புதிய பதிவுகள்
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10 
21 Posts - 91%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10 
2 Posts - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10 
64 Posts - 76%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10 
4 Posts - 5%
Rutu
உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10 
3 Posts - 4%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10 
3 Posts - 4%
prajai
உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10 
2 Posts - 2%
Jenila
உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10 
1 Post - 1%
manikavi
உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 21 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 21 of 81 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 51 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 12 Nov 2013 - 16:35

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 21 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 5 Jun 2014 - 6:17

இந்தோனேசியாவில் கட்டிடம் இடிந்து 5 பேர் பலி

இந்தோனேசியாவில் கட்டுமானப்பணி நடந்து வந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவில் உள்ள கிழக்கு கலிமண்டன் மாகாணத்தில் உளள் சமரிந்தா நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்று ஷின்குவா பத்திரிகை தெரிவித்துள்ளது.

அடுக்குமாடி கட்டிடப்பணி நடந்து கொண்டிருக்கும்போது 3 மாடிகள் திடீரென இடிந்து விழுந்ததாகவும், இதில் 4 பேர் பலியானதாகவும், படுகாயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து நடைபெற்றபொழுது சம்பவ இடத்தில் இருந்த 65 பேர் எந்த காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.



உலகச் செய்திகள்!  - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 5 Jun 2014 - 6:19

தொலைந்து போன லாட்டரி சீட்டை கண்டறிந்து ரூ.300 கோடி பரிசு பெற்ற தம்பதிகள்

ரூ.300 கோடி லாட்டரி சீட்டை தொலைத்த தம்பதி கடைசி நேரத்தில் பரிசு தொகையை பெற்றனர்.

நைஜீரியாவை சேர்ந்தவர் ஹகீம்நோசிரு. இவரது மனைவி அபியோலா. இவர்கள் கனடாவில் அன்டாரியா என்ற இடத்தில் தங்கியுள்ளனர். அங்கு ரூ.300 கோடி பரிசு தொகைக்கான லாட்டரி சீட்டை வாங்கினர்.

அந்த சீட்டை அபியோலா தனது பர்சில் வைத்திருந்தார். இதற்கிடையே லாட்டரி சீட்டு இருந்த அந்த பர்ஸ் தொலைந்து விட்டது.

ஆனால் அந்த லாட்டரி சீட்டுக்கு தான் பரிசு தொகை விழுந்தது. பரிசு விழுந்ததும் அதை பெற முடியாததால் தம்பதி சோகம் அடைந்தனர்.

அந்த லாட்டரி சீட்டை வீடு முழுவதும் தேடிப் பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் ‘பர்ஸ்’ காணவில்லை என போலீசில் புகார் செய்தனர்.

கடந்த மாதம் 1–ந்தேதி தான் பரிசு தொகையை பெற கடைசி நாளாகும். இந்த நிலையில் அவர்கள் வழக்கமாக செல்லும் தேவாலயத்துக்கு சென்றனர். அங்கு ஒரு பகுதியில் காணாமல் போன பர்ஸ் பொருட்களுடன் கிடந்தது.

இதனால் ஆச்சரியம் அடைந்த அவர்கள் தொலைந்து போன தங்களது பர்சை எடுத்து அதை திறந்து பார்த்தனர். உள்ளே அவர்களது லாட்டரி சீட்டு இருந்தது.

மகிழ்ச்சி அடைந்த அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு சென்று தங்களது புகாரை வாபஸ் பெற்றனர். பிறகு கடைசி நேரத்தில் பரபரப்புடன் ரூ.300 கோடி பரிசு தொகையை பெற்றனர்.

அதன் பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பரிசு தொகையை கொண்டு உலகம் முழுவதும் சுற்றி வர அவர்கள் முடிவு செய்துள்ளனர்.



உலகச் செய்திகள்!  - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 5 Jun 2014 - 6:19

அரசு படை- புரட்சிப்படையினர் மோதல்: ஏமன் சண்டையில் 120 பேர் சாவு

ஏமன் நாட்டில் சமீப காலமாக அரசு படைக்கும், ஷியா முஸ்லிம் புரட்சிப்படைக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் ஷியா முஸ்லிம்கள் பிடித்து வைத்துள்ள வடக்கு ஏமனில் அரசு படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தின. அதைத் தொடர்ந்து அங்கு அரசு படைக்கும், ஷியா முஸ்லிம் புரட்சிப்படைக்கும் இடையே பலத்த சண்டை நடந்தது. இந்த சண்டையில் ஷியா முஸ்லிம் புரட்சிப் படையினர் 100 பேர் கொல்லப்பட்டனர். அரசு படை வீரர்கள் 20 பேரும் உயிரிழந்தனர்.

ஒரு நாள் முழுக்க நடந்த சண்டைக்கு பின்னர் இரு தரப்பிலும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நேற்று அங்கு தாக்குதல் எதுவும் நடந்ததாக தகவல் இல்லை.



உலகச் செய்திகள்!  - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 6 Jun 2014 - 4:32


நைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகள் வன்முறை: நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

வட கிழக்கு நைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தீவிரவாத தாக்குதலில் நான்கு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியானதாக கூறப்படுகிறது.

அந்நாட்டு தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக எவ்வளவு பேர் பலியானார்கள் என்பது தெரியவில்லை. கோஷே, அட்டகரா, அகபல்வா மற்றும் அகஞ்சாரா ஆகிய கிராமங்களை சேர்ந்த 300 பேர் வரை பலியாகியிருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. அப்பகுதி தீவிரவாதிகளின் முழு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் பலி எண்ணிக்கை எவ்வளவு என கண்டுபிடிக்க இயலவில்லை.

அப்பகுதி முழுவதும் சடலங்கள் மிகுந்து கிடக்கின்றன. மக்கள் பலரும் தங்கள் இருப்பிடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான பீட்டர் பியே தெரிவித்தார். தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலால் வடகிழக்கு பகுதியில் மட்டும் நாளொன்றுக்கு 800 பேர் தங்கள் குடும்பங்களையும், மக்களையும் விட்டு வெளியேறி வருகின்றனர். கடந்த வருடம் மட்டும் இங்கு தீவிரவாதிகளின் தாக்குதலில் 3000 பேர் பலியானதாக கூறப்படுகிறது.



உலகச் செய்திகள்!  - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 8 Jun 2014 - 15:47


ஆப்கானில் திடீர் காட்டாற்று வெள்ளம் - 74 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் நான்கு கிராமங்கள் கடும் பாதிப்படைந்துள்ளதாகவும், இதுவரை 74 பேர் பலியாகியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த திடீர் வெள்ளத்தால் பாக்லான் மாகாணத்தில் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துவிட்டதாகவும், மக்களின் உடைமைகள், கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திடீர் வெள்ளத்தால் இதுவரை 74 பேர் உயிரிழிந்திருப்பதகாவும், 200 பேரை காணவில்லை எனவும், இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுவதாகவும் அம்மாகாண காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு குடிநீர், மருத்துவ உதவி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.



உலகச் செய்திகள்!  - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 9 Jun 2014 - 18:51

நிதி மோசடி வழக்கில் வியட்நாம் வங்கி அதிபருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஹனோய் கால்பந்து குழுவின் தலைவராக இருந்த நிகுயென் டியுக் கியன் வியட்நாம் கால்பந்து அமைப்பில் நடைபெற்ற ஊழலை விமர்சித்ததன் மூலம் பொதுவாழ்வில் முக்கியத்துவம் பெற்றார். இந்த முன்னேற்றம் அவரை உலகளாவிய வணிக வங்கியான ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியை பங்குதாரராகக் கொண்ட ஆசிய வணிக வங்கிக்கு அதிபராக உயர்த்தியது. ஆனால் நிதி மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத வர்த்தகம் போன்ற குற்றங்களுடன் இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டபோது இந்த செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஆசிய வங்கியின் பங்குகளும் சரிவை சந்தித்தன.

இவருடன் சேர்த்து இன்னும் ஏழு உயர் வங்கி அதிகாரிகளும் விசாரணையை எதிர்கொண்டனர். இரண்டு வாரம் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. இதில் கியனுக்கு 30 வருட சிறைத்தண்டனையும், அவர்கள் நாட்டு பணமதிப்பில் 75 பில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களில் மூத்த அதிகாரியும், வங்கி இயக்குனராகவும் செயல்பட்டு வந்த லை சுவான் ஹைக்கு எட்டு வருடமும், பிற அதிகாரிகளுக்கு இரண்டு முதல் எட்டு வருடம் வரையிலும் சிறைவாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அறிக்கையின்படி சட்டவிரோதமான குறுக்கு வங்கி வைப்புகள் மற்றும் முதலீடுகள் மூலம் கியன் 67 மில்லியனுக்கும் மேலான நஷ்டத்தை ஏற்படுத்தினார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக ஏற்கனவே வங்கி ஊழியர் ஒருவர் ஆயுள்தண்டனை பெற்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் காணப்படும் உட்கட்சிப்பூசல்கள் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டார் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வியட்நாமின் பிரதமர் நிகுயென் டன் டங்கின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்படும் கியன் பிரதமரின் மகளுடனான வர்த்தகத் தொடர்பின் விளைவாக இணையதளச் செய்திகளில் தீவிர விமர்சனத்திற்கு ஆளானார் என்றும் தகவலகள் தெரிவித்துள்ளன.



உலகச் செய்திகள்!  - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 9 Jun 2014 - 18:52

பாக்.,ஈரான் எல்லையில்தாக்குதல்: 23 பேர் பலி

குயெட்டா: பாகிஸ்தான் - ஈரான் நாட்டின் எல்லைப்பகுதியில் துப்பாக்கி சூடு மற்றும் தற்கொலை படைதாக்குதலில் நேற்று இரவு 23 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவக்கின்றனர்.



உலகச் செய்திகள்!  - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 9 Jun 2014 - 18:52

பௌர்ணமி கொண்டாட்டம்: ஊரடங்கு உத்தரவைத் தளர்த்தியுள்ள தாய்லாந்து ராணுவம்

தாய்லாந்தின் பிரதமர் இங்க்லக் ஷினவத்ரா கடந்த 2006ஆம் ஆண்டு பதவி இறக்கம் செய்யப்பட்ட அவரது சகோதரர் தக்ஷின் ஷினவத்ராவைப் பின்பற்றுவதால் அவரையும் பதவி இறக்கவேண்டும் என்று கடந்த ஆண்டு இறுதியில் தாய்லாந்தில் தொடங்கிய போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்தது.

இதனைத் தொடர்ந்து பதவி விலகிய பிரதமர் காபந்து அமைச்சராகத் தொடர்ந்து பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தலையும் நடத்தினார். ஆனால் பல பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறாததால் அந்தத் தேர்தலை செல்லாததாக அரசியலமைப்பு நீதிமன்றம் தெரிவித்து மறு தேர்தலுக்கு உத்தரவிட்டது.

இங்க்லக் பதவி விலகி பொதுக்குழு அமைந்தாலே தேர்தலை எதிர்கொள்வோம் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து சென்ற மாதம் 22ஆம் தேதி அங்கு ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. அதுமுதல் பொது ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டன. ஊடக செய்திகள் தணிக்கைக்கு உள்ளாகின. கேள்வி எழுப்பிய அரசியல்வாதிகள், ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் போன்றோரும் அடக்கப்பட்டனர்.

நடைபெற்று வந்த அரசியல் கொந்தளிப்புகளால் அங்கு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையும் குறைந்தது. இருப்பினும் கடந்த மாத இறுதி முதலே நள்ளிரவு முதல் விடியற்காலை 4 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்தது. பட்டாயா. கோ சமுய், புக்கட் மற்றும் கிராபி போன்ற கடற்கரை சுற்றுலாத்தளங்களில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பௌர்ணமிக் கொண்டாட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளுக்குப் பிரசித்தி பெற்ற தாய்லாந்து வளைகுடாவில் உள்ள கோ சமுய் அருகில் உள்ள பங்கன் சுற்றுலாத்தளத்தில் வரும் 12 ஆம் தேதி இரவு இந்த நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று முதல் 13ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவினைத் விலக்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதுபோல் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் பண்பாடு குறையாமல் நடந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.



உலகச் செய்திகள்!  - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 11 Jun 2014 - 2:20


மேலும் 20 பெண்களை கடத்திய போகோ ஹரம் தீவிரவாதிகள் அட்டூழியம்

நைஜீரியா, போகோ ஹரம், 20 பெண்கள் கடத்தல், தீவிரவாதிகள், 300 மாணவிகள் கடத்தல்

நைஜீரியாவில் உள்ள சிபோக் நகரில் போகோ ஹரம் தீவிரவாதிகள் மீண்டும் 20 பெண்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.

போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் இன்னும் மீட்கப்படாத நிலையில், மேலும் 20 பெண்களை அவர்கள் கடத்திச் சென்றிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாதுகாப்பு படை வீரர் அல்ஹாடர் கூறுகையில், "துப்பாக்கியுடன் அங்கு வந்த ஒருவர், 20 பெண்களை அவர் வந்த வாகனத்தில் மிரட்டி ஏற்றிச்சென்றுள்ளார்." என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்கு, கடத்தப்பட்ட அந்த பெண்கள் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு வாலிபர்களையும் அந்த தீவிரவாதிகள் பிடித்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னர் போகோ ஹரம் தீவிரவாதிகளல் கடத்தப்பட்ட 300 மாணவிகளுள் 272 பேர் அவர்களின் பிடியில் உள்ளர். அந்த தீவிரவாதிகளைப் பிடிக்க நைஜீரிய ராணுவத்துடன் அமெரிக்க ராணுவமும் களம் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 12 Jun 2014 - 3:24

அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த அதிபயங்கர தீவிரவாதி, பிலிப்பைன்சில் கைது

அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த அதிபயங்கர தீவிரவாதி, பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கிகள், தீவிரவாத பயிற்சி ஏடுகள் கைப்பற்றப்பட்டன.

அதிபயங்கர தீவிரவாதி

சர்வதேச பயங்கரவாதியான பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ள அபு சய்யாப் தீவிரவாத இயக்கத்தின் தலைமை தளகர்த்தர் காயிர் முண்டோஸ். இந்த இயக்கம் மேற்கத்திய சுற்றுலாப்பயணிகளை கடத்தி பிரபலமானது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்கு பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்திடமிருந்து இந்த அபு சய்யாப் தீவிரவாத இயக்கம் நிதி உதவி பெற்று வந்துள்ளது. அதில் காயிர் முண்டோசுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த காயிர் முண்டோஸ் வெடிகுண்டு தயாரிப்பதில் மன்னனாகத் திகழ்ந்தவர்.

ரூ.3 கோடி

இவரை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துக்கொடுத்தால் 5 லட்சம் டாலர் (சுமார் ரூ. 3 கோடி) தரப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.

இவரது அபு சய்யாப் தீவிரவாத இயக்கத்தை அமெரிக்கா தீவிரவாத இயக்கமாக அறிவித்ததுடன், பிலிப்பைன்சில் அமெரிக்க படை வீரர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும், அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும் இவர்தான் காரணம் எனவும் அறிவித்திருந்தது.

மணிலாவில் கைது

இந்த தீவிரவாதியை பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் சர்வதேச விமான நிலையத்தின் அருகே வைத்து பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் கூட்டாக நேற்று காலை கைது செய்தனர். பல்வேறு குண்டுவெடிப்புகள், ஆட்கடத்தல் வழக்குகளில் பிலிப்பைன்ஸ் போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் சிக்கினார்.

அவர் எதற்காக மணிலா வந்தார் என்பது குறித்த தகவல் உடனடியாக தெரியவரவில்லை. நாசவேலை ஏதாவது நடத்த வந்தபோது அகப்பட்டுக்கொண்டாரா என்பதுவும் விசாரணையில் உள்ளது.

மிகப்பெரிய அடி

இவர் கடந்த 2004-ம் ஆண்டு ஒருமுறை பிலிப்பைன்சில் கைதானார். ஆனால் 2007-ம் ஆண்டு சிறையில் இருந்து தப்பிவிட்டார். இவரை உயிரோடு பிடிக்க துப்பு தருவோருக்கு 1 லட்சத்து 14 ஆயிரத்து 400 பிலிப்பைன்ஸ் டாலர் வழங்கப்படும் என அந்தநாட்டு அரசு அறிவித்திருந்தது.

முண்டோஸ் கைது பற்றி பிலிப்பைன்ஸ் நாட்டின் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் மேஜர் ஜெனரல் எட்வட்டோ ஆனோ கூறுகையில், “முண்டோஸ் கைது செய்யப்பட்டிருப்பது அவரது அபு சய்யாப் தீவிரவாத இயக்கத்துக்கு பலத்த அடியாகும். இவர் அந்த இயக்கத்தின் தளபதியாக, நிதி, தளவாடங்களின் தலைவராகவும் திகழ்ந்தார்” என கூறினார்.

முண்டோஸ் கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து 4 துப்பாக்கிகள், இந்தோனேஷிய தீவிரவாத அமைப்பு ஒன்றின் பயிற்சி ஏடு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.




உலகச் செய்திகள்!  - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 21 of 81 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 51 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக