புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
48 Posts - 45%
heezulia
Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
jairam
Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
சிவா
Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
14 Posts - 4%
prajai
Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 2%
Jenila
Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu
Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for பொருள்

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (5)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

41. ஆலயம் (பாலி)

பாலியில் ‘ஆலயம்’ , ‘இருப்பிடம்’ என்ற பொருளில் ஆளப்படுகிறது.
‘அரசனின் இருப்பிடம்’ என்ற பொருளில்தான் ‘கோயில்’ என்ற தமிழ்ச் சொல் உருவானது என ஆய்ந்துள்ளனர். கோ+ இல் = கோயில் ; கோ – அரசன். பிறகு , கடவுளின் இருப்பிடத்தைக் ‘கோயில்’ சுட்டியது. #தமிழ்ச் #சொற்களின் #தொன்மைப் #பொருளைப் #பாதுகாக்கும் #பெட்டகமாகப் #பாலி மொழி உள்ளது என்பதற்கு இஃது ஒரு சான்று!

42. ஆவளீ (பாலி)
பாலியில் ‘வரிசை’ என்ற பொருளில் இச் சொல் ஆளப்படுகிறது.
தமிழிலும் இதே பொருள்தான்.
தீப + ஆவளி = தீபாவளி ; தீபங்களின் வரிசை என்பதே பொருள்.

43. ஆசனா (பாலி)
தமிழில் ‘ஆசனம்’ என்பது எதைக் குறிக்கிறதோ அதையே இப் பாலிச்சொல்லும் குறிக்கிறது.
ஈற்றெழுத்து ஒன்று மட்டுமே வேறுபாடு.
முன் ஆய்வில் ‘ஆசு’ பற்றிப் பார்த்தோம்; அங்கு பார்த்தபடியே , இங்கும் ‘ஆசு’ என்பதற்கு ’மேல்’, ‘உயர்ந்தது’ என்றுதான் பொருள் உள்ளது.
‘ஆசு’ அடிப்படையில், உட்கார்வதற்கு ஏற்ற உயர்வான பொருள் அல்லது இடமே ‘ஆசனம்’ என வந்துள்ளது.

44. ஆசா (பாலி)
‘ஆசை’ என்பதே இப் பாலிச்சொல்லுக்குப் பொருள்.
பொதுவாகச் #சொற்களின் #ஈற்றெழுத்து #நெடிலில் #முடிவது #பாலிச் #சொற்களின் #ஓர் #இயல்பு!
‘ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் என்ற முன்னாள் தமிழகக் காங்கிரஸ் முதலமைச்சர் ஆசா பாசம் அற்றவராக வாழ்ந்து காட்டியவர்’ என எழுதியுள்ளனர். இங்கு வந்த ‘ஆசா’தான் பாலியில் மெருகு குறையாமல் வந்துள்ளது!

45. ஆஹாரா (பாலி)
‘குழந்தைக்கு என்ன ஆகாரம் கொடுப்பது?’ – தாய் மருத்துவரிடம் கேட்பது.
இதே ஆகாரம்தான் , பாலியில் ‘ஆஹாரா’ என வந்துள்ளது; அவ்வளவுதான்!
‘ஆகாரம்’ என்று தமிழில் எழுதினாலும் , தமிழர்கள் உச்சரிக்கும்போது ‘ஆஹாரம்’ என்றுதான் உச்சரிப்பார்கள்.
’அகநானூறு’ என்று எழுதினாலும் , உச்சரிப்பில் ‘அஹநானூறு’ என்றுதான் வரும் ; Akananuru என வருவதில்லை.
ஒவ்வொரு ஒலிக்கும் ஓர் எழுத்தை வைத்துக்கொண்டு தொல்லைப்பட வேண்டாம்; இடம் நோக்கி உச்சரித்துக் கொள்ளலாம் என்பதே தமிழ்க் கோட்பாடு!
ஆகவே சமஸ்கிருததிற்கு எங்கிருந்து #ஹ, #ஜ, #முதலிய #ஒலிப்பு #எழுத்துகள் வந்தன என்றால் , இவை #தமிழிலிருந்து #வந்தன என அறிதல் வேண்டும்!

46. இச்சா (பாலி)

நாம் அறிந்த ‘இச்சை’தான் !
ஈற்றொலியில் மட்டும்தான் வேறுபாடு.
தமிழர்களே , ‘இச்சா சக்தி’என்றுதான் தமிழ்ச் சைவ நூற்களில் எழுதியுள்ளனர்.
இச்சை - ஆசை
‘ஆசை’ என நான் பொருள் எழுதிவிட்டாலும் , ‘ஆசை’ , ‘இச்சை’ இவற்றிடையே #சன்னப் #பொருள் #வேறுபாடு உண்டு!
‘சொந்த வீடு கட்ட எனக்கு ஆசை’ எனலாம். ‘‘சொந்த வீடு கட்ட எனக்கு இச்சை’ எனல் பொருத்தமில்லை. ‘மாம்பழம் சாப்பிட எனக்கு இச்சை’ எனலாம். ஆனால், இத்தகைய சொற்பொருள் வேறுபாடுகளை இன்று நாம் கவனிப்பதில்லை ! உலகம் ‘டமால் டுமீல்’ என்று போய்க்கொண்டிருக்கையில் இந்த நுணுக்கத்தைப் பற்றிக் கவல்வார் இல்லை!

47 . ஈசா (பாலி)
‘ஈசன்’ என நாம் பேசுவதுதான் இது. ‘ஈசனோடாயினும் ஆசையை அறுமின்’ என்று பரவியுள்ளனர்.
‘ஈசன்’ , விளியில் வரும்போது ‘ஈசா’ , ‘ஈசனே’ என்றெல்லாம் வரலாம். விளி – அழைத்தல்; கூப்பிடல்.
ஈசன் – ஆண்பாற் பெயர்
ஈசுவரி – பெண்பாற் பெயர்; #‘ஈசுவரி’ #என்பதை , #‘ஈஸ்வரி’ #என #எழுத #விழைந்தவர்கள் #தமிழர்கள்தான்; #நடந்தது #தமிழ் #மண்ணில்தான்!

48 . உச்சா (பாலி)
‘உயரம்’ என்ற பொருள் தரும் பாலிச்சொல் இது.
‘உச்சம்’ எனும் தமிழ்ச் சொல்லை நாம் அறிவோமே!
வழக்கில் , ‘உச்சாணிக் கொம்பு’ என்பர்; ‘உயரமான இடத்துக் கொம்பு’ என்பதே பொருள்.
‘உச்சாணி’யில் வந்துள்ள ‘ஆணி’ , தச்சர் அடிக்கும் ஆணியல்ல; அஃது #அசைச்சொல். ‘சிரிப்பாணி’ என்ற தமிழ் வழக்கும் உண்டு; இது மருவிச் ‘சிப்பாணி’ ஆனது; இங்கு வந்துள்ள ‘ஆணி’யும் அசைச்சொல்லே! ‘உங்களுக்குச் சிப்பாணி வருதாக்கும்’ – பாட்டி சொல்வாள்!

49 . உத்தமா (பாலி)
இஃது நம் ‘உத்தமம்’தான்!
‘இஃது உத்தமமான பேச்சு’ – சொல்வோ மல்லவா?
உத்தமமான குணம் கொண்டோர் ‘உத்தமர்’ ! ‘’உத்தமர் காந்தி’ – நம் தொடர்.

50 . உத்தரீயா (பாலி)
‘மேலாடை’ என்ற பொருளைத் தரும் பாலிச்சொல்!
‘உத்தரீயம்’ என நம் எழுத்துகளில் வருவதே இது.
பழைய #நள #தமயந்தி கதையில் இச் சொல்லை நாம் படித்துள்ளோம்.
#தரித்தல் – அணிதல்; தாங்குதல்
‘உ’ எனும் தமிழ் வேர் அடியாக ‘உத்த’ ‘மேல்’ எனும் பொருளைத் தந்தது.
கருத்தரித்தாள் பொன்னி – கருவைத் தாங்கினாள் பொன்னி
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***
Topics tagged under பொருள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Coq37Nv

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (1)
                                                                     - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

    #பாலி (Pali) – என்றதும்  ‘நமக்குத் தொடர்பில்லாதது’ என்றே தமிழர்கள் நினைத்துக் கொண்டுள்ளார்கள்! இந்த நினைப்பை முதலில் மாற்றவேண்டும்! இதற்கான ஒரு முயற்சியே இப் பதிவு!

   பாலி மொழிக்கு என்று தனி #எழுத்துமுறை (script) இல்லை . பாலி நூற்களிற் காணலாகும் மிகத் தொன்மையான எழுத்துமுறை யாதென்றால், #தமிழர்தம் #பிராமிதான்!

     கீழ்வரும் பாலிச் சொற்களை ஒவ்வொன்றாகப் பார்த்துவாருங்கள்:-

1 .  அக்கி  (பாலி)
அக்கினி என்பது பொருள்.
‘அக்கினிச் சட்டி எடுத்து ஆடுதல்’ நாம் அறிந்ததுதானே?

2 . அங்குசகா  (பாலி)
நம்மூர் யானைப் பாகன் கையில் கொண்டிருக்கும் அங்குசம்தான் இது!

3. அங்காரகன்    (பாலி)
நம் தமிழ்ச் சோதிடர்கள் கூறும் அதே ‘அங்காரகன்’தான்! செவ்வாய்க் கிரகத்தைக் குறிக்கும்.

4. அங்குட்டா  (பாலி)
‘அங்குஷ்டம்’ எனப் பழைய தமிழ் நூற்களில் வருவதுதான்; ‘கட்டை விரல்’ என்பது பொருள் .
மற்ற விரல்களைவிடப்  பார்வைக்குக்  குட்டையாக இருப்பது கட்டை விரல். ஆகவே இதன் அடிப்படையில்,  ‘குட்டை’ என்பது, ‘குட்டா’ எனப் பாலியிற் பயின்றுள்ளது; அவ்வளவுதான்! முன்னே உள்ள ‘அம்’ , முன்னொட்டு.
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் செல்லும்போது #முன்னொட்டு, #பின்னொட்டுகள் (prefix and suffixes) சேர்வது ஒரு  #மொழியியல் (Linguistics ) இயல்பு.
இப் பாலி ஆய்வால் நாம் அறிவது யாதென்றால், ‘அங்குஷ்டம்’ என்ற சொல்லுக்கு முன்னே தோன்றியது, ‘அங்குட்டம்’ எனும் தமிழ்ச் சொல்; ‘அங்குட்டம்’ என்பதனை வேறுவிதமாக உச்சரிக்க விழைந்த தமிழர்கள் ‘ஷ்’ சேர்த்து, ‘அங்குஷ்டம்’ எனலாயினர்!

5. அங்குலா (பாலி)
‘ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத்தர முடியாது!’ – சொல்கிறார்கள் அல்லவா? அதே ‘அங்குலம்’தான் , பாலியில் ’அங்குலா’!
நல்லவேளை , நம்மவர்கள் ‘அங்குஷ்லா’ என்றொரு சொல்லை உருவாக்கவில்லை!
இப்போதைக்கு , #ஈறுகளின் #மாற்றத்தை மட்டும் கவனியுங்கள்! தமிழின் #‘அம்’ #ஈறு, பாலியில் #‘ஆ’ #ஈறாகத் திரிந்துள்ளது! அவ்வளவுதான்!

6 . அஞ்னானா (பாலி)
‘அஞ்ஞானம்’ என்று நாமறிந்த சொல்தான் இது!
#‘அ’ #முன்னொட்டால் #எதிர்மறைப் #பொருள் #தமிழில் #ஏற்படும்!
சட்டைசெய் – உடன்பாட்டுச் சொல்
அசட்டைசெய் – எதிர்மறைச் சொல்
ஆகவே , ‘அ’ எனும் தமிழ் வேர்ச்சொல் தமிழுக்கும் பாலிக்கும் ஒன்றுதான்!

7 . அஞ்ஞானின் (பாலி)
ஞானி – உடன்பாட்டுச் சொல்
அஞ்ஞானி – எதிர்மறைச் சொல்
ஞானமற்றவன் , அஞ்ஞானி.
சற்றுமுன் சொன்னதுபோல, இங்கும் ‘அ’ முன்னொட்டு எதிமறைப் பொருளைத் தமிழில்  தந்துள்ளதைக் கவனிக்க!

8. அடவி  (பாலி)
காடு எனும் பொருள் தரும் அருமையான தமிழ்ச்சொல் ‘அடவி’!
தமிழ்ச்சொல் எந்த மாற்றமும் அடையாமல் , அப்படியே பாலியில் வந்துள்ளதைக் கவனியுங்கள்!
இங்கு நான் ஒன்றை உங்களுக்குக் கூறவேண்டும்!
பாலிச் சொற்களை ஆய்ந்தவர்கள், ‘இப் பாலிச்சொல்லுக்கு மூலம் சமஸ்கிருதமா ? இலத்தீனா? கிரேக்கமா?’ என்றெல்லாம் , பல சொற்களுக்கு , ஆய்வை ஓட்டியுள்ளார்களே தவிர ஒரு இடத்திற்கூட  ’தமிழிலிருந்து வந்திருக்குமா?’ என்று பார்க்கவே இல்லை! பாலி ஆய்வாளர்களுக்குத் தமிழ் என்று ஒரு மொழி இருப்பதே தெரியாதமாதிரித்தான் உள்ளது! தமிழை உலகளாவிய நிலையில்  நாம் எடுத்துச் செல்லவில்லை என்பதை இது தெரிவிக்கிறது!  ‘அவர் ஜெர்மனியில் வேலை செய்தவர்; இவர் கனடாவில் வேலை செய்தவர்’ என்று சில தமிழர்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம்! ஆனால் , அவர்கள் வெகு கமுக்கமாக இருந்து, எங்கே, தமிழ் தொடர்பாக என்ன வேலை செய்கிறோம் என இங்கு மூச்சு விடமாட்டார்கள்! தமிழை உலகளாவிய நிலைக்கு நாம் எடுத்துச்சென்ற இலட்சணம் இதுதான்!

9 . அட்டா  (பாலி)
பரண் என்பது பொருள்.
‘தலையணை பாயை அட்டாலையில் போட்டியா?’ – சிற்றூர்களிற் பாட்டி இரைவாள்!
‘அட்டாலைப் பலகை’ என்பதும் இதுவே.
சதுர அல்லது செவ்வக வடிவில் , சட்டங்களால் அமைக்கப்பட்டு, நான்கு மூலைகளிலும் கயிற்றால் கட்டி உயரமாகத் தூக்கிக் கட்டியிருப்பர்; இதுவே  #‘அட்டாலை’. பாலி மொழி தமிழகத்தில் அறியப்பட்ட  காலத்தில் , தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

10 . அன்னா (பாலி)
அன்னம் – சோறு
தமிழ் ’அன்னம்’தான் , பாலி ‘அன்னா’! ‘அன்னமிட்ட வீட்டில் கன்னமிடாதே’ – தமிழ்ப் பழமொழி.
தமிழ் ‘அம்’மீறு , பாலியில் மாறும் வகையைப் பார்த்துக்கொண்டே வாருங்கள்.

(கருவி நூல் :  Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***

Back to top