புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
13 Posts - 87%
Manimegala
Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
96 Posts - 37%
mohamed nizamudeen
Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
11 Posts - 4%
prajai
Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
jairam
Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 3 matches for பா

Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் D2f4f090-3087-11ee-8f52-fbf70e4bf742

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சிறுபான்மையினரை ‘சாத்தானின் பிள்ளைகள்’ என்று குறிப்பிட்டு பேசிய பேச்சு தற்போது சர்சைக்குள்ளாகியிருக்கிறது.

இது குறித்து நாம் தமிழர் கட்சி தரப்பு என்ன சொல்கிறது?


கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியது என்ன?


மணிப்பூரில் நடக்கும் சம்பவங்களைக் கண்டித்து, ஜூலை 30-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கிறிஸ்தவர்கள் குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் பேசிய பேச்சுதான் தற்போது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், "ஏதோ ஒரு ஓரத்தில் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதுல நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரில் இருக்கும் கிறிஸ்தவர்களும் ஓட்டுப்போடப் போறதில்லை... இங்க இருக்க கிறிஸ்தவர்களும் ஓட்டுப்போடப் போறதில்லை. நாம நினைச்சுக்கிட்டிருக்கோம், இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் தேவனின் குழந்தைகள்னு. ஆனா, அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல வருடங்களாகிவிட்டது,” என்றார்.

மேலும் பேசிய அவர், “இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் பெரிய பொறுப்பேற்க வேண்டியவர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள்தான். தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் 18% வாக்குகளை தி.மு.க.வுக்குப் போட்டு, காங்கிரசுக்குப் போட்டு நாட்டை தெருவில் போட்டது இவர்கள்தான். சகிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீரழிவான நிர்வாகம் ஆகியவற்றுக்குக் காரணம் இவர்கள்தான். இவர்களிடம் போய் என்ன பாவத்தை ஒப்புக்கொடுப்பது. பாவத்தையே பெரும்பான்மையாக அவர்கள்தானே செய்கிறார்கள்?" என்று பேசினார்.

சீமான் கொடுத்த விளக்கம் என்ன?


இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "தொடர்ச்சியாக 18% வாக்கை தி.மு.க. காங்கிரசிற்குப் போடுகிறார்கள். பிறகு மாற்றம் எப்படி வரும்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாகச் சொல்வார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு செய்ய மாட்டார்கள். எங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆதங்கம் இருக்கிறது என்பதால் சொல்கிறோம். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.க. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள், நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன். நான் எவ்வளவோ பேசியிருக்கிறேன், அதையெல்லாம் விட்டுவிட்டு, சாத்தானின் பிள்ளைகள் என்று பேசிவிட்டாரே என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்," என்று குறிப்பிட்டார்.

வலுக்கும் கண்டனங்கள்


சீமான் குறிப்பிட்டதைப் போலவே, அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஒருங்கிணைப்பில் ஹிந்து என். ராம், டி.எம். கிருஷ்ணா, பேராசிரியர் வசந்தி தேவி, திரைப்படக் கலைஞர் ரோஹிணி ஆகியோரை உள்ளடக்கிய தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சீமானின் இந்தப் பேச்சைக் கண்டித்துள்ளது.

"இவரின் நோக்கம் தெளிவானது. பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும். அதன் மூலம் பா.ஜ.க. அணி வெற்றிபெற வேண்டும் என்பது. இந்தச் சதி வேலைக்கு இணங்காமல் சிறுபான்மையினர் தி.மு.க. அணிக்கு வாக்களிப்பதே இவரது ஆத்திரத்திற்குக் காரணம். அதனால்தான் சாத்தானின் பிள்ளைகள் என்று படுமோசமான வசவு மொழியை உதிர்த்திருக்கிறார்," என அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது.

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லாவும் இந்தப் பேச்சைக் கண்டித்திருக்கிறார். "இந்த கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது. தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்,” என்றார் அவர்.

மேலும், “மணிப்பூரில் நடக்கின்ற வன்முறைகளுக்கு மௌனமாக ஆதரிப்பவர்கள் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் தங்களுடைய தாக்குதல் இலக்காக வைத்திருக்கும் பொழுது, சீமானுக்கு கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தான் தாக்குதல் இலக்குகளாக இருக்கிறார்கள். சாத்தானின் பிள்ளைகள் என்ற கடுமையான,அருவருப்பான வார்த்தையை கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கும் எதிராக பயன்படுத்தி உள்ள சீமான் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்," என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

‘சிறுபான்மையினர் தங்கள் இருப்புக்காகப் போராடுகிறார்கள்’


இது குறித்து பேசிய ஜவாஹிருல்லா, "சீமான் தொடர்ந்து இப்படிப் பேசி வருகிறார். ஆரம்பத்தில் சாசனம் என்ற ஒன்றை வெளியிட்டார், அதில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தனி தேசிய இனத்தினர் என்றும் அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். சிறுபான்மையினருக்கு எதிராக வேறு பல விஷயங்களையும் சொன்னார். அதற்கு எதிர்ப்பு வந்த பிறகு அதனை ஓரங்கட்டி வைத்துவிட்டார். சில மாதங்களுக்கு முன்பாக எல்லோரும் தாய் மதத்திற்குத் திரும்ப வேண்டும் என்றார். இது போன்ற மொழி சங்க பரிவாரங்களின் மொழி. இது மிக அருவெருப்பானது. இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் லஞ்சத்திற்கு எதிராக ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்கிறார். சிறுபான்மையினரின் இருப்பே கேள்விக்குரியதாக இருக்கும்போது அவர்கள் முதலில் அதற்காகத்தான் போராடுவார்கள்," என்றார்.

நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமியக் கைதிகளை விடுவிக்கவில்லை; இருந்தபோதும் இஸ்லாமியர்கள் தி.மு.கவையே ஆதரிக்கிறார்கள் என்று சீமான் கூறுவது குறித்துக் கேட்டபோது, "இஸ்லாமியச் சிறைவாசிகள் பிரச்சனையைப் பொறுத்தவரை சட்டப்பேரவைக்குள்ளும் வெளியிலும் தொடர்ந்து பேசி வருகிறோம். 2021ல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும் என சட்டப்பேரவையிலேயே பேசினேன். இதற்குப் பிறகு நீண்ட நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பதற்கு ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அந்த அரசாணையின் கீழ் இஸ்லாமியக் கைதிகளை விடுவிக்க வழியில்லை. இதைச் சுட்டிக்காட்டிய பிறகு, இந்த விவகாரம் குறித்து ஆராய அரசு ஆதிநாதன் குழுவை அமைத்தது. அந்தக் குழு தற்போது தனது அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. விரைவில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம். இஸ்லாமிய சிறைக் கைதிகளுக்காக கடந்த மாதம் கோவையில் மிகப் பெரிய போராட்டத்தையும் நடத்தினோம். ஆகவே, சீமான் சொல்வது தவறு," என்கிறார் ஜவாஹிருல்லா.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும் சீமானின் பேச்சை கண்டித்திருக்கிறது. அவர் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியிருக்கிறது.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கமும் சீமானின் பேச்சை வன்மையாகக் கண்டித்திருக்கிறது.

மன்னிப்புக் கேட்டால் வாக்களிப்பீர்களா?


இதனிடையே, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜவாஹிருல்லாஹ் பேசியது குறித்து சீமானிடம் பத்திரிகையாளர்கள் புதன்கிழமையன்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சீமான், "மன்னிப்பு கேட்டால் எனக்கு வாக்களிப்பீர்களா? வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள் நீங்கள்தான். அநீதிக்கு எதிராக நீங்கள் எங்கே போராடினீர்கள்? பழனிபாபா மட்டும்தான் அநீதிக்கு எதிராக போராடினார். ஆனால் அவரையே நீங்கள் அநியாயமாக சாகவிட்டீர்களே" என்றார்.

"எனக்கு உரிமையும் வலியும் இருக்கிறது. அதனால் நான் பேசுகிறேன். நீங்கள் எப்போது எனக்கு வாக்களித்தீர்கள். செந்தில் பாலாஜிக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே சிபிஐ தமிழ்நாட்டிற்குள் வர முன் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடுகிறீர்கள். நள்ளிரவில் வீடு புகுந்து இஸ்லாமியர்களின் வீடுகளில் NIA சோதனை நடத்துக்கிறதே. இது குறித்து ஏன் கேள்வி எழுப்பவில்லை. இதெல்லாம் அவர்களிடம் கேட்க மாட்டார்கள். என் மேல் மட்டும் ஏன் கோபம் வருகிறது" என்றார்.

நாம் தமிழர் கட்சியின் பதில் என்ன?


அந்தக் கூட்டத்தில் பா.ஜ.கவை சீமான் கடுமையாக விமர்சித்தார், என்கிறார் நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன்

சீமானின் கருத்துக்கு எழுந்திருக்கும் எதிர்வினை குறித்து அக்கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளர் பாக்கியராசனிடம் கேட்டபோது, சீமான் பேசியதற்கு முன்னும் பின்னும் பார்க்காமல் அவரது கருத்து புரிந்துகொள்ளப்படுகிறது என்கிறார்.

"சீமான் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் திட்டினார் என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். குறிப்பிட்ட அந்தப் பேச்சுக்கு முன்னும் பின்னும் அவர் கூறியதை இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அந்தக் கூட்டத்தில் பா.ஜ.கவை சீமான் கடுமையாக விமர்சித்தார். கலவரங்களை பா.ஜ.க. திட்டமிட்டு மேற்கொள்கிறது என்று தெரிவித்தார். பா.ஜ.க. கலவரத்தை விரும்புகிறது, அதனால் அதைச்செய்கிறது என்று சொன்னார். அமித் ஷா மணிப்பூருக்குச் சென்று, அனைத்து தொகுதிகளையும் வெல்வோம் என்று சொன்னதையடுத்து இந்தக் கலவரம் நடக்கிறது என்பதை நீண்ட நாட்களாக அவர் சொல்லிவருகிறார். அன்றைக்கும் அதைச் சொன்னார்.

“ 'அநீதிக்கு துணை போகாதீர்கள்' என இயேசுவும் நபிகளும் சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல், தவறான ஒருவருக்கு துணை போகிறீர்கள். திரும்பத் திரும்ப தி.மு.கவுக்கும் காங்கிரசுக்கும் துணையாக இருக்கிறீர்கள். சரியான ஒருவருக்கு கைகொடுப்பதில்லை என்ற பொருளில் அந்த வாசகங்களைச் சொன்னார்.

“தி.மு.கவுக்கும் காங்கிரசுக்கு வாக்களிப்பதால் என்ன நன்மை கிடைத்தது? இஸ்லாமியக் கைதிகளை விடுவிப்பதை எதிர்த்து மோசமான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்கிறது தமிழக அரசு. இப்படிச் செய்யும் தி.மு.கவை ஆதரிப்பதை எதிர்த்து கேள்விதான் கேட்க முடியும்" என்கிறார் பாக்கியராசன்.

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்துச் சீமான் பேசியவை குறித்து இதற்கு முன்பும் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன. 2013ஆம் ஆண்டில் விவிலியம் குறித்து பேசிய விவகாரம் சர்ச்சைக்குள்ளானதைக் கண்டித்து கிறிஸ்தவ அமைப்புகள், அவரைக் கைதுசெய்ய வேண்டுமெனக் கோரின. இதற்குப் பிறகு, தமிழர்கள் எல்லாம் தாய் மதமான சைவத்திற்குத் திரும்ப வேண்டும் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறிச்சொற்கள் #சீமான் #பா.ஜ.க #இஸ்லாம் #கிறிஸ்தவர்
#மணிப்பூர்

பிபிசி


தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் #அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இன்று தூத்துக்குடி வருகை தந்தார். இதன் ஒரு பகுதியாக #பா.ஜ.க ஓ.பி.சி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ் இல்ல திருமண நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்துகொண்டார்.

இதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறுகையில், ‘கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவகுமார் கர்நாடகாவில் #மேகதாது அணை நிச்சயம் கட்டப்படும் என்று அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதற்கு வரும் எதிர்ப்புகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அதிகாரிகளுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். அவரது பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் #மு.க.ஸ்டாலின் இதற்கு என்ன சொல்லப் போகிறார்?

ஜப்பானிலிருந்து திரும்பி வந்த முதலமைச்சர் முதலீடு குறித்து பேசி இருக்கக் கூடாது. கர்நாடகா மேகதாது அணை பற்றிதான் பேசி இருக்க வேண்டும். கர்நாடக மாநில அரசையும் அதற்கு துணைபோகும் தமிழக காங்கிரஸ் கட்சியையும் அவர் கண்டித்து இருக்க வேண்டும்.

ஆனால் பா.ஜ.க இந்த விவகாரத்தை விடாது. அதைத் தடுத்து நிறுத்தும் வித்தை எங்களுக்கு தெரியும். தேவைப்பட்டால் கர்நாடகாவை நோக்கி நடைபயணம் செல்வோம்.

கவர்னர் நடத்தும் கூட்டத்தில் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று கல்வி அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அமைச்சர் பொன்முடியை பொறுத்தவரை அவர் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு பேசுவது எல்லாமே தேவையில்லாத ஒன்றாகவே இருக்கிறது.

ஏற்கனவே, தமிழகத்தில் 36 ஆயிரம் மாணவர்கள் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். இது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கவே செய்யும். அதை செய்ய அமைச்சருக்கு வழி தெரியவில்லை. ஆனால், எல்லோரையும் மிரட்டி உருட்டி காலம் கடத்தலாம் என்று நினைக்கிறார்.

வெளிநாட்டுக்கு போய் தொழில் முதலீடுகள் கொண்டு வர நினைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலை 5 வருட காலமாக மூடிக்கிடக்கிறது.

அதனால், ஏற்படப்போகும் பாதிப்பு இப்போது தெரியாது விரைவில் தெரியவரும். ஏற்கனவே, காப்பர் ஏற்றுமதி செய்து கொண்டிருந்த நாம் தற்போது இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். எனவே, தென்மாநிலங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தி.மு.க அரசாங்கம் உழைக்க வேண்டும்.

தி.மு.க அமைச்சர்களை பொறுத்தவரை பில்டப் அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் பயந்தவர்கள். என்னை பொறுத்தவரை #தி.மு.க அமைச்சர்களை ஒரு புளுவுக்கு சமமாககூட நான் மதிப்பதில்லை.

நான் வீடு கட்டிக் கொண்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னதாக நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். சந்தேகம் இருப்பவர்கள் கரூருக்கு செல்லுங்கள். என் தோட்டத்திற்கு செல்லுங்கள். அங்கே நான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேனா? என்பதை பார்த்து செய்தி போடுங்கள்.

நான் தவறு செய்திருந்தால் அதை தி.மு.க அரசாங்கத்தால் எளிதாக கண்டுபிடித்து விடலாம். அவர்களிடம் காவல்துறை, உளவுத்துறை எல்லாமே இருக்கிறது.

எனவே தி.மு.க அமைச்சர்களின் மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் செய்த பாவத்திற்கு பலனை அனுபவித்தே தீர வேண்டும். கர்மா அவர்களை சும்மா விடாது.

தமிழக பா.ஜ.க-வில் பிராமணர்கள் புறக்கணிக்கப்படுவதாக நடிகர் எஸ்.வி.சேகர் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று கேட்கிறீர்கள். நான் யாருக்காகவும் என்னுடைய சுபாவத்தை மாற்றிக்கொள்ளமாட்டேன்.

நான் 40 வருடம் கட்சியில் இருக்கேன் என்று சொல்லி தப்ப முடியாது. என் மீது புகார் கொடுக்க நினைத்தால் டெல்லிக்கு செல்லட்டும். 6,000 ரூபாய் தான் விமான டிக்கெட்.

பணம் இல்லையென்றால் நானே டிக்கெட் எடுத்து கொடுக்கிறேன். அதேபோல புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் சைவ ஆதீன மடாதிபதிகளை அழைத்துச் சென்றதில் எந்த தவறும் இல்லை. ஜூலை 9-ம் தேதி தி.மு.க அரசின் 2 வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ என்றார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முடிவுகள் எடுப்பதில் திணறுகிறாரா அண்ணாமலை?!


Topics tagged under பா on ஈகரை தமிழ் களஞ்சியம் Vikatan%2F2023-01%2F534735d6-96f0-4563-8511-ca0ea08c73c7%2Fop

``முந்தைய தேர்தல்களிலெல்லாம் அதிமுக அலுவலகம் ஏறி ஏறி இறங்கிக்கொண்டிருந்தோம். இப்போது மிக பலவீனமாக இருக்கக்கூடிய அவர்கள், இந்த நேரத்திலும் பா.ஜ.க அலுவலகம் ஏறவில்லையென்றால் வேறு எப்போது ஏறுவார்கள்?”



ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிமனைகள் அமைத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தி.மு.க தரப்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பாக #ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை களமிறக்கி கூட்டணியிலிருக்கும் அனைவரும் அவருக்கு ஆதரவாகப் பொதுக்கூட்டங்கள், வீடு வீடாக வாக்குச் சேகரிப்பு என வேலைகளை முடுக்கியிருக்கின்றனர்.

ஆனால், மறுபக்கம் அ.தி.மு.க கூட்டணியிலோ பல குளறுபடிகள். அதில் முக்கியமாக அ.தி.மு.க-வுக்குள்ளேயே இ.பி.எஸ் தரப்பில் 117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும், #ஓ.பி.எஸ் தரப்பில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்து இருவருமே வேட்பாளர்களை அறிவித்திருப்பதால், யாரை ஆதரிப்பது என்கிற பலமான குழப்பம் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குள் நீடிக்கிறது. அதோடு, ‘#பா.ஜ.க நின்றால் எங்கள் வேட்பாளரை வாபஸ் வாங்குவோம்... பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிப்போம்’ என்கிறார் ஓ.பி.எஸ் ஒருபக்கம். மறுபக்கமோ, ‘பா.ஜ.க நின்றாலும் நாங்கள் போட்டியிடுவது உறுதி. முன்வைத்த காலைப் பின்வைக்கமாட்டோம்’ என்கிறார் #இ.பி.எஸ் ஆதரவாளர் ஜெயக்குமார்.

நிலைமை இவ்வாறு இருக்க அதிமுக கூட்டணியில் மற்ற கட்சிகளைவிட பெரிய கட்சியாகவும், தேசியக் கட்சியாகவும் இருக்கும் பா.ஜ.க தன் முடிவுகளை எடுக்க ஏன் திணறுகிறது என்கிற கேள்விகளோடு பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். “கடந்த 31-ம் தேதி பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் நடந்த பெருங்கோட்ட நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மூன்று விஷயங்கள் அடிப்படையில் ஆலோசிக்கப்பட்டது. ஒன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், இரண்டு பாதயாத்திரை, மூன்றாவதாக இந்த ஒன்றாம் தேதிலிருந்து பதினைந்தாம் தேதிவரை க்யூ ஆர் கோடு அறிமுகம் செய்து கட்சிக்கான நிதிவசூல் குறித்து பேசினோம். ஈரோடு தேர்தல் குறித்து பேசும்போது, ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க தேவையில்லாமல் தனது ஆற்றலைச் செலவு செய்ய வேண்டாம் எனக் கருகிறேன். இடைத்தேர்தலில் நாம் அக்கறை செலுத்த வேண்டாம். தேசிய தலைமையிடம் நமது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம். அவர்கள் ஒப்புதல் அளித்த பிறகு இன்னும் இரண்டு நாள்களில் முறைப்படி நாம் அறிவிப்போம்’ என்று மாநிலத் தலைவர் பேசினார்.

பொதுவாக எங்கள் கட்சிக்கென்று சில வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கிறது. அதையெல்லாம் பின்பற்றித்தான் டெல்லி தலைமை உத்தரவின் பேரில் முடிவுகள் எடுக்கப்படும்” என்றவர்களிடம், ‘அ.தி.மு.க இ.பி.எஸ் சார்பில் பணிமனையில் வைக்கப்பட்ட பேனர்களில் கூட்டணியின் பெயர் மாற்றம், புகைப்படம் இடம்பெறாதது போன்றவற்றைப் பார்க்கும்போது, பா.ஜ.க-வை அவர்கள் மதிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா...’ என்கிற கேள்வியை வைத்தோம்.

``அவர்கள் மதிக்கவில்லை என்பதைத்தாண்டி இன்னும் எங்கள் நிலைப்பாட்டை அறிவிக்காதபோது எப்படி எங்கள் புகைப்படத்தை வைக்க முடியும். அதில் எங்கள் புகைப்படம் மட்டுமில்லை கூட்டணியிலிருக்கும் ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் புகைப்படங்களும்தானே இல்லை. பா.ம.க விலகிக்கொண்டுவிட்டோம் என்பதால் அவர்களின் படங்களும் இல்லை. எனவே, எங்கள் முடிவு தெரிந்த பிறகு வைக்கலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இதற்கு முந்தைய தேர்தல் எல்லாம் அ.தி.மு.க அலுவலகம் ஏறி ஏறி இறங்கிக்கொண்டிருந்தோம். இப்போது மிக பலவீனமாக இருக்கக்கூடிய அவர்கள், இந்த நேரத்திலும் பா.ஜ.க அலுவலகம் ஏறவில்லையென்றால் வேறு எப்போது ஏறுவார்கள்?” என்கிறார்கள்.

ஈரோட்டில் தேர்தல் பணியிலிருந்த அ.தி.மு.க சீனியரான முன்னாள் அமைச்சர் ஒருவரோ, “எங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. இடைத்தேர்தல் அறிவித்ததும் உண்மையான அ.தி.மு.க-வான நாங்கள் போட்டியிட முடிவெடுத்தோம். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் அண்ணன் இ.பி.எஸ் தி.மு.க-வுக்கு நிகராக ஆரம்பத்தில் இருந்தே தீவிரமான களப்பணியை முடுக்கிவிட்டிருக்கிறார். தேர்தல் பணிக்குழு அமைத்து வீடு வீடாக வாக்காளர்கள் உண்மையான வாக்காளர்கள்தானா அல்லது முகவரி மாறி இடம் பெயர்ந்தவர்களும் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறார்களா என்ற ஆய்வுப் பணியை முதலில் செய்தோம். இந்த அடிப்படையில்தான் பல ஆயிரம் வாக்குகள் மாறி இருந்ததன் அடிப்படையிலும், இங்கு ஆளும் விடியா தி.மு.க அமைச்சர்கள் அரங்கேற்றும் அராஜகப் போக்கையும் ஆதாரத்தோடு ஜெயக்குமார் தேர்தல் ஆணையரிடம் புகாராகக் கொடுத்தார்.

நாங்கள் கமலாலயம் போனபோதும் ‘முழு மனதோடு ஆதரவு கொடுங்கள். நாங்கள் மக்கள் மன்றம் செல்கிறோம்’ என்றுதான் சொல்லிவந்தோம். பா.ஜ.க எங்களை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை, இரட்டை இலைச் சின்னத்தை முடக்கினாலும் பரவாயில்லை, தனிச் சின்னத்தில் போட்டியிட்டாவது அ.தி.மு.க-வை மீட்போம்.

மக்கள் இன்று ரொம்ப பக்குவமாக இருக்கிறார்கள். எல்லா விஷயங்களையும் பார்க்கிறார்கள், அனுமானிக்கிறார்கள். முன்பைப்போல் வெளியில் எதையும் காட்டிக்கொள்வதில்லை. ஆனால், இவர்கள் முடிவு ஓட்டு போடும்போதுதான் தெரிகிறது. இப்போது எங்கள் வேட்பாளர் வலிமையாகவே களத்தில் இருக்கிறார். ஈ.வி.கே.எஸ்-ஸுக்குப் பெயர்தான் இருக்கிறதே தவிர, மக்களிடத்தில் பெரிய மரியாதையோ, அவரின் கள செயல்பாடுகளால் பெயரோ எடுக்கவில்லை. கடந்த முறையே எங்களுக்கு சரியான ஃபீல்டு ஒர்க்கர்ஸ் கிடைக்காததால்தான் அந்த தம்பி வெற்றிபெற முடியாமல் போனார். இப்போது எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், அம்மாவின் உண்மையான தொண்டர்கள் பம்பரம்போல் களத்தில் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அரசியலாகவும் சில மாற்றங்கள் வந்துகொண்டிருக்கிறது. அதையும் மறுசீரமைக்க வேண்டும் என்கிற வேகம் ஒவ்வொரு கட்சிக்காரங்களிடமும் இருக்கிறது. எனவே, இந்த இடைத்தேர்தல் அ.தி.மு.க-வுக்கான ஒரு பலப்பரீட்சைத்தான். அதேவேளையில் பா.ஜ.க எந்த முடிவெடுத்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்” என்றார்.

Back to top