புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெங்குவும் இயற்கையும்  Poll_c10டெங்குவும் இயற்கையும்  Poll_m10டெங்குவும் இயற்கையும்  Poll_c10 
62 Posts - 57%
heezulia
டெங்குவும் இயற்கையும்  Poll_c10டெங்குவும் இயற்கையும்  Poll_m10டெங்குவும் இயற்கையும்  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
டெங்குவும் இயற்கையும்  Poll_c10டெங்குவும் இயற்கையும்  Poll_m10டெங்குவும் இயற்கையும்  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
டெங்குவும் இயற்கையும்  Poll_c10டெங்குவும் இயற்கையும்  Poll_m10டெங்குவும் இயற்கையும்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெங்குவும் இயற்கையும்  Poll_c10டெங்குவும் இயற்கையும்  Poll_m10டெங்குவும் இயற்கையும்  Poll_c10 
104 Posts - 59%
heezulia
டெங்குவும் இயற்கையும்  Poll_c10டெங்குவும் இயற்கையும்  Poll_m10டெங்குவும் இயற்கையும்  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
டெங்குவும் இயற்கையும்  Poll_c10டெங்குவும் இயற்கையும்  Poll_m10டெங்குவும் இயற்கையும்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
டெங்குவும் இயற்கையும்  Poll_c10டெங்குவும் இயற்கையும்  Poll_m10டெங்குவும் இயற்கையும்  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெங்குவும் இயற்கையும்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Oct 24, 2017 1:14 pm

டெங்குவும் இயற்கையும்  Gu4s9559Qd2i4sv1NS8Z+thattaan2

டெங்குவும் இயற்கையும் -1,

தினசரி செய்திகளில் எத்தனை வித பரபரப்பு செய்திகள் அவ்வப்போது வந்தாலும் அத்தனையும் மிஞ்சி நிற்பது டெங்கு நோய் பாதிப்பு பற்றிய செய்திகளே !
இப்போதெல்லாம் தினமும் டெங்கு நோய்பரவலுக்கு இடம் கொடுக்கும் வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்ததாக தினசரி பலருக்கும் அபராதமும் விதிக்கப்படுகிறது .
டெங்கு என்ன இப்போதுதான் வருகிறதா ?
முன்பெல்லாம் இல்லையா ?
நமது முனோர்கள் இந்த சூழலை எப்படி சமாளித்தாள் ?
சுற்றுசூழலைஎப்படி டெங்கு பரவாமல்வைத்துக்கொள்வது ?என்று பல வினாகளுக்கு பதில் ஒன்றே ஒன்றுதான் என அறிந்தால் வியப்பாக இருக்கும் .
இயற்க்கை தனது சுற்று சூழலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள தானே தனக்குள் பல அமைப்புகளைக் கொண்டுள்ளது . ஆனால் இப்போது அந்த உயிர் வலயத்தில் பல இணைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன . காரணம் வழக்கம் போல் நவீன விஞஞானத்தின் அதீத பயன்பாடுகள் தான் .
இயற்கையைசரிவர உணரத தவறிவிட்டோம் ..

மழைக்காலத்தில் கொசுக்கள் மூலமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் பணியை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக செய்துவந்தது இயற்க்கைஉயிர்வலயத்தில்இருந்துவந்த தட்டான்கள்தான்.

தட்டான்களுக்கு நீர்நிலைகள்தான் வாழும் உலகம். இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண் தட்டான்கள் ஆயிரக்கணக்கான முட்டைகளை நீர்நிலைகளில் இட்டுவிட்டுச்செல்லும். நம் வெப்பமண்டல சூழலுக்கு அம்முட்டைகள் 10 நாள்களில் பொறித்துவிடும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம்உயிரியானது சுமார் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டு வரை நீரிலேயே வாழும். அந்தக் காலகட்டத்தில் அதன் முக்கிய உணவு கொசுக்களின் லார்வாக்கள்தான். தன்னால் முடிந்தவரை கொசுக்களின் லார்வாக்களை உண்டு முதிர்ச்சியடைந்ததும் நீரை விட்டு வெளியேறிவிடும். தனது உடலைச் சுற்றியிருக்கும் உறை போன்ற பகுதியை உடைத்துக்கொண்டு இறக்கைகள் உடைய, முழுமையாக வளர்ச்சியடைந்த தட்டானாக வெளியே வரும். நீரில் இருக்கும் போதும் , வெளியே பறக்க ஆரம்பத்த பிறகும் கொசுக்கள்தான் அதன் பிரதான உணவு.

இரண்டு மீட்டர் வரை துல்லியமாகப் பார்க்கும் திறன் உடைய இரண்டு கூட்டுக்கண்கள் தட்டானுக்கு உண்டு. அவை, கொசுக்களை வேட்டையாடும் முறை வித்தியாசமானது. பறக்கும்போது தனது ஆறு கால்களையும் ஒன்று சேர்த்து கூடை போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். அந்தக் கூடைக்குள் விழும் கொசுக்கள்தான் அந்நேரத்து உணவு. பறந்துகொண்டே சாப்பிடும் அல்லது செடியில் அமர்ந்துகொண்டு சாப்பிடும். பின்னர் கூடைக் கால்களோடு மீண்டும் வேட்டைக்குப் புறப்பட்டுவிடும். இப்படிக் கொசுக்களின் உற்பத்தியை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தியது தட்டான்கள்தான்.

இன்று கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களை தட்டான்களின் உதவியால் விரட்டியிருக்கலாம். நீர்நிலைகளில் மணல் அள்ளுவதில் தொடங்கி, சாக்கடைக் கலப்பு வரை தீமைகள் சகலத்தையும் தொடர்ந்து செய்துவிட்ட நாம், இப்போது தட்டான்களைத் தேடுவதில் நியாயம் இல்லை. ஒழித்ததே நாம் தானே !

சிறகு விரித்துப் பறக்கும் அதன் அழகும், நின்றுகொண்டே பறக்கும் அதன் திறமையும், கருப்பட்டிக்காகக் கல்லைத்தூக்கும் அதன் பாங்கும், இனி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பார்க்கமுடியாது என்பதே கசப்பான உண்மை. மிக நீண்ட தொலைவிற்கு வலசை போகும் திறன் கொண்ட ஒரே பூச்சியினம் தட்டான்தான்.
காற்றில் மேலடுக்கு நகர்வு மூலம் இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்கா சென்றுவிட்டு மீண்டும் இந்தியா திரும்பும் திறன் அவற்றிற்கு உண்டு.
கூறுவது போல கடலில் ஆமைகள் கடலோடிகளுக்கு வழிகாட்டியது போல
, விண்ணில் பறவைகளும் ,தட்டான்களும் காற்றின் மேலடுக்கின் அசைவைப் பயன்படுத்தி வலசை போயிருக்கின்றன .
மணிக்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்திற்கு பறக்கும். இவற்றால் நின்றுகொண்டே பறக்க முடியும். அப்படியே 180டிகிரி தன்னைத் திருப்பிக்கொண்டு பின்னால் பறக்க முடியும். தட்டானைப் பார்த்துதான் ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டது என்று கூட சொல்வார்கள்.

பொதுவாக இரண்டு வகை தட்டான்கள் இருக்கின்றன. ஒன்று சாதாரண தட்டான். மற்றொன்று ஊசித்தட்டான். இதை வேறுபடுத்தி அறிந்துகொள்ள எளிமையான வழி இருக்கிறது. தட்டான் வந்து அமரும் போது அதன் இறக்கைகள் விரிந்த நிலையிலேயே இருந்தால் அது சாதாரண தட்டான். தனது முதுகுப் பகுதியுடன் இறக்கைகளை மடக்கிக் கொண்டு அமர்ந்தால் அது ஊசித்தட்டான். ஏறத்தாழ 6ஆயிரம் வகை தட்டான் இனங்கள் உலகம் முழுவதிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 503 இனங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

325மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பூமியில் வாழும் பூச்சியினம் தட்டான் மட்டுமே. உலகில் எல்லா இடங்களிலும் இவற்றைப் பார்க்க முடியுமாம்..
இவ்வாறு இயற்கைத்தனது சுற்றுசூழலைப் பாதுகாக்க உயிர் வட்டத்தில் சிறப்பான உயிர்களை பெற்றிருந்தது .

இவைகளை எப்போது இழந்தோம் ?
ஊர்வன, பறப்பன, முட்டை இட்டுக் குஞ்சு பொறிப்பன, குட்டி போட்டுப் பால் கொடுப்பன என்று அழகாக வகைப்படுத்திய வாழ்ந்து வந்த மனிதன், தற்போது அவற்றுக்கும் தனக்கும் உள்ள தொடர்பினை
மறந்துவிட்டது போல தெரிகிறது .
..தட்டான், ஈசல், மண்புழு, பிள்ளைப்பூச்சி, பாப்பாத்தி (செவப்பா கரும்புள்ளியோட இருக்கும்), குசுவினிபூச்சி, சில வகை எறும்புகள், தண்ணிபாம்பு, சாரை பாம்பு, பச்சை கொம்பேறிமூக்கன், வண்ணத்துப்பூச்சி, சிட்டுக்குருவி, அணில், ஓணான், அரணை, உடும்பு, தேரை, சாம்பிரானி, பால்நண்டு, நட்டுவாக்காளி, கூழைப்பாம்பு, பச்சைக்கிளி, மரங்கொத்தி, கொக்கு, நாரை, மடையான், மணிப்புறா, காடை, கவுதாரி, குயில், நரி, காட்டுப்பூனை - இது எல்லாமே வயக்காடு, கொல்லைக்காட்டுலேருந்து மட்டுமல்ல கிராமங்கள் நகரங்களில் இருந்து சிறுக சிறுக மறைஞ்சுபோய்விட்டது .
இதன் அடுத்தப்பகுதியில் இவைகள் எப்படி நம்மைவிட்டு மறைந்து போன காரணங்கள்குறித்து ,நம்மாழ்வாரின் கருத்துக்களையும் , இயற்கைத் தந்த மற்றொரு தரப்பின் நிவாரணமான நிலவேம்பைப்பற்றிய சர்ச்சைகளைப்பற்றிய விஷயங்களையும் காணலாம்
அண்ணாமலை சுகுமாரன்
23/10/17

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Oct 27, 2017 9:14 am

டெங்குவும் இயற்கையும்  XvRbJfgIS86Vy2eEE26C+2

டெங்குவும் இயற்கையும் -2

எனக்கு துணை புரிபவர் சுபான் என்று ஒருவர் இருக்கிறார் .அவர் வர்மம் , பாத தொடு சிகிச்சை , மூலிகை என பலவிஷயங்களில் பரிச்சியம் உள்ளவர் .
அவர் அனைத்து மூலிகைகளும் கேட்பவருக்கு சேகரித்துக்கொடுப்பார் .டெங்கு பரவியதால் இருந்து அவர் பயங்கர செயல்பாட்டில் இருக்கிறார் .கேட்பவர்கள் அனைவருக்கும்புதுவைமற்றும்சுற்றுப்புற தொண்டுநிறுவனங்களுக்கு நில வேம்பு குடிநீர் தயாரிக்க தேவையான புதிய நிலவேம்பு மூலிகைகள் அதிக அளவில் வழங்கி வந்தார் . அவரிடம்" சுபான் ! எப்படி நீங்கள் கேட்பவர்களுக்கு கிலோ கணக்கில் தொடர்ந்து நிலவேம்பு அளிக்க முடிகிறது ?"
"எப்படி நிலா வேம்பு இருக்கும் இடம் உங்களுக்குத் தெரிகிறது ?" எனக்கேட்டபோது அவர்
"ஐயா , இது ஒன்றும் அதிகக் கடினம் இல்லை , எங்கே அதிக பாம்புகள் இருக்குமோ அங்கே நிச்சயம் நிலவேம்பு எனப்படும் சிரியா நங்கை நிச்சயம் இருக்கும் "என்றார் .
இவ்வாறு இயற்க்கை தன்னை எப்போதும் சமப்படுத்தும் .
பாம்புகள் இயற்கையின் ஒரு அங்கம் என்றால் , அதன் வேறு ஒரு அங்கமாக பாம்பின் விஷத்தை குணப்படுத்தும்
மூலிகைகளுக்கும் அதில் இடம் உண்டு .
ஓர் இடத்தில் எதிர் காலங்களில் எந்த வகை நோய்கள் வரப்போகிறது என்பதை ,அந்தப்பகுதியில் முன்பே அங்கேவிளையத்தொடங்கும் மூலிகையை கொண்டு அறியலாம் ,என்கிறது சித்தவைத்திய அனுபவம் .
ராச்சேல் கார்சன்.என்னும் அமெரிக்ககடலியல் விஞ்ஞானி மௌன வசந்தம் எனும் விற்ப[பானையில் சக்கைபோடுபோட்ட புத்தகத்தை எழுதியிருந்தார் அதில் அவர் விவரித்திருக்கும் ஒரு தொடர் விளைவை பெரியவர் நம்மாழ்வார் குறிப்பிடுகிறார் .
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்தது இது… சாலை ஓரங்களில் ‘எல்ம்’ மரங்கள் வளர்ந்திருந்தன. அவற்றின் இலைகளை ஜப்பான் வண்டுகள் தின்றன. மரங்களின் அழகு ஜப்பான் வண்டுகளால் குறைந்துபோனதாகக் கருதிய விஞ்ஞானிகள், D.D.T என்ற உயிர்க் கொல்லி நச்சுக் கரைசலை விமானத்தின் மூலம் தெளித்தார்கள். வண்டுகள் செத்துப்போயின. ஆனால், நஞ்சு அங்கு நின்று போகவில்லை. D.D.T நஞ்சு படிந்த இலைகள் மண்ணில் விழுந்தபோது, அவற்றை மண்புழு உண்டு மடிந்து போயின. போதிய அளவு நஞ்சு உண்ணாத புழுவின் இயக்கம் தொய்ந்தது. நஞ்சு உண்ட மண் புழுவைத் தின்ற ராபின் பறவைகள் மாண்டன. குறைந்த நஞ்சு உண்ட ராபின்கள் கூடு கட்டவில்லை. கூடு கட்டிய அனைத்தும் முட்டை இடவில்லை. இட்ட முட்டைகள் அனைத்தும் குஞ்சாக மாறவில்லை. ராபின் பறவைகள் மலடாகிப்போனதை உணர்ந்தார்கள். தெளித்த நச்சின் ஒரு பகுதி ஆற்று நீரில் கலந்தது. மீன்கள் மெதுவாக நகர்ந்தன. மீன்களைத் தின்ற வழுக்கைத் தலைக் கழுகு (அமெரிக்காவின் தேசியப் பறவை) மலடாகிப்போனது.

இவ்வாறு எவ்வாறு ஒரு பூச்சி மருந்து தெளிப்பு இயற்க்கை உயிர் வலயத்தில் எத்தனை மாறுதல்கள் உண்டாக்குகிறது பாருங்கள்
. ராபின் பறவை, வசந்தம் வரப்போவதைக் கட்டியம் கூறுபவை. அவை மடிந்துபோனதால், வசந்தத்தை வரவேற்க ஆள் இல்லை. அதனால், தான் எழுதிய புத்தகத்துக்கு ‘மௌன வசந்தம்’ என்று பெயர் சூட்டினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் இருந்த பச்சைத் தவளைகளைப் பிடித்து மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். பாம்புகளுக்குத் தீனி இல்லாது போயிற்று. பாம்புகள் ஊருக்குள் வந்தன. அங்குதான் சேமிக்கப்பட்ட தானியத்தைத் தின்று எலிகள் பெருகிக்கிடந்தன. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்த காடுகளை அழித்துத் தேயிலைத் தோட்டம் போட்டார்கள். தனது தீவனம் குறைந்து போனதால் யானைகள், மனிதர்கள் பயிர் வைத்த கரும்புத் தோட்டங்களுக்கு வருகின்றன. யானைகள் ஊருக்குள் புகுந்து கலாட்டா செய்கின்றன என்று பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிடுகின்றன. செடிகளைத் தின்னும் பூச்சிகளைப் பிற பூச்சிகளும் பறவைகளும் தின்னுகின்றன. தட்டான், சிலந்தி, குளவி, பொறிவண்டு போன்ற உயிரினங்களின் உணவு, தாவர உண்ணிகள். பயிரில் நஞ்சு தெளித்ததால் நன்மை செய்யும் உயிரினங்கள் அழிந்தன. அதனால் பயிர்களில் பூச்சிகளால் ஏற்படும் சேதம் அதிகரித்தது. கீழைக் கடலில் உள்ள மாலத் தீவு பகுதிக்கு, பணக்கார நாட்டவர் துப்பாக்கிகளுடன் உல்லாசப் பயணம் போனார்கள். அங்குள்ள மரங்களில் எடாடோ பறவை இருந்தது. அந்த அப்பாவிப் பறவைகளுக்கு மனிதர்கள் தங்களைச் சுட்டு, கறி சமைத்து உண்பார்கள் என்பது தெரியாது. அவை பயந்து, ஓடித் தப்பிக்க முயலவில்லை. அவ்வளவு பறவைகளையும் கொன்று தின்றார்கள். இப்போது அங்கு, அந்த மரங்களின் இனப் பெருக்கம் அடியோடு நின்றுபோனது. அதற்குக் காரணியாக இருந்த எடாடோ பறவையைத்தான் கொன்று தீர்த்துவிட்டோமே. எடாடோ பறவையின் குடல் வழியாகப் புகுந்து வெளியேறுகிற மரத்தின் விதைகள் மட்டுமே முளைப்பதாக, காலம்போன பிறகு மனிதன் கண்டு கொண்டான்!

இவ்வாறுதான் நமது நாட்டில் எங்கும் பரவி நமக்கு பல மருத்துவ நமைகள் வழங்கி வரும் வேப்பமரமும் , காக்கைகள் வேம்பின் பழத்தைத் தின்று , மலத்துடன் வெளியாகும் வேப்பங்கொட்டையே வே,பின் வித்தாகிறது .
காக்கையின் மூலமாகவே வேம்பு நாடெங்கும் பரவுகிறது
நாம் அழகில்லை, கருப்பாக இருக்கிறது என்று யாராவது
கூறியதை நம்பி செலவு செய்து காக்கை எனும் பறவையை ஒழித்தால் எத்தகைய விளைவு அது சமுதாயத்தில் விளைவிக்கும் எனக் கூறமுடியாது .காக்கைகள் ஆகாயத் தோட்டி என்று அழைக்கப்படுகிறது .சுற்றுப்புற தூய்மை பாதுகாப்பதில் காக்கைக்கு முக்கிய பங்கு இருக்கிறது .
ஒரு உயிர் சார்ந்தே மற்றொன்று இந்த உலகத்தில் வாழ முடியும்.
இதை உணராமல் தீவிர பூச்சிக்கொல்லி ரசாயனங்களால் , மண்ணையும் , நீரையும் அதிகம் ,மாசுபடுத்திவிட்டு ,அதனைசார்ந்து வாழ்ந்த பல உயிரினங்களையும் இழந்துவிட்டோம் .அப்படிதான் டெங்குவை போக்கக்கூடிய தட்டான்களையும் இழந்து விட்டோம் அந்த உயிரினங்கள் நமது வாழ்விற்கு எத்தனை முக்கியம் என்று இப்போது உணர்கிறோம் .ஆனால்காலம்கடந்து காலம் கடந்துஉணர்ந்து என்ன பயன் ? இப்போதே இயற்கையை மதிக்கப்பயிலலாம் .

கட்டுரை நீண்டுவிட்டது ,,இதன் அடுத்தப்பகுதியில் நில வேம்பு பற்றிகாணலாம் .
தொடரும் --
அண்ணாமலை சுகுமாரன்
27/10/17

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Oct 27, 2017 9:22 pm

டெங்குவும் இயற்கையும்  103459460 டெங்குவும் இயற்கையும்  1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 28, 2017 7:53 am

டெங்குவும் இயற்கையும்  103459460 டெங்குவும் இயற்கையும்  3838410834 டெங்குவும் இயற்கையும்  3838410834
-
டெங்குவும் இயற்கையும்  Butterfly_-_Red_on_White_-


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 28, 2017 11:29 am

sugumaran wrote:

டெங்குவும் இயற்கையும் -1,
இவைகளை எப்போது இழந்தோம் ?
ஊர்வன, பறப்பன, முட்டை இட்டுக் குஞ்சு பொறிப்பன, குட்டி போட்டுப் பால் கொடுப்பன என்று அழகாக வகைப்படுத்திய வாழ்ந்து வந்த மனிதன், தற்போது அவற்றுக்கும் தனக்கும் உள்ள தொடர்பினை
மறந்துவிட்டது போல தெரிகிறது .
..தட்டான், ஈசல், மண்புழு, பிள்ளைப்பூச்சி, பாப்பாத்தி (செவப்பா கரும்புள்ளியோட இருக்கும்), குசுவினிபூச்சி, சில வகை எறும்புகள், தண்ணிபாம்பு, சாரை பாம்பு, பச்சை கொம்பேறிமூக்கன், வண்ணத்துப்பூச்சி, சிட்டுக்குருவி, அணில், ஓணான், அரணை, உடும்பு, தேரை, சாம்பிரானி, பால்நண்டு, நட்டுவாக்காளி, கூழைப்பாம்பு, பச்சைக்கிளி, மரங்கொத்தி, கொக்கு, நாரை, மடையான், மணிப்புறா, காடை, கவுதாரி, குயில், நரி, காட்டுப்பூனை - இது எல்லாமே வயக்காடு, கொல்லைக்காட்டுலேருந்து மட்டுமல்ல கிராமங்கள் நகரங்களில் இருந்து சிறுக சிறுக மறைஞ்சுபோய்விட்டது .
23/10/17
மேற்கோள் செய்த பதிவு: 1249393
எவ்வளவு விசயத்தை இழந்து விட்டோம் இன்னும்
நாம் சுதாரிக்கவில்லை எனில் பல அழிவினை
சந்திக்க நேரிடும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 28, 2017 11:40 am

sugumaran wrote:
டெங்குவும் இயற்கையும் -2
காக்கைகள் ஆகாயத் தோட்டி என்று அழைக்கப்படுகிறது .சுற்றுப்புற தூய்மை பாதுகாப்பதில் காக்கைக்கு முக்கிய பங்கு இருக்கிறது .
ஒரு உயிர் சார்ந்தே மற்றொன்று இந்த உலகத்தில் வாழ முடியும்.
இதை உணராமல் தீவிர பூச்சிக்கொல்லி ரசாயனங்களால் , மண்ணையும் , நீரையும் அதிகம் ,மாசுபடுத்திவிட்டு ,அதனைசார்ந்து வாழ்ந்த பல உயிரினங்களையும் இழந்துவிட்டோம் .அப்படிதான் டெங்குவை போக்கக்கூடிய தட்டான்களையும் இழந்து விட்டோம் அந்த உயிரினங்கள் நமது வாழ்விற்கு எத்தனை முக்கியம் என்று இப்போது உணர்கிறோம் .ஆனால்காலம்கடந்து காலம் கடந்துஉணர்ந்து என்ன பயன் ? இப்போதே இயற்கையை மதிக்கப்பயிலலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1249561
படிக்க படிக்க மனம் குமுறுகிறது
நம் சாவுக்குள் பல அழிவு நேர்ந்தேவிடும்.
இதை தடுக்க வேண்டும்.
நன்றி அருமையான பதிவு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக