புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10 
32 Posts - 56%
heezulia
நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10 
17 Posts - 3%
prajai
நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10 
9 Posts - 1%
jairam
நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு அழகின் அலை


   
   

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 02, 2014 6:09 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு,

வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்..

கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்..

நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்..புன்னகை

அன்புடன்

சின்னக் கண்ணன்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 06, 2014 10:06 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 15

Saraj-jyotsna-shuddham sasi-yuta-jata-juta-makutam
Vara-traasa-traana-sphatika-ghutika-pustaka karaam;
Sakrn na thva nathva katham iva sathaam sannidadhate
Madhu-kshira-drakhsa-madhurima-dhurinah phanitayah


சரஜ்-ஜ்யோத்ஸ்னா-ஸுத்தாம் சசியுத ஜடாஜுட மகுடாம்
வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக குடிகா-புஸ்தக கராம்
ஸக்ருந்ந த்வா நத்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததே
மது-க்ஷிர-த்ராக்ஷா-மதுரிம-துரீணா: பணிதயா


தேவி..இலையுதிர்காலத்தில் வருகின்ற சந்திரனைப் போல வெளுப்பானவள் நீ… பிறைச் சந்திரனையும் நவரத்ன கிரீடத்தையும் ஜடாமுடியில் தரிப்பவள் அபய முத்திரை காட்டும் கரங்களைக்கொண்டவள்.. ஸ்படிக மாலை புத்தகம் கொண்டவளாக இருக்கும் உன்னை ஒருமுறை தியானித்தால் போதுமே தேன் பால் திராட்சையைக் காட்டிலும் இனிமை மிக்கதான வாக்குத் திறன், கவித்திறன் பெருகும் அல்லவா…


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 06, 2014 10:08 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 16

Kavindranam chetah-kamala-vana-baal'atapa-ruchim
Bhajante ye santah katichid arunameva bhavatim;
Virinchi-preyasyas tarunatara sringara-lahari-
Gabhirabhi vagbhir vidadhati satam ranjanamami.

கவீந்த்ராணாஞ் சேத: கமலவன பாலாதப-ருசிம்
பஜ்ந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம்
விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ச்ருங்காரலஹரீ
கபீராபிர்-வாக்பிர்-விதத்தி ஸதாம் ரஞ்ஜனமமீ

சிறந்த கவி புனையும் திறமை வாய்ந்த கவிஞர்களின் மனம் தாமரை மலர்களைப்போன்றது… தாயே அந்தத் தாமரை மலர்களை மலரவைக்கும் இளம் வெய்யிலின் சிவப்பு நிறம் கொண்டவள் நீ…


உன்னால் தான், உன்னை வணங்குவதால் தான், உனது அனுக்ரஹத்தினால் தான் கவிஞர்களால் எல்லா ரஸங்களையும் அதுவும் சிருங்கார ரஸம் சொட்டும் வார்த்தைகளைக் கொண்டு கேட்பவர்களை மகிழ்ச்சி செய்யும் வாக்கினைப் புனைய முடிகிறது..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 06, 2014 10:11 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 17

ஹாய்…

‘ஹாய்’
‘’ வசினி விமலா, அருணா, ஜயனி,மோதினி, காமேஸ்வரி, சர்வேஸ்வரி,கெளலினி,,”

“யாருப்பா இவங்கள்ளாம்….உன்னோட கேர்ள் ஃப்ரண்ட்ஸா.. சொல்லவேயில்லை..”

“மனசாட்சி..இதானே வேணாங்கறது.. அப்படி இருந்தா உனக்குத் தெரியாம இருக்குமா..இவாள்ளாம் வாக்கு தேவதைகள் எட்டு பேர்…நீ ஏதோ கேக்கணும்னு நினைக்கறே சொல்லு..”

“உனக்கு சந்திரகாந்தக் கல்லோட உள்பாகம் தெரியுமா..”

“எனக்கு சந்திரகாந்தக் கல்லெல்லாம் தெரியாது..சந்திரகாந்தா வேணும்னா தெரியும்..எங்க தாத்தா சொல்லியிருக்கார்..ஏதோ ஒரு அந்தக்காலப் படத்தோட ஹீரோயின்..”

“ரொம்ப அவசியம்.. சொல்றதைக் கேளு..இப்படி எட்டு வாக்கு தேவதைகளால சூழப்பட்ட அம்பாளை தியானித்தால் என்ன ஆகும் தெரியுமா..”

“சொல்லேன்”


Savitribhir vacham Chasi-mani-sila-bhanga-rucibhir
Vasiny'adyabhis tvam saha janani samchintayati yah;
Sa karta kavyanam bhavati mahatam bhangi-rucibhih
Vacobhi vagdevi-vadana-kamal'amoda madhuraii..

ஸவித்ரீபிர்-வாசாம் சசிமணி-சிலா-பங்க-ருசிபிர்
வசின்யாத்யாபிஸ்-த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி ய:
ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பன்கிருசிபிர்
வசோபிர்-வாக்தேவீ-வதன கமலா மோத மதுரை:

தேவி,நீ வசினி முதலான எண்வகையான சக்தி தேவதைகளுடன் சூழப் பட்டவள். அந்த தேவதைகள் நவரஸங்கள நிரம்பிய சொல்வன்மையைத் தரும் ஆற்ற்ல் மிகுந்தவர்கள்..

சந்திரகாந்தக் கல்லின் உட்புறம் இருக்கும் வெண்மையான ஒளியைப் போல வெண்மை முகத்தை உடையவர்கள…

அவர்களையும் உன்னையும் உபாசிப்பவன் மணமிகக் கொண்ட தாமரை மலர் போன்ற, உன் வதன செளந்தர்யம் போன்ற இனிமையான வார்த்தைகள் அமைத்து மிகுந்த திறமை வாய்ந்த பெருங்கவிஞர்கள் போல் பெரிய காவியங்கள் படைக்க வல்லவனாகிறான்..


vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Thu Feb 06, 2014 10:37 am

சின்னக் கண்ணன் சார்,

அசத்தல். எனக்கு அதிகம் புரியாவிட்டாலும் நல்ல அருமையான கருத்துக்கள். சுத்த தமிழ் மற்றும் சமஸ்கிருதம். நல்ல பதிவு. பாராட்டுக்கள்.


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 06, 2014 12:00 pm

மிக்க நன்றி வாசு சார்..

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 09, 2014 10:22 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 18

****


மானாட்டம் தங்க மயிலாட்டம்
பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
தானாடும் மங்கை சதிராட்டம்
கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்”

“என்னய்யா வர்றச்சயே குஷாலா பாட்டுப்பாடிக்கினு வர்றே?”

“ஹாய்.. இன்னொரு பாட்டையும் கேளு…

கிழக்கு வெளுத்ததம்மா கீழ்வானம் சிவந்ததம்மா
கதிரவன் வரவு கண்டு கமலா முகம் மலர்ந்ததம்மா…”

“ஏய்..படுத்தாத…அது கமலா முகமில்லை..கமல முகம்…எதுக்காகப்பாடறே…?”

“விஷயமில்லாம இருக்குமா….காலங்கார்த்தால..கருக்கல்ல சித்திரச்செவ்வானம் எப்படி இருக்கு்ம்?”

“இன்னொரு பாட்டா…?”

“இல்லை..இல்லை..காலையில் சூரியன் எழும் போது செக்கச்செவேல்னு இருக்குமே அந்த மாதிரியான நிறம் கொண்டது அம்பாளின் தேகத்தின் தேஜஸ். ஒளி..ஈரேழு உலகமும் பரவி இருக்கிறதாம்.”

“அப்புறம்..மொதல்ல பாடினபாட்டுல சரோஜாதேவியப் பத்திச் சொல்லப் போறியா.”

“இல்லை..அபிநய சரஸ்வதி நாட்டு மான்… நான் சொல்றது காட்டு மான்… காட்டில இருக்கற இளம் மான் குட்டி என்ன பண்ணும் ஜம்னு குதிக்கும்..அக்கம்பக்கம் பாக்கும் கொய்ங்க் கொய்ங்க்னு பசிச்சா புல் மேயும்.அப்புறம் ஏதாவது சத்தம் போட்டா மருளும்..மிரண்ட பார்வை பார்க்கும்..அதாவது விழியிலே அபினயம் பிடிக்கும்.”

“சரி..இப்ப என்ன..”

“தேஜஸ் மிக்க அம்பாளை தியானித்தாலே அப்சரஸ்த்ரிகள் ரம்பா ஊர்வசி திலோத்தமா,தேவிகா எல்லாம் வசப்படுவார்களாம்..”

“உன்னைத் திருத்தவே முடியாது… தேவிகாவை விடவே மாட்டியே.. !

”கோபம் கொள்ளாதே மனசாட்சி.சும்மா சொன்னேன்..

.உனக்குத் தெரியுமா. பராசக்தியானவள் இவ்வுலகின் எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி இருக்கிறாள்..அப்படி ஒரு பக்தன் உணர்ந்து விட்டால் அதுவே பிரம்ம நிலைஅதாவது அவன் கண்ணில் படும் பெண்கள் எல்லாம் சக்தி ரூபமாகத் தென்படுவார்கள்…பொதுவாக இந்த சுலோகத்தில தேவகன்னிகைகள் எல்லாம் வசப்படுவார்கள்னு சொன்னாலுமே கூட இந்த ஸ்லோக பாராயணம் என்ன தரும் தெரியுமா…

“சொல்லு”

“காமனையும் வெல்லும் மனப் பக்குவம் கிடைக்குமாம்…”.

சரி ஸ்லோகத்தையும் பொருளையும் பயபக்தியோட சொல்லு.”

"இதோ”

******

Thanuschayabhi sthe tharuna-tharuni -srisarinibhi
Divam sarva-murvi-marunimani magnam smaranthi ya
Bhavanthasya thrasya-dhwana-harina shaleena nayana
Sahervasya vasya kathikathi na geervana Ganika

தனுச்சாயாபிஸ்-தே தருண-தரணி ஸ்ரீ ஸரணிபிர்
திவம் ஸர்வா-முர்வீ-மருணிமனி மக்னாம் ஸ்மரதி ய:
பவந்த்யஸ்ய த்ரஸ்யத்-வன-ஹரிண சாலீன நயனா
ஸஹோர்வச்யா வச்யா: கதிகதி ந கீர்வாண கணிகா


இளஞ்சிவப்பு நிறமுள்ள காலைக் கதிரவனின் கதிரைப் போன்ற நிறமுள்ள அன்னை ஜகன்மாதாவான உன் தேக ஒளியில் பூமி ஆகாயம் இரண்டுமே மூழ்கிக் கிடக்கின்றன

.இப்படி அம்பாளாகிய உன் அழகை எவன் ஒருவன் மன்ப்பூர்வமாக தியானிக்கிறானோ அவனுக்கு காட்டுமானைப் போன்ற மருள் விழிகளையுடைய தேவகன்னிகைகள் வசமாவார்கள்…


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 09, 2014 10:25 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 19


“பெண்ணே உனது சிற்றிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்
அடடா அவனே வள்ளலடி”

“ என்னடா..கொஞ்சம் விட்டா ஸ்லோகம் சொல்லாமப் பாட்டா பாடறே.. ஆனாலும் இந்தப்பாட்டிலயும் பிழையிருக்கு..இப்பல்லாம் பிரம்மன் வள்ளலாகிட்டார் சின்ன இடை விஷயத்தில..ஆமாம்பா நிறைய பேர் குண்டா இருக்காங்க..”

“என்ன மரியாதை இல்லாம பேசற மனசாட்சி..லிங்க் இல்லாம நான் ஏதாவது சொல்வேனா..அதுவும் லிங்க உருவிலான ஈசனோட பட்டமகிஷியப் பத்திப் பேசறச்சே..”

“சிலேடையாப் பேசறன்னு நினைப்பா என்ன.....சொல்லு”

“மேற்கண்ட பாட்டு மானிட நர ஸ்த்ரீயைப்பற்றி இந்தக்காலத்தில் வந்தபாட்டு.. இன்னிக்குப் பாக்கற ஸ்லோகம் அம்பாளோட சூட்சும ரூபத்தைப் பத்திப் பேசுது..”

“ம்”

“ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் உள்ள பீடத்தை பிந்து என்பர்..அதுவே அம்பிகையின் முகம்..அம்பிகையின் முகத்தையும் அவயவங்களையும் தியானம் செய்து கொண்டு க்லீம் என்னும் மந்திரத்தைச் சொல்லி அவ் அவயவங்களில் தியானம் செய்கிறானோஅவன் தன் காம சக்திகளை வசப்படும்படி செய்கிறான்..இவ்வாறுஇந்த காமகலா மந்திரத்தை உபாசிப்பவனுக்கு என்ன ஆகும்?

“நீயே சொல்லு”

“சூர்ய சந்திரர்களைப் போன்ற நகில்களை உடைய மடந்தையர் விரும்புவர்..

“நகில்னா..ஓ அதான் மொதல்ல பாட்டுப் பாடினியா. புதுசா ஒரு வார்த்தை கத்துக்கிட்டியாக்கும்...”

“ம்.. ஆனா அந்த உபாசகன் மடந்தையர் விரும்பற நிலையெல்லாம் கடந்து உயர்ந்த பக்குவத்தை அடைந்திருப்பான்..”

“அப்புறம்”

“இந்த ஸ்லோக பாராயணம் பண்ணினா மறுபிறவியே கிடையாதாம்..குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்..”

**

7Mukham bindun kruthva kucha yuga mada sthasya thadha dho
Harardha dhyayedhyo haramamahishi the manmathakalam
Sa sadhya samkshebham nayathi vanitha inyathiladhu
Thrilokimapyasu bramayathi ravindu sthana yugam.

முகம் பிந்தும் க்ருத்வா குசயுக-மதஸ் தஸ்ய தததோ
ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம்
ஸ ஸ்த்ய: ஸம்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு
த்ரிலோகீ மப்யாஸு ப்ரமயதி ரவீந்து-ஸ்தநயுகாம்


பரம சிவனின் பட்ட மகிஷியே.. ஸ்ரீ சக்ர ரூபத்தில் பிந்துவில் காமகலாரூபிணியான உன் முகத்தையும் அவயவங்களையும் தியானம் செய்துகொண்டு க்லீம் எனும் மந்திரத்தை உச்சரித்து யார் தியானம் செய்கிறானோ அவன் தனது காமத்தை வசப்படும்படி செய்கிறான்..காமத்தை வென்றவ்ன் ஆகிறான்.

.அவனை சூர்ய சந்திரர்கள் போன்ற நகில்கள்ள் படைத்த மூவுலகிலும் சிறந்த மடந்தையர் விரும்புவர்..இவ்வாறு இந்த தியானம் செய்பவன் தேவியின் ஸ்வரூபமாகவே ஆகி மோட்சமும் பெறுவான்


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 09, 2014 10:27 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 20


Kirantim angebhyah kirana-nikurumba'mrta-rasam
Hrdi tvam adhatte hima-kara-sila murthimiva yah;
Sa sarpanam darpam samayati sakuntadhipa iva
Jvara-plustan drshtya sukhayati sudhadhara-siraya.

கிரந்தீம்-அங்கேப்ய: கிரண-நிகுரும்பாம்ருதரஸம்
ஹ்ருதி-த்வாம் ஆதத்தே ஹிமகர-சிலா மூர்த்திம் இவ ய:
ஸ ஸ்ர்பாணாம் தர்பம் சமயதி ஸகுந்தாதிப இவ
ஜ்வர-ப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா


சந்திர காந்தக் கல் எப்படி சந்திரனைக் கண்டதும் நீரை விடுமோ அது போல அமுத கிரணங்கள் உனது அங்கங்களில் இருந்து பெருகுகின்றது.

.அம்பிகையே..உன்னை தியானிக்கும் அடியார்கள் உன் சக்தியினால் பாம்புகளின் வீர்யத்தை கருடன் அடக்குவ்துபோல வல்லமை பெற்றவர்கள் ஆகிறார்கள்…அவர்களது பார்வையானது சுரத்தினால் பாதிக்கப் பட்டவர்களையும் நலமடையச் செய்யும்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Feb 10, 2014 10:29 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 21


யோகிங்கறது யார் தெரியுமா”

“தெரியாம என்ன தாடி மீசைல்லாம் வச்சுக்கிட்டு சரித்திர நாவல்கள்ல லாம் வருவாங்க…அப்பப்ப காட்டில சைட்ல மரங்களூடே குதிரைல போவாங்க..அங்கங்க மர்மச் சிரிப்பு சிரிப்பாங்க…அவங்க தானே..
“ உன் கிட்டப் போய்க் கேட்டேன் பாரு…காமம் குரோதம் போன்றவற்றை விட்டவங்களே யோகி..என்ன மகா யோகின்னு கூட சொல்லலாம்….அவர்கள் மூடத்தனம் மாயை இல்லாதவர்கள்..

“அப்படிங்கற”

“அப்படிப் பட்டவர்களால தான் அம்பாளோட இந்த அழகான சூட்சும வடிவை பார்க்க முடியும்

“சுலோகத்தை சொல்லு மனசாட்சி..

“**


Tatil-lekha-thanvim thapana-sasi-vaisvanara-mayim
Nishannam shannam apy upari kamalanam tava kalaam;
Maha-padma tavyam mrdita-mala-mayena manasa
Mahantah pasyanto dadhati parama'hlada-laharim.

தடில்லேகா-தன்வீம் தபன-சசி வைசானர-மயீம்
நிஷண்ணாம் ஷண்ணா-மப்யுபரி கமலானாம் தவ கலாம்
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித-மல மாயேன மனஸா
மஹாந்த: பச்யந்தோ தததி பரமாஹ்லாத-லஹரீம்

மஹாபத்ம வடனி என்கிற ஆயிரம் இதழ்களையுடைய தாமரை நமது உடலின் ஆறு சக்கரங்களுக்கும் மேலே இருக்கிறது..இதை சஹஸ்ரார கமலம் என்போம்..

அங்கிருந்து கொண்டு சூரியன் சந்திரன் ஆகியோரைக் கலைகளாகக்கொண்டு மின்னல் கொடி போல அம்பாள் தோன்றுவாள்..அந்தத் தோற்றத்தை காமம் குரோதம் விட்ட அறியாமை மூடத்தனம் இல்லாத மஹா யோகிகளால் மட்டுமே காண இயலும்

இந்த ஸ்லோக பாராயணம் வசீகரத் தன்மையை அதிகரிக்கும்


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Feb 10, 2014 10:31 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 22


“பவானி ந்னா என்ன நினைவுக்கு வருது?”

“இந்த நிலவை நான் பார்த்தால் அது
எனக்கென வந்தது போல் இருக்கும்
என் நினைவை எடுத்து வரும்
உன் நெஞ்சினில் கொடுத்து வரும்..

நல்ல பாட்டு..ஜெய் எல் விஜயலஷ்மின்னு நினைக்கறேன் வழக்கம் போல என் மிகப் ப்ரிய கண்ணதாசன்…..ரொம்பப் பழைய படமாச்சே”

“ஏண்டா படுத்தறே…உனக்கு மனசாட்சியாப் பொறந்து நான் படற கஷ்டம் இருக்கே..பவானிங்கறது அம்பாளோட பேர்.

“தெரியுமே ஈசனுக்கு எட்டு பேர் உண்டு பவன், சர்வன், ஈசானான், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மஹாதேவன்..அதுல முதல் பெயர் பவன்…. பவனின் சக்தி பவானி..அம்பிகா…”

“அம்பிகைடா.. பரவால்ல எல்லாம் தெரிஞ்சு வச்சுண்டிருக்க..மஹாதேவம்,மன்மதம், ப்ரபஞ்சம் இம்மூன்றையும் பவா என்பார்கள்.. மூன்றையும் தன்னுள் கொண்டவள் பவானி..ஆரத்தி தெரியுமா..

”நான் ஏதாவது சொல்வேன்.. அப்புறம் நீ திட்டுவே..

“சரி நானே சொல்றேன் தேவர்கள் அம்பாளை வணங்கும் போது அவர்களது கிரீடத்தின் ஒளி அவள் பாதகமலங்களில் பட்டு ஆரத்தி எடுப்பது போல இருக்காம்..அப்புறம் அவளை பவானி அப்படின்னு கூப்பிடணும்னு நினைச்சாலே போதும்..அவள் ஓடி வந்து அருள் புரிவாள்.இந்த சாயுஜ்ய பதவி அதாவது அவளே சாயுஜ்யம் தானாம்.. அது பக்தனுக்குக் கிடைக்குமாம். அதைத் தான் சொல்கிறது இன்றைய ஸ்லோகம்.

“தவிர”

“இந்த ஸ்லோக பாராயணம் சகல காரிய சித்தியும் அளிக்குமாம்..”


**

Bhavani tvam daase mayi vitara drishtim sakarunam
Iti sthotum vanchan kadhayati Bhavani tvam iti yah;
Tadaiva tvam tasmai disasi nija-sayujya-padavim
Mukunda-brahmendra-sphuta-makuta-nirajita-padam.

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி ய:
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த-ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட மகுட நீராஜித பதாம்

பவானி, அம்பிகையே…என்னிடத்தில் கருணையுடன் கூடிய உன் பார்வையை செலுத்துவாயாக – என எவனொருவன் வேண்டுகிறானோ அவனுக்கு தேவர்களின் கிரீடங்களின் ஒளியால் தீபாராதனை செய்யப்பட்ட உன் பாத கமலங்களை அடையும் படியான பெரும் பதவியை அவனுக்குக் கொடுக்கிறாய்...



Sponsored content

PostSponsored content



Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக