புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_m10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10 
306 Posts - 42%
heezulia
நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_m10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_m10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_m10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_m10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_m10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_m10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10 
6 Posts - 1%
prajai
நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_m10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_m10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10 
4 Posts - 1%
manikavi
நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_m10நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 05, 2014 12:29 am


செப்டம்பர் 5 - டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) தரப்படும். அது ஒரு மெல்லிய நகைச்சுவை.

அப்போதும் எப்போதும் ஆசிரியர்களுக்கிடையில் "நல்லாசிரியர் விருது" பற்றி கேலியான பேச்சு நிகழும். அப்போதெல்லாம் ஓர் உரையாடலைப் பேசிப் பாரத்துக்கொள்வோம். அது என்ன உரையாடல் என்று கேட்கிறீர்களா? இதோ...

"சார், எனக்கு நல்லாசிரியர் விருது வேணும்."

"அதற்கென்ன வாங்கிட்டாபோது."

"கையில காசு இருக்கா. அவர பார்த்தாப்போச்சு. உனக்கென்ன! இந்த வருஷம் வாங்கிடலாம்."

மத்திய, மாநில அரசு தரும் "நல்லாசிரியர் விருது" பெற்ற ஆசிரியர்களைப் பார்க்கும்பொழுது ஒரு கேலியான சிரிப்பு, ஆசிரியர்களிடையே நிகழும். அதை வாங்கியவர்களுக்குக் கௌரவம் என்றாலும், வாங்கியவர்கள் பெரும்பாலும் கௌரவமான விருதுக்குரியவர்கள் இல்லை என்பதுதான் நிஜம்.

தகுதியற்றவர்கள் வாங்கியதைப் பார்த்து நேர்மையான ஆசிரியர்கள் சிரிக்கும்பொழுது, அவ்விருதுக்கே வெட்கம் வந்துவிடாலாம். ஆசிரியர்களுக்கு வராதா என்ன?


நூற்றுக்குப் இருபத்தைந்து ஆசிரியர்களே இவ்விருதுக்குத் தகுதியானவர்களாக இருப்பவர்கள். மற்றவர்கள் யாவரும் பணி அனுபவத்திலும், பொருளாதார, அதிகாரப் பலத்திலும் வாங்கியவர்களாக இருப்பவர்கள்தான்.

பணி ஓய்வை நெருங்கும்வேளையில் இந்த விருதை வாங்கிக்கொண்டு, எந்தக் கௌரவத்தை அடையப்போகிறார்கள் என்று தெரியவில்லை!

அப்படி என்றால் யார் தான் நல்லாசிரியர்?

தன் பொருளாதாரத்தை இழந்து, தன் சுய வாழ்வைச் சிறிதளவு மறந்து, பொருளாதாரத்திலும் அதிகாரத்திலும் குறைந்த சமூகத்தைக் கல்வியில் உயர்த்திய ஆசிரியரே மிகச் சிறந்த ஆசிரியர்.

ஓர் ஆசிரியர் வேலை, தேர்ச்சியை உயர்த்தச் செய்வது மட்டுமல்ல. ஒவ்வொரு மாணவனின் ஒழுக்கத்தை, இந்த உலகத்தில் வாழத் தேவையான அடிப்படை தகுதிகளை உருவாக்குவது மட்டும்தான். மாணவர்களுக்கு யார் ஒருவர் கனவு ஆசிரியரியராக இருக்கிறாரோ அவரே நல்லாசிரியர் ஆவார். போதைப்பழக்கமற்ற, வன்மமற்ற, சாதிமத இன பேதமற்ற, பெண்பித்தற்ற, வட்டி வியாபாரமற்ற ஆசிரியராக அவர் இருப்பார்.

உண்மையான நல்லாசிரியர் என்பவர், மாணவனின் அடிப்படைத் தகுதிகளை உருவாக்குவது மட்டுமல்லாது, இந்த உலகத்தை வழிநடத்தக் கூடிய தகுதிகளை மாணவர்களிடத்தில் உருவாக்கபவராக இருப்பவர்தான். எதிர்காலத்தில் இந்தச் சமூகத்தில் லஞ்ச லாவண்யமற்ற, சுரண்டலற்ற, சாதிபேதமற்ற, லட்சியமிக்க மாணவர்களை உருவாக்குபவராக இருப்பவர்தான் நல்லாசிரியர்.

அரசு தரும் "நல்லாசிரியர்" விருதுக்கு, ஓர் ஆசிரியர் 15 வருடம் காக்கவேண்டும். தன் பெயர் முன்பாக நல்லாசிரியர் என்கிற அடைமொழியைச் சேர்த்துக்கொள்ள பணமும் பரிந்துரையும் அவசியமாகிறது. ஆனால், உண்மையான நல்லாசிரியர் என்பவர் இதற்கு எதிராகவே இருப்பார் என்பதுதான் உண்மை. அவரால் எதிர்கால சந்ததி ஒழுக்கமுள்ளதாகவும் திட்டமிடுவதாகவும் சமுதாயத்தை லட்சியமுள்ளதாக ஆக்கவும் கூடிய சக்தியைப் பெற்றிருக்கும் என்பது மற்றொரு உண்மை. லஞ்சம் தந்து விருது பெறும் ஆசிரியரால் எப்படி நல்ல எதிர்காலத்தை மாணவர்களிடம் உருவாக்கமுடியும்?

மாணவனைத் தோழமையுடன் அரவணைத்து, அவனுடைய திறமையை வளர்த்தெடுப்பவராக இருப்பவர் தான் நல்லாசிரியர். கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தச் செய்து, அதன் வழியாக அம்மாணவனை லட்சியமிக்க மனிதனாக மாற்றக்கூடியவர்தான் நல்லாசிரியர். இதை நல்லாசிரியர் விருதுபெற்றிருப்பவர்கள் செய்திருப்பின் நலம்.

என்னுடன் பயின்ற மாணவன் ஒருவன், படிப்பில் மோசம். ஆனால் அவனைத் தனியாக அழைத்தச் சென்று, "நீ நன்றாக ஓடுகிறாய். நீ ஏன் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள கூடாது?" என்ற திரியை என் மாணவ நண்பனிடம் உடற்கல்வி ஆசிரியர் பற்றவைத்தார். அவனுக்குள் ஒரு தெம்பு வந்துவிட்டது. அவன் அதற்கான பயிற்சியை அவரிடம் மேற்கொண்டு, மண்டல அளவில், பிறகு மாவட்ட அளவில், பிறகு இந்திய அளவில் முதல் பரிசு பெற்றான். அவனை "மக்கு" என்று யாராவது தட்டியிருந்தால், அவன் இன்று ரயில்வேயில் பெரிய பதவியில் இருந்திருக்கமாட்டான். இன்று அந்த ஆசிரியர் இல்லை. ஆனால் அவருக்கு நல்லாசிரியர் விருதும் இல்லை.

என்னுடன் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர் பொருளாதாரத்திலும் சமூக அடுக்கிலும் பின் தங்கியவர். அவரை ஒரு ஆசிரியர் தத்து (ஒவ்வொரு வருடமும் 10 ஏழை மாணவர்களை தத்து எடுப்பவராம்) எடுத்துப் படிக்க வைத்து, இன்று ஓர் ஆங்கில ஆசிரியராக வளர்த்தெடுத்திருக்கிறார். அவரும் விருது பெறாமலேயே ஒய்வு பெற்றும்விட்டார்.

தமிழகத்தில் உள்ள பல முக்கியமான ஓவியர்களின் பேச்சும் இதுதான். "நா நல்லா படிக்கமாட்டேன். என்னோட ஆசிரியர் என்னோட படத்தைப் பார்த்தார். நீ நல்லா வரையிறடா! போயி டிராயிங் ஸ்கூல்ல படி. நல்லா வருவ என்றார். இன்று நல்ல ஓவியனா இருக்கிறதுக்குக் காரணம், அவர்தான்" என்பதுதான் அது. ஆனால் அந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

அப்படி என்றால் நல்லாசிரியர் விருது யாருக்குத் தரலாம் என்ற கேள்வி எழலாம்?

முதலில் 15 வருட பணி அனுபவம் இருந்தால்தான் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்கிற கட்டுப்பாட்டை இல்லாமல் செய்யவேண்டும். ஏனெனில் பணிக்கு வந்து 5 வருடமே பணி அனுபவம் அமைகிற சிறந்த ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது கிடைக்காமல் போகலாம். எனவே அந்த பணி அனுபவ வருடத்தை நீக்கிட வேண்டும். ஒவ்வொரு வருடமும் திறந்த நிலையில் "நல்லாசிரியர் விருது" க்கான போட்டி விண்ணப்பத்தின் வழி, பள்ளியில் தலைமையாசிரியின் வழியாக (பரிந்துரை இல்லாமல்) அமையவேண்டும். யாருடைய பரிந்துரையும் (அதிகாரிகள், அமைச்சர்கள்) ஏற்கக்கூடாது. இன்ன இன்ன தகுதிகளுக்கு இன்ன இன்ன மதிப்பெண் என்கிற நிலைப்பாடு அமையவேண்டும். அல்லது சிறப்புத் தகுதிகளுக்குத் தரலாம்.



நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 05, 2014 12:30 am

எப்படி?

* பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்டம், மாநிலத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களின் ஆசிரியர்களுக்கும், தலைமையாசிரியருக்கும் இவ்விருதை வழங்கலாம்.

* பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் மாநில அளவில் முதலிடம் பெறுகின்ற மாணவர்களின் ஆசிரியர்களுக்கு இவ்விருதைத் தரலாம்.

* 5 வருடங்களாகப் பத்து, பன்னிரண்டாம் பொதுத்தேர்வில் தொடர்ந்து 100% தேர்ச்சி தரும் ஆசியருக்கு வழங்கலாம்.

* மாநில, இந்திய அளவில் விளையாட்டு, ஓவியம், பேச்சுப்போட்டி, நடனம், தற்காப்புக் கலைகள், சமூகச்சேவை ஆகியவற்றில் பரிசு பெறும மாணவர்களின் ஆசிரியர்களுக்கு இவ்விருது தரலாம்.

* தேசிய பசுமைப்படை, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, சாரண சாரணிய இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவ்ற்றில் தேசிய அளவில் பங்கு பெற்று, மாநிலத்திற்குப் பெருமைத் தேடித் தந்த மாணவர்களின் ஆசிரியர்களுக்குத் தரலாம்.

* பகுதி நேரத்தில், எந்தவிதப் பணப்பலனும் பெறாமல், பொதுமக்களுக்கு எழுத்தறிவிக்கும் ஆசிரியர்களுக்கு விருது தரலாம்.

* தமிழக அரசால் மிகச் சிறந்த அளவில் நிகழ்த்தப்படும் ICTACT என்கிற மிகச் சிறந்த கற்பித்தல் போட்டி நிகழ்வில் வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு இவ்விருதை வழங்கலாம்.

* கல்வி சாராது, சமூக நலனிற்காக, நாட்டு நலனிற்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் "தொண்டு" மிக்க (குருதிக்கொடை, உடல்கொடை, கல்விக் களப்பணியாளர், தன்னார்வலர், சிறந்த கண்டுபிடிப்பாளர், மாற்றுக் கல்விச் சிந்தனையால் முன்னேற்றம் தந்தவர்) ஆசிரியருக்குத் தரலாம்.

* முக்கியமான போட்டிகளில் சிறந்த இடம் பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் ஆசிரியர்களுக்குத் தரவேண்டும்.

இதைப்போன்று பல தகுதிகளை நாம் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். ஆனால் யாவற்றிற்கும் மேலாக நாம் ஒரு கருத்தை அடையவே விரும்புகிறோம்.

தன்னலமற்ற, மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் பாடுபடுகின்ற ஆசிரியர்களுக்கு யாருடைய அதிகார, பணப்பலப் பரிந்துரையில்லாமல் நாம் விருது தரவேண்டும் என்பதே அது.

கல்வி, சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவனை உயர்த்திய ஆசிரியரே நல்லாசிரியர். தகுதிகள் ஏதும் அற்ற ஓர் ஆசிரியருக்கு இந்த விருது கிடைக்கும்பொழுது நாம் எப்போதும்போல் சிரிக்கிறோம். கூடவே, நாம் சிறிது தலையைத் தாழ்த்திக்கொள்ளத்தான்வேண்டும்.

மாணவர்களின் நினைவில் வாழும் கனவு ஆசிரியரே, விருது பெறாத "நல்லாசிரியர்" .

திண்ணை வாத்தியார் @ தி இந்து




நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 05, 2014 12:37 am

நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? 103459460 நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? 1571444738

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Sep 05, 2014 12:57 pm

சூப்பருங்க அருமையிருக்கு



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Sep 05, 2014 1:43 pm

அருமையான
யோசனை




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Sep 05, 2014 2:36 pm

நடை உடை பாவனை தோற்றத்தில் ஆசிரியராக (ஆசு இரியராக) தோற்றமளிக்கனும். வெள்ளை உள்ளமும் மன அழுக்கை போக்கும் ஆற்றலுள்ளவராகவும், சமூகத்திற்கு இடையூறு ஏற்படாமல் வாழ்பவராகவும் இருப்பவரே நல்லாசிரியர்.

உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Postஉமேரா Fri Sep 05, 2014 3:25 pm

நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? 103459460 நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? 3838410834 நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? 3838410834

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Sep 06, 2014 4:34 am

நன்றி உமேரா..நன்றி.....................

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 06, 2014 12:22 pm

சிவா wrote:

* பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்டம், மாநிலத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களின் ஆசிரியர்களுக்கும், தலைமையாசிரியருக்கும் இவ்விருதை வழங்கலாம்.
இத்துடன் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்பவே பல பள்ளிகளில் இந்த இரண்டு வகுப்புகளும் இல்லாமல் போய் விட்டது.

8ஆம் வகுப்பில் இருந்து நேரடியாக 10 ஆம் வகுப்பு (முதல் வருடம் ) அடுத்து பத்தாம் வகுப்பு (இரண்டாம் வருடம்) எனவும் 10ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு (Ist Year , IInd இயர் ) என கல்லூரி போல ஆகிவிட்டது.

prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Sat Sep 06, 2014 12:50 pm

எப்போதுமே நல்லாசிரியர் விருது பெற காசு தான். 1992 இல் என் அம்மாவிற்கு பரிந்துரை செயப்பட்டது. ஆனால் CEO   ஆபீசில் காசு எதிர்பார்கிறார்கள் என்று ஸ்கூலில் சொன்னார்கள். அதற்கு என் அம்மா அப்படிப்பட்ட விருது தேவையில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக