புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
62 Posts - 57%
heezulia
Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
104 Posts - 59%
heezulia
Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for கருணாநிதி

சிவா
Thu Jun 01, 2023 3:17 pm

Search in: புகழ் பெற்றவர்கள்
Topic: கருணாநிதி 100
Replies: 7
Views: 1000
Topics tagged under கருணாநிதி on ஈகரை தமிழ் களஞ்சியம் Vikatan%2F2023-06%2Facb23495-c55d-45ca-8eee-62fcac1932a7%2FWhatsApp_Image_2023_06_01_at_11_54_48__1_

Thug Life - சமீப ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் இதுவும் ஒன்று. ஒரு விஷயத்தில், எதிர்பாராத வகையில் உடனுக்குடன் கொடுக்கும் பதிலடிகளை `தக் லைஃப்’ என்று அழைக்கிறார்கள் இந்தக் காலத்து இளைஞர்கள். இப்படியொரு வார்த்தையே தமிழ்நாட்டில் உபயோகத்தில் இல்லாத சமயத்தில், பல்வேறு `தக் லைஃப்' பதிலடிகளைத் தனக்கே உரிய பாணியில் கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில் அவரது `தக் லைஃப்' சம்பவங்களைச் சற்று திரும்பிப் பார்ப்போம்..!


* 1969-ம் ஆண்டு நடந்த சட்டசபைக் கூட்டத் தொடரின்போது திருத்தணி எம்.எல்.ஏ-வாக இருந்த விநாயகம், ``மெரினா கடற்கரையில் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் `லவ்வர்ஸ் பார்க்'கில் மற்றவர்கள் நுழையாமல், காதலர்கள் மட்டும் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்துமா?'' என்று கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த கருணாநிதி, ``இந்த விஷயத்தில் சட்டமன்ற உறுப்பினர் விநாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் அரசு பார்த்துக்கொள்ளும்'' எனச் சொல்லி முடிக்க அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வெடித்துச் சிரித்துவிட்டனர்!

* இதேபோல 1971-ம் ஆண்டு சட்டசபையில், ``கூவம் ஆற்றில் முதலை இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதனால் அங்கே அசுத்தம் வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆகையால், அங்கு முதலைகளை விட்டால், அசுத்தம் முழுவதுமாகக் குறையும். இது பற்றி அரசு ஆலோசிக்கலாமே?'' என்று கூறினார் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ அப்துல் லத்தீஃப். இதற்கு, ``ஏற்கெனவே அரசு கூவம் ஆற்றில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் `முதலை' (சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட நிதியைக் குறிப்பிடுகிறார்) போட்டிருக்கிறது'' என்று கருணாநிதி நகைச்சுவையாகப் பதிலளிக்க அப்துல் லத்தீஃப் உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர்.

* 1973-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ காமாட்சி, ``வைரக் கிரீடம், வைர அட்டிகை என மதுரை மீனாட்சிக்கு இருக்கும் மொத்த நகைகளின் மதிப்பை மாண்புமிகு அமைச்சர் சொல்லுவாரா?'' எனக் கேள்வியெழுப்ப, அறநிலையத்துறை அமைச்சருக்கு பதிலாக முதலமைச்சராக இருந்த கருணாநிதியே எழுந்து பதிலளித்தார். ``மதுரை மீனாட்சிக்கு இருக்கும் சொத்து மதிப்பைச் சொன்னால் (காஞ்சி) காமாட்சிக்கு (கேள்வியெழுப்பிய எம்.எல்.ஏ பெயரும் காமாட்சி) பொறாமை ஏற்படாதா?'' என்று கேட்டு சட்டமன்றத்தில் சிரிப்பலையை உண்டாக்கினார்.

* `அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற மசோதாவை ஆதரித்துப் பேசினார் கருணாநிதி. இதை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ அனந்தநாயகி, ``எதற்காக இந்தச் சட்டம்... எங்கள் ஊரிலுள்ள பிடாரி கோயிலில் தாழ்த்தப்பட்டவர்கள்தான் பூசாரியாக இருக்கிறார்கள்'' என்று கேள்வியெழுப்ப, ``தாழ்த்தப்பட்டவர்கள் அர்ச்சகராவதை பிடாரிகள்கூட ஏற்றுக்கொள்கிறார்கள். சில அடங்கா பிடாரிகள்தான் ஏற்க மறுக்கிறார்கள்'' என்று தனக்கே உரிய நக்கலுடன் பதிலளித்தார்.

* ``கோயிலுக்கே போகாத கருணாநிதிக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் கருவறைக்குள் செல்ல அனுமதி இல்லாதது குறித்து என்ன கவலை'' என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ அனந்தநாயகி கேட்க, ``கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குச் செல்கிறார்கள்... வாதாடுபவர்களும்தானே செல்ல வேண்டும்'' என்று பதிலடி கொடுத்தார்.

* காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்திருந்த சமயத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் #கருணாநிதி. `மாணவர்கள் மத்தியில் நீங்கள் அரசியல் பேச வேண்டாம்' என அவரிடம் கேட்டுக்கொண்டது கல்லூரி நிர்வாகம். இதையடுத்து பேசிய கருணாநிதி, ``என்னை அரசியல் பேசக் கூடாது என்றார்கள். எனவே, நான் இப்போது அரசியல் பேசப்போவதில்லை. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சாப்பிட்டு முடித்தவுடன் `இலை'யைத் தூர வீசிவிட்டு, `கை'யை மறக்காமல் கழுவிவிடுங்கள்'' என்று பேசி மாணவர்கள் மத்தியில் ஸ்கோர் செய்தார்.

* ஒரு முறை முன்னாள் அமைச்சர் மன்னை நாராயணசாமியின் வீட்டுக்குச் சென்றிருந்தார் கருணாநிதி. அப்போது தனது வீட்டைச் சுற்றிக்காட்டிய நாராயணசாமி, `இது திண்ணை, இது கூடம்' எனச் சொல்லிக்கொண்டே வந்தவர், `இதுதான் முத்தம் (வீட்டின் முற்றத்தைச் சிலர் பேச்சுவழக்கில் முத்தம் என்பார்கள்). இந்த முத்தத்தில்தான் நான் பிறந்தேன்' என்றார். இதைக் கேட்ட கருணாநிதி, ``நீங்க மட்டுமா... எல்லோருமே முத்தத்தில்தானே பிறந்தோம்'' என்று கூற, நாராயணசாமி உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர்.  

* தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலைஞரிடம், ``இத்தனை ஆண்டு வாழ்க்கையில் என்றைக்காவது ஒரு கணம், ஒரு நிமிடம் கடவுள் இருந்தாலும் இருப்பாரோனு நினைச்சிருக்கீங்களா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. சிறிதும் யோசிக்காமல் இந்தக் கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, ``என் வாழ்க்கையில் அந்தக் கணம் குறுக்கே வராததற்கு அந்தக் கடவுள்தான் காரணமோ என்னமோ தெரியல'' என்றார்.

* 2007-ம் ஆண்டு தமிழ்நாடு மின்வாரிய பொன் விழாவில் பேசிய கருணாநிதி, ``ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். நான் பொறுப்பிலிருக்கும் ஒவ்வொரு முறையும் எதோ ஒரு துறைக்கு வெள்ளி விழாவோ, பொன் விழாவோ நடக்கிறது. எனவே, நான் விழா முதல்வராகிவிட்டேன்... அதாவது விழா(த) முதல்வர் என்று கூறினேன்!'' என்றார்.

* டாஸ்மாக் கடைகளின் நேரத்தைக் குறைத்து அரசாணை வெளியிட்டார் கருணாநிதி. இதையொட்டி பேசிய பா.ம.க நிறுவனரும் மருத்துவருமான ராமதாஸ், ``நான் கேட்டது அறுவை சிகிச்சை, கருணாநிதி செய்திருப்பது முதலுதவி'' என்றார். ``அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், மருத்துவம் படித்தவருக்குத் தெரியாமல் போனது ஆச்சர்யம்'' என்று பதிலளித்தார்.

* பல மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த கருணாநிதி, அங்கிருந்த லிஃப்ட்டில் ஏறினார். அவருடன் வந்த சிலரும் லிஃப்டில் ஏறியதும், ``ஓ... இது பாண்டவர் லிஃப்ட்டா?'' எனக் கருணாநிதி கேட்க, உடன் வந்தவர்கள் ஒன்றும் புரியாமல் முழித்தனர். அப்போது, `ஐவர் மட்டும்னு போட்டுருக்கு பாருங்க' என மேலே கையைக் காட்டினாராம் கருணாநிதி.

விகடன்
எப்போதெல்லாம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு நிமிர்ந்திருக்கிறது என்று தமிழக #முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் #ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மறைந்த பரிதி இளம்வழுதி அவர்களின் மகனும், மாமன்ற உறுப்பினருமான  பரிதிஇளம்சுருதி - டாக்டர் நந்தினி (எ) கனிஷ்கா ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார்.

திருமண நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மணமக்கள் வழக்கறிஞர் பரிதி இளம்சுருதி - டாக்டர் நந்தினி என்கிற கனிஷ்கா அவர்களுக்கு நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறி இருக்கிறது.
   
1991-ல் சட்டமன்றத் தேர்தலை நாம் சந்தித்தபோது, ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாக வைத்து ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்தி,  நம்மை தோற்கடித்தார்கள். ஒரு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தோம். இதுவரை திமுக சந்திக்காத ஒரு தோல்வி அதுதான், இரண்டே இடத்தில் தான் வெற்றி பெற்றோம். மற்ற எல்லா இடத்திலும் தோற்றோம். ஒன்று துறைமுகம், இரண்டாவது எழும்பூர்.  துறைமுகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வெற்றி பெறுகிறார், எழும்பூரில் பரிதி வெற்றி பெறுகிறார்.

இந்த நிலையில் கருணாநிதி அவர்கள் இவ்வளவு பெரிய தோல்வியை மக்கள் தந்த காரணத்தால் என்னுடைய வெற்றியை நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை, நான் ராஜினாமா செய்கிறேன் என்று கருணாநிதி ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் ஒரே ஆள் பரிதி இளம்வழுதி, சட்டமன்றத்தில் தன்னந்தனியாக போய் நின்று ஆளுங்கட்சியின் வண்டவாளங்களை, அக்கிரமங்களை, அநியாயங்களையெல்லாம் தைரியமாக கைநீட்டி தட்டிக் கேட்கிற ஒரு வீரனாக, ஒரு போர்ப்படைத் தளபதியாக செயலாற்றியது, அதுதான் என்னுடைய நினைவிற்கு வருகிறது. அவர் செய்த தவறுகளோ, நம் மீது கோபித்துக் கொண்டு சென்றதோ நினைவிற்கு வரவில்லை. அதுதான் என்னுடைய நினைவிற்கு வருகிறது. அதனால்தான் இன்று இந்த திருணமத்திற்கு வந்திருக்கிறேன். தலைவர் அதைப் பார்த்துவிட்டு, பலமுறை அழைத்துப் பாராட்டியிருக்கிறார். நினைத்துப் பார்க்கிறேன்.

முரசொலியில் கடிதம் எழுதினார். வீர அபிமன்யூ என்று பட்டம் கொடுத்தார், இந்திரஜித் என்று பட்டம் கொடுத்தார். அப்படிப்பட்ட நிலையிலிருந்து பாடுபட்டவர் நம்முடைய பரிதி இளம்வழுதி. பல பொய் வழக்குகள், கொலைவெறித் தாக்குதல்கள் இப்படி பல நடந்திருக்கிறது.

அப்படிப்பட்ட பரிதி இளம்வழுதியினுடைய அருமை மகனுக்குத்தான் இன்றைக்கு திருமணம். இன்றைக்கு தேதி பிப்ரவரி 10. இதே பிப்ரவரி 10, 1969-ல் தான் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள். திட்டமிட்டு இந்த தேதியை ஏற்பாடு செய்து நடத்துகிறாரா என்று எனக்குத் தெரியாது, ஆனால் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

#கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்று, அது அண்ணா மறைவிற்குப் பிறகு 1969-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் தான் பிப்ரவரி 10. அந்தத் தேதியில்தான் இன்றைக்கு தம்பி பரிதி இளம்சுருதிக்கு திருமணம் நடக்கிறது. ஐந்து முறை தொடர்ந்து கருணாநிதி முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு ஆற்றியிருக்கக்கூடிய, இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்து பணியாற்றியிருக்கக்கூடிய, எப்போதெல்லாம் தலைவர் கருணாநிதியின் பேனா குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு நிமிர்ந்திருக்கிறது.

வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கியதற்காக பாடுபட்ட பேனா தான் அவர் பேனா. டைடல் பார்க்கை வடிவமைத்து அதை உருவாக்குவதற்கு கையெழுத்து போட்ட பேனாதான் அவருடைய பேனா. பூம்புகாரை உருவாக்கித் தந்ததற்கு, அதற்கும் திட்டமிட்டது, அதற்கும் கையெழுத்து போட்ட பேனாவும் கருணாநிதி பேனாதான். குடிசைகளை மாற்றி அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்று உத்தரவு போட்ட பேனாவும் அவருடைய பேனாதான். இலட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்குவதற்கு காரணமாக இருந்த பேனாவும் கருணாநிதியுடைய பேனாதான். தமிழ் சமுதாயத்தினுடைய தலையெழுத்தையே மாற்றி அமைத்த பேனாவும், தலைவர் கருணாநிதியுடைய பேனா தான். அந்த பேனா எழுதிய இலட்சியம் தான் இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சிக்கு கையேடாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு மணமகன் பரிதி இளம்சுருதி அவர்கள் மாநில அளவில் அயலக அணியினுடைய துணைச் செயலாளராக இருந்து, மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்து, கட்சிக்கும் மக்களுக்கும் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு சிறப்பான நிலையில் இருந்து தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். எப்போதும் அவரைப் பார்க்கிறபோது, எனக்கு பரிதி இளம்வழுதியின் நினைவுதான் வரும்.

நாடாளுமன்றத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று செய்தி எல்லாம் தொடர்ந்து நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பிரதமர் எதற்கும் பதில் சொல்ல முடியாத நிலையில் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், இன்றைக்கு நம்முடைய நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருக்கக்கூடிய டி.ஆர்.பாலு அவர்கள் நாடாளுமன்றத்திலே எடுத்து வைக்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்களா? சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி விளக்கமாக பேசி அதை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கேட்கிறார்.  பதில் இல்லை.

வருஷத்துக்கு இரண்டு கோடி பேர்களுக்கு  வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவோம் என்று சொல்லிதான் பிரதமாராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்தார். என்ன ஆச்சு? ஒரு கேள்வி கேட்கிறார். பதில் இல்லை. வெளிநாட்டில் இருக்கக்கூடிய கருப்புப் பணத்தை எல்லாம், நான் கைப்பற்றுவேன், அப்படி கைப்பற்றி அதைக் கொண்டு வந்து இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 இலட்ச ரூபாயை  வங்கிக் கணக்கில் போடுவேன், நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? 15 இலட்சம் வேண்டாம், 15 ஆயிரம் ரூபாய், 15 ரூபாயாவது போட்டிருக்கிறார்களா? இல்லை.

அதேபோல நம்முடைய நாடாளுமன்ற குழுவின் துணைத்தலைவராக இருக்கக்கூடிய அருமை தங்கை கனிமொழி அவர்கள், கேட்கிறார், எய்ம்ஸ் என்ன ஆச்சு? 2021 பட்ஜெட்டில் அறிவித்தீர்கள். அதற்கு பிறகு பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்களே மதுரைக்கு வந்து அடிக்கல் நாட்டிவிட்டு போயிருக்கிறார். இதுவரைக்கும் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. ஒரு செங்கலை வைத்து நம்முடைய தம்பி உதயநிதி அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்த செய்தி எல்லாம் பார்த்திருப்பீர்கள். அதற்கு பிறகுகூட வெட்கம் வந்திருக்க வேண்டாம். மறுபடியும் பாராளுமன்ற தேர்தல் வருமே, தம்பி இன்னொரு செங்கலை எடுத்து கிளம்பிடுவானே என்ற பயம் வர வேண்டாம்.  இந்த நிலையில், கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒன்றுக்கும் பதில் இல்லை.

அதேபோல ஆ.ராசா அவர்கள் கேள்விக் கணைகளை தொடுக்கிறார். பதில் இல்லை. தம்பி தயாநிதி மாறன் அவர்கள் ரொம்ப வேதனையோடு வந்து வெளியில் சொல்லுகிறார். நாடாளுமன்றத்தில் “கோரமே” இல்லை. மோடி பேசியவுடன் அத்தனை பேரும் போய்விட்டார்கள்.

அதேபோல மாநிலங்கவையில் நம்முடைய திருச்சி சிவா அவர்கள் ரொம்ப அழுத்தந்திருத்தமாக உப்புமாவையே அடையாளம் காட்டி பேசினார். இப்படிப்பட்ட நிலையிலேதான், இன்றைக்கு மத்தியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அப்படி நடக்கக்கூடிய இந்த ஆட்சிக்கு எப்படி 2021ல் தமிழ்நாட்டிற்கு ஒரு விடியலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்களோ அதே போல, 2024-ல் இந்தியாவிற்கே விடியலை ஏற்படுத்தித் தரக்கூடிய ஒரு நிலை வரப்போகிறது. அதற்கு நீங்கள் தயாராக இருங்கள், தயாராக இருங்கள் என்று கேட்டு, அந்தப் படை வரிசையில் ஒருவனாக தம்பி பரிதி இளம்சுருதி அவர்கள் இருக்கிறார். எனவே, மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களை நான் வாழ்த்துகிறேன். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய் இருந்து வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள் என்று உன் தந்தை ஸ்தானத்தில் இருந்து உன்னை வாழ்த்துகிறேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமணி

Back to top