புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம். Poll_c10களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம். Poll_m10களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம். Poll_c10 
21 Posts - 66%
heezulia
களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம். Poll_c10களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம். Poll_m10களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம். Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம். Poll_c10களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம். Poll_m10களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம். Poll_c10 
63 Posts - 64%
heezulia
களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம். Poll_c10களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம். Poll_m10களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம். Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம். Poll_c10களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம். Poll_m10களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம். Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம். Poll_c10களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம். Poll_m10களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம். Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம்.


   
   
nirujan
nirujan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 19/11/2015

Postnirujan Thu Nov 19, 2015 11:02 pm

சங்க இலக்கியங்களான எட்டுத் தொகையூம் பத்துப்பாட்டும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்பெறுவன அது போலவேஇ சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்ந்த தொகுதி பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று. பதினெட்டு நூல்களையூம் குறிக்கும் வெண்பா வருமாறு.
நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியூட னேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கிழ்க் கணக்கு
முப்பொருள்களையூம் குறைந்த அடிகளில் சிறப்புற நான்கடிக்கு மிகாமல் உரைப்பது கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும்.
பதினெண்கீழ்கணக்கு நூல்களுள்இ திருக்குறள்இ நாலடியார்இ நான்மணிக்கடிகைஇ இனியவை நாற்பதுஇ இன்னா நாற்பதுஇ திhpகடுகம்இ ஆசாரக்கோவைஇ சிறுபஞ்சமூலம்இ பழமொழிஇ முதுமொழிக்காஞ்சிஇ ஏலாதி என்ற பதினொரு நூல்களும் நீதியை இயம்புவன.
இயற்கை வாழ்வூ வாழ்ந்த சங்க கால தமிழக மக்களின் வாழ்க்கையை மறுத்தலித்தலின் வாழ்வூ நெறியாகவே சங்கமருவிய கால சமணஇ பௌத்த மதங்கள் காட்டிய வாழ்க்கை நெறி அமைந்தது. வாழ்க்கை நிலையாமைஇ கருமத்தை வெல்ல இயலாமைஇ உலகியல் இன்பங்களை இழிவூ செய்து துறவே வாழ்வின் சிறப்பு என்று காட்டி நின்ற சங்க மருவிய கால அறநெறிப் போதனைகள் ஆரம்ப காலத்தில் வாழ்வில் அமைதி காண விரும்பிய தமிழகத்தால் வரவேற்கப்பட்டாலும் காலப் போக்கில் வாழ்வூ முறைகள் மனித வாழ்வின் இயல்புகளுக்குப் பொருந்தாத தன்மை கொண்டு அதைத் தமிழக மக்கள் மறுதலிப்பதாகவே பல்லவர் கால வாழ்க்கை நெறி ஆரம்பித்;தது.
இருண்ட இக்காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றின. பதினெண்கீழக்கணக்கு நூல்கள்இ சிலப்பதிகாரம்இ மணிமேகலை ஆகியன இக்காலகட்டத்தில் எழுந்தனவெனக் கூறுவர்.
சிலப்பதிகாரம் தோன்றிய காலம் குறித்து உறுதியாகத் தெரியவில்லை. சிலப்பதிகாரம் சங்க மரவிய காலத்தில் கி. பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்றே பெரிதும் கருதப்படுகிறது. சிலர் எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.



சிலப்பதிகார தனித்துவம்-
தமிழ் இலக்கிய வரலாற்றில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரம் சிலம்பு - அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யூள் எனவூம் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல்இ இசைஇ நாடகம் என்னும் மூன்றினையூம் காணலாம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை ‘‘குடிமக்கள் காப்பியம்’’ என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.
பிற்பட்ட கால காப்பியங்கள் பெரும்பாலும்இ வட நாட்டுக் கதையினை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்படஇ சிலப்பதிகாரம் தமிழ் நாட்டுக் கதையினை அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது. இக்காப்பியம் புகார்க் காண்டம்இ மதுரைக் காண்டம்இ வஞ்சிக் காண்டம் எனும் முப்பெருங் காண்டங்களாகவூம்இ மங்கல வாழ்த்துப் படலம்இ மனையறம் படுத்த காதைஇ அரங்கேற்று காதைஇ அந்திமாலை சிறப்பு செய்காதை முதலான முப்பது காதைகளையூம் கொண்டு விளங்குகிறது.
இக்காப்பியத்தின் வழிஇ முத்திறக் கொள்கையை எடுத்து விளக்குவதே ஆசிரியரின் நோக்கமாவூள்ளது என்பதனைப் புரிந்து கொள்ள முடியூம். இக்காப்பியம் சேரஇ சோழஇ பாண்டிய மன்னர்களையூயம்இ அவர்களது நாட்டையூம் சிறப்பித்துக் காட்டும் வகையில் ஒரு பொதுமைக் காப்பியமாகவூம் விளங்குகிறது. இக்காப்பியத்தின்வழிஇ இளங்கோவி;ன் காலத்தில் விளங்கிய சேரஇ சோழஇ பாண்டிய நாட்டு; மக்கள்இ அவர்களின் தொழில் முறைகள்இ வீதிகள்இ சந்தைகள்இகலைஞர்கள் முதலான பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ள முடியூம் பொதுவாகக் கூறின்இ இளங்கோவின் காலத்துத் தமிழகத்தினை எம்மால் இக்காப்பியத்தின் வழி புரிந்து கொள்ள முடிகிறது.
தொல்காப்பியமே முதற் தமிழ் இலக்கண நூலாகும். ஆனால் அதில் காப்பியம் தொடர்பிலான கருத்துக்கள் இடம்பெறவில்லை. தொல்காப்பியம் ‘முந்து நூற் கண்டு முறைப்படத் எண்ணி இலக்கணம் வகுக்கப்பட்டது’ என்பர். தொல்காப்பியருக்கு முன்னர் காப்பியம் எழுந்திராமையால் அது காப்பிய இலக்கணத்தைக் கூறவில்லை. முதன் முதல் தண்டியலங்காரமே காப்பிய இலக்கணங்களைக் குறிப்பிடுகின்றது. அதனைப் பின்பற்றி ஏனைய இலக்கண நூல்களும் காப்பிய இலக்கணங்களைக் குறித்தது.
சிலப்பதிகாரக் காப்பியமனது இவ்விலக்கண நூல்களின் தோற்றுவாய்க்கு முன்னர் எழுந்துள்ள போதிலும் அவை குறிப்பிடும் காப்பிய இலக்கணங்களைப் பூர்த்தி செய்தள்ளன எனலாம். ஒரு சில இடங்;களிலேதான் தளம்பல்கள் காணப்படுகின்றன. குறிப்பாகத் தன்னிகரில்லாத் தலைவன் படைக்கப்பட வேண்டும் என்ற கொள்கைக்கு மாறாக ஒரு தலைவியைப் படைத்துக் காட்டுகிறது. ஆயினும்இ அவளைத் தன்னிகரற்றவளாகவே காட்டிவிடுகிறன்றது.
காப்பியத்தினை பெருங்காப்பியமா அல்லது சிறுகாப்பியமா என முடிவூ செய்வது அதுநாற்பொருளினையூம் எடுத்து விளக்குகின்றதா என்பதிலேதான் தங்கியூள்ளது என்பார் தண்டியாசரியர். சிலம்பு நாற்பொருளில் வீட்டினைச் சிறப்பாகப் பதிவூ செய்யவில்லை என்பது முன்னரே சுட்டப்பட்டது. இருந்தும் இளங்கோவூம்இ சாத்தனாரும் திட்டமிட்டே முறையே சிலம்பையூம்இ மேகலையையூம் அமைத்துள்ளனர் என்பது இன்றைய ஆய்வாளர்களின் முடிவாகவூள்ளது. அதற்கு அவர்கள் இரு காப்பியத்திலும் இடம்பெறும் பதிகச்; செய்யூட்களை அகச்சான்றாக மொழிவர்.
பொதுவாக ஒரு காப்பியம் குறிப்பிடட் சில கருத்தையே மையமாக கொண்டு காணப்படும். ஆனால் சிலப்பதிகாரம் பல்வேறுபட்ட கருத்துக்களை கூறுவதைக் காணலாம்.  இக்காப்பியம் மூன்று அடிப்படைக் கருத்துக்களைக் கூறுகிறது. அவையாவன:
1) அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்.
2) புகழ்மிக்க பத்தினியை உலகம் போற்றும்
3) ஊழ்வினை தவறாது வந்து தன் பலனை அடையச் செய்யூம்

என்பனவாகும். இக்கதையைஇ இதன் ஆசிரியரான இளங்கோவடிகள் சொல்லஇ அதனை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் கேட்டார் என்கிறது சிலப்பதிகாரம்.
காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும். காவிரிஇ வைகை முதலான ஆறுகளும் புகார்இ உறந்தைஇ மதுரைஇ வஞ்சி முதலான் நகரங்களும்இ குரவைக் கூத்து முதலிய கூத்துகளும்இ திருமால் முதலிய தெய்வங்களும்இ அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வருணிக்கப்பட்டுள்ளன. அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரப் பதிகம் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யூள் எனக் குறிக்கின்றது. இடையிடையே உரைகளும் வரிப்பாட்டுகளும் கலந்து வந்துள்ளன. பொருட்செறிவூஇ தௌpவான இனிய எளிய நடையூடன்இ அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும். இறையனார் களவியல் உரைகாரர்இ இளம்பூரனார் போன்ற உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையது. தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வூக்கு உட்பட்ட நூல் இதுவேயாகும். சிலப்பதிகாரம்  நூல் முகத்தில் உரைப் பாட்டினையூம்இ கானல் வரிஇ வேட்டுவ வரிஇ ஆற்றுவரிஇ ஊசல்வரிஇ கண்புகுவரி என்னும் இசைப்பாட்டுகளும் நிறைந்தது.

கதைச்சுருக்கம்.-
கோவலன்இ கண்ணகிஇமாதவி இக் கதையில் முக்கிய பாத்திரங்கள்.கண்ணகி கற்பு நெறி தவறாமல் வாழும் பத்தினி .மாதவி பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள். மணிமேகலையின் தாய். கோவலன் தனது செல்வம் அனைத்தையூம் முறை இல்லாமல் செலவழித்து கடைசியில் மிஞ்சிய தனது மனைவியின் காற்சிலம்பை விற்க மதுரைக்கு வருகிறான். கடைவீதியில் அதை விற்க முயலும் போது அரண்மனைக் காவலர்களால் அரசியின் சிலம்பை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு மன்னர் முன் விசாரணை கைதியாக நிற்க வைக்கப்படுகிறான். மன்னன் கோவலன் விற்க முயன்ற சிலம்பு அரசியின் சிலம்பு என குற்றம் சாட்டஇகோவலன் அது தனது மனைவி கண்ணகி யின் காற்சிலம்பு என மறுக்கிறான். ஆனால் மன்னனின் தவறான தீர்ப்பால் கொலை செய்யப்படுகிறான்.கணவன் கொலையூண்ட செய்தி கேட்டு கண்ணகி கோபாவவேசமாக அரசனின் அரச சபைக்கு வருகிறாள். மன்னனின் தீர்ப்பு தவறு என நீதி கேட்கிறாள்.மன்னன் தனது மனைவியின் காற்சிலம்பில் உள்ளது முத்து என கூற தனது சிலம்பில் உள்ளது மாணிக்க பரல்கள் என சிலம்பை வீசி உடைத்து நிருபிக்கிறாள். நீதி தவறிய மன்னன் அக்கணமே உயிர் விடுகிறான்.அரசியூம் உடன் உயிர் விடுகிறாள்.கண்ணகி மதுரை நகரமே முதியவர்இ குழந்தைகள்இ பெண்கள் தவிர மற்ற அனைத்தும் (மதுரை நகரமே) தீக்கிரையாக சபிக்கிறாள்.

-சிலம்பும் திருக்குறளும்.-
இவ்விரு நூலு;களும் அறம் வளா;த்த நூல்களாகும். சிலப்பதிகாரத்திலே திருக்குறளின் கருத்துக்கள் பல விடயங்களில் காணப்படுகின்றன. திருக்குறளின் சொற்றொடா;களும் காணப்படகின்றன. சுருங்கச் சொல்ல வேண்டுமானால் திருக்குறள் அறத்தைத் தழுவிய கதையாகவே சிலப்பதிகாரம் அமைந்திருக்கின்றது என்று சொல்லி விடலாம்.
அறம்இ பொருள்இ இன்பம் என வாழ்க்கையை பகுத்து கூறிய வள்ளுவரின் திருக்குறள்களில் ஒன்றுஇ பத்தினிப் பெண்ணின் வியத்தகு ஆற்றலை வியந்து கூறுகிறது.
“தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யூம் மழை”
அதாவது தெய்வத்தைக் கூட வணங்காமல்இ தனது கணவனை மட்டுமே காலையில் வணங்கி எழும் பெண்இ ‘பெய்’ என்று வானத்தை நோக்கி கட்டளையிட்டால் அந்த மழையூம் கூட விண்ணை கிழித்துக் கொண்டு உடனே பெய்து விடும் என்பது இந்த குறள் மூலமாக வள்ளுவர் கூறும் கருத்து. இந்த குறளை அப்படியே தன்னுடைய சிலப்பதிகார காப்பியத்தில் எடுத்து பயன் படுத்துகிறார் இளங்கோவடிகள்.
“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்
தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்”
என்ற சிலப்பதிகார வரிகளின் மூலமாக கணவனை தெய்வமாக வணங்கும் பத்தினிப் பெண்ணை அந்த தெய்வமே வணங்கி கை தொழும் சிறப்புடையவள் என்று வள்ளுவர் வழி நின்று தெரிவிக்கிறார் இளங்கோவடிகள்.
திருக்குறளில் வான் சிறப்பு என்னும் அதிகாரம் அமைந்திருக்கின்றது. கடவூள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரம் இதுதான். சிலப்பதிகாரமும் மழையை கடவூள் வாழ்த்தாக கொண்டு காணப்படுகின்றது.  ‘‘மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும்;;’’ என்று வானையூம் வணங்குவா; சிலப்பதிகார ஆசிhpயா;.
அடுத்து சிலப்பதிகாரத்தில்
‘‘முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் காண்குறூஉம் பெற்றியகாண்’’
என்று கூறப்பட்டிருப்பது முற்பகலிலே பிறருக்கு துன்பம் செய்தவன் பிற்பகலிலே தான் அத்துன்பத்தை  அடைவான். இதனை திருக்குறளானது
‘‘பிறா;க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்’’ என்று கூறுகின்றது.
அடுத்து ஆசையே பிறப்புக்கு விதையாகும் என்பது வள்ளுவா; கருத்து.
‘‘அவா என்ப எல்லா உயிh;க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து’’
எல்லா உயிh;களுக்கும் எக்காலத்தும் தவறாமல் பிறப்பு தரும் விதை ஆசையே என்று சொல்வா;. இக்கருத்தைச் சிலப்பதிகாரம் பல நிகழ்ச்சிகளிலே கூறிச்செல்கின்றது.
இவ்வாறு பல இடங்களில் திருக்குறள் சிலப்பதிகாரத்துடன் ஒத்து போகின்ற தன்மையைக் காணலாம்.
திருக்குறளை எல்லோரும் பின்பற்றியிருந்தால் உலகில் பிரச்சனைகளே இருக்காது. நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றே பலர் திருக்குறளை மறந்துவிட்டனர். ஆனால்இ ‘‘சிலப்பதிகாரம்;’’ இக்கால கட்டத்தில் மட்டும் அல்ல எக்கால கட்டத்தில் பொருந்தும். குறிப்பாக பெண்களுக்கு பொருந்தும். எந்த துன்பம் வந்தாலும் நாம் எதிர் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
-சிலம்பு பெறும் முக்கியத்துவம்-
சிலப்பதிகாரம் மற்றைய தமிழ்ச் செவ்வியல் நூல்களாகிய கம்பராமாயணம் திருக்குறள் போலல்லாமல் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான படைப்பிலக்கியம். முதல் வேறுபாடு இது சமஸ்கிருதத்திலிருந்து இறக்குமதியான காவியக் கதையன்று. சேரஇசோழஇ பாண்டிய நாடுகளை உள்ளடக்கிய தமிழ்நாட்டு நிகழ்வூகளைக் கருவாகக். கொண்ட முதல் படைப்பிலக்கிய நூல்.
படைப்பிலக்கியத்தில் வெவ்வேறு வகைகள் உண்டு. குறிப்பாகஇ மடை திறந்தாற்போலஇ தன்னிச்சையாகப் பொங்கும் படைப்பு ஒரு வகை. இலக்கியக் கொள்கைத் தீர்மானங்களுடன் சொல்லவந்த கதையை எந்தெந்தக் களத்தில் அது நிகழ்கிறதோஇ அக்களத்தின் பூகோளப் பின்னணியிலும்இ அக்களத்துகுரியப் பாரம்பரியக் கலை வடிவங்களைப் புலப்படுத்தும் கையேட்டு ஆவணமாகமாக ஆக்கிக் கூறும் படைப்பு இன்னொருவகை. கம்ப ராமாயணம் முதல் வகை. சிலப்பதிகாரம் இரண்டாவது வகை.
சிலப்பதிகாரம்இ கம்ப ராமாயணத்தைப் போலவோஇ திருக்குறளைப் போலவோ சாதாரண மக்களிடையே பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் பிரபலமாக இருந்திருக்கவில்லை. ஐம்பெரும் காப்பியங்கள் என்பதே மிகப் பிற்கால வழக்கு ஆகும்.

-சிலப்பதிகாரமும் தமிழ்க் காப்பிய இலக்கணங்களும் ஒரு தொகுப்புப் பார்வை-
தொல்காப்பியமே முதற் தமிழ் இலக்கண நூலாகும். ஆனால்இ அதில் காப்பியம் தொடர்பிலான கருத்துக்கள் இடம்பெறவில்லை. தொல்காப்பியம் ‘முந்து நூற் கண்டு முறைப்படத் எண்ணி இலக்கணம் வகுக்கப்பட்டது’ என்பர். தொல்காப்பியருக்கு முன்னர் காப்பியம் எழுந்திராமையால்இ அது காப்பிய இலக்கணத்தைக் கூறவில்லை. முதன் முதல் தண்டியலங்காரமே காப்பிய இலக்கணங்களைக் குறிப்பிடுகின்றது. அதனைப் பின்பற்றி ஏனைய இலக்கண நூல்களும் காப்பிய இலக்கணங்களைக் குறித்தது.
சிலப்பதிகாரக் காப்பியமனது இவ்விலக்கண நூல்களின் தோற்றுவாய்க்கு முன்னர் எழுந்துள்ள போதிலும்இ அவை குறிப்பிடும் காப்பிய இலக்கணங்களைப் பூர்த்தி செய்தள்ளன எனலாம். ஒரு சில இடங்;களிலேதான் தளம்பல்கள் காணப்படுகின்றன. குறிப்பாகத் தன்னிகரில்லாத் தலைவன் படைக்கப்பட வேண்டும் என்ற கொள்கைக்கு மாறாக ஒரு தலைவியைப் படைத்துக் காட்டுகிறது. ஆயினும்இ அவளைத் தன்னிகரற்றவளாகவே காட்டிவிடுகிறன்றது.
காப்பியத்தினை பெருங்காப்பியமா அல்லது சிறுகாப்பியமா என முடிவூ செய்வது அது நாற்பொருளினையூம் எடுத்து விளக்குகின்றதா என்பதிலேதான் தங்கியூள்ளது என்பார் தண்டியாசரியர். சிலம்பு நாற்பொருளில் வீட்டினைச் சிறப்பாகப் பதிவூ செய்யவில்லை என்பது முன்னரே சுட்டப்பட்டது. இருந்தும் இளங்கோவூம்இ சாத்தனாரும் திட்டமிட்டே முறையே சிலம்பையூம்இ மேகலையையூம் அமைத்துள்ளனர் என்பது இன்றைய ஆய்வாளர்களின் முடிவாகவூள்ளது. அதற்கு அவர்கள் இரு காப்பியத்திலும் இடம்பெறும் பதிகச்; செய்யூட்களை அகச்சான்றாக மொழிவர்.
சிலம்பின் பதிகச் செய்யூளில்
“முடிகெழு வேந்தர் மூவர்க்கு முரியது
அடிகள் நீரே அருளுக”
எனவூம்இ

மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும்
எனவூம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறே மணிமேகலையின் பதிகச் செய்யூளில்இ
இயங்கோ வேந்தன் அருளிக் கேட்ட
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த் திறம் மணிமேகலைத் துறவூ
ஆறைம் பாட்டினுள் அறிய வைத்தனன்
எனவூம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இருவரும் திட்டமிட்டு ஒரு பகுதியை இளங்கோ பாட சாத்தனார் கேட்பதென்றும் மற்றைய பகுதியை சாத்தனார் பாட இளங்கோ கேட்பதென்றும் முடிவாகி இரு காப்பியங்களும் அருளிச் செய்யப்பட்டிருந்தது என்ற கருத்தினை வலுப்பெறச் செய்கின்றது. எனவேதான் சிலம்பினையூம்இ மேகலையையூம் இரட்டைக் காப்பியங்களாகக் கருதி அவையிரண்டும் சேர்ந்து நாற்பொருளைச் சிறப்பாக எடுத்துரைப்பதனைக் கருத்திற் கொண்டுஇ இவற்றைப் பெருங்காப்பியங்களென்றே குறிப்பிடுகின்றனர். இது ஏற்கத்தகுந்த கருத்தேயாகும். எனவேதான்இ தண்டியாசரியர் முதலான தமிழ் இலக்கண நூலார் குறிப்பிடும் காப்பிய இலக்கணங்களைச் சிலப்பதிகாரம் பெரும்பாலும் பூர்த்தி செய்துள்ளது என்ற முடிவூக்கு எம்மால் வர முடிகிறது.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Nov 20, 2015 7:02 am

வாழ்க வளமுடன்
நன்று




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Nov 20, 2015 7:42 am

சிலப்பதிகாரத்தை பற்றிய பதிவு மிகவும் அருமை. ..



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 20, 2015 6:06 pm

நிருஜன் அவர்களே தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
தங்களுடைய சங்க இலக்கியமான எட்டுத் தொகை,
பத்துப்பாட்டு,பதினெண் மேற்கணக்கு மற்றும்
சிலப்பதிகாரம் பற்றி பதிவுகள் அருமை நன்றி.


nirujan
nirujan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 19/11/2015

Postnirujan Wed Dec 02, 2015 2:03 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக