புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under சிறுநீரகக்_கல் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிறுநீரகக்_கல் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிறுநீரகக்_கல் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
68 Posts - 47%
heezulia

60 Posts - 41%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

1 Post - 1%
D. sivatharan

M. Priya

kargan86

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under சிறுநீரகக்_கல் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிறுநீரகக்_கல் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிறுநீரகக்_கல் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
103 Posts - 52%

68 Posts - 34%

9 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
Baarushree
Topics tagged under சிறுநீரகக்_கல் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிறுநீரகக்_கல் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிறுநீரகக்_கல் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for சிறுநீரகக்_கல்

Topics tagged under சிறுநீரகக்_கல் on ஈகரை தமிழ் களஞ்சியம் IH9whh6

``நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டவர்களுக்கும் சிறுநீரகக் கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், அவர்கள் மேலும் கவனமாக இருக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவை சரியாகப் பராமரிக்க வேண்டும். சர்க்கரை அளவு மிகுதியாகும்போது அதன் பக்க விளைவாக உப்புப் படிந்து அது கல்லாக மாறும்.’’

6 வகை சிறுநீரக்கல்

சிறுநீரகத்தில் கல் ஏற்படுவது, சிறுநீரகவியல் சார்ந்து பலரும் எதிர்கொள்ளும் பிரச்னையாக இருக்கிறது. இப்பிரச்னை ஏன் ஏற்படுகிறது, இப்பிரச்னையிலிருந்து தற்காத்துக் கொள்வது?

``சிறுநீரகக் கல்லில் 6 வகை இருக்கின்றன. ஒவ்வொரு கல்லுக்கும் தகுந்தாற்போல் அதன் தன்மை இருக்கும். இந்த 6 வகையான கற்களில் மூன்று வகையான கற்கள் மரபணு ரீதியாக ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. தங்கள் குடும்பத்தில் அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ சிறுநீரகக் கல் இருந்தால் அதிகம் கவனமாக இருக்க வேண்டும்.

சிறுநீரகக்கல் உண்டாவது எப்படி

விதைப்பையில் ஏற்படும் தொற்று, பாதுகாப்பற்ற உடலுறவால் ஏற்படும் கிருமித் தொற்றின் காரணமாக சிறுநீர்ப்பாதையில் அடைப்பு ஏற்படலாம். இந்த அடைப்பின் காரணமாக சிறுநீர் முழுவதும் வெளியேறாமல் பாதையிலேயே தங்கி விடுகிறது. நாள்பட நாள்பட உப்புப் படிந்து அது சிறுநீரகக் கல்லாக மாறுகிறது.

சிலருக்கு பெருங்குடல் வியாதிகள் இருக்கும். அவர்களுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். சிறுநீரில் மட்டுமல்ல, மலத்திலும் சில உப்புச் சத்துகள் வெளியேற வேண்டும். பெருங்குடல் தொடர்பான வியாதிகளுக்கு ஆட்பட்டோருக்கு மலத்தில் உப்பு வெளியேறாமல் உள்ளேயே தங்கிவிடுகிறது. இதனால் தண்ணீரில் பாசி படிவதைப் போல அந்த உப்பு உள்ளேயே படிந்து கல்லாக மாறிவிடும்.

ஆபத்தான மதுப்பழக்கம்

அடிக்கடி சிறுநீர்த் தாரைத்தொற்று (Urinal Track Infection) ஏற்படுகிறவர்களுக்குக்கூட சிறுநீரகக் கல் ஏற்படும். ஏனென்றால் அக்கிருமி சிறுநீர்ப்பாதை வழியாக சிறுநீரகத்திலோ, சிறுநீர்ப் பையிலோ தங்கி சிறுநீரகக் கல்லை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்கின்றன. சிறுநீர்த் தாரைத்தொற்று சிறுநீரகக் கல்லை ஏற்படுத்துவதில் முக்கியக் காரணியாக உள்ளது.

உடல் நலத்துக்கு எதிரான மதுப்பழங்களால் சிறுநீரகத்தில் கல் ஏற்படும். மது அருந்துகிறவர்கள் நிறைய சிறுநீர் கழிப்பார்கள். ஆனால், அதற்கு நிகராகத் தண்ணீர் உட்கொள்ள மாட்டார்கள். போதையில் அவர்களுக்கு தாக உணர்வே ஏற்படாது. இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து மிகவும் குறைந்து போய்விடும். உடலில் உப்பின் அளவு அதிகரித்து அது உள்ளேயே தங்கி நாளடைவில் கல் ஏற்படுவதற்கான வாய்ப்பை உண்டாக்குகிறது. ஆகவே, உடல் மற்றும் உளவியல் சார்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிற மதுப்பழக்கத்துக்கு ஆளாகக் கூடாது. அப்படியே மது அருந்தினாலும்கூட ஆண் பெண் இருவருமே மிகவும் குறைந்த அளவில்தான் உட்கொள்ள வேண்டும்.

அதிக புரதம் வேண்டாமே!

நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டவர்களுக்கும் சிறுநீரகக் கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவர்கள் மேலும் கவனமாக இருக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க வேண்டும். சர்க்கரை அளவு மிகுதியாகும்போது அதன் பக்க விளைவாக உப்புப் படிந்து அது கல்லாக மாறும்.

அதிக அளவில் புரதச்சத்து எடுத்துக் கொள்கிறவர்களுக்குக் கூட உடலில் உப்பின் அளவு மிகுதியாக வாய்ப்பிருக்கிறது. அதிக அளவில் இறைச்சி சாப்பிடுகிறவர்கள், காய்கறிகளிலுமே புரதச்சத்து மிகுந்தவற்றைச் சாப்பிடுகிறவர்கள், ஜிம்மில் தரப்படும் புரதச்சத்துக்கான சப்ளிமென்ட் சாப்பிடுகிறவர்களுக்கெல்லாம்கூட உப்பு மிகுதியின் காரணமாக சிறுநீரகக் கல் ஏற்படலாம்.

நீர்ச்சத்து அவசியம்

கடினமான உடற்பயிற்சி மேற்கொள்கையில் உடலில் இருந்து வெளியேறும் சில வகையான ரசாயனங்கள்கூட சிறுநீரகத்தை பாதிக்கும். ஜிம்முக்குச் செல்லும் இளைஞர்கள் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் சார்ந்து மருத்துவமனைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கு இது போன்று நிறைய காரணங்கள் இருக்கின்றன. என்ன காரணத்தால் கல் ஏற்பட்டது எனக் கண்டறிந்தால் அது எவ்வகையான கல் என்பதையும் கண்டறிய முடியும்.

தண்ணீர்...

எப்போதெல்லாம் சிறுநீர் கழிக்கிறார்களோ அப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீர் பாதையில் உப்புப் படியாது என்பதால் சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு. கோடைக்காலத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக நீர் அருந்த வேண்டும். ஏனென்றால், அதிகமாக வியர்வை வெளியேறுகையில் உடலில் நீர்ச்சத்து குன்றிவிடும். இதனால் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்பதால் உடலை எப்போதும் நீர்ச்சத்துடனயே வைத்துக்கொள்வது அவசியம்.

கரைப்பது எப்படி?

சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டுவிட்டால் அது எந்த விதமான கல் மற்றும் அதன் அளவைப் பொறுத்து சிகிச்சை வழங்கப்படும். 6 மில்லி மீட்டருக்குள் இருக்கும் கற்களைத் தாங்கலாம். அதற்கும் பெரிதாக உள்ள கற்கள் சிறுநீர்ப் பாதையை அடைத்துவிடும். அப்படிப்பட்ட பெரிய கற்களுக்குதான் அறுவைசிகிச்சை தேவைப்படும்.

இன்றைக்கு சிறுநீர் வெளியேறும் துளையின் வழியே மெல்லிய ஒயரைச் செலுத்தி கல்லை வெளியே கொண்டு வருகிற அளவுக்கு மருத்துவத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. லேசர் சிகிச்சை மூலம் கல்லை பொடியாக்கி சிறுநீர் வழியாக வெளியேற்றவும் முடியும். சில வகையான கற்களை மட்டும்தான் அதன் தன்மை தெரிந்தால் மாத்திரை மூலமாகவே கரைக்க முடியும்”.

குறிச்சொற்கள் #சிறுநீரகக்_கல்  #சிறுநீரகம் #kidney_stones #renal_calculi #nephrolithiasis #urolithiasis #சிறுநீரக்கல்
Topics tagged under சிறுநீரகக்_கல் on ஈகரை தமிழ் களஞ்சியம் IH9whh6

உலகம் முழுவதும் பலரையும் தாக்கும் ஒரு  நோய்தான் சிறுநீரகத்தில் கல் பிரச்னை. சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக் குழாய்களிலோ கல் உருவாகும் போது அது கடுமையான வலியை ஏற்படுத்துகிறது.

இந்த நோய் ஏற்பட்டதை உறுதி சய்ய பொதுவாக பல அறிகுறிகள் உள்ளன. கீழ் முதுகு, பைக்கவாட்டில் கடுமையான வலி, இடுப்புப் பகுதியில் வலி, குமட்டல், வாந்தி, சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும்.

பலருக்கும் இதனை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால் சிகிச்சைகள் மூலம் குணப்படுத்திவிடலாம்.  இதற்கான அறிகுறிகள்..

வலி

இடுப்பு மற்றும் பக்கவாட்டில் கடுமையான வலி ஏற்படும். அவ்வப்போது குத்துவதுபோல ஒரு கடுகடுப்பு வலி வந்து வந்து போவது ஆரம்ப அறிகுறி. இந்த வலியும் அதிகரித்து, வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படும்போது நோய் தீவிரமாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிறுநீர் பிரச்சனை

சிறுநீரகக் கல் இருந்தால், சிறுநீர் நிறம் மாறும். சிலருக்கு துர்நாற்றம் வீசக்கூடும். அவ்வப்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
நிலைமை தீவிரமடையும்போது சிறுநீரில் ரத்தம் கலந்து வரும்.

குளிர் காய்ச்சல்

சிறுநீரகக் கல் பிரச்னை இருப்பவர்களுக்கு அவ்வப்போது சிறுநீரகத்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, குளிர் காய்ச்சல் ஏற்படக் கூடும். குளிர் காய்ச்சல் ஏற்பட்டு, இடுப்புப் பகுதியில் வலியும் இருந்தால் நிச்சயம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

குமட்டல் மற்றும் வாந்தி

இதுபோலவே, இடுப்புப் பகுதியில் வலி இருந்து வாந்தி மற்றும் குமட்டல் இருந்தால், சிறுநீரகக் கல் உருவானதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

அடிவயிற்றில் வலி

சிறுநீரகக் கல் உருவானால், அடிவயற்றில் வலி ஏற்படும். அடிவயிற்று வலிக்கு பல காரணங்கள் இருந்தாலும், சிறுநீரகக் கல் உருவாகி அது சிலருக்கு சிறுநீரகக் குழாயில் சிக்கிக் கொள்ளும்போது அடிவயிற்றில் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது.

சிறுநீர் கழிக்கும்போது வலி

சிறுநீர் கழிக்கும்போது சிலருக்கு அதிகப்படியான வலி ஏற்படும். சிலருக்கு எரிச்சல் உண்டாகலாம். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

இந்த அனைத்துமே இருந்தால் நிச்சயம் மருத்துவரை நாட வேண்டும்.

சிகிச்சை முறைகள்

வலி நிவாரணிகள்

சிறுநீரகக் கல் பிரச்னை உள்ளவர்களுக்கு முதலில் வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்படும். சிலருக்கு வலி நிவாரண மருந்துகள் அளிக்கப்படும். சிலருக்கு சுடுநீர் ஒத்தடம் அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பர்.

அதிகப்படியான நீர் அருந்துதல்

சிறுநீரகக் கல் பிரச்னை இருப்பவர்கள் அதிகப்படியான நீர் அருந்த அறிவுறுத்தப்படுவார்கள். அதிகமாக தண்ணீர் அருந்துவதால் சிறுநீரகக் கல் குழாய்களில் இருந்தால் அது வெளியேறிவிடும். புதிதாக கல் உருவாவது தவிர்க்கப்படும். பொதுவாக தண்ணீர் அருந்தாலும் அல்லது எலுமிச்சை சாறு, இளநீரும் அருந்தலாம்.

யூரிடெரோஸ்கோபி

இந்த சிகிச்சை முறையில் சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சையின்றி துளை மூலம் உடைத்து அகற்றப்படும். 2 செ.மீ.க்கும் பெரிய அளவுள்ள சிறுநீரகக் கற்களை இப்படி அகற்றலாம்.

இரண்டு செ.மீ.க்கும் சிறிய அளவுள்ள கற்களை அதிர்வலைகள் மூலம் உடைத்து சிறுசிறு துகளாக மாற்றி வெளியேற்றும் முறை உள்ளது.

அறுவை சிகிச்சை

வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக, மிகவும் அரிதாகவே அறுவைசிகிச்சை செய்து சிறுநீரகக் கற்கள் அகற்றப்படுகிறது. கற்கள் பெரிதாக இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்னைகள் இருந்தாலோ அறுவை சிகிச்சை  மூலம் சிறுநீரகக் கல் அகற்றப்படும்.

எச்சரிக்கை...

ஒருவேளை ஒருவருக்கு சிறுநீரகக் கல் பிரச்னை உருவாகி, அகற்றப்பட்டாலும் கூட, மீண்டும் அவர்களுக்கு கல் உருவாகும் அபாயம் உள்ளது. புதிதாக சிறுநீரகக் கல் உருவாகாமல் தடுக்க, ஆரோக்கியமான வாழ்முறையை அமைத்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான தண்ணீர் அருந்த வேண்டும். உப்பு மற்றும் இறைச்சியை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்

குறிச்சொற்கள் #சிறுநீரகக்_கல்  #சிறுநீரகம் #kidney_stones #renal_calculi #nephrolithiasis #urolithiasis

தினமணி

Back to top