புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இராம காவியம் - Page 6 Poll_c10இராம காவியம் - Page 6 Poll_m10இராம காவியம் - Page 6 Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
இராம காவியம் - Page 6 Poll_c10இராம காவியம் - Page 6 Poll_m10இராம காவியம் - Page 6 Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
இராம காவியம் - Page 6 Poll_c10இராம காவியம் - Page 6 Poll_m10இராம காவியம் - Page 6 Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
இராம காவியம் - Page 6 Poll_c10இராம காவியம் - Page 6 Poll_m10இராம காவியம் - Page 6 Poll_c10 
16 Posts - 3%
prajai
இராம காவியம் - Page 6 Poll_c10இராம காவியம் - Page 6 Poll_m10இராம காவியம் - Page 6 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இராம காவியம் - Page 6 Poll_c10இராம காவியம் - Page 6 Poll_m10இராம காவியம் - Page 6 Poll_c10 
9 Posts - 1%
Jenila
இராம காவியம் - Page 6 Poll_c10இராம காவியம் - Page 6 Poll_m10இராம காவியம் - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இராம காவியம் - Page 6 Poll_c10இராம காவியம் - Page 6 Poll_m10இராம காவியம் - Page 6 Poll_c10 
4 Posts - 1%
jairam
இராம காவியம் - Page 6 Poll_c10இராம காவியம் - Page 6 Poll_m10இராம காவியம் - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இராம காவியம் - Page 6 Poll_c10இராம காவியம் - Page 6 Poll_m10இராம காவியம் - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராம காவியம்


   
   

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Feb 17, 2009 11:56 pm

First topic message reminder :

இராம காவியம்

தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்

[You must be registered and logged in to see this image.]

ஞானக்கண் கண்ட காட்சி


உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 11, 2010 3:56 am

கவந்தன்


இராம இலட்சுமணர் ஜனஸ்தானத்தில் இருந்து மூன்று குரோச தூரம் அப்பால் சென்று. கிரௌஞ்சாரண்யத்தைக் கடந்து மூன்று குரோச தூரம் சென்று, ஒரு வனத்தை அடைந்தனர். அவ்வனமே கவந்த வனமாகும். நடுப்பகல் எய்தியது. சீதையைத் தேடிச் சென்ற இராம லட்சுமணர் கவந்தன் கைகளுக்குள் அகப்பட்டுக் கொண்டார்கள். கவந்தன் என்ற அரக்கன் இந்திரன் வஜ்ஜிராயுதத்தால் அடிக்க, தலை உடம்புக்குள் புதைய, வெறும் முண்டமாக இருந்து அவ்வனத்தில் வாழ்கின்ற முனிவர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு செய்து வந்தான். அவனுக்கு ஒரு யோசனை தூரம் நீண்ட கரங்கள் இருந்தன. அவன் கையை நீட்டி மடக்குவானால் அவ்வனத்திலுள்ள முனிவர்களும் விலங்குகளும் அவன் வயிற்றுள் சென்று மாண்டு விடுவார்கள்.

இராமரும் இலட்சுமணரும் கவந்தனைக் கண்டு அதிசயம் அடைந்தார்கள். இராமர், "தம்பி நாம் இந்தப் பூதத்தின் கையில் அகப்பட்டு கொண்டோம். என்னை விட்டுச் சீதையும் பிரிந்துவிட்டாள். இனி எனக்கு வாழ்வு வேண்டுமோ ? நீ இந்த இடரிலிருந்து தப்பித்துக்கொள்" என்று கூறினார்.

இலட்சுமணர் முன்னே செல்லவும், இராமர் அவரை முந்திச் செல்லவுமாக ஒருவரை ஒருவர் முந்திச் சென்றார்கள். கவந்தன் இராம லட்சுமணரைக் கண்டு கர்ஜனை செய்தான். இராமரும் இலட்சுமணரும் அவனுடைய இரண்டு கரங்களையும் வாளினால் வெட்டி வீழ்த்தினார்கள். கவந்தனுடைய உடம்பிலிருந்து ஒர் ஒளிமயமான உருவம் விண்ணிலே நின்று இராமரைத் துதி செய்தது.

"இராமச்சந்திர மூர்த்தி என் மாயப் பிறப்பை நீக்கித் தூய உடம்பினைத் தந்தனை. உனக்கு ஒரு கோடி வணக்கம்". இராமர் அவனைப் பார்த்து, "உன் வரலாறு யாது ?" என்று கேட்டார்.

"இராகவா நான் தனு வம்சத்தில் பிறந்தவன். ஒரு முனிவருடைய சாபத்தால் அரக்கனாயினேன். இந்திரன் வஜ்ஜிரத்தால் அடித்தால் தலை உடம்புக்குள் செருகியது, அதனால் கவந்தனானேன். உன் கருணையினால் நல்லுருப் பெற்றேன். இராமச்சந்திர மூர்த்தி உன் திருவடிக்குப் பலகோடி வணக்கம். எம்பெருமானே பரந்து விரிந்த இவ்வுலகத்தில் நீங்கள் இருவருமே சீதையைத் தேடிச் கண்டுபிடிக்க இயலாது. துணையின்றி ஒரு பெரிய காரியத்தை முடிக்க முடியாது. துணை இன்றியமையாதது. இனம் இனத்துடன் சேர வேண்டும். மதங்க வனத்தில் சுக்ரீவன் என்ற வானர வீரன் இருக்கின்றான். அவன் சூரிய குமாரன். சூரிய குலத்தில் உதித்த நீயும் அவனும் ஓர் இனமாகும். எந்த வகையில் என்றால் உன்னுடைய மனைவியை இராவணன் கவர்ந்து கொண்டான். சுக்ரீவன் மனைவியை வாலி கவர்ந்து கொண்டான். மனைவியை இழந்தவனுக்குத்தான் மனைவியை இழந்த கவலை தெரியும். கடையில் உண்டவனுக்குத்தான் கடையின் உணவினால் வருந் துன்பந் தெரியும். சுக்ரீவன் நற்குண சீலன். நீ வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு அவன் மனைவியை மீட்டுக் கொடுப்பாயாக. அவன் எழுபது வெள்ளம் வானரங்களுக்குத் தலைவன். அவன் சீதையைத் தேடவும், இராவண சம்மாரத்திற்கும் உதவி செய்வான். எனவே, நீ சீதையைத் தேடுகின்ற முயற்சியை விடுத்து சுக்ரீவனை அடைவாயாக என்று கூறித்தொழுது தன் உறைவிடம் சேர்ந்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 11, 2010 3:57 am


சபரி முக்தி


ராம லட்சுமணர் பல காதங்கள் மலையுங் காடுங் கடந்து, நடந்து பம்பா நதிக்குமேல் கரையிலுள்ள மதங்காஸ்ரமத்தை அடைந்தனர். அங்கு மதங்க முனிவர் தவம் செய்த ஆசிரமத்தைக் கண்டனர்.

சபரி என்ற நரை மூதாட்டி, இராம லட்சுமணரைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள். ஆனந்தக் கண்ணீர் சொரிந்து அழுதாள். தொழுதாள்.

சபரி, மதங்க முனிவருடைய மாணவி. அவள் பல காலம் தவஞ்செய்து இராமரைக் காண வேண்டுமென்று காத்திருந்தாள். இராமருடைய வரவை முன்கூட்டியே யோகக் காட்சியால் கண்டு பலப்பல கனிகளைக் கடித்துச் சுவை பார்த்து, இராம லட்சுமணருக்குக் கனிகளைக் கொடுத்துச் விருந்து செய்தாள். இராமர், அவளது அன்புக்கு மிகவும் மகிழ்ந்து உள்ளம் நெகிழ்ந்து உருகினார்.

சுபரி இராகவனை நோக்கி, "இராமா சூரிய குமாரராகிய சுக்கீவனைத் துணையாகக் கொண்டு, சீதா தேவியைத் தேடி அவளை அடைவாயாக" என்றாள். இராம இலட்சுமணர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவள் முக்தியடைந்தாள்.

இராம லட்சுமணர் பம்பா நிதியை நோக்கிச் சென்றார்கள்.

அநுமனின் அறிமுகம்


பம்பா நதி- இராமரும் இலட்சுமணரும் சபரி வாழ்ந்த மதங்க ஆசிரமத்தைவிட்டு, சீதையைத் தேடுகின்ற தன்மையை விடுத்துச் சுக்ரீவனைத் தேடிக்கொண்டு புறப்பட்டார்கள். சபரியினுடைய ஆலோசனைப்படி சுக்ரீவனைக் கண்டு அவனுடைய துணையுடன் சீதையைக் கண்டுபிடித்து அவளை யடையலாமென்று ரிசியமூக பர்வதத்தை அடைந்தார்கள்.

ரிஸ்யம் - மான்;

மூகம் - ஊமை

அங்குள்ள மான்கள் நாம் இரைந்து ஓசையிட்டால் இங்குள்ள முனிவர்களின் தவநிலை கலையும் என்று கருதி, வாயிருந்தும் பேசாமல் ஊமைபோல் இருப்பதனால், அந்த மலை ரிசியமூகம் என்ற பெயரைப் பெற்றது.

அந்த மலைச்சாரலில் பம்பாநதி, ஞானிகள் திருவுள்ளம் போல் தெளிவாக ஓடிக் கொண்டிருந்தது. அந்த நதியில் செந்தாமரை மலர்கள் மலர்ந்து நறுமணம் வீசிக்கொண்டிருந்தன. அந்தச் சிவந்த தாமரை மலர்களில் அன்னப் பறவைகள் புகுந்தன. அக்காட்சி அன்னங்கள் இராமருடைய துயரத்தைப் பார்த்து, நாம் என் இனி வாழ வேண்டும் ? இவருடைய துன்பத்தை நம்மால் களைய முடியவில்லையே ? இறந்து போவதே நல்லது என்று எண்ணிச் செந்தாமரையாகிய அக்னியில் வீழ்வனபோல் இருந்தது.

இராம இலட்சுமணர் பம்பா நதியில் அகமர்ஷணம் ( பாபத்தைக் கெடுக்கும் மந்திரம் ) மந்திரத்தை ஓதி நீராடி ஜபதபங்களைச் செய்து அதன் கரையில் தங்கினார்கள்.

இராமர், தம்பியை நோக்கி, "தம்பி சீதை இருந்தால் என்னுடன் சேர்ந்து இந்த நதியில் நீராடி மகிழ்வாள். அவள் என்ன துன்பத்தை அனுபவிக்கிறாளோ ? தம்பி அவள் என்னை நினைந்து வருந்துவாள்" என்று கூறினார்.

இலட்சுமணர், "அண்ணா சீதாதேவி தங்களை நினைக்க மாட்டார்" என்றார்.

இதைக் கேட்ட இராமர் அதிர்ச்சியடைந்தார்.

"தம்பி உன் சொல் விசித்திரமாக இருக்கின்றதே. கற்புடைய பெண்கள் கணவனைப் பிரிந்தபோது கணவனை நினைப்பார்களே, சீதை கற்புடையவளாயிற்றே. என்னை நினைக்காமல் இருப்பாளா ?"

"அண்ணா கற்புடைய பெண்கள் தன்னைப் பிரிந்திருக்கிற போது கணவனை நினைப்பார்கள். ஆனால், அண்ணி நினைக்கமாட்டார் என்றேன். அண்ணி மகா மகா மகா பதி விரதா சிரோன்மணி. அவர் கற்புக்கு அரசி. தங்களை மறந்தால்தானே நினைப்பார்கள். என் அண்ணி கணப்பொழுதும் தங்களை மறக்கவே மாட்டார்கள். ஆகவே, நினைக்க மாட்டார்கள் என்று சொன்னேன்."

இலட்சுமணருடைய பேசுந்திறத்தைக் கண்டு இராமர் வியப்பு அடைந்தார். இராமர் சுக்ரீவனைக் காணவேண்டுமே அவன் எங்கு இருக்கின்றானோ ? அவனை எப்படிக் காண்பது ? சீதாதேவி எங்கு உறைகின்றாளோ ? என்ன துன்பத்தை நுகர்கின்றாளோ ? அவளை மீண்டும் காண முடியாதோ ? என்னை நம்பி என்னைத் தொடர்ந்து வந்த மனைவியின் துயரத்தைப் போக்கும் ஆற்றல் இல்லாத எனக்கு இந்தக் கோலமும் இனி வேண்டுமோ ? மனைவியின் துயரத்தைப் போக்காத இவனுக்கு வில் ஏன் ? என்று உலகம் பழிக்குமே. வில்லைச் சுமப்பதுடன் பழிச்சொல்லையும் சுமக்கின்றேனே.

ஒரு பெண்ணின் துயரத்தை அகற்ற மாட்டாத யான் உலக மக்களின் துயரத்தை எவ்வாறு மாற்றுவேன் ? என்று கூறி இராமர் புலம்பியழுதார். இலட்சுமணர் தேற்ற, ஒருவாறு தேறினார்.

சந்திரன் உதித்தான். சந்திர உதயத்தால் நிலம் குளிர்ந்தது, எங்கும் நலம் விளைந்தது. ஆனால், இராமருடைய உளம் குளிரவில்லை. மேலும் மேலும் வருந்தினார். இரவு முழுவதும் உறங்காமல் உள்ளம் உலைந்தார். தன் குலத்து மைந்தனுக்கு இந்தத் துன்பம் வந்ததே. நான் போய் அத்துயரை மாற்றுவேன் என்று வருவான் போல் ஆதித்தன் உதித்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 11, 2010 3:57 am

இராமரும் இலட்சுமணரும் பம்பையில் விதிப்படி நீராடி, சூரியனுக்கு அர்க்கியங் கொடுத்தார்கள், தெய்வத்தை வணங்கினார்கள்.

எழுந்தவுடன் இறைவனை வணங்க வேண்டும். ஏன் வணங்க வேண்டும். நன்றிக் கடனுக்காக வணங்க வேண்டும். வேறு எந்த உயிர்களுக்கும் இல்லாத பகுத்தறிவாகிய ஆறாவது அறிவுடன் இந்த மனிதப் பிறவியை இறைவன் நமக்குத் தந்தான். அவன் கொடுத்தான் உடம்பால் அவனை வழிபட வேண்டும்.

எழுந்தவுடன் இறைவனை வணங்குவதை வடமொழியில் சந்தியாவந்தனம் என்று கூறுவார்கள். சந்தியாவந்தனம் என்பதற்குப் பொருள், நன்றாகத் தியானித்து வணங்குவது என்பதாகும். தமிழில் காலைக்கடன் என்று கூறுவார்கள். கடனைத் திரும்பிக் கொடுக்கவில்லையானால் பாவமாகும். இறைவன் தந்த உடம்பால் அவனை வழிபடவில்லையானால் நமக்கு நன்றி கொன்ற பாவம் வரும். சந்தியாவந்தனம் என்பதைக் காட்டிலும் காலைக்கடன் என்பது பொருட்செறிவு உள்ளதாகும்.

நடையினாலுயர் நாயகனாகிய இராமச்சந்திர மூர்த்தி வில்லை யெடுத்துக்கொண்டு சுக்ரீவனைத் தேடிக் கொண்டு நடக்கத் தொடங்கினார்.

அநுமன் சந்திப்பு- அடங்காமையே ஒருவடிவாகிய வாலி தன் தம்பியாகிய சுக்ரீவனைப் பலமுறை கொல்லுவதற்கு முயன்றான். சுக்ரீவனுடைய மனைவியாகிய "ருமா" என்ற பெண்மணியைக் கவர்ந்து கொண்டான். இந்த ரிசயமூக மலைக்கு வாலி வருவானாயின் அவன் தலை ஆயிரம் துண்டாக வெடித்துவிடும். இது மதங்க முனிவருடைய சாபம். அந்தச் சாபத்துக்கு அஞ்சி வாலி அம்மலைக்கு வருவதில்லை. தமையனுடைய கொடுமைக்கு அஞ்சிய சுக்ரீவன் அநுமன் முதலிய முப்பத்திரண்டு வானர வீரருடன் அம்மலையில் வாழ்வானாயினான்.

சுக்ரீவன் தன்னைக் கொல்லும் பொருட்டு வாலியினால் அனுப்பப்பட்டு இவர்கள் வருகின்றார்களோ என்று இராம இலட்சுமணரைக் கண்டு அஞ்சினான், நடுங்கினான். மிகவும் ஓடுங்கினான். சிங்கத்தைக் கண்ட குறுநரிபோல் ஓடி ஒரு பாறையின் கீழ் ஒளிந்து கொண்டான். அவனுக்குத் துணை செய்கின்ற வானர வீர்கள் அவனுக்கு முன்னரே சென்று ஒளிந்து கொண்டார்கள்.

ஒரு மன்னவன் தன் பரிவாரங்களுடன் கானகம் போனான். ஒரு புலி துரத்திக் கொண்டு வந்தது. அப்பரிவாரங்களில் ஒருவன் நீங்கள் புலிக்குப் பயப்பட வேண்டாம். நான் தரையில் படுத்துக் கொள்வேன் புலிக்குப் பயந்தவர்களெல்லாம் என் மேல் படுத்துக் கொள்ளுங்கள் என்றானாம். புலி மேலே இருப்பவனைத்தானே அடித்துக் கொல்லும் ? இதுபோல் இருந்தனர் சுக்ரீவனின் துணைவர்கள்.

இராம இலட்சுமணரைக் கண்டு அநுமன் அஞ்சவில்லை. அறிவுடையார் ஒன்றுக்கும் அஞ்சமாட்டார்கள். அஞ்சுவதில்லை, அஞ்ச வருவதுமில்லை என்பார் அப்பர்.

ஆகவே, அறிவுடையார் எதற்கும் அஞ்சமாட்டார்கள். ஆனால், அஞ்சாதவர்கள் எல்லாம் அறிவுடையவர்கள் அல்லர். பால் வெண்மையாக இருக்கும். ஆனால், வெண்மையாக இருப்பதெல்லாம் பால் ஆகா.

ஆஞ்சநேயர் சுக்ரீவனைப் பார்த்து, "நான் சென்று இங்கு வருகின்றவர்கள் யார் என்று அறிந்து வருவேன்" என்று கூறி விட்டு மரங்களில் மறைந்து இராம இலட்சுமணரைக் கூர்ந்து நோக்குவாராயினார்.

இவர்கள் தேவகுலத்துக்கே தலைவராக இருக்க வேண்டும். ஆனால், தேவருக்குத் தலைவர் பிரமன், திருமால், சிவன் என்ற மூவராயிற்றே. இவரகள் இருவராக இருக்கின்றார்கள். இவர்களை இன்னார் என்று எளிதாகக் கண்டுக்கொள்ள இயலாது. இவர்கள் எல்லாம் செய்ய வல்லவர்கள். இவர்களால் ஆகாத காரியம் ஒன்றும் இருக்க முடியாது. இவர்களுடைய பார்வையினால் ஏதோ ஒரு பொருளை நாடி வருவதாகத் தெரிகிறது. மிக உயர்ந்த பொருளைத் தேடி வருகின்றார்கள். தேவர்களுக்குக் கால் நிலம் தோயாது. இவர்களுக்குக் கால் நிலம் தோய்வதால் இவர்கள் தேவர்கள் அல்லர், மனிதர் களாகத்தான் இருக்க வேண்டும்.

தருமம், கருணை பெருந்தன்மை, மாண்பு, பண்பு முதலிய குணநலன்கள் அனைத்தும் ஒரு வடிவாக இவர்கள் காட்சி தருகின்றார்கள். இவர்கள் தம்மிடமிருந்த மிக்க அரிய பொருள் காணாமல் போக, அதனை இவர்கள் தேடி வருகின்றார்கள் என்பது இவர்கள் பார்வையினால் விளங்குகிறது.

இவர்களிடத்து இல்லாதது சினம் ஒன்றுதான். பொறுமையே ஒரு வடிவாக வந்த சாந்த சீலர்கள். இவர்களுடைய முகத்தில் அருள் வெள்ளம் வழிகின்றது. கண்களில் கருணை பொழிகின்றது. ஒழுக்கமும் பேராற்றலும் படைத்தவர்களாக இருக்கின்றார்கள். மன்மதனும் நாணக்கூடிய பேரழகு படைத்தவர்களாக இருக்கின்றார்கள். ஆ ஆ சிங்கம், புலி, கரடி காண்டாமிருகம் முதலிய விலங்குகள் அதன்தன் கன்றுகளைக் கண்டு காதல் செய்வது போல, கொடிய விலங்குகள் வால்களை அசைத்துக் கொண்டு இவர்களைக் கண்ட மாத்திரத்தில் விலங்குகள் கொடுமை மாறி அடிமையாக அன்பு செய்கின்றன. இவர்களின் பாதங்கள் மண்ணில் தோய்கின்ற பொழுது கல்லும் முள்ளும் மலர்களைப் போல் குழைந்து விடுகின்றன. இத்தகைய அதிசயம் நான் எங்குப் பார்க்க முடியும் ?

மக்களுக்குத் தீமை செய்யும் பேய்களும் இவர்களை கண்டு உள்ளம் உருகி நன்மை செய்கின்றன. வானளாவிய மரங்களும் இவர்களைக் கண்டு சாய்ந்து சாய்ந்து தொழுகின்றன. இவர்கள் தங்கள் அருள் ஆற்றலால் சராசரங்களை எல்லாம் தன்வசப்படுத்துகின்றனர். மயில் முதல் பறவை யினங்கள் இவர்கள்மீது வெயில்படா வண்ணம் நீண்ட சிறகுகளை விரித்து நிழல் தருகின்றன. மேகங்கள் இவர்கள் மீது தண்ணீர்த் திவலைகளைச் சிந்திக் குளிர்ச்சியைத் தருகின்றன. அம்மம்மா இவர்கள் அருள் ஆற்றல்தான் என்னே என் உள்ளம் நீறாய் உருகின்றதோ

இப்படி எண்ணி இராம இலட்சுமணருக்கு முன் சென்று அநுமன் அன்புடன் அஞ்சலி செய்து நின்றார்.

இராமர் அநுமனைப் பார்த்து, "நற்குணம் அமைந்த நம்பியே நீ யார் ?" என்று வினாவினார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 11, 2010 3:58 am

அநுமன் கூறுகின்றார், "பயிர் தழைக்க வருகின்ற மஞ்சுபோல் உயிர்தழைக்க வந்த திருமேனியை உடையவரே பெண்களை உற்றுப்பார்க்காத, ஒழுக்கமுள்ள கண்களையுடையவரே சிறியேனுடைய தந்தை வாயுதேவன், என் தாய் அஞ்சனா தேவி, கருணையங்கடலே நான் இதோ இம்மலையில் வாழும் வானர வீரனாகிய சுக்ரீவனுடைய பணியாளன். தங்களை வரவேற்கும் பொருட்டு வந்திருக்கின்றேன். உங்கள் வரவு நல்வரவாகுக .. .." என்றார்.

இராமர், "ஐயனே அந்தச் சுக்ரீவனைத்தான் நாங்கள் தேடிக் கொண்டு வருகின்றோம். அந்தச் சுக்ரீவன் எங்கிருக்கின்றான். உடனே, அவனைக் காட்டு. நாங்கள் அவனைப் பார்க்க வேண்டும்" என்றார்.

அநுமார் சிந்திக்கின்றார். "இவர்கள் வாலியினால் அனுப்பப்பட்டுத் தன்னைக் கொல்ல வருகின்றார்களோ என்று அநுமானிக்கின்றார். இப்போது இவர்கள் சுக்ரீவனைத் தேடி வருவதாகச் சொல்கின்றார்கள். வாலியினால் அனுப்பப்பட்டு வந்திருப்பார்களாயின் இவர்கள் திருமுகத்திலே கோபக்குறி இருக்க வேண்டும். கொடுமை நிலவ வேண்டும். ஒருகால் சுக்ரீவனுடைய கருத்தின்படி இவர்கள் வாலியினால் அனுப்பப்பட்டுச் சுக்ரீவனைக் கொல்லத்தான் வந்தவர்களாயின் நாம் சுக்ரீவனைக் காட்டினால். இவர்கள் சுக்ரீவனைக் கொன்று விடுவார்களாயின், அது பெருந்தீமையாக விளைந்துவிடுமே" என்று எண்ணினார்.

இராமரைப் பார்த்து "எம்பெருமானே பேராற்றலும் பெருங்கருணையும் படைத்த தாங்கள் சுக்ரீவனைத் தேடிக் கொண்டு வருவீர்களாயின் அவனும் அவன் குலமும் உய்யும். வாய்க்கால் மகாநதியை நோக்கிச் செல்லவேண்டும். மகாநதி வாய்க்காலை நோக்கிச் செல்லக்கூடாது. நீங்கள் மகாநதி. சுக்ரீவன் வாய்க்கால். நீங்கள் இங்கே இருங்கள். நான் சென்று என் தலைவனாகிய சுக்ரீவனை அழைத்துக் கொண்டு வருவேன்" என்று கூறி இராமருடைய திருமுகத்தை உற்று நோக்கினார்.

ஒரு வியாபாரி துணியெடுத்து, வாங்க வந்தவனுக்குக் காட்டி விலை கூறி அவன் முகத்தை உற்றுப் பார்ப்பதுபோல் இருந்தது இந்த நிகழ்ச்சி. இராமர் முகத்தில் எந்த மாறுபாடும் இல்லை. ஒரு சந்தன மரத்தை ஒடித்து இராமருக்கு முன் இட்டு அதில் அமருமாறு செய்தார். இவர்கள் யாரென்று உணர முடியவில்லையே என்றும், மிகவும் தகுதி வாய்ந்தவர்களை நீங்கள் யாரென்று கேட்பது முறையல்லவே என்று கருதினார்.

"பெருமானே என் தலைவனை நான் அழைத்து வருவேன். யார் அழைப்பதாக அவரிடம் கூற வேண்டும் ? தங்களை யாரென்று அவரிடத்தில் தெரிவிக்க வேண்டும் ? எனக்கு இதனைக் கட்டளையிடுங்கள்" என்று வணக்கத்துடன் கூறினார்.

இராமர் தங்களை யாரென்று அறிந்து கொள்ளும் பொருட்டு அநுமான் பேசும் இனிய நுண்ணிய சொற்களைக் அகமிக மகிழ்ந்தார்.

"தம்பி இலட்சுமணா இந்த வானரவீரன் கல்லாத கலைகளே இல்லை என்பது இவன் சொல்லாலே விளங்குகின்றது. இவன் சொல்லின் செல்வனாக விளங்குகிறான். இவன் கலைமகளை நாவில் வைத்திருக்கின்ற பிரமதேவனா ? அல்லது சிவபெருமானா ? நம்மை நேரடியாக யாரென்று கேளாமல் என் தலைவனுக்கு உங்களை யாரென்று சொல்லுவேன் என்று கேட்கின்ற சொல் திறம் மிகவும் பாராட்டுக்குரியது".

இலட்சுமணர், "அன்பனே சூரியகுலத் தோன்றலாகப் பத்து ரதங்களை வென்று உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆளுகின்ற தசரதச் சக்ரவர்த்தியின் திருமைந்தர் இவர். இராமர் என்றும் பெயரை உடையவர். சிறிய தாயாரின் சொல்லுக்கு இணங்கித் தன் அரசச் செல்வத்தைத் தன் தம்பியாகிய பரதனுக்கு வழங்கிவிட்டுத் தவம் புரியக் கானகம் வந்திருக்கின்றார். நான் இவருடைய பணியாளன்."

"தம்பி என்னும் படிக்கு அன்று, அடியாரின் ஏகுதி" என்று சுமத்திரை இலட்சுமணரை நோக்கிக் கூறியிருப்பதனால் இங்கு இலட்சுமணர் தம்மைத் தம்பி என்று சொல்லிக் கொள்ளாமல் அடியவன் என்று அடக்கத்துடன் கூறினார். ஆனால், மாருதி இராமருடைய தம்பி இலட்சுமணர் என்று தெரிந்து கொண்டார்.

மாருதி தாம்போய், தம் தலைவனை அழைத்து வருவதாகக் கூறிவிட்டுச் சுக்ரீவனிடம் வந்தார். தனக்கு என்ன இடர் விளையுமோ என்று துடிதுடித்திருக்கின்ற சுக்ரீவனிடம போய், வாலிக்குக் காலன் வந்திருக்கின்றார் என்று கூறினார். சுக்ரீவன் வாலிக்கு அஞ்சி ஒளிந்து அங்கு வாழுகின்றான். அவனுக்கு இராமன் வந்தார் என்று கூறினால் அவனது அச்சம் அகலாது.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்ற திருக்குறளின் படி சுக்ரீவனுக்கு யாரிடம் அச்சம் அகாலதிருக்கின்றதோ அவனுக்கு எமன் வந்தான் என்று கூறும் திறம் மிகமிக உயர்வானது.

"சுக்ரீவா உன்னுடைய துன்பம் நீங்கி இன்பம் விளையப் போகின்றது. இராமர் வாலியைக் கொன்று உனக்க வாழ்வு தருவார். நராயணராகிய பரம்பொருளே இராமராக ஆதரித்திருக்கின்றார். நீதி நிறைந்தவர். விசவாமித்திரர் தந்த அளவில்லாத தெய்வப் படைக்கலன்கள் உடையவர். தாடகையையும் சபாகுவையும் ஒரே பாணத்தால் வதைத்தவர். அகலிகை;குக் கல்லுரு அகற்றி நல்லுரு தந்தவர். அளவில்லாத கற்புடைய சிறிய தாயராகிய கைகேயியின் கட்டனைக்கிணங்கித் தன் அரச பதவியைத் தம்பிக்கு ஈந்தவர். பரசுராமனை ஒரு விநாடியில் வென்றவர். விராதனைக் கொன்றவர், அரனிடம் வரம் பெற்ற கரன் முதலிய அரக்கர்களை எளிதாகக் கொன்றவர். எனவே, இராமருடைய தொடர்பினால் உனக்கு வாழ்வும் வளமும் உண்டாகும்" என்று அநுமார் கூறினார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 11:37 pm

அண்ணியின் அணிகலன்கள்

சுக்ரீவன் தனது முதலமைச்சராகிய அநுமனுடைய அமுத வசனங்களைக் கேட்டு அக மிக மகிழ்ந்தான். தொலைவில் நின்று பகவானை உற்ற நோக்கினான். அவருடைய திருமேனியையும் திருவருட்பொலிவையும் கண்டு அப்படியே நிலைத்து நின்றுவிட்டான். கண்கள் இமை கொட்டாமல் கண்டு களித்தான். பிரமதேவன் படைத்த உலகங்களிலே உள்ள அத்தனை ஆன்மாக்களும் செய்யும் புண்ணியம் முழுவதும் திரண்டு இரண்டு வடிவங்களாக வந்திருக்கின்றன போலும் என்று எண்ணி இறும்பூதடைந்தான்.

பெருமானை அணுகி அவரை அஞ்சலி செய்தான். இராமச்சந்திரமூர்த்தி அவனைத் தழுவி அக மகிழ்ந்தார். இராமனும் சுக்ரீவனும் இருந்த காட்சி, முன் செய்த தவமும் முயற்சியும் ஒருங்கு இணைந்ததுபோல் இருந்தது. இராமர் சூரிய குலத்து மன்னர். இவன் சூரிய குமாரன். இனம் இனத்தோடு சேர்ந்தது அன்றியும் சுக்ரீவன் மனைவியை வாலி கவரந்துகொண்டான். இராம பிரான் மனைவியை இராவணன் கவர்ந்துகொண்டான். மனைவியைப் பிரிந்து வாழ்கின்றவர்களுக்குத்தான் மனைவியைப் பிரிந்த கவலை மீதியும். ஆதலால், இந்த இருவரும் ஒன்றுபட்டிருந்தனர்.

சுக்ரீவன் இராமரை நோக்கி, "கருணைக்கடலே! தங்களை நான் துணையாகப் பெற்றேன். நான் பெருந்தவம் செய்திருக்கின்றேன். ஆதலால், தேவரீருடைய துணை எனக்குக் கிடைத்தது. இந்த வகையில் என்னைப்போல் தவம் செய்தவர் எவரும் இல்லை" என்றான்.

இராமர், "அன்பனே! மதங்காசிரமத்தில் சபரி என்ற சகோதரி உன்னுடைய குணநலங்களை எனக்கு உரைத்து, உன்னையடையுமாறு கூறினாள். நான் உன்னை நாடி வந்திருக்கின்றேன்" என்றார்.

சுக்ரீவன், "ஐயனே! என் அண்ணனாகிய வாலி குற்றஞ் செய்யாத என்னை அடித்து, உதைத்து நொறுக்கி, ஓடஓட விரட்டி, என்னைத் துன்புறுத்திக் கொல்ல முயற்சி செய்தான். இம்மலைக்கு வந்தால் என் அண்ணன் தலை ஆயிரம் துண்டாக வெடிக்கும். இது மதங்க முனிவரின் சாபம். ஆதலால், இம்மலையில் சுகம் இன்றி வாழுகின்றேன். என்னைக் காப்பது தங்கள் கடன்" என்றான்.

இராமச்சந்திர மூர்த்தி அவனைக் கட்டித்தழுவி, "சுக்ரீவா! இன்று முதல் நீ எனக்கு தம்பி, தசரதச் சக்ரவர்த்திக்கு ஆறு புதல்வர்கள். உனக்கு உற்றவர் எனக்கு உற்றார். உனக்கு பகைவர்கள் எனக்குப் பகைவர்கள் உனக்குள்ள இன்ப துன்பங்கள் எனக்கும் உள்ளனவானும். இது உண்மை" என்று கூறி ஆறுதல் செய்தார்.

இவ்வாறு இராமர் சுக்ரீவனுக்கு அபயந் தந்தவுடன் வானவர் மலர்மழை பொழிந்தார்கள். அநுமார் புளகாங்கிதம் அடைந்தார். வாநர வீரர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்கள். எல்லாரும் சுக்ரீவன் இருக்கும் குகைக்குச் சென்றார்கள்.

சுக்ரீவன் தன் இருப்பிடத்துக்கு வந்த இராமருக்கு ஆசனந்தந்து அடி வணங்கி, பாக்கு மடலில் கொம்புத் தேனைவிட்டு மா, பலா, வாழை, முதலிய கனிகளைத் திருத்தி எம்பெருமானுக்கு உவகையுடன் தந்து உண்பித்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 11:38 pm

இராமர் எண்ணுகின்றார். இல்லற நெறியில் மனைவியோடு வாழ்கின்றவன் விருந்தினருக்கு மனைவியைக் கொண்டு உணவு படைக்க வேண்டும். அதுதான் விதி. மனைவி இருக்க ஆண்கள் படைப்பது விதியாகாது. அங்கே சுக்ரீவனின் மனைவி, உணவு படைக்கவில்லையே என்று கருதி, "தம்பி! மனை வாழ்வுக்குத் துணைசெய்யும் மனைவியை நீயும் பிரிந்திருக்கின்றனையோ?" என்று கேட்டார்.

இராமருடைய இன்னுரையைக் கேட்ட சுக்ரீவன் கண் கலங்கி நின்றான். சத்திய வசனத்தையுடைய அநுமார் கூறு வாராயினார்!

"எம்பெருமானே! வானுலகில் நிகழ்ந்த ஒரு விழாவில் ஆதித்தனுடைய தேர்ப்பாகனாகிய அருணபகவான் பெண் குரங்கா வடிவெடுத்தனன். அப்பொழுது அப்பெண் குரங்கை இந்திரன் மருவிப் பிறந்தவன் வாலி. அப்பெண் குரங்கை ஆதித்தன் மருவிப் பிறந்தவன் சுக்ரீவன். வாலியும் சுக்ரீவனும் சகோதரர்களாய் எழுபது வெள்ளம் வாநர சேனைகளுடன் கிட்கிந்தையை அரசு புரிந்து வந்தார்கள். வாலியின் மனைவி தாரை. சுக்ரீவன் மனைவி ருமாதேவி.

திருமாலின் அம்சமாகிய உபேந்திரன் அங்கதனாக வந்து பிறந்தான். வாலி அளவில்லாத வலிமையை உடையவன். தன்னை எதிர்த்துப் போர் புரிபவரின் வலிமையில் பாதி வலிமை அவன்பால் எய்தும். இது சிவபெருமான் கொடுத்த வரம். தேவரும் அசுரர்களும் பாற்கடலைப் பலநாள் கடைந்ததும் அமிர்தம் தோன்றாமையால் வருந்தினார்கள். சிவபூiஜ செய்யும் பொருட்டு அங்கே சென்ற வாலி ஒருவனே பாற்கடலைக் கடைந்து கடைந்து அமிர்தம் தோன்றுமாறு செய்தான்.

ஆதிசேஷன் கிடந்து தாங்கும் உலகை, இவன் நடந்து தாங்குவான். அவனுடைய மார்பில் முருகனுடைய வேலும் செல்லாது, அவனுடைய வால் செல்லாத இடத்தில் மட்டும், இராவணனின் செங்கோல் செல்லும்..

ஒரு சமயம் மாயாவி என்ற கொடிய அரக்கன் வாலியிடம் போர் செய்து தோற்று ஒரு பிலத்துவாரத்தில் ஒளிந்து கொண்டான். அவனைத் துரத்திக் கொண்டு வாலியும் பிலத்துவாரத்தின் உள்ளே சென்றான். பிலத்துவாரத்தினுள் வாலியும் மாயாவியும் இருபத்தெட்டு மாதங்கள் போர் புரிந்தார்கள். அண்ணனுக்குத் துணை செய்யச் சுக்ரீவனும் பிலத்துவாரத்துக்குள் நுழைய முயன்றான். வாநர வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். மாயாவியை வாலி கொன்றான். அவனது உதிரம் பிலத்தின் முகப்பில் கொப்பளித்து வந்தது. அதைக் கண்டு அஞ்சிய வாநரர்கள், சிறு சிறு குன்றுகளைக் கொண்டு வந்து பிலத்துவார முகப்பை அடைத்துச் சுக்ரீவனைக் கொண்டுபோய் அரசனாக முடி சூட்டினார்கள். சுக்ரீவன் பலமுறை மறுத்தும் வாநரர்கள் கேட்கவில்லை.

வாலி மாயாவியை வதைத்துவிட்டு முகப்பில் அடைத்திருந்த குன்றுகளைக் காலால் உதைத்துத் துகளாக்கி, இதைச் செய்தவன் சுக்ரீவன் என்று கருதி, அவனை அடித்து இடர்ப்படுத்தினான். சுக்ரீவன் வாலியின் காலில் வீழ்ந்து அண்ணா! என்னைக் கோபிக்காதே. இதை நான் செய்தேனில்லை. தாங்கள் இருக்க நான் அரசு புரிவேனா? தலையிருக்க வால் ஆடுமா? நான் உனக்கு என்றும் அடிமை என்று கூறியும் வாலி சினந்தணிந்தானில்லை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 11:38 pm

எட்டுத் திக்குகளிலும் உதிரம் சிந்த விரட்டி விரட்டி அடித்தான். இம்மலைக்கு வந்து உயிர் தப்பினான்.

சுக்ரீவனுடைய மனைவி ருமாதேவியையும் வாலி தனக்கு மனைவியாக்கிக் களங்கப்படுத்திக் கொண்டான்."

தம்பிக்குத் தன் அரசைக் கொடுத்த தயாநிதியாகிய இராமர் இதனை கேட்டுப் பொறுப்பாரோ? அவரது கண்கள் சிவந்தன. மணியதரம் துடித்தது.

"சுக்ரீவா! வாலி இருக்குமிடம் காட்டு. அவனைக் கொன்று உனக்கு முடி சூட்டுவேன்" என்று கூறினார்.

வாலியை இராமபிரானால் கொல்ல முடியுமா என்று சுக்ரீவன் ஐயுற்றான். அநுமார் சுக்ரீவனைத் தனியாக அழைத்துக் கொண்டுபோய், "மன்னவனே! அளவில்லாத வலிமையுடைய வாலியை இராமர் கொல்லக் கடவரோ என்று நீ சந்தேகப்படுகின்றனை. வானளாவிய மராமரங்களை இராமருடைய கணை தொளைக்குமானால் வாலியின் மார்பையும் துளைக்கும். நாம் இதனைச் சோதித்து அறியலாம்" என்று கூறினார்.

இருவரும் சேர்ந்து போகின்ற வழியில் வானளாவிய ஏழு மரங்கள் நின்றன. கல்லினும் இரும்பினும் வலியதாக இருந்தன.

சுக்ரீவன் இராமரை நோக்கி, இந்த மரங்களைத் தொளைக்க இயலுமோ? என்று வினவினான். இராமர்;, நமது ஆற்றலை இவன் சோதிக்க எண்ணுகிறான் என்று எண்ணிக் கோதண்டத்தை எடுத்த எட்டுச்திசையும் செவிடுபட நாணொலி உண்டாக்கினார். அதைக்கேட்டு வாநரங்களும் வானவர்களும் எட்டுத் திக்கிலும் ஓடி ஒளிந்தார்கள். இலட்சுமணர் ஒருவர்தான் அஞ்சாமல் நின்றார். மற்றவர்கள் உடலும் குடலும் நடுங்க ஓடினார்கள்.

இரகுநாதர் சிறந்த பாணத்தை ஏவினார். அது ஏழு மரங்களையும் துளைக்க, அந்த ஏழு மரங்களும் வேரோடு வீழ்ந்தன. ஏழு என்ற எண்ணிக்கையுடைய ஏழு முனிவர்களும், ஏழு கடல்களும், ஏழு மாதாக்களும், ஏழு மேகங்களும், ஏழு உலகங்களுடம் ஏழு மலைகளும், ஏழு குதிரைகளும் அஞ்சி ஏழு என்ற எண்ணிக்கையில் இராமர் பாணம் தொளைக்குமோ என்று நடுங்கி நின்றன.

இதைக்கண்ட சுக்ரீவன், ஒரு மரத்தைத் தொளைப்பதே அரிது. ஒரே பாணத்தால் ஏழு மரங்களையும் தொளைத்தார் என்றால்.. . இது மிகவும் பாராட்டுக்குரியது. இந்த மரங்களைத் தொளைத்து கணை வாலியின் மார்பையும் தொளைக்கும் என்று ஐயம் தீர்ந்தான். இராமரை துதி செய்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 11:39 pm

துந்துபி

பின்னர் அவர்கள் போகிற வழியில் துந்துபி என்ற எலும்பு மலைபோல் கிடந்தது. இராமர், "சுக்ரீவா! இது என்ன எலும்பு?" என்று கேட்டார்.

சுக்ரீவன், "ஐயனே! துந்துபி என்ற கொடிய அரக்கன் மலைபோன்ற கரிய பெரிய வடிவை உடையவன், வாலியிடம் போருக்கு வந்தான். வாலி அவனுடன் கடும்போர் புரிந்து அவனைக் கொன்றான். அவனடைய உதிரம் எங்கும் சிந்தின அவனுடைய எலும்பே இது" என்றான்.

இராமர் இலட்சுமணரைப் பார்த்து, "தம்பி! நீ இதனை அகற்று" என்றார்.

இலட்சுமணர் கால் பெருவிரல் உந்தினார். அந்தத் துந்துபியின் எலும்பு பிரமலோகம் வரை சென்று மீண்டும் மண்ணுலகில் வீழ்ந்தது. சுக்ரீவன் இலட்சுமணருடைய பேராற்றலைக் கண்டு. இவர் இராமபிரானுக்கு இளையான், ஆற்றில் இளையான்.. . என்று மதித்து துதித்து மகிழ்ந்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 11:39 pm

அணிகலன் காணுதல்

இராமபிரான் தம்முடைய அன்பர்களுடன் ஒரு சோலையில் அமைதியாக அமர்ந்தார். அப்பொழுது சுக்ரீவன் இரகு நாயகனை வணங்கி, "ஐயனே! நாங்கள் இந்த மலையின் உச்சியில் ஒரு சமயம் இருக்கும் பொழுது இராவணன் ஒரு பெண்மணியைக் கவர்ந்து செல்வதைக் கண்டோம். அந்தப் பெண்மணி நாங்கள் தூதுவர்களாகத் தங்களைச் சந்திப்போம் என்று கருதியோ, யாதோ தன் அணிகலன்களைக் கழற்றி கண்ணீர்த் துளிகளோடு எங்களை நோக்கி விட்டெறிந்தாள். அந்த அணிகலன்களை நாங்கள் பாதுகாவலாக வைத்திருக்கின்றேறோம். எம்பெருமானே! அதனைக் கொண்டு வந்து காட்டுவேன். அது அம்மையின் அணிகலன்களா என்று பாருங்கள்" என்று கூறிச், சீதாதேவியின் அணிகலன்களைக் கொண்டுவந்து பெருமான் திருமுன் வைத்தான்.

இராமர் அந்த அணிகலன் பொதியை அவிழ்த்துக் கண்ணுற்றார். அவையனைத்தும் தேவியின் அணிகலன்கள். இவை அத்திரி முனிவரின் அருந்தவப் பத்தினியாகிய அநுசூயை தேவிக்கு தந்தவையாகும்.

இராமர் அவற்றைக் கண்டு கண்ணீர் வடித்தார், உள்ளம் துடித்தார்.

"தம்பீ! இலட்சுமணா இந்தத் தலையில் அணியும் நவரத்னப் பதக்கம் உன் அண்ணியினுடைதுதானே பார்?"

"அண்ணா, இது எனக்குத் தெரியவில்லை "

"தம்பீ! இந்தத் தோடு உன் அண்ணியனுடையதுதானே? "

"தெரியவில்லை அண்ணா "

"தம்பீ! இந்த மூக்குத்தி உன் அண்ணியினுடையதுதானே? "

"தெரியவில்லை அண்ணா "

"தம்பீ! இந்தக் கண்டமாலை உன் அண்ணியினுடையது தானே? "

"தெரியவில்லை அண்ணா "

"தம்பீ! இந்த வளையல்கள் உன் அண்ணியினுடையவை தானே! "

"தெரியவில்லை அண்ணா "

"தம்பீ! இந்த ஒட்டியாணம் உன் அண்ணியினுடையது தானே! "

"தெரியவில்லை அண்ணா "

"தம்பீ! இலட்சுமணா! இந்தக் காலாழி உன் அண்ணியினுடையதுதானே? "

"அண்ணா! இது என் அண்ணியினுடையதுதான் .. .. சந்தேகமில்லை" என்றார்.

"தம்பீ! இத்தனை அணிகலன்களுக்கும் அடையாளம் தெரியவில்லையே? இந்த ஒன்றுக்கு மட்டும் எப்படி அடையாளம் தெரிந்தது?" என்று கேட்டார்.

"அண்ணா! இந்தப் பதினான்கு ஆண்டுகளிலும் தேவரீருக்கும் என் தாய் சீதாதேவிக்கும் பாத பூiஜ செய்யும் பொழுது பாதந் தவிர வேறு திருமேனி அங்கங்களைப் பார்த்தேனில்லை. அதனால், ஏனைய அணிகலன்களுக்கும் அடையாளந் தெரியவில்லை. காலாழிக்கு மட்டும் அடையாளந் தெரிந்தது. "

இந்த வசனத்தைச் சுக்ரீவன் முதலியோர் கேட்டு, இவரல்லவா தம்பி, இப்படி இருந்தால்தானே இருக்கலாம் நம்பி, இவர் நற்குண நம்பி. ஒழுக்கத்தின் தங்கக் கம்பி என்று பாராட்டினார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 11:40 pm

இராமர், "ஆதித்தன் மகனே! அருமை நண்பனே! சீதை துன்பத்தால் துள்ளித் துடித்து, இந்த நகைகளை முடித்து உங்கள் பால் எறிந்தனளே, இதைவிடத் துன்பம் வேறு எனக்கு உண்டா? கற்புடைய பெண்கள் கணவனை இழந்தபின் அணிகலன்களைக் கழற்றி எறிவார்கள். நான் இருக்கவே சீதை அணிகலன்களைக் கழற்றி எறிந்தனளே. இதனால், நான் மாண்டேனா, இதனால் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் உள்ளம் உலைகின்றது. "

"சுக்ரீவா! என்னுடைய முன்னோர்களாகிய சகரர்கள் கடலைத் தோண்டினார்கள். அதனால், அது சாகரம் என்று பேர் பெற்றது.

என் குலத்து மூதாதையாராகிய பகீரதன் விண்ணிலிருந்து கங்கா நதியை மண்ணுலகிற்குக் கொண்டு வந்தார். கங்கை பாகீரதி என்று பேர் பெற்றாள்.

என் தந்தையாகிய தசரதர் சம்பராசூரனைக் கொன்று இந்திரனுக்குப் பொன்னுலகை வழங்கினார்.

இத்தகைய அரிய பெரிய ஆதித்தன் குலத்தில் பிறந்த நான் தாலி கட்டிய மனைவியின் துன்பத்தைக் களையாமல் வில்லையும் பழிச் சொல்லையும் தூக்கிக் கொண்டு அலைகின்றேன். என்று பலவாறாகப் புலம்பி அழுதார்.

அநுமர் எம்பெருமானைத் தொழுது நீங்கள் வருந்தாதீரகள். வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு முடிசூட்டி விட்டால், எழுது வெள்ளம் வாநரங்களும் நம் வசமாகும். நாம் சீதையைத் தேடி இராவணனைக் கொன்று, சீதையைச் சிறை மீட்கலாம். வாலி வதம் நாளை செய்யலாம் என்றார் எல்லாரும் இளைப்பாறினார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக