புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
37 Posts - 51%
heezulia
Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
17 Posts - 2%
prajai
Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
jairam
Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 4 matches for அண்ணாமலைசுகுமாரன்



விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
நல்லதோர் வீணைசெய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?சொல்லடி, சிவசக்தி; எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
பாரதியின் இந்த வேண்டுதல் இப்போதைய அனைத்து மக்களின் வேண்டுதலாக இருக்கிறது
ஆயகலைகள் 64 ளிலும் ,அறக்கொடைகள் 32ளிலும் மிகமுக்கியமானது மருத்துவம் .
தமிழரின் மருத்துவம்
நமது குருதியில் கலந்த ஒன்று என்றுநிறுவும் இலக்கிய மற்றும் வரலாற்று செய்திகளைப்பார்த்தோம் .இன்னமும் சில இலக்கியத் தரவுகள் உண்டு அதை அடுத்து காணலாம் .இப்போது மக்களிடையே இயைந்து இருந்த கும்மிப்பாடல்கள் ,தாலாட்டுப்பாடல்களில் நிலவி வரும் மருத்துவக் குறிப்புகள் சிலவற்றைக்காணலாம்
.உடமெல்லாம்நோகுதாம்மாகண்ணே
உனக்கு ஒத்தடம் கொடுக்கட்டுமா ?
ஏலமும் இஞ்சிசாறும் கண்ணே உனக்கு
எட்டு சொட்டு கொடுக்கட்டுமா ?
எண்ணையில் ஒத்தடமும் -கண்ணே வெந்நீர் ஒத்தடமும் இன்னம் வேறு ஒத்தடமும் - கண்ணே உனக்குக்கொடுக்க தாதி உண்டு ---
இவ்வாறு நீள்கிறது பாடல்
ஒரு தாய் தன குழந்தையை உறங்கவைக்க தொட்டியில் இட்டு தாலாட்டுகிறாள் .குழந்தை தூங்காமல் அழுகிறது .அழுவதற்குக்காரணம் ஒரே இடத்தில் படுத்திருப்பதால் உடல்வலி வந்திருக்கலாம் ,அல்லது உண்டஉணவின் காரணமாக வயிற்றுவலி இருக்கலாம் .வயற்று வழியாக இருந்தால் ஏலமும் இஞ்சிசாறும் எட்டு சொட்டுபாலில் கலந்து தரலாம் ,வேறு உடல் வழியாக இருந்தால் வேறுவித ஒத்தடம் தரலாம் .
இந்த வைத்தியத்தை தாலாட்டுப்பாடல் மூலம் குழந்தைக்கு ஊட்டுகிறாள் தமிழ்த்தாய் ! இவ்வாறு நமது வைத்தியம்குழந்தையுடன் கூடவே வளர்ந்தது .கைகாலு வீக்கத்துக்கு கண்ணே உனக்கு கணையென்னை வாங்கித்தாரேன் மலை போல் வந்தாலும் உனக்கு பனிபோல விலகிவிடும்மா கண்ணே
!வறுமையில் வளர்கின்ற குழந்தைகள் ஊட்டமின்றி கைகால் வீங்கி சோகை காமாலை போன்ற நோய்கள் கொண்டிருக்கும் .அதற்க்கு கணை எண்ணெய் என்று ஒன்று தயாரித்துத் தருவார்கள் . அது ஒரு துண்டு வசம்பையும் ,சிறிது மூக்கிரட்டை வேரையும் இடித்து தூள் செய்து ஆமணக்கு எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி ,வாரம் ஒருமுறை குழந்தைக்குத் தருவார்கள்
.இதை தாலாட்டில் குழந்தைக்கு அந்த தமிழ் தாய் சொல்லித்தருகிறாள்
பசி ஏற்படுவதற்கு முன்னாள் அதிக உணவுத்தருவதால் உணவு செரிமானம் ஆகாமல் குழந்தைக்கு வயிற்றுளைச்சல் ஏற்பட்டு வயற்றில் வலி உண்டாகும் அந்த வலி குணமாக வெற்றிலை காம்பை மென்று உண்டால் வாயில் உமிழ்நீர் பெருகி உண்ட உணவு செரித்துவிடும் ,வயற்றில் வலியும் நீங்கிவிடும்
.இதை வயிற்றுளைச்சல் மிஞ்சிப்போய் கண்ணே உனக்கு வயிற்றுவலி வந்துடுச்சா ? வெற்றிலையும் உப்பும் வைத்து -கண்மணியே வெறும் வயற்றில் தின்னுடமா !
இவ்வாறு தாலாட்டுப்பாட்டுடனேயே வளர்ந்த இனம் நாம் .இப்போதுவேண்டுமானால் தாலாட்டுப்பாடல்கள் மறைந்து அங்கே ரைம்ஸ் எனும் ஆங்கில பாடல்கள் இடம் பெற்றுவிட்டன .ஆனால் அவைகள் பொருளற்ற ஓசைக்குவியல் .நமது தமிழ் தாலாட்டுப்போல அர்த்தம் கொண்டவை அல்ல .இன்னமும் கும்மியில் ,விளையாட்டில் என்று அதிகம் நமது தமிழ் வைத்தியம் கலந்தே இருக்கிறது .
எனவே நமது இனம் உணவே மருந்து என பாரம்பரியமாக வளர்ந்த இனம் .இப்போதைய கொரானா கொள்ளை நோய் மிகப்புதியது .அதிகம் அச்சம் கைகொடுக்கிறது தனித்திருக்கும் போது மனதை நல்லதை குறித்து மட்டும் சிந்திக்க வைப்போம் .நல்ல செய்திகளை மனதில் திணிப்போம் .மனம் சலிப்பின்று உற்சாகமாக இருப்போம் !
.நன்றி !#அண்ணாமலைசுகுமாரன் 2/4/2020
மீள்பதிவு 2 /4/2024

கொரோனா அதிகமாக இருந்த போது இதை முதலில் எழுதினேன்
Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் WxcaJ7z

தேக மிருந்தக்கால் சேரலாம் பூரணம்
தேக மிருந்தக்கால் செயலெல்லாம் பார்க்கலாம்
தேக மிருந்தக்கால் சேரலாம் முத்தியே
என்று பலவாறு தேகத்தை ப் பேணவேண்டிய அவசியத்தை பாடுகிறார்கள் நமதுதமிழ் சித்தர்கள் .
பலரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல நாம் ஒன்றும்அந்நியர் நம்மை ஆளத்தொடங்கியயுடன்தான் மருத்துவ அறிவு பெற்றவர்கள் அல்ல ..
தொல்த்தமிழர்கள் உலகளாவிய வணிகத்திலும் ,நெடுந்தூரபயணத்திற்கும் உலகெங்கும் சுற்றித்திரியத்  தக்க உடல்நலம் பெற்றிருந்தனர் .உடல்நலம் சிறப்பாகப்பேண அவசியமான மருத்துவ முறைகளையும் ,நோய் தீர்க்கும் வழிமுறைகளையும் முழுவதும் அறிந்திருந்தனர் .எனவேதான் அவர்களால் கடலை ஏரிகள் போல் எண்ணி பலநாடுகளுக்கும் பயணப் படமுடிந்தது
நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லித்திரிந்தனர் .
ஆனால் இடையில் நேர்ந்த பல்வேறு அந்நிய ஆட்சியாளர்களின் காலத்தில் தான் நாம் நமது அறிவார்ந்த வைத்திய முறைகளையும் ,வணிக அறிவையும் ,உடல் நலத்தையுமிழந்தோம் .மீண்டும் அவைகளை மீட்டெடுக்கும் காலம் இப்போது வரத்தொடங்கிவிட்டது .
நேற்றைய பதிவில் வரலாற்றில் கல்வெட்டுகள்மூலம் கிடைத்த தொல்தமிழர் மருத்துவமனை முறைகளைக்கண்டோம் .இன்று இலக்கியத்தரவுகள் சிலவற்றைக்காணலாம் .
பருப்பில்லாமல் கல்யாணமா ? என்பது போல் பஞ்சு இல்லாமல் இன்றய மருத்துவம்  
சாத்தியமா ?  குத்தி குத்தி ரத்தம் எடுத்தாலும் ,சிறிய   அல்லது பெரிய அறுவை சிகிச்சை எது
செய்தாலும் பஞ்சு இல்லாமல் அவை  சாத்தியமா ?
“கதுவாப் போகிய துதிவாய் எஃகமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர்.”   இது (புறம் - 353)
கூறும் செய்திஎனவே அது குறைந்தது 2000 ஆண்டுகளுக்கு முந்தய செய்தி .
போரில் ஏற்பட்ட புண்களின் மேல் பஞ்சு இடுமுறை பண்டைக்காலத் தமிழர்கள் உலகிற்குக்
கற்றுக்கொடுத்த சிறந்த முறையாகும்.
உலகில் முதன் முதல் பஞ்சு கண்டுபிடிக்கப் பட்டதே தமிழகத்து மண்ணில்தான் என்று வரலாற்றாளர் பி.டி. சீனிவாச அய்யங்கார் கூறியுள்ள கருத்தும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
எனவே காயப்பட்ட புண்ணைப் பருத்திப் பஞ்சால் துடைத்து, புண் மேல் கட்டுப்போடும் பழக்கத்தை
உலகிலேயே முதன் முதலாகப் பயன் படுத்த ஆரம்பித்த இனம் தமிழினம் தான். இப் பழக்கமே
உலகெங்கிலும் தொடர்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் இவைகளை சொல்லிக்கொள்ளத்தான் நாம் மிகவும் தயக்கம் கொள்கிறோம் .
ராஜப்பாளையம் அருகில் இருக்கும் சத்திரப்பட்டிதான் இன்றும் சர்ஜிக்கல் காட்டன் எனும் மருத்துவ
சல்லா துணிக்குஅதன் ஏற்றுமதிக்கு  மிகப்பிரசித்தம் ஆனால் அத்தகை ஒரு வித
பிரத்தியோகத்துணியை   பண்டைய தமிழர் செய்து பயன்படுத்தினர் .
அது எதனால் ஆனது என்பதுதான் வியப்பானது .
அது எலியின் முடியால் ஆனது !
அறுவை மருத்துவ முறைகளைப் பற்றிக் குறிப்புகளுடன், என்னென்ன முறைகள் செய்யப் பட்டன?
என்பதை விளக்கிக் கூறுவதாக அமைகிறது  சீவகசிந்தாமணி.
சீவக சிந்தாமணிவிரிவான செய்திகளைத் தருவனவாக அமைந்து அறுவை முறை மருத்துவத்தை
விவரிக்கிறது.
“நெய் க்கிழி வைக்கப்பட்டார்
நெய்ப்பத்தல் கிடத்தப்பட்டார்
புக்குளி யெஃக நாடி
யிரும்பினாற் போழப் பட்டார்.
முதுமரப் பொந்து போல
முழுமெய்யும் புண்க ளுற்றார்க்கு
இது மருந் தென்ன நல்லார்
இழுது சேர் கவளம் வைத்து
பதுமுகன், பரவை மார்பில்
நெய்க் கிழிப் பயிலச் சேர்த்தி
நுதிமயிர்த் துகிற்குப் பாயம்
புகுகென நூக்கி னானே.”
(சீவகசிந்தாமணி: 818-819)
மரப்பொந்து போல் உடல் முழுவதும் ஏற்பட்ட புண்களுக்கு ஏற்ற மருந்து எது? என்பதை அறிந்த
மருத்துவர், அம்மருந்தை வாயில் கவளத்தை வைப்பது போல்மெல்ல  வைப்பர்;    நெய்யில் தோய்ந்த துணியைப் புண்ணின் மேல் வைப்பர்; புண் பட்டாரை நெய்ப்பத்தலில் கிடத்துவர்;   புண்ணுக்குள் புகுந்த இரும்புத்துண்டுகளை அறுவை முறையால் அறுத்தெடுப்பர்.
பின்னர் எலி மயிரால் நெய்யப் பட்ட ஆடையால் போர்த்தி காற்றுப் புகாதவாறு பாதுகாப்பவர் என்று
உரைப்பதினால் புண்பட்டார்க்குச் செய்யப்படுகின்ற மருத்துவ முறைகள் தெளிவாக்கப்பட்டுள்ளன.
நோயாளிக்கு அணியவும், போர்த்தவும் செய் கின்ற ஆடை எப்போதும் எல்லாரும் அணிகின்ற
ஆடையிலிருந்து மாறுபட்டதாகத் தெரிகிறது. அவ்வாடை எலி மயிரினால் நெய்யப்பட்ட தென்பர்.
எலியின் மயிரினால் நெய்யப்பட்ட ஆடையால் ஆகிய சட்டை, போர்வை மிகுந்த வெப்பத்தை
உடையது. குளிரை நீக்கக் கூடியது. அதனுள் காற்றுப்புகாது; மென்மையுடையது; பனிக்காலத்தில்
அணிவதற்குரியது; கிடைத்தற் கரியது என்றும் குறிப்பிடப்படுகிறது. (சிந்தா - 1969 - செய் 2680 - 2686)
அக்காலத்தில் அறுவை மருத்துவத்தில் சிறப்புற்று இருந்தார்களென்பதை உடலில் கட்டி முதலிய
தோன்றின்; அறுக்க வேண்டியவற்றை அறுத்தும், கெட்ட குருதியை வெளிப்படுத்தியும், சுட
வேண்டியவற்றைச் சுட்டும்; உண்டாகும் புண்ணுக்கு மருந்திட்டுத் தீர்க்கும் முறை உண்டென்பதை,
“உடலிடைத் தோன்றிற் றொன்றை
 அறுத்ததன் உதிரம் மாற்றி
சுடலுறச் சுட்டு வேறொர் மருந்தினால்
  துயரம் தீர்வர்.”
(146 வை.மு.கோ. பதிப்பு)
என்ற கம்பராமாயணம் யுத்த காண்டம் கும்ப கர்ணன் வதைப் படலச் செய்யுளால் அறியலாம்.
ஆக, கம்பராமாயண காலமாகிய 12-ஆம் நூற்றாண்டிற்கு முன்பே சீழ்க்கட்டிக்கான அறுவை மருத்துவ முறை இன்றைய மருத்துவத்தின் படி நிலை வளர்ச்சியை நடைமுறையில் எட்டியிருந்த பான்மை இங்கே எண்ணிப் பார்க்கத் தகுவதாகும்.
கம்பருக்கு முன் குலசேகர ஆழ்வார் பாடலிலும்,
“வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல்.”
(குலசேகர ஆழ்வார் - நாலாயிரம் - 691/2)
என்று இதே அறுவை மருத்துவக் கருத்தை எடுத்துக் கூறப்பட்டிருத்தல், இதனை மேலும்
வலியுறுத்தும்.
இவ்விரு பாடல்களிலும் உருவான கட்டி போன்ற ஒன்றை அறுத்து நீக்கிய பின் அதன் ஆழ்பாகத்தில் தேங்கியிருந்த கெட்ட இரத்தத் தையும் வெளியேற்றி, உடனுக்குடன் பெருமளவில் நச்சு நுண்மங்கள் சேராவண்ணம் அதிக வெம்மை யுடன் சுட்டு, பின்னர் அறுவைப் புண் தைக்கப் பட்டு, குணமாக்கும் மருந்தைப் பயன்படுத்தி உள்ளனர்.
“கருவியிட்டாற்றுவார் - புண் வைத்து
மூடார் பொதிந்து.”        (நீதிநெறி: 55)
ஒரு புண்ணையும் அப்படியே இருந்து சீழ் பிடித்துப் போகும்படி மூடி வைத்தல் இல்லை.
கருவியைக் கொண்டு அறுத்து, அதன்பின் அவ் வெட்டையும் ஆற்றிவிடுவர் என்பது குமரகுருபரர்,
நீதிநெறி விளக்கம்.
உடலில் பதிந்துள்ள ஆயுதத் துண்டுகளைக் காந்தத்தால் வெளிப்படுத்தலை,
“அயில் வேல்... நீங்கலது இப்பொழுதகன்றது
காந்தமாம் மணியின்று வாங்க.”
(கம்பராமாயணம்: மீட்சிப்படலம் தசரதன் இராமனிடம் கூறியது).
இதுபோலவே கம்ப ராமாயண மீட்சிப் படலத்தில் தசரதன் கூற்றாக வரும்,
“அன்று கேகயன் மகள் கொண்ட வரமெனும் அயில்வேல்
இன்று காறும் என் இதயத்தின் இடைநின்றது என்னைக்
கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றது உன் குலப்பூண்
மன்றுல் ஆகமாங் காந்தமா மணியின்று வாங்க.”
(மீட்சி : 117)
இப்பாடலில் கைகேயியின் வரத்தைக் கூரிய வேலாயுதமாகவும், அதில் நெஞ்சத்தில் துன்பம்
தந்ததை வேலாயுதம் இதயத்தில் பாய்ந்து தைத்து உயிர் போயும், போகாமலும் இருக்கும் நிலையை ஏற்படுத்தியதையும், இராமன் மார்பகத்தைத் தழுவியதால், துன்பம் நீங்கியதை இதயத்தில் பாய்ந்த வேலாயுதத்தைப் பெரிய காந்தம் கொண்டு, அந்த வேலாயுதத்தை நீக்கிய பின் துன்பம், நீங்கிய மையாகவும் உருவகப்படுத்தி கம்பர் இப்பாடலை இயற்றி உள்ளார்.
கம்பராமாயணம் எழுதிய காலம் 12-ஆம் நூற்றாண்டு. ஆகவே இந்நூற்றாண்டில் தமிழ்
மருத்துவத்தில் அறுவை மருத்துவ முறைகளாகிய அறுத்தல், சுட்டிகை, உடலில் பதிந்துள்ள ஆயுதத் துண்டுகளை நீக்கும் முறைகள் சிறப்புற்றிருந்த தென்பது நன்கு புலப்படுகிறது.
இவாறு அறுவை சிகிச்சையில் பண்டைய தமிழ் மருத்துவர்கள் சிரிப்புற விளங்கியமை  சான்றுகள்
மூலம் தெரிய வருகிறது .
இன்றைய நவீன மருத்துவத்தில் மனிதர்குலத்தில் நிலவி வரும் மொத்த வியாதிகள் எத்தனை
என்றால் அவை இன்னமும்அறுதியிட்டுக்   கூறயியலவில்லை
ஆனால்  பண்டைய தமிழர் மருத்துவ முறை மொத்த வியாதிகள் 4448 என்று
கணக்கிட்டு  அவைகளை பட்டியலிட்டுவிட்டது .
கண்ணுக்கு மட்டும் வியாதிகள் 96  என்றுக் கூறப்படுகிறது .
பட்டியலிட்டது மட்டுமில்லாது அத்தனை நோய்களுக்கும் பிணிதீர்க்கும் மருந்துகளையும்
பட்டியலிட்டுவிட்டது .
இத்தனை இருந்தும் அப்போதைய நிலத்தின் தன்மை 2000 ஆண்டுகளில் மாறிவிட்டமையால் ,
மூலிகைகள் சரிவர வேலை செய்வதில்லை .இவைகளுக்கு சற்று அளவில் திருத்தம் தேவை  
மண்ணின் தன்மையிலும்மாற்றம் தேவை .சித்தமருத்துவம் உலகின் மூத்த மருத்துவம் என்பதற்கு சான்றுகள் பல உள்ளது
நம்ம முன்னோர் நிச்சயம் திறமைசாலிகளே !
.#அண்ணாமலைசுகுமாரன்
28/3/2024
முதுமையில் இளமை -3
தமிழ் சித்தர்களின் யோகா, சித்தர்கள் தத்துவம், இயற்கை மருத்துவம் அல்லது தியானம் போன்றவற்றில்முதுமை தவிர்த்தல் குறித்து  வேறு ஏதேனும் தனித்துவமான முறைகள்உள்ளதா என்று இப்போது ஆராய்வோம்
யோகா, சித்தர் தத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் தியானம் ஆகியவற்றிலிருந்து ,செல்லுலார் பெருக்கத்தை மேம்படுத்துவதற்கான கூடுதல் முறைகளை ஆராய்வோம்.
சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்றும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன.
மருத்துவத்தோடு யோகம், ஞானம் ,சோதிடம், மாந்திரீகம் , இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
இவைகள் அத்தனையும் ஒன்றோடோடு ஒன்று தொடர்புடையவை .எதையும் தவிர்த்தால் முழுமை பெற முடியாது .
சொல்லப்போனால் இந்த முறையில்  தான் முதுமையைத்தவிர்த்தல் ,மரணமில்லா பெருவாழ்வு போன்றவைப்பற்றி செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன .
அத்தனையும் முழுக்க அறியவே முழுவாழ்வு முதுமையைத்தவிர்த்து வாழவேண்டும் .
இதில் ஒரு நகை முரணே , இந்த செய்திகளை அறிய நீண்ட நாள் வாழவேண்டும் .அதே சமயம் நீண்ட நாள் வாழ்ந்தால் தான் இவைகளை முழுக்க அறியமுடியும் .எப்படி ஒரு சிக்கல் பாருங்கள் !
யோகம்  என்பது சித்தர் தத்துவத்தில், உடல், , மன மற்றும் ஆன்மா அம்சங்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான அமைப்பாகக் கருதப்படுகிறது.
ஆசனங்கள் (உடல் நிலைகள்), பிராணயாமா (மூச்சு கட்டுப்பாடு) மற்றும் தியானம் போன்ற நடைமுறைகள் உடலையும் மனதையும் ஒத்திசைப்பதாக நம்பப்படுகிறது,
இவைகள் செல்லுலார் ஆரோக்கியம் உட்பட ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது.
பிராணயாமா:
யோகாவில் உள்ள கபாலபதி மற்றும் பாஸ்த்ரிகா போன்ற குறிப்பிட்ட சுவாச நுட்பங்கள், உயிரணுக்களின் ஆக்ஸிஜனேற்றத்தை மேம்படுத்துவதாகவும், சுழற்சியை மேம்படுத்துவதாகவும் கருதப்படுகிறது, இதன் மூலம் செல்லுலார் வளர்சிதை மாற்றம் மற்றும் பெருக்கத்தை ஊக்கபடுதுகிறது .
ஆசனங்கள்:
சில யோகா போஸ்கள், குறிப்பாக ஹெட்ஸ்டாண்ட், தலையால் நிற்பது  (சிர்சாசனா) மற்றும் தோள்பட்டை நிலை (சர்வாங்காசனம்) போன்ற தலைகீழ் நிலைகள், மூளை மற்றும் தைராய்டு சுரப்பிக்கு இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதாக நம்பப்படுகிறது,
இது செல்லுலார் செயல்பாடு மற்றும் பெருக்கத்தை சாதகமாக  ஊக்கபடுதுகிறது ..
தியானம்:
யோகாவில் உள்ள தியானப் பயிற்சிகள், நினைவாற்றல் தியானம் அல்லது அன்பான கருணை தியானம் போன்றவை மன அழுத்தத்தைக் குறைத்து, தளர்வை மேம்படுத்துவதாகக் கருதப்படுகிறது, அதாவது கருணை , பரிவு ,தயவு கொண்ட துவேஷம் இல்லாத தியானங்கள் செல்லுலார் பழுது மற்றும் பெருக்கத்திற்கு உகந்த உள் சூழலை உருவாக்குகிறது.
சித்தர் தத்துவம்:
பண்டைய தமிழ் பாரம்பரியமான சித்தர் தத்துவம், ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்கான முழுமையான அணுகுமுறைகளை வலியுறுத்துகிறது.
சித்தர்கள் உடல், மன மற்றும் ஆன்மா  நிலைகளில் நல்வாழ்வை பராமரிக்க வாழ்க்கை முறை நடைமுறைகள், மூலிகை வைத்தியம் மற்றும் ஆன்மீக நுட்பங்களை பரிந்துரைக்கின்றனர்.
காட்சிப்படுத்தல் நுட்பங்கள்:
தியானத்தில் பயன்படுத்தப்படும் வழிகாட்டப்பட்ட படங்கள் மற்றும் காட்சிப்படுத்தல் நுட்பங்கள் செல்லுலார் பெருக்கம் உட்பட உடலின் இயற்கையான குணப்படுத்தும் வழிமுறைகளைத் தூண்டும்.
துடிப்பான, ஆரோக்கியமான செல்கள் பெருக்குவதையும் பிரிப்பதையும் காட்சிப்படுத்துவது செல்லுலார் புத்துணர்ச்சி செயல்முறைகளை செயல்படுத்த உதவும்.
இது ஒரு முக்கியமான தியானமுறை .இதன் மூலம் , உருவகப்படுத்தி , காட்சிகளை ,உண்மை ஆக்கலாம் .
சுருக்கமாக, யோகா, சித்தர் தத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் தியானம் ஆகியவை உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றை ஒத்திசைப்பதன் மூலம் செல்லுலார் பெருக்கத்தை ஆதரிக்க முழுமையான அணுகுமுறைகளை வழங்குகின்றன,
எல்லா நிலைகளிலும் உகந்த ஆரோக்கியம் மற்றும் உயிர்ச்சக்தியை மேம்படுத்துகின்றன.
இந்த மரபுகளிலிருந்து நடைமுறைகளை ஒருவரது வாழ்க்கைமுறையில் ஒருங்கிணைப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தி, செல்லுலார் மீளுருவாக்கம் மற்றும் நீண்ட ஆயுளை வளர்க்கும்.
இவைகள் ஒரு அறிமுகத்திற்காக மட்டுமே கூற ப் படுகிறது .
இந்த முறைகளில் இன்னமும் நிறைய நுட்பங்கள் உண்டு .ஆர்வம் இருப்பின் இதில் அதிகம் செல்லலாம் .
இத்தகைய நுட்பங்கள் , செய்திகள் பெரும்பாலும் நமக்குள்ளேயே  சுற்றி வருகிறது ,  ஆர்வமுடைய சில வெளிநாட்டு சாதகர்கள் , பெரும்பாடுபட்டு , பெரும் செலவு செய்து இவற்றை அறிகிறார்கள் .கற்றபின்பு ,அவர்களில் சிலர் இவைகளை வணிகமும் செய்கிறார்கள் .
ஆனால் கொட்டிக்கிடக்கும் அத்தனை சித்தர் இலக்கியங்களையும் , திருமூலரையும் , வள்ளல் பெருமானையும் சொந்தமாகக்கொண்ட தமிழ் இனம் , தனது பெருமை மறந்து ,தக்க ஒரு வழிகாட்டல் இல்லாது சீரழிகிறது .மிக சிலர் இதில் ஆர்வம் கொள்ளுகின்றனர் . இத கட்டுரை இளைய சமூகத்தில் ஒரு  அறிமுகம் தரவே எழுதபடுகிறது .
இதில் அதிகம் ஆர்வம் காட்டினால் , இந்த தொடர் தொடரும் , இல்லையேல் இது தனி புத்தகமாக வெளிவரும் .ஆனால் தக்க விளம்பரம் செய்து புத்தகங்களை  விற்பதற்குதான் இயலவில்லை .
அண்ணாமலை சுகுமாரன்
1/4/2024
படம் அப்பா பைத்தியம் சாமிகள் ,பாண்டிச்சேரி
அண்மையில் நூறு ஆண்டுகளுக்கு மேல்வாழ்ந்து , அருள் புரிந்ததாக நம்பப்படுபவர்
#அண்ணாமலைசுகுமாரன், Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் OMmwkix
#Topics tagged under அண்ணாமலைசுகுமாரன் on ஈகரை தமிழ் களஞ்சியம் DcIXK2u

நாம் என்றும் போற்றும் தமிழும் ,,என்றும் தொழும் இறையும் எத்தனை அளவு பிண்ணித்தொடர்புடன்ஒன்றோடிணைந்து இருந்தனர் என்பதை அறியும் போது வியப்பூட்டக்கூடியது முன்பே பலமுறை சிவனே தமிழ்ப்புலவர்களுக்கு கவிதைப்பாட முதலடி எடுத்துக்கொடுத்த பல கதைகள் நாம் அறிவோம் . அவ்வாறே தமிழக கடவுளான முருகனும்அப்படியே முதலடியெடுத்து கொடுத்து தமிழில் பாட செய்த ஒரு வரலாறை அண்மையில் படித்தபோது எனக்கு வியப்பும் மகிழ்வும் உண்டானது .
இன்று ஏதோதேடும்போது 1964 இல் கல்கியில் வெளிவந்த கிருபானந்த வாரியார் எழுதிய கந்தன் கருணை எனும் கல்கி இதழில் வெளிவந்தத் தொடரை மொத்தமாகச் சேர்த்த புத்தகம் கிடைத்தது .எப்போதுமே அத்தகைய இதழ்களில் கட்டுரையுடன் வெளிவரும் அன்றைய ஓவியர்களின் வண்ண ஓவியங்களும் என்னை ஈர்ப்பவையாகும் .இந்தத்தொடரில் வினு அற்புதமாக ஓவியம் வரைந்திருப்பார் . இடையில் எத்தனையோ முறை இதைப்படித்திருந்தாலும் எப்போதுமே புதிதாகப்படிப்பதுப்போல உணர்வேன் .இனிகதைப்பிறந்த கதைக்கு வருவோம் .
காஞ்சீபுரம்குமரக்கோட்டத்து குமரனை, கச்சியப்ப சிவாச்சாரியார் என்னும் பூசகர் பூசித்து வந்தார். ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘வடமொழியில் அப்போது மிகவும் பிரசித்திப்பெற்றிருந்த கந்த புராணத்தின் ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவ ரகசியக் காண்டத்தில் உள்ள எமது வரலாற்றை கந்தபுராணம் என்ற பெயரில் தமிழில் பாடுவாயாக! என்று கூறினார். மேலும் ‘திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என முதல் அடியையும் எடுத்துக் கொடுத்தார்.
புராணங்கள் தமிழில்பழமை என்றும் காலத்தால் முந்தையது என்றும் பொருள் தருவது தொன்மை, இத்தகைய தொன்மத்தைக் குறிப்பிடுகையில் தொல்காப்பியர்.
''தொன்மைதானே சொல்லுங்காலை
உரையோடு புணர்ந்த பழமை மேற்றே'' (தொல் - பொருள் : 528)என்பார்.
இத்தகைய தொன்மங்கள் சங்ககாலத்திலிருந்து பலவும் இருந்து வந்துள்ளன .கந்தபுராணம் என்பது கந்தனின் பண்டயப்பெருமைகளை முற்றிலும் எடுத்துரைப்பதாகும் .இந்த தொன்மத்தின் நோக்கில் கந்தன் என்றால் ஒன்றுசேர்க்கப்பட்டவன் என்று பொருள் .கந்தனின் திருக்கோலத்தை கந்து எனும் பண்டைய தமிழ் சொல்லுடன் தொடர்புபடுத்தி நோக்க இயலும் .கந்து என்ற சொல் அன் எனும் ஆண்பால் விகுதிபெற்று கந்தன் ஆயிரு போலும் .கந்துவட்டி எனும் சொல் கூட பொருளுடையதாகத் தோன்றுகிறது .
கந்தன் கனவில் உரைத்தபடி இதையடுத்து கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை எழுதத் தொடங்கினார். கந்தனே சொல்லும் போது தட்டவா முடியும் !காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ள மாவடிக்குச் சென்று தினமும் 100 பாடல்களை அங்கிருந்து எழுதி, பின்பு தினமும் இரவு அன்று எழுதிய நூறு பாடல்களையும்ஒரு எழுத்தாணியுடன் சேர்த்து குமரக்கோட்டம் முருகன் கருவறையில் வைத்து அடைத்து விடுவார்.
மறுநாள் அதிகாலை, முருகப்பெருமானின் கருவறையைத் திறக்கும்போது, அப்பாடல் களில் தவறுகள் இருந்தால் குமரக்கோட்டம் குமரனே அதில் திருத்தம் செய்திருப்பாராம். இவ்வாறு தினம் தினம் இயற்றிய ஆறு பகுதியான 10,345 விருத்தப்பாக்களில் ஆனதை கந்தனாலேயே தினமும் திருத்தப்பெற்றதை ‘காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி’ என காப்புச் செய்யுளையும் இயற்றி, கந்தபுராணத்தை நிறைவு செய்தார் கச்சியப்ப சிவாச்சாரியார்.
இந்த நடப்புகள் அனைத்தும் கச்சியப்ப சிவாச்சாரியார் மட்டுமே அறிந்தது ,எனவே இந்த நூலின் பெருமையை உலகறியச்செய்ய கந்தன் உறுதிபூண்டான் .
எந்தக் காவியத்துக்கும் அக்காலத்தில் அரங்கேற்றம் எனும் ‘தேர்வு உண்டு. இப்போது முனைவர் பட்ட நிறைவு போல் பலர்கூடஅங்கே அதை அரங்கேற்றம் செய்யவேண்டும் .அதை யார் வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கலாம் .அதனாலேயே அக்காலத்தில் அவைகள் பொது இடமான கோயில்களில் நடைபெற்றது .
பல புலவர்களின் நடுவே இயற்றிய காவியத்தை அரங்கேற்ற வேண்டும். அதில் தேர்வு பெற்ற பிறகுதான் அந்த நூல் அங்கீகரிக்கப்படும்;பிறகே மக்களிடையே பரவும்.அவ்வாறே கந்த புராணத்தை குமரகோட்டத்தில் அரங்கேற்ற நாள் குறிக்கப்பட்டது.
உரிய நாளில் புலவர்கள் பொதுமக்கள் தத்தம் இடங்களில் அமர்ந்தனர். கச்சியப்பர் கந்த புராணத்தைப் படிக்கத் தொடங்கினார்.
திகடச் சக்கரம் செம்முகம் ஐந்துளான்,
சகட சக்கரத் தாமரை நாயகன்,
அகட சக்கர இன்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்
திகழ்கின்ற பத்து கரங்களையும் ஐந்து செம்முகங்களையும் உடையவன்,
சக்ராயுதத்தை உடையவன், தாமரைமேல் வீற்றிருப்பவன், எங்கும் நிறைந்திருப்பவன், விகட சக்கரனாகிய அந்த விநாயகனின் பாதங்களை வணங்குவோம்!
தொடக்கத்திலேயே வந்தது தடங்கல். “உங்கள் முதல் பாடல் ‘திகட சக்கர’ என்று தொடங்குகிறது. அதற்கான இலக்கண விதியையும் அதற்கான ஆதாரத்தையும் கூறுங்கள்” என்றார் ஒரு புலவர்
‘திகழ் தசக்கரம் என்று பொருள்.கொண்டதுமுதல் அடி ஆனால் திகழ் + தசக்கரம் என்ற சொற்கள் சேரும்போது திகட சக்கரம் என்றா அமையும்?’என்று சந்தேகமாகக் கேட்டார் புலவர், ‘அப்படித் தொல்காப்பியமோ மற்ற இலக்கண நூல்களோ கூறவில்லையே.? என்றும் கூறினார் .’‘உண்மைதான்’ என்றார் கச்சியப்பர். ஆனால், இந்த முதல் அடி எனக்கு இறைவன்முருகன் தந்தது, அதை அவ்வாறே வைத்து எழுதியுள்ளேன்.என்றார் .
ஆனாலும் திகட சக்கரம் என்பது இலக்கணப்படி சரியானது என்று நிரூபிக்கவேண்டியது உங்கள் பொறுப்புதான்‘ என்றார் திரும்பவும் அந்தப் புலவர். அவர் நக்கீரர் மரபில் வந்தவர் போலும் !மற்றவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே, கந்தபுராண அரங்கேற்றம் அப்படியே நின்றது. கச்சியப்பர் செய்வதறியாது தவித்தார்
அனைவரும் கலைய ,கச்சியப்பர் மட்டும் இரவும் குமரகோட்டத்திலேயே தங்கினார்.
"கந்தா உன் ஆணைப்படி, உன் அருளால் உருவானதுதான் இந்த காவியம். நான் வெறும் கருவி மட்டுமே. இந்த நிலையில், இந்தக் காவிய அரங்கேற்றம் தடைபட்டது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. தமிழ்க் கடவுள் எனப்படுபவன் நீ. நீ எடுத்துக் கொடுத்த சொற்தொகுப்பில் குற்றம் இருக்கிறது என்று பிறர் கூறலாமா? நிலையை நீதான் சரிசெய்ய வேண்டும்” " என்று தொடர்ந்து வருந்தி விம்மினார் .
அவரது கனவிலே கந்தன் தோன்றி அன்ப , சோழ தேயத்தில் வீர சோழியம் என்ற ஒரு இலக்கண நூல் உண்டு .அதில் திகழ் தசம் என்ற இரு சொற்கள் புணர்தற்கு விதி அந்நூலில் சந்திப்படலத்தில் 18 செய்யுளில் இருக்கிறது .நாளை சோழ தேயத்து புலவனொருவன் அதைக்கொண்டுவந்து உலகறிய செய்வான் அஞ்சற்க ! என்றார் .
அடுத்த நாள் குமர கோட்டத்தில் மீண்டும் புலவர்கள் கூடினார்கள். முதல்நாள் எழுப்ப ப்பட்ட ஐயங்களுக்கு மறுநாள் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத விதி.
இதுவரை திருத்திய கந்தனே , இப்போதும் துணைபுரிவார் என்று அமைதியாக இருந்தார் கச்சியப்பர் .
அப்போது ஆலயத்திலகூடியிருந்த கூட்டத்தில் . மாறாத இளமையும் வற்றாத ஞானமும் மிளிர்ந்த ஒரு புலவர் நுழைந்தார் தானும் கலந்துகொள்ள அனுமதி வேண்டினார் .அனைவரும் ஒப்பவே அவரும் அமர்ந்தார் .
கச்சியப்பர் தனது படைப்பின் தொடக்கமாக ‘திகட சக்கர’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். அதற்கான இலக்கண
விதிவேண்டும்” என்றார் நேற்று வினா எழுப்பிய புலவர்.
உடனே வந்த அந்த புதிய புலவர் வீர சோழியம் என்ற நூலை நீட்டினார் .அந்நூலில் சந்திப்படலத்தில் 18 செய்யுளில் இருக்கிறவிதியைக்காட்டினார் .அனைவரும் திகட சக்கரம் என்பதற்கு விதி இருப்பதை அறிந்து அதிசயத்தினர் .சபையோர் காண ஒளிக்காட்டி மறைந்தார் .
கந்தனின் திருவருளைக்கண்டு சபையோர் அனைவரும் மெய் சிலிர்த்தனர் கச்சியப்பர் ஆனந்தக்கண்ணீர் வடித்தார் .பின்பு மிகச் சிறப்பாக கந்த புராணத்தின் அரங்கேற்றம் ஓராண்டு தொடர்ந்து நடந்து நிறைவுற்றது .
கந்தன் தனது கதையை தானே எழுத்தக்கூறி , எழுதியதை அவ்வப்போதுதானே திருத்தியருளி ,பின்பு அவரே அதன் அரங்கேற்றத்திலும் வந்து ஐயம் தெளிவித்து சிறப்புற செய்த நூல் கந்தபுராணம் .இத்தனை சிறப்புடைய நூல் தமிழில் இருப்பது சிறப்புதானே !
#அண்ணாமலைசுகுமாரன் 3/3/2020 Repost 6/3/2024
படங்கள் அப்போதைய கல்கி இதழில் வெளிவந்தது .---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
இது வீர வீரசோழியம் பற்றி விக்கி தரும் விளக்கம் வீரசோழியம் சோழர் காலத்தில் தோன்றிய ஒரு தமிழ் இலக்கண நூலாகும். 11 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட வீரசோழன் காலத்தது. இக் காலத்தில் அதிகரித்து வந்த சமஸ்கிருதச் செல்வாக்கினால் தமிழில் சில புதிய இலக்கிய இலக்கண மரபுகள் உருவாயின. இதன் காரணமாக ஏற்பட்ட தேவைகளுக்கு இணங்கப் புதிய இலக்கண நூல்கள் தோன்றின. இவற்றுள் வீரசோழியமும் ஒன்று. புத்தமித்திரர் என்பார் இயற்றிய இந்நூலின் பெயர் வீர சோழன் என்னும் வீர ராசேந்திர சோழ மன்னனின் பெயரைத் தழுவியது எனக் கூறப்படுகிறது. இது தொல்காப்பியம் கூறும் பண்டைத் தமிழ் மரபுடன், சமஸ்கிருத இலக்கண மரபுகள் சிலவற்றையும் சேர்த்து எழுதப்பட்டதாகும்.எனினும் இந்நூல் இயற்றப்பட்ட சொற்ப காலத்திலேயே வழக்கிழந்து போய்விட்டதாகவும், தமிழ் மரபுக்கு மாறான வடமொழி இலக்கண விதிகளைப் புகுத்தியதனாலேயே இந்நிலை ஏற்பட்டதாகவும் சிலர் கருதுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தை அரங்கேற்றும்போது அதன் காப்புச் செய்யுளின் முதற் சொல் தொல்காப்பியத்தின்படி இலக்கண வழுவுள்ளதாகக் கூறப்பட, வீரசோழியத்தை மேற்கோள் காட்டி இறைவன் அதனை நியாயப் படுத்தியதாகக் கதை உண்டு. ஆனால், தமிழ் இலக்கியங்கள் எதிலும் முன்னுதாரணம் இல்லாமல் தமிழ் மரபுக்கு மாறான புதிய இலக்கண விதிகள் வீரசோழியத்தில் புகுத்தப்பட்டிருப்பது குறித்துக் குற்றச்சாட்டுகள் உண்டு.-----------------------------------------------------------------------------------------------------------------------------

Back to top