புதிய பதிவுகள்
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_c10வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_m10வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_c10 
74 Posts - 59%
heezulia
வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_c10வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_m10வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_c10 
41 Posts - 33%
mohamed nizamudeen
வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_c10வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_m10வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_c10வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_m10வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_c10வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_m10வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_c10 
116 Posts - 60%
heezulia
வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_c10வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_m10வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_c10 
62 Posts - 32%
mohamed nizamudeen
வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_c10வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_m10வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_c10வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_m10வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!


   
   
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
http://smileselvamoothy@gmail.com

Postசெல்வமூர்த்தி Wed Jul 16, 2014 10:13 pm

[size=12]வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Jaya%20warningசென்னை : தனியார் கிளப்புகளில் வேட்டிக்கு தடை விதித்தது கடும் கண்டனத்துக்குரியது என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா, சட்டத்தை மீறி வேட்டிக்கு தடை விதித்தால் கிளப்புகளின்  உரிமம்  ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா  இன்று படித்த அறிக்கையில் கூறியதாவது:

வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எல்லாம் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொள்வதற்கோ அல்லது உரையாற்றுவதற்கோ எவ்வித தடையும் இல்லாத சூழ்நிலையில், தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் வேட்டி அணிந்து பங்கேற்க தனியார் மன்றம் தடை விதித்திருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயக மரபுகளுக்கும், தனி நபர் உரிமைக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் எதிரான செயல்.

11.7.2014 அன்று மாலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்தில், அதாவது Tamil Nadu Cricket Association Club-ன் கூட்ட அரங்கில், ஒரு பொது நிகழ்ச்சி, அதாவது சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமை நீதியரசர்கள், நீதியரசர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி D.அரி பரந்தாமனும் மற்றும் அவரோடு சில மூத்த வழக்கறிஞர்களும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்திற்குள் செல்ல முயன்ற போது, வேட்டி அணிந்து இருந்தனர் என்ற ஒரே காரணத்தைக் காட்டி, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் செயல் தமிழர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அவமதிக்கும் செயல் ஆகும்; கொச்சைப்படுத்தும் செயல் ஆகும். இதற்கு எனது கடும் கண்டனத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் இது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சி அகற்றப்பட்டு 67 ஆண்டுகள் ஆகியும் இது போன்ற செயல்கள் நடைபெறுவது மிகவும் வேதனைக்குரியது. இந்தப் பிரச்சனை 14.7.2014 அன்று தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அனைத்துக் கட்சியினரும் தங்களது மேலான கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். இந்தச் செயலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மன்ற விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும், இதற்காக சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பேசி இருக்கிறார்கள். இந்த அவைக்கு வெளியேயும் சிலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

தி.மு.க. சார்பில் இந்த அவையில் பேசிய உறுப்பினர் மு.க.ஸ்டாலின், "இது குறித்து அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுத்து, தமிழ் பாரம்பரியத்திற்குரிய அந்தப் பெருமையை நிலைநாட்டிட வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார். இந்தத் தருணத்தில் 2010-ஆஆம் ஆண்டு இந்த அவையில் நடைபெற்ற ஒரு விவாதத்தை இங்கே எடுத்துக் கூற கடமைப்பட்டு இருக்கிறேன். 2010-2011-ஆம் ஆண்டிற்கான சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக உறுப்பினர், "... நம்முடைய சென்னை தலைநகரிலே உள்ள கிரிக்கெட் கிளப், போட் கிளப் போன்ற இடங்களுக்கு நாம் வேட்டி கட்டிச் சென்றால் அனுமதிப்பது கிடையாது. அப்படிப்பட்ட ஒரு தடை விதித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நாம் வேட்டி கட்டாமல் செல்ல முடியுமா? பீகாரில் இப்படித்தான் ஓர் ஓட்டலில் பீகார் உடை அணியது சென்றவர்களை தடுத்த காரணத்தினால், அந்த ஓட்டலையே மூடிவிட்டார்கள். எனவே, இதற்கு துணை முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும். ..."" என்று பேசி இருக்கிறார்.

அதற்கு அப்போதைய துணை முதல்வர், அதாவது உறுப்பினர்  மு.க. ஸ்டாலின், "வேட்டி கட்டுவதில் இருக்கின்ற பிரச்னைப் பற்றி இங்கே பேசி இருக்கிறார். முதலில் அவர் தொடர்ந்து சட்டமன்றத்திற்கு வேட்டிக் கட்டிக் கொண்டு வர வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளை நான் வைக்கிறேன்" என்று பதில் அளித்துள்ளார்.

இதை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், இந்தப் பிரச்னை சுட்டிக் காட்டப்பட்டும், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தான். இன்னொரு சம்பவத்தையும் நான் இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் முன்னாள் கௌரவ ஆலோசகர், 2007ஆம் ஆண்டு சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்காக சென்ற போது, வேட்டி அணியது இருந்தார் என்ற காரணத்தைக் காட்டி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியதோடு, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தையும் அவர் நடத்தி இருக்கிறார்.

இந்தச் செய்தி பத்திரிகைகளில் எல்லாம் வெளி வந்தது. ஆனால், இதன் மீதும் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தத் தருணத்தில் சர்.பி.தியாகராயர் வாழ்க்கையிலே நடைபெற்ற ஒரு சம்பவத்தை உங்களிடையே நான் பகிர்யது கொள்ள விரும்புகிறேன்.

சென்னை மாநகராட்சியின் தலைவராக சர்.பி.தியாகராயர் இருந்த சமயத்தில் வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வந்தார். அப்போது சென்னை மாகாண கவர்னராக இருந்தவர் லார்டு வில்லிங்டன். லார்டு வில்லிங்டன் சர் தியாகராயரைப் பார்த்து, "சென்னை மாநகரின் முதல் பிரஜை என்கிற முறையில் நீங்கள் தான் இளவரசரை வரவேற்க வேண்டும்" என்றார். அதற்கு சர் தியாகராயரும் சம்மதம் தெரிவித்தார். அதன் பின்னர் சென்னை மாகாண கவர்னர் லார்டு வில்லிங்டன் சர் தியாகராயரை சந்தித்த போது, "இளவரசரைச் சந்திக்கின்ற போது நீங்கள் இன்னின்ன மாதிரி உடை தான் உடுத்திக் கொண்டு வர வேண்டும்"" என்று நிபந்தனை போட்டார். அப்போது, சர். தியாகராயர் என்ன செய்தார் தெரியுமா? அரசாங்கத்துக்கு ஒரு பதில் எழுதினார்.

அந்தப் பதிலில், "என்னுடைய வெள்ளை வேட்டி, வெள்ளைக் கோட்டு, வெள்ளைத் தலைப்பாகை ஆடைகளோடு இளவரசர் என்னைப் பார்க்க விரும்பினால் நான் அவரை மனதார வரவேற்கிறேன். இந்த ஆடையுடன் நான் அவரைப் பார்க்க முடியாதென்று நீங்கள் முடிவெடுத்தால், இளவரசரை வரவேற்கிற பாக்கியம் எனக்கு இல்லை என்று நினைத்து அமைதி பெறுவேன். இளவரசரை வரவேற்பதற்காக நான் என்னுடைய வழக்கமான ஆடைகளை மாற்றிக் கொள்வதற்கில்லை" என்று உறுதிபடத் தெரிவித்தார் சர். தியாகராயர்.

பின்னர் என்ன நடந்தது தெரியுமா? ஆங்கிலேய அரசே பணிந்து வந்தது. சர். தியாகராயர் தன்னுடைய வழக்கமான உடையிலேயே வேல்ஸ் இளவரசரை வரவேற்க அனுமதி வழங்கியது. தன்னுடைய உறுதியான நடவடிக்கையால் ஆங்கிலேய அரசையே பணிய வைத்த பெருமைக்குரியவர் சர். தியாகராயர். ஆங்கிலேய அரசையே பணிய வைத்த நமக்கு மன்றங்கள் எம்மாத்திரம்?
இந்தப் பிரச்னை குறித்த உறுப்பினர்களின் கருத்துகளுக்கு பதில் அளித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆவன செய்யப்படும் என்று கூறினார்.

இந்தப் பிரச்னை குறித்து நான் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் கலயது ஆலோசித்தேன். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றம் என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்படும் போது, அதற்கான துணை விதிகளை வகுத்து தமிழ்நாடு சங்கங்களின் பதிவாளருக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றம் சமர்ப்பித்துள்ளது. அந்தத் துணை விதியில், உடை அணியும் முறைகள் குறித்து கீழ்க்காணுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"“10. DRESS REGULATION

Persons will not be admitted into the Club premises if they
are not decently dressed. Persons attired in coloured
Bermudas, colour / multi colour lungies, cut banians / vests
and / or wearing hawai chappals will not be permitted into
THE TNCA CLUB."

அதாவது, கண்ணியமான ஆடையை அணியாதவர்கள் கிளப்பிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வண்ண அரைக்கால் சட்டைகள், வண்ண மற்றும் பல வண்ண லுங்கிகள், கையில்லாத பனியன்கள், அரையங்கிகள் மற்றும் ஹவாய் காலணிகள் ஆகியவற்றை அணிந்து கொண்டு வருபவர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்த துணை விதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் வேட்டியை பற்றி குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, வேட்டி அணிந்தவர்களை சங்க கட்டட வளாகத்திற்குள் அனுமதிக்காத தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்தின் செயல்பாடு, தமிழர் நாகரிகத்தையும், தமிழர் பண்பாட்டினையும் இழிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்ற விதிகளுக்கும் முரணானதாகும். இது ஒரு sartorial despotism, அதாவது உடை தொடர்பான எதேச்சதிகாரம் ஆகும்.

இது குறித்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்திற்கு விளக்கம் கேட்டு ஒரு கடிதம் அனுப்புமாறு தமிழ்நாடு அரசின் சங்கங்கள் பதிவாளருக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன். தமிழர் உடையான வேட்டி அணிந்து வருவதற்கு தடை விதிக்கும் இது போன்ற நடைமுறை சென்னையில் உள்ள சில கிளப்புகளில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், உரிய சட்ட முன் வடிவு நடப்புக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்பதையும், அதன் அடிப்படையில் தமிழர் கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் இனி வருங்காலங்களில் மன்றங்கள் ஈடுபடுமேயானால், அந்த மன்றங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
[/size]



Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 16, 2014 10:26 pm

வேட்டிக்கு தடையா? பட்டாபட்டியும் லுங்கியுமா போயி வகுந்துற வேண்டியது தான்...




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 16, 2014 11:47 pm

சரியான நடவடிக்கை ,
ஆனால் இதில் கூட கொஞ்சம் அரசியலை சேர்த்திருப்பது (ஸ்டாலின் , மைனாரிட்டி திமுக) தான் கொஞ்சம் நெருடலா இருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 17, 2014 4:26 am

நாகரீக வளர்ச்சி அவசியம் தான், ஆனால் மக்கள் தங்களின் கலாச்சார அடையாளத்தை அழித்து நகரீகத்தை வளர்க்கக் கூடாது. கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் இதுபோன்ற கயவர் கூட்டம் களையெடுக்கப்பட வேண்டும்.

இவண்
வேட்டிக்கு பெல்ட் போடுவோர் சங்கம்



வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 17, 2014 10:52 am

சிவா wrote:நாகரீக வளர்ச்சி அவசியம் தான், ஆனால் மக்கள் தங்களின் கலாச்சார அடையாளத்தை அழித்து நகரீகத்தை வளர்க்கக் கூடாது. கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் இதுபோன்ற கயவர் கூட்டம் களையெடுக்கப்பட வேண்டும்.

இவண்
வேட்டிக்கு பெல்ட் போடுவோர் சங்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1074282
அருமையான கருத்து தல

இவண்
வேட்டிக்கு பெல்ட் மட்டுமல்ல பட்டாபட்டியும் சேர்த்து போடுவோர் சங்கம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 17, 2014 11:18 am

சிவா wrote:நாகரீக வளர்ச்சி அவசியம் தான், ஆனால் மக்கள் தங்களின் கலாச்சார அடையாளத்தை அழித்து நகரீகத்தை வளர்க்கக் கூடாது. கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் இதுபோன்ற கயவர் கூட்டம் களையெடுக்கப்பட வேண்டும்.

இவண்
வேட்டிக்கு பெல்ட் போடுவோர் சங்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1074282

இதை நான் வழிமொழிகின்றேன் .

இவண்
பொருளாளர்
வேட்டிக்கு பெல்ட் போடுவோர் சங்கம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக