புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
68 Posts - 49%
heezulia
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
5 Posts - 4%
prajai
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
4 Posts - 3%
Jenila
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
2 Posts - 1%
jairam
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
2 Posts - 1%
kargan86
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
1 Post - 1%
M. Priya
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
9 Posts - 5%
prajai
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
6 Posts - 3%
Jenila
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
4 Posts - 2%
Rutu
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
3 Posts - 2%
jairam
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சந்தோஷம் என்பது... Poll_c10சந்தோஷம் என்பது... Poll_m10சந்தோஷம் என்பது... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தோஷம் என்பது...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 22, 2014 9:38 pm

சாரல் காற்று, 'சிலுசிலு'வென்று வீச, மலையடிவாரத்தில், இயற்கை சூழலில் அமைந்திருந்த அந்த தங்கும் விடுதியின் அறையில், குழந்தைகள் குதூகலத்துடன் சத்தம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். குளிப்பதற்குத் தேவையான துணிகளை, ஒரு பேக்கில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் உமா.

''உமா, அப்பாவுக்கும் மறந்துடாம மாத்து துணி எடுத்து வைச்சுரு.''
''எல்லாருக்கும் எடுத்து வச்சுட்டேன்ங்க; மாமா வெளியே போர்டிகோவில் இருக்காரு... கூப்பிடுங்க போகலாம். ஐந்தருவி போய் குளிச்சுட்டு, அப்புறம் மெயின் பால்ஸ் போவோம்.''
வெளியே போர்டிகோவில் அமர்ந்திருந்த அப்பாவிடம் வந்தான் குமார்.
''அப்பா, எல்லாரும் அருவிக்கு கிளம்பிட்டாங்க; வாங்க போகலாம்.''
''நான் வரல; நீங்க போயிட்டு வாங்க.''

''என்னப்பா இது, சின்னக் குழந்தை மாதிரி பிடிவாதம் செய்றீங்க. அருவியில் குளிச்சு, சந்தோஷமா, 'என்ஜாய்' செய்யலாம்ன்னு தானே குற்றாலத்துக்கு வந்தோம். இப்ப வரமாட்டேன்னு சொல்றீங்களே... உங்க வருத்தம் எனக்குப் புரியுதுப்பா. நாலு நாள் லீவு வருது, எல்லாரும் குற்றாலம் போகலாம்ன்னு சொன்னபோது, நீங்க, 'திருச்செந்தூர், கன்னியாகுமரி போய், சுவாமி தரிசனம் செய்திட்டு வருவோம்'ன்னு சொன்னீங்க. ஆனா, பசங்க தான் பிடிவாதமா, 'குற்றாலம்தான் போகணும்'ன்னு சொல்லிட்டாங்க. அடுத்த லீவுக்கு எல்லாரும் திருச்செந்தூர் போகலாம்ப்பா. இப்ப குளிக்க வாங்க,''என்றான் குமார்.''என்னை கட்டாயப்படுத்தாத குமாரு; நீங்க போய்ட்டு வாங்க. நான் இங்கேயே இருக்கேன்.''பிடிவாதமாக அவர் மறுக்க, வேறு வழியின்றி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, உமாவும், குமாரும் ஐந்தருவிக்கு குளிக்க கிளம்பினர்.

குருமூர்த்திக்கு மனதில் கோபமும், எரிச்சலும் மண்டியிட்டது. 'இந்தக் குடும்பத்திற்காக எவ்வளவு உழைச்சுருக்கேன். இப்ப இவங்க அனுபவிக்கிற ஒவ்வொரு காசும், நான் சம்பாதிச்சது; ராப்பகலாக உழைச்சு, வியர்வை சிந்தி, வியாபாரத்தை பெருக்கி, நல்லமுறையில் நடத்தி, இப்போ இவங்கிட்ட கொடுத்திருக்கேன். 'நமக்காக பாடுபட்டாரே நம்ம அப்பா... அவர இந்த வயசான காலத்தில, சந்தோஷமா வச்சுக்கணும்'ன்னு நினைச்சானா இவன்... என்னை ஒரு பொருட்டாக மதிக்காம, அவன் இஷ்டப்படி நடந்துக்குறான். நான், திருச்செந்தூர் போகலாம்ன்னு எவ்வளவு ஆசைப்பட்டுச் சொன்னேன்... காதுல வாங்குனானா... அவன் குடும்பம், குழந்தைகதான் அவனுக்குப் பெரிசு. என்னோடு வாழ்ந்த மகராசி, இதையெல்லாம் அனுபவிக்காம போய் சேர்ந்துட்டா. நான் தான் உபயோகமில்லாம, இந்த உதாசினத்த எல்லாம் சகிச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்...' என்று, மனதுக்குள்ளே புலம்பினார்.

''என்ன சார், தனியா உட்காந்திட்டீங்க... உங்க மகன், குடும்பத்தோடு, அருவிக்கு குளிக்க கிளம்பிப் போயிட்டாரு போலிருக்கே! நீங்க ஏன் போகல... உடம்புக்கு ஏதும் முடியலையா?'' என்று கேட்டபடி, அந்த விடுதியின் உரிமையாளர் அங்கு வர, அவரை நிமிர்ந்து பார்த்தார் குருமூர்த்தி. அவருக்கும் ஏறத்தாழ அவர் வயதுதான்.
''எனக்கு போக இஷ்டமில்ல சார்; அதான் வரலன்னு சொல்லிட்டேன்,'' என்ற குருமூர்த்தி, ''உட்காருங்க சார்,'' என்று உபசரித்தார்.''சென்னையிலிருந்து தானே வந்திருக்கீங்க,'' என்று, கேட்டுக் கொண்டே அங்கிருந்த நாற்காலியில், அமர்ந்தார் விடுதி உரிமையாளர்.

''ஆமாம் சார். டெக்ஸ்டைல் மில் வச்சு நடத்தினேன். இப்ப என் மகன் தான் வியாபாரத்தைப் பாக்கிறான். இந்த புள்ளைகள உருவாக்க நாம எப்படியெல்லாமோ கஷ்டப்படறோம். ஆனா, வயசான காலத்தில நம்மள, இவங்க, ஒரு பொருட்டாவே மதிக்கிறதில்ல. இதுதான் உலக நடைமுறையா இருக்கு. நம்ம காலம் மாதிரி இல்ல சார். இப்ப இருக்கிற புள்ளைங்ககிட்ட குடும்ப பாசம், பற்று கொஞ்சம் கூட இல்ல. எங்க வீட்டையே எடுத்துக்கங்க... வீட்டுக்கு பெரியவங்கிற முறையில, என் பேச்சுக்கு ஒரு மரியாத இல்ல; எல்லாம் அவங்க இஷ்டத்துக்குத் தான் நடந்துக்கிறாங்க.''
மனதில் இருப்பதை, விடுதி உரிமையாளரிடம் கொட்டினார் குருமூர்த்தி.

''என்ன சார் ரொம்ப விரக்தியா பேசுறீங்க. மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன்; அதான் இப்படி பேசுறீங்க. உங்களுக்கு தெரியாததா, கிடைத்ததை வைத்து திருப்திப்படறதுதானே வாழ்க்கை. இதுல குறை சொல்லி என்ன ஆகப் போறது? அவ்வளவு தூரத்துல இருந்து, பேரன், பேத்தின்னு குடும்பத்தோடு குற்றாலம் வந்திருக்கீங்க. சந்தோஷமாக இருக்கிறத விட்டுட்டு, இப்படி தனிமையில உட்கார்ந்து இருக்கீங்களே... குற்றாலம் வரைக்கும் வந்துட்டு அருவியில குளிக்காம இருக்கலாமா? அவங்களோடயே போய் குளிச்சுட்டு வரலாம் இல்லையா?''
''அப்படி இல்ல சார். என்னை தனியா விட்டுட்டு வர்றது பாதுகாப்பில்லைன்னு தான், குற்றாலத்துக்கு கூட்டிட்டு வந்திருக்காங்க. நான் திருச்செந்தூர் போகலாம்ன்னு சொன்னேன் யாரும் கேட்கல; வயசான பெரிய மனுஷன் சொல்றானே... அவன் பேச்சுக்கு மதிப்பு கொடுப்போம்ன்னு தோணியிருக்கா... எல்லாம் என் தலை விதி; என்னை விடுங்க சார். உங்களுக்கு இதுதான் சொந்ந ஊரா... நல்ல இயற்கை சூழல்ல, மலையடிவாரத்தில, அமைதியான சூழல்ல இருக்கிற உங்க விடுதிய பாக்கறதுக்கே ரொம்ப அழகா இருக்கு.''
''அந்தக்காலத்தில வாங்கிப் போட்ட இடம் சார். என் மகன் தான் கட்டினான்.''
''அப்படியா... உங்களுக்கு எத்தனை புள்ளைங்க?''
''ரெண்டு பேர்.''

''உங்க குடும்பமெல்லாம் எங்கே இருக்கு, குற்றாலத்தில தானா?''
சிறிது நேரம் மவுனமாக இருந்தவர், ''என் பேத்தியையும், என்னையும் தவிர்த்து, இப்ப என் குடும்பத்துல யாருமே உயிரோடு இல்ல,'' என்று, குரல் உடைய அவர் பேச, ''அடடா... என்ன ஆச்சு சார்?'' என்று ஒரு திடுக்கிடலோடு கேட்டார் குருமூர்த்தி.

''குடும்பத்தோடு, என் ரெண்டு மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகளோடு எல்லாரும் ஒரு வேன்ல சந்தோஷமாக மைசூருக்கு சுற்றுலா போனோம். திரும்பும் போது, வேன் ஆக்ஸிடென்ட் ஆகி, எல்லாருமே இறந்துட்டாங்க. என் மூணு வயது பேத்தியும், நானும் மட்டும் தான் உயிர் பிழைச்சோம். என் உறவுகளையெல்லாம் இழந்துட்டு, என் பேத்திக்காக நான் வாழ்ந்துட்டு இருக்கேன். பதினைந்து வருஷம் முடிஞ்சு போச்சு. பேத்தி இப்ப சென்னையில் ஹாஸ்டலில் தங்கி படிச்சிட்டிருக்கா. அவ படிச்சு முடிச்சதும், நல்ல பையனாகப் பார்த்து, அவளுக்கு கல்யாணம் செய்து, இந்த சொத்துகளை அவக்கிட்ட ஒப்படைக்கணும்ன்னுதான் நடைபிணமாக வாழ்ந்துட்டு இருக்கேன். சொந்தங்களோடு வாழற கொடுப்பினையை கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்காரு. அதைப் புரிஞ்சுக்காம, மனகசப்பை உருவாக்கிட்டு, நீங்களே உங்கள தனிமைப்படுத்தி வாழ்ந்துட்டிருக்கீங்க. இல்லாதவங்களுக்கு தான் சார் உறவுகளோட அருமை தெரியும்.

''வாழ்க்கையில மகிழ்ச்சிங்கிறது, நாம் சந்தோஷப்படுவதில் இல்ல சார். மத்தவங்கள சந்தோஷப்படுத்துறதுலதான் இருக்கு. இதை நீங்க புரிஞ்சுக்கிட்டா, உங்க வாழ்க்கை நல்லபடியா இருக்கும்,'' என்று விடுதி உரிமையாளார் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,''சார், சென்னையிலிருந்து போன் வந்திருக்கு; உங்க பேத்தி பேசறாங்க,'' என்று, வேலையாள் வந்து சொல்ல, அவர் எழுந்து சென்றார்.

''தாத்தா... தாத்தா... ப்ளீஸ் வாங்க தாத்தா, அருவியல குளிக்கலாம். ஐந்தருவியில சூப்பரா குளிச்சோம். அப்பா தான், தாத்தா வையும் கூட்டிக்கிட்டு மெயின் பால்சில் குளிக்கப் போகலாம்ன்னு கூட்டிட்டு வந்திட்டாரு. வாங்க தாத்தா...ஜாலியாக இருக்கும்...''

பிரமை பிடித்தாற்போல் உட்கார்ந்திருந்தவர், பேரனும், பேத்தியும் தன்னை உலுக்கு வதைப் பார்த்தார்.
''அப்பா கிளம்புங்கப்பா. அருவியில் தண்ணி நல்லா விழுது. குளிக்க சந்தோஷமாக இருந்துச்சு. இருந்தாலும் உங்களை விட்டுட்டு போனது மனசு கேட்கல. அதான் தாத்தாவையும் அழைச்சுக்கிட்டு மெயினருவி போகலாம்ன்னு எல்லாரையும் கூட்டிட்டு வந்துட்டேன். ப்ளீஸ்பா... எங்களுக்காக கிளம்புங்கப்பா,'' குமார் சொல்ல, ''அம்மா உமா... என்னோட துணிமணிகளையும் எடுத்துட்டு வாம்மா. உங்களோடு சேர்ந்து, நானும் குளிச்சு சந்தோஷப்படப் போறேன்,''என்றார் குருமூர்த்தி.

கோபத்தில் இருந்த அப்பா, இவ்வளவு சீக்கிரம் சம்மதம் சொல்வார் என்று எதிர்பார்க்காத குமார், மனம் மகிழ, குழந்தைகள் கைதட்டி குதூகலிக்க, உமா புன்சிரிப்புடன் உள்ளே செல்ல, அவர்கள் முகங்களில் தெரிந்த பரவசத்தைப் பார்த்து, வாழ்க்கையை புரிந்து கொண்டவராக நெகிழ்ந்து நின்றார் குருமூர்த்தி.

பரிமளா ராஜேந்திரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 23, 2014 12:13 pm

இருக்கும்போது தெரியாத அருமை இல்லாத போது தான் தெரியும்.


கதை அருமை பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed Apr 23, 2014 3:34 pm

அருமை



கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக