருடங்கள் ஓடின. ஒரு நாள் மன்னன் யமுனைக் கரையில் இருந்த ஒரு கானகத்திற்குச் சென்றான். அங்கே அந்த மன்னன் உலவிக் கொண்டிருந்த போது, திக்கற்ற இடத்திலிருந்து நறுமணம் பரவி வருவதை உணர்ந்தான். அதன் காரணத்தை அறிந்து கொள்ள விருப்பம் கொண்டு, அந்த மன்னன் அப்படியும் இப்படியும் தேடிக் கொண்டிருந்தபோது, மீனவ மகளான தெய்வீக அழகுடன் கூடிய கருங்கண் மங்கையொருத்தியைக் கண்டான். அவளிடம், "ஓ மருட்சியுடையவளே, நீ யார்? நீ யாருடைய மகள்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டான். அவள், "ஆசிர்வதிக்கப்பட்டு இருப்பீராக! நான் மீனவர்த்தலைவனின் மகள். அவரது உத்தரவின் பேரில், ஆன்மத் தகுதிகளை அடைய, வழிப்போக்கர்கள் இந்த நதியைக் கடந்து அக்கரைக்குச் செல்ல இந்தப் படகின் மூலம் உதவுகிறேன்." என்றாள். தெய்வீக அழகும், இனிமையும், நறுமணமும் கூடிய அந்த மங்கையைக் கண்டு, அவளைத் தனது மனைவியாக அடைய எண்ணினான் மன்னன். அவளது தந்தையிடம் சென்று, தனது கோரிக்கையை வைத்தான். ஆனால் அந்த மீனவர்த்தலைவன், "ஓ மன்னா, உயர்ந்த நிறத்துடன் எனது மகள் பிறந்தவுடனேயே, அவளுக்கேற்ற கணவனை அடைய வேண்டுமே என்று உணர்ந்தேன். ஆனால், எனது இதயத்தில் குடியிருக்கும் விருப்பத்தைக் கேளும். ஓ பாவமற்றவரே, நீர் உண்மையானவர், இந்த மங்கையை என்னிடம் இருந்து பரிசாக அடைய நீர் விருப்பம் கொண்டால், ஓர் உறுதியை ஏற்றுக் கொள்ளும். அந்த உறுதியை நீர் கொண்டால், உண்மையாக நான் எனது மகளை உமக்கு அளிக்கிறேன். உமக்குச் சமமான வேறு கணவனை இவளுக்கு என்னால் அளிக்க முடியாது." என்றான்.

"இதைக் கேட்ட சந்தனு, "நீர் கேட்கும் உறுதி என்ன என்பதை நான் கேட்ட பிறகே, அதை என்னால் தர முடியுமா என்று சொல்ல முடியும். என்னால் தரக்கூடியது என்றால், நிச்சயம் தருவேன். இல்லையென்றால் என்னால் முடியாது." என்றான். மீனவன், "ஓ மன்னா, நான் உம்மிடம் என்ன கேட்கிறேன் என்றால், இந்த மங்கை மூலமாகப் பிறக்கும் மகனே, உமக்குப் பிறகு உமது அரியணையை ஏற வேண்டும். வேறு யாரும் உனக்கு வாரிசாகக் கூடாது." என்றான்.

"வைசம்பாயணர் தொடர்ந்தார், "ஓ பரதா, இதைக் கேட்ட சந்தனுவால், அவன் கேட்ட வரத்தைக் கொடுக்க முடியவில்லை. இருப்பினும் ஆசை அவனுக்குள்ளே இருந்து அவனை எரித்துக் கொண்டிருந்தது. அந்த மன்னன் இதயத்தில் துயர் கொண்டு, வழியெல்லாம் மீனவன் மகளை நினைத்துக் கொண்டே ஹஸ்தினாபுரம் திரும்பினான். இல்லம் திரும்பி வேதனை நிறைந்த தியானத்தில் தனது நேரத்தைப் போக்கினான் அந்த ஏகாதிபதி. ஒரு நாள், துயரத்தில் இருந்த தனது தந்தையிடம் தேவவிரதன் சென்று, "உம்மிடம் எல்லா செல்வமும் இருக்கிறது. எல்லா தலைவர்களும் உமக்குக் கீழ்ப்படிகிறார்கள், பிறகு ஏன் நீர் இப்படித் துயரத்திலிருக்கிறீர்? உமது சிந்தனையிலேயே லயித்துக் கொண்டு என்னிடம் ஒரு வார்த்தையும் மறுமொழி கூறாமல் இருக்கிறீரே.

நீர் குதிரையில் வெளியே எங்கும் செல்வதில்லை; சோகத்துடனும் மெலிந்தும் காணப்படுகிறீர். சுறுசுறுப்பையும் இழந்துவிட்டீர். நீர் என்ன நோயால் அவதிப்படுகிறீர் என்பதை அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். அப்படி அறிந்து கொண்டால், அதற்கேற்ற தீர்வை என்னால் செய்ய முடியும்." என்றான். சந்தனு, தனது மகனிடம், "நான் துயரத்திலிருக்கிறேன் என்று நீ உண்மையைச் சொல்கிறாய் மகனே. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்பதையும் உனக்குச் சொல்கிறேன். ஓ பரத குலத்தில் வந்தவனே, இந்தப் பெரும் பரம்பரைக்கு நீ ஒருவனே கொழுந்தாக இருக்கிறாய். நீ எப்போதும், வீர விளையாட்டுகளிலும், வீர சாதனைகள் செய்வதிலுமே இருக்கிறாய். ஓ மகனே. ஆனால் நான், மனித வாழ்வின் நிலையில்லாமையை நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஓ கங்கையின் மைந்தனே, உனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், நான் மகனற்றவனாகிவிடுவேன். உண்மையில் நீ ஒருவனே எனக்கு நூறு மகன்களுக்குச் சமம். ஆகையால், இநான் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை.

நமது பேரரசை வழிநடத்திச் செல்லும் வளமை எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுதலும் விருப்பமும் ஆகும். ஒரே மகன் உள்ளவன் மகனற்றவனே என்று ஞானமுள்ளோர் சொல்கின்றனர். நெருப்பின் முன்பாக செய்யப்படும் வேள்விகளும், மூன்று வேதங்களின் ஞானமும் அதனதன் பலனாக நிரந்தர அறத்தகுதித் தரும் என்பது உண்மையாக இருந்தாலும், ஒரு மகனின் பிறப்பால் ஏற்படும் அறத்தகுதியில் பதினாறில் ஒரு பகுதிக்குக் கூட அது சமமாக இருக்காது. உண்மையில் இவ்வகையில் பார்த்தால், மனிதனுக்கும், கீழ்மையான விலங்குகளுக்கும் வித்தியாசமில்லை. ஓ ஞானியே, ஒரு மகனைப் பெறுவதால் ஒருவன் சொர்க்கத்தை அடைவான், என்ற நம்பிக்கையில் உள்ள சந்தேகத்தை நான் ஊக்குவிக்கவில்லை. ஏனென்றால், தேவர்களும் ஏற்கும் புராணங்களின் வேராக இருக்கும் வேதங்களில், இதற்கு எண்ணற்ற சாட்சிகள் இருக்கின்றன. ஓ பரத குலத்தில் வந்தவனே, நீயோ எப்போதும் வீரவிளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வீரன். நீ போர்க்களங்களில் வீழக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய உண்டு. அப்படி நடந்தால், இந்த பரதப் பேரரசு என்ன ஆகும். அந்த நினைப்பே என்னைத் துயரடைய வைக்கிறது. எனது துயருக்கான காரணத்தை உன்னிடம் முழுமையாகச் சொல்லிவிட்டேன்." என்றான்.

வைசம்பாயணர் தொடர்ந்தார், "பெரும் புத்திகூர்மைவாய்ந்த தேவவிரதன், மன்னனிடம் எல்லாவற்றையும் கேட்டு, சிறிது நேரம் யோசித்தான். பிறகு, தனது தந்தையின் நலனில் அக்கறையுள்ள, தனது தந்தைக்கு அர்ப்பணிப்புடன் உள்ள ஒரு முதிர்ந்த அமைச்சரை அழைத்து, மன்னனின் துயரத்துக்கான காரணத்தைக் கேட்டான். ஓ பரத குலத்தில் எருதைப் போன்றவனே, இப்படி இளவரசனால் கேட்கப்பட்ட அமைச்சர், காந்தவதிக்காக (சத்தியவதி) மீனவன் கேட்ட வரத்தைப் பற்றிச் சொன்னார். பிறகு தேவவிரதன், வயதால் மதிக்கத்தக்க க்ஷத்திரிய தலைவர்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, நேரடியாக மீனவர்த் தலைவனிடம் சென்று, தனது மன்னனின் சார்பாக அவனது மகளைக் கேட்டான். மீனவர்த்தலைவன் அவனுக்கு மரியாதைகள் செய்து அழைத்து, இளவரசன் அமர ஆசனம் கொடுத்து, "ஓ பரத குலத்தின் எருதைப் போன்றவனே, நீ ஆயுதம் தாங்கியவர்களின் முதன்மையானவனும், சந்தனுவின் ஒரே மகனுமாவாய். உனது பலம் பெரியது. இருப்பினும் உனக்குச் சொல்வதற்கு என்னிடம் ஒன்று இருக்கிறது. மணமகளின் தகப்பனாக இந்திரனே இருந்தாலும், அவனும் இப்படிப்பட்ட மதிப்பான விரும்பக்கூடிய சம்பந்தத்தை நிராகரிக்க வருத்தப்படுவான். இந்தக் கொண்டாடப்படும் மங்கை பிறந்த விதைக்குச் சொந்தக்காரர், உனக்கு நிகரான அறத்தகுதி வாய்ந்தவர். அவர் என்னிடம் உனது தந்தையின் அறங்களைப் பற்றி பல முறை பேசியுள்ளார். இந்த மன்னன் ஒருவனே சத்தியவதியின் கரத்தைப் பற்ற தகுதி வாய்ந்தவன் என்றும் என்னிடம் சொல்லியிருக்கிறார். சிறந்த பிரம்ம முனிவரான அசிதர் எனது மகள் சத்தியவதியின் கரத்தை மணத்திற்காகக் கேட்ட போதும் நான் மறுத்திருக்கிறேன் என்பதையும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். இந்த மங்கையைக் குறித்து சொல்ல என்னிடம் ஒரு வார்த்தைதான் உள்ளது. சக்காளத்தியின் மகன் எதிரியாக இருப்பதுதான் இந்தத் திருமணத்திற்குப் பெரும் தடையாக இருக்கிறது. ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, ஒருவன் அசுரனானாலும், கந்தர்வனானாலும் தனக்குள்ளேயே எதிரியை வைத்திருப்பவனுக்குப் பாதுகாப்பில்லை. இதுதான் இந்தத் திருமணத்திற்குத் தடை. வேறெதுவும் இல்லை. நீ ஆசிர்வதிக்கப்பட்டிருப்பாய். ஆனால், சத்தியவதி குறித்தும், அவளது திருமணம் குறித்து நான் சொல்ல இதுதான் உள்ளது." என்றான்.

வைசம்பாயணர் தொடர்ந்தார், "ஓ பரத குலத்தில் வந்தவனே, தேவ விரதன் இவ்வார்த்தைகளைக் கேட்டு, தனது தந்தைக்கு நன்மை செய்ய விரும்பி அங்கிருந்த தலைவர்கள் மத்தியில், "ஓ உண்மை பேசுவபவர்களில் முதன்மையானவரே, நான் உச்சரிக்கப் போகும் உறுதியைக் கேளும்! இதைப் போன்ற உறுதியை ஏற்கும் துணிவு இதுவரை பிறந்த மனிதர்களிலும் இல்லை, இனிமேல் பிறக்கப் போகிறவர்களிடத்திலும் இருக்காது. நீர் எதிர்பார்க்கும் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன். இந்த மங்கை மூலமாகப் பிறக்கும் மைந்தனே எங்களது அடுத்த மன்னனாவான்." என்றான். இப்படிச் சொல்லப்பட்ட மீனவர்த்தலைவன், அரசாட்சியில் விருப்பங்கொண்டு (தனது மகள் வயிற்றுப் பிள்ளைக்காக), அடைய முடியாததை அடைய எண்ணி, "ஓ அற ஆன்மா கொண்டவனே, நீ அளவற்ற புகழ்வாய்ந்த உனது தந்தை சந்தனுவின் சார்பாக வந்திருக்கிறாய். நீயே எனது மகளின் திருமணத்தை என் சார்பாக இருந்து ஏற்பாடு செய். ஆனால், ஓ இனிமையானவனே, உன்னிடம் சொல்ல வேறொன்றும் இருக்கிறது. நீ வேறு ஒரு உறுதியும் கொடுக்க வேண்டுமே. ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, மகளைப் பெற்று வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் நான் கேட்பது போலவே கேட்க வேண்டும். ஓ உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனே, நீ சத்தியவதிக்காக செய்து கொடுத்திருக்கும் சத்தியத்தைக் கொடுக்க நீ தகுதிவாய்ந்தவன்தான். ஓ பெரும் கரங்களுக்குச் சொந்தக்காரனே, நீ உனது உறுதியை மீறுவாய் என்று நான் சந்தேகம் கொள்ளவில்லை. இருப்பினும், உன்னால் பெறப்படும் குழந்தைகள் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது." என்றான்.

வைசம்பாயணர் தொடர்ந்தார், "ஓ மன்னா, மீனவர்த்தலைவனின் சந்தேகங்களுக்கு விடையளித்திருந்த உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்த கங்கையின் மைந்தன், தனது தந்தைக்கு நன்மையைச் செய்ய விருப்பம் கொண்டு, "ஓ மீனவர்த்தலைவனே, ஓ மனிதர்களில் சிறந்தவரே, இங்கே கூடியிருக்கும் மன்னர்களின் முன்னிலையில் நான் ஏற்கும் உறுதியைக் கேளும். மன்னர்களே, ஏற்கனவே நான், அரியணையில் எனக்கு இருக்கும் உரிமையைத் துறந்தேன். இப்போது எனது பிள்ளைகளின் காரியத்திற்கு ஒரு தீர்வைச் சொல்கிறேன். ஓ மீனவரே, இந்த நாள் முதல் நான் பிரம்மச்சரியத்தை மேற்கொள்கிறேன். நான் மகனற்று இறந்தாலும், நித்திய அருளுள்ள சொர்க்கலோக உலகங்களை அடைவேன்." என்றான்.

வைசம்பாணர் தொடர்ந்தார். "கங்கை மைந்தன் உதிர்த்த வார்த்தைகளைக் கேட்ட மீனவனின் உடலில் இருந்த ரோமங்கள் சந்தோஷத்தால் விறைத்து நின்றன. அவன், "எனது மகளை அளிக்கிறேன்" என்றான். உடனே, அப்சரஸ்களும், தேவர்களும், முனிவர் குலத்தைச் சேர்ந்தவர்களும் அந்தரத்தில் இருந்து தேவ விரதனின் தலையில் பூ மழை பொழிந்து, "இவன் பீஷ்மன் (பயங்கரமானவன்)." என்றனர்.

பீஷ்மன் பிறகு, தனது தந்தைக்கு சேவை செய்ய அந்த அழகான மங்கையிடம், "தாயே, ரதத்தில் ஏறுங்கள், நமது இல்லத்திற்குச் செல்வோம்." என்றான்.

வைசம்பாயணர் தொடர்ந்தார், "இவற்றைச் சொல்லிவிட்டு, பீஷ்மன், அந்த அழகான மங்கை ரதமேற உதவி செய்தான். அவளுடன் ஹஸ்தினாபுரம் வந்து, சந்தனுவிடம் நடந்தது அத்தனையும் சொன்னான். அங்கே கூடியிருந்த மன்னர்கள் தனியாகவும், கூடியும் இந்த செயற்கரிய செயலைப் பாராட்டி "இவன் உண்மையிலேயே பீஷ்மன் (பயங்கரமானவன்) தான்!" என்றனர். சந்தனு தனது மகனின் இயல்புக்குமிக்க சாதனைகளால், பெரிதும் மகிழ்ந்து, அந்த உயர் ஆன்ம இளவரசனுக்கு அவனது விருப்பத்திற்கேற்ப இறக்கும் வரம் கொடுத்து, "நீ வாழ விரும்பும்வரை, இறப்பு உன்னை அணுகாது. ஓ பாவமற்றவனே, நிச்சயமாக இறப்பு உன்னை அணுகும். ஆனால், முதலில் உன்னிடம் அனுமதி பெற்ற பிறகே அப்படி அணுகும்." என்றான்.

இதற்கு முந்தைய பதிவுகளைப் படிக்க முழு மஹாபாரதம் என்ற எனது வலைப்பூவுக்கு செல்லுங்கள்




javascript:emoticonp(':%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:')
arasanrl
arasanrl
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 19/04/2013
http://mahabharatham.arasan.info

Postarasanrl Wed May 29, 2013 2:20 pm

சந்தனுவின் மைந்தர்கள் | ஆதிபர்வம் - பகுதி 101


(சம்பவ பர்வ தொடர்ச்சி)

வைசம்பாயணர் சொன்னார், "ஓ ஏகாதிபதியே, திருமணச் சடங்குகள் முடிந்ததும், மன்னன் சந்தனு, அந்த அழகான மணமகளை தனது இல்லத்தில் அமர்த்தினான். விரைவில் சத்தியவதிக்கு புத்திக்கூர்மையுள்ள வீர மைந்தனாக ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு சந்தனு, சித்திராங்கதன் என்று பெயரிட்டான். அவன் பெரும் சக்தியுடன் திறமை வாய்ந்தவனாக இருந்தான்.


பெரும் வீரமிக்க தலைவன் சந்தனு, சத்தியவதியிடம் மற்றொரு மகனையும் பெற்று அவனுக்கு விசித்திரவீரியன் என்று பெயரிட்டான். அவன் பெரும் வில்லாளியாக இருந்து, தனது தந்தைக்குப் பிறகு மன்னனான். விசித்திரவீரியன் பருவம் அடைவதற்கு முன்னரே, மன்னன் சந்தனு, தவிர்க்க முடியாத காலத்தின் தலையீடுகளை உணர்ந்தான். சந்தனு சொர்க்கத்திற்கு உயர்ந்த பின்னர், பீஷ்மன் தன்னை சத்தியவதியின் தலைமையின் கீழ் நிறுத்தி, எதிரிகளை ஒடுக்கும் சித்திராங்கதனை அரியணையில் ஏற்றினான். சித்திராங்கதன் எதிரி மன்னர்களை எல்லாம் அழித்து, தனக்கு நிகர் யாரும் இல்லை என்று உணர்ந்தான். தன்னால் மனிதர்களையும், அசுரர்களையும், ஏன் தேவர்களையும் வெல்ல முடியும் என்று நினைத்த சித்திராங்கதன், பெரும் பலம் வாய்ந்த மன்னனான கந்தர்வ மன்னனைப் போருக்கு அழைத்தான். பெரும் பலசாலிகளான அந்த கந்தர்வனும், குருபரம்பரையின் முன்னவனும் குருக்ஷேத்திரத்தில் உக்கிரமாக போர் செய்தனர். அந்தப் போர் சரஸ்வதி நதிக்கரையில் மூன்று முழு வருடங்களுக்கு உக்கிரமாக நடந்தது. அந்த பயங்கரப் போரில் அடர்ந்த கணைகள் மழையைப் போலப் பொழிந்தன. அவர்களிருவரில் அதிக தந்திரம் கொண்ட கந்தர்வன் குருக்களின் இளவரசனைக் கொன்றான். மனிதர்களில் முதன்மையான, எதிரிகளை ஒடுக்கும் சித்திராங்கதனைக் கொன்றுவிட்டு கந்தர்வன் மேலுலகம் சென்றான். ஓ மன்னா, மனிதர்களில் புலி போன்ற பெரும் வீரமிக்க சித்திராங்கதன் கொல்லப்பட்ட பிறகு, சந்தனுவின் மைந்தன் பீஷ்மன், அவனது ஈமக்கடன்களை முடித்து, பெரும் சக்தி கொண்ட விசித்திரவீரியன் சிறுவனாக இருந்த போதே அவனை குருக்களின் அரியணையில் அமர்த்தினான். விசித்திரவீரியன் பீஷ்மனின் அதிகாரத்தின் கீழ் இருந்து, பிதுர்வழி வந்த தனது நாட்டை ஆண்டான். அறத்தின் விதிகளிலிலும் அனைத்து சட்டங்களிலும் ஞானம் கொண்ட பீஷ்மனை அவன் வழிபட்டு நின்றான். பீஷ்மனும் தனது கடமைகளுக்குக் கட்டுப்பட்டு அவனைக் காத்து வந்தான்.

படிக்க முழு மஹாபாரதம் என்ற எனது வலைப்பூவுக்கு செல்லுங்கள்

முழு மஹாபாரதம்



javascript:emoticonp(':%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:')

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக