புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Poll_c10ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Poll_m10ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Poll_c10ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Poll_m10ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Poll_c10ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Poll_m10ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Poll_c10ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Poll_m10ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Poll_c10ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Poll_m10ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Poll_c10ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Poll_m10ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவணி மாத ராசி பலன்கள் !


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 7:29 pm

First topic message reminder :

மேஷம்: எல்லோரும் எல்லாம் பெற வேண்டுமென்று நினைப்பவர்களே! சீர்த்திருத்த சிந்தனை அதிகமுள்ள நீங்கள், வீட்டு நலனை விட, நாட்டு நலனில் அதிக அக்கறை காட்டுபவர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியும், பூர்வ புண்யாதிபதியுமான சூரியன் இந்த மாதம் முழுக்க தன் சொந்த வீடான 5ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தடைகளெல்லாம் விலகும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். மகளுக்கு தள்ளிப்போன திருமணம் முடியும். மகனுக்கும் வேலை கிடைக்கும்.

26ந் தேதி முதல் புதன் 6ம் வீட்டில் அமர்ந்து ராகுவுடன் சேர்வதால் பழைய நண்பர்களுடன் கருத்து மோதல் வரும். உங்களுடைய ராசிநாதனான செவ்வாய் தொடர்ந்து சாதகமாக இல்லாததால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். யூரினரி இன்பெக்ஷன், முதுகு வலி, கால் வலி வந்து நீங்கும். சகோதர வகையிலும் அலைச்சல்கள் அதிகமாகும். கேது 12ல் மறைந்திருப்பதால் குல தெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். புண்ணிய தலங்களுக்கும் சென்று வருவீர்கள். எதிர்ப்புகள் குறையும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும்.

மாணவ-மாணவிகளே! விளையாட்டுத்தனத்தை விட்டு விட்டு படிப்பில் அக்கறை காட்டுங்கள். சக மாணவர்கள் என்ன நினைப்பார்கள் என் றெல்லாம் யோசிக்காமல் சந்தேகத்தை உடனுக்குடன் கேட்டுக் கொள்வது நல்லது.

கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். சிலருக்கு வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். தடைபட்ட திருமணம் கூடி வரும். விடுபட்ட கல்வியை மீண்டும் தொடரும் அமைப்பு உருவாகும்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசல்கள் தீரும். மக்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். கட்சியிலும் பெரிய பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
ராகு சாதகமாக இருப்பதால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கடனுதவியும் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உங்களுடைய புதிய திட்டங்கள், செய்ய வேண்டிய சீர்த்திருத்தங்களையெல்லாம் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். உணவு, கமிஷன், கட்டுமானப்பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

கடையை நல்ல இடத்திற்கு மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களும் வரும். பழைய பாக்கிகளும் வசூலாகும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டே போகும். ஆனால், குருபகவான் 4ம் வீட்டில் அமர்ந்து உத்யோக ஸ்தானத்தை பார்த்துக் கொண்டிருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கும். என்றாலும், சக ஊழியர்கள் மத்தியில் சலசலப்புகள் வரும். நேர் அதிகாரி உங்களுக்கு எதிராக செயல்பட்டாலும், உங்களுக்கு மேல்மட்ட மூத்த அதிகாரி உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லைகள் குறையும். தண்ணீர் பிரச்னையும் தீரும்.

கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் வெளியாவதில் இருந்த தடை, தாமதம் நீங்கும். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள். புதிய வாய்ப்புகளும் கூடி வரும். வளைந்து கொடுத்துப் போவதாலும் அறிவுப்பூர்வமான முடிவுகளாலும் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 19, 20, 22, 25, 28, 29, 30 செப்டம்பர் 6, 7, 8, 9, 15.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 1ந் தேதி காலை 9 மணி முதல் 2 மற்றும் 3ந் தேதி மதியம் 2 மணி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்: தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரரை தரிசியுங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 7:37 pm

மகரம்: முயற்சிகளில் பின் வாங்காதவர்களே! உண்மை என்பது நங்கூரம் பாய்ச்சிய கப்பலைப் போல் அமைதியுடன் இருக்க வேண்டும், என்பதை அறிந்த நீங்கள் ஆர்ப்பரிக்கமாட்டீர்கள். உங்களுடைய ராசிக்கு பாக்யாதிபதியாகவும்-யோகாதிபதியாகவும் வரும் புதன் 26ந் தேதி முதல் 9ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்வதால் சவாலான காரியங்களைக்கூட எளிதாக முடிப்பீர்கள். யதார்த்தமாகப் பேசி பல முக்கிய காரியங்களையெல்லாம் முடிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வெளிநாடு செல்வதற்கு விசா கிடைக்கும்.

உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். அவர்கள் உங்களுடைய அறிவுரைகளை ஏற்றுக் கொள்வார்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். அவர்களின் உடல் நிலை சீராகும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். மாதத்தின் முற்பகுதி வரை செவ்வாயும், சனியும் சேர்ந்திருப்பதால் தூக்கமின்மை, சோர்வு, களைப்பு, அசதி வந்து நீங்கும். ஆனால், 1ந் தேதி முதல் செவ்வாயும், சனியும்பிரிவ தால் அதுமுதல் நிம்மதி உண்டாகும்.

மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் கூடும். வகுப்பறையில் நீங்கள் கேட்கும் அறிவு பூர்வமான கேள்விகளைக் கண்டு சக மாணவர்கள் மதிப்பார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோரின் அரவணைப்பு உண்டு. வேலையில் இருக்கும் பெண்களுக்கு பதவி உயர்வு உண்டு. திருமணம் கூடி வரும்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலையும் தாண்டி முன்னேறு வீர்கள். எதிர்க்கட்சியிலிருந்து அழைப்பு வரும். வியாபாரத்தில் தடைகளைத் தாண்டி முன்னேறு வீர்கள். 3ம் வீட்டில் கேது நிற்பதால் தைரியமாக புது முதலீடு செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப கடையை அழகுபடுத்துவீர்கள். எலெக்ட்ரானிக்ஸ், உணவு, ஸ்டேஷனரி, துணி வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களின் பிரச்னை குறையும்.

வேலையாட்கள் உங்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் ஒத்துழைப்பு தருவார்கள். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் கூடி வரும். குருபகவான் 7ம் வீட்டில் நின்று உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் மூத்த அதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். அதிகாரிகள் உங்களை நம்பி சில ரகசியங்களை சொல்வார்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

கலைத்துறையினரே! முடங்கிக் கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.

விவசாயிகளே! பம்பு செட் பழுதாகி சரியாகும். தண்ணீர்ப் பஞ்சம் தீரும். வாய்க்கால் சண்டையிலிருந்து விடுபடுவீர்கள். கடின உழைப்பால் முதலிடம் பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 21, 22, 23, 24, 31, செப்டம்பர் 1, 2, 3, 8, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 25, 26 மற்றும் 27ந் தேதி மாலை 4 மணி வரை வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள்.

பரிகாரம்: சென்னை - திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை தரிசித்து வாருங்கள். மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு இயன்றளவு உதவுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 7:38 pm

கும்பம்: எப்பொழுதும் கலகலப்பாக சிரித்துப் பேசி அனைவரையும் சிரிக்க வைக்கும் நீங்கள்,சொன்ன சொல்லை ஒருபோதும் தவறமாட்டீர்கள். மனசாட்சி அதிகமுள்ளவர்களே! சுக்கிரன் 6ம் வீட்டில் மறைந்து நிற்பதால் அலைச்சலும், செலவினங்களும், பணத்தட்டுப்பாடுகளும் இருக்கும். 1ந் தேதி முதல் சுக்கிரன் 7ம் வீட்டில் நுழைந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப்பதால் குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன்- மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர், ஈகோ பிரச்னைகளெல்லாம் விலகும். கோபம் தணியும். இங்கிதமாகப் பேசி எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

உங்கள் பூர்வ புண்யாதிபதியான புதன் 26ந் தேதி முதல் 8ல் மறைவதால் அலைச்சலும், செலவினங்களும், திடீர் பயணங்களும் இருக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புதன் 8ல் மறைந்தாலும் உச்சம் பெற்று அமர்வதால் பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து மோதல்களையும் சுமுகமாகப் பேசி சரி செய்வீர்கள். உங்களுடைய ராசிநாதனான சனிபகவான் மாதத்தின் முற்பகுதியில் செவ்வாயுடன் சேர்ந்து நிற்பதால் வேலைச்சுமை அதிகமாகும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். 1ந் தேதி முதல்
செவ்வாய் வலுவடைவதால் உற்சாகமாவீர்கள். ஆரோக்யமும் அழகும் கூடும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகள் சாதகமாகும்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! அவசர முடிவுகள் வேண்டாம். புதிய நண்பர்களிடம் அளவாகப் பேசுங்கள். பழைய நண்பர்களின் உண்மை நிலையைப் புரிந்து கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேச வேண்டாம். உட்கட்சிப் பூசல் வெடிக்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்வது நல்லது. வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்ளுங்கள். பங்குதாரர்களுடன் நிதானமாக பேசுங்கள், பழகுங்கள். அவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிப்பார்கள். ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன், மின்னணு, மின்சாரம், தங்க ஆபரண வகைகளால் லாபம் கூடும். உத்யோகத்தில் செல்வாக்கு கூடும். 1ந் தேதி முதல் செவ்வாய் 10ல் அமர்வதால் அதிகாரிகளின் கோபம் விலகும். சம்பள பாக்கி கைக்கு வரும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சிலருக்கு வெளிமாநிலத்தில் புது வேலை கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த மோதல் நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

கலைத்துறையினரே! தடைப்பட்டிருந்த உங்களது படைப்புகளை இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியிடுவீர்கள். பத்திரிகையாளர்கள் பாராட்டுவார்கள். ரசிகர்களிடையே செல்வாக்கு கூடும்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை அதிகரிக்கும். பக்கத்து நிலக்காரரை அனுசரித்துப் போவது நல்லது. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 9, 23, 24, 25, செப்டம்பர் 2, 3, 4, 5, 6, 10, 11, 12, 13, 15.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 27ந் தேதி மாலை 4 மணி முதல் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும்.

பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள அய்யாவாடி தலத்தில் அருளும் பிரத்யங்கரா தேவியை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 7:39 pm

மீனம்: வாதிடும் திறன் அதிகமுள்ளவர்களே! சோர்வு தட்டாமல் எந்த ஒரு செயலையும் அசாத்தியம் உடைய நீங்கள் எப்பொழுதும் முதலிடத்தையே பிடிக்க விரும்புவீர்கள். கடந்த ஒரு மாத காலமாக உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும் மனஉளைச்சலையும், அலைச்சலையும் தந்து கொண்டிருந்த சூரியன் இப்போது உங்கள் ராசிக்கு 6ல் நுழைந்திருப்பதால் குடும்பத்தில் அமைதி திரும்பும். குழப்பங்கள் நீங்கும். உறவினர்கள் மத்தியில் இருந்த சலசலப்புகள் நீங்கும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மனைவி ஆதரவாக இருப்பார். புதிய திட்டங்களை ஆதரிப்பார். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஆனால், 1ந் தேதி முதல் சுக்கிரன் 6ல் மறைவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். சிறுசிறு விபத்துகளும் வரக்கூடும். டி.வி., செல்போன் பழுதாக வாய்ப்
பிருக்கிறது. 6ம் வீட்டில் மறைந்து உறவினர், நண்பர்கள் மத்தியில் கருத்து மோதல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் புதன் 26ந் தேதி முதல் 7ம் வீட்டில் வந்தமர்வதால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

அவர்கள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் அவ்வப்போது எதிர்காலம் பற்றிய பயம் வரும். எல்லாம் தெரிந்திருந்தும் இப்படியெல்லாம் ஏமாந்து விட்டோமே என்று அவ்வப்போது கலங்குவீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 8ல் நிற்பதால் பணப்பற்றாக்குறையும், சகோதர வகையில் அலைச்சலும் அதிகரிக்கும். ஆனால், 1ந் தேதி முதல் 9ம் வீட்டில் ஆட்சிபெற்று நுழைவதால் சகோதரர்களால் நன்மை உண்டாகும். சொத்துப் பிரச்னையும் சுமுகமாக முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்த இழுபறி நிலை மாறும். மாணவ-

மாணவிகளே! படிப்பில் முன்னேற்றம் உண்டு. கலைப் போட்டிகளில் கலந்து கொள்வீர்கள். சக மாணவர்களின் பாராட்டு கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரை மீறி எந்த முடிவுகளும் எடுக்கவேண்டாம். உயர்கல்வியில் உங்களது கவனத்தை திருப்புங்கள்.

அரசியல்வாதிகளே! புதிய பதவிகள் கூடி வரும். பரபரப்பாக பேசப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புகழ் பெற்ற மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் கடையை இடமாற்றம் செய்ய முயற்சி செய்வீர்கள். ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன், கெமிக்கல், மருந்து வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள், பிரச்னைகள் நீங்கும். மூத்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த வாக்குவாதங்களும் விலகும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். குறிப்பாக மாதத்தின் பிற்பகுதியில் அலுவலகத்தில் செல்வாக்கு கூடும். சிலருக்கு வேறு நல்ல நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை குறையும். மரப்பயிர்கள், கரும்பு, எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள்.

கலைத்துறையினரே! சின்ன வாய்ப்புகளாக இருந்தாலும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 19, 22, 26, 27, 28, செப்டம்பர் 4, 5, 6, 7, 8, 12, 13, 15.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 27ந் தேதி மாலை 4 மணி முதல் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் முன்கோபத்தால் பகை உண்டாகும்.

பரிகாரம்: திருநெல்வேலியில் அருளும் காந்திமதி அம்மையை தரிசித்து வணங்கி வாருங்கள். முதியோர் இல்லத்திற்குச் சென்று உதவுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 18, 2014 10:29 pm

மகரத்திற்கு நன்றாக உள்ளது! பகிர்வுக்கு நன்றி அக்கா!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



ஆவணி மாத ராசி பலன்கள் !  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக