புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
29 Posts - 34%
prajai
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
3 Posts - 4%
Jenila
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
1 Post - 1%
M. Priya
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
1 Post - 1%
jairam
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
7 Posts - 5%
prajai
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
6 Posts - 4%
Jenila
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
4 Posts - 3%
Rutu
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
2 Posts - 1%
viyasan
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
1 Post - 1%
M. Priya
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_m10கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:07 pm

புகழ் மயக்கம்

புகழுக்கு மயங்காதவர்கள் எவரேனும் உண்டா?
சமூக சேவகர் ஒருத்தர் இருந்தார். அவர் பெயர் கருப்பசாமி. அவருடைய அப்பா பெயர் எல்லப்பன். ஆகவே, எ.கருப்பசாமி! படாடோபம் இல்லாத எளிமையானவர்; காலுக்குச் செருப்புகூட போடமாட்டார். என்ன வெயில் அடித்தாலும், காலைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு போனாலும் போவாரே தவிர, செருப்பு போடமாட்டார்!
எ.கருப்பசாமியின் சமூக சேவைகளை அக்கம்பக்கத்தவர் புகழத் தொடங்கினர். 'எ.கருப்பசாமி என்றால் எளிமை கருப்பசாமி' என்று ஒரு கூட்டத்தில் யாரோ பேசி வைக்க, அவரது பெயர் எளிமை கருப்பசாமி என்றே ஆகிவிட்டது. பெயரில் எளிமை வந்து ஒட்டிக்கொண்டதால், முன்பைவிட அதிக எளிமையாக இருக்கத் தொடங்கினார் கருப்பசாமி. ஆரம்பத்தில் இயல்பான எளிமையுடன் இருந்தவர்... இப்போது, தனது ஒவ்வொரு செயலிலும் நடவடிக்கையிலும் எளிமை இருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினார்.

இஸ்திரி போட்ட சட்டை போடமாட்டார். எப்போதும் துவைத்த வேட்டி-சட்டைதான். ஒருதடவை இவரது வேட்டி-சட்டையைச் சலவைக்குப் போட்டுவிட்டாள் இவரின் மனைவி. சலவையிலிருந்து வந்த அத்தனை துணிகளையும் தண்ணீரில் போட்டு நனைத்து, சுருக்கத்துடன்தான் போட்டுக்கொண்டார்!
அவர் எளிமையாக இருக்க இருக்க, அவரது புகழ் மேலும் பரவியது. நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் நின்றே தீரவேண்டும் என்று பேட்டைவாசிகள் அவரை வேண்டினர். எளிமை கருப்பசாமி முதலில் மறுத்தாலும், எல்லோரும் வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டார்.
சுவரில் தனது பெயரை பெரிய எழுத்துக்களில் எழுதக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தார். அப்பாவி சுவர் எழுத்தாளர் ஒருவருக்கு இது தெரியாமல், பெரிதாகக் கொட்டை எழுத்தில், 'எளிமை கருப்பசாமியை ஆதரிப்பீர்' என்று எழுதி வைத்துவிட்டார்.
இதைப் பார்த்து திகைத்த கருப்பசாமி, தாமே வீட்டிலிருந்து வாளியில் சுண்ணாம்பு கரைத்து எடுத்து வந்து எழுத்துக்களை அழித்தார். இதைப் பார்த்த அவரது ஆதரவாளர்கள், அவசர அவசரமாக வீடியோ கேமரா கொண்டு வந்து அந்தக் காட்சியைப் படம் பிடித்தனர்.
'தனது பெயரை தானே அழிக்கும் பிரமுகர்' என்று சில பத்திரிகைகளில் அவரது பெயரும் புகைப்படமும் வெளிவந்தன. ஏதோ ஒரு டி.வி. சேனலின் செய்தித் தொகுப்பில், அவர் சுண்ணாம்பு அடிக்கும் காட்சி ஒரு நிமிடம் வரக்கூடும் என்று தெரிந்தது. ஆனால், எந்தச் சேனலில், எந்த நேரத்தில் வரும் என்பது தெரியவில்லை. எல்லா சேனல்களையும் போட்டுப் போட்டுப் பார்த்தார். நண்பர்களிடமும், ஆதரவாளர்களிடமும் சொல்லி வைத்துத் தேடினார். ஆனாலும், பலனில்லை.
மிக சோகமாக இருந்தார். அப்போது அருகில் வந்தாள், அவரின் எட்டு வயது பேத்தி. ''தாத்தா! நீங்க என்ன பாக்கணும்... சேனலை மாத்திக்கிட்டே இருக்கீங்களே, ஏன்?'' என்று கேட்டாள்.
''நான் டி.வி-ல வருவேன்னாங்க! அதான்...''
''ஓகோ! நீங்க உங்களையே தேடுறீங்களாக்கும்! நீங்க இங்கதானே இருக்கீங்க; நீங்க செஞ்ச காரியமும் என்னான்னு உங்களுக்குத் தெரியும். அப்புறம் எதுக்கு தாத்தா சிரமப்படுறீங்க?'' என்று கேட்டாள் சிறுமி.
தாத்தா கருப்பசாமிக்கு வெட்கமாகிவிட்டது.
'என்னைப்போல எளிமையானவன் கிடையாது' என்று நினைப்பதும்கூட கர்வம்தான். 'அடியேன், அடியேன்' என்று பக்தர்கள் கூறிக்கொள்வது தங்களைத் தாழ்வுபடுத்திக்கொள்ளத்தான்.
குலசேகர ஆழ்வார் தமது 'முகுந்த மாலை'யில், ''லோகநாதா, உமது அடியார்க்கு அடியார் என்ற வரிசையில், ஏழாவது அடியேனாக என்னை நீர் நினைக்கவேண்டும்'' என்று தெய்வத்திடம் வேண்டுகிறார்.
'த்வத் ப்ருத்ய ப்ருத்ய, பரிசாரஹ ப்ருத்ய ப்ருத்ய, ப்ருத்யஸ்ய ப்ருத்ய, இதிமாம் ஸ்மர லோகநாத...'


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:12 pm

சுந்தரத்தை அதட்டிய சுந்தரம்
ஆன்மிகக் கூட்டம் எங்கே நடந்தாலும் தவறாமல் சென்றுவிடுவது, நம்ம நண்பர் ஒருத்தரின் வழக்கம். கூட்டம் முடிந்ததும், கையோடு ஒரு மாலையை வாங்கி, அந்தப் பிரசங்கியின் கழுத்தில் போட்டு, சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவார். அவர் செய்த பிரசங்கத்தில் தனக்குப் புரியாத இடம் என்று ஒன்றைக் குறிப்பிட்டு, (ஏதோ மீதியெல்லாம் புரிந்துவிட்டதுபோல) அதை விளக்கிச் சொல்லும்படி பணிவுடன் கேட்டுக்கொள்வார்.

அன்றைய தினம், பிரசங்கம் செய்தவர் கீதை ஸ்லோகம் ஒன்றை விளக்கினார்

உத்தரே தாத்மனாத்மானம் நாத்மான மவஸாதயேத்
ஆத்மைவஹ்யாத்மனோ பந்து ராத்மைவ ரிபு ராத்மன

அதாவது, 'ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக்கொள்ள வேண்டும். தனக்குத் தானே நண்பன்; தனக்குத் தானே எதிரி' என்றார். பிரசங்கம் முடிந்தது. வழக்கம்போல் அவரைச் சந்தித்த நமது நண்பர், ''சாமி, எனக்கு ரொம்ப நாளா ஒரு பிரச்னை. நீங்கதான் தீர்த்து வைக்கணும்'' என்றார்.

''என்ன சந்தேகம்?''

''சாமி, என் மனைவி சதா என்னை வேலை வாங்குறா. வீட்டை விட்டு ஓடிப் போய் சாமியாராயிடலாமான்னு பார்த்தாலும், அதுக்கும் துணிவு இல்லை; வேலை செய்யவும் பிடிக்கலை. நான் என்ன செய்யறது, சொல்லுங்க!''

இதைக் கேட்டு அந்த ஆன்மிக குரு சிரித்தார். ''இதுக்கு நான் பதில் தரமுடியாது. ஆனா, ஒரு முகவரி தரேன். அங்கே போ! உன் கேள்விக்கான விடை கிடைக்கும்'' என்று சொல்லி, முகவரியைத் தந்தார்.

மறுநாள்... காலை 6 மணிக்கெல்லாம் அந்த முகவரிக்குப் போய்விட்டார் நண்பர். அவர் தேடிப்போன வீட்டின் வாசல் கதவு இன்னும் திறக்கவேயில்லை. திண்ணையில் பொறுமை யாக உட்கார்ந்துகொண்டார். சில விநாடிகளில், உள்ளிருந்து ஓர் அதட்டல் குரல் கேட்டது... ''டேய் சுந்தரம்! எவ்வளவு நேரம்தான் தூங்குவே! எழுந்து போய் பல்லைத் தேய்!''

சிறிது நேரம் கழித்து, உள்ளிருந்து மீண்டும் சத்தம்... ''டேய் சுந்தரம்... போய் அடுப்பை மூட்டிப் பாலைக் காய்ச்சு! மறுபடி என்னடா உனக்குத் தூக்கம்?''

நண்பருக்கோ வியப்பு. அந்தச் சுந்தரத்தைப் பார்க்கத்தான் பிரசங்கி இவரை அனுப்பியிருந்தார். அவரையே இப்படி யாரோ அதட்டி உருட்டி வேலை வாங்குகிறார்களே!

சற்று நேரத்தில் கதவு திறந்தது. நண்பர் எழுந்து, கதவு திறந்த ஆசாமியை வணங்கி, ''சுந்தரம் இருக்காருங்களா?'' என்றார்.

''நான்தான் சுந்தரம்.''

''உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.''

''சந்தோஷம், உள்ளே வாங்க!'' என்றவர், ''டேய் சுந்தரம்! நாற்காலியை எடுத்துப் போடுடா!'' என்று ஓர் அதட்டல் போட்டுவிட்டு, பிறகு தானே சென்று நாற்காலியை எடுத்து வந்து போட்டார்.

நண்பருக்குப் புரியவில்லை. அதற்குள் அடுத்த அதட்டல்... ''டேய் சுந்தரம், காபி கலந்துட்டு வந்து, அவருக்கு ஒரு டம்ளர் கொடுத்துட்டு, நீயும் ஒரு டம்ளர் எடுத்துக்கோ!''

சுந்தரம்தான் அதட்டினார்; அவரேதான் சமையல் அறைக்கு சென்று, காபி கலந்து கொண்டு வந்தார்.
''வீட்ல யாரும் இல்லீங்களா?'' - நம்மவர் கேட்டார்.

''மனைவி இருக்கா. தூங்கிட்டிருக்கா!'' என்றார் சுந்தரம்.

நம்ம நண்பர் எழுந்தார்; கும்பிட்டார். ''நான் கிளம்பறேன் சார்! என் சந்தேகம் தெளிஞ்சுடுச்சு!'' என்று மன நிறைவுடன் புறப்பட்டார்.

பிறத்தியார் கட்டளையிடும்போதுதான் நமக்கு எரிச்சலும் கோபமும் ஏற்படுகிறது. தன்னைத் தானே விரட்டிக் கொண்டால், வேலை செய்ய எரிச்சல் வராது. 'தானே தனக்கு நண்பன். தானே தனக்கு எதிரி' என்று கீதை சொல்வதுபோல, தானே தனக்கு எஜமான், தானே தனக்கு வேலையாள் என்கிற மனோநிலையை வளர்த்துக்கொண்டால், பிறத்தியார் தன்னை வேலை வாங்குகிறார்களே என்று எரிச்சலும் எழாது; ஓடிப்போய் சாமியாராகி விடலாம் என்ற எண்ணமும் தோன்றாது!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:14 pm

சமீபத்தில் பெங்களூரு சென்றிருந்த போது, சத்யாரண்யபுரா என்ற புறநகரில் 'அழுக்குச் சாமியார்' என்ற ஒரு சாமியாரைச் சந்திக்க நேர்ந்தது.

ஒல்லியான தேகம்; அடர்ந்த தாடி; தோளைத் தொடும் நீள முடி. பக்தர்கள் அனைவரும் சென்றதும், என்னை மட்டும் நிறுத்தி, ''உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்'' என்று, தனது அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். அவரது பெயருக்கேற்ப அறை ஒரே குப்பையும் கூளமுமாக இருந்தது. அறைக்குள் சென்றதும், ''டேய்... என்னைத் தெரியலையா? நான்தான்டா... உங்க எதிர் வீட்டுக் காசுக்கடை துவாரகேஷ்!'' என்றார் அழுக்குச் சாமியார்.

''அடப்பாவி, துவாரகேஷா? எட்டு வருஷமா உங்க வீட்ல உன்னைத் தேடிக்கிட்டிருக்காங்க. நீ சாமியாரானது அவங்களுக்குத் தெரியாதா?'' என்றேன். துவாரகேஷ், தான் சாமியாரானதற்கான காரணத்தைச் சொன்னபோது, ஆச்சரியம்தான் எழுந்தது.


துவாரகேஷின் வீடு, விசாலமான பெரிய வீடு. தினமும் வேலைக் கார முனியம்மா கிழவி வந்து, அறைகளையெல்லாம் சுத்தமாகப் பெருக்கித் துடைப்பாள். அதில் அவளுக்கு ஒரு நாளும் சலிப்பு உண்டானதில்லை. சலிப்பு, கடுப்பு, எரிச்சல் எல்லாம் துவாரகேஷூக்குதான்!

காலை ஏழு மணிக்கு, தனது அறையில் அமர்ந்து, செய்தித்தாளைப் படித்துக்கொண்டு இருப்பான். திடீரென மின் விசிறி நின்றுவிடும். கரன்ட் கிரன்ட் கட் அல்ல; முனியம்மாதான் ஆஃப் செய்திருப்பாள்... பெருக்குவதற்காக!

எரிச்சலுடன் துவாரகேஷ் பேப்பரை அள்ளிக் கொண்டு, எதிர் அறைக்குப் போய், மோடாவில் அமர்ந்த மூன்றாவது நிமிஷம், மூக்கை அறுக்கும் கொடிய வாடையுள்ள, தரையைச் சுத்தப்படுத்தும்
திரவத்தையும், மாப் செய்யும் கோலையும் தூக்கிக்கொண்டு வேலையைத் தொடங்கிவிடுவாள் முனியம்மா.

துவாரகேஷ் பல்லைக் கடித்தபடி எழுந்து, வேறு அறைக்குச் செல்வான்.
ஐந்தாவது நிமிஷம் முனியம்மா அங்கே வருவாள். பக்கெட்டில் தண்ணீரை மொண்டு தரையில் சளீர் சளீர் என்று வீசத் தொடங்கி விடுவாள். சிலபல துளிகள் துவாரகேஷ் மீதும் விழும்.

இப்படியாக, தினமும் காலை வேளையில் அறைக்கு அறை விரட்டி அடிக்கப்பட்டுக் கொண்டிருந்த துவாரகேஷ், ஒரு கட்டத்தில் வாழ்க்கையே வெறுத்து, இல்லறமே வேண்டாம் என்று வீட்டைவிட்டு ஓடிச் சாமியாராகி விட்டான்(ர்).

பெருக்குவது என்றாலே, ஆசையைப் பெருக்குவது என்றுதான் பொருள். ஆகவே, ஆஸ்ரமத்தில் தனது அந்தரங்க அறையை யாரும் பெருக்கிவிடக்கூடாது என்பது, துவாரகேஷ் விதித்திருந்த கடுமையான சட்டம். அறை பூராவும் அழுக்கு; குப்பை. ஆகவே, பக்தர்கள் அவரை 'அழுக்குச் சாமியார்' என்றும், 'குப்பைச் சாமியார்' என்றும் போற்றிப் புகழ்ந்தனர்.

''துவாரகேஷ்! எவ்வளவு பெரிய பங்களா உன்னுடையது! அதை விட்டுவிட்டு இப்படிக் குப்பைச் சாமியாராக ஆகிவிட்டாயே?'' என்றேன். ''வீடு என்ன வீடு... அது ஸாரூப- ஸாமீப- ஸாலோக- ஸாயுஜ்யமா என்ன?!'' என்று சொல்லிச் சிரித்தார் சாமியார்.

அது என்ன ஸாரூப- ஸாமீப- ஸாலோக- ஸாயுஜ்யம்?

ஸாரூப்யம் விபூதியும் ருத்ராக்ஷமும் அணிந்து, சிவ வேஷம் தரித்து, சிவோஹம் என்று தன்னையே சிவனாக பாவித்துச் சிவ பூஜை செய்வதால், இங்கேயே ஸாரூப்ய முக்தி எய்தப்பட்டதாகிறது.

ஸாமீப்யம் மெய்ம்மறந்து இறைவனைத் துதிக்கும்போது, துதியாகிற வாகனத்தில் ஏறிப் பறந்து, எட்டமுடியாத அவன் திருவடிகளை எட்டிப்பிடித்துவிட்ட ஆனந்தத்தை அடை கிறோமல்லவா... அதுவே ஸாமீப்ய முக்தி!

ஸாலோக்யம் சிவ பக்தியையே தலையால் தாங்கி நிற்கும் அடியார்களுடன் கூடியிருத்தலே, சிவலோகத்தில் வாழும் ஸாலோக்ய முக்தி.
ஸாயுஜ்யம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைத் தியானித்திருத்தலே ஸாயுஜ்ய முக்தி!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:16 pm

நமக்குத் தெரிஞ்ச ஒரு ஆசாமி, சரியான எடக்குமடக்குப் பேர் வழி. நாலு தெரு தள்ளி, ஒரு பூங்கா; அங்கேதான் நம்ம எடக்குமடக்கு தினமும் வாக்கிங் போவது வழக்கம்.

பூங்காவுக்கு அருகிலேயே, அம்மன் கோயில் ஒன்று பாழடைந்து கிடந்தது. விளக்கு ஏற்றக்கூட யாரும் வருவதில்லை. பாவப்பட்ட குருக்கள் ஒருத்தர், தினமும் கொஞ்சம் நேரம் கோயிலைத் திறந்து வைப்பார். எடக்குமடக்கின் மனைவி, ''பூங்காவைச் சுத்தும்போது, அப்படியே அந்தக் கோயிலையும்தான் ரெண்டு சுத்து சுத்திட்டு வாங்களேன்'' என்பாள். உடனே எடக்கு மடக்கு, ''அந்த அம்மனுக்கு பவரே கிடையாது. பவர் இருந்தால், தன் கோயி லைப் பாழடைய விட்டிருப்பாளா?'' என்று மடக்குவார்.

ஒருநாள் காலையில்... வழக்கமாக பெரிய டம்ளரில் காபி எடுத்து வரும் எ-ம மனைவி, மிகச் சிறிய டம்ளரைக் கொண்டு வந்தாள். ''ஏன்... ஸ்பூன்ல கொண்டு வரது தானே?!'' என்று எரிச்சலானார் எடக்கு.

''இது காபி இல்லை; நல்லெண்ணெய். வாய்ல புண்ணுன்னு சொன்னீங்களே... அதான்!

நல்லெண்ணெயை அரை மணி நேரம் வாயிலே வெச்சிருந்து, பிறகு கொப் பளிச்சா, வாய் புண் குணமாகும்னு பத்திரிகையில படிச்சேன். நீங்க வாக்கிங் போகும் போது வாயில நல்லெண்ணெயை ஊத்திக்குங்க. வீட்டுக்கு வந்ததும் கொப்பளிச்சிடுங்க'' என்று புரோகிராம் போட்டுக் கொடுத்தாள் மனைவி.

ஆனால், சோதனையாக, எடக்கு வாயில் எண்ணெயை ஊற்றிக்கொண்டு தெருவில் இறங்கிய ஐந்தாவது நிமிஷம், அவருடைய ஆபீசர் எதிரே வந்தார். ''அடடே! உன் வீட்டுக்குத்தான் வர்றேன்!'' என்று ஸ்கூட்டரை நிறுத்தினார். வேறு வழியில்லாமல், எண்ணெயைத் துப்பிவிட்டு அவரிடம் பேசினார் எடக்கு. வீட்டுக்குப் போனதும், நடந்ததை மனைவியிடம் சொன்னார்.

அவள் விடுவாளா! மறுநாள், எக்ஸ்ட்ராவாக ஒரு சின்ன எவர் சில்வர் தூக்கில் எண்ணெய் ஊற்றித் தந்தாள். ''வாக்கிங் போகும்போது துப்பும்படி ஆயிட்டா, இதை வாயில் ஊத்திக்குங்க'' என்றாள்.
தினமும் அவர் இப்படி எவர்சில்வர் தூக்கோடு நடந்து போவதை, அடுத்த தெருவில் உள்ள ஒரு பெண்மணி கவனித்துவிட்டு, ''தினமும் எண்ணெய் கொண்டு போறீங்களே, கோயிலுக்கா?'' என்று கேட்டாள்.

அவளிடம், தான் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொப்பளிப்பதை யெல்லாம் விளக்க விரும்பாமல், 'ஆமாம்' என்று தலையாட்டி வைத்தார் நம்மாள்.

மறுநாள்... அந்தப் பெண்மணியின் கையில் ஒரு சொம்பு எண் ணெய். ''தயவுசெஞ்சு இதையும் சேர்த்துக்கங்க'' என்று எண்ணெயை அவரது எவர்சில்வர் தூக்கில் ஊற்றினாள். இதே போலவே அடுத் தடுத்த நாளில் நிறையப் பேர் காத்திருந்து, எடக்குமடக்கின் தூக்கில் தங்கள் பங்காகக் கொஞ்சம் எண்ணெய் ஊற்றினார்கள்.

கோயிலுக்கு எண்ணெய் ஊற்றுவதை வேண்டாம் என்று சொல்ல மனமின்றி, அவரும் தட்டாமல் வாங்கிக் கோயிலுக்கு அந்த எண்ணெயைக் கொடுத்து வந்தார்.

நிறைய எண்ணெய் கிடைத்ததால், தினமும் கோயிலில் ஏராளமாக விளக்கேற்றி வைத்தார் குருக்கள். அதிகப்படியான எண்ணெயை விற்றுப் பிரசாதம் செய்து, வருபவர்களுக்கு விநியோகித்தார்.
பூங்கா கோயில் மாலை வேளையில் ஜெகஜ்ஜோதியாகிவிட்டது. காணிக்கைகள் ஏராளமாக வந்தன. கொஞ்ச நாளில் கோயில் புதுப்பிக்கப்பட்டுப் கும்பாபிஷேகமே நடந்தது.

எடக்குமடக்குவிடம் அவர் மனைவி சொன்னாள்... ''அந்த அம்ம னுக்கு பவர் இல்லை; தன் கோயிலையே அவளால் கட்டிக்க முடி யலே'னு சொன்னீங்களே... இப்ப பார்த்தீங்களா, உங்களைக்கொண்டே அதை நிறைவேத்திக்கிட்டா!''

எதை, எப்படி, எப்போது யாருக்குச் செய்ய வேண்டும் என்பதை தெய்வத்துக்கு நாம் சொல்லித்தர வேண்டியதில்லை. தனக்கே என் றாலும், அதற்குத் தெரியும்... எதை, எப்போது செய்வது என்று!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:19 pm

தினமும் வாக்கிங் போகிறபோது, நம்ம ஆள் ஒருத்தரைத் துணைக்குக் கூட்டிக்கிட்டுப் போவது என் வழக்கம். கொஞ்ச நாளாக அவர் முகத்திலே தெம்பில்லை.
அவரைத் துருவினபோது தெரிஞ்சது, அவருடைய சோகத்துக்குக் காரணம். அவர் சம்சாரம் இப்பெல்லாம் ரொம்ப மாறிவிட்டாளாம்.

''வீட்டிலே ரெண்டு பொண்ணுங்க இருக்கு. அதுங் களுக்குத் தலை பின்னி விடறது, சமைக்கிறது ஆகிய வேலைகளைக்கூடச் செய்யறது இல்லை! சதா கால மும் பூஜை, விரதம், கோயில், குளம், காலட்சேபம்னு இப்படித்தான் நாள் பூராவையும் செலவு செய்யறாள்'' என்று அங்கலாய்த்தார்.
''பக்தியாயிருக்கிறது நல்ல விஷயம்தானே? சினிமா கினிமா, ஷாப்பிங் கீப்பிங்னு ஊர் சுற்றினாதான் தப்பு!'' என்றேன்.

''சரி, எதுக்கும் ஒரு அளவில்லையா? கோயிலைச் சுத்தட்டும்; வேண்டாங்கலே! ஆனா, தினமும் விடியற்காலை அஞ்சு மணிக்கெல்லாம் குளிச்சிட்டு, தலையைத் துடைத்துக்கொள்ளாமல் ஈரம் சொட்டச் சொட்ட போய் நூற்றெட்டு சுத்து சுத்தணுமா? அது மட்டுமில்லே, பஞ்சாங்கத்தில் போட்டிருக் கிற அத்தனை விரதங்களையும் ஒண்ணு விடாம கடைப்பிடிக்கிறாள். மாசத்தில் பாதி நாள் அரைப் பட்டினி; மீதிப் பாதி நாள் முழுப் பட்டினி. எப்போ பார்த்தாலும் வீட்டிலே விதவிதமான சுலோகங்கள் படித்துக்கொண்டே இருக்கிறது, ஜபம் பண்றது, தினமும் காலையில் ரெண்டு மணி நேரம் பூஜை... எனக்குப் பயமாயிருக்குடா!'' என்றார் நண்பர்.

''என்ன பயம்?''

''சாமியாரிணியாகப் போயிடப்போறாளோங்கிற பயம்தான்! அவளுக்கும் சிஷ்யகோடிகள் சில பேர் ரெகுலரா வர ஆரம்பிச்சிருக்காங்க. இவ பெயரும் ஏற்கெனவே தெய்வநாயகி ஆச்சா... ரொம்ப சௌக ரியமா போச்சு. தெய்வம், தெய்வம்னு கூப்பிட்டுகிட்டு அடிக்கடி வந்துடறாங்க. வீட்டைத் துறந்து, கும்பலாகக் கிளம்பி காசி, ஹரித்துவார்னு போயிடுவாளோன்னு பயமாயிருக்கு!''
இதற்கு ஒரு வாரம் கழித்து, நான் அந்த நண்பர் வீட்டுக்கு ஒரு பிஸினஸ் விஷயமாகப் போகும்படி ஆயிற்று. நான் போன நேரத்தில் வீட்டிலே 'தெய்வம்' இல்லை. யார் வீட்டுக்கோ பாத பூஜை ஏற்றுக் கொள்ளப் போயிருப்பதாக நண்பர் சொன்னார்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, அடுத்த அரை மணிக்குள் 'தெய்வம்' வீடு திரும்பிவிட்டது. என்னைப் பார்த்ததும், ''இருங்கோ, காபி கொண்டு வரேன்'' என்று 'தெய்வம்' அருள்வாக்கு உதிர்த்துவிட்டு, உள்ளே போய் காபி கொண்டு வந்து தந்து உபசரித்தது.

கிளம்பும்போது, எங்களுடன் கூடவே வாசல் வரை வந்த தெய்வ நாயகி, தன் கணவரிடம், ''நான் மாமாகிட்டே கொஞ்சம் தனியாப் பேசணும். நீங்க உள்ளே போய் இருங்க. இதோ வந்துடறேன்'' என்றாள்.

அவள் என்னிடம் இரண்டொரு கேள்விகள் கேட்டாள். பதில் சொன்னேன்.

ராத்திரி எட்டு மணி சுமாருக்கு நண்பர் போன் செய்து, ''தெய்வா உங்கிட்டே என்னடா கேட்டாள்?'' என்றார்.

''பயத்தை விடு! உன் சம்சாரம் ஒரு நாளும் சாமியாரிணி ஆகிவிட மாட்டாள். கவலையே படாதே!'' என்றேன்.

''அதிருக்கட்டும்... தெய்வா உங்கிட்டே என்னடா கேட் டாள்? அதைச் சொல்லு!'' என்றார்.

''எல்லா பாங்க் டெபாசிட்டையும் பார்த்தாள். பாதியைத் தன் பேருக்கு மாற்றச் சொல்லி ஏற்பாடு பண்ணும்படி கேட்டுக்கொண்டாள். இப்ப புரியுதா, அவள் சாமியாரிணி ஆகிவிடுவாளோங்கிற உன் பயம் அர்த்தமற்றதுன்னு?'' என்றேன்.

''அப்பாடா! இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு!'' என்றார் நண்பர்.

திருவருட்பிரகாச வள்ளலார் சரியாகத்தான் பாடியிருக்கிறார்...

''சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன்
துன்னு நற்றவமெலாம் சுருங்கி
ஆற்றிலே கரைத்த புளி எனப்போம்...''


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:23 pm

நம்ம ஆள் ஒருத்தருக்கு, 'ஒன்வே டிராஃபிக்'னு பேரு. யாராவது வெகுமதி தந்தால், 'வந்ததை வரவில் வை'ன்னு சந்தோஷமாக வாங்கிக்கொள்வார். ஆனால், அவரிடமிருந்து சின்னப் பொருள்கூட அடுத்தவருக்குக் கிடைக்காது. இந்த நண்பர் அனுசரிக்கிறாரோ இல்லையோ... 'பதில் மரியாதை' என்னும் நல்ல பழக்கம், இன்றைக்கும் பலரிடம் இருக்கத்தான் செய்கிறது.

நான் இருக்கும் குடியிருப்பில், எங்கள் வீட்டுப் பாத்திரங்கள் அடிக்கடி அக்கம்பக்கத்து வீடுகளுக்குப் போவதும் வருவதுமாக இருக்கும். திரும்பி வருகிற பாத்திரத்தை ஆராய்ந்தால், உள்ளே பலகாரமோ பட்சணமோ... குறைந்த பட்சம் இரண்டு வாழைப்பழங்களாவது இருக்கும்.

சம்பிரதாயம் தெரிந்தவர்கள், காலிப்பாத்திரமாகத் திருப்பி அனுப்பமாட்டார்கள். ஒருமுறை... ஒரு வீட்டிலிருந்து, துணி உலர்த்த பயன்படும் சின்னக் கிளிப்புகள்கூட டிபன்பாக்ஸில் வந்திருக்கிறது!
ஒருவரிடம் இருந்து எதையேனும் வாங்கினால், நம்மால் முடிந்த எதையாவது அவருக்குத் திருப்பித் தரவேண்டும் என்கிற உயர்வான எண்ணம், இன்றும் பலரிடம் இருக்கத்தான் செய்கிறது.

குடியிருப்பில் உள்ள பொடியன்கள், நண்பர்களுக்குள் அடிக்கடி பிறந்தநாள் கொண்டாடுவார்கள். கையில் பரிசுப் பாக்கெட்டுகளுடன் செல்வார்கள். திரும்பும்போது, பிறந்தநாள் கொண்டாடிய பையனோ, பெண்ணோ... ஒரு ரிடர்ன் கிஃப்ட் அளித்திருப்பார்கள்.

'பர்த்டே பேபி'க்குச் சில பிள்ளைகள் 300 ரூபாய் பெறுமான கிரிக்கெட் மட்டையைப் பரிசாகத் தந்திருக்க, பர்த்டே பையனோ, இரண்டு ரூபாய் பேனாவை பதில் மரியாதையாகத் தந்திருப்பான். ஆனால், எந்தப் பிள்ளையும் இதையெல்லாம் ஒருபொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்களின் பெற்றோர்தான், ''அவங்க வீட்டைப் பத்திதான் உனக்குத் தெரியுமே?! எதுக்கு 300 ரூபாய்க்கு கிரிக்கெட் மட்டை வாங்கினே? ஒரு கலர் பாக்ஸோ, ஜாமென்ட்ரி பாக்ஸோ தந்திருந்தால் போதாதா?'' என்று அங்கலாய்ப் பார்கள்.

இதில் எந்த நியாய, தர்மமும் இல்லை. தராசுக் கணக்கெல்லாம் இங்கே உதவாது. மனசுதான் இங்கே பிரதானம். 'பத்து ரூபாய் பரிசுக்கு, பதில் மரியாதையும் பத்து ரூபாய்' என்று சிலர் நினைப்பார்கள். பெண்களில் சிலர், ரவிக்கைத் துணிக்கு ரவிக்கைத் துணி... அதுவும் எப்படி? 60 செ.மீ. தந்தால், இந்தா பதிலுக்கு 60 செ.மீ. ரவிக்கைத் துணி என்று அளக்காத குறையாக ரிடர்ன் கிஃப்ட் தருவார்கள்.

குபேரனுக்கு நிகரான செல்வந்தராக இருந்தவர் பட்டினத்தார். கொடுத்துக் கொடுத்துக் கை வலித்ததோ என்னவோ... ஒரு நாள் வீட்டையே திறந்து வைத்துவிட்டு, 'வேண்டியவற்றை அள்ளிக்கொள்ளுங்கள்' என்று ஊர் மக்களிடம் அறிவித்துவிட்டுத் துறவியாகிவிட்டார். இப்படி ரிடர்ன் கிஃப்ட் எதிர்பாராத வெகுமதியைத் தானம் என்கிறோம். தானம் தரும்போது கர்வமோ, பெறுபவரிடம் இருந்து எந்தவித எதிர்பார்ப்போ இருக்கக்கூடாதாம்!

'இந்தத் தானத்தையும், இதனால் வரும் புண்ணியத்தையும் சேர்த்தே தானமாகத் தந்தேன் என தானம் செய்யவேண்டும்' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

தானம் செய்வதை ஸாத்விக, ராஜஸ, தாமஸ என மூன்றாக வகைப்படுத்தியுள்ளனர்.
யத்து ப்ரத்யுபகாரார்த்தம் பலமுத்திச்ய வா புன
தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தானம் ராஜஸம் ஸ்ம்ருதம்

எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கப்படும் தானத்தை ஸாத்விக தானம் என்பர்.
எது பிரதிபலனைக் கருதியும், எதிர்பார்ப்புடனும் கொடுக்கப்படுகிறதோ, அது ராஜஸ தானம்.

இந்தக் காலத்தில், நாம் தரும் கிஃப்டுகளும் ரிடர்ன் கிஃப்டுகளும் ஒரு வகையில் ராஜஸ தானம்தான்!

தகுதியற்ற இடத்தில், தகுதியற்ற காலத்தில், தகுதியற்றவர் களுக்கு, பணிவோ பெருந்தன்மையோ இன்றி வழங்கப்படும் தானத்துக்கு, தாமஸ தானம் என்று பெயர்.


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:24 pm

மயிலிறகு, அன்னத்தின் சிறகு ஆகியவற் றாலான விசிறிகளை அரசர்களுக்கு வீசுவர், பணிப்பெண்கள். ஜமீன்தார்களுக்கும் பெரிய அதிகாரிகளுக்கும் 'பங்கா' இழுத்துக் காற்று வீசுவதற்கென்றே பணியாள் உண்டு.
தற்போது, பவர் கட் அடிக்கடி நிகழ்கிறது. இந்த தருணத்தில், நாம் என்ன செய்யவேண்டும்? எப்படிச் சமாளிப்பது?

இன்னின்ன இடங்களில் இன்றைக்கு கரன்ட் கட் செய்யப்படும் என ஏரியாவாரியாக முன்கூட்டியே தெரிவித்துவிடுகின்றனர். இதற்காக நன்றி சொல்லலாம் (பல இடங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேலேயே மின்தடை நீடிக்கிறது. அதற்கு அவரவரும் தனியே கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள்க!).


அந்தக் காலத்தில் தீவட்டிக் கொள்ளைக்காரர்கள், 'இந்த ஊரில், இந்த நாளில் கொள்ளையடிக்க வருவோம்' என்று முன்பே தெரிவிப்பார்களாம்! அந்த ஊர்மக்களும் அதற்குத் தகுந்தாற்போல் ஜாக்கிரதையாகவோ அஜாக்கிரதையாகவோ இருப்பார்கள். மக்களில் சிலர், அவர்களுக்கு தோசை, ஆப்பம் என உணவுகூட தயாரித்து வைப்பார்களாம். 'பாவம், எவ்ளோ தூரத்துலேருந்து கொள்ளையடிக்க- அதுவும் இத்தனை மையிருட்டுல வர்றாங்க!' என்கிற பரிதாபம்தான்! சிலநேரம் கொள்ளையர்களே தங்கள் விருப்ப உணவைக் குறிப்பிட்டு, அதைச் செய்து வைக்கும்படி கட்டளை இடுவதும் உண்டு.

இப்போது மின்தடை அறிவிப்பைப் பத்திரிகையில் படித்ததும் நிலைகுலைந்து போய், மெழுகுவத்திகளை வாங்கி வைப்பது, பலவீனர்கள் செய்யும் காரியம். புத்திசாலிகளும் பிழைக்கத் தெரிந்தவர்களும், மின் வெட்டு அறிவிப்பைப் படித்ததுமே, அடுத்த ஏரியாவில், கரண்ட் சப்ளை இருக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்று, பிரச்னைக்குத் தீர்வு காண்பார்கள். இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு, இரண்டு தலையணைகளுடன், உறவினர் அல்லது சிநேகிதர் வீட்டுக்குச் செல்பவர்கள் இங்கு அதிகம்.

விடிந்ததும், நன்றி தெரிவித்துவிட்டுச் சட்டுப்புட்டென்று புறப்பட்டுவிடவேண்டும். ''காபி சாப்பிட்டுட்டுப் போகலாமே?'' என்பார்கள் இடம் கொடுத்தவர்கள். ''ஆஹா... அதற்கென்ன?'' என்று ஏற்கக்கூடாது. 'நாம் கிளம்புகிறோம்' என்றதுமே அவர்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தாகி விட்டது. ஆகவே, அடுத்து இன்னொரு சந்தோஷத்தை தரத் தேவையில்லை.

ஜெனரேட்டர்கள், இன்வர்ட்டர்கள் முதலான சாதனங்களை வைத்திருப்பவர்கள், நித்ய சூரிகள்போல தாங்கள் நிரந்தரமான சொர்க்கவாசிகள் என நினைத்துக்கொண்டு, கர்வத்துடன் இருப்பார்கள். இதனை ஆங்கிலத்தில், Hot Vanity அல்லது Summer Vanity என்பர் (இப்படியான பிரயோகம் எதுவும் ஆங்கிலத்தில் இல்லை. சும்மா... நடுவே இப்படி ஏதாவது போடுவது கட்டுரைக்கு அழகூட்டுமே!). சில அடுக்கங்களில்தான் ஜெனரேட்டர் வசதி உண்டு. இன்னும் சிலர், மினி ஜெனரேட்டர்களை தங்களின் வசதிக்குத் தக்கபடி வைத்துக்கொள்வார்கள். இந்த 'மினி'யை இயக்கக்கூட, பலசாலியான நபர் தேவை.

கரன்ட் இருந்தால் மஜாவாக ஏ.ஸி. போட்டுக்கொண்டு தாம் தூம் என மகிழ்வதும், இல்லையெனில் வள்வள்ளென எல்லார் மீதும் (முக்கியமாக, மின்வாரியம்) எரிந்து விழுவதும் கூடவே கூடாது என்கின்றனர் சான்றோர். கீதையில் பகவான்... 'ஆசை, பயம், கோபம் ஆகியன இல்லாதவர்கள், என்னைப் போன்ற தெய்வத் தன்மையை அடைந்திருக்கிறார்கள்' என்கிறார் (வீதராக பயக்ரோதா மத் பாவமாகதா) ஆகவே, ஆசை, பயம், கோபம் ஆகியவற்றுக்கு ஆட்படக் கூடாது.

எப்போதும் கரன்ட் இருக்கவேண்டும் என ஆசைப்படுவதும்; வந்த கரன்ட் போய்விடுமோ என பயப்படுவதும்; இவ்வளவு நேரமாகியும் மின்வாரியம் செயல்படாமல் உள்ளதே எனக் கோபம் கொள்வதும் கூடவே கூடாது.

பகவான் கீதையில் மொழிந்ததை, நடைமுறையில் 'மின் வெட்டு' கற்றுத் தரும் இந்த அரிய படிப்பினையை, கரன்ட் கட்டாகிப் போன இருட்டில் அமர்ந்து, அமைதியாகச் சிந்திக்க... ஞான வெளிச்சம் கிடைக்கும் என்கின்றனர் பெரியோர்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:26 pm

சரபோஜி ராஜா காலத்தில், தஞ்சாவூர்ப் பக்கம் சிங்கராயர் என்ற பிராமணர் ஒருவர் இருந்தார். ஒருநாள், திருடன் ஒருவன், சிங்கராயர் வீட்டுப் புழக்கடையை அடைந்து, பதுங்கியிருந்தான்.

இரவு உணவை முடித்துவிட்டு, சிங்கராயரும் அவருடைய மனைவியும் பேசிக்கொண்டிருந்தது, அவன் காதுகளில் விழுந்தது. மறுநாள் விடியற்காலை, சிங்க ராயர் தன் மகள் வீட்டுக்குச் சென்று, அவள் தரும் ஒரு லட்சத்தை வாங்கி வரப்போகிறார் என்று தெரிந்தது. அவரின் மகள், நன்னிலம் கிராமத்தில் குடியிருந்தாள். பெரும் மிராசுதார்கள் வாழ்ந்த கிராமம் அது!

ஒளிந்திருந்து சகலமும் கேட்ட திருடன், நிதானமாகக் கணக்குப் போட்டான். 'இப்போது திருடினால், அஞ்சோ பத்தோதான் கிடைக்கும். இந்த ராயர், மகள் வீட்டிலிருந்து திரும்பும்போது, மண்டையில் ஒரு போடு போட்டு, லட்சத்துடன் ஓடிவிடலாம்!' எனத் திட்டமிட்டான்.

நன்னிலம் சென்று, மகள் வீட்டில் உணவை முடித்து, மாலையில் அங்கிருந்து கிளம்பினார் சிங்கராயர். ''அப்பா! ஏதோ என்னால முடிஞ்சதைத் தந்திருக்கேன். ஆயிரம், ரெண்டாயிரம் குறைவாக இருக்கலாம். தப்பா நினைச்சுக்காதீங்க'' என்று சொல்லி, ஓலைப்பெட்டி ஒன்றை அவரிடம் கொடுத்தாள் மகள்.

ராயர் புறப்பட்டார்; அவரைப் பின்தொடர்ந்தான் திருடன். பாதி வழியில், பின்னந்தலையில் பலமான அடி விழ... ரத்தம் பீறிடச் சரிந்தார் ராயர். அவர் கையிலிருந்து ஓலைப்பெட்டியைப் பிடுங்கிக்கொண்டு ஓடத் தயாரானான் திருடன். சட்டென அவனது கையைப் பற்றிக் கொண்ட சிங்கராயர், ''தம்பி, இதுல ஒரு லட்சம் இருக்கும். எண்ணிப் பாரு. எதுனா குறைஞ்சிருந்தா, அதை நீயே போட்டு, பச்சைவயல் ராமர் கோயில்ல சேர்த்துடப்பா!'' என்று சொல்லிவிட்டு, இறந்துவிட்டார்.

பிறகு, ஒரு மறைவான இடத்துக்குச் சென்று ஓலைப் பெட்டியைத் திறந்து பார்த்தான் திருடன். உள்ளே... நிறைய நோட்டுகள். ஆனால், ரூபாய் நோட்டுகள் அல்ல; பள்ளிச் சிறுவர்கள் எழுதுகிற நோட்டுப்புத்தகங்கள். அவை அனைத்திலும், 'ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம்' எனப் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருந்தது. 'இதைத்தான் லட்சம் என்றாரா அந்த ராயர்' என்று நொந்துபோனான் திருடன். 'சரி, பணம்தான் கிடைக்கவில்லை. இந்த நோட்டுக்களை அவர் சொன்னபடி கோயிலிலாவது சேர்ப்போம்' என்று தீர்மானித்தான்.

அதையடுத்து, ராமர் கோயிலில் அந்த நோட்டுக்களைக் கொடுப்பதற்கு முன், பொறுமையாக எண்ணிப்பார்த்தான். லட்சத்துக்கு 2,000 குறைவாக இருந்தது. தானே பொறுமையாக 2,000 தடவை ஸ்ரீராமஜெயம் எழுதிப் பூர்த்தி செய்து, சிங்கராயர் சொன்ன ராமர் கோயிலுக்கு அதை எடுத்துச் சென்று சேர்த்தான் திருடன்.

கோயிலில், அடுத்து நடக்கவுள்ள குடமுழுக்கின் போது, பக்தர்கள் எழுதிய திவ்யநாமப் பிரதிகளை விக்கிரகத்தின் அடியில் போடுவதாகத் திட்டமிட்டு, எல்லோரையும் எழுதச் சொல்லியிருந்தனர். சிங்கராயர் தன்னால் முடியாமல், மகளிடம் இந்தப் பணியைக் கொடுத்திருந்தார். திருடன் அந்த திவ்ய நாம நோட்டுகளைத்தான் ஆலயத்தில் ஒப்படைத்தான்.

அதுமட்டுமா.. அன்றிலிருந்து எங்கே, எதைத் திருடினாலும் அனைத்தையும் பணமாக்கி, அந்தக் கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுக்கத் துவங்கினான். உண்மையான பக்தர் ஒருவரைக் கொன்றதற்கு இதுவே பரிகாரம் எனக் கோயில் திருப்பணிக்கு நிறையவே கொடுத்தான். பின்னாளில், அவன் கைது செய்யப்பட்டுத் தண்டனையும் பெற்றான். ஆனால், அந்தக் கோயிலுக்கு 'திருடன் கோயில்' என்றே பெயர் வந்துவிட்டது.

சின்ன வயதில் என் தாத்தா சொன்ன இந்தத் திருடன் கோயில் கதையில் இடம்பெற்ற கோயில் இப்போதும் உள்ளதா என்று தெரியாது. ஆனால், தாத்தாவை அன்று நான் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் சொன்ன பதிலும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 'சிங்கராயர் கோயில் என்றோ ஸ்ரீராமஜெய கோயில் என்றோ பேர் வைத்திருக்கலாமே, தாத்தா? திருடனைத்தானா ஞாபகம் வைச்சுக்கணும்?!' என்று கேட்டேன்.

''ஸ்ரீருத்ரத்தில் சிவபெருமானை ஸ்தோத்தரிக்கும்போது, 'திருடர்களின் தலைவரே! (ஸ்தாயூனாம் பதயே, நக்தஞ்சரத்ப்ய - பதயே) திருடுவதற்காக இரவில் சஞ்சரிப்ப வரின் தலைவரே! உங்களுக்கு முன்னும் பின்னும் நமஸ் காரம்!' எனப் போற்றுகின்றனர். திருடன், திருட்டுக் கொடுத்தவன் என்கிற பேதமெல்லாம் இறைவனுக்குக் கிடையாது!'' என்றார் தாத்தா.


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:29 pm

நாராயணன் என்று எனக்கொரு நண்பன் இருக்கிறான்; எந்தக் கல்யாண வீட்டுக்குப் போனாலும் சாப்பிட மாட்டான். ஒரு வாழைப் பழம்கூட, ஒரு டம்ளர் பாயசம் கூட... எவ்வளவு வற்புறுத்தினாலும்... ம்ஹூம்!
''ஏதாவது விரதமா, சாணக்கிய பிராண்ட் சபதமா?'' என்று கேட்டேன் ஒருநாள்.

''அதெல்லாம் இல்ல. நான் கொஞ்சம் ஆசாரம். தப்பா நினைச்சுக்காதே'' என்றான். தொடர்ந்து, ''உனக்கு மணவாள மாமுனிகளைப் பத்தித் தெரியுமா?'' என்று கேட்டான்.

''சுமாரா தெரியும்; உன் அளவுக்குத் தெரியாது'' என்றதும், ''தெரிஞ்சதைச் சொல்லேன்'' என்றான்.

என்னைச் சோதிக்கிறான். நானா அசருவேன்?! ''முப்பத்தாறாயிரம் பாசுரங்கள் இயற்றிய வைணவ பக்தர்தானே? பாண்டிய மன்னரிடம் காரியக்காரராக இருந்தார். பொக்கிஷத்தில் இருந்த செல்வங்களைக் கொண்டு, கோயில்களும் அறச்சாலைகளும் கட்டினார். பிறகு, அரச பதவியைத் துறந்து, சந்நியாசியாகி, அழகிய மணவாள ஜீயர் எனப் பெயர் பெற்றார். பெரிய ஜீயர் என எல்லோராலும் அழைக்கப்பட்டார்'' என்றேன் சுருக்கமாக.

உடனே நண்பன், ''சரித்திரத்துக்கு நன்றி! அவர் கீரை வாங்கிய கதை தெரியுமா?'' என்றான். என் பதிலை எதிர்பாராமல், அவனே சொல்லத் துவங்கினான் ''அழகிய மணவாள ஜீயரின் மடத்து வாசலில் தினமும் கீரைக்காரன் ஒருவன், ஒரு கட்டு கீரையுடன் நிற்பான். ஆனால் ஜீயர், கீரையை அங்கீகரிக்கமாட்டார்.

ஒருநாள், அவன் அவரிடம் அழுதேவிட்டான். 'ஸ்வாமி, ஏன் நீங்கள் கீரையை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்?' என்று கேட்டான். அதற்கு ஜீயர், 'நீ யார்? இந்தக் கீரை எப்படிக் கிடைத்தது? நீயே பயிர் செய்தாயா? எவரேனும் பயிரிட்டு உன்னிடம் தருகிறாரா? பயிரிட்டு வளர்த்தவர் எப்படிப்பட்டவர்? இவற்றையெல்லாம் துல்லியமாகத் தெரிந்துகொள்ளாமல், இந்தக் கீரையை மடத்தில் சேர்த்துக் கொள்ளமாட்டேன்' என விவரித்தாராம்..!''

எப்படிப்பட்ட சோற்றை உட்கொள்ளலாம்; எதை உண்ணலாகாது என்பதற்கான விளக்கங்கள், வைணவப் பெரியவர்களின் அறநூல்களில் கூறப்பட்டுள்ளன. அவற்றில், மடி தடவாத சோற்றை உண்ணலாம் என்பர்.

'மடி தடவாத சோறு' என்றால்?

சாப்பிட்ட பின்பு நமது மடியைச் சோறு போட்டவர் தடவிப் பார்க்கக்கூடாது. அதாவது, 'பணம் - காசு ஏதும் வைத்திருக் கிறானா? ஏழை என்று பொய் சொல்லிச் சாப்பிட்டிருக்கிறானா?' எனச் சோதிக்கிறவனிடம் சோறு தின்னக்கூடாது (இப்படியும் சிலர் இருப்பார்கள் போலும்!).

மடி தடவாத சோறுதான் சாப்பிடத்தக்கது. சாப்பிடத் தகாத சோற்றை, ஆறு வகைகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, 'பிணச் சோறு (மரணம் ஏற்பட்ட வீட்டில் இடப்படும் சோறு),

மணச் சோறு (திருமணம் முதலான விசேஷங்களில், யார் யாரோ சமைக்கும் உணவு),

புகழ்ச் சோறு (புகழ் வேண்டி இடப்படும் சோறு),

பொருட் சோறு (ஏதேனும் காரணம் கருதி, பிரதிபலன் எதிர்பார்த்து இடப்படும் சோறு),

எச்சில் சோறு (தங்களது இஷ்ட தெய்வம் அல்லாத பிற தெய்வங்களுக்குப் படைத்தது அல்லது வைணவர்கள் அல்லாத மற்றவர் உண்டதுபோக மிகுந்திருக்கும் சோறு),

மடி தடவிய சோறு என ஆறு சோறுகளும் விலக்கத்தக்கவை என்கின்றன வைணவ கிரந்தங்கள்.
நமது குணங்கள் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது உணவு. அதனால்தான், உணவைப் போற்றித் துதிக்கின்றன, வேதங்கள்.

அன்னாத் பவந்தி பூதானி, பர்ஜன்யாதன்ன ஸம்பவ
யக்ஞாத் பவதி பர்ஜன்யோ யக்ஞ கர்ம ஸ்முத்பவ

'பிராணிகள், உணவிலிருந்தும்; உணவு, மழையிலிருந்தும்; மழை, யக்ஞத்திலிருந்தும்; யக்ஞம், கர்மத்திலிருந்தும் உண்டாகின்றன' என்கிறது கீதை. உயிரினத்துக்கு அடிப்படையான, மூலாதாரமான உணவைச் சாப்பிடுவதில் சில நியதிகளையும் விதிமுறைகளையும் வைத்துக்கொண்டு, முடிந்தவரை நடைமுறைப் படுத்துகின்றனர் என் நண்பன் நாராயணன் போன்ற சிலர். இதில் தப்பேதுமில்லை!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:30 pm

சமுத்திரம் என்ற ஊருக்கு டிக்கெட் வாங்குவதற்கு, அந்தப் பெண்மணி ரொம்பவே சிரமப்பட்டாள். காரணம், அவளுடைய கணவனின் பெயரும் சமுத்திரம் என்பதுதான். 'புருஷன் பெயரைச் சொல்வது மரியாதைக் குறைவு' எனும் பழைமையில் ஊறியவள் அவள்.

டிக்கெட் தருபவர், 'எந்த ஊருக்கு?' என்று கேட்டதற்கு, 'நிறையத் தண்ணி இருக்குமே, அதற்கு' என்றாள். டிக்கெட் தருபவர், 'குளமா, குட்டையா, ஆறா?' என்றெல்லாம் கேட்டாரே தவிர, 'சமுத்திரமா?' என்று கேட்க அவருக்குத் தெரியவில்லை.

''உப்பு நிறைய இருக்குமே!'' என்றாள் பெண்மணி.

டிக்கெட் தருபவரின் வீட்டில் அன்று சாம்பாரில் ஏகப் பட்ட உப்பு. ஆகவே, அந்தக் கடுப்பில் 'சாம்பாரா?' என்றார். கணவனின் பெயரை மனைவி சொன்னால், அவனுக்கு ஆயுள் குறைந்துவிடும் என்பது ஒரு பழங்கால மூட நம்பிக்கை. அநேகமாக, ஏதாவது ஒரு கடவுள் பெயரைத்தான் மனிதருக்கு அந்தக் காலத்தில் பெயராக வைப்பார்கள். அடிக்கடி அந்தப் பெயரைச் சொன்னால் கூப்பிடுகிறவருக்குப் புண்ணியம் கூடும் என்றொரு நப்பாசை.

என் நண்பன் பெயர் நாராயணன். அவன் மனைவி, அவனை ஒரு முறைகூடப் பெயர் சொல்லிக் கூப்பிட்ட தில்லை. அது மட்டுமில்லை... ஆச்சரியப்படக்கூடிய சந்தர்ப்பங்களில்கூட, 'அட நாராயணா!' என்று சொல்ல மாட்டாள்; 'அட, நா!' என்றுதான் சொல்லுவாள்.

இப்போதெல்லாம், பெண்கள் தங்கள் கணவனைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், முழுமையாகச் சொல்லிக் கூப்பிடுவதில்லை. அவரவர் இஷ்டத்துக்குச் சுருக்கிவிடுகிறார்கள். பத்ம நாபன் 'பாத்' ஆகிவிடுகிறான்; கோபாலன் 'கோப்', சீதாராமன் 'சீத்', கிருஷ்ணன் 'கீ', ஜெயச்சந்திரன் 'ஜே'.
'நான் எதுக்கும் கீயைக் கேட்டுச் சொல்கிறேன்' என்று ஒரு பெண் சொன்னால், கீ என்பது கிருஷ்ணனாகிய அவள் புருஷனைக் குறிக்கும் என்பது, கேட்கிறவருக்குச் சட்டென்று புரியாது. அதுவே, 'அவரைக் கேட்டுச் சொல்கிறேன்' என்றால், 'ஓ! கணவனைக் கேட்கவேண்டும் என்கிறாள்' என்று புரியும். எப்படி 'அவன்' என்பது ஆண்டவனைக் குறிக்குமோ அதுபோல், 'அவர்' என்பது கணவனைக் குறிக்கும் சொல்லாகவே பரவலாக இருந்து வருகிறது. ஆனால், பலர் 'அது' என்று அஃறிணையில் கணவனைக் குறிப்பிடுகிறார்கள். 'அது'வைக்கூட அந்த 'அது' பெருமையாகவே எடுத்துக் கொள்ளும்.

அந்த 'அது' கிட்டே நாம் ஒன்றைக் கேட்டால், 'எதுக்கும் அதுகிட்டே ஒரு வார்த்தை கேட்டுடறேன்' என்று சொல்லும். அப்போது அந்த 'அது', மனைவியைக் குறிப்பதாக ஆகிறது. ஆக, டூ இன் ஒன். 'அது'வே புருஷன்; 'அது'வே மனைவி. சில இடங்களில் குழந்தைக்கும் 'அது'வே! குழந்தைக்கு மட்டுமென்ன... மாமனார், மாமியார், தாத்தா, பாட்டி சகலருக்கும் 'அது'வைப் பொதுவாக்கிவிடுவார்கள்.

வேதம் கூட 'அது' நீயாக இருக்கிறாய்; 'தத் த்வம் அஸி' என்கிறது.
'எது நீயாக இருக்கிறாய்? எதை நீ தேடிக்கொண்டு இருக்கிறாயோ, அது நீயாக இருக்கிறாய்!'
ஆட்டைத் தோளிலே போட்டுக் கொண்டு, ஆட்டைக் காணோம் என்று தேடிய ஞாபக மறதி இடையன் மாதிரி, தானே இன்பம் என்பதை மறந்து, வெளியே இன்பம் எங்கே என்று தேடுகிறான் மனிதன்.

'நினைவு (ஸ்மிருதி) தவறியவனாக இருக்காதே' என்கிறது கீதை.
ஸ்மிருதி ப்ரம்ஸாத் புத்தி நாஸ புத்தி நாஸாத் ப்ரணச்யதி
நினைவு இழந்தவன் (தான் யார் என்கிற அடிப்படை நினைவை இழந்தவன்) புத்தியை இழந்தவனாகிறான். புத்தி இழந்தவன், இறந்தவனுக்குச் சமம்.

'நான் இந்த உடம்பு அல்ல; எண்ணங்கள் அல்ல; இந்த நோய் அல்ல; வலி அல்ல; இந்த இன்பம் அல்ல; இந்தத் துன்பம் அல்ல; ந இதி, ந இதி (இது அல்ல, இது அல்ல)' என்று யோகிகள் தங்கள் உண்மை நிலையை ஆராய்ந்து அறிந்து, அதிலேயே இருப்பார்கள். நினைவு என்பது அவர்களைப் பொறுத்தவரை, 'ஆத்மாவே நான்' என்கிற உணர்வுதான்!


Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக