புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
bala_t
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 20, 2014 9:28 pm

First topic message reminder :

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை

ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர். அந்த வீடியோவின் இறுதியில் மற்றொரு அமெரிக்கரும் தோன்றுகிறார். அவர் சிரியாவில் இருந்து 2013ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர்.

ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த படுகொலையை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 15, 2014 9:59 pm

ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் ஆடு, மாடுகளை போன்று ஏலம் விடப்படும் ஈராக் பெண்கள்

ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூர செயலுக்கு இதுவரை மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு உள்ளாக 3 பேரை தலையை வெட்டி கொன்று உள்ளனர் இந்த தீவிரவாதிகள். இந்த காட்டுமிராண்டித்தனமான செயல்களை காட்டிலும் அதிகமான வன்முறை சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். வீடியோ காட்சிகளில் காட்டப்பட்டுள்ளவை அவர்களது தீவிரவாத செயலை வெளிப்படுத்துவதாக அமைந்தாலும் அதனை விட கொடிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்செயல் கொடுமை

ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் தங்களது ஆக்கிரமிப்பை நிலை நிறுத்தி கொண்டாலும் இது கடந்த ஜூனில் இருந்து மிக தீவிரமாகியுள்ளது. அங்குள்ள மக்களை கொடுமைப்படுத்துவதுடன். கொலை செய்யவும் துணிகின்றனர். இவற்றில் மிக கேவலமான விசயமாக, கடத்துவது, கொடுமைப்படுத்துவது, மதம் மாற்றுவது மற்றும் பெண்களை கற்பழிப்பது என வன்செயல் கொடுமை நீள்கிறது.

அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்டுள்ள இணையதள தகவல் ஒன்றில், ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் இளஞ்சிறுமிகள் அவர்களது குடும்பங்களில் இருந்து கடத்தப்படுகின்றனர். அதன் பின் அவர்கள் சந்தையில் ஆடு, மாடுகளை போன்று விற்கப்படுகின்றனர். இது கடந்த 2 மாதங்களில் நடந்துள்ளது. ஈராக் நாட்டு பெண்கள் அவர்களது வீடுகளில் இருந்து கடத்தப்படுகின்றனர்.

அதன்பின் கற்பழிப்பு, கொடுமைப்படுத்துதல், இஸ்லாம் மதத்திற்கு மாற வற்புறுத்துதல், பாலியல் அடிமைகளாக வைத்திருத்தல் போன்ற சொல்ல முடியாத கொடுஞ்செயலுக்கு ஆளாகின்றனர். அவர்களில் சிலர், இஸ்லாம் மதத்திற்கு மாற சம்மதிக்காத வரை அவர்களின் குழந்தைகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடுமையாக தாக்குவதும், அந்த காட்சியை பார்க்கும்படி அவர்களை கட்டாயப்படுத்துவதுமாக வன்செயல் நடந்துள்ளது என அந்த தகவல் தெரிவித்துள்ளது.

ஏலத்தில் விற்பனை

கேதரீன் ரஸ்செல் என்பவர் இது குறித்து எழுதியுள்ள தகவலில், ஈராக்கின் சிறுபான்மையின மக்களில் 1,500 முதல் 4 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 12 மற்றும் 13 வயதிற்கு உட்பட்டவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கால்நடைகளை போன்று விற்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சிறுமிகள் தீவிரவாதிகளை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அல்லது ஏலத்தில் அதிக தொகைக்கு விற்கப்படுகின்றனர்.

இந்த பெண்களில் பலர், தீவிரவாதிகளின் கொடுமைகளுக்கு ஆளாவதை விட மரணம் அடையவே விரும்புகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் ஏராளமான பெண்களின் கதைகள் மனதை உடைய வைக்கும் மற்றும் அதிபயங்கரங்களை கொண்ட விசயங்களை உள்ளடக்கியவை. அவை கடல் போல் குவிந்து கிடக்கின்றன.

புதிதாக உருவாகியுள்ள ஈராக் அரசு, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு விற்கப்படும் இது போன்ற பெண்கள் பாதுகாப்பாக தங்களது வீடுகளுக்கு திரும்ப உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக சர்வதேச கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்றும் ரஸ்செல் தனது தகவலில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 15, 2014 10:00 pm

வெட்டிய தலையை கையில் பிடித்த வண்ணம் டூவிட்டரில் படத்தை பதிவுசெய்த பிரிட்டன் பெண் ஜிகாதி

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 201409151708408795_British-jihadist-medical-student-21-is-pictured-holding_SECVPF

வெட்டிய தலையை கையில் பிடித்த வண்ணம் புகைப்படம் எடுத்து அதனை பிரிட்டன் பெண் ஜிகாதி உசாமா தனது டூவிட்டரில் பதிவு செய்துள்ளார். பிரிட்டன் பெண்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவது அந்நாட்டு அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக், சிரியா நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கில் வான்வெளித் தாக்குதல் நடத்தும் அமெரிக்க படைகளுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ளவர்களை அமெரிக்கர்களை தலையை துண்டித்து கொன்று வருகின்றனர். தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் அங்கு உடனடியாக தாக்குதல் நடத்த அமெரிக்கா தலைமையில் உலகநாடுகள் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் பிரிட்டன் அரசுக்கு மேலும், அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்நாட்டு பெண் ஜிகாதிகள் டூவிட்டரில் கொடூரமான புகைப்படங்களுடன் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். மறுபுறம் அரசு வெளிநாட்டுக்கு சென்ற ஜிகாதிகள் தங்கள் நாட்டுக்குள் மீண்டும் நுழைந்துவிட கூடாது என்று கங்கணம் கட்டியுள்ளது. அந்நாட்டு பாதுகாப்பு துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் சமூகத் தொண்டு செய்து வந்த இங்கிலாந்தின் 44 வயது டேவிட் ஹெய்ன்ஸ் என்பவரை தலையை துண்டித்து கொன்று இங்கிலாந்துக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.

இந்நிலையில் தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்று அந்த அமைப்பில் சேர்ந்த பிரிட்டன் பெண் ஜிகாதி வெட்டிய தலையுடன் புகைப்படம் எடுத்து டூவிட்டரில் படத்தை பதிவு செய்துள்ளார். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மருத்துவ கல்லூரி மாணவியான அந்த ஜிகாதி உசாமா என்ற பெயரில் டூவிட்டர் கணக்கை பதிவு செய்துள்ளார். அவர் சிரியாவில் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள ரக்கா நகரில் மருத்துவராக பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது. பெண் ஜிகாதி மருத்துவர்கள் உடையை அணிந்து கருப்புநிற தலைகவசம் அணிந்து தலையில் வெட்டிய தலையுடன் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். பின்னர் டூவிட்டரில் இருந்து அந்த படத்தை நீக்கியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. புகைப்படத்தில் பெண் ஜிகாதியுடன் இரு சிறுவர்களும் நிற்கின்றனர். பெண் ஜிகாதியின் டூவிட்டர் இணையதளத்தை 800 பேர் பின்பற்றுகின்றனர். அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட புகைப்படம், இறந்த ராணுவ வீரர்களின் புகைப்படம் ஆகியற்றவை பதிவு செய்துள்ளார். அதனுடன் உசாமா மூட்டு வலி மற்றும் தூக்கமின்மைக்கான சிகிச்சை குறித்தும் தகவல்கள் தெரிவித்துள்ளார். என்று செய்திகள் வெளியாகியுள்ளது.




ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 15, 2014 10:10 pm

ஈராக், சிரியா தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் சர்வதேச நாடுகள்

ஈராக், சிரியா நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கில் வான்வெளித் தாக்குதல் நடத்தும் அமெரிக்க படைகளுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ளவர்களை அமெரிக்கர்களை தலையை துண்டித்து கொன்று வருகின்றனர்.
அண்மையில் அமெரிக்க செய்தியாளர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் சாட்லாப் இருவரையும் தீவிரவாதிகள் இதுபோல் கொடூரமான முறையில் கொன்றனர். கடந்த ஆண்டு சிரியாவில் சமூகத் தொண்டு செய்து வந்த இங்கிலாந்தின் 44 வயது டேவிட் ஹெய்ன்ஸ் என்பவரை 2 நாட்களுக்கு தலையை துண்டித்து கொன்று இங்கிலாந்துக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.

இந்த கொடூர கொலைகள் தொடரும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்து இருப்பதால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்த தீவிரவாதிகளை பூண்டோடு ஒழித்துக் கட்டுவதற்கு கங்கணம் கட்டிவிட்டன. ஈராக், சிரியா தீவிரவாதிகளுக்கு எதிராக சர்வதேச கூட்டணி அமைத்து அவர்களை முறியடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக சேவகர் டேவிட் ஹெய்ன்ஸ் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூ கோபத்தின் உச்சியில் உள்ளார்.

லண்டனில் நடந்த அவரச கூட்டத்தில் பேசிய அவர், டேவிட் ஹெய்ன்ஸ் இந் நாட்டின் கதாநாயகன். இந்த படுபாதக செயலை செய்த தீவிரவாதி யாராக இருந்தாலும் அவரை கண்டுபிடித்து நீதியின் முன்பாக நிறுத்துவோம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பேய் போன்ற கொடூர குணம் கொண்டவர்கள். அவர்களுக்கு எதிராக அழிப்பதற்கு தேவைப்படும் அத்தனை நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம் என்று சூளுரைத்தார். ஈராக், சிரியா தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த சர்வதேச நாடுகள் தயார் நிலை உள்ளன. அமெரிக்காவின் சர்வதேச கூட்டணியின் உச்சக் கட்டத் தாக்குதல் திட்டத்திற்கு பெரும்பாலான நாடுகள் ஒப்புக் கொண்டாலும் இந்த நாடுகள் தீவிரவாதிகள் மீது வான்வெளித் தாக்குதலை மட்டுமே நடத்துவதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.




ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 15, 2014 10:14 pm

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயலுக்கு இங்கிலாந்து வீரர் மொயின் அலி கடும் கண்டனம்

இங்கிலாந்து பணியாளர் டேவிட் ஹெய்ன்ஸ் தலையை துண்டித்து கொடூர கொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவில் அல்கொய்தா தீவிரவாதிகளை விட கொடிய ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து இதற்கு பழிவாங்கும் விதமாக, சிரியாவில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த அமெரிக்க நிருபர்கள் இருவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொடூரமாக படுகொலை செய்தனர்.இதற்கிடையே தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு ஆதரவு அளித்த பிரிட்டனை மிரட்டும் வகையில் அந்நட்டை சேர்ந்த டேவிட் ஹெய்ன்ஸ் என்பவரை தீவிரவாதிகள் தலையை துண்டித்துக் கொலை செய்துள்ளனர்.

இந்த கொடூர கொலையை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயலுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் இந்த நடவடிக்கைகளை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது.மற்ற மதத்தின் மக்களை கொல்வது கண்டனத்துக்கு உரியதாகும். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரின் இந்த செயல்பாடுகள் இஸ்லாமை பிரதிபலிக்கவில்லை. இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் அந்த அமைப்புக்கு ஆதரவு கொடுக்காது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவரான மொயின் அலி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ”காசாவை காப்பாற்றுங்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய பேண்ட் அணிந்து இருந்ததால் நடுவரால் எச்சரிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 15, 2014 10:14 pm

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதல்: 40 நாட்டு வெளியுறவுத்துறை பிரதிநிதிகள் கூட்டம் இன்று பாரீசில் நடக்கிறது

ஈராக்கில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் ஈராக்கில் 15 நகரங் களை கைப்பற்றியுள்ளனர். மேலும் சிரியாவின் ஒருபகுய்தியையும் கைப்பற்றி இரண்டையும் இணைத்து இஸ்லாமிய அரசாக் அறிவித்து உள்ளனர். இதனால் பக்கத்து நாடுகளுக்கு அச்சம் ஏற்பட்டு உள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் அமெரிக்காவுக்கு மிரட்டல் இருக்கலாம் எனகூறபட்டது இதை தொடர்ந்து அமெரிக்க ஈராக் அரசுப்படையுடன் இணைந்து தீவிரவாதிகள் கைப்பற்றிய பகுதிகிளில் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் தாங்கள் பிடித்து வைத்திருந்த 2 அமெரிக்க பத்திரிகையாளர்களை கொலை செய்தனர். இதை தொடர்ந்து அமெரிக்க தீவிரவாதிகள் மீது அதிகப்படியான் வானவெளி தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்தது. வான்வெளி தாக்குதல் நடத் அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டு உள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட சிரியா மற்றும் ஈராக் நாடுகளுக்கு உதவு செய்ய 40 நாடுகள் கூட்டணி அமைத்து கையெழுத்திட்டு உள்ளன. இதில் 10 அரேபியநாடுகளும் அடங்கும். பெரும்பாலான அரேபிய நாடுகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்வெளி தாக்குதல் நடத்த பங்களிப்பு வழங்கப்படும் என மெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் ஹெர்ரி மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடுக்க ஆதரவு திரட்டி வருகிறார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட கையெழுத்திட்ட 40 நாடுகள் அடுத்தவாரம் நடைபெறும் ஐநா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தோற்கடிப்பது தொடர்பாக் பாரீசில் உலக நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை அமெரிக்க வெளியுறவுறத்துறை செயலாளர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த மாநாட்டில் இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹமோண்ட், ஈராக் அதிபர் போவுத் மோசும், 10 அரேபிய நாடுகளான, எகிப்து, ஈராக்,ஜோர்டான்,பக்ரைன்,குவைத்,லெபனான்,ஒமன்,கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளீன் பிரதி நிதிகள் கல்ந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் இங்க்லாந்தை சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெய்ன்ஸை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தலையை துண்டித்து படுகொலை செய்து தொடர்பாகவும் பேசப்படுகிறது.

இது வெறும் நிகழ்ச்சி தேர்ந்தெடுக்கபட்ட விருந்தினர்களின் பட்டியல் என இந்த கூட்டத்தை ஈரான் புறக்கணித்து உள்ளது.

அமெரிக்க தலைமையிலான கூட்டணி ஈராக்கின் அண்டை நாட்டின் உதவி இல்லாமல் சிரியா பகுதியில் தாக்குதல் நடத்தினால் அமெரிக்க அதிபரின் திட்டம் தோல்வி அடையும் என சிரியா கூறி உள்ளது.

சிரியா தீவிரவாதத்திற்கு எதிராக போராடுகிறது. நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக உண்மையாக தீவிரமாக போராடி வருகிறோம் என சிரிய வெளியுறவு துணை மந்திரி பைசல் மெக்தத் தெரிவித்தார்.




ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 15, 2014 10:28 pm

ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் 2-வது பிரிட்டன் பிணைக்கைதி: தலையை துண்டிப்பதாக மிரட்டல்

ஈராக்கில் சதாம் உசேன் ஆதரவு படையான ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தி அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி, சிரியாவில் கைப்பற்றப்பட்ட பகுதியையும் ஒருங்கிணைத்து "இஸ்லாமிய நாடு" என்ற பெயரில் தனி அரசை நடத்தி வருகின்றனர்.

இவர்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை குர்திஷ் படையினர் மீட்க உதவும் வகையில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பேரின் தலையை தீவிரவாதிகள் துண்டித்து கொலை செய்தனர்.

அதன்பின் நேற்று முன்தினம் பிரிட்டனைச் சேர்ந்த டேவின் ஹெய்ன்சை தலை துண்டித்து கொலை செய்தனர். இதற்கு இங்கிலாந்து பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக பிரிட்டன் உள்பட பல நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளது.

இந்நிலையில் ஜிகாதிகளுக்கு எதிராக போர் புரிபவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தொடர்ந்து ஆதரவு கொடுத்தால் மற்றொரு பிரிட்டன் பிணைக்கைதியான ஹென்னிங்-ஐ தலை துண்டித்து கொலை செய்வோம் என்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. அது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஹென்னிங் முழங்கால் போட்டு நிற்க, முகமூடி அணிந்த ஒரு தீவிரவாதி கையில் கத்தியுடன் உள்ளான்.

ஹென்னிங் (வயது 47) கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள எக்லெசில் இருந்து வந்த முன்னாள் டாக்சி டிரைவர் எனத் தெரிகிறது. இவர் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கடத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவர் சமூக பணியில் ஈடுபடுவதற்காக துருக்கியில் இருந்து சிரியா எல்லைக்குள் வந்தபோது கடத்தப்பட்டுள்ளார்.

சிரியாவில் உள்ள அகதிகளுக்கு மருத்துவ உதவி செய்ய மருத்துவ ஆம்புலன்ஸ் டிரைவராக ஹென்னி பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 17, 2014 5:52 am

ஐ.எஸ்.ஐ.எஸ். பிடியில் மேலும் 24 பிணைக் கைதிகள் இருக்க வாய்ப்பு

இராக்கில் தாக்குதல் நடத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் வசம் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த 24 பேர் பிணைக் கைதிகளாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தனி இஸ்லாமிய நாடு அமைக்க இராக் மற்றும் சிரியாவில் தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள், தங்கள் வசம் பிணைய கைதிகளாக இருந்த அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் ஃபோலே, ஸ்டீவன் சாட்லாஃப் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த உதவிப் பணியாளர் டேவிட் ஹெய்ன்ஸ் ஆகியோரை படுகொலை செய்து அதன் வீடியோவை வெளியிட்டது.

இந்த நிலையில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த 24 பேரை பிணைக் கைதிகளாக வைத்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை ப்ரான்ஸ், இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐ.எஸ் அமைப்பு நிர்ணயித்த பிணைத் தொகையை அந்தந்த நாடுகளின் அரசு செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டதாக 'தி மிர்ரர்' செய்தி வெளியிட்டுள்ளது.

இதே போல, 26- வயது மிக்க அமெரிக்க தொழிலாளி ஒருவரும், 20 வயதுடைய 2 இத்தாலி நாட்டவர்களும் கடந்த ஆகஸ்ட் மாதம் அலீபோ நகரில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 17, 2014 5:53 am

பாக்தாத் நகரில் ஐ.எஸ்-ஸுக்கு எதிரான தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா

இராக் தலைநகர் பாக்தாதில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மீதான முதல் வெடிகுண்டு தாக்குதலை அமெரிக்கப் போர் விமானங்கள் தொடங்கியுள்ளன.

இராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி பல முக்கிய நகரங்களை ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் யாஷிதி பழங்குடி மக்களை பிணைய கைதிகளாகவும் அவர்கள் பிடித்து வைத்துள்ளளனர்.

ஐ.எஸ்-ஸுக்கு எதிரான தாக்குதலையும், இராக் மற்றும் குர்திஷ் படைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணிகளையும் அமெரிக்க ராணுவம் கடந்த மாதம் தொடங்கியது.

ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், திங்கட்கிழமை முதல் அமெரிக்கப் போர் விமானங்கள் இராக் தலைநகர் பாக்தாத்தில் வான்வழித் தாக்குதலை தொடங்கியது. இதில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த 6 வாகனங்கள் வெடித்து சிதறின.

கடந்த இரண்டு மாதங்களாக, இராக்கில் மனிதாபிமான ரீதியாக 162 முறை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி கூறும்போது, "தென்கிழக்கு பாக்தாத் மற்றும் சிஜார் பகுதிகளில், இராக் பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த பகுதிகள் ஞாயிறு முதலே எங்களது போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது" என்றார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட நேட்டோ நாடுகளின் ஒத்துழைப்பை அமெரிக்கா பெற்றது. அதில் சில நாடுகள் உடன்படாத நிலையில், அவர்கள் ஆயுதங்கள் வழங்கி உதவி அளிக்களாம் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதனிடையே, ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மூன்றாவது படுகொலையாக, பிணையக் கைதியாக வைத்திருந்த பிரிட்டிஷ் உதவிப் பணியாளர் டேவிட் ஹெய்ன்ஸ் என்பவரின் தலையை வெட்டி எறிந்த வீடியோவை அந்த இயக்கம் கடந்த சனிக்கிழமை அன்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 18, 2014 1:10 am

சிரியா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஐ.எஸ்.

கெய்ரோ, செப்.ய18 - சிரியாவில் தங்கள் மீது தாக்குதல் நடத்திய அந்நாட்டு போர் விமானம் ஒன்றை ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக அங்குள்ள ஐ.நா. கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இதில் விமானம் நொறுங்கி வீட்டின் மீது விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சிரியா ராணுவம் செவ்வாய் அன்று, ஐ.எஸ் படைகள் இருக்கும் நகரங்களில் 5 முறை தாக்குதல் நடத்தியது. இது போல ஒரே நாளில் பல்வேறு இடங்களில் சிரியா ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 14 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக அல் ராக்கா நகரத்தில் பறந்து கொண்டிருந்த சிரியா நாட்டு போர் விமானம் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டில் உள்ள ஐ.நா. போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.




ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 18, 2014 1:13 am

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க சக்தி உள்ள நாடுகள் முன்வரவேண்டும்- பான் கி மூன் வலியுறுத்தல்

ஈராக்கில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் ஈராக்கில் 15 நகரங் களை கைப்பற்றியுள்ளனர். மேலும் சிரியாவின் ஒருபகுய்தியையும் கைப்பற்றி இரண்டையும் இணைத்து இஸ்லாமிய அரசாக் அறிவித்து உள்ளனர். இதனால் பக்கத்து நாடுகளுக்கு அச்சம் ஏற்பட்டு உள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரர்திகளால் அமெரிக்காவுக்கு மிரட்டல் இருக்கலாம் எனக்கூறப்பட்டது இதை தொடர்ந்து அமெரிக்க ஈராக் அரசுபடையுடன் இணைந்து தீவிரவாதிகள் கைப்பற்றிய பகுதிகிளில் கடந்த் ஆகஸ்ட் 8 ந்தேதி முதல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் தங்கள் பிடித்து வைத்திருந்த 2 அமெரிக்க பத்திரிகையாளர்களை கொலை செய்தனர். இதை தொடர்ந்து அமெரிக்க தீவிரவாதிகள் மீது அதிகப்படியான வான்வெளி தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்தது. இதை தொடர்ந்து வான்வெளி தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டு உள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட கையெழுத்திட்ட 30 நாடுகள் அடுத்தவாரம் நடைபெறும் ஐநா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றன.

10 அரேபிய நாடுகளான, எகிப்து, ராக்,ஜோர்டான்,பக்ரைன்,குவைத்,லெபனான்,ஒமன்,கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளீன் பிரதி நிதிகள் கல்ந்து கொண்டனர்.

அமெரிக்க ஈராக்கின் தலைநகர் பாக்தாத் அருகே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியது.மற்றொரு தாக்குதல் வடமேற்கு ஈராக் பகுதி சிஞ்சார் மலைப்பகுதியில் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதில் 6 தீவிரவாதிகளின் ஆயுத வாகனங்கள் அழிக்கப்பட்டன. கடந்த ஆகஸ்டில் இருந்து இதுவரை ஈராக் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா 162 தடவை வான் வழியாக குண்டு வீச்சு நடத்தியுள்ளது.

ஐ.நா பொது செயலாளர் பான் கீ மூன் ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க சக்தி உள்ள நாடுகள் முன்வரவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-நான் சர்வதேச சமூகத்தை கேட்டு கொள்கிறேன். ஈராக்-சிரியாவில் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதர்கு தீர்மானமாகவும், உறுதியாகவும் நடவடிக்கை தேவை.என்று கூறினார். ஆனால் எண்ட் விதமான்ந் அடவடிக்கை என அவர் கூறவில்லை. மேலும் ஈராக்-சிரியா வில் தீவிர்வாதிகள் மீது அமெரிக்க எடுத்த வான்வெளி தாக்குதலுக்கு பான் கிமூன் பாராடு தெரிவித்தார்.

மனித உயிர்களை காக்க ஈராக் அரசின் வேண்டுகோளின் படி மேற்கொள்ளபட்ட இந்த விமான தாக்குதல்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஐநா மற்றும் அதன் சார்பு நாடுகள் உதவ முடிந்தது.

சிஞ்சார் மலை பகுதியில் சிக்கி தவிக்கும் மக்கள்க்கு ஐநா மனிதாபிமான உதவிகளை வழங்க முடிந்தது. என்று கூறினார். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அச்சுறுத்தலாக விளங்குகின்றனர் என கூறினார்.

பிரிவினை வாதிகளின் அச்சுறுத்தலை சமாளிப்பதில் 15 நாடுகள் பாதுகாப்பு சபை தலைமை ஏற்கும். அமெரிக்க அதிபர் தீவிரவாதிகள் மீது செப்டம்பர் 24 ந்தேதி நடைபெறும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் உச்சி மாநாட்டில் தீர்மானம் கொண்டு வருவார் அந்த தீர்மானத்தை கவுன்சில் ஏற்கும் என்று கூறினார்.

சிரியாவில் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்த ரஷ்யா தனது பகுதியை வழங்குவது சந்தேகம். ஏன் என்றால் ரஷ்யா சிரியாவின் நண்பர் என பாதுகப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கருதுகிறார்கள். இதனால் இந்த திட்டம தற்போது கைவிடபட்டு உள்ளது.




ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக